பெந்தகோஸ்தே ஜெபக்கூடமும் கத்தோலிக்கர்களும்
கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கியமான இந்து கோவில்கள் அனைத்தின் அருகிலும் கத்தோலிக்கர்கள் சர்ச் கட்டுவதை ஒரு பழக்கமாகவே கையாண்டு வருகின்றனர். மற்ற மாவட்டங்களிலும் இதனை செய்கின்றனர். உவரி, கன்னியாகுமரி, மண்டைக்காடு முதல் மேல்மருவத்தூர் வரை இந்த ஆக்கிரமிப்பு நடக்கிறது. நாகர்கோவிலுக்குள்ளேயே கிருஷ்ணன் கோவில் கிராமத்தில் அம்மன் கோவில் சுவரையொட்டிய தெருவில் தங்கள் வழிபாட்டு தலத்துக்கு விளம்பர பலகை செய்து வைத்துள்ளார்கள் கத்தோலிக்கர்கள். இப்படி பிற மத தலங்களில் வெட்கமில்லாமல் ஆக்கிரமிக்கும் கத்தோலிக்கர்கள் தங்கள் வழிபாட்டுத்தலத்துக்கு அருகே அதே கிறிஸ்தவத்தை சேர்ந்த மற்றொரு பிரிவு வரும்போது எப்படி நடக்கிறார்கள்? இதனை கண்கூடாக நேற்று காணமுடிந்தது. மண்டைக்காட்டை அடுத்த பிலாவிளை புனித ஜார்ஜியார் சர்ச்சின் அருகே கெத்சமனே ஜெபமாளிகை என்கிற பெயரில் ஜெபக்கூட்டம் நடத்தி வருகிறார் பாஸ்டர் ஜெயகுமார் என்பவர். உடனேயே அந்த பகுதி கத்தோலிக்கர்கள் அதனை எதிர்த்ததோடு அதற்கு எதிராக வருவாய்துறையினருக்கு மனு அளித்தனர்.இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 12) ஜெபக்கூடத்திற்கு வந்தவர்களுடன் உள்ளூர் கத்தோலிக்கர்கள் தீவிர வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் பதட்டமும் ஏற்பட்டது.இதனையடுத்து காவல்துறையினர் அங்கு வந்தனர். இன்ஸ்பெக்டர் கணேசன் இருதரப்பினரிடையே பேச்சு வார்த்தை நடத்தினார். இதனனயடுத்து பெந்தகோஸ்தே ஜெபக்கூடத்துக்கு கத்தோலிக்கர் தரப்பில் பின்வரும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டு அது ஏற்கப்பட்டது:
1. ஜெபக்கூடத்துக்கு வர வெளியூர்காரர்களுக்கு அனுமதி கிடையாது.
2. உள்ளூர் காரர்களும் உரிய அனுமதி பெற்றே நடத்தவேண்டும்.
3. டிரம்ஸ் செட் வைக்க கூடாது
4. ஸ்பீக்கர் வைக்கக் கூடாது.
இதனை ஏற்றுக்கொண்ட பின் வெளியூர்காரர்களை போலிஸ் அனுப்பி வைத்தது. இந்துக்களை மதம் மாற்ற எவ்வித ஆக்கிரமிப்பையும் செய்ய தயங்காத கத்தோலிக்கர்கள் தங்கள் மதத்துக்கு பிரச்சனை வரும் போது கிறிஸ்தவனேயானாலும் வேற்று பிரிவுக்காரனை நடத்துவதை பார்த்தாவது இந்துக்கள் கிறிஸ்தவ பிரச்சாரகும்பல்களையும் மிசிநரிகளையும் எப்படி நடத்தவேண்டும் என்பதனை படிக்க வேண்டும். (நன்றி: தினகரன் 13.8.2007, மாவட்டசெய்தி: குமரி பதிப்பு)

Labels: Catholic Church, conversion, Pentecostal
0 Comments:
Post a Comment
<< Home