இந்துக்களுக்கு எதிரான வன்முறை செயல்களையும் வெறுப்பியல் குற்றங்களையும் அரசே தூண்டிவிடும் போக்கினை தமிழ்நாட்டில் அவதானிக்க முடிகிறது. தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள கருணாநிதி இந்து விரோத வக்கிர மனோபாவம் உடையவர். இவரது இந்து விரோத பேச்சுக்கள் ஒரு பண்பட்ட நாஸ்திகராலேயே கூட ஏற்றுக்கொள்ளப்பட மூடியாதவை. ஆனால் பலவித நம்பிக்கைகளைக் கொண்ட மக்களுக்கு முதலமைச்சராக விளங்கும் ஒருவர் ஒரு குறிப்பிட்ட மக்களின் மதநம்பிக்கையை கேலி பேசுவதன் மூலம் அந்த மத வழிபாட்டு தலங்களுக்கும் திருவிழாக்கள் நடப்பதற்கும் பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் நடப்பதனை ஒருவிதத்தில் Auschwitz in slow motion என கூறலாம். உதாரணமாக கருணாநிதியின் இந்து விரோத பேச்சினைத் தொடர்ந்து இந்து கோவில்கள் வழிபாட்டு தலங்கள் மீதான தாக்குதல்கள் அதிகமாகியிருப்பதை செய்தித்தாள்கள் காட்டுகின்றன.
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி : செப்டம்பர் 22 அன்று காவல்துறை அனுமதி வாங்கி இந்துக்கள் தங்கள் விநாயக பெருமான் திருவுருவச் சிலைகளை கரைக்க சென்ற போது விநாயகர் சிலை மீது கல்வீச்சு நடத்தப்பட்டது, (தினகரன் நாகர்கோவில் பதிப்பு, 23-செப்டம்பர் 2007)
அதே நாளில் மார்த்தாண்டம் அருகே பாகோடு பேரூராட்சிக்குட்பட்ட கைசாலவிளை இசக்கி அம்மன் கோவிலில் அம்மன் சிலை உடைத்து வீசப்பட்டுள்ளது. (தினகரன் நாகர்கோவில் பதிப்பு, 23-செப்டம்பர் 2007)
அதே நாளில் கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியில் இந்துக்கள் காவல்துறை அனுமதியுடன் விசர்ஜன ஊர்வலத்திற்காக வைத்திருந்த விநாயகர் சிலை தாக்கப்பட்டது. (மாலை மலர், நாகர்கோவில் பதிப்பு 22-9-2007)
பெரம்பலூர் அருகில் மதுரகாளியம்மன் கோவிலில் இந்துக்களுக்கு புனிதமான வெள்ளிக்கிழமை இரவு காவலாளிகளைக் கொன்று திருட்டு நடந்துள்ளது. (மாலை மலர் 22-செப்டம்பர் 2007) இவ்வாறு காவலாளியைக் கொன்று கோவில் சிலைகள் செப்டம்பர் 8 ஆம் தேதி திருவாரூர் அருகில் நடைபெற்றதும் அதில் இமாம் அலி என்பவர் தொடர்பிருந்ததும் அண்மையில் வெளிவந்துள்ளது. (தினகரன் 22-செப்டம்பர் 2007) பொதுவாகவே கருணாநிதி சிலை வழிபாட்டையும் இந்து சம்பிரதாயங்களை இகழ்ந்தும் இஸ்லாமிய மதவெறி அமைப்புகளுக்கு ஆதரவாக பேசுவதும் இத்தகைய கொலைவெறித் தாக்குதல்கள் மற்றும் திருட்டுக்கள் இந்து கோவில்கள் மீது நடத்தப்பட தூண்டுதலாகிறது. ஆக, ஹிட்லரின் நாசி ஆட்சியை போன்ற இனவெறி ஆட்சியே தமிழ்நாட்டில் நடக்கிறது. இது மனித குலத்துக்கே விரோதமாகும்.
0 Comments:
Post a Comment
<< Home