Monday, January 14, 2008

ஸ்ரீமாவும் பொங்கலும்

2001 இல் கிறிஸ்தவ பிரிவினைவாத பயங்கரவியாதிகளான NLFT அமைப்பினர் பொங்கல் கொண்டாட விதித்திருந்த கிறிஸ்தவ தடையை மீறி பொங்கலை கொண்டாடியதற்காக ஜனவரி 13 2002 அன்று குடும்பத்துடன் பலிதானியாகிய ஸ்ரீமாவை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தருமத்துக்காக இயற்கையின் இறைத்தன்மையை கொண்டாடும் ஹிந்து-பாகனீய மரபின் உரிமைக்காக தன் உயிரையே பலிதானியாக்கிய ஏழுவயது ஸ்ரீமாவின் நினைவாக ஒவ்வொரு இந்துவும் இந்த பொங்கல் திருநாளை மகரசங்கராந்தி பெருநாளை கொண்டாடுவோம். பாரத தருமத்தை அழிக்க நினைத்திடும் அதரும ஆபிரகாமிய அசுர சக்திகள் சூரிய தேவனின் ஒளியில் மங்கி மறையட்டும் ஒவ்வொரு பாரத குடும்பத்திலும் அன்பும் அறமும் வளமையும் பொங்கட்டும். மேன்மைகொள் பாரத தருமம் ஆதவ ஒளிபோல் உலகெங்கும் அருளும் அன்பும் அமைதியும் பரப்பட்டும்.


இலங்கை சர்வ இந்து அமைப்புகள் சங்கம் வெளியிட்டுள்ள பொங்கல் செய்தி

தை பொங்கல் அனைத்து இந்துக்களுக்கும் புனிதமான பாரம்பரிய திருநாளாகும். சூரியதேவனை நண்றியுடன் நினனவு கூர்ந்து அவருக்கு பொங்கல் படைத்திடும் நாள் இது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது நூற்றாண்டுகளாகத் தொடரும் நம்பிக்கை ஆகும்.ஆனால் இலங்கை தமிழருக்கு இந்த பொங்கல் திருநாளிலும் கூட சொல்லொணா துயரங்கள் தொடர்கின்றன. கொலைகள், கடத்தல்கள், சொத்து பறிமுதல்கள் என பல துயரங்களை எம்மக்கள் அனுபவித்து வருகின்றனர்.
எமக்கும் தைபிறந்தால் வழி பிறக்கும் எனும் நம்பிக்கை உள்ளது. எனவே அனைத்து இந்துக்களுக்கும் இந்த பொங்கல் திருநாளன்று இந்நாளின் புண்ணிய புனித தன்மையை உணர்ந்து அதனை பிரார்த்தனையுடன் கொண்டாடும்படி கேட்டுக்கொள்கிறோம். [நன்றி: டெய்லி நியூஸ் 15-01-2008]

4 Comments:

Blogger அருணகிரி said...

பொங்கல் வாழ்த்துக்கள் அரவிந்தன்.

ஸ்ரீமா குறித்த பழைய இடுகை அல்லது செய்திக்குறிப்பு ஏதும் இருந்தால் லிங்க் கொடுங்கள்.

கிறித்துமஸ் என்ற கிறித்துவப்பண்டிகையை உலகப்பண்டிகையாக விரித்தும், பொங்கலின் பண்டைய பாகன்/இந்து அடையாளத்தை வசதியாக வடிகட்டி தமிழர் என்ற இனப்பண்டிகையாக மட்டும் குறுக்கியும் செய்யப்படும் ஆபிரஹாமிய அயோக்கியத்தனங்களுக்கு நடுவே இலங்கை அமைப்புகள் விடுத்துள்ள அறிக்கை நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் தருகிறது.

11:40 PM, January 14, 2008  
Anonymous Anonymous said...

>>> எமக்கும் தைபிறந்தால் வழி பிறக்கும் எனும் நம்பிக்கை உள்ளது.

Modi has won the election once again, and proved that truth and human excellence will succeed.

3:02 AM, January 15, 2008  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

அருணகிரி
உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.
இந்த லிங்க்கை பாருங்கள்:
http://s-aravindan-neelakandan.sulekha.com/blog/post/2002/05/nlft-the-christian-al-qaeda.htm

4:10 AM, January 15, 2008  
Blogger சிறில் அலெக்ஸ் said...

பொங்கல் வாழ்த்துக்கள்.

8:54 AM, January 15, 2008  

Post a Comment

<< Home