Tuesday, September 13, 2005

மூக்குத்திப்பெண்ணும் மதக்கட்டுப்பாடுகளும்


சானியாவிடமிருந்து நல்லடியார் கும்பல் இறைநம்பிக்கையை படிக்கலாம்...அல்லது அவரது பந்து விளையாட்டை..என்னைப் பொறுத்தவரை எனது மாலைவேளையை நிச்சயமாக கோரக்புர் கீதாபிரஸின் உபந்யாசத்தைக் காட்டிலும் சானியாவின் விளையாட்டை பார்ப்பதிலேயே செலவிடுவதில் ஆன்மிகம் அதிகம் உள்ளதென்பேன். சானியா மிர்ஸா குறித்த பத்வா குறித்து நல்லடியார் தமது வழக்கம் போல பத்வாவை நியாயப்படுத்தியுள்ளார். நல்ல காலம் சானியா ஒரு சங்க பரிவார்/யூத சதியின் பகுதி என்று கூறிவிடவில்லை. அந்த அளவிற்கு சானியா கொடுத்துவைத்தவர்தான். ஆனால் சானியா புத்திசாலி பெண்ணாகத்தான் தெரிகிறார். இந்த பத்வா கூத்தெல்லாம் கண்டுகொண்ட மாதிரியே தெரியவில்லை. இவருக்கு நல்ல பாப்புலாரிட்டி இருப்பதற்கு காரணம் அவரது விளையாட்டுத்திறனாக இருக்கலாம் அல்லது அழகாக இருக்கலாம். அது குறித்து நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ முடிவெடுக்கும் உரிமை அவருடையது. அவர் தம்மை ஈமான் கொண்ட முஸ்லீமாகத்தான் கருதுகிறார். அவரது கழுத்தில் தொங்குவது ஏதோ மதநம்பிக்கை தொடர்பான லாக்கெட் போலத்தான் தெரிகிறது. அவரது செயல்பாடுகளில் ஜீவ சந்தோஷம் இருக்கிறது. மத வட்டங்களை கடந்து நிற்கும் இளம் தலைமுறையின் சாதனை குரலாக அவரது குரல். எடுத்தெறிந்து நிற்கும் தன்னம்பிக்கையை பறைசாற்றும் அவரது டி ஷர்ட்கள் stereotypeகளை உடைத்தெறிகின்றன. இத்துடன் தொடர்ந்து மற்றொரு விஷயத்தையும் கூறவேண்டும். வாலன்டைன் தினம், குறித்தது அது. வாலண்டைன் தின கொண்டாட்டங்களை அடித்து நொறுக்கும் கூட்டமும் சானியாவிற்கு எதிராக பத்வா விதிக்கும் கூட்டத்தை போன்றே புத்தி கெட்டது என்பேன். என்னைக் கேட்டால் கொண்டாடுபவர்கள் கொண்டாட்டுமே வேண்டுமென்றால் வாலண்டைன் தினத்தின் பாகன் வேர்களை முக்கியப்படுத்தி கார்டுகளை போட்டு அந்தக்காசைக் கொண்டு சுநாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பங்களாதேஷ் இஸ்லாமிய வெறியர்களால் அகதிகளாக்கப்பட்டிருக்கும் பௌத்த வனவாசிகளுக்கும் ஹிந்து தலித்களுக்கும் ஏதாவது செய்யலாம் என்பேன். Violence is the last resort of the incompetent என்கிற வார்த்தைகளை நம்புகிறவன் நான். கூடவே டார்வின் தினத்தையும் கொண்டாடுங்கள் என்பேன் அதுவும் பிப்ரவரியில்தான் வருகிறது. வகாபியிச , எவாஞ்சலிக்க, சாதிய சிறைகளிலிருக்கும் மனங்களுக்கு அறிவியலின் ஒளியை கொண்டு செல்ல அந்த நாளை பயன்படுத்தலாம் நன்றாக. எல்லா தரப்புகளிலுமுள்ள நல்லடியாரும் அவருடைய மெமிடிக் க்ளோன்களும் குறைந்த பட்சம் சானியாவின் விளையாட்டரங்கப் பாவாடையின் நீளத்தைக் காட்டிலும் முக்கியமானவை இந்நீலக் கோளத்திலும் அப்பாலும் உள்ளதென அறிந்துகொள்ளலாம். நல்லடியார் கூட்டமும் இதர ஏகஇறை அடியாராக தம்மைக் கருதிக் கொள்ளும் கூட்டமும் சானியா போன்ற உண்மையான இஸ்லாமியராக இருக்க அவர்கள் நம்பும் ஏக இறைவன் அருள் புரியட்டும். சானியாவை பொறுத்தவரை ...மூக்குத்திப் பெண்ணுக்கு வாழ்த்துக்கள!

12 Comments:

Anonymous Anonymous said...

சானியாவுக்கு ஜே

6:32 PM, September 13, 2005  
Anonymous Anonymous said...

sania is really good girl.

7:00 PM, September 13, 2005  
Anonymous Anonymous said...

sania is not a true muslim

9:40 PM, September 13, 2005  
Anonymous Anonymous said...

sania's photos

http://static.flickr.com/7/7139673_0120347286_m.jpg

http://static.flickr.com/8/7139672_b7998760b4_m.jpg

http://www.c2b2bnews.com/images/saniaphoto.jpg

10:08 AM, September 14, 2005  
Anonymous Anonymous said...

Mr.Aravindhan,

I came through your English blog. Sorry I can only read this blog and I have not yet figured out how to type in Tamil. Fantastic blog. Thought provoking articles. I finished reading all your articles. I fully agree with what you have told about our pagan way of life.

Hinduism is all about joy. There had never been any taboos and whatever you find now are basically after the invasion of the Abrahamic cults and the British misrule. Hinduism does not consider sex as a sin but a step towards Super Consciousness. Even homosexuality is not a taboo. They may be abused now. But they too have a deity (at Koovaham), their own rituals, festivals and an identity. Can any one show this in any other society?

All our festivals are basically to enjoy, not for mourning. All connected to nature.

Hindus are the last pagans still surviving on earth. It is the duty of the world to protect this ancient fun loving, free thinking, nature worshiping tribe.

Take part and post your articles in our kumarinadu group also.

Nanjil Thanu

10:11 AM, September 14, 2005  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

நாஞ்சில் தாணு சார், வணக்கம். நீங்கள் நம் ஊர்தானா? தங்கள் அறிவார்ந்த நல்வார்த்தைகளுக்கு நன்றி. தங்கள் அழைப்பிற்கும் நன்றி. கட்டாயமாக வருகிறேன்.

10:21 AM, September 14, 2005  
Blogger Unknown said...

This is one of your posts that I can agree with.

11:50 AM, September 14, 2005  
Anonymous Anonymous said...

http://thamizhinam.blogspot.com/2005/09/blog-post_17.html

3:55 AM, September 17, 2005  
Anonymous Anonymous said...

http://tinypic.com/dqot3s.jpg2 nice pictures

11:04 PM, September 17, 2005  
Anonymous Anonymous said...

NICE PICTURE

http://tinypic.com/dqot3s.jpg

11:04 PM, September 17, 2005  
Blogger erode soms said...

வணக்கம் நீலகண்டன் சார்
மதத்தின் பெயரால் மாந்தர்களை ஏமாற்றும்
சதிகளிடம் சானியா சிக்காமல் இருந்தால் சரி.

3:10 AM, September 19, 2005  
Anonymous Anonymous said...

http://www.twfindia.com/images/sania.jpg

http://www.hindu.com/2003/11/05/images/2003110507241901.jpg

http://specials.rediff.com/sports/2005/mar/02pic1.jpg

http://www.geocities.jp/workaholicweb/gallery-2003/030413-jojunior/p4130445.jpg

http://www2.vo.lu/homepages/pr/funny/images/funny_pic21.jpg


http://my.crisys.org/funny/pic09565.jpg

8:18 AM, September 19, 2005  

Post a Comment

<< Home