Thursday, November 08, 2007

விடுதலை ஒளி தரும் தீபாவளி

1737 இன்றைக்கு சற்றேறக்குறைய முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் தர்மாச்சார்யர் பாயி மணிசிங் எனும் சீக்கிய ஞானி அன்னிய மதவெறியால் தடை செய்யப்பட்ட தீபாவளி திருநாளை கொண்டாட தன் உயிரையே தர்மத்துக்கு தர்மமாக ஈன்றார். அவரது பலிதானம் வீண் போகவில்லை. மகாராஜா ரஞ்சித் சிங்கின் பேரரசு ஆப்கானிஸ்தானத்தையே காவிக்கொடியின் சுதந்திர ஒளிக்கு பணிய வைத்தது. இன்றைக்கும் இருட்சக்திகள் மானுட எதிர்ப்பு சக்திகள் தீபாவளியை எதிர்க்கின்றன. 2005 இல் ஜிகாதி வெறியர்கள் தில்லியில் தீபாவளி அன்று நிகழ்த்திய கொடுமை நமக்கு நினைவிருக்கிறது. தீபத்திருநாளாம் தீபாவளி குறித்த இக்கட்டுரை தீபாவளியின் பலிதானிகளுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது.

தமஸோ மா ஜோதிர்கமய என்கிறது உபநிடதம். 'இருளிலிருந்து ஒளிக்கு'. ஒளி பாரத கலாச்சாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. புற ஒளி அக ஒளிக்கு ஒரு குறியீடாக விளங்குகிறது.


ஜோதி வள்ளல் பெருமானார் இதனைக் குறித்து கூறுகையில்:
வல்லப சக்திகள் வகையெலாமளித்தன
தல்லலை நீக்கியவ ருட்பெருஞ் ஜோதி
ஆரியலகம் புறமகப்புறம் புறப்புறம்
ஆரமுதெனக்கருளருட் பெருஞ் ஜோதி
சூரிய சந்திர ஜோதியுட் ஜோதியென்
றாரியர் புகழ்தரு மருட்பெருஞ் ஜோதி
...
எஞ்சேலுலகினில் யாதொன்று பற்றியும்
அஞ்சேலென்றருளருட் பெருஞ் ஜோதி
என்று அருளிச்செய்தார். ஆம். ஆரியர் என்றால் ஒரு இனம் அவர் வடவர் என்கிற கீழ்த்தர இனவாதக் கோட்பாடு அருள் ஜோதி வள்ளல் பெருமானை அண்டவேயில்லை. எனவே தீபாவளி வடவர் பண்டிகை ஆரியர் பண்டிகை என கூறும் பண்பாட்டு அறிவிலிகள் தமிழரின் உன்னத ஆன்மிக பண்பாட்டின் எதிரிகளே ஆவர்.

தீபாவளி பண்டிகை கொண்டாடுவது குறித்து பல தொன்மங்கள் வழங்குகின்றன. அவை இன்றைக்கும் பொருந்தும் இன்றைக்கும் நமக்கு பல பாடங்களை தரும் தன்மை கொண்டவை. அவற்றுள் சில:
1.நரகாசுர வதம்:

நரகாசுரன் விஷ்ணுவுக்கும் பூமாதேவிக்கும் பிறந்தவன். தெய்வீகமும் மண்ணில் நிலை கொள்ளும் போது அது அதிகார அசுரமாகிவிடுவதுண்டு. அவனை பூமாதேவியின் அம்சமான கிருஷ்ண பத்தினியான சத்தியபாமாவே அழிக்கிறாள். இதில் நம் அனனவருக்கும் ஒரு பாடம் இருக்கிறது. நரகாசுரனை போல அனைத்தையும் அடக்கி ஆண்டிட விழையும் எந்த அதிகார சக்தியும் அது என்னதான் இறைத்தன்மை கொண்டதாக இருப்பினும் பூமியினால் அழிக்கப்படும்.


2. கோவர்த்தன பூஜாதினம்:

ஸ்ரீ கிருஷ்ணன் வானில் உறையும் தேவனுக்கு அச்சப்பட்டு பூஜைகள் செய்திட வேண்டாம். மறுமையில் நரகம் தண்டனைகள் என அச்சத்தின் அடிப்படையில் வணக்கத்தை விரும்பும் தேவனுக்கு பதிலாக இயற்கையின் படைப்பினை வழிபட்டால் மதித்தால் போதும் என உபதேசித்த நாள் இது.


3.லஷ்மியின் உதயம்:

பாற்கடலை கடைந்தனர் தேவரும் அசுரரும். அப்போது அதிலிருந்து வெளிப்பட்டாள் அன்னை லஷ்மி. அவள் விஷ்ணுவை நாடினாள். அதன் பின்னர் பாற்கடலிலிருந்து எழுந்தது ஆலகால விஷம். அதன் பின் எழுந்தது அமுதம். எந்த தொழில்நுட்பமும் அறிவும் இப்பிரபஞ்ச கடலைக் கடைவதால் ஏற்படுவதே ஆகும். இக்கடைதலில் அசுர சக்திகளும் தெய்வீக சக்திகளும் ஈடுபடுகின்றன. இதிலிருந்து வரும் வளமும் சரி தீமைகளும் சரி ஆன்ம பலத்தினாலேயே தாண்டிசெல்லப்பட வேண்டும்.அப்படி சென்றால் மானுடம் அமர நிலல அடையும் என்பதனை விளக்கும் தொன்மத்தின் நிகழ்வு நாள் இது.


4.ராமர் அயோத்தி திரும்பிய நாள்:

சூரிய குல திலகனான ராமர் பிறப்பால் அந்தணனாகவும் நடத்தையால் அரக்கனாகவும் விளங்கிய இராவணனை அழித்து அயோத்தி திரும்பிய நாள் இது.

5.மகாவீர நிர்வாண நாள்:

மகாவீரர் ஜைன தீர்த்தங்கரர். கொடிய விஷ பாம்புகளிடமும் அஹிம்சையை கடைபிடித்த இந்த ஞானியின் நிர்வாண நாள் இதுவாகும்.


6. சீக்கிய பாரம்பரியத்தில்

குரு அமரதாஸர் தீபாவளியன்று அனைத்து சீக்கியரும் குருவிடம் வந்து ஆசி வாங்கி செல்லும் பாரம்பரியத்தை உருவாக்கினார்.
குரு ஹரிகோவிந்தர் ஜஹாங்கீரால் சிறை வைக்கப்பட்டார். அவரை விடுவித்த போது அவருடன் சிறையில் வாடிய 52 இந்துக்களை விடுவித்தாலே தான் விடுதலை ஆவேன் என கூறிவிட்டார் குரு ஹரிகோவிந்தர். முஸ்லீம் மன்னன் குருவின் காவி மேலாடையை எத்தனை இந்துக்கள் பிடிக்க முடியுமோ அத்தனை பேரை விடுவிப்பதாக கூறவே தன் மேலாடையை 52 ஆக கிழித்து அவர்களை ஒவ்வொரு நுனியையும் பிடித்துவர செய்து விடுதலை அடைய செய்த தினமாகவும் தீபாவளி சீக்கிய தருமத்தில் கொண்டாடப்படுகிறது. மேலும் தீபாவளி தினத்தன்றுதான் பொற்கோவில் என அறியப்படும் ஹரிமந்திருக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
7.தென்னாப்பிரிக்க இனவெறிக்கு எதிராக தீபாவளி:
பிரிட்டிஷ் காலனியவாதிகளால் 1860 முதல் இந்திய தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக ஆப்பிரிக்கா கொண்டு செல்லப்பட்டனர். இத்தொழிலாளிகள் 1860 முதலே தீபாவளி கொண்டாட அனுமதி கேட்டு போராடி மறுக்கப்பட்டனர். ஏனெனில் பிரிட்டிஷ் காலனியவாதிகள் பார்வையில் இந்து தருமம் ஒரு மதம் இல்லையாம் எனவே தீபாவளி ஒரு மதப்பண்டிகை இல்லையாம். ஆனால் இந்த தொழிலாளர்கள் தளரவில்லை. இந்து மக்கள் அமைப்பு என ஒரு அமைப்பினை ஏற்படுத்தி போராடினர். இறுதியில் 1907 ஆம் ஆண்டு தீபாவளி கொண்டாட அனுமதி வழங்கப்பட்டது. ஆம். நெல்சன் மண்டேலா மகாத்மா காந்தி ஆகிய சமூக நீதி போராளிகளின் போராட்டங்களுக்கு முன்னோடி சங்கொலியாக விளங்கியது கொத்தடிமையாக வந்த இந்து தொழிலாளிகளின் தீபாவளி போராட்டம்.
இதனை 'Inside Indenture'எனும் வரலாற்று ஆய்வு நூலில் குறிப்பிட்டுள்ளனர் அஷ்வின் தேசாயும் கோலம் வாஹீதும். இதனைக் குறித்து விளக்கிய தேசாய் கூறுகிறார்:
"தீபாவளி திருவிழா தென்னாப்பிரிக்காவில் கொண்டாடப்படும் இந்நூற்றாண்டு தருணத்தில் கொத்தடிமைகளாகக் கொணரப்பட்ட பல இந்துக்கள் காலனிய வெள்ளையரை இந்து தருமம் ஒரு மதமென ஏற்க வைக்கவும் தீபாவளி கொண்டாடவும் செய்த முயற்சிகளை தியாகங்களை நாம் நினைவு கூர்வது நம் கடமையாகும்"

உங்களுக்கு உங்கள் குடும்பத்தவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

Labels: , , , ,

3 Comments:

Anonymous Anonymous said...

அருமையான பதிவு. நல்ல க்ராஃபிக்ஸ். பல நிகழ்வுகளோடு, புராணங்களோடு நிகழ்கால வரலாற்றை இணைத்த விதம் நன்று.

5:54 AM, November 08, 2007  
Anonymous Anonymous said...

ஹா, நீங்கள் ஆச்சரியமளிக்கும் உண்மைகளைச் சொல்லுகிறீர்கள்.

ஆப்பிரிக்க விடுதலைப் போராட்டமே காந்தியிடமிருந்து துவங்குவதாகப் படித்துவந்த எங்களுக்கு, ஒரு ஹிந்துத்வா அமைப்புத்தான் காரணம் என்கிற தகவல் வியப்பூட்டும் உண்மை.

இதுபோன்ற உண்மைகளை வெளிக்கொணரும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் தாங்கள் குறிப்பிட்ட அனைத்துத் தெய்வங்களும் அவர்களுடைய மிகச் சிறந்த வரங்களை அளிக்கட்டும் !

6:42 AM, November 08, 2007  
Anonymous Anonymous said...

//தெய்வீகமும் மண்ணில் நிலை கொள்ளும் போது அது அதிகார அசுரமாகிவிடுவதுண்டு.//
எனது சிற்றவிற்கு புரியவில்லையே. சற்று விளக்குங்கள்.

//பிரிட்டிஷ் காலனியவாதிகள் பார்வையில் இந்து தருமம் ஒரு மதம் இல்லையாம்//
அப்படியானால் மதம் என்று கருத அவர்கள் வைத்த அளவு போல் என்னது?

//ஆப்பிரிக்க விடுதலைப் போராட்டமே காந்தியிடமிருந்து துவங்குவதாகப் படித்துவந்த எங்களுக்கு, ஒரு ஹிந்துத்வா அமைப்புத்தான் காரணம் என்கிற தகவல் வியப்பூட்டும் உண்மை.//
பனித்துளி புல்லரிக்குது! இல்லே?

3:22 AM, November 10, 2007  

Post a Comment

<< Home