Tuesday, August 14, 2007

முருக பக்தர்களை மின்சாரம் பாய்ச்சி கொல்ல சதி


சென்னி மலை முருகன் கோவில் மிகவும் பழமையானதும் பிரசித்தி பெற்றதும் ஆகும். ஈரோட்டிலிருந்து 26 கிலோமீட்டர்கள் தொலைவிலும் பெருந்துறையிலிருந்து 3 கிலோமீட்டர்கள் தொலைவிலும் அமைந்திருக்கும் இக்கோவில் மலை மீது அமைந்துள்ளது. இதற்கு 1320 படிகள் உள்ளன. கடல்மட்டத்திலிருந்து 600 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு 1320 படிகளும் ஏறி பக்தர்கள் வந்து செந்தமிழ் கடவுள் முருகப்பெருமானை வணங்கி அருள் பெறுவது வழக்கம். படிகள் போகும் வழிகளில் ஆங்காங்கே பக்தர்கள் இளைப்பாற மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று ஆடி செவ்வாய் என்பதால் கூட்டம் அலை மோதும். இந்நிலையில் 500 படிகள் தாண்டி சில பக்தர்கள் இளைப்பாறிக்கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு மெல்லிய கம்பி படிகளில் செல்வதைக் கண்டனர். அதனை கூர்ந்து நோக்கிய போது மின்சார இணைப்பிலிருந்து ஒரு லைன் தனியாக எடுத்து அதனை கோவில் படிகளில் கொடுத்திருப்பதைக் கண்டனர். கோவில் நிர்வாகத்துக்கு இது தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நடந்த சோதனையில் கோவிலுக்கு வரும் சாலையிலும் இதே போல பயங்கரவாத விஷமத்தனம் செய்யப்பட்டிருப்பது தெரிந்தது.
திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் இந்துக்களுக்கு எதிரான படுகொலை முயற்சிகள் அதிகரிப்பதும் பயங்கரவாத-அடிப்படைவாத அமைப்புகளுக்கு ஆட்சியாளர் துணைபோவதும் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அல்-கொய்தா ஏற்கனவே இந்தியாவை குறிவைத்துள்ளதாகக் கூறியுள்ள வேளையில் சுதந்திர தினத்தையொட்டி இவ்விதம் நிகழ்ந்துள்ளது பயங்கரவாதக் கும்பல்களின் திட்டமிட்ட சதியோ என மக்களை எண்ண தூண்டியுள்ளது. (ஆதாரம்: தமிழ்முரசு 14-8-2007)

Labels: , ,

1 Comments:

Blogger தகட்டூரான் said...

ஒரு கையில் சிலுவையும் இன்னொரு கையில் கூரிய பிறை போன்ற கத்தியும் வைத்துக்கொண்டு கொலைவெறியோடு கொலைஞன் வெறியாட்டம் ஆடுகிறான்.
தமிழும் தமிழனும் அன்னிய சக்தி கொண்டு அழிக்கப்பட வேண்டியவர்களாக நினைத்தான் போலும்.
பேய் அரசாள்கிறது... பேசுதற்கொண்றுமில்லை.

9:49 PM, August 14, 2007  

Post a Comment

<< Home