இந்து விரோத மனித உரிமை மீறல்:2007
இந்து விரோத மைனாரிட்டி திமுக அரசு தமிழ்நாட்டில் இந்துக்களை அவர்களது விரத நாட்களில் அவமானப்படுத்துவதையும் தொல்லை கொடுப்பதையும் ஒரு வழக்கமாக கொண்டுள்ளது.தங்களது அரசியல் விவேகமின்மையால் இந்துக்கள் தங்கள் சொந்த நாட்டிலேயே கீழ்த்தரமாக நடத்தப்படும் நிலைக்கு தங்களை ஆட்படுத்தியுள்ளனர். இது போக ஆடி அமாவாசை எனும் இந்துக்களின் நீத்தார் நினைவஞ்சலி செலுத்தும் புனித நாளில் சிறப்பு பஸ்கள் என்ற பெயரில் அரசு விரைவு பேருந்து போக்குவரத்துக்கழகம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதால் பக்தர்கள் அவதிக்குள்ளாகியதாக தெரிவிக்கிறது தினமலர் நாளேடு. சிறப்பு பேருந்து என்ற பெயரில் 20 சதவிகித கட்டணம் அதிகம் வசூலிக்கப்படுகிறது. சென்னை-மதுரை பேருந்து கட்டணம் ரூ300 ஆக்கப்பட்டுள்ளது. இந்த அரசு அலுவலர் அரைகுறை ஆடையுடனும் குடிபோதையுடனும் அங்கிருந்த பக்தர்களை விரட்டி அங்கு இருந்த மின்விளக்குகளை உடைத்தும் பஞ்சலிங்க அருவிக்கு குளிக்கச் சென்ற பெண்கள் உட்பட பக்தர்களை கடுமையான வார்த்தைகளில் திட்டியும் தடியால் அடித்தும் கீழே விரட்டிவிட்டார். இதனால் வண்டி மாடு கட்டி கிராமப்புறங்களில் இருந்து சுவாமி கும்பிடவும் தம் முன்னோருக்காக பிரார்த்தனன செய்திடவும் வந்த பக்தர்கள் இருளில் அல்லல் பட்டதுடன் மிகுந்த மன வேதனையும் அடைந்தனர் (ஆதாரம்: தினமலர்: 13-8-2007) ஏனெனில் முதலமைச்சர் பொறுப்பில் இருக்கும் கருணாநிதி காசி ராமேஸ்வரம் புனித யாத்திரை செய்பவர்களும் இந்து சமயச்சடங்குகளை செய்பவர்களும் இன்னும் இருக்கிறார்களே என பார்க்கும் போது தம் மனம் வருந்துவதாக கூறியுள்ளார். ஹிட்லர் போன்ற மானுடவிரோதிகளின் பேச்சினையொத்த இந்த பேச்சினை ஒருமாநில முதல்வர் கூறியிருக்கையில் அதே மாநிலத்தைச் சேர்ந்த ஒரு அரசு அதிகாரி இந்தவிதமாக இந்து பக்தர்களிடம் நடந்து கொண்டுள்ளது ஒரு வெறுப்பியல் நிகழ்ச்சியாகவே காணவேண்டியுள்ளது.
இது போக ஆடி அமாவாசை அன்று உடுமலை திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு சிறப்பு வழிபாட்டுக்கு சென்ற பக்தர்களுக்கு அவமானகரமான மனக்கொதிப்பை ஏற்படுத்தியுள்ளார் உடுமலை வனச்சரகர் சுந்தரமூர்த்தி.
வனச்சரகரின் இந்த ஆட்சேபகரமான மானுட உரிமை மீறல் வெறும் தனிமனிதரின் ஆபாச நடவடிக்கை என எடுத்திட முடியாது.
Labels: anti Hindu hatred, Hate crimes against Hindus in TN, Hindu Human rights
0 Comments:
Post a Comment
<< Home