காம்ரேட் ரங்கராஜனுக்கு...
மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு,
பாஜகவிடம் கொண்ட வெறுப்பு வெளிப்படையாகவே தெரிந்தது. தனிப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் செயல்பாட்டை வைத்து ஒட்டுமொத்த கட்சியின் மீது சேறு வீசி மகிழ்ந்திருக்கிறார். கேரளாவில் கோடிக்கணக்கான சொத்தினை சேர்த்து ஊழல்வாதிகளாக அடையாளம் காட்டப்பட்டு நிற்கும் ஒரு கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் இவ்வாறு மற்றொரு கட்சியை நோக்கி கை நீட்டுவது அத்தனை கண்ணியமான செயலாக தெரியவில்லை. இதே அளவு கோலை தனது கட்சிக்கும் கட்சி தலைவர்களுக்கும் பிரமுகர்களுக்கும் நீட்டினால் என்னவாகும் என சிந்திக்கும் நேர்மை திறன் அவருக்கு ஏற்படவேண்டும். எடுத்துக்காட்டாக, மீனவகுலப் பெண்மணியும் சமுதாய ஆன்மிக தலைவியும் நம் அன்புக்குரிய கலாம் அவர்களால் மதிக்கப்படுபவருமான ஒரு கேரள பெண் துறவியை 'கவர்ச்சி நடிகை' என கீழ்த்தரமாக நாயனார் பேசியதையும், அதே நாயனார் 'பாலியல் பலாத்காரம் அமெரிக்க பெண்களுக்கு தேநீர் அருந்துவது போல' என பாலியல் வன்முறையை நியாயப்படுத்தியதையும், கேரள மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரமுகர்கள் அண்மையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் விபச்சார ரெய்டுகளில் சிக்கியதையும் (தினகரன் 3-மார்ச்-2007:குமரி பதிப்பு) கொண்டு நாம் ஒட்டுமொத்த கம்யூனிஸ்ட் கட்சியை எடை போட்டால் திரு.டி.கே.ரங்கராஜனுக்கு எப்படி இருக்கும்? மேலும் செக்கோஸ்லேவேக்கியாவை ஆக்கிரமித்த நாசிகளுக்கு எதிராக குரல் கொடுத்த கொடுங்கோலன் ஜோஸப் ஸ்டாலின் அதே நாசி ஹிட்லருக்காக 'ஜெர்மன் மக்கள் உள்ளத்தை கொள்ளைக் கொண்ட ஹிட்லருக்காக' என ட்டோஸ்ட் செய்ததையும் பின்னர் எந்த செக்கோஸ்லேவேக்கிய படையெடுப்பை முதலில் மேம்போக்காக எதிர்த்தாரோ அதே செக்கோச்லேவேக்கிய நாட்டில் நாசி ஆக்கிரமிப்பாளர்களிடம் தம் தூதரகத்தை அங்கீகரிக்கும்படி வேண்டுகோள் விடுத்ததையும் (இதன் பொருள்: செக்கோஸ்லெவேக்கிய நாட்டின் மீதான நாசி ஆக்கிரமிப்பை சோவியத் ஏற்கிறது என்பதாகும்) கம்யூனிச வரலாற்றின் இரத்தக்கறை படிந்த பக்கங்களுக்குள் இன்னும் அதிக இரத்தக்கறையும் துரோகமும் படிந்த பக்கங்களாகும். இக்கடிதத்தின் குரல் பாஜகவில் தவறு செய்தவர்களுக்கு ஆதரவானதல்ல. தேச பண்பாடு குறித்து பேசும் பாஜகவில் நிகழ்ந்த இத்தவறுகள் பெரும் நம்பிக்கை துரோகமாகும். பாஜகவினர் சுய பரிசோதனை செய்து திருத்திக்கொள்ள வேண்டியது அவசியம். ஆனால் கம்யூனிசம் போன்ற மானுட விரோத கோட்பாட்டைக் கொண்ட ஒரு இயக்கம் பாஜகவின் தவறுகளை சுட்டிக்காட்டுவது என்பது நகைப்புக்கும் பரிதாபத்துக்கும் உரியது.
தங்கள் ஆகஸ்டு 9 2007 இதழில் சி.பி.எம் மத்தியகுழு உறுப்பினர் திரு.டி.கே.ரங்கராஜன் அவர்களின் 'கேள்வித்திருவிழா' பதில்களைக் கண்டேன்.

தங்கள் உண்மையுள்ள
எஸ்.அரவிந்தன் நீலகண்டன்
Labels: Marxism, Marxist scandals, Nazi-Marxist relation
0 Comments:
Post a Comment
<< Home