Friday, December 14, 2007

சாலிம் அலி, குரான் மற்றும் டார்வின்

"நான் இளைஞனாக இருந்தபோதும் இப்போதும் கூட பல இஸ்லாமியக் குடும்பங்களில் நிலவுகிறபடியும் சிறுவயது முதலே கிளிப்பிள்ளை போல திருக்குர் ஆன் படிக்கவும் மனப்பாடம் செய்து ஒப்பிக்கவும் எங்களுக்கு கற்பிக்கப்பட்டது. குரான் எழுதப்பட்டுள்ள அராபிய மொழியில் ஒரு வார்த்தை கூடப் புரியாமல் அதைச் செய்துவந்தோம்.நியதியாக விதிக்கப்பட்டிருந்த தொழுகைகளை ஓதுவதும் கற்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் இவை எதுவும் என் ஆன்மிக நிலையை உயர்த்த உதவவில்லை. மாறாக மரபு வழிப் பிரார்த்தனை மீது அவை சலிப்பை ஏற்படுத்திவிட்டன. அவை பொருளற்றவை போலி வேடத்தின் கூறுகள் என்ற எண்ணமே உருவாயிற்று...மனிதன் பிற உயிர்களிலிருந்து மாறுபட்டவன் அல்ல என நான் உறுதியாக நம்புகிறேன்.பிற விலங்குகளிலுள்ள அடிப்படை உந்துதல்கள், இயல்புகள், பழகுமுறைகள்தான் அவனிடமும் காணப்படுகின்றன. ஆனால் ஒன்று அவனது மூளை அதிக வளர்ச்சி பெற்றுள்ளது. அதைக் கொண்டு அவன் செயலையும் சிந்தனையையும் பகுத்தறிவுக்கேற்ப அமைத்துக்கொள்ள முடிகிறது. அதேசமயம் தேவன் விதித்த விதி என்று கூறி பிற உயிர்களிடமிருந்து தான் உயர்ந்தவன் என்ற பொய்யான ஒரு முடிவைத்தானே கற்பித்துக்கொள்கிறான்....என்னைச் சுற்றிக்கிடைக்கின்ற சான்றுகளிலிருந்து பிற உயிர்களிலிருந்து இயற்கை தேர்ச்சி மூலம் உருவானவன் மனிதன் என்று டார்வின் சொல்கிறாரே, பிற்கால அறிவியல் கண்டுபிடிப்புகள் மெருகூட்டி சொல்கின்றனவே, அந்த கொள்கையை நம்புவதில் எனக்கு சிரமமே இல்லை. மனிதன் என்பவன் உன்னதம் பெற்ற வாலில்லாக் குரங்கு என்று நம்புகிறேன்." (சாலீம் அலி,ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி, பக்.291-92, நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா, 2004)

யாராவது இந்த நூலுக்கும் பத்வா போட்டுடாதீங்கடே!

2 Comments:

Anonymous Anonymous said...

"என்னைச் சுற்றிக்கிடைக்கின்ற சான்றுகளிலிருந்து பிற உயிர்களிலிருந்து இயற்கை தேர்ச்சி மூலம் உருவானவன் மனிதன் என்று டார்வின் சொல்கிறாரே, பிற்கால அறிவியல் கண்டுபிடிப்புகள் மெருகூட்டி சொல்கின்றனவே, அந்த கொள்கையை நம்புவதில் எனக்கு சிரமமே இல்லை. மனிதன் என்பவன் உன்னதம் பெற்ற வாலில்லாக் குரங்கு என்று நம்புகிறேன்."

இது வெறும் நம்பிக்கையோ அல்லது Faith மட்டுமே அல்லவே!
It has been be proved beyond doubt with the help of overwhelming evidences.

இதற்கும் ஃபத்வா தானா?

3:32 PM, December 14, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

//இது வெறும் நம்பிக்கையோ அல்லது Faith மட்டுமே அல்லவே!// ஆம் அது ஒரு fact என்றாலும் ஹரூன் யாஹியா போன்ற நட் கேஸ்கள் இண்டிலிஜண்ட் டிஸன் என மண்டுக்கதைகளை அவிழ்த்துவிடும்.

3:50 PM, December 14, 2007  

Post a Comment

<< Home