Sunday, August 12, 2007

இந்து வாழ்வுரிமை: தமிழகம் 2007

ஆகஸ்ட் 3 அன்று குமரி மாவட்டத்தில் இந்துக்களின் புனித தினமான ஆடிப்பெருக்கை ஒட்டி இந்து கோவில் சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன.மேலும் இந்து கோவில் ஒன்றில் திருட்டு நடத்தப்பட்டுள்ளது. இரணியல் அருகே கோவிலுக்குள் புகுந்து அம்மன் சிலை உடைக்கப்பட்டுள்ள இந்த சம்பவம் அங்கே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டத்தில் இத்தகைய தொடர் சிலை உடைப்பு சம்பவங்கள்-வெறுப்பியல் குற்றங்கள்- தொடர்கதையாகி வருகின்றன. இந்துக்களின் புனிதநாட்களை ஒட்டி இச்சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. திமுக வெற்றி பெற்றது அறிவிக்கப்பட்ட உடனேயே கன்னியாகுமரி சிவன் கோவிலில் நாகர் சிலைகள் உடைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி: நெல்லை மாலைமுரசு:3-8-2007

இந்துக்களின் பிரபல பக்தி பாடல்களின் மெட்டில் ஆபாச பாடல்களை அமைக்கும் போக்கு தமிழ்நாட்டு திரையுலகில் கூடியுள்ளது. இப்போது அர்ஜுன் நிலா நடிக்கும் ஒரு திரைப்படத்தில் ஒரு குத்தாட்ட பாடலாக 'மருதமலை மாமணியே முருகையா' எனும் பாடல் மெட்டில் போடப்படுகிறது. ஏற்கனவே கற்பூர நாயகியே கனகவல்லி எனும் பாடல் ஒருஆபாச பாடலுக்கு மெட்டாக்கப்பட்டுள்ளது. தமிழக பாஜக இதனை எதிர்த்து போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.
>
நன்றி: நெல்லை மாலைமுரசு:3-8-2007

Labels: , ,

0 Comments:

Post a Comment

<< Home