Friday, August 10, 2007

வாரியார் சுவாமிகள்: தமிழ்-வடமொழி-சைவம்

சைவத்தையும் தமிழையும் தன் உயிராக கருதி இறைத்தொண்டாற்றிய முத்தழிழ் இறை ஞானி திருமுருக கிருபானந்த வாரியார் சைவ மந்திரங்கள் வடமொழியில் இருப்பது குறித்து என்ன கருத்து தெரிவித்தார் என்பதனை இங்கு காண்போம்.

கேள்வி: சிவதீக்கை பெற்றவர்கள் அனுட்டானத்தின் போது ஓதும் மூலமந்திரம், தனித்தனி அங்கங்களுக்கான மந்திரங்கள் அனைத்தும் வட சொற்கள் அமைப்பு முறையிலேயே உள்ளனவே? சைவ சமயத்தைத் தோற்றுவித்தவரும் சைவ சமயத்தின் தலைவருமான திரிபுரம் எரித்த விரிசடை கடவுளான பரம சிவன் முதல் தமிழ்ச் சங்கம் கண்ட இறைவன் என்பது வெள்ளிடை மலை. தமிழ்த்தலைவனான சிவபெருமானைப் போற்றி வழிபடும் மந்திரங்கள் மந்திரச்சொற்கள் எப்படி வடமொழி அமைப்பில் உருவாயின?


பதில்: மந்திரங்கள் வடமொழியில் அமைந்தவை. எல்லா மொழியினருக்கும் எல்லாருக்கும் பொதுமொழியாகிய வடமொழியில்தான் மந்திரத்தைப் பொதுவாக பயின்று வருகிறார்கள். இதைத்தான் திருஞானசம்பந்தர் 'மந்திரமாவது நீறு' என்று திருவாய் மலர்ந்தருளியிருக்கின்றார். சைவ சமயிகள் தொன்று தொட்டு அனுஷ்டான காலத்தில் சம்மிதா மந்திரங்களை ஓதிவருவது மரபு. இதில் வெறுப்புணர்ச்சி ஆராய்ச்சி செய்வது நல்லதல்ல.
(வாரியார் விருந்து, குமுதம் 8/2/1973)

4 Comments:

Anonymous Anonymous said...

விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவராகவும், ஹிந்து மித்திரனின் கௌரவ
ஆசிரியராகவும் திருமுருக கிருபானந்த வாரியார் இருந்தார்.

11:34 PM, August 13, 2007  
Anonymous Anonymous said...

I have high respect for variyar. but,i do not accept this. tamil has periyapuranam, kanda puranam like many other things. By being part of India we are sometimes forced to accept hindi and sanscript which are no way related to our great tamil. Sanscrit is a almost dead.

Tamilians always respect others and know how to express their thoughts( sabai arindhu pesuthal).
in a way others can understand. That is why our ancestors might have allowed this so called sanscrit in tamilnadu. It is creating this trouble to us.
Great Barathi once predicited as"
mellath thamil ini sakum"(tamill will die slowly).I do not want aravindan to be one among those
who work against tamil, because i like his views and read him in thinnai.
sridhar
usa.

9:27 AM, August 25, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

அன்புள்ள ஸ்ரீதர்,

நீங்கள் பெரிய புராணத்தையோ கந்த புராணத்தையோ திருமுருகாற்றுப்படையையோ படித்தீர்கள் என்றால் ஒரு விசயத்தை புரிந்து கொள்ளலாம் சமஸ்கிருதம் பாரத மக்கள் அனைவருக்கும் சொந்தமான ஒரு மொழி என்பதனை தமிழர்களும் ஏற்றிருக்கிறார்கள். நம் கோவில்கள் ஆன்மிக மையங்கள் அத்துடன் நம் தேசத்தின் ஆன்மநேய ஒற்றுமையை வலியுறுத்துபவை. நம் தேசத்தின் ஆன்ம நேய ஒருமைப்பாடு நம் தமிழ் முன்னோர்களால் ஏற்று வலியுறுத்தப்பட்டதாகும். திருமூலர் முதல் திருநாவுக்கரசர் வரை சேக்கிழார் முதல் செக்கிழுத்த செம்மல் வரை இந்த தேச ஒற்றுமையை அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். சமஸ்கிருதம் அந்த தேச ஒற்றுமையின் அடையாளம் ஆகும். எனவேதான் அண்ணல் அம்பேத்கர் சமஸ்கிருதம் தேசிய மொழி ஆகிட வேண்டுமென விரும்பினார். சமஸ்கிருதத்தின் இத்தன்மையை சுட்டிக்காட்டுவது தமிழை பழிப்பதாகாது. தமிழுக்கு ஏதாவது ஆபத்து என்றால் அது சோதனை ஒளிபரப்பில் கூட குத்தாட்டங்களை காட்டும் குடும்ப டிவிகளால் ஏற்படக்கூடும்.

9:37 AM, August 25, 2007  
Anonymous Anonymous said...

ARAVINDAN,
Thanks. I understand. Also I have couple of things for your thoughts.

1.There was no one united India like what we have now before, British occupied the sub continent. They are the one united the sub continent as one land and after freedom it stays as it is on the basis of respect for all cultures.

2.There was no India during Thirumular time. They were interested in tamilians unity( because of wars between tamil kings).

3.First of all in a democracy no one Individual can decide sanskrit as the national language. National language was selected by people of India.

4.Not every Indian unerstands sanskrit.If majority of people do not like that, then it should go.

5. In tamil country i want to worship god in a way that i can understand. I do not even know what the priest says before diety.

6. If you go to Russia , you should speak russsian, not the Dead sanskrit. The same way if you want to live in my house, you should respect my rules. That applies to language also. Tamilnadu is my hosue, so I accept only tamil, but respect other languages.
Respect doest not meant that I have to accept it. I am not asking non tamilians to accept tamil in their home. I am asking only tamilians. If i go to Mumbai, I speak Hindi, not tamil. I like that policy should be applied in tamilnadu too.

7. Please do not say that sanscrit is a common language for all. English is the worlds language. Hindi is Indias national language as long as it is not forced on others. Tamil is for tamilnadu.
No room for dead sanscript in Tamil country. But, you have freedom to use it in tamilnadu, for your personal likes and with in your own family. Do not try to force on others. Sorry my friend, i accept your views on other matters, not on undermining my beloved tamil language.
sridhar
usa

7:38 AM, August 26, 2007  

Post a Comment

<< Home