Monday, January 14, 2008

ஞாயிறு போற்றுதும்


காளையை அடக்கும் சூரிய கடவுள் மித்ர கடவுள்
உலகெங்கும் 'பொறாமை பிடித்த' ஏக இறைக்கும்பல்களின் கொட்டங்கள் தொடங்கிடாததோர் பொற்காலம் அது. உலகெங்கும் ஆதவ வழிபாடு அங்கங்கிருந்த பண்பாட்டு செழுமையுடன் வழங்கப்பட்டு வந்திட்ட காலம் அது. ஒருவர் மீது மற்றவர் தம் மதத்தை திணிக்காமல் அனைத்திலும் ஒற்றுமையை உணர்ந்திட்ட காலம் இது.

டிரரன்ஸாக்ஸியன் கிஸீல் குகை கோவிலோவியங்களில் ஆதவ கடவுள்
ஆனால் இந்த ஆதவ ஒளிக்கிரணங்களை மூடிட எழுந்த இருட்சக்திகள்தான் 'ஏக இறை' எனும் போதையேறிய பொறாமை தேவன்கள். யஹீவாவாம் ஏசுவாம் அல்லாவாம் இந்த இருட்சக்திகள் அழித்திட்ட ஆதவ வழிபாடுகள் உலகெங்கிலும் எத்தனை எத்தனை!

ஹமுராபிக்கு சட்டங்கள் அளிக்கும் ஆதவ இறைவன்

ஆதவ இறைவனை மையமாக கொண்ட அஸ்டெக் வானிலை இயக்க மண்டலம். இது இருந்த கோவில் ஏசு கும்பலால் அழிக்கப்பட்டு அங்கு யஹீவா என்பவனின் மகனாக வணங்கப்படும் ஏசு என்பவனுக்கு கோவில் கட்டியுள்ளார்கள்.
சிலுவைப்போர்களையும் ஜிகாதுகளையும் கொடும் நோய்களாக உலகெங்கும் பரப்பி உன்னத ஆதவ வழிபாட்டினை அழித்திட்ட வன்செயல்கள் நம் மனதில் நீங்கா வடுக்களாக நிலைத்திருக்க,

ஜப்பானில் வழிபடப்படும் ஆதவ தேவி - இவளே ஜப்பானிய கொடியிலும் திகழ்கிறாள்.
இத்தனை கொடுமைகளுக்கும் அப்பால் இன்றும் வாழும் நம் பண்பாட்டில் ஆதவ வழிபாடு - பொங்கலாக மகர சங்கராந்தியாக- ஞாயிறு போற்றுதும். இயற்கை சக்திகளின் இறைமையை இனிமையை போற்றுவோம்.

பொங்கல் விழாவில் தேவியராக குழந்தைகள் அணிவகுப்பு
பொறாமையையும் புனிதப்போர்களையும் உருவாக்கும் ஏக இறை இருட்சக்திகள் அழிந்திட போர்ப்பறை முழக்குவோம்.

ஞாயிறு போற்றுதும்சூரியக் கோவில்கள்: மெக்ஸிகோ கொனாரக்

7 Comments:

Anonymous Anonymous said...

இயற்கை சக்திகளின் இறைமையை இனிமையை போற்றுவோம். Happy பொங்கல் !

2:59 AM, January 15, 2008  
Anonymous Anonymous said...

(இணை வைத்து வணங்கும்) முஷ்ரிக்குகள் வெறுத்த போதிலும், மற்ற எல்லா மார்க்கங்களையும் மிகைக்கும் பொருட்டு, அவனே தன் தூதரை நேர்வழியுடனும், சத்திய மார்க்கத்துனுடனும் அனுப்பினான் (திருக் குர்ஆன் 61:9 )

4:56 AM, January 15, 2008  
Blogger ஜடாயு said...

வேத ரிஷிகள் போற்றித் துதித்து, அவர்கள் சந்ததியினர் இன்றுவரை காயத்ரி மந்திரம் சொல்லி வழிபடும் கதிரோன் ஞாயிறு -
ஸ்ரீராமனின் வம்சத்தின் ஆதிமுதல் தந்தையாக வணங்கிய ஞாயிறு -
அந்த ஞாயிறைப் போற்றுவோம்.

எனக்கென்னவோ கருநாநிதி இந்தப் பொருளில் சொல்லியிருப்பார் என்று தோன்றவில்லை. தன் கட்சியின் சின்னத்தைப் போற்றுங்கள் என்று ஏதோ சொல்லப் போய் இப்படி வந்துவிட்டது என்று நினைக்கிறேன். வயசாயிடுச்சில்ல?

4:59 AM, January 15, 2008  
Anonymous Anonymous said...

அரவிந்தன் நீலகண்டன்
பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
இப்ப‌திவில் எழுதிய‌ப‌டி, இய‌ற்கையை தெய்வ‌மாக போற்றிவாழ்ந்த மனிதகுலம் உல‌கெங்கும் வாழ்ந்துவ‌ந்த காலமது. அ.நீ. குறிப்பிட்டபடி, ஜப்பானிலும், அமாதெரஸு (Amatherasu) என்ற சூரிய தேவி குறித்து, சொர்க்கமெங்கிலும் தனது ஒளியால் பிரகாசமடையச்செய்த மிக முக்கியமான கடவுளாக வழிபட்டுவந்ததாக, எங்கோ படித்திருக்கிறேன்.

இயற்கையை போற்றி

அனைவ‌ருக்கும்

பொங்கல் வாழ்த்துக்கள்
R.பாலா

10:18 PM, January 15, 2008  
Anonymous Anonymous said...

//(இணை வைத்து வணங்கும்) முஷ்ரிக்குகள் வெறுத்த போதிலும், மற்ற எல்லா மார்க்கங்களையும் மிகைக்கும் பொருட்டு, அவனே தன் தூதரை நேர்வழியுடனும், சத்திய மார்க்கத்துனுடனும் அனுப்பினான் (திருக் குர்ஆன் 61:9 )//

ஒரு மனிதர் சொன்னதெல்லாம் கடவுள் சொன்னது என்று நம்பி, அவர் செய்ததெல்லாம் கடவுள் செய்யச்சொன்னது, அவரது வாக்கு கடவுளின் வாக்கு, அவரது செயல் கடவுளின் செயல் என்று நம்புபவர்களே கடவுளுக்கு மிக மோசமாக இணை வைப்பவர்கள்.

கடவுளின் தன்மையை ஒரு தனி மனிதனின் தரிசனங்களால் கட்டுப்படுத்துவதுதான் இணை வைப்பது.அந்த மனிதர் கடவுள் இனிமேல் யாரையும் அனுப்ப மாட்டார் என்று சொன்னால், அதை நம்பி கடவுளின் மேல் மனித மனங்களின் பேதலிப்புகளை நிர்ப்பந்திப்பதுதான் இணை வைத்தல்.

வெறுப்பை உலகெங்கும் பரப்புவது இந்த வகை முஷ்ரிக்குகள்தான். அவர்கள் தான் சவுதியில் இந்துக்களை சமமாக நடத்த மறுத்து வெறுக்கின்றனர், கிறித்துவர்களின் இருப்பே அவர்களை வெறுப்படையச் செய்து உலகெங்கும் குண்டுகளை வெடிக்கவைக்கச் செய்கிறது.

மற்ற எல்லா மார்க்கங்களையும் மிகைக்கும் பொருட்டு என்று சொல்லியிருப்பது, இதே போல் கடவுளை கேவலமாக சித்தரிப்பதாகும். கடவுள் எதற்கு தமது மார்க்கம் என்று ஒன்றை தனியாக உருவாக்க வேண்டும்? ஒரே ஒரு தூதரை மட்டும் ஏன் நேர்வழியில் அனுப்ப வேண்டும்? அதற்குப்பின் ஏன் தூதர்களையே அனுப்பமாட்டேன் என்று சொல்ல வேண்டும்? - இதெல்லாம் ஒரு ஆன்மீகப் புரிதல் இல்லாத அரபி தனக்குத்தானே கற்பனை செய்துகொண்டு பிதற்றியது.

நமது இஸ்லாமிஸ்ட் சகோதரர்களின் மூடத்தனத்திற்கு ஒரு எல்லையே இல்லாமல் போய்விட்டது.

கொஞ்சம் பொறுமையிழந்து இந்த நல்ல பதிவில், பொங்கல் சூழலில் இதை எழுதியதற்கு அ.நீ என்னை மன்னிக்க வேண்டும்.

உலகில் அனைவருக்கும் (இஸ்லாமிஸ்டுகள் உட்பட) மனதில் அமைதியும், தெளிவும் இந்த திருநாள் சமயத்தில் ஏற்படட்டும்,

நேச குமார்

9:13 PM, January 16, 2008  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

//ஒரு மனிதர் சொன்னதெல்லாம் கடவுள் சொன்னது என்று நம்பி, அவர் செய்ததெல்லாம் கடவுள் செய்யச்சொன்னது, அவரது வாக்கு கடவுளின் வாக்கு, அவரது செயல் கடவுளின் செயல் என்று நம்புபவர்களே கடவுளுக்கு மிக மோசமாக இணை வைப்பவர்கள்//
மிகத்தெளிவான மிகவும் சரியான இந்த பார்வைக்கு நன்றி நேசகுமார்.

12:13 AM, January 17, 2008  
Anonymous Anonymous said...

ADAPPONGA SIR . NAMMA OORLE 10 ROOBA KUDUTTHU SAMIYADIKITTE KETTU PARUNGA IRAI VASANANGAL ARPUDHAMA VARUM. ADHAIVIDAVA AVARGALIN VASANANGAL IRUKKAPPOKIRATHU. SILA NABARGAL UNMAIYAGAVE AACHARYAPPADUMBADI PALVISHAYANGAL SOLLIVIDUGIRARGAL, INDRU MAZHAI VARUM ENBATHU MUDHAL. AANAL AVARGAL YATHARTTHAMAGA SOLVATHU SAMIYADI SOLVATHU ALLA, MELUM AVARGAL SOLVATHU MIGAVUM UNMAIYAGIVIDUVATHUTHAN ADHISAYAM. APPADIYANAL AVARGAL ELLORUM NABIGALA. ILLAI. IRAITTHANMAIYAI ULVANGI BATTHIRAMAGA UBAYOGIPPAVARGAL
IRAIVANIN SUGNUBAVATTHIL THILAITTHU IRUPPAVARGAL. VERUM KOOCHAL POTTU THANNAI VLIPPADUTTHIKKOLLA MATTARGAL

5:02 PM, August 06, 2009  

Post a Comment

<< Home