வேதங்களில் காபா?
இதில் அவர் கூறுகிறார்:
.இலாஸ்பாத் : இல் (il) இல்லய்யஃ (illiah) இலா (ila) இலாயா (ilya) - சமஸ்கிரத சொல்லான இதன் பொருளானது 'வணக்கத்திற்குரிய ஒன்று' என்பதாகும்.
(வணக்கத்திற்குரியவனை அரபியில் 'இலாஹ்' என்றும், ஹீப்ரூவில் 'எல, எலோஹ், எலோஹிம்' என்றும் அராமிக்கில் 'எல்லாய்' என்றும் கூறப்படுவதை முன்பே பார்த்தோம்.)
'பாத்' என்பது இடத்தைக் குறிக்கும் சொல்லாகும். இலாஸ்பாத் என்பதற்கு 'இலா' விற்குரிய இடம் - 'வணக்கத்திற்குரிய இடம்' என்றாகிறது.
Sir M. Monier Williams - தனது சமஸ்கிரத - ஆங்கில அகராதியில் 'இலாஸ்பாத்' என்பது புண்ணியஸ்தலத்தின் பெயராகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இலா (ila) எனபது குறிப்பிட்ட கடவுளின் பெயர். "இலாஸ்பாத்" என்னும் பேதது "கடவுளுக்குரிய ஸ்தலமாகும்" என்று Griftith தன்னுடைய மெதழி பெயர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். பைத்துல்லாஹ் (இறைவனின் இல்லம்) என்று அரபியில் கூறுவதையே இந்து கிரந்தங்கள் சமஸ்கிரதத்தில் "இலாஸ்பாத்" என்று கூறுகிறது.
அவர் மேலும் கூறுகிறார்:
நபா ப்ரதிவியா
'நபா' என்பதன் பொருள் 'மையம்'. 'பிரதிவி'என்பதன் பொருள் 'பூமி'. 'நபா ப்ரதிவி' என்னும் பொழுது பூமியின் மையம் என்றாகிறது. பூமத்திய ரேகையை ஒட்டியே மக்கா நகர் அமைந்திருப்பதையும் நாம் பார்க்கிறோம். 'இலாயாஸ்த பதே வாயம் நபா ப்ரதிவியா ஆதி' 3 : 29 : 4 - ரிக் வேதம்
'இறைவனின் இல்லமானது பூமியின் மையத்திலுள்ளது' என்று கஃபாவைக் குறித்து ரிக் வேதம் தகவல் தருகிறது.
இந்த வாதங்களுக்காக சுவனப்பிரியனை குறை சொல்ல முடியாது. ஏனெனில் அவர் இந்த தகவல்களுக்காக ஜாகிர் நாயக், அபு ஆசியா ஆகியவர்களுக்கு நன்றி கூறுகிறார்.
ஆனால் உண்மை என்ன?
இலா என்பதும் எல் என்பதும் இணைந்த வார்த்தைகள் என ஜாகீர் நாயக் கூறுவது முழு தவறு. இலா என ஒரு தெய்வத்தை வேதம் கூறவே இல்லை. அது கூறும் தெய்வம் இளா. இது பெண் தெய்வம் ஆகும். இது ஒரு நதி தெய்வம். (இளா, பாரதி, சரஸ்வதி என வேதம் கூறும்: சரஸ்வதீ சாதயந்தீ தியம் இளா தேவீ பாரதீ...(ரிக் 2:3:8) இளாவே தாந்திரீகத்திலும் யோகத்திலும் இடகலை என்பதாக அறியப்படுகிறாள்.பாரதியும் அக்னியே என்று கூட வேதம் கூறுகிறது (ரிக். 2.1.11). திரு. ஜாகீர் நாயக் 'எல்' அல்லா ஆகியவற்றுடன் எள்ளளவும் தொடர்பற்ற இந்த 'இளா'வை (ஆங்கிலத்தில் இளாவும் இலாவும் Ela அல்லது Ila என்பதால்) வைத்து ஜல்லியடித்துள்ளார்.
அடுத்ததாக'நபா' என்பதன் பொருள் 'மையம்'. 'பிரதிவி'என்பதன் பொருள் 'பூமி'. 'நபா ப்ரதிவி' என்னும் பொழுது பூமியின் மையம் என்றாகிறது. பூமத்திய ரேகையை ஒட்டியே மக்கா நகர் அமைந்திருப்பதையும் நாம் பார்க்கிறோம். 'இலாயாஸ்த பதே வாயம் நபா ப்ரதிவியா ஆதி' 3 : 29 : 4 - ரிக் வேதம்
"இளாவின் பதியில் பூமியின் நாபியில் உன்னை ஸ்தாபிக்கிறோம். அக்னி ஜதவேதாஸாகிய நீ எங்கள் அர்ப்பணங்களை தேவர்களுக்கு கொண்டு செல்வாயாக "(3:29:4) யாரை? அதன் முந்தைய செய்யுள் கூறுகிறது: இளாவின் புத்திரனாகிய அக்னியை ("இளாயஸ்புத்ரா") - செந்நிறத்தூணாக நிற்கும் அக்னியை (3:29:3) ஆக ஜாகீர் நாயக்கின் வியாக்கியான திருகுவேலை புரிகிறதல்லவா?
அடுத்ததாக பூமத்திய ரேகைக்கு அருகாமையில் மெக்கா இருப்பதாக எழுதியுள்ளது முற்றிலும் தவறானது. ஏனெனில் மக்காவின் தீர்க்க ரேகை 39.49 கிழக்கு. இந்த தவறான தகவல்களின் அடிப்படையில் ரிக்வேதம் கூறும் இளாவின் பிரதேசம் மெக்கா என நிரூபிக்க முயல்வது பகுத்தறிவுக்கு ஒவ்வாதது. மேலும் மோனியர்-வில்லியம்ஸ் சமஸ்கிருத அகராதியில் மெக்காவுக்கான சமஸ்கிருத பதம் அளிக்கப்பட்டுள்ளது நான்கு வேதங்களில் இருந்தும் அல்ல மாறாக மிகவும் காலத்தால் பிந்திய (குரானின் காலத்திற்கும் பிந்திய) இலக்கியத்தில் இருந்து. இதெல்லாம் எந்தவிதத்திலும் ஆதாரங்கள் என கூர்மதி கொண்ட வரலாற்று இளங்கலை மாணவன் கூட ஏற்றுக்கொள்ளமாட்டான்.
ஜாகீர் நாயக் போன்றவர்களின் இத்தகைய பிரச்சாரங்கள் தவறானவை. பொய்யானவை. நேர்மையற்றவை, எவ்விதத்திலும் இத்தகைய பிரச்சாரங்களை மேற்கொள்பவர்களின் மதத்திற்கு பெருமை சேர்ப்பவை இல்லை. இத்தகைய பிரச்சாரங்களின் நம்பகத்தன்மையை இனிமேலேனும் ஒன்றுக்கு இரண்டு முறை சரி பார்த்து தம் வலைப்பதிவுகளில் ஏற்றுவது நல்லது.
7 Comments:
These people try to prove that in our ancient vedas have the note about their Holy Place and on the base they try to prove that our vedas told about only their God and their religion.The main aim of them is nothing but confuse the people and get some gain for them.
நன்றி அனானி. விரைவில் ஜாகீர்நாயக்கின் பிற புரட்டலான பிரச்சார வாதங்களையும் ஆராய இருக்கிறேன். அடிக்கடி வாருங்கள்.
தெரியாத பல தகவல்களை ஆதாரங்களுடன் எழுதுகிறீர்கள். இறைவன் ஒருவன் தான் என்பதில்தான் நாம் வித்தியாசப்படுகிறோம்.எல்லாம் வல்ல இறைவன் உங்களின் மனதையும் மாற்றுவான்.
This comment has been removed by a blog administrator.
மன்னிக்கவும் திரு-வுக்கு எழுதிய பின்னூட்டத்தை இங்கே தவறுதலாக போட்டுவிட்டேன். சகோதரர் இப்ராகீம் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி.
இறைவன் ஒன்றுதான் என எந்த பொருளில் சொல்கிறீர்கள். எனில் நீங்களும் நானும் அந்த இறைவனில் ஒரு பகுதிதான் என ஏற்பீர்களா?
நீலகண்டன், இவர்களின் ஜோக் என்னவென்றால் இவர்களின் உயர்வை நிரூபிப்பதற்கு நம் வேதங்களை நாடுவது தான்.
அதுவும் நல்லது தானே. நம் வேதங்களை படித்தபிறகு அவர்களின் வேதம் அவர்களுக்கும் உளறலாக தெரிய வாய்ப்புகள் அதிகம்
நன்றி பாலா நன்றி சிவா,
ஆபிரகாமிய மதங்களின் இறை நூல்கள் வேதமல்ல. வேதம் என்பது தார்மீக நெறிகளுக்கு மட்டுமே உரியது. இரண்டையும் வேதம் என கூறுவது அவர்களது குழப்பத்தை உண்டாக்கும் வழிகளில் ஒன்று. எங்கள் ஊர் பக்கங்களில் வேதகாரன் என்றால் கிறிஸ்தவன் என்கிற அளவுக்கு போகிவிட்டது. எனவேதான் தாழ்த்தப்பட்ட மக்களை உயர்த்த வந்த அவதார போராளி ஐயா வைகுண்ட சாமிகள் கிறிஸ்தவ இஸ்லாமிய மார்க்கங்களை வீண்வேதமுள்ளோர் என்றார். வீண் வேதம் வேதம் ஆகாது.
Post a Comment
<< Home