Friday, January 25, 2008

அப்துல்கலாமின் குடியரசு தின செய்தி


  • 1. நான் எங்கு இருந்தாலும் என்மனதில் என்றும் எழும் கேள்வி: "என்னால் என்ன கொடுக்க முடியும்?" என்பதாக இருக்கட்டும்.
  • 2. நான் செய்யும் பணி எதுவாக இருந்தாலும் என் குறிக்கோள் "ஒருமையுடன் உழைத்து ஒருமையுடன் வெற்றி அடைவேன்"என்பதாக இருக்கட்டும்.
  • 3. என் நினைவில் எப்போதும் சிறகுகள் விரித்திடும் என் காலம் வீணில் பறந்திட அனுமதிக்க மாட்டேன் எனும் எண்ணம் இருக்கட்டும்.
  • 4. எனக்கு இருக்கும் பெரும் இலட்சியம் எப்போதும் என்னை பெரிய எண்ணங்களில் மூழ்கிச் சிறந்து பணியாற்றி இலட்சியத்தை அடைய வேண்டிய உணர்வினை என்னுள் தந்து கொண்டே இருக்கட்டும்.
  • 5. என் மிகச்சிறந்த நண்பர்களாக மிகச் சிறந்த மானுடர்கள், மிகச்சிறந்த ஆசிரியர்கள், மிகச்சிறந்த நூல்கள் விளங்கட்டும்.
  • 6. எந்த பிரச்சனையும் என்னைத் தோற்கடிக்க முடியாது என நான் உறுதியாக நம்புகிறேன். நான் பிரச்சனைகளுக்கு மேலாக திகழ்வேன். பிரச்சனைகளைத் தோற்கடிப்பேன். வெல்வேன்.
  • 7. என் தேசிய கொடி என் இருதயத்தில் என்றும் பட்டொளி வீசி பறந்துகொண்டிருக்கும். நான் என் தேசத்துக்கு நன்மையும் கௌரவமும் கொண்டு வருவேன்.

0 Comments:

Post a Comment

<< Home