நம் அன்பிற்குரிய அப்துல்கலாம் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து அனுப்பிட்டீங்களா?
இல்லைன்னா இங்க இருக்கிற வாழ்த்துக்களை அனுப்புறீங்களா?
பாரதியார் தீர்க்கதரிசிதாங்க. வருகின்ற ஹிந்துஸ்தானமாக அவர் வாழ்த்துறதெல்லாம் அப்படியே ஒரு மனுஷருக்கு பொருந்துறத பார்த்தீங்களா?
...
வெற்றிகொண்ட கையினாய் வா வா வா
விநயநின்ற நாவினாய் வா வா வா
முற்றிநின்ற வடிவினாய் வா வா வா
முழுமைசேர் முகத்தினாய் வா வா வா
கற்றலொன்று பொய்கிலாய் வா வா வா
கருதியதியற்றுவாய் வா வா வா
ஒற்றுமைக்கு ளுய்யவே - நாடெல்லாம்
ஒரு பெருஞ்செயல் செய்வாய் வா வா வா
நம்ம பாரதநாட்டவங்க அம்புடுபேர் இதயத்திலும் இருக்கிற அந்த மகா மனிதருக்கு, நம் குடும்பத்தின் மூத்த தலைமகனுக்கு (என் மூணரை வயசு பையன் அவர 'ராக்கெட் தாத்தா' அப்படீன்னுவான்) இன்னைக்கு பிறந்தநாளுங்க.
அவருக்கு அனுப்பறதுக்காக மூணு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தயார் பண்ணினேனுங்க. இங்க பாருங்க: பிடிச்சா அவருடைய இணையதளத்தில இருக்கிற தொடர்பு பக்கத்தில போயி வாழ்த்துக்களை தெரிவிச்சு இதுங்கள்ல உங்களூக்கு பிடிச்சதோட உரலை போட்டு அனுப்பி வையுங்க:
- 1. காட்டாமணக்கு: 'புரா' கிராம முன்னேற்ற மாதிரி (model) -அதுல இது முக்கியமான உள்ளீடுங்க. 'புரா'வால் வறுமையை புறம் காண்போம் அப்படீன்னு அவருக்கு வாழ்த்து அனுப்பலாங்க
உரல்:http://i17.photobucket.com/albums/b97/Aravindan/card1.jpg - 2.ஜெய்பூர் செயற்கை கால்கள் - அத இன்னமும் இலகுவாக்கிற இஸ்ரோ சாதனை பத்தி அடுத்த வாழ்த்தட்டைங்க. இந்த இஸ்ரோ சாதனை பின்னாடி இருக்கிற பேரன்பு இதயத்தில ஒண்ணுக்குதாங்க இன்னைக்கு பிறந்த நாள்
உரல்:http://i17.photobucket.com/albums/b97/Aravindan/card2.jpg - 3. பிறந்த நாளன்னைக்கி அவரும் அவரோட குருவும் அந்த குருவோட கனவு நனவாகி நம்மளயெல்லாம் பெருமப்பட வைக்கிறதும் பத்தி அடுத்த வாழ்த்தட்டைங்க.
உரல்:http://i17.photobucket.com/albums/b97/Aravindan/card3.jpg
பிடிச்சா முழிஞ்சா நேரம் கிடைச்சா செய்யுங்க
நம்ம குடியரசுத்தலைவர் மின்னஞ்சல்: presidentofindia@rb.nic.in
நம்ம குடியரசுத்தலைவர் தொடர்பு பக்கம் இங்கேங்க
அன்புடன்
அரவிந்தன் நீலகண்டன்
2 Comments:
அப்துல்கலாம் அவர்களுக்கு என் வாழ்த்துக்களையும் சொல்லிக்கொள்கிறேன். இதையும் கொஞ்சம் பாருங்கள்
அன்புள்ள காசி,
பார்த்தேன். எனது அனுபவத்தை கூற விரும்புகிறேன். ஒரு முறை குடியரசுத்தலைவர் இணையதளத்தில் சந்திராயன் குறித்து பள்ளிக்குழந்தைகளுக்கும் தெரியும்படியாக ஒரு அறிவியல் வெகுஜனத்தொடர்பினை இஸ்ரோ கொடுக்கவேண்டும் என அவருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். சரியாக ஒரு மாதத்திற்குள் எனது வீட்டு முகவரிக்கு ஒரு பார்சல் வந்தது. இஸ்ரோ சந்திராயன் தொடர்பாக பொதுமக்கள் அறிவதற்காகவும் மாணவர்கள் அறிவதற்காகவும் வெளியிட்டுள்ள அனைத்து பிரசுரங்களையும் அனுப்புமாறு குடியரசுத்தலைவர் அலுவலகத்திலிருந்து பெற்ற தகவலின்படி அவை எனக்கு அனுப்பப்படுவதாக ஒரு மூத்த இஸ்ரோ அதிகாரியின் கடிதத்துடன். அவற்றினை தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என ஆவலுடன் இருக்கிறேன். தங்களுக்கு ஏற்பட்ட இனிமைக் குறைவான அனுபவம் ஏதாவது பிழையாக இருக்கலாம். குடியரசுத்தலைவரின் இணைய பக்கங்களிலிருந்தே அனுப்பி பாருங்கள். அங்கு நாம் அனுப்புவது நம்மைக்குறித்த அதிக தகவல்களுடன் செல்வதால் நமது குடியரசுத்தலைவர் நம்பகத்தன்மையுடன் எதிர்வினையாற்ற முடிவதாக இருக்கும் என நினைக்கிறேன்.
Post a Comment
<< Home