Tuesday, June 19, 2007

எகிப்திய ஃபாரோவின் உடலும் இஸ்லாமிய பிரச்சாரமும்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் என நினைக்கிறேன். Peace என்கிற இஸ்லாமிய கண்காட்சி சென்னையில் நடந்தது. ஒரு நண்பரின் அழைப்பின் பெயரில் அதனைக் காண நான் சென்றிருந்தேன்.அந்த கண்காட்சியில் பல வண்ண காட்சி அமைப்புகள் செய்து வைத்திருந்தனர். அதில் ஒரு எகிப்திய மம்மியின் படமும் இருந்தது. எகிப்திலிருந்து மோசஸ் (இஸ்லாமிய மரபில் இவரை மூஸா நபி என்கின்றனர்) யூதர்களை அழைத்து சென்ற போது, அவரை துரத்திய ஃபாரோ மன்னனின் படை நீரில் மூழ்கியதாகவும் அப்போது மன்னன் தான் மோஸஸ் மற்றும் ஆரோனின் (இஸ்லாமிய பெயர் ஹாரூன்) இறைவனை நம்புவதாக கூறியதாகவும், இதனையடுத்து 'உனக்குப் பின் வருவோருக்கு நீ சான்றாக இருப்பதற்காக உன் உடலை இன்று பாதுகாப்போம்' என்று இறைவன் கூறியதாக குர்-ஆன் (10::92) கூறுகிறது. இது அண்மைக்கால அகழ்வாராய்ச்சியின் போது நிரூபிக்கப்பட்டதாக இந்த ஃபாரோவின் மம்மியைக் காட்டி அவர் கூறினார். மேலும் அது மம்மியே அல்ல என்றும் இயற்கையாகப் பாதுகாக்கப்பட்ட உடல் என்றும் அது பின்னர் அகழ்வாராய்ச்சியில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உடலை பாதுகாக்கும் முறைகளை நன்றாக அறிந்த இக்காலத்தில் கெய்ரோ அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது என்றும் இது இறைவன் அருளிய திருமறையே குரான் என்பதனை நிரூபிப்பதாகவும் அவர் கூறினார். எனக்கென்னவோ அந்த கண்காட்சியில் காட்டப்பட்டது மம்மி (பழங்கால எகிப்தில் சடங்கு ரீதியாக பதப்படுத்தப்பட்ட சடலம்) என்றே தோன்றியது. ஆனால் அந்த நண்பர் அதனை மறுத்தார். மிக எளிதாக விக்கிபீடியாவில் அந்த கண்காட்சியில் காட்டப்பட்ட அதே மம்மியின் படத்தினை ராம்ஸே-2 என அறிந்த போது எனக்கு ஆச்சரியம் உண்டாயிற்று. இவ்வளவு தெளிவாக தெரிகிற வரலாற்று விஷயங்களைக் கூடவா மத நம்பிக்கைக்காக புரட்டுவார்கள். பாவம் எத்தனை அப்பாவிகள் இதனை நம்புகிறார்களோ என கழிவிரக்கம் கூட உண்டாயிற்று. ஏறத்தாழ இரண்டு வருடங்களுக்கு பின்னர் இதே விஷயத்தை இணைய வலைப்பதிவுலகத்திலும் எதிர் கொள்ள வேண்டியிருக்கும் என நான் கனவிலும் கருதவில்லை. இதோ அந்த இஸ்லாமிய வலைப்பதிவில் அளிக்கப்பட்ட விஷயத்தை அப்படியே தருகிறேன்:
மோஸஸ் செங்கடலை பிளந்து தன் மக்களை அழைத்துச் செல்லும் காட்சி ஆபிரகாமிய மதங்களில் ஒரு முக்கியமான தொன்மமாகும்.
"வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட நைல் ஆற்றங்கரையின் ஓரத்தில் லுக்ஸார் என்ற அழகிய சிற்றூர். இந்த லுக்ஸாரில் 'அரசர்களின் ஓடை' என்ற பெயரில் ஒரு பள்ளத் தாக்கு இருக்கிறது. அங்குள்ள தீபிஸ் என்ற பகுதியில் 1898 ஆம் ஆண்டு மம்மீஸ் (சடலங்கள்) பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த லோனேட் என்ற ஓர் அறிவியல் ஆய்வாளர் அங்கிருந்து ஒரு சடலத்தை கண்டெடுத்தார்.அது உடனடியாக கெய்ரோவிலுள்ள ராயல் மியூஸியத்திற்கு பாதுகாப்பாக எடுத்துச் செல்லப் பட்டது. அந்த சடலம் கண்டெடுக்கப் பட்ட ஆண்டிலிருந்து இன்று வரை ஒரு நூற்றாண்டு கடந்து விட்டது. இப்போது அந்த சடலம் மூவாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது எனவும் எகிப்திய அரசப் பரம்பரையில் வந்த யாரோ ஒரு பாரோ மன்னனின் சடலம்தான் அது எனவும் இன்றைய அராய்ச்சியாளர்கள் அனைவருமே பெரும்பாலும் ஒத்துக் கொண்டு விட்டனர். எகிப்தின் தலைநகர் கெய்ரோவிலுள்ள உலகப் புகழ் பெற்ற ராயல் மியூஸியத்தில் பார்வையாளர்களை எல்லாம் தன் பக்கம் ஈர்த்துக் கொண்டிருக்கக் கூடிய அந்த பழம் பெரும் சடலம் குர்ஆன் கூறும் ஃபிர்அவுனின் உடலே! முகமது நபியின் காலத்திலேயே இந்த உடல் வெளிப் பட்டிருக்குமானால் யுக முடிவு நாள் வரை அந்த உடலை பாதுகாக்கும் வசதி அந்த மக்களிடத்தில் இல்லை, உடலும் அழுகிப் போய் விடும். எனவே தான் விஞ்ஞானம் வளர்ந்த இந்நாளில் இறைவன் அந்த உடலை வெளிப்படுத்துகிறான். எகிப்து சென்றவர்கள் அந்த உடலை நேரிலேயே பார்க்கலாம். 'குர்ஆன் கூறும் அத்தாட்சிகள்' என்ற சிடி யிலும் நாம் பார்த்திருக்கலாம். குர்ஆன் இறை வேதம்தான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று!"
இந்த
அருமையான கட்டுரைக்கு வந்த மறுமொழிகளில் ஒன்று கூறுகிறது:
"பிர் அவுன் எனப்படும் PAROH, பிரமிடுகளில் ஒன்றைக் கட்டியவன். இன்றளவும் உலகமே பிரமிடு எப்படித்தான் கட்டப்பட்டிருக்கும் என்று ஊகங்களை மட்டுமே வைத்துக் கொண்டிருக்கும் அளவுக்கு அக்காலத்தில் விஞ்ஞானத்தில் வளர அல்லாஹ் பிர்அவுனுக்கு அறிவை அளித்திருந்தான். இறுமாப்பெய்திய பிர்அவுன் தன்னை இறைவனாக வணங்கும்படி அனைவருக்கும் உத்தரவிட்டான். தான் இறந்த பிறகு தன் உடலைப் பாதுகாப்பதற்காக ஒரு பிரமிடை பிரமாண்டமாகக் கட்டிய அந்த பிர்அவுனுக்கு ஆண்டவன் அளித்த பரிசு என்ன தெரியுமா? அவன் உடல் அந்த பிரமிடுக்குள் இல்லாமல் போகச் செய்ததுதான். ஆராய்ச்சியாளர்கள் அவ்வளவு பெரிய பிரமிடுக்குள் மம்மி இல்லாது போன காரணம் கண்டு ஆச்சரியப்பட்டுப் போயினர், இஸ்லாமிய அறிஞர்கள் தான் அந்த விளக்கத்தை குர்ஆனின் மூலம் எடுத்துக் காட்டினர்."
இதனைத் தொடர்ந்து மேலும் ஒரு விளக்கத்தை திருவாளர் சுவனப்பிரியன் கொடுக்கிறார்:
"இப்போது மியூஸியத்தில் பாதுகாக்கப் பட்டு வைக்கப்பட்டிருக்கும் மன்னனின் உடல் பாடம் செய்து வைக்கப் பட்ட உடல் அல்ல. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலில் பிரவுன் என்ற அரசன் இறைவனால் மூழ்கடிக்கப் படுகிறான். மூழ்கடிக்கப் பட்ட உடல் கரையோரம் ஒதுங்கி பனிப் பாறைகளுக்கு இடையில் சிக்கிக் கொள்கிறது. கடல் நீரினுள் உள்ள உப்பும், பனிக் கட்டிகளும் அந்த உடலை போன நூற்றாண்டு வரை கெடாமல் காத்து வந்தன. குளிர் சாதன வசதிகள் ஏற்பட்டு விட்ட இன்றைய காலத்தில் மக்களுக்கு விளக்குவதற்காக இறைவன் அந்த உடலை நாம் வாழும் காலத்தில் வெளியாக்குகிறான். இதைத்தான் நானும் விளக்கியிருக்கிறேன்."
பார்க்க:http://suvanappiriyan.blogspot.com/2006_07_01_archive.html

மேலே கூறப்பட்டிருப்பவை உண்மையா?

முதலில் 'அரசர்களின் ஓடை'யில் நடந்த கண்டெடுப்புகளிலிருந்து ஆரம்பிக்கலாம்.

எகிப்தின் பழமையான அரச பரம்பரையினரின் (ஒன்றாம் பரம்பரையினர் முதல் எட்டாம் பரம்பரையினர் வரைக்குமான) கால கட்டம் என்பது கிமு 2950-2150 ஆகும். இக்கால கட்டமே பொதுவாக பிரமிடுகளுக்குள் அரச உடல்கள் பதப்படுத்தி வைக்கப்பட்ட காலகட்டம். இந்த காலகட்டத்திலிருந்து ஏறக்குறைய 50 பிரமிடுகள் காலத்தின் கொடுமைகளுக்கு தப்பித்து நிற்கின்றன என்ற போதிலும் புதையல் தேடுவோரினால் சீர்குலைக்கப்பட்டிருக்கின்றன. இதில் மிகப்பெரிய பிரமிடு குஃபு (Khufu அல்லது பொதுவாக சியோப்ஸ் என்றும் அறியப்படும்)எனும் பாரோவால் கிமு 2550 இல் கட்டப்பட்டதாகும். இவரது உடலைத்தான் காணவில்லை. இது அகழ்வாராய்ச்சியாளர்கள் வருவதற்கு முன்னால் அங்கு வந்த புதையல் திருடர்களால் அழிக்கப்பட்டிருக்க வேண்டும்.

பிற்கால எகிப்திய அரசகுல பழக்க வழக்கங்கள் மாறலாயின. கிமு 2125 முதல் ஏறத்தாழ 150 ஆண்டுகளுக்கு எகிப்தில் குழப்பங்கள் ஏற்பட்டன. பின்னர் தெளிவான ஆட்சி அமைப்பு ஓரளவுக்கு ஏற்படுகிறது. இதனையடுத்து ராஜ உடல் அடக்கங்கள் நைல் நதியின் மேற்கு கரைக்கு மாற்றப்படுகின்றன. இதுவே நாம் 'ராஜாக்களின் பள்ளத்தாக்கு' என அறியப்படும் பகுதி. கிமு 16 ஆம் நூற்றாண்டிலிருந்து 11-ஆம் நூற்றாண்டு வரைக்குமான எகிப்திய வரலாற்றினை நாம் இங்கு காணலாம். இங்குதான் 18 ஆம் வமிச எகிப்திய அரசர்கள் பெரும் அடக்க அறைகளில் பாடமிட்டு அடக்கம் செய்யப்பட்டனர். 19 ஆவது மற்றும் இருபதாவது வம்ச அரசர்களும் இங்கே இறுதி துயிலுக்காக பெரும் அடக்க அறைகளை அமைத்து துயில்கின்றனர். இங்கு அடக்க அறை அமைத்தவர்களுள் ராமிஸேஸ்-2 மற்றும் ராமிஸேஸ்-3 ஆகியோரும் அடக்கம் (no pun intended).ராமிஸேஸ்-2 மம்மி (செயற்கையாக எகிப்திய பூசாரிகளால்/மருத்துவர்களால் பதப்படுத்தப்பட்ட சடலம்) 1881 இல் கண்டெடுக்கப்பட்ட இந்த மம்மி பின்னர் கெய்ரோ அருங்காட்சியகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கேயே வைக்கப்பட்டுள்ளது.
பொதுவாக இஸ்லாமிய பிரச்சார படங்களில் காட்டப்படுவது இந்த மம்மியைதான். இது நீரில் மூழ்கி இறந்த சடலம் இல்லை என்பதனை இங்குகுறிப்பிட வேண்டும். இவரது பதப்படுத்தப்பட்ட சடலத்தை மிக நுண்ணிய முறையில் அறிவியலாளர்கள் ஆராய்ந்துள்ளனர். ராமிஸேஸின் மரணம் அவரது பல்லில் ஏற்பட்ட புண் வீங்கி சீழ் பிடித்ததால் ஏற்பட்டதாகும். 90 வயது வரை இருந்த இந்த ஃபாரோ தன் இறுதி காலத்தில் எல்லா முதியவர்களையும் போல மூட்டுவலியால் அவதிப்பட்டார் என்பதையும் அறிவியலாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

எக்ஸோடஸ் எனப்படுவதே ஒரு தொன்மம். பல நாட்டார் வழக்குகள், முந்தைய தொன்மங்கள் ஆகியவற்றிலிருந்து காலப்போக்கில் உருவானதோர் கதையாடலே அது எனவே அதற்கான ஆதாரங்களை வரலாற்றிலும் அகழ்வாராய்ச்சியிலும் தேடிக்கண்டடைவது கடினம் என்றே வரலாற்றாசிரியர்களும் பெரும்பான்மையான எகிப்தியவியலாளர்களும் கருதுகின்றனர். என்ற போதிலும் வரலாற்றிலும் அகழ்வாராய்ச்சியிலும் தமது மத நம்பிக்கைகளுக்கு ஆதாரங்களைத் தேடுபவர்கள் தொடர்ந்து பல ஃபாரோக்களை விவிலியம் கூறும் யாத்திராகம வில்லனான ஃபாரோவாக அடையாளம் காண முயற்சித்தே வந்துள்ளனர். புராணங்கள் (ஐதீகங்கள், தொன்மங்கள், புராதன மதநம்பிக்கைகள்) வரலாற்றுக்கருவினைக் கொண்டிருக்கலாம். ஆனால் அவை காலங்கள்தோறும் தொன்ம விரிவாக்கம் அடைவன. எனவே வரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை மத நூல்கள் விவரிப்பவை அகழ்வாராய்ச்சியால் உறுதிபடுமென நினைப்பவர்கள் மிகவும் மோசமான தவறினை செய்பவர்களாவர். எனினும் நம்பிக்கையாளர்களால் பைபிள் (பின்னர் குரான்) கூறிய ஃபாரோவாக அடையாளம் காணப்பட்ட ஃபாரோக்கள் பின்வருவோர் ஆவர்:


  • அஹ்மோஸ்-1 ஆட்சிக்காலம் கிமு 1550-1525. இவரது உடல் மம்மியாக பதப்படுத்தப்பட்டுக் கண்டுபிடிக்கப்பட்டு இப்போது எகிப்திய லக்ஸார் மியூசியத்தில் உள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு 1881. இது அஹ்மோஸ்ஸின் மம்மிதானா என்கிற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.
  • தட்மோஸ்-3: ஆட்சிக்காலம் கிமு 1479-1425. இரண்டு ஆண்டுகள் மகனுடன் இணை ஆட்சி செய்துள்ளார். இவரது உடல் மம்மியாக பதப்படுத்தப்பட்டுக் கண்டுபிடிக்கப்பட்டு இப்போது கெய்ரோ மியூசியத்தில் உள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு கிபி 1881.
  • அமென்கோதப்-2: ஆட்சிக்காலம் கிமு 1427-1400) இவரது உடல் மம்மியாக பதப்படுத்தப்பட்டுக் கண்டுபிடிக்கப்பட்டு இப்போது கெய்ரோ மியூசியத்தில் உள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு கிபி 1898
  • சேத்தி-1: ஆட்சிக்காலம்: கிமு 1294-1279 அல்லது 1290-1279. இவரது உடல் மம்மியாக பதப்படுத்தப்பட்டுக் கண்டுபிடிக்கப்பட்டு இப்போது கெய்ரோ மியூசியத்தில் உள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு கிபி 1817
  • ராமிஸேஸ்-2: ஆட்சிக்காலம்: கிமு 1279-1213. இவரது உடல் மம்மியாக பதப்படுத்தப்பட்டுக் கண்டுபிடிக்கப்பட்டு இப்போது கெய்ரோ மியூசியத்தில் உள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு கிபி 1881
    இதில் காணப்படும் முகம் ராமிஸேஸின் மம்மியிலிருந்து அவரது முகம் எவ்வாறு இருக்கும் என மீளமைக்கப்பட்டதாகும். நன்றி: டிஸ்கவரி சானல்
  • மெர்னப்தா: ஆட்சிக்காலம்: கிமு 1213-1203 இவரது உடல் மம்மியாக பதப்படுத்தப்பட்டுக் கண்டுபிடிக்கப்பட்டு இப்போது கெய்ரோ மியூசியத்தில் உள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு கிபி 1898
ஆக, சுவனப்பிரியன் கூறிய '1898-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட' அமென்கோதெப்-2 மற்றும் மெர்னப்தா ஆகிய இரு ஃபாரோக்களின் உடல்களுமே மம்மிகள் ஆகும். இயற்கையாக அல்ல செயற்கையாக பதப்படுத்தப்பட்டவை. இஸ்லாமிய கண்காட்சியிலும் இஸ்லாமிய பிரச்சார தளத்திலும் காட்டப்படுவதும் ஃபாரோ ராமிஸேஸ்-2 இன் செயற்கையாக பதப்படுத்தப்பட்ட உடலே ஆகும். இது குறித்து சில தொழில்முறை எகிப்தியவியலாளர்களுக்கு நான் மின்னஞ்சல் அனுப்பினேன். அவர்களிடம் இஸ்லாமிய பிரச்சாரத்தையும் என்னுடைய ஐயங்களையும் கூறினேன். விவிலியத்திலும் குரானிலும் முக்கிய இடம் வகிக்கும் எக்ஸோடஸ் எனும் யாத்திராகம் ஒரு வரலாற்று நிகழ்வாக இருப்பதை விட ஐதீகக்கதையாடலாக இருக்கவே வாய்ப்பு அதிகம் என கூறினேன். அப்படி இருக்கையில் எகிப்தின் கெய்ரோ மியூசியத்தில் இருக்கும் ஒரு மம்மியைக் காட்டி இப்படி செய்யப்படும் பிரச்சாரம் உண்மையாக இருக்க வாய்ப்பில்லை அல்லவா எனக் கேட்டிருந்தேன்.

பேரா. ப்ராங்காய்ஸ் டுனாண்ட் இருபதாண்டுகளுக்கு மேலாக எகிப்திலுள்ள கெய்ரோ-பிரெஞ்சு அகழ்வாராய்ச்சி மையத்தில் பணி ஆராய்ச்சி செய்தவர். அவரிடம் இது குறித்து கேட்டிருந்தேன். அவர் பதிலளித்தார்:

"உன்னுடைய ஐயங்களை நான் ஒத்துக்கொள்கிறேன். முதலாவதாக எகிப்தின் புதிய ராஜ்யத்தில் அனைத்து ஃபாரோக்களும் மம்மிகளாக்கப்பட்டனர் என்பதால் ராஜ மம்மி 'இயற்கையாக பாதுகாக்கப்பட்டது' என்று கூறப்படுவது குறித்து ஆச்சரியமடைகிறேன். இரண்டாவதாக நீ அறிந்திருப்பதைப் போல மோஸஸ் செங்கடலை கடந்தது என்பது பெரும்பாலும் ஐதீகக்கதைதான். மோஸஸையும் அவரைச்சார்ந்தவர்களையும் கடல் வழியாக துரத்திச் சென்ற ஒரு ஃபாரோவைக் குறித்து எவ்வித வரலாற்று வழக்கும் இல்லை.குரானின் இது குறித்த விவரணத்தை ஒரு மதச்சமாச்சாரம் என்கிற விதத்தில் நாம் புரிந்து கொள்ளலாமே ஒழிய வரலாற்று ரீதியாக அல்ல."
(புதிய ராஜ்யம் அல்லது Newkingdom என்பது மேலே கூறிய எகிப்திய அரசர்களின் காலகட்டமாகும். ஏறக்குறைய கிமு 1500களின் தொடக்கத்திலிருந்து கிமு 1000 வரைக்குமான காலகட்டம் எனலாம்.)

மேலும் பிரபல எகிப்தியலாளர் மற்றும் உரையாளர், ஆசிரியர் டைலான் பிக்கர்ஸ்டாஃபே என்பவர் சுவனப்பிரியன் குறிப்பிடும் பகுதியைச் சார்ந்த மம்மிகளைக் குறித்தே ஒரு நூலினை எழுதியவர். எனவே அவரிடம் இதே ஐயங்களை எழுப்பினேன். அவர் பதிலளித்திருந்தார்:

"பலரும் எகிப்திலிருந்து மோஸஸ் மக்களை மீட்டதை வழக்குக் கதை (folktale) என்றே கருதுகின்றனர். அதனை நம்புகிறவர்களும் கூட (1898 இல் கண்டெடுக்கப்பட்ட மம்மியான) மெர்னெப்தா அந்த ஃபாரோவாக இருக்க முடியாதென்பதில் ஐயம் கொண்டவர்களாகவே உள்ளனர். மேலும் அந்த ஃபாரோவும் மூழ்கியதாக கதையும் கூறவில்லை. மெர்னெப்தா மம்மியில் பதப்படுத்தப்பட்ட அலங்காரப் பொருட்களின் விளைவாக இருந்த வெள்ளை தடங்களை ஒரு காலத்தில் சிலர் கடலில் மூழ்கியதால் ஏற்பட்ட உப்பரிப்பு என கூறிவந்தனர். அனைத்து மம்மிகளிலும் நேட்ரான் எனப்படும் பதப்படுத்தப்படும் பொருள் உபயோகிக்கப்படுவதால் உப்பு கட்டாயமாக இருக்கும். மெர்னெப்தா மம்மியும் அதற்கு விலக்கல்ல."
மேலும் இஸ்லாமிய பிரச்சார தளத்தில் காட்டப்பட்ட ஃபாரோவின் உடலைக் குறித்து அவர் கூறினார்:
" இங்கு காட்டப்படும் மம்மி நிச்சயமாக ராமிஸேஸ்-2 தான். இப்புகைப்படம் கெய்ரோ மியூசியத்தில் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். அது நிச்சயமாக வழக்கமான முறையில் பதப்படுத்தப்பட்ட மம்மியேதான். மிகச்சிறந்த மம்மிக்கு உதாரணமாக இது திகழ்கிறது. ஏனெனில் அது புதையல் வேட்டைக்காரர்களால் அதிக சேதப்படுத்தப் படாதது."

இதில் இறுதியாக மற்றொரு கூத்தையும் குறிப்பிட்டே ஆகவேணும். டாக்டர். மவுரிஸ் பௌகாலே ஒரு பிரஞ்சு மருத்துவர். அன்வர் சதாத் மற்றும் சவுதி அரசகுடும்பத்துக்கு மருத்துவராக இருந்தவர். "குரானும் பைபிளும் : அறிவியலின் பார்வையில்" எனும் இஸ்லாமிய பிரச்சார நூலை எழுதியவர். இவர் மெர்னப்தாவின் மம்மியை 'தீவிரமாக' ஆராய்ச்சி செய்திட எகிப்திய அரசினால் அனுமதிக்கப்பட்டார். இந்த 'ஆராய்ச்சியின்' முடிவாக அவர் மெர்னப்தா குரான் சொல்வது போல வெள்ளப்பெருக்கில் அடிபட்டு இறந்ததற்கு அத்தாட்சி இருப்பதாக கூறுகிறார். நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் அறிவியல் எழுத்தாளர் இவரது நூலை விமர்சிக்கையில் கூறுகிறார்: "ஆனால் பிளந்து மூடிய நீர்திரை எப்படி தலைக்காயத்தை ஏற்படுத்தும் என்பதனை அவர் விளக்கவில்லை." உண்மையில் மெர்னப்தா ஏறத்தாழ தமது 60 ஆவது வயதில் அரியணை ஏறி பின்னர் பத்து வருடங்களுக்கு ஆண்டிருக்கிறார். தமது எழுபதாவது வயதில் காலமாகியிருக்கிறார். இவரைக்குறித்த முக்கியமான விஷயம் இவரது வெற்றி தூண்ணில் இவர் பொறித்துள்ள வாசகங்கள் ஆகும். கிமு 1207 ஆண்டு பொறிக்கப்பட்ட இவ்வாசகங்கள் கானான் பிரதேசத்தை இவர் படையெடுத்தது குறித்தும் இஸ்ரேலினை படையெடுத்து தோற்கடித்தது குறித்தும் பேசுகிறது. முதன்முதலாக இஸ்ரேல் தேசத்தைக் குறித்து யூத பைபிளுக்கு வெளியே பேசும் ஆவணம் என்ற முறையில் முக்கியத்துவம் பெறும் இது எக்ஸோடஸ் தொன்மத்துடன் இந்த ஃபாரோவை இணைப்பதையும் பொய்ப்பிக்கிறது. மோஸஸ் கடல் கடந்து சென்று ஸ்தாபிதம் செய்த ஒரு தேசத்தை எப்படி அவரைத் தொடர்ந்து கடலில் மூழ்கிய ஃபாரோ தனது வாழ்க்கை முடிவதற்கு நான்கு-ஐந்து வருடங்களுக்கு முன்னர் கல்வெட்டில் பொறிக்க முடியும்?

கிமு 1207 மெர்னப்தா வெற்றித்தூண்
மேலும் இந்த மம்மியின் மீதிருந்த உப்பு நம்பிக்கையாளர்களுக்கு கொடுத்த நம்பிக்கையும் எப்படி பொய்த்தது என்பதனை பிக்கர்ஸ்டாஃபே விளக்கியதையும் பார்க்கும் போது பௌகாலேயின் முடிவுகள் எப்படி உண்மையைக் காட்டிலும் பிரச்சாரமே என்பது தெளிவாகிறது. இப்படி அறிவியல்/தொழில்நுட்ப பட்டம் பெற்ற சிலரை மதத்திற்காக பிரச்சாரம் செய்ய வைக்கும் பிரம்மாண்ட பிரச்சார இயக்கத்தை சௌதி அரசு நடத்தி வருவதை ஏற்கனவே பேராசிரியர் வில்லியம் ஹே விளக்கியிருந்தார்.

ஆக, மதப் பிரச்சாரகர்கள் இனியாவது தாங்கள் கூறும் அத்தாட்சிகளில் கவனமாக இருக்க வேண்டும்.தங்களது நேர்மைக்கேடான சிறுமதியால் புராணக்கதைகளுக்கு அறிவியல் சான்று காணும் முயற்சிகளை -நாஸா புகைப்படங்கள் முதல் எகிப்திய மம்மிகள் வரை- கைவிட்டு உண்மையான ஆழமான ஆன்மிக அக-வாழ்வுக்கான வழிகாட்டிகளாக தொன்மங்களை பயன்படுத்தினால் இவ்வுலகம் எத்தனையோ நன்றாக மாறும்.

முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள்.


ஸப்கோ சன்மதி தே பகவான்.

மேலதிக விவரங்களுக்கு:

  • http://en.wikipedia.org/wiki/Ahmose_I
  • http://en.wikipedia.org/wiki/Amenhotep_II
  • http://en.wikipedia.org/wiki/Thutmose_III
  • http://en.wikipedia.org/wiki/Merneptah_Stele
  • http://en.wikipedia.org/wiki/Seti_I
  • http://en.wikipedia.org/wiki/Ramesses_II
  • http://en.wikipedia.org/wiki/Merneptah_I
  • http://query.nytimes.com/gst/fullpage.html?res=9D0CE7DA173BF930A35751C0A967958260
  • http://www.nationalgeographic.com/pyramids/timeline.html
  • http://www.nationalgeographic.com/egyptjournal/valley.html

Labels: , , ,

11 Comments:

Anonymous Anonymous said...

? ما هو معنى هذه الجمله ادناه؟

முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள்.

8:44 PM, June 19, 2007  
Blogger வித்யார்தி said...

இறை என்பது ஒரு அனுபவம். அது ஒரு கருத்துறு(concept), அவ்வளவே. இறை என தான் கருதுவதையே வேதங்களாகவோ அல்லது மத நூல்களாகவோ எழுதி வைத்துள்ளனர் மதப் பெரியவர்கள். முற்காலத்தில் தமக்கு ஏற்பட்ட அனுபவத்தை ரிஷிகளும், முனிவர்களும் தம்முடைய பெயர் குறிப்பிடாமல் எழுதிவைத்துள்ளனர். சனாதன தர்மத்தில் இந்த அனுபவமே முக்கியமாகப்பட்டது, எழுதியவர்கள் அல்ல. மேலும் எழுதி வைக்கப்பட்டுள்ளதைத் தவிரவும் கடவுள் என்று நாம் கருதவும், பின்பற்றவும் நமக்கு முழு சுதந்திரம் உள்ளது. ஆனால் ஆப்பிரகாமிய மதங்களில் ஒரு reference book தேவைப்படுகிறது.

நம்முடையது உள்நோக்கிய ஆன்மீகம். நிஜமான தேடல். அவர்களுடைய ஆன்மீகம் ஒரு அடையாளத்திற்காக மெனக்கெட்டு உருவாக்கப்பட்டது.

உள்ளுணர்வு சார்ந்த நம் ஆன்மீகத்தை என்றும் இவர்களால் புரிந்து கொள்ள முடியாது. இதற்கு இணையத்தில் எழுதும் எந்த இஸ்லாமியருடைய எழுத்துமே சாட்சி.

இவர்களுடைய மத நூல்களில் உள்ளவைகளை மெனக்கெட்டு மெய்ப்பிப்பது இவர்களுக்கு அவசியமாகிறது.

5:38 AM, June 20, 2007  
Blogger கால்கரி சிவா said...

பொய்மையிலிருந்து உண்மைக்கு எனும் உபநிடத வார்த்தைக்களுக்கு தாங்கள் உதாரண புருஷராய் விளங்குகிறீர்கள்.

உண்மை என்றும் நிலைத்து நிற்கும் அதை தற்கொலை படையினரால் தகர்க்கவே முடியாது.

8:28 AM, June 20, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

ஐயா பனித்துளி அதென்ன மேலே வஹீயிறங்கிய வார்த்தைகளா?
அறியாதவன் சரியாக சொல்லியுள்ளீர்கள். முற்றிலும் உடன்படுகிறேன். தங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி கால்கரி சிவா

9:12 AM, June 20, 2007  
Anonymous Anonymous said...

மோசஸ் என்பதே வரலாற்று ரீதியில் நிரூபிக்க முடியாத கட்டுக்கதை.
அதுமட்டுமல்ல, எக்ஸோடஸ் என்னும் யூதர்கள் எகிப்திலிருந்து தப்பி இஸ்ரேலுக்கு வந்ததே ஒரு வரலாற்று ரீதியில் பொய்யான தகவல்.
இதற்கான சரித்திர ஆதாரங்க்ளை தேடி பல பைபிள் பைத்தியங்கள் தேடியும், இன்னும் இதற்கான சரித்திர ஆதாரங்கள் கிட்டவில்லை.

பைபிளில் கூறப்படும் பல சாம்ராஜ்யங்களுக்கான ஆதாரங்களே கிடையாது. ஏன் டேவிட் என்னும் தாவீதுக்கு வரலாற்றில் ஒரு ஆதாரம் கிட்டவில்லை. ஒரு பெரும் பேரரசை நிர்மாணித்ததாக கூறும் டேவிட் பெயர் உள்ள ஒரு கல் கூட அகழ்வாராய்வில் கிட்டவில்லை. சொல்லப்போனால், அவர் ஆட்சி செய்ததாக கூறப்படும் அந்த இடங்களில் கிராமங்கள் கூட அந்த காலத்தில் இல்லை.
ஆபிரஹாம் இருந்ததாக சொல்லப்படும் காலத்தில் ஒட்டகங்களோ குதிரைகளோ கழுதைகளோ டொம்ஸ்டிகேட் பண்ணப்படவில்லை.

அந்த காலத்து தொன்மங்களை சேர்த்து ஒரு அரசனால் உருவாக்கப்பட்ட கதைகள்.
ஜோஸய்யா அரசனின் குரு ஜெரமியாதான் பழங்கால கதைகளை சேர்த்து பைபிளை கோர்த்து அதில் டியூட்டரானமியை எழுதி சேர்த்து பைபிளை உருவாக்கியவர் என்று கருதுகிறார்கள்.
These scholars also feel that Josiah’s high priest Jeremiah was responsible for this supposed discovery. They also feel that Jeremiah’s scribe, Baruch ben Neriah, wrote these books either directly or through dictation from Jeremiah. Not only that, but Baruch also wrote all the books from Deuteronomy to 2nd Kings as well as the Book of Jeremiah. Why they think so is that the prose of those texts matches. (The following have close similarities: Deut 10:16 matches Jer 17:24; Deut 4:19 matches Jer 8:2

9:20 AM, June 20, 2007  
Anonymous Anonymous said...

Fortunately "Vahi" did not came on me. (If it had, I would be raping women, massacring children, and stealing others' money and making all of them a holy affair by springling with some routine religious affairs stolen from other religions.)

Translated the earlier comment is read as follows:

What is the meaning of the sentence below?

முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள்.

(The question is asked by my Arabi loving Palestanian friend; suits him)

1:28 AM, June 21, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

It means (not literally) "Fools are those who take the literal meaning of myths"

3:03 AM, June 21, 2007  
Blogger R. பெஞ்சமின் பொன்னையா said...

Dear Aravindan,

I totally agree with your words that the references from the so called holy books must be totally or exclusively used only for the betterment or growth of one's innerman. The theological scholars must refer/explain those bibilical or quranical events in such a way that the very purpose of their reference must be limited to the divine teachings.
But it should never be used to prove that "We are Great".

I must share what I have seen in Egyptian villages. Still there is a custom among the egyptian villagers that when they build a new house,(Most of the houses will not be plasterd from out side) they put a red mark on their door post. This is some how co insiding with the command what GOD gave to the Hebrew people when they were about to leave Egypt. The purpose of this red symbol in the door post is that to avoid the curse on their children as same as the Hebrews did on the night of Passover.


Though it is a very very small proof for the hebrews passover from Egypt, don't you think that the Passover must be a real event in the past history?

4:33 AM, June 23, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

அன்புள்ள பெஞ்சமின், நீங்கள் கூறிய வழக்கம் ஒரு நிரூபணம் ஆகிவிடாது. ஏனெனில் இத்தகைய வழக்கம் திருஷ்டி பொட்டு வைப்பது போன்ற ஒரு வழக்கம். எல்லா நாட்டிலும் ஒவ்வொரு விதத்தில் இருக்கும். அதற்கு ஐதீகக்கதையும் இருக்கும். கிறிஸ்தவ இஸுலாமிய தாக்கத்துக்கு பின் பிராந்திய வழக்கத்துக்கு இந்த ஐதீகக்கதை ஏற்றப்பட்டிருக்கலாம். முக்கியமான விஷயம் எக்ஸோடஸ் - யாத்திராகமம் எனும் ஐதீகத்திற்கு அகழ்வாராய்ச்சி தரவுகள் ஆதரவளிக்கவில்லை என்பதே. இஸ்ரேல் பிங்கில்ஸ்டைன் போன்ற யூத அகழ்வாராய்ச்சியாளர்களும் யூத இறையியலாளர்களும் இன்று ஒத்து கொள்கிற விஷயம்தான் இது.

7:28 AM, June 23, 2007  
Blogger suvanappiriyan said...

Mr Aravindhan!

I am busy in my work now. we will meet after one month. o.k.

Suvanappiriyan

1:58 PM, August 16, 2007  
Blogger A. அப்துல் அஜீஸ் B.COM said...

உனது 16 தலைமுறை முன்னர் உள்ள உன் தாத்தா குருடு என நான் சொல்கிறேன் நீ ஒப்புகொள்வையா? வரலாறு மூலமாகவும், அறிவியல் மூலமாகவும் நிரூபிக்க விரும்புகிறாய் வரவேற்க்கிறோம், ஆனால் சுய சிந்தனையோடு இஸ்லாத்தை நீ அணுகு உன்னை மதம் மாற அழைக்கவில்லை உன் மனம் ஆற அழைக்கிரேன் any dought www.ajeesaman.blogspot.com

5:48 PM, August 26, 2010  

Post a Comment

<< Home