மலேசிய இந்துக்களுக்காக ஆன்லைன் பெட்டிஷன்
மலேசிய இந்துக்களின் வாழ்வுரிமையைக் காப்பாற்ற இணைந்து குரல் கொடுப்போம். இந்த ஆன்லைன் பெட்டிஷனில் தயவு செய்து கையெழுத்திடுங்கள். மலேசிய இந்துக்களின் உரிமைக்கு குரல் கொடுங்கள்.
Please give your voice against the religious apartheid regime of Malaysia. Prevent Malaysia from getting Talibanised.
Give your voice for the voiceless oppressed minority Hindus who are facing the preliminaries of ethnic extincion
Sign this petition
2 Comments:
Thanks my dear brother.
வணக்கம் அரவிந்தன் அவர்களே,
என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அநேக முறை உங்கள் எழுத்துக்களை என்னால் படிக்க மட்டுமே முடிந்தது. உங்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. நான் வசிக்கும் அயல்நாட்டில் நான் பணிபுரியும் நிறுவனத்தார் சில இணைய தளங்களை முடக்கி வைத்துள்ளனர்.
06.01.2008 தேதியிட்ட குமுதம் ரிப்போர்ட்டர் இதழை படித்துப்பாருங்களேன். மலேசிய அரசின் பொதுப்பணித்துறை அமைச்சரான டத்தோ சாமிவேலு என்பவர் கூறியிருக்கும் கருத்துக்களை நோக்கும்பொழுது ஒட்டுமொத்த மலேசிய வாழ் இந்தியர்களையும் சேர்த்துத்தான் அவர் பேசுகிறார். அவரது பேச்சுக்களில் அவர் பணியாற்றும் அரசுக்கு சாதகமாகப் பேசுகிறாரோ என்ற ஒரு ஒருதலைப்பட்ச ஐயம் எழுவது ஒரு புறம் இருக்கட்டும். இப்படி பிரச்சனை என்பது ஒட்டு மொத்த மலேசிய வாழ் இந்தியர்களுக்கும் இருக்கும்பொழுது, நீர் மட்டும் ஏன் மலேசியவாழ் இந்துக்களுக்காக மட்டும் குரல் கொடுக்கிறீர்? மலேசியவாழ் இந்தியர்களை இந்தியர் என்ற கண்ணோட்டத்தில் பார்க்காமல் இந்து என்று ஏன் பார்க்கிறீர்கள்?
இதே ரிப்போர்ட்டர் இதழில் சோலை எழுதிய "வெட்கப்பட வேண்டாமா" வை படியுங்கள். மேலோட்டமாகப் பார்த்தால் அது எதொ ஒரு BJP எதிர்ப்பு பிரச்சாரமாகத் தெரிந்தாலும், சக இந்தியனே இந்தியனுக்கு மதத்தின் பெயரால் இழைத்த கொடுமையையும் சுட்டிக்காட்டுகிறது. மதம் ஒரு மனிதனை இந்த அளவுக்கும் வெறி கொள்ளச் செய்யுமா என்பதை பார்க்கும் பொழுது, மனம் வேதனை அடைகிறது.
இதே ஒரிஸ்ஸா மாநிலத்தில் ஆஸ்த்திரேலிய பாதிரியும் அவரது மகன்களும் உயிரோடு எரிக்கப்பட்டதற்கு நீங்களும் சரி, திண்ணையில் எழுதும் ஐயா மலர்மன்னனும் சரி (உங்கள் இருவரின் எழுத்துக்களை அதிகம் விரும்பிப் படிப்பவன் நான்), பாதிரியார் படுகொலை என்பது அந்த பிராந்திய இந்துக்களின் மதமாற்ற எதிர்ப்புணர்வின் வெளிப்பாடு என்றீர்கள். இப்பொழுது ஒரிஸ்ஸாவில் நடந்திருப்பது எதன் வெளிப்பாடு?
கோபப்பட்டு பதில் எழுதாதீர்கள், உங்கள் எழுத்துகளின் ரசிகன் என்ற உரிமையில் தான் கேள்வி கேட்டுள்ளேன்.
அன்புடன்,
பெஞ்சமின்.
Post a Comment
<< Home