இன்று வள்ளலார் ஜெயந்தி
அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி
தனிப்பெருங் கருணை
அருட்பெருஞ் ஜோதி
குறைகள் இருப்பினும் குற்றங்கள் செய்யினும் நம் அனைவர் வாழ்வுகளிலும் ஜோதி வள்ளல் கருணையால் உள்ளொளி ஓங்கிப் பிரகாசிக்க இந்நாளில் வேண்டும்
-அரவிந்தன் நீலகண்டன்
தனிப்பெருங் கருணை
அருட்பெருஞ் ஜோதி
அனைவருக்கும் வள்ளலார் ஜெயந்தி வாழ்த்துக்கள்
9 Comments:
வள்ளலார் கருத்துகளை இன்றைக்கு நாம் பின்பற்றுவது கிடையாது. அவருடைய நூல்களைப் படிப்பதும் அவரது கருத்துகளை முடிந்த வரை பின்பறுவதும் நன்றாகும்.
பழங்கெழவி சைட்...
அடப்பாவிகளே அருட்பெருஞ்சோதியாய் இறைவனைக் கண்ட வள்ளலாரையுமா உங்களின் பாசிச இந்துத்துவத்துக்குள்ளே இழுப்பீர்கள்
நரேந்திர மோடி போன்ற கருணைப் பெருவள்ளல்களை ஆதர்சப் புருஷர்களாகக் கொண்டவர்கள் இராமலிங்க வள்ளலார் ஜெயந்தி கொண்டாடுவது வேடிக்கை தான்.
வடலூர் வள்ளல் பிறந்த நாளா?
நன்றி நன்றி
என்னார்
இறைவன், என்னார், இராகவன்,
நன்றி! இறைவனுக்கு இத்தனை நகைச்சுவை உணர்ச்சி உண்டென்று தெரியாமல் போச்சே!
சுந்தரமூர்த்தி, பழங்கெழவி,ஆ.உ,
முடிந்தால் வளர முயற்சி செய்யுங்கள்.
வள்ளல் பெருமான் பிறந்த நாளை நினைவு கொண்டமைக்கு நன்றி.
அருட்பெரும்ஜோதி மந்திரத்திற்கு பொருள் சொல்ல முடியுமா?
நான் பொருள் சொல்லவோ விளக்கவோ என்ன இருக்கிறது? சந்தனத்தையே சுமந்தாலும்
கழுதை மணமறியாது. எனவே இத்தகைய விஷயங்களுக்கு பொருள் சொல்ல தகுந்தவரை
நாடுங்கள். எனினும் சிறுவயதில் படித்த அருட்பெருஞ்சோதி அகவலில் இருந்து சில வரிகளை தட்டச்சு செய்து போகிற வழிக்கு புண்ணியம் சேர வைத்தமைக்கு குமரனுக்கு
நன்றி.
...அருட்சிவ நெறிசார் அருட்பெரு நிலைவாழ்
அருட்சிவபதியாம் அருட்பெருஞ் ஜோதி
ஆகம முடிமேல் ஆரண முடிமேல்
ஆகநின் றோங்கிய அருட்பெருஞ் ஜோதி
இகநிலைப் பொருளாய்ப் பரநிலைப் பொருளாய்
அகமறப் பொருந்திய அருட்பெருஞ் ஜோதி
ஈனமின் றிகபரத் திரண்டின்மேற் பொருளாய்
ஆனலின் றோங்கிய அருட்பெருஞ் ஜோதி
உரைமனம் கடந்த ஒருபெரு வெளிமேல்
அரைசுசெய் தோங்கும் அருட்பெருஞ் ஜோதி
ஊக்கமும் உணர்ச்சியும் ஒளிதரும் ஆக்கையும்
ஆக்கமும் அருளிய அருட்பெருஞ் ஜோதி
...
ஒன்றென இரண்டென ஒன்றிரண் டென இவை
அன்றென விளங்கிய அருட்பெருஞ் ஜோதி
...
திருநிலைத் தனிவெளி சிவவெளி எனும்ஓர்
அருள்வெளிப் பதிவளர் அருட்பெருஞ் ஜோதி
சுத்தசன் மார்க்கச் சுகத்தனி வெளி எனும்
அத்தகைச் சிற்சபை அருட்பெருஞ் ஜோதி
சுத்தமெய்ஞ் ஞானச் சுகோதய வெளிஎனும்
அத்துவி தச்சயை அருட்பெருஞ் ஜோதி
தூய கலாந்தச் சுகந்தரு வெளிஎனும்
ஆயசிற் சபையில் அருட்பெருஞ் ஜோதி
ஞானயோ காந்த நடந்திரு வெளிஎனும்
ஆனியில் சிற்சபை அருட்பெருஞ் ஜோதி
விமலபோ தாந்தமா மெய்ப்பொருள் வெளிஎனும்
அமலசிற் சபையில் அருட்பெருஞ் ஜோதி
பெரிய நாதாந்தப் பெருநிலை வெளிஎனும்
அரியசிற் றம்பலத் தருட்பெருஞ் ஜோதி
சுத்தவே தாந்தத் துரியமேல் வெளிஎனும்
அத்தகு சிற்சபை அருட்பெருஞ் ஜோதி
...
துரியமும் கடந்த சுகபூ ரணந்தரும்
அரியசிற் றம்பலத் தருட்பெருஞ் ஜோதி
...
சுட்டுதற் கரிதாம் சுகாதீத வெளிஎனும்
அட்டமேல் சிற்சபை அருட்பெருஞ் ஜோதி
...
சாதியும் மதமும் சமயமும் காணா
ஆதிஅ னாதியாம் அருட்பெருஞ் ஜோதி
...
பவனத்தின் அண்டப் பரப்பின் எங் கெங்கும்
அவனுக் கவனாம் அருட்பெருஞ் ஜோதி
திவள் உற்ற அண்டத்திரளின்எங் கெங்கும்
அவளுக் கவளாம் அருட்பெருஞ் ஜோதி
மதன்உற்ற அண்ட வரைப்பின்எங் கெங்கும்
அதனுக்கதுவாம் அருட்பெருஞ் ஜோதி
எப்பாலு மாய்வெளி எல்லாம் கடந்துமேல்
அப்பாலும் ஆகிய அருட்பெருஞ் ஜோதி
...
பெரிதினும் பெரிதாய்ச் சிறிதினும் சிறிதாய்
அரிதினும் அரிதாம் அருட்பெருஞ் ஜோதி
...
நாயினும் கடையேன் ஈயினும் இழிந்தேன்
ஆயினும் அருளிய அருட்பெருஞ் ஜோதி
நீலகண்டன் அவர்களே!
அருட்பெரும் ஜோதி அகவலுக்கு நன்றி.
குமரன்
உங்கள் வலைப்பதிவு சேவைகள் -விஷ்ணு சித்தர் மற்றும் அபிராமி அந்தாதி - ஆகியவைகளுக்கு நன்றி.
அரவிந்தன் நீலகண்டன்
என்ன செய்வது நண்பரே இந்த கழுதைக்கு தெரிஞ்சுருக்குதே சுமக்கிற தனக்கு சுமக்கிற பொருளின் மணத்தை அனுபவிக்கிற கொடுப்பினை இல்லையென்று.
Post a Comment
<< Home