Tuesday, August 23, 2005

குஜராத் கலவரங்களைக் குறித்த இக்கட்டுரையின் நோக்கம் நிச்சயமாக வன்முறையை நியாயப்படுத்துவதன்று. குஜராத்தில் கொல்லப்பட்ட அனைத்து மக்களுக்கும் இவ்வலைப்பதிவாளனின் அஞ்சலி. ஆனால் சில சக்திகள் இக்கலவரத்தை ஒரு குறிப்பிட்ட அமைப்பினர் திட்டமிட்டு முஸ்லீம்களுக்கு எதிராக செய்த படுகொலை-போக்ரோம் என்றெல்லாம் கூறுவது வக்கிரமான திரிபு வேலியேயாகும். பிணக்குவியலின் மீது நடத்தப்படும் ஓட்டுவங்கி அரசியலின் இருட்சித்து விளையாட்டுக்களேயாகும். இன்றைக்கு இவ்வாறு கூறும் கே.ஆர்.நாராயணன் ஏன் இக்கலவரத்திற்கு பின்னர் பாஜகவிடம் தமக்கு மீண்டும் குடியரசுத்தலைவராக வேண்டும் என ஆதரவ்வு கேட்டார். தேஜகூ அரசின் ஆதரவில் குடியரசுத்தலைவரான அப்துல் கலாம் அவர்கள் குஜராத் சென்று கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களை காணமுடிந்தது ஆனால் ஏன் கே.ஆர்.நாராயணனால் சென்று காணமுடியவில்லை? அவரை தடுத்த சக்திகள் கலாமினை மட்டும் தடுக்கவில்லையா? இக்கேள்விகள் ஒருபுறமிருக்க குஜராத் கலவரங்களின் சில அதிகம் பேசப்படாத கூறுகளை ஆராயலாமா? முதலில் தெள்ளத்தெளிவாக ஒரு கூட்டத்தால் தீவைக்கப்பட்டதாக கருத இடமளிக்கும் பல தரவுகள் வெளிவந்தன. அச்சமயத்தில் எத்தகைய வாதங்கள் முதலில் 'மதச்சார்பற்ற' பத்திரிகைகளில் வெளிவந்தன? ஒரு இஸ்லாமிய தேநீர் கடைக்காரரின் 16 வயது மகள் கடத்தப்பட்டதாகவும் எஸ்-6 கோச்சில் அவளை கரசேவகர்கள் கொண்டு சென்றதாகவும் எனவே கோபமடைந்த இஸ்லாமிய மக்கள் (பெண்கள் உட்பட) எஸ்-6 கோச்சினை தாக்கியதாகவும் செய்திகள் வெளியாயின. இது மின்னஞ்சல் மூலம் பரப்பப்பட்டது. வி.ஆர்.கிருஷ்ண அய்யர் முதல் சையது நக்வி வரை பெரும் அறிவுஜீவிகளும் பத்திரிகையாளர்களும் இச்சம்பவத்தினை சுட்டிக்காட்டி எழுதினர். தேசிய அளவில் விற்பனையாகும் தி ஹிண்டு தி இண்டிய எக்ஸ்பிரஸ் தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் ஆகியவை இச்சம்பவத்தினை இணைத்து கோத்ரா சம்பவம் குறித்து கட்டுரைகளை வெளியிட்டன. இந்நிலையில் இம்மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டிருந்த சம்பவத்தினை கண்டவராகக் கூறப்பட்டிருந்த ஒரு பத்திரிகையாளரை சந்தித்து இது குறித்து மேலும் தெரிந்துகொள்ள முயன்றார் அவுட்லுக் பத்திரிகையில் எழுதிவரும் பிரேம் சங்கர் ஜா (விபிசிங்கிற்கு நெருக்கமானவர், பாஜகவினை தாக்கி எழுதுபவர்.) அவரது வார்த்தைகளிலேயே இனி இது குறித்து தெரிந்துகொள்ளலாம். "...That was when I got my first surprise. Soni not only categorically denied having ever filed such a story, but also claimed that the contents of the mail were the exact opposite of what had happened. We were interrupted by another phone call (his life was being made miserable by inquiries). The next day when I called him again, he was out but I got his young son Vimal on the line. Vimal told me in great detail what his father had actually found out at the site of the tragedy. He said it was pre-planned and went on to add chilling details that his father had not included in his stories."(அவுட்லுக், 25.03.2002)ஜா மேலும் இக்கதையிலுள்ள பல தடுமாற்றங்களைச் சுட்டிக்காட்டுகிறார்.
ஆனால் இவையெல்லாம் நமது இடதுசாரிகளையோ அல்லது மதச்சார்பின்மைவாதிகளையோ நிறுத்தவில்லை. எல்லை தாண்டிய தொடர்புகள் கொண்ட இஸ்லாமிய அடிப்படைவாத-பயங்கரவாத அமைப்புகளுக்கு இது நாடெங்கும் பரவ நல்லதோர் வாய்ப்பாக பயன்பட்டது. ஜூலை 2002 சமரஸம் பத்திரிகையும் இதே செய்தியை வெளியிட்டதாக நினைவு. மற்றொரு மிகவும் பிரச்சாரப்படுத்தப்பட்டதோர் கதை மோடி நீயூட்டனின் விதியை மேற்கோள் காட்டியதாக. சைபர்னூன் பத்திரிகை (19 மார்ச் 2002) இம்மேற்கோள் தவறெனக்கூறியது. மோடி இவ்வாறு கூறியதாக கூறிய நிருபர், பின்னர் தாம் நேரடியாக மோடி கூறியதைக் கேட்கவில்லையென்றும் மோடி அவ்வாறு கூறியதாக மற்றொருவர் கூறியதை தாம் சிறிதே சுவாரசியம் சேர்த்து ரிப்போர்ட் செய்ததாக சொன்னார். பினாமி பெயரில் மத்தியபிரதேச வனப்பகுதியில் வருடத்தில் சிலநாட்கள் தங்க பல்லாயிரம் சதுரமீட்டர்கள் பரப்பளவில் பங்களா கட்டியமை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் இடதுசாரி குட்டித்தேவதையின் கற்பனை வளமிக்க பொய்யையும் நாம் மறந்துவிட இயலாது. எம்பி ஜாஃப்ரீயின் இல்லாத மகள் ஹிந்து வெறியர்களின் கூட்டத்தால் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது குறித்து அவர் எழுதிய உணர்ச்சி பூர்வக் கட்டுரை 11 இந்தியமொழிகளில் முற்போக்கு கூட்டங்களால் மொழிபெயர்க்கப்பட்டு ஏறத்தாழ எழுதப்படிக்கத் தெரிந்த அனைத்து இஸ்லாமிய இளைஞர்களாலும் வாசிக்கப்பட்டது. பின்னர் பல்பிர் புஞ்ச் இக்கதையின் பொய்யை தெளிவுப்படுத்தினார். ஜாஃப்ரியின் ஒரே மகள் அமெரிக்காவில் (அட...முஸ்லீம் லீக் எம்பியின் மகள் அந்த மாபெரும் சைத்தானிய தேசத்திலா ...) இவ்வாறு முதலில் தவறாக கூறிய டைம் பத்திரிகை மன்னிப்பு தெரிவித்திருப்பதையும் சுட்டிக்காட்டினார். பெரும் பொய்களின் சிறு தேவதை வேறு வழியில்லாமல் அவரது கட்டுரை பிரசுரமான பத்திரிகை பத்திரிகையாக மன்னிப்பு கேட்கவேண்டி வந்தது. அவரது மன்னிப்பினை தருகிறேன் பாருங்கள்:"My information (mis-information, as it turned out) was cross-checked from two sources. Time magazine (March 11) in an article by Meenakshi Ganguly and Anthony Spaeth; and "Gujarat Carnage 2002: A Report to the Nation" by an independent fact-finding mission which included K.S. Subrahmanyam, former IGP Tripura, and S.P. Shukla, former finance secretary. I spoke to Mr Subrahmanyam about the error. He said his information at that time came from a senior police official."
குஜராத் அரசினை தாக்க பலரும் பயன்படுத்தியது இந்த அறிக்கையைதான். 'Fact finding mission' இன் இலட்சணத்தை பார்த்துக்கொள்ளுங்கள். ஜாஃப்ரி தாக்கப்பட்ட இடத்துக்கே அவர்கள் சென்று பார்வையிட்டிருக்கலாம். அவர்களுக்கு மிகவும் வேண்டிய தொலைக்காட்சி நிருபர்கள் அங்குதான் இருந்தார்கள் அவர்களிடம் கேட்டு சரிபார்த்திருக்கலாம். ஆனால் ...அதையெல்லாம் விட அவர்களுக்கு முக்கியமாக தோன்றியது "மிகவும் கொடூரமாக மோடி அரசை காட்ட கிடைத்துவிட்டது ஒரு வழி அதைப்போய் யாராவது சரி பார்த்திட்டு இருப்பாங்களா" என்கிற நினைப்புதான் போல. ஆசியன் ஏஜ் பத்திரிகையில் ஜாஃப்ரியின் மகன் கொடுத்த பேட்டியை அகஸ்மாத்தமாக படிக்க நேர்ந்ததால் இந்த பொய் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் கண்டுபிடிக்கப்படாமல் பரப்பப்பட்டுக்கொண்டிருக்கும் பொய்கள் எத்தனை என யாருக்குத் தெரியும்?
குஜராத் கலவரங்கள் 'genocidal', 'pogroms against Muslims', 'holocaust' எனும் பதங்களால் அழைக்கப்படுகின்றன. அரசு-சாரா-அமைப்புகள், இடதுசாரிகள் ஆகியோரின் 'fact-finding' missions பொதுவாக குஜராத் அரசும் மத்திய பாஜக அரசும் இஸ்லாமியர்களை பாதுகாக்கவில்லை 'எங்களுக்கு உங்களை காப்பாற்ற உத்தரவு இல்லை' எனக்கூறினார்கள், என்றெல்லாம் கூறுகின்றன. ஹிந்துக்கள் மட்டுமே இஸ்லாமியர்களைத் தாக்கினார்கள் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இவையெல்லாம் எந்த அளவு உண்மை? இதோ நானாவதி கமிஷன் முன்னால் பாதிக்கப்பட்ட ஹிந்து மக்கள் அளித்த வாக்குமூலங்களிலிருந்து ஒரு சாம்பிள்: [PTI செய்தி: வெள்ளி, செப்டம்பர் 19 2003 18:03 (IST)]இன்று ஒரு பெரும்பான்மை சமூகத்தைச் சார்ந்த கலவரத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர் தமது மகனை ஆயுதங்கள் தாங்கிய இஸ்லாமியர்கள் இழுத்துச்சென்றதாகவும் அவன் கொல்லப்பட்டிருக்கக் கூடும் என தாம் நம்புவதாகவும் கூறினார். அந்தப்பகுதியில் இஸ்லாமிய கும்பலின் தாக்குதலில் 26 குடும்பங்கள் வீடிழந்தன. கிஷன் தாக்கர் எனும் மற்றொரு பாதிக்கப்பட்டவர் கூறினார் துப்பாக்கிகள் இன்ன பிற ஆயுதங்களுடன் இஸ்லாமியர்கள் தாக்கியதாகவும் கடும் வன்முறையில் ஈடுபட்டதாகவும் "காஃபீரோங்கோ காத் டாலோ" எனும் கோஷம் மசூதியிலிருந்து கேட்டதாகவும் கூறினார்.
இது இஸ்லாமிய மக்கள் களத்தில் குஜராத் காவல்துறையினரின் நடவடிக்கை குறித்து அளித்த வாக்குமூலங்களிலிருந்து ஒரு சாம்பிள்:[PTI செய்தி செவ்வாய், செப்டம்பர் 23 2003 17:09(IST)பல சிறுபான்மையின சாட்சிகள் செப்டம்பர் 23 அன்று விசாரணை கமிஷனிடம் சரியான நேரத்தில் காவல்துறையினர் புறநகரில் உள்ள ராமோல் பகுதிக்கு வந்தது ஆயுதங்கள் தாங்கிய ஹிந்து கும்பலிடமிருந்து தம்மை காப்பாற்றியதாக தெரிவித்தனர். ... 'இஸ்லாமாபாத் அமைப்பு' (பாகிஸ்தானிய நகரின் பெயரில் இந்தியாவில் குடியிருப்பு ...இதுவும் நல்லெண்ண வளர்ச்சி மனப்பாங்காக இருக்கும் என நினைக்கிறேன் - அரவிந்தன் நீலகண்டன்) சார்ந்த டாக்டர் இஸ்மாயில் மன்சூரி , 15000 பேர் வாழும் தம் குடியிருப்பை ஹிந்துக்கள் தாக்க வருகையில் போலிசாரின் தக்க செயல்பாடே படுகொலையைத் தவிர்த்ததாக தெரிவித்தார். ஆனால் அதற்கு முன்னர் ஒரு அதிரடி போலிஸ் படையினர் தம் வேண்டுகோளை உதாசீனப்படுத்தி சென்றுவிட்டனர் எனக்கூறினார். மற்றொரு சாட்சியான அப்த்துல்லா சையது கமிஷனிடம் பிப்-28 2002 அன்று பஜ்ரங்தள் ஆட்களையும் காவி தலையணி அணிந்தவர்களையும் கொண்ட கும்பலிலிருந்து தம்மை காவல்துறையினர் காப்பாற்றியதாகக் கூறினார்.
ஆகக்கூடி 2002 இல் குஜராத்தில் நடந்தது ஒருபக்க படுகொலை அல்ல. மாறாக ஒரு கை ஓங்கியிருந்த கலவரம். இருதரப்பினரும் ஈடுபட்ட கலவரமே அன்று நிச்சயமாக 1984 இல் மதச்சார்பின்மை கட்சியாளர்கள் நடத்தியது போன்ற படுகொலை அல்ல. இன்றைய ஆளும் கட்சியினரின் அமைச்சர் ஸ்ரீப்ரகாஷ் ஜைஸ்வால் பாராளுமன்றத்தில் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் இதற்லி மேலும் சான்று பகர்கின்றன. இதன்படி 790 முஸ்லீம்களும் 254 ஹிந்துக்களும் கொல்லப்பட்டனர். பிப்ரவரி 27 இல் கோத்ரா சம்பவம் நிகழ்ந்தது. பிப்ரவரி 28இல் விஸ்வஹிந்துபரிஷத் பந்த் நடத்தியது. அன்றே கலவரங்கள் ஆரம்பித்தன. அது கூட ஹிந்துக்கள் மட்டுமே தாக்கியதாக இல்லை. ஆனால் இஸ்லாமியர்கள் கலவரங்களில் ஈடுபட்ட காட்சிகள் கூட காட்டப்படாமல் தவிர்க்கப்பட்டன. உதாரணமாக பிப்ரவரி 28 அன்று பிரகாம்புரா பகுதிகளில் கலவரங்களில் ஈடுபட்ட முஸ்லீம்கள் ஏஎன்ஐ எனும் தொலைக்காட்சியினரது காமிராவை எரித்து அவர்களை குஜராத் மாநில பேருந்துக்குள் நான்கு மணிநேரம் சிறைபிடித்து வெறியாட்டங்கள் முடிந்தபின்னரே அனுப்பினர். குஜராத் கலவரங்களின் முகமாக காட்டப்பட்ட புகைப்படத்தில் கூட ஒரு நுட்பமான உளவியல் மோசடி உள்ளது. அப்படத்தை யாரிடமாவது காட்டுங்கள். இந்த ஆள் என்ன செய்கிறார் என கேளுங்கள். பொதுவாக அவர்கள் தம்மை விட்டுவிடுமாறு கெஞ்சுகிறார் அல்லது உயிர்பிச்சை வழங்க மன்றாடுகிறார் என்பார்கள். இப்புகைப்படம் உலகெங்கும் பரப்பப்பட்டது. அண்மையில் சென்னையில் ஒரு முக்கிய நாளேடு தன் விளம்பர பலகையிலேயே இப்புகைப்படத்தை பெரிதாக வைத்திருந்தது. லஸ்கர் இ தொய்பாவின் இணையதளத்தில் இப்புகைப்படம் "இந்த முஸ்லீமுக்கு ஒரு AK-47 தேவையல்லவா?" எனக்கேட்டிருந்தது. ஆனால் சொல்லப்படாத விஷயம் என்னவென்றால் அவர் உயிர்பிச்சைக் கேட்கவில்லை மாறாக தம்மைக் காப்பாற்றிய பாதுகாப்புபடைகளுக்கு நன்றி சொல்கிறார் என்பதுதான். இவ்வாறாக பலதளங்களில் ஒருங்கிணைந்த வெவ்வேறு சக்திகளின் செயல்பாட்டின் மூலம் ஒரு மிகவும் பலம் வாய்ந்த உணர்ச்சிபூர்வமானதோர் பிம்பம் உருவாக்கப்பட்டது. அம்மாய பிம்பமே குஜராத் படுகொலைகள். இம்மாய பிம்பத்திற்கு அப்பாலான உண்மை அது குஜராத் கலவரங்கள் என்பதே. பஞ்சாபில் பயங்கரவாதத்தை ஒடுக்கிய KPS கில் இன்று Institute for Conflict எனும் அமைப்பின் தலைவராக உள்ளார். "New Theatre Of Islamist Terror " எனும் கட்டுரையில் அவர் கூறியுள்ளது: ...there has been continuous evidence of recurrent efforts by Pakistan backed Islamist extremist groupings to engineer terrorist incidents in Gujarat in the months since the riots in this State. These are only a handful of the recent intelligence breakthroughs that prevented acts of terrorism from taking place in Gujarat,...and are part of a much larger plan that extends well beyond this State, and that predates the Gujarat riots by many years. Since 1998, for instance, Central intelligence and State police units charged with countering Pakistan-backed terrorism in India outside the State of Jammu & Kashmir, have identified and dismantled at least 162 terrorist and support modules [1998: 29; 1999: 30; 2000: 25; 2001: 59; 2002 (till September 25): 19] located virtually across the country. These figures relate only to terrorist and terrorist support activities, and do not include arrests relating to subversion and espionage charges. (அவுட்லுக் செப்.30.2002)ஆக, குஜராத்தில் கலவரம் உருவாக்கவும் அதன் மூலம் பயங்கரவாதத்தை உருவாக்கவும் ஐஎஸ்ஐ அமைப்பு பலகாலமாக சதி செய்துவந்துள்ளது. அதனுடைய விளைவே கோத்ராவும், அதற்கு அப்பாலும், அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பிரச்சார பிம்பங்களும். இதில் இடதுசாரிகள் இஸ்லாமிய பயங்கரவாதத்தின் நெடுநோக்குத்திட்டத்தில் தங்களையே மனமுவந்தோ அறியாமலோ சதுரங்க காயாக்கிக் கொண்டனர். இடதுசாரி ஊடக பெருமுதலாளிகள் (Leftist media barons) எனும் புதுவர்க்க கும்பல் ஒன்று இதில் பெருத்த லாபமும் சம்பாதித்துள்ளது - வெறும் பணமாக மட்டுமல்ல என்பதும் மற்றொரு உண்மை. எனில் பானர்ஜி கமிஷன் அறிக்கை? அது குறித்தும் மேலும் சில தகவல்கள் குறித்தும் அடுத்த பதிவில்.

9 Comments:

Anonymous Anonymous said...

யாரும் எழுத அஞ்சுகிற விதயத்தை எடுத்து எழுதியிருக்கிறீர்கள்.
உங்களையும் தமிழ்மணத்தில் தடை செய்துவிடப்போகிறார்கள் ஜாக்கிரதை.

இந்து கடவுள்களை எதிர்த்து எழுதினால்தான் உங்களுக்கு முற்போக்கு முத்திரை கிடைக்கும். ஆபிரஹாமிய மதங்களை விமர்சித்து எழுதினால் தடைதான்.

3:31 PM, August 23, 2005  
Blogger P.V.Sri Rangan said...

அயோத்தி ராமர் கோவில் தாக்குதல்
வினை விதைத்தால் தினை அறுக்க முடியுமா?


உ.பி. மாநிலம் அயோத்தியில் பாபர் மசு10தி வளாகத்தினுள் அமைந்துள்ள
ராமர் கோவிலின் மீது கடந்த ஜூலை மாதம் ஆம் தேதி நடந்த தாக்குதலின் பொழுது ஐந்து தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் இவர்கள் தவிர சுற்றுலா வழிகாட்டி ஒருவரும் சாமி கும்பிட வந்த பெண் ஒருவரும் இத்தாக்குதலின்பொழுது இறந்து போய்விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராமர் கோவில் என அழைக்கப்படும் அந்தக் கூடாரத்திற்கு சேதம் எதுவும் ஏற்பட்டுவிடவில்லையென்றாலும் முசுலீம் தீவிரவாதத்தை எதிர்த்துக் கூச்சல் போடும் அனைவரையும் இத்தாக்குதல் உலுக்கிப் போட்டிருக்கும்.

மற்ற கோவில்களில் ''விசுக்கென்று நுழைவதைப் போல பாபர் மசு10தி வளாகத்தினுள் உள்ள ராமர் கோவிலுக்குள் மேல்சாதியினர் கூட எளிதாக நுழைந்துவிட முடியாது. மைய அரசும் உ.பி. மாநில அரசும் மூன்று அடுக்கு பாதுகாப்பை இக்கோயிலுக்கு வழங்கியிருக்கின்றன.
சிவப்பு வளையம் என அழைக்கப்படும் ராமர் கோயிலைச் சுற்றியுள்ள பகுதி மைய அரசின் ரிசர்வ் போலீசு படையைச் சேர்ந்த போலீசார் மற்றும் விரைவு அதிரடிப்படையைச் சேர்ந்த இராணுவச் சிப்பாய்களால் பாதுகாக்கப்படுகிறது

மஞ்சள் வளையம் என அழைக்கப்படும் கோயிலை அடுத்துள்ள பகுதி உ.பி. மாநில அரசின் பிரதேச ஆயுதப் படையைச் சேர்ந்த போலீசாரால் பாதுகாக்கப்படுகிறது.

பச்சை வளையம் என அழைக்கப்படும் வெளிப்புறப் பகுதி உ.பி. மாநில போலீசால் பாதுகாக்கப்படுகிறது. மேலும் பாபர் மசு10தி வளாகம் முழுவதையும் கண்காணிப்பதற்காக கோபுரங்களும் நிறுவப்பட்டுள்ளன.

இத்துணை பாதுகாப்பையும் மீறி உள்ளே நுழைந்த ஐந்து தீவிரவாதிகளுக்கும் ஆயுதப் படையினருக்கும் இடையே ஒன்றரை மணி நேர துப்பாக்கிச் சண்டை நடந்திருப்பதோடு ராமர் கோயில் கருவறைக்கு அடி தூரத்தில்தான் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆனால் பா.ஜ.க.வோ குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத கதையாக ''ராமர் கோவிலுக்குப் பாதுகாப்பு குறைவாக இருக்கிறது அதனால்தான் தீவிரவாதிகள் உள்ளே புகுந்துவிட்டதாகப் புலம்புகிறது. இன்னும் சொல்லப்போனால் மைய மாநில அரசின் புலனாய்வுப் பிரிவுகள் முன்கூட்டியே கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு இத்தாக்குதல் திட்டம் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பது கூட இன்னும் ஆதாரபூர்வமாகத் தெரியவில்லை. சுட்டுக் கொல்லப்பட்ட 'தீவிரவாதிகள் சுன்னத் செய்திருப்பதால் முசுலீம்கள் என்றும் தாக்குதலுக்குப் பின் கண்டு எடுக்கப்பட்ட செல்போனை வைத்துக் கொண்டு பாகிஸ்தானில் இருந்து இயங்கி வரும் லஷ்கர்இதொய்பா தான் இத்தாக்குதலை நடத்தியிருப்பதாகவும் யூகங்களையே ஆதாரங்களாகப் புலனாய்வு அமைப்புகள் அறிவித்திருக்கின்றன.

இத்தாக்குதல் மூலம் இந்து முசுலீம் மதக் கலவரத்தைத் தூண்டி விடுவதுதான் தீவிரவாதிகளின் நோக்கம் என காங்கிரசு சி.பி.எம். உள்ளிட்ட 'தேசியக் கட்சிகள் கண்டுபிடித்திருக்கின்றன. தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதால் நிறைவேறாமல் போன அவர்களின் 'நோக்கத்தை நிறைவேற்றி வைக்கும் பொறுப்பை இத்தாக்குதலின் பின்னே பா.ஜ.க. கையில் எடுத்துக் கொண்டது. இன்னும் சொல்லப் போனால் இப்படியொரு தீவிரவாத சம்பவம் நடைபெறாதா என அக்கட்சி எதிர்பார்த்துக் கொண்டு இருந்தது என்பதுதான் உண்மை.

இதற்கு நிரூபணம் வேண்டும் என்றால் இத்தாக்குதல் நடந்தவுடனேயே ஆர்.எஸ்.எஸ். வெளியிட்ட அறிக்கையைப் படித்துப் பார்த்துக் கொள்ளுங்கள். நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பின்னே கட்சிக்குள் நிலவி வரும் தேக்கநிலை ஆர்.எஸ்.எஸ். பரிவார அமைப்புகளுக்குள் கொள்கை மோதல் என்ற பெயரில் நடந்து வந்த கோஷ்டி சண்டை இவை எல்லாவற்றையுமே இத்தாக்குதல் தீர்த்து வைக்கும் காரணியாகி விட்டது என்றது ஆர்.எஸ்.எஸ்.

பாபர் மசு10தி இடிக்கப்பட்ட நாள்தான் எனது வாழ்க்கையில் மிகவும் வேதனைக்குரிய நாள் என பாகிஸ்தானில் முதலைக் கண்ணீர் விட்ட அத்வானி தாக்குதல் நடந்து முடிந்தவுடனேயே ராமர் கோவிலை அதே இடத்தில் (பாபர் மசு10தி வளாகத்தினுள்) கட்டுவோம் எனக் கூறி தனது இந்து மதவெறி விசுவாசத்தைக் காட்டிக் கொண்டார். பா.ஜ.க. இத்தாக்குதலுக்குத் தக்க பதிலடி கொடுப்போம் எனக் கூறி தனது வானரப் படைகளை உசுப்பேற்றி விட்டது. பா.ஜ.க. சு10சகமாகச் சொன்னதை ராமஜென்ம பூமி நியாஸ் என்ற ''கஞ்சா சாமியார்கள் அமைப்பு அயோத்தியில் இருந்த முசுலீம்கள் அனைவரையும் வெளியேற்ற வேண்டும் எனப் பச்சையாகச் சொன்னது. குஜராத் தவிர நாடெங்கும் கடையடைப்பு ரயில் மறியல் என நடத்தி ஒரு பதட்டமான சு10ழ்நிலையை உருவாக்க முயன்றது ஆர்.எஸ்.எஸ். கும்பல்.

ஆனால் களில் பா.ஜ.க.விற்கு ராமர் கைகொடுத்ததைப் போல இந்த முறை கை கொடுக்கவில்லை. அவர்கள் அறிவித்திருந்த கடையடைப்புப் போராட்டம் அயோத்தியிலேயே பிசுபிசுத்துப் போனது. அயோத்தியில் அத்வானி தலைமையில் நடந்த கண்டனப் பொதுக் கூட்டத்திற்கு உள்ளூர் மக்கள் ஒரு ஆயிரம் பேர் கூடத் திரண்டு வந்து ஆதரவு கொடுக்கவில்லை. அயோத்தியைச் சேர்ந்த மஹந்த் கியான்தாஸ் என்ற சாமியார் அவர்கள் மசு10தியை இடிக்காமல் இருந்திருந்தால் தீவிரவாதிகள் அயோத்தி பக்கம் வந்திருக்க மாட்டார்கள் எனக் கூறி உள்ளூர் மக்களின் மனோநிலையைப் பிரதிபலித்தார்.

இத்தாக்குதல் பற்றி ஒரு ''இந்து சாமியார் வெளிப்படுத்தியிருக்கும் நேர்மையான நியாயமான கருத்தை மதச்சார்பற்ற ஓட்டுக் கட்சிகளும் கூறியிருக்க வேண்டும். ஆனால் அக்கட்சிகளோ இத்தாக்குதல் பற்றி பா.ஜ.க.வின் குரலில் பேசி தங்களின் 'மென்மையான இந்து மதவெறியை வெளிப்படுத்திக் கொண்டன.

ராமர் கோயில் மீது நடந்த தாக்குதலை நாட்டின் இறையாண்மையின் மீது நடந்த தாக்குதலாகக் கூறினார் காங்கிரசின் பொதுச் செயலாளர் அம்பிகா சோனி.

சி.பி.எம். சி.பி.ஐ. உள்ளிட்ட இடதுசாரிக் கூட்டணியோ அயோத்தி மீது நடந்த தாக்குதல் நாட்டின் மீது நடந்த தாக்குதல் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி அரசியலில் நிலையற்ற தன்மை மற்றும் சர்வாதிகாரத்தை உருவாக்க நடந்த சதி என பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்துள்ளன. நாட்டையும் நாட்டின் இறையாண்மையையும் ஒரு கோவிலோடு தொடர்புபடுத்துகிறார்கள் என்றால் இந்த நாட்டை இந்து நாடு என்றே அறிவித்து விடலாம்.

மதச் சார்பின்மை வேடம் போடும் காங்கிரசும் இடதுசாரிக் கட்சிகளும் ஆண்டுகளுக்கு முன்பு அயோத்தியில் நடந்த வரலாற்று உண்மையைக் குழிதோண்டி புதைக்கிறார்கள். டிச. அன்று பாபர் மசு10தியைச் சட்ட விரோதமாக இடித்துத் தள்ளியதோடு அந்த இடத்தில் திடீர் ராமர் கோவிலையும் கட்டி முடித்தன ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள். இந்தச் சட்டவிரோத ராமர் கூடாரத்திற்கு அன்று நரசிம்ம ராவ் தலைமையில் இருந்த மைய காங்கிரசு அரசும் உ.பி. மாநில உயர்நீதி மன்றமும் சட்டபூர்வ அந்தஸ்தை வழங்கின. பாபர் மசு10தி வளாகத்தை இந்துமத வெறிக் கும்பல் சட்ட விரோதமாக ஆக்கிரமித்துக் கொள்ளுவதற்கு வசதியாகவே அந்த இடம் யாருக்குச் சொந்தம் என்பது குறித்து நடந்துவரும் வழக்கில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தீர்ப்புச் சொல்லாமலேயே இழுத்தடித்து வருகிறது அலகாபாத் உயர்நீதி மன்றம்.

பாபர் மசு10தி இருந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்பதற்கோ ராமர் கோவிலில் இருந்த இடத்தை இடித்து விட்டுத்தான் முசுலீம் மன்னர் பாபர் மசு10தியைக் கட்டினார் என்பதற்கோ எந்தவிதமான ஆதாரங்களும் கிடையாது என்பதை ஏராளமான வரலாற்று ஆய்வுகளும் பாபர் மசு10தி வளாகத்தில் நடந்துள்ள அகழ்வாராய்ச்சிகளும் நிரூபித்துள்ளன. ஆனால் இந்து மதவெறிக் கும்பலோ மத நம்பிக்கை என்ற பெயரில் இந்த அறிவியல்பூர்வமான வரலாற்று உண்மைகளை ஏற்றுக் கொள்ளாமல் அடாவடித்தனமாக நடந்து வருகிறது. ஊரான் சொத்தை ரவுடிகள் ஆக்கிரமித்துக் கொள்வதைப் போல இந்து மதவெறிக் கும்பல் தனது அரசியல் பலம் அதிகார வர்க்கத்தில் ஊறிப் போயிருக்கும் இந்து மதவெறி ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொண்டு முசுலீம்களுக்குச் சொந்தமான பாபர் மசு10தி வளாகத்தை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது.

இடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் மசு10தியைக் கட்டிக் கொடுக்கக் கோரிப் போராவதுதான் அரசியல் ரீதியில் சரியான முடிவாக இருக்க முடியும். ஏனென்றால் சட்டவிரோதமான முறையில் ஆர்.எஸ்.எஸ். கட்டியுள்ள கூடாரம் மத நம்பிக்கை சார்ந்த விசயமல்ல. இந்து மதவெறி பாசிஸ்டுகள் அமைக்கத் துடிக்கும் இந்து ராஷ்டிரத்தின் குறியீடு. இந்தக் குறியீட்டைத் தகர்க்கப் போராடுவது எந்த வகையிலும் நாட்டிற்கோ மக்களுக்கோ எதிரானதல்ல.

ஆனால் மதச்சார்பின்மை பேசும் ஓட்டுக் கட்சிகளோ இந்தப் பிரச்சினையில் முடிவெடுக்கும் உரிமையை நீதிமன்றத்திடம் கொடுத்துவிட்டு ஒதுங்கிக் கொண்டு விட்டன. அவர்களின் முடிவுப்படி பார்த்தால் கூட இந்தத் தாக்குதல் முயற்சிக்குப் பிறகாவது பாபர் மசு10தி வளாகம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் நியாயமாகவும் விரைவாகவும் தீர்ப்பு வழங்கக் கோரியிருக்க வேண்டும். ஆனால் இந்தக் குறைந்தபட்ச கோரிக்கையைக் கூட எழுப்பாமல் இந்தத் தாக்குதலை நாட்டின் மீதான தாக்குதலாக ஊதிப் பெருக்கியிருப்பது அக்கட்சிகளின் மிதவாத இந்து மதவெறியைத்தான் எடுத்துக் காட்டியிருக்கின்றது.

மு செல்வம்

3:47 PM, August 23, 2005  
Anonymous Anonymous said...

இறுதித் தீர்ப்பு:
குஜராத் படுகொலை:
ஆவணப்படம்

நிறையப் படித்துவிட்டோம். குஜராத்தில் இந்து மதவெறி சங்கப் பரிவாரக் குரங்குகள் நடத்திய கொடூரத்தை. எழுத்துக்களாய் நீங்கள் படிக்கும் போது உங்களுக்குள் உருவகப்படுத்திக் கொண்ட காட்சிகளால் அல்லது வார்த்தைகள் தந்த உணர்ச்சிகளால் தாக்குண்டு, வெகுண்டெழுந்த உங்களது கோபம், இப்போது ஒருவேளை மட்டுப்பட்டிருக்கலாம். இந்துமத வெறியர்களின் கொலைவெறித் தாண்டவத்திற்கு உதாரணமாகக் குஜராத்தைச் சொல்லிச் சொல்லி உங்களையறியாமலேயே சலிப்படைந்து சடங்குத்தனமாய் வார்த்தைகள் உங்களிடமிருந்து வந்து கொண்டிருக்கலாம்.
உணர்ச்சி வசப்பட வைக்கும் எழுத்துக்களின் தீவிரம் நம்மை ஆட்கொள்ளும் காலத்தின் அளவு குறித்த வரையறை எதுவுமில்லைதான். ஆனால், அது நிச்சயமாகக் காட்சி ஊடகத்தின் தீவிரம் நம்மை ஆட்கொள்ளும் காலத்தின் அளவை விடக் குறைவுதான்.
சங்கப் பரிவாரக் குரங்கு ஒன்று இரண்டு கைகளையும் விரித்துக் கொண்டு வெறியோடு அலறும் புகைப்படத்தையும், இசுலாமியர் ஒருவர் இரு கைகளையும் கூப்பி வணங்கி கண்ணில் நீர் மல்க, மரண பீதியுடன் நிற்கும் புகைப்படத்தையும், ஏற்கெனவே பத்திரிக்கைகளில் பார்த்திருந்ததால், குஜராத் படுகொலை குறித்த ஆவணப்படம் ஒன்றைப் பார்த்தபோது,
ஆரம்பத்தில் ""ஒரே அழுகுரல், எங்கும் புகை, ஆங்காங்கே ஏதேதோ எரிந்து கொண்டிருக்கின்றன, வெட்டிச் சாய்க்கப்பட்ட பிணங்களாக மனிதர்கள், அலறி ஓடுகின்ற மக்கள், துரத்தி வரும் இந்து மதவெறியர்கள்....'' — இப்படித்தான் கற்பனை செய்து கொண்டிருந்தேன். ஆனால் படத்தில் அப்படி ஏதுமில்லை. பிஜேபியின் சித்தாந்தம் பாசிசம்தான் என்பதையும், பிஜேபி, விஎச்பி, ஆர்எஸ்எஸ், பஜ்ரங்தள் உள்ளிட்ட இந்து மதவெறிக் கும்பலெல்லாம் பாசிசக் கூட்டம்தான் என்பதையும், மிகத் தெளிவாக, ரத்த சாட்சியங்களாக நம்முன் வைக்கிறது இந்த ஆவணப்படம், நாம் இனிமேல் குஜராத்தை என்றென்றைக்கும் மறந்து விட முடியாதபடி. இப்படத்தின் பெயர்: ஃபைனல் சொல்யூஷன் இறுதித் தீர்வு. படத்தை எடுத்தவர் ராகேஷ் சர்மா.
இந்து நஞ்சு
படத்தின் துவக்கத்திலேயே, படுகொலையினால் பாதிக்கப்பட்ட, படுகொலைகளை நேரில் பார்த்த முசுலீம் குடும்பத்துச் சிறுவன் இஜாஜ் உடன் நேர் காணல் வருகிறது. ஒரு நொடியில் நாம் அதை உணர்ந்து விடுவதால் ஓடிச் சென்று, கள்ளங்கபடமில்லாமல் மலங்க மலங்க விழித்தபடி பேசும் அவனைக் கட்டியணைத்து ஆதரவாக நாங்கள் இருக்கிறோம் எனச் சொல்ல வேண்டும் என மனம் துடிக்கிறது. படம் இரண்டரை மணி நேரம் ஓடுகிறது.
பக்தியை, கடவுளை, மதத்தை, மதவெறியை, கலவரம் மூலமாக, படுகொலைகள் மூலமாக, பாலியல் வன்முறை மூலமாக, தேர்தல் வெற்றியாக மாற்ற முடியும் என்பதைப் பாசிஸ்டுகள் நிரூபித்துக் காட்டுகிற விதத்தை தெளிவாக நாம் புரிந்து கொள்ளும்போது, படம் முடியப் போகும் நேரத்தில், மீண்டும் அதே சிறுவன் இஜாஜ் உடன் நேர் காணல் வருகிறது. கேள்விகளுக்கு அவன் பதில் சொல்வதைக் கேளுங்கள். இஜாஜ் படித்துக் கொண்டிருப்பது யூ.கே.ஜி.

இஜாஜ்: 1... 2... 3... எனக்கு எல்லா எண்களும் தெரியும். வீடு... பூக்கள் எல்லாம் செய்யத் தெரியும்.
கேள்வி: பெரியவனான பிறகு என்ன ஆவாய்?
இ: சோல்ஜராவேன்! பிறகு அவர்களைச் சுடுவேன்!
கே: யாரை?
இ: இந்துக்களை!
கே: ஏன்?
இ: ஏன்னா, அவர்களும் இதைத்தான் செய்தார்கள்!
கே: நீ ஏன் அவர்களை மோசமானவர்களாக
நினைக்கிறாய்?
இ: .....கட்டாயம்
அவர்களைக் கொல்வேன்!
கே: ஏன்?
இ: நான் அவர்களைச் சேதப்படுத்துவேன்!
கே: எல்லா இந்துக்களும் மோசமானவர்களா?
இ: அவர்கள் கெட்ட வார்த்தைகளைப் பேசினார்கள்!
கே: எந்த மாதிரி?
இ: நான் அந்தக் கெட்ட வார்த்தைகளைப் பேசமாட்டேன்.
கே: நான் ஒரு இந்து. நான் மோசமானவன்னு நெனக்கிறியா?
இ: (யோசித்து) இல்லை.
கே: நீ ஒரு சோல்ஜர். என்னைக் கொல்லணுமல்லவா?
இ: (தலையசைத்து) ஆமா, நா வேற யாரையும் தாக்க மாட்டேன். இந்துக்களை மட்டும்தான் கொல்வேன்.
கே: சரி! நா ஒரு இந்து.
இ: இல்லை. நீங்கள் அவர்களில்லை.
கே: நான் அவர்களைப் போல
இல்லையா?
இ: (இல்லையெனும்படித் தலையசைக்கிறான்)
கேள்வி: அப்புறம்?
இஜாஜ்: நீங்கள் ஒரு முசுலீம்.
— குஜராத்தில் நடத்தப்பட்ட படுகொலைகள், இசுலாமிய இளைஞர்கள், பெண்கள், குழந்தைகளிடம் என்ன எதிர்விளைவுகளை உண்டாக்கும்? அவைகள் எதிர்வன்முறைகளாக அமைந்தால், அது இந்துவெறியர்களுக்குத்தான் சாதகமானதாக இருக்கும் என்பதை எப்படி அவர்களிடம் விளக்கலாம் என்பதும்; கொழுந்துவிட்டு எரியும் இவர்களின் கோபத் தீக்கு என்ன சமாதானம் சொல்வது? எம்மாதிரியான தண்டனைகளை இந்து மதவெறிக் கும்பலுக்கு வழங்கினால், இவர்களின் ஈடு செய்ய முடியாத இழப்புகளைச் சமன் செய்ய முடியும் என்கிற கேள்வியும் — படத்தின் இடையிடையே அலைபோல எழும்பியெழும்பித் தணிந்து கொண்டிருந்தபோது இறுதியில் வரும் இஜாஜின் சொற்கள் நம்மை அதிர வைக்கின்றன.
இந்துக்கள் என்றாலே கொடூரமானவர்கள் என்கிற ஆழமான வடுவை இஜாஜ் போன்ற குழந்தைகளின் மனதில் பதித்து விட்டார்கள், ராமபக்தர்களான இந்துப் பாசிஸ்டுகள். தம்மை இந்துக்கள் என்று நம்பிக் கொண்டும், சொல்லிக் கொண்டும் திரிபவர்கள் இஜாஜின் கேள்விக்கு என்ன பதில் சொல்வார்கள்?
அது யாரோ வெறியர்கள் செய்தது என்றால், உங்களின் பெயரைப் பயன்படுத்தித்தான் அவர்கள் இதைச் செய்தார்கள் என்பதால் அவர்களுக்கு நீங்கள் என்ன தண்டனை வழங்கப் போகிறீர்கள்? பிஞ்சு மனதில் நஞ்சைக் கலந்து என்பார்களே, அதை அப்படியே பார்க்க முடிகிறது. அதுவும் இது இந்து நஞ்சு.
பிரச்சாரம் பயம் வெற்றி
பிஜேபியின் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்களுடன் படம் துவங்குகிறது. முசுலீம்களை இழிவாகத் திட்டும் சிறுவர்கள். இஜாஜின் நேர் காணல். முசுலீம் முகாம்கள் இடிக்கப்பட்ட வீடுகள் — ""போலீசு பஜ்ரங்தளுடன் சேர்ந்து கொண்டனர்'' என ஆவேசப்படும் முசுலீம்கள். போலீசு சுடும் காட்சி கலவரத்தை அடக்க போலீசால் சுடப்பட்டுச் செத்த 40 பேர்களில் 36 பேர் முசுலீம்கள். பாதிக்கப்பட்டவர்களின் நேர் காணல்கள். மோடியின் மதவெறியூட்டும் தேர்தல் பிரச்சாரப் பேச்சு. எல்லா இடங்களிலும் கோத்ரா பற்றியே பேச்சு.
கோத்ரா ரயிலில் இறந்த ஒரு பெண்ணின் இரண்டு புகைப்படப் பிரதிகளை வாங்கிக் கொண்டு போய், ஒன்றை விஎச்பி அலுவலகத்தில் கரசேவத் தியாகிகள் என கட்டம் போட்டும், இன்னொன்றை, வில்லோடும் வெறியோடும் சீறும் "ராம்'போவின் படத்துடன் இணைத்து லேமினேட் செய்தும் கொடுத்துள்ளார்கள். ""எங்கம்மா கரசேவகர் இல்லை. விஎச்பிக்காரர்கள் அப்படி மாற்றி விட்டார்கள்'' என்று அவரது மகள், ஒரு சிறுமி சொல்கிறார்.
தேர்தல் பிரச்சாரம் ராவணனால் வாலில் தீ வைக்கப்பட்ட ஹனுமான் குஜராத்திற்கு வந்திருந்தார் எனப் பிரச்சாரம். நடக்கும் தேர்தல் பிஜேபிக்கும் காங்கிரசிற்குமல்ல; இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் பாகிஸ்தானே நமது எதிரி முஸ்ரஃபே எச்சரிக்கை இந்து வன்முறையாளர்கள் என்று சொல்கிறார்கள், இந்துக்களுக்கு வன்முறையில் நம்பிக்கையில்லை, இந்துக்கள் வன்முறையில் இறங்கினால் உலக வரைபடத்தில் பாகிஸ்தான் இல்லாமல் போகும் — பிரச்சாரம், இந்துமதவெறிப் பாசிசத்தின் உச்சகட்டப் பிரச்சாரம்.
இடையில் இந்துக்களுக்கு ஆதரவாகச் சிலர், ஒரு டாக்ஸி டிரைவர், இளம்பெண், கிரிக்கெட் விளையாடும் சிறுவர்கள்... எனப் பேசுகிறார்கள். அவர்கள் பேசுவது பொய்தான் என்பதையும், உண்மையைச் சொல்ல வரும்போது அவர்கள் தடுமாறுவதையும் பேச்சை நிறுத்திக் கொள்வதையும், அவர்கள் மறைக்க நினைக்கும் இந்துத்துவச் சார்பை, டாக்ஸியில் இருக்கும் கண்ணாடிப் பிள்ளையார், பிரார்த்தனையை வலியுறுத்திப் பேசி, ஊதுபத்தி காட்டி, போலீசுக்குக் கும்பிடு போடும் இளம்பெண்... போன்றவைகளைக் கவனமாகக் காட்சிப்படுத்தியிருப்பதன் மூலமும் சிறப்பாக அம்பலப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.
ஒரு ஆவணப்பட இயக்குநருக்கு அவசியம் இருக்க வேண்டிய "கருத்துக்களின் சார்பை வெளிக் கொணருதலை' ராகேஷ் சர்மா இதில் முழுமையாகச் செய்திருக்கிறார்.
ஒரு இந்துக் கோயிலில் குண்டைத் தேடியும், தீவிரவாதிகளைச் சுட்டதாகவும் காட்டும் ராணுவ நடவடிக்கைகளைக் காண்பித்து "சான்சூய் டிவி'யின் விளம்பரத்தைக் காண்பித்திருப்பது பொருத்தமான அம்பலப்படுத்துதலோடு கிண்டலாகவும்இருக்கிறது.
படத்திலுள்ள செய்திகள் ஏராளம், ஒரு நூல் எழுதுமளவிற்கு. மந்திரம், வேதம், புனிதம், பக்தி, கடவுள், தியானம், யோகம், ஆன்மீகம், காவி, துறவு, பூஜை, தேசபக்தி, ஸ்ரீராம், காளி, கணபதி... இன்னும் தான் அணிந்திருக்கிற எல்லாவிதமான முகமூடிகளையும் கழற்றி எறிந்துவிட்டு, தான் ஒரு பாசிசம்தான் என முழு அம்மணமாய் குஜராத்தில் நின்றிருக்கிறது இந்துத்துவம். அதற்கு ஆதாரம் இப்படம்.

···

சுகானா, அவரது மகள்கள் ரேஷ்மா, சபானா மூன்று பேரும் வன்புணர்ச்சிக்குள்ளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்படுகின்றனர். பறிகொடுத்த உறவினரின் நேர் காணலுக்குப் பிறகு, அவர்கள் சீரழிக்கப்பட்ட, கொல்லப்பட்ட இடங்களையும், பார்வையிட்ட பிறகு, அத்தொகுதியின் பிஜேபி எம்.பி. பிரபலமான வக்கீல், கோபால்சிங் சோலங்கியிடம் அவரோடு காரில் பயணித்துக் கொண்டே நேர்காணல் துவங்குகிறது:
கே: நீங்கள் வழக்கறிஞராகச் செயல்பட்டு வருகிறீர்கள்.
எம்.பி: ஆம்! நான் முதலில் வக்கீல், அரசியல்வாதி பிறகுதான். அரசியல் என்னோடு கூடவே ஓடிவந்து கொண்டிருக்கிறது.
(கார் வக்கீல் அலுவலகத்திற்கு வந்துவிட்டது. ஏராளமான புகார்தாரர்கள். போலீசும் அமர்ந்திருக்கிறது. கேள்விகளுக்குச் சிலர் பதில் சொல்கிறார்கள்.)
பதில்: ஆம்! அவர் எங்கள் வக்கீல்!
கே: எப்படிப்பட்ட வக்கீல்?
ப: மிகத் திறமைசாலி அவருக்கு எல்லாச் சட்டமும் தெரியும்.
கே: என்ன வழக்கில் நீங்களெல்லாம் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறீர்கள்?
ப: செக்ஷன் 302, 307 அப்புறம் 376.
கே: எதுக்காக?
ப: 376 ரேப்... 302 கொல
இசுலாமியப் பெண்கள் நரவேட்டையாடப்பட்டிருக்கிறார்கள். வேட்டையாடிய இந்து ஓநாய்களின் வக்கீல் பிஜேபியின் பாராளுமன்ற உறுப்பினர். வக்கீல் த எம்பி த கலவரம் த பாலியல் வன்முறை த படுகொலை த வக்கீலிடம் குற்றவாளிகள் கூட்டம் த சிறந்த வக்கீல் த பாலியல் வன்முறை, படுகொலை வழக்குகள் த வெற்றிகரமான வக்கீல் தொழில் த மிகத் துல்லியமாக இந்த வலைப்பின்னலை அம்பலப்படுத்தியிருக்கும் இயக்குநர் பாராட்டப்பட வேண்டியவர்.
ஆவணப்படம் எனும் வடிவத்தில் இச்செய்தியை ராகேஷ் சர்மா வெளிக் கொணரக் கையாண்டிருக்கும் பொருத்தமான தொகுப்பும், உத்தியும், ஆவணப்பட உலகினர் கவனம் கொள்ள வேண்டிய ஒன்று. இந்தப் பொருத்தமும், தொகுப்பும் ராகேஷ் சர்மாவிற்குக் கனகச்சிதமாய் அமைந்ததற்கு, பிரச்சினையின் உண்மையை அவர் தெளிவாகப் புரிந்து கொண்டிருப்பதுதான் அடிப்படை.
குற்றங்களைச் செய்வதற்கான குற்றவாளிகளை உருவாக்கிப் பணமும் சம்பாதிப்பதற்கு, பிஜேபிக்கு பயன்பட்டிருக்கிறது வக்கீல் தொழில். மைக்கேல் மூரின் ""பாரன்ஹீட் 9/11''ஐ நினைவூட்டுகிறது இக்காட்சி. பணம் சம்பாதிக்க புஷ் குடும்பம் துவக்கிய ஈராக் போர். அங்கே அமெரிக்க "அப்பன் புஷ்'; இங்கே பிஜேபி எம்.பி சோலங்கி.
இவ்வளவு குரூரமான கலவரத்திற்குப் பிறகும் பிஜேபி தேர்தலில் எவ்வாறு வெற்றியடைந்தது என்பதைப் படம் தெளிவாக விளக்குகிறது.
சங்பரிவாரக் குரங்குகளால் தாக்கப்பட்ட முசுலீம் பகுதியிலுள்ள ஒரு இந்துவின் வீடு. வீட்டைச் சீர் செய்து கொடுத்திருக்கிறது இசுலாமியக் கமிட்டி — இவற்றையெல்லாம் சொல்லும் அந்தப் பெண்ணிடம், ""யாருக்கு ஓட்டு போடுவீர்கள்?'' எனக் கேட்கப்படும் கேள்விக்கு அவர் சொல்லும் பதில் ""பிஜேபிக்கு.'' காரணம்? பயம்.
""ஏன் மோடிக்கு ஓட்டுப் போடுவேன் என்கிறீர்கள்?'' இதற்கு ஒரு இளைஞனின் பதில், ""அப்பத்தாங்க டென்ஷன் இல்லாமல் இருக்கலாம்.'' டென்ஷன் என்பது பயம்தான்.
பயத்தை விதைத்து தேர்தல் வெற்றியை அவர்கள் அறுவடை செய்திருக்கிறார்கள். முசுலீம்களிடம் மட்டுமல்ல இந்துக்களிடமும் அந்தப் பயம் மிக அதிகமாகவே இருந்திருக்கிறது. இந்தப் பயம்தான் பாசிஸ்டுகளுக்குத் தேர்தலில் வெற்றியைத் தேடித் தந்திருக்கிறது.

···

நாமும் இங்கிருந்தே கற்றுக் கொள்வோம். தேர்தலில் தோல்வியடைய வைப்பதன் மூலம் பாசிஸ்டுகளுக்குப் பாடம் கற்பிக்க முடியாது என்பதைத் தெளிவாக உணர்ந்திருக்கிற நாமும் அதே "பயம்' எனும் ஆயுதத்தையே எடுத்துக் கொள்வோம். பயம் என்பதை ""பயப்பட வைத்தல்'' என்று மாற்றிக் கொள்வோம். தேர்தலில் அல்ல, தெருவில் திருப்பியடிப்போம். மதவெறிக் குரங்குகளைக் கட்டிவைத்து வாலில் தீ வைப்போம். பயம் அறுப்போம். துணிச்சல். துணிச்சல் ஒன்றுதான் வழி. மதவெறியர்களைப் பயப்பட வைக்கும் நடவடிக்கையில் இறங்கும் துணிச்சல் ஒன்றுதான் பாசிஸ்டுகளை ஒழித்துக் கட்டப் பயன்படும் முதல் ஆயுதம் என்பதை இறுதித் தீர்வு (ஊடிணச்டூ குணிடூதtடிணிண) எனும் இந்த ஆவணப்படம் முகத்தில் அறைந்து சொல்கிறது.
ஹிட்லர் தனது இறுதித் தாக்குதலுக்கு வைத்துக் கொண்ட பெயர் இறுதித் தீர்வு. படத்தின் தலைப்பாக இருக்கும் இந்த வார்த்தைகளுக்கு நாம் கொள்ளும் அர்த்தமும் இதுதான்.
குஜராத்திற்குப்பின் தமிழகம்தான் என்கிற கனவைத் தற்காலிகமாகத் தள்ளி வைத்திருக்கிறது காவிக் கும்பல். தேர்தலும் சட்டமன்றமும் பாராளுமன்றமும் பாசிஸ்டுகளை ஒழிக்காது. அவை பாதுகாக்கும், வளர்க்கும். குஜராத்தைவிட வேறு எடுத்துக்காட்டு இனித் தேவையே இல்லை.
இவர்களின் பிரச்சாரத்தையும், நடவடிக்கைகளையும் எதிர்க்கும் துணிச்சலும், நேருக்கு நேர் சந்திக்கும், மோதும் துணிச்சலும்தான், பாசிஸ்டுகளை ஒழிக்கும், அழிக்கும். அதற்குத் தமிழகம் ஓர் எடுத்துக்காட்டு என்பதை புரட்சிகர அமைப்புகள் நிரூபித்தே தீரும்.
· குருசாமி மயில்வாகனன்

3:48 PM, August 23, 2005  
Anonymous Anonymous said...

இந்தியா: அயோத்தி பிரச்சாரம் வகுப்புவாத மோதல் மற்றும் யுத்த மோதல்களின் அபாயத்தை அதிகரிக்கிறது
By Sarath Kumara
12 February 2002

ஆளும் பாரதிய ஜனதாக் கட்சி (ஙியிறி) யுடன் தொடர்புடைய தீவிரவாதக் குழுவான உலக இந்து பேரவை (க்ஷிபிறி) வட இந்திய நகரமான அயோத்தியில் இந்துக் கடவுள் ராமனுக்கு கோயில் கட்டுவதற்கான திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. 1992-ல் இந்து வெறியர்களால் இடிக்கப்பட்ட பாப்ரி மஸ்ஜித் (மசூதி) இருந்த இடத்தில் கோவில் கட்டப் போவதாய் விஸ்வ இந்து பரிஷத் (வி.இ.ப) வலியுறுத்தி வருகிறது. இந்தியாவும் பாக்கிஸ்தானும் பதட்டம் மிக்க வகையில் இராணுவத்தைத் தூர வைத்திருக்கும் நிலையில் இந்தப் பிரச்சாரமானது மத வகுப்புவாத அச்சுறுத்தலைத் தூண்டி வருகிறது.
விஸ்வ இந்து பரிஷத் ஆனது பிஜேபி தலைமையிலான அரசாங்கம் கட்டுமானப் பணிகளை அனுமதிக்க நிலத்தை ஒப்படைப்பதற்கு மார்ச் 12 ஐ காலக்கெடுவாக விதித்திருக்கிறது. அவ் இயக்கமானது தனது கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் அயோத்தியிலிருந்து புதுதில்லிக்கு நடைப் பயணம் மேற்கொண்டது. ஆனால் அது பல ஆயிரம் ஆதரவாளர்களை மட்டுமே ஈர்த்தது. 1992ல் விஸ்வ இந்து பரிஷத் அதனுடைய சகோதரக் குழுக்களான ராஷ்ட்ரிய சுயசேவக் சங்க் (ஆர்.எஸ்.எஸ்) போன்றவற்றுடன் சேர்ந்து பாதுகாப்பு வளையத்தை உடைப்பதற்கு ஆயிரக்கணக்கானோரை அணிதிரட்டி மசூதியை இடித்து அழித்தது.
மசூதி இருந்த இடம், நடைபெற்றுக் கொண்டிருக்கும் சட்டரீதியான சண்டைகளுக்கு ஆளாகி உள்ளது. அதனை உச்ச நீதிமன்றம் அரசாங்கத்தின் கைகளில் அளித்திருக்கிறது. வி.இ.ப, ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஏனைய இந்து பேரினவாத அமைப்புக்கள் சட்ட ரீதியான வழக்கின் விளைவை கிடப்பில் போட்டு, மசூதி இருந்த இடத்தைச்சுற்றி கோவில் கட்ட தங்களை அனுமதிக்குமாறு கோரின. அரசாங்கத்தினதோ அல்லது நீதிமன்றத்தினதோ முடிவைப் பொருட்படுத்தாமல், மார்ச் 15 அளவில், சிற்பக் கற்களையும் தூண்களையும் அப்பகுதிக்கு கொண்டு செல்லப்போவதாக வார முடிவில் வி.இ.ப பேச்சாளர் ஒருவர் அறிவித்தார்.
இப்பிரச்சினையானது மிகவும் பற்றி எரியக் கூடியதாக இருக்கிறது. டிசம்பர் 1992ல் பாபர் மசூதி இடிப்பானது இப்பிராந்தியம் முழுவதும் கலவரத்தைத் தூண்டி விட்டது.1947ல் துணைக் கண்டம் பிரிவினை செய்யப்பட்டதன் பின்னர் ஏற்பட்ட மோசமான வகுப்புவாதக் கலவரத்தில் 3000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், ஆயிரக் கணக்கானோர் காயமடைந்தனர். பம்பாயில், முஸ்லிம் கடைகளும் வீடுகளும் கொள்ளையிடப்பட்டு சூறையாடப்பட்டன, தீ வைத்துக் கொளுத்தலும் இனப்படுகொலைகளும் கிட்டத்தட்ட ஒரு மாதமாக நடைபெற்றன. பதிலுக்கு பங்களாதேஷ் மற்றும் பாக்கிஸ்தானில் முஸ்லீம் தீவிரவாதிகள¢ இந¢துக¢களைத¢ தாக்கினர்.
மொகலாயப் பேரரசர் பாபரின் படைத்தளபதிகளுள் ஒருவரான மீர்பாக்கி 16 ம் நூற்றாண்டில் இந்துக் கோவிலை இடித்துத் தரைமட்டமாக்கி, அங்கு மசூதியைக் கட்டியதாக இந்து அடிப்படைவாதிகள் கூறுகின்றனர். நான்கு நூற்றாண்டுகளுக்குப் பின்னர் மசூதி அழிப்பானது, இந்தியாவில் இந்துத்துவம் மற்றும் இந்துக் கலாச்சாரத்தை நிலைநாட்டவும் "முஸ்லிம் ஆக்கிரமிப்பாளர்களின்" மரபுரிமைச் செல்வங்களை அழிக்கவுமான அவர்களின் பரந்த, முற்றிலும் பிற்போக்குத்தனமான நிகழ்ச்சி நிரலின் பகுதியாகும். ஆர்.எஸ்.எஸ் தலைவர் எஸ். சுதர்சனின்படி, இந்தியாவில் கோடிக்கணக்கான எண்ணிக்கையில் உள்ள முஸ்லிம்கள், "பெரும்பான்மை சமூகத்தின் 'கலாச்சாரத்தை' கட்டாயம் ஏற்க வேண்டும்" என்பதாம்.
பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாயி மற்றும் உள்துறை அமைச்சர் எல்.கே.அத்வானி உட்பட பி.ஜே.பி தலைமையிலான அரசாங்கத்தில் உள்ள முக்கியப் பிரமுகர்கள் ஆர்.எஸ்.எஸ்-ன் நீண்டகால உறுப்பினர்கள் ஆவர். அனைவருமே ஆர்.எஸ்.எஸ் உறுதிமொழியை எடுத்திருக்கின்றனர்: "புன¤தமான எனது இந்து மதம், இந்து கலாச்சாரம், இந்து சமுதாயம் இவற்றின் மேம்பாட்டின் பொருட்டு, எனது புனிதமான தாயகத்தின் முன்னேற்றத்திற்காக என்னையே அர்ப்பணிப்பேன்."
பாபர் மசூதியை இடித்ததில் அத்வானிக்கும் மற்றைய பி.ஜே.பி தலைவர்களுக்கும் உள்ள அவர்களின் நேரடி சம்பந்தத்தின் காரணமாக வழக்குகளை எதிர் கொண்டனர் ஆனால் ஒருவரும் குற்றவாளியாகத் தீர்மானிக்கப்படவில்லை. கடந்த அக்டோபரில் பி.ஜே.பி இளைஞர் அமைப்பின் உறுப்பினர்கள் ஒரு படி மேலே சென்று, மொகலாயப் பேரரசர் ஷாஜஹானால் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தாஜ்மஹாலில் மேற்கவிவாக உள்ளே பதிக்கப்பெற்றிருக்கும் சலவைக் கல்லினை உருச் சிதைத்தனர்.
வாஜ்பாயி அரசாங்கமானது இப்பிரச்சினை தொடர்பாக மிதித்துத் தள்ளி நடையிடுகிறது. பி.ஜே.பி தலைவர்களில் ஒருவர் கூட பாபர் மசூதி அழிப்பில் தங்கள் பங்களிப்பிலிருந்து பின்வாங்கவில்லை. கடந்த ஜூலையில் அத்வானி, மசூதி வளாகத்தைச்சுற்றி இருந்த போலீஸ் அரணை இந்து வெறியர்கள் கும்பல் உடைத்து உள்ளே நுழைந்ததை விவரிக்கும்போது தனது வாழ்வின் "மிக மகிழ்ச்சியான தருணம்" அது என்றார். கடந்த ஆண்டு அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் சட்ட நுட்பம் என்ற அடிப்படையில் அவருக்கு சாதகமான முறையில் கைவிடப்பட்டன.
மேலும் அடுத்த இருவாரங்களில், பி.ஜே.பியானது அதன் கோட்டையான அயோத்தி நகர் அமைந்துள்ள உத்திரப்பிரதேசம் உள்ளடங்கலாக வரிசையாக மாநிலத் தேர்தல்களை எதிர் கொள்ளப் போகிறது. இக்கட்சியானது கடந்த ஆண்டு ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் துடைத்துக் கட்டப்பட்டது, அது மேலும¢ இழப்பைத் தாங¢க முடியாததாக இருக¢க¤றது. இந்தியாவின் மிகப் பெரிய மற்றும் மிக ஏழ்மையான மாநிலங்களுள் ஒன்றான இம்மாநிலத்தில் ஆழமாகி வரும் சமூகப் பிளவினை இருட்டடிப்புச் செய்வதற்கு, இராமர் கோவில் கட்டுவதற்கான விஸ்வ இந்து பரிஷத்தின் பிரச்சாரத்தை உத்திரப் பிரதேசத்தில் உள்ள பி.ஜே.பி தலைவர்கள் தங்களுக்குச் சாதகமாக ஆக்கிக் கொள்வதில் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை.
அரசாங்க எதிர்ப்பு
ஆயினும், அதேநேரத்தில், வாஜ்பாயி விஸ்வ இந்து பரிஷத்தின் கோரிக்கைகளுக்கு இதுவரை உடன்படவில்லை. அவர்களின் மார்ச் 12 இறுதிக்கெடுவுக்கு முன்னர் "தீர்வு" காணப்படும் என்று வி.இ.ப தலைவர்களுக்கு உறுதி அளிக்கவில்லை என்று மறுத்தார். அவர் அவர்களை சட்ட விதியை மதிக்குமாறும் நீதிமன்றங்களை அவமதிக்கும் எந்த முயற்சியும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை உண்டு பண்ணும் என்றும் எச்சரித்தார். அவர் கடும் போக்கினரான அத்வானியால் ஆதரிக்கப்பட்டார். அத்வானி வி.இ.ப.வை பிரதமரின் அறிவுரையைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொண்டார்.
அயோத்திப் பிரச்சினையை வெளிப்படையாகத் திணிப்பதற்கு பி.ஜே.பி-ன் வெளிப்படையான தயக்கத்திற்கு பல காரணங்கள் இருக்கின்றன. பாராளுமன்றத்தில் கட்சி பெரும்பான்மையைக் கொண்டிருக்கவில்லை மற்றும் அது 1998ல் பல சிறிய, பிராந்திய அடிப்படையிலான கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்தது. தேசிய ஜனநாயகக் கூட்டணியை (ழிஞிகி) அமைப்பதற்கு, அதன் கூட்டணிக் கட்சிகள் முஸ்லிம் வாக்குகளை இழப்பது பற்றி கவலைப்படுவதால், பி.ஜே.பி ராமர் கோவிலைக் கட்டுவது உட்பட அதன் இந்து வகுப்புவாத நிகழ்ச்சி நிரலைத் தள்ளி வைக்க வேண்டி வந்தது.
மிகவும் அடிப்படையில் இந்திய ஆளும் வர்க்கத்தின் பகுதிகள் 1990களில் நடைமுறைப்படுத்தப்பட்ட கொருளாதார மறுசீரமைப்பு திட்டத்தால் உண்டு பண்ணப்பட்ட வளர்ந்து வரும் சமூக துருவமுனைப்படுத்தலில் இருந்து திசை திருப்புவதற்கான சாதனங்களாக பி.ஜே.பி மற்றும் அதன் இந்து அடிப்படைவாத நிகழ்ச்சிநிரலை ஆதரிக்கின்றது. இருந்தும் பரந்த அளவில் வெடித்து எழும் எந்த வகுப்புவாத வன்முறையும் தனியார்மயமாக்கல் மற்றும் சமூக செலவினங்களை வெட்டல் ஆகியவற்றை கீழறுக்கக்கூடும் மற்றும் அந்நிய மூலதனப் பாய்வைத் தடுத்துவிடும் .
அதன் விளைவாக, பிரதான இந்திய செய்தித்தாள்களில் உள்ள தலையங்கங்கள் வி.இ.பவுக்கு எதிராக வாஜ்பாயி கடும் நிலைப்பாட்டை மேற்கொள்ளுமாறு வற்புறுத்திக் கேட்டுக் கொண்டன. எடுத்துக் காட்டாக, இந்துஸ்தான் டைம்ஸ் குறிப்பிட்டது: "முழு இந்து சமுதாயத்திற்குமாக பேசுவதாக தவறாகக் கூறிக் கொள்ளும் ஒரு இயக்கம் அதன் ஆத்திரமூட்டும் நிலைகளால் நாட்டைப் பணயம் வைப்பதற்கு அனுமதிப்பது வருந்தத்தக்க விஷயமாகும். அவர்களது தலைவர்கள் பேசிய சில பேச்சுக்கள், குறிப்பிட்ட மதக் குழுவை இழிவுபடுத்துகிறது என்பதற்காக என்று கூட குறிப்பிடத் தேவையில்லை, சாதாரண நாகரிக விதிமுறைகளை மீறுகிறது என்பதற்காக அவர்களை நேராக சிறைக்கு அறுப்பி இருக்க வேண்டும்."
இந்தியன் எக்ஸ்பிரஸ் கூட வி.இ.ப மீது கடும் வார்த்தைகளைப் பயன்படுத்தியது: "அடிப்படையில், அயோத்தி சர்ச்சை தொடர்பான தீர்வு சம்பந்தமான நிகழ்ச்சிப்போக்கு, ஏற்கனவே நடைமுறையில் இயங்கிக் கொண்டு இருக்குமானால், அதன் சொந்த நடைவேகத்தில் செல்லட்டும். அது ஒரு குண்டர்கள் கும்பலின், வேகமாகத் தரங்கெடுக்கும், சமுதாயத்திற்கு கேடுபயக்கும் விஷயத்தால் இடையூறுக்கு ஆளாகுவதை அதுவே அனுமதிக்காது."
செப்டம்பர் 11க்குப் பிறகு, வாஜ்பாயியின் கணக்கீடுகளில் இன்னொரு காரணியும் நுழைந்திருக்கிறது. ஆயுதம் ஏந்திய காஷ்மீரி பிரிவினைவாதக் குழுக்களை பாக்கிஸ்தான் கடிவாளமிட்டு அடக்க வேண்டும் என்ற இந்தியக் கோரிக்கைகளை கடுமையாய் அழுத்தம் கொடுப்பதற்கு அவர் புஷ் நிர்வாகத்தின் "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்" என்பதை சுரண்டிக் கொண்டார். டிசம்பர் 13 பாராளுமன்றத்தின் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, புதுதில்லி இஸ்லாமாபாத் மீது வரிசையாய் கோரிக்கைகளை வைத்தது மற்றும் அவை நிறைவேற்றப்படாவிட்டால் விவரிக்காத இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அச்சுறுத்தியது.
இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மீது நடவடிக்கை எடுக்காததற்காக பாக்கிஸ்தானைக் கண்டிக்கும் வாஜ்பாயியின் திறனானது, எவ்வாறாயினும், அவரது அரசாங்கம் வி.இ.பவுடனும் அதன் ஆத்திரமூட்டும் வகுப்புவாதப் பிரச்சாரத்துடனும் மிக நெருக்கமாக இனங்காணப்படுமானால் சமரசப்படுத்தப்பட்டு விடும். மேலும், பி.ஜே.பி தலைமையிலான அரசாங்கமானது இந்து தீவிரவாத நலனை வெளிப்படையாக முன்னெடுத்தால், அது அமெரிக்காவுடனான இந்தியாவின் அபிவிருத்தி அடைந்துவரும் பிணைப்பை சீர்குலைத்து விடும். புஷ் நிர்வாகமானது அதன் இந்தியக் கூட்டாளிகளின் அடிப்படைவாத நிகழ்ச்சிநிரல் மீது தான் கடைப்பிடிக்கும் அமைதியை உடைப்பதற்கு நிர்ப்பந்திக்கப்படும்.
காங்கிரஸ் மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி-மார்க்சிஸ்ட் (சி.பி.ஐ (எம்) ) உள்ளடங்கலான பிரதான இந்திய எதிர்க்கட்சிகள் வி.இ.ப பிரச்சாரம் தொடர்பாக பயந்து ஒதுங்கும் சிறு எதிர்ப்புக்களை செய்துள்ளன. காங்கிரஸ் தலைவர் முன்சிங் "வி.இ.ப நெருப்போடு விளையாடுகிறது" என்று எச்சரித்தார். சி.பி.ஐ (எம்) அரசியற் குழு கடந்த மாதம் பின்வருமாறு கூறியது: "அயோத்தி, லக்னௌ மற்றும் கான்பூரில் பேசிய பேச்சுக்கள் சிறுபான்மையினருக்கு எதிராக உணர்ச்சியைக் கிளறிவிடக்கூடிய வெற்று ஆரவாரப் பேச்சாக இருந்தன." சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் வி.இ.ப வைத் தடை செய்யுமாறு கோரினார்.
மதச்சார்பின்மையைப் பாதுகாப்பதாக அவர்களது எல்லாவிதமான கூற்றுக்ளையும் பொறுத்த மட்டில், இக்கட்சிகள் வகுப்புவாத உணர்வுடன் சாகசம் புரிய, அதற்கு வேண்டுகோள் விடுக்க மற்றும் நேரத்தில் அதனைத் தட்டி எழுப்ப தயங்குவதில்லை. ஒரு ஆண்டுக்கு முன்னர்தான், படுகொலை செய்யப்பட்ட பிரதமர் ராஜிவ் காந்தியின் விதவையும் தற்போதைய காங்கிரஸ் தலைவருமான இத்தாலியில் பிறந்த சோனியா காந்தி, கும்பமேளா மதவிழாவின்போது கங்கையில் குளித்ததன் மூலம் தனது இந்து நற்சான்றுகளை நிரூபித்தார். முன்னாள் சி.பி.ஐ (எம்) தலைவரும் மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சருமான ஜோதிபாசு காங்கிரஸ் எதிர்ப்பு கூட்டு பிரச்சாரத்தில் வாஜ்பாயியுடன் மேடையைப் பகிர்ந்திருக்கிறார்.
விஸ்வ இந்து பரிஷத்தைப் பொறுத்தவரை, அதன் பிரச்சாரம் வகுப்புவாதப் பதட்டங்களைக் கிளறி விடும் மற்றும் பாக்கிஸ்தானுடனான யுத்த அபாயத்தைக் கூட்டும் உள்ளுறையைக் கொண்டிருக்கிறது என்பதை நன்கு அறிந்துள்ளது. அதன் தலைவர்கள் வாஜ்பாயியை இன்னும் கூடிய கடும் நிலைப்பாட்டை மேற்கொள்ளவேண்டும் என்று ஆரவாரித்து வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள். இராமர் கோவிலைக் கட்டுவதை நிறுத்துமாறு கேட்கத் தயாராக இருக்கும் ஒரே சூழ்நிலை இந்திய இராணுவம், பாக்கிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரைத்தாக்கினால்தான் என்பதை அவர்கள் குறி காட்டி இருக்கின்றனர். அந்நடவடிக்கை பெரும்பாலும் நிச்சயமாக இரு ஆணு ஆயுத அரசுகளுக்கு இடையில் யுத்தத்தைத் தூண்டிவிடும்.

5:28 PM, August 23, 2005  
Anonymous Anonymous said...

ஆர்.எஸ்.எஸ். என்றால் என்ன?

அதன் 70 வருடத்திற்கும் மேலான வாழ்வில்ஆர்.எஸ்.எஸ். வகுப்புவாத கலவரங்கள்மற்றும் கடுமையான கம்யூனிச விரோதம்ஆகியவற்றுடன் தொடர்புடையதாகஇருந்து வருகிறது. இந்த அமைப்பு 1925-ல்நிறுவப்பட்டது. அது நாக்பூரில் உள்ள இந்துக்களை பாதுகாப்பதற்கு என்று அப்போதுகூறப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரானமுதலாவது வெகுஜன அணி திரட்டல் (1920-1922ஒத்துழையாமை இயக்கம்) வீழ்ச்சி கண்டபின்னர், வகுப்புவாத கலவரத்தால்பீடிக்கப்பட்ட பல இந்திய நகரங்களுள்நாக்பூரும் ஒன்றாக இருந்தது. இரண்டுவருடங்களுக்குப் பின்னர் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் உள்ளூர் இந்து மேல்தட்டினரின் விருப்பப்படி,அரசாங்க வேலைகளில் முஸ்லீம்கள் விகிதாசாரமற்ற பங்கினை கொண்டிருக்கின்றனர் என்றுகுற்றம்சாட்டி முஸ்லீம்களின் ஒரு ஊர்வலத்தைவிரட்டியடிக்க லத்தியை [குண்டாந்தடி]பயன்படுத்த பயிற்றுவிக்கப்பட்டிருந்தனர்.

இன்றுவரையில் சுமார் 40 ஆயிரம் ஆர்.எஸ்.எஸ்இன் க்ஷக்ஹாஸ்களில் [ஆச்சிரமங்களில்] மிக இளவயதினரை தினசரி தற்காப்பு பயிற்சிகளில் ஈடுபடுத்தப்படுவதுடன், மற்றும் அவர்கள் ஆர்.எஸ்.எஸ் இன்மேல்அதிகாரிகளுக்கு முழுமையாக கீழ்பணியும்படிகற்பிக்கப்படுகிறார்கள். ஆர்.எஸ்.எஸ். அதனுடையஉறுப்பினர் எண்ணிக்கையை வெளியிடமறுக்கின்றது.ஆனால் அந்த ஷஹாக்காஸ்களில் பல லட்சக்கணக்கானவர்கள் பங்கெடுப்பதாக தெரிகிறது.ஆர்.எஸ்.எஸ். ஒரு விரிவான வலைப்பின்னலைக்கொண்ட இணைக்கப்பட்ட அமைப்புகளைமாணவர்கள், தொழிலாளர்கள், பெண்கள்மற்றும் மதசீடர்களுக்காக கட்டியுள்ளது.அவை உறுப்பினர்களை அணிதிரட்டுவதிலும், அவர்களுடைய உறுப்பினர்களின் சமூகபொருளாதார கஷ்டங்களையும் பரந்தளவில்கவனத்திற்க்கு எடுத்துக்கொள்கிறது.

அதனுடைய தோற்றத்திலிருந்து இன்றுவரையிலும்ஆர்.எஸ்.எஸ்.-ன் சமூக உள் அமைப்பு பெரும்பான்மையாக நகர்ப்புற குட்டி முதலாளித்துவசேர்க்கையான மாணவர்கள், சிறிய வியாபாரிகள், அரசு ஊழியர்கள் மற்றும் அலுவலக எழுத்தாளர்கள், மேலாளர்களை கொண்டதாகஇருக்கின்றது. பி.ஜே.பி.-யுடன் சேர்ந்துஅது ஒரு தொழிற்சங்கப் பிரிவை 1950ல் உருவாக்கியது. ஆனால் அது 1980கள் வரை ஒரு சிறிய அலகாகவேஇருந்துவந்தது. இன்று பாரதீய மஸ்தூர்சங்கம் பெருமளவில் உடலுழைப்பற்றதொழிலாளர்களை[உத்தியோகத்தர்களை]கொண்ட 30 லட்சத்திற்கு அதிகமான உறுப்பினர்களை கொண்டிருப்பதாக கூறுகின்றது. ஆர்.எஸ்.எஸ்.-ன்நகர்ப்புற குட்டி முதலாளித்துவத்தன்மைநாட்டுப்புறத்தில் அதன் சார்பு ரீதியானபலவீனத்தில் கோடிட்டுக் காட்டப்படுகின்றது.இந்திய ஜனத்தொகையில் 2/3ல் பகுதியினர்கிராமங்களில் இருந்தபொழுதிலும் அங்கேகுறிப்பிடக் கூடிய ஆர்.எஸ்.எஸ். உடன் தொடர்புடைய விவசாய அமைப்பு கிடையாது.



ஆர்.எஸ்.எஸ்.-ம் இந்து ராஜ்யமும்

ஆர்.எஸ்.எஸ். முதல் முதலாக இந்திய துணைக்கண்டத்தின் 1947 பிரிவினையின்போது எழுந்தபயங்கரமான வகுப்புவாத வன்முறையின்போது ஒரு வெகுஜன அமைப்பாக தோன்றியது.1948 ஜனவரியில் காந்தியை கொலை செய்தஎன்.வி.கோட்சே ஒரு முன்னைய ஆர்.எஸ்.எஸ்.காரியாளனும் ஒரு கடுமையான இந்துதேச¤யவாத¤யுமாவான். கொலைநடப்பதற்கு ஒரு சில மாதங்களுக்குமுன்னர் ஆர்.எஸ்.எஸ். காந்தியை முஸ்லீம்களைபாதுகாக்க பரிந்துபேச முற்படுகிறார்என்று கூறி தொடர்ந்து இழிவுபடுத்தியது.

காந்தியின் கொலையை தொடர்ந்துஆர்.எஸ்.எஸ். சுமார் இரண்டு வருடங்கள்தடை செய்யப்பட்டது. அந்த அமைப்புஎப்பொழுதுமே காந்தி கொலையுடன்எந்த தொடர்பும் இல்லை என்று கடுமையாகமறுத்து வந்தபோதும், அது கோட்சேமீதுள்ள அதன் அனுதாபத்தை மறைக்கமுடியாமல் கஷ்டப்பட்டது. தற்போதையஆர்.எஸ்.எஸ். தலைவர் ராஜேந்திர சிங்கின்வார்த்தைகளின்படி கோட்சேயின் ''நோக்கம்நல்லதாக இருந்தது ஆனால் தவறானவழிமுறையை பயன்படுத்தினார்''.

ஆர்.எஸ்.எஸ்.-ன்சித்தாந்தமான இந்து ராஜ்யம் - அதாவதுஇந்தியா இந்துக்களின் தேசம் மற்றும்இந்துக்கள் தான் தேசத்தை உள்ளடக்கியவர்களாக இருக்கிறார்கள் என்பது - காங்கிரஸ்கட்சியின் தலைமையினால் விரிவாக்கப்பட்டஅனைத்து இந்தியர்களும் அவர்களதுமதம், இனக்குழு அல்லது ஜாதி எதுவாகஇருந்தபொழுதிலும் அவர்கள் சமமானஉரிமைகளை கொண்ட குடிமக்கள் என்ற மிதவாத ஜனநாயக வேலைத்திட்டத்திற்குஎதிராக அபிவிருத்தி செய்யப்பட்டது.

பலசமயங்களில் ஆர்.எஸ்.எஸ்.-ம் அதனுடன்தொடர்புடைய அமைப்புகளும் குறிப்பாகபி.ஜே.பி. இந்து பற்றிய மாறுபட்ட அர்த்தங்களைசுட்டிக்காட்டி அவர்களது வகுப்பு வாதத்திற்குபோர்வை போர்த்த முயற்சிக்கின்றார்கள்.(இந்து என்பது இந்தியன் என்பதுடன் தொடர்பற்ற ஒரு சொல்லாகும்- அது தொடக்கத்தில்சிந்து நதியின் கிழக்கு பகுதிகளில் வாழ்ந்த அனைவரையும் குறிப்பதாக இருந்தது) ஆனால் இந்துராஜ்யத்தின் பிரதான சித்தாந்தவாதிகளானஆர்.எஸ்.எஸ்.இன் தலைவர் எம்.எஸ்.கோல்வால்க்கர் மற்றும் பி.டி.சர்வாக்கர் (அதே சிந்தனையுடைய வகுப்புவாத அரசியல் கட்சியான இந்துமகாசபையின் தலைவர்) ஆகியோர் அவர்களதுஎழுத்துக்களிலும் சொற்பொழிவுகளிலும்முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் இந்து தேசத்தில்அன்னிய குழுக்களாவர் எனவும், பெரும்பான்மையினர் சகித்து கொள்ளும் அளவிற்க்கே அவர்கள்உரிமைகளை அனுபவிக்க முடியும் என்பதைதெளிவாக்கியுள்ளார்கள்.

கோல்வால்கர்மற்றும் சர்வாக்கர் இருவருமே நாஜிஜேர்மனியிலிருந்து நேரடியாக புத்துணர்ச்சியைபெற்றுக் கொள்கின்றனர். கோல்வால்கர்எழுதுகிறார், ''வேருக்குள் செல்லக்கூடியவேறுபாடுகளைக் கொண்ட இனங்கள்மற்றும் கலாச்சாரங்கள் ஒரு ஐக்கியப்பட்டமுழுமைக்குள் உள் சேர்க்கப்படுவதுசாத்தியமற்ற ஒன்றாகும்''என்பதைஜேர்மனி காட்டுகின்றது - இது இந்துஸ்தானில்நாம் கற்றுக் கொள்வதற்கும் பலன்பெறுவதற்குமான ஒரு நல்ல பாடமாகும்.

இந்திய பிரதமர் அடல் வாஜ்பாயியும் உள்நாட்டுஅமைச்சர் அத்வானியும் அவர்களதுசகாவான சிவசேனா தலைவர் பால்தக்கரேபோலன்றி ஹ¤ட்லரை பாராட்டுவதிலிருந்துவிலகி நிற்கின்றனர். அவர்கள் இந்தியாவில் உள்ள12 கோடி முஸ்லீம்கள் அவர்களாகவேதேசியமயப்படுத்திக் கொள்ளவேண்டும்என்று வலியுறுத்துகின்றனர்.

ஆர்.எஸ்.எஸ்.-பி.ஜே.பி. ஒரு மெல்லிதான முதலாளித்துவஎதிர்ப்பு தன்மையை கொண்டிருக்கின்றன.அவர்கள் முதலாளித்துவ அல்லது மேற்கத்தையசமூகத்தை அதன் தனிநபர்வாதத்திற்காகவும்,கூட்டுணர்வின் சிதைவு குறித்தும் கண்டனம்செய்கின்றனர். ஆனால் அவர்கள் தனிச்சொத்துடைமையையும், லாபஅமைப்பையும்உயர்த்திப்பிடிக்கின்றனர்.

ஆர்.எஸ்.எஸ். எப்பொழுதுமே தன்னை ஒரு அரசியல் அமைப்பாகஅல்லாமல் கலாச்சார தேசிய இயக்கமாகவே விவரித்துள்ளது. இது சக்தி வாய்ந்த அரசியல்எதிர்ப்பாளர்களுடன் நேரிடை மோதலிலிருந்துதவிப்பதற்கான வார்த்தை பிரயோகமாகும்.பாரம்பரிய முதலாளித்துவ அரசியல் மற்றும்வர்க்கப் போராட்டம் இரண்டுக்கும்மேலாக ஒரு ''தேசிய'' நலன் இருப்பதாககூறி அரசியல் இழிவுப்படுத்துவது ஆர்.எஸ்.எஸ்.இன் மறைமுகமான பாசிச சிந்தாந்தத்தின்மையமாக உள்ளது. மேலும் ஆர்.எஸ்.எஸ்.எதேச்சதிகார பாணியில் தன்னை இந்துதேசத்தின் கருவாக கருதுகின்றது.

ஜனநாயம்என்பது தேசத்தின் அமைதியை மற்றும்நல்லிணக்கத்தை இடையூறு செய்வதற்கும்சமூக மோதலை ஊக்குவிப்பதற்காகவும்தான் இருக்கிறது என்று கூறி கோல்வால்கர்அதனை ஏளனம் செய்கிறார். அதே சமயம்ஜாதி அமைப்பின் மிக அருவருப்பான தன்மைகள்களையப்படுமாயின், அது ஒரு கூட்டானசமூகத்தை உருவாக்குவதற்கான மாதிரியாகும்என்று அதனை பாராட்டுகின்றார். இதேவேளை ஆர்.எஸ்.எஸ். மற்றும் பி.ஜே.பி.-யின் அரசியலானதுஜனநாயகம் மற்றும் இந்திய அரசியலமைப்புக்கு ஆதரவானது என்பதை அதன் தலைமைஅவ்வப்போது உறுதிசெய்தது.

எவ்வாறாயினும் அயோத்திக்கான அணித்திரட்டலானதுஇந்திய குடியரசின் முதலாளித்துவ ஜனநாயகஅமைப்புகளுக்கு ஆர்.எஸ்.எஸ்.-இன் அர்ப்பணம்பற்றிய அளவீடாக எடுக்கப்படவேண்டும்.அத்வானியும் உத்திரப்பிரதேசத்தில் பி.ஜே.பி.முதல்அமைச்சரும் மசூதி மீது கைவைக்கப்படமாட்டாது என்கிற வாக்குறுதிகளை இந்தியஉச்ச நீதிமன்றத்திற்கு வழங்கிய போதிலும்அந்த பிரமாண்டமான ஆத்திரமூட்டல்ஒரு வகுப்புவாத படுகொலையில் முடிவடைந்தது.

ஆர்.எஸ்.எஸ்.-யின் ஜனநாயக விரோதநெறிமுறைகள் அதன் இனவாத சித்தாந்தத்தில்மட்டுமல்லாமல் அதன் அமைப்பு வழிமுறைகளிலும் கூட வெளிப்படுகின்றது. அந்த அமைப்புயாவருக்கும் மேலான ஒரு தலைவரினால்(சர்சங்சலாக்) தலைமை தாங்கப்படுகிறது.அவர் அவருடைய முன்னோடியானவரால்வாழ்நாள் முழுவதற்குமாக நியமிக்கப்படுகிறார். மற்றய தலைமைப்பதவிகளும் நியமனம்மூலமாக தீர்மானிக்கப்படுகின்றன.

அதேசமயம் ஆர்.எஸ்.எஸ்.-இன் வன்முறை பிரதானமாகமுஸ்லீம்கள் மற்றும் முன்னைய தீண்டத்தகாதவர்கள் மீது குறிவைக்கப்பட்டிருந்தாலும் வெறித்தனமான கம்யூனிச எதிர்ப்புவாதம் அதன் சிந்தாத்தின்மையமாக இருந்து வந்துள்ளது. 1948ல் ஆர்.எஸ்.எஸ்.-ன் மீது விதிக்கப்பட்ட தடையைநீக்கும்படி அப்போதைய இந்திய பிரதமர்ஜவஹர்லால் நேருவிடம் விண்ணப்பித்த கோல்வால்கர் எழுதியதாவது ''ஆர்.எஸ்.எஸ். கலைக்கப்பட்டிருக்கின்றது, விவேகமான இளைஞர்கள் வேகமாககம்யூனிசத்தின் பொறிகளுக்குள் வீழ்கின்றார்கள், இதனை சக்திவாய்ந்த முறையில் கட்டுப்படுத்தக்கூடிய ஒன்றான ஆர்.எஸ்.எஸ். அங்கே இல்லை''.



இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் ஆர்.எஸ்.எஸ்.

இந்திய தேசிய காங்கிரஸின்(இ.தே.கா) பிரதான தலைவர்களானகாந்தியும் நேருவும் பொதுவாக மதசோவனிசத்தையும் முக்கியமாக ஆர்.எஸ்.எஸ்ஐயும் கடுமையாக எதிர்த்தார்கள்.குறிப்பாக 1930களில் நேரு வகுப்புவாதம்பாசிசத்தின் ஒரு வடிவம் என்று ஆய்வுசெய்தார். காந்தி ''ஆர்.எஸ்.எஸ். சர்வாதிகாரகண்ணோட்டம் கொண்ட ஒரு வகுப்புவாதஅமைப்பு'' என்று அதனை வரையறைசெய்தார்.

எவ்வாறுஇருந்தபொழுதிலும்இ.தே.கா. வகுப்புவாதத்தை எதிர்த்துபோராட திராணியற்றது என்று நிரூபித்து,அது இறுதியில் இந்திய பிரிவினைக்கு ஒத்துழைத்தது.காந்தி வெகுஜனங்களுக்கான அவரதுஅழைப்புகளில் இந்துவாசகங்களை பயன்படுத்தினார். நேரு பிரிட்டிஷ்சாரால் உருவாக்கப்பட்டஅரசு இயந்திரத்தினை எடுத்துக்கொள்வதன்மூலமாக மேல் இருந்து இந்தியாவைஒன்றுபடுத்த தேர்ந்தெடுத்தார். அவர்கள்இருவருமே தொழிலாளர் விவசாயிகளின்வர்க்க நலன்களின் அடித்தளத்தில் அதாவதுஇந்து முஸ்லீம் மற்றும் கிறிஸ்துவ மக்களை அவர்களதுநிலப்பிரபுத்துவ மற்றும் முதலாளித்துவஒடுக்குமுறையாளர்களுக்கு எதிரானபோராட்டத்தில் ஒன்றுபடுத்துவதற்க்குவேண்டுகோள் விடுவதன் மூலமாக கீழிருந்துஇந்தியாவை ஒன்றுபடுத்தும் போராட்டத்தின்பின்விளைவுகள் பற்றி அஞ்சினார்கள்.

சுதந்திரத்திற்குப் பின்னர் இந்து மகாசபையின் முன்னையதலைவர்களில் ஒருவரான எஸ்.பி.முக்கர்ஜிகாங்கிரஸ் ஆதிக்கம் செலுத்தும் அமைச்சரவைக்குள் வரும்படி வரவேற்க்கப்பட்டார்.காங்கிரசின் தலைவரும் தீவிரமான கம்யூனிசஎதிர்ப்பாளருமான நேருவின் உள்நாட்டுஅமைச்சர் வல்லபாய் பட்டேல் காங்கிரச¤னுள் ஆர்.எஸ்.எஸ்.-ஐ கொண்டுவர சதிசெய்தார்.எவ்வாறாயினும் காந்தியின் கொலை பட்டேலின்திட்டங்களை வெட்டியது. மற்றும் இதுநேருவிற்க்கு ஆளும் வர்க்க அரசியலின்பிரதான நீரோட்டத்திலிருந்து ஆர்.எஸ்.எஸ்.-ஐ தனிமைபடுத்த உதவியது.



ஆர்.எஸ்.எஸ்.-ன்மறுமலர்ச்சியும் தொழிலாள வர்க்கத்தின்முன்னுள்ள பணிகளும்

ஆர்.எஸ்.எஸ். ஒருசக்திவாய்ந்த அரசியல் சக்தியாக தோற்றம்எடுத்திருப்பது, இந்தியாவின் நிலப்பிரப்புத்துவபாரம்பரியத்தையும் காலனித்துவ கடந்தகாலத்தையும் வெற்றிகண்டு அதன் பல்வேறுமக்களை உண்மையான ஜனநாயகரீதியாகஐக்கியப்படுத்த இந்திய முதலாளித்துவம்இயல்பாகவே திராணியற்றது என்பதற்கானசாசனமாக திகழ்கின்றது. உண்மையில் இந்தியக்குடியரசின் வரலாறானது வளர்ச்சியடையும்சமூக சமத்துவமின்மை, வகுப்புவாதஅரசியலின் தொடர்ச்சியான அதிகரிப்பும்,ஜாதிமயமாகுதல் மற்றும் பிராந்தியமயமாகும்குணாம்சத்தை கொண்டதாக இருந்துவந்துள்ளது. தற்போது நிலவும் பெரும் வேலையின்மை,வறுமை, நோய், கல்வியின்மை போன்றவற்றிற்குஒரு முற்போக்கான தீர்வை வழங்கமுடியாதமுதலாளித்துவம் மக்களுடைய வெறுப்புகளைஒரு பிற்போக்கான திசையில் திருப்புவதற்கானஒரு வழியாக மிகவும் பின்னோக்கிச் செல்லும்சித்தாந்தங்களை முன்வைக்கிறது.

பி.ஜே.பி.ஆர்.எஸ்.எஸ்.-இன் தோற்றமானது, இந்தியமுதலாளித்துவம் 1991 வரையில் அடிப்படையாககொண்டிருந்த தேசியவாத பொருளாதாரமூலோபாயத்தின் வீழ்ச்சி மற்றும் அந்தமூலோபாயத்துடன் தொடர்புடையதாகஇருந்த காங்கிரசை மையமாகக் கொண்டஅரசியல் அமைப்பின் வீழ்ச்சியினதும் மற்றும்பரந்தளவிலான சுதந்திரமான தொழிலாளவர்க்க மாற்றீடு இல்லாமையினாலும் உருவாக்கப்பட்ட கூர்மையான நெருக்கடியின் விளைவாகும்.வரலாற்று ரீதியாக இந்திய தொழிலாளவர்க்கம் ஆசியாவில் மிகவும் போர்குணம்மிக்கவைகளில் ஒன்றாகும். அதன் தற்போதையசெயல் இழந்த நிலைமைக்கு தொழிலாளவர்க்கத்தை முற்போக்கான முதலாளித்துவபிரிவுகள் என்று அழைக்கப்படுவனவற்றுக்குதிட்டமிட்டவகையில் கீழ்ப்படியச் செய்தஸ்ராலினிசக் கட்சிகளின் காட்டிக் கொடுப்புகளின்விளைவாகும்.

1980களின் பிற்பாதியில் பி.ஜே.பி.யானதுஅதன் முதலாளித்துவ போட்டியாளர்கள்வகுப்புவாதம் மற்றும் ஜாதியை அடிப்படையாகக் கொண்ட அரசியல் பக்கம் திரும்பியதைநன்றாக பயன்படுத்தக் கூடியதாகஇருந்தது. அது இறக்குமதி கட்டுப்பாடுகள்தளர்த்துவது மற்றும் மேற்கத்திய நுகர்வுப்பொருள்களுக்கு அதிகப்படியாக திறந்துவிடுவதுபோன்ற மத்தியதர வர்க்கப் பிரிவுகளின்கோரிக்கைக்கு குரல் கொடுப்ப தன்மூலமாக கணிசமான அளவு ஆதரவையும்வென்றெடுத்தது. அதே சமயம் ஆர்.எஸ்.எஸ்.பொதுச்சேவைகள் சரியான முறையில்இல்லாதததை பயன்படுத்தி அதனுடையசெல்வாக்கை பாடசாலைகள் மற்றும்சமூக சேவை அமைப்புகளின் வலைப்பின்னல்ஊடாக விரிவுபடுத்தியது.

1991க்குப் பின்னர்இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதுமற்றும் உலக முதலாளித்துவ சந்தையைநோக்கி மிகவும் வெளிப்படையாகவும்நேரிடையாகவும் இந்தியப் பொருளாதாரம்மறுசீரமைப்பு செய்யப்பட்டது ஆகியவைஇந்திய குட்டி முதலாளித்துவத்தின் மத்தியில்முரண்பட்ட தாக்கங்களை உருவாக்கின.அது மேலும் சலுகைகளுக்கான விருப்பத்தைதூண்டியதுடன், அதே சமயம் பொருளாதாரமாற்றத்தின் வேகம் மற்றும் திசை பற்றியஅதன் ஆர்வத்தையும் அதிகப்படுத்தியதுடன்அதனுடைய மேற்கத்திய சகபாடிகள்தொடர்பாக அதற்கு இருந்த தாழ்வுமனப்பான்மையையும் அதிகப்படுத்தியது.

இந்திய குட்டி முதலாளித்துவம் அதன் எதிர்காலம்பற்றி ஆர்வம் உடையதாகவும் அதன்தற்போதைய நிமைமைபற்றி தளர்வுற்றும்இருக்கையில், வல்லமை கொண்ட இந்துஎன்ற கடந்தகால கட்டுக்கதையில்ஆறுதல் அடைகின்றது. ஆர்.எஸ்.எஸ்.-னால்ஊக்குவிக்கப்பட்ட புத்திஜீவிகள் அநேகமாகஅனைத்து நவீன கண்டுப்பிடிப்புகளும் வேதங்களில்முற்கூட்டியேகூறப்பட்டுள்ளது என்றுவாதிடுகின்றனர். மற்றும் சிறுபான்மையினர்,முன்பு தீண்டத்தகாதவர்கள் என்றழைக்கப்படுவோர் மற்றும் உழைப்பவர்களுக்கு எதிராகதாக்குதல் நடத்துவதிலும் ஆறுதல் பெறுகின்றனர். இந்து ராஜ்யமானது கவலைப்படுகின்றகுட்டி முதலாளித்துவ தட்டுகளுக்கு ஒருதீவிரமான ஆனால் ஒரு ஒழுங்கான மாற்றத்தைஅதாவது அது இந்தியாவை ஏகாதிபத்தியத்தின்ஆதிக்கத்திற்கு கீழ்ப்படுத்தாமல் மேற்கின்அனைத்து நுகர்வுப்பொருட்களும் அவர்களுக்கு கிடைக்கும்படி செய்யப் போவதாகபிரமையை வழங்குகின்றது.



கடுமையான நெருக்கடியில் உள்ள அரசாங்கம்

பி.ஜே.பி. தலமையிலான அரசாங்கம் ஒருகடுமையான நெருக்கடியில் உள்ள ஆட்சியாகும்.பாரளுமன்றத்தில் அதன் பெரும்பான்மைதாள் போன்று மெல்லியதாகும். அதுபல்வேறு மாநில அரசாங்கங்களைகலைப்பதற்கு அரசியல் அமைப்பின் அவசரசட்டங்களை பயன்படுத்தும்படி மத்தியஅரசாங்கத்திடம் கிளர்ச்சி செய்யும் கட்சிகளில்தங்கியிருக்கின்றது. மேலும் ஆசிய பொருளாதாரநெருக்கடியானது இந்திய பொருளாதாரத்தின்மீது அதிகப்படியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பி.ஜே.பி. தலைமையிலான கூட்டணி அரசாங்கம் மூன்று மாதங்களே பதவியில் இருக்கையில்பி.ஜே.பி மற்றும் ஆர்.எஸ்.எஸ். பேச்சாளர்கள்அயோத்தி மற்றும் முக்கியமான விஷயங்கள்தொடர்பாக மீண்டும் மீண்டும் முரண்பட்டஅறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.கேள்விக்கு இடமின்றி இதில் ஒரு திட்டம் இருக்கின்றது.பி.ஜே.பி. தலைவர்களைப் பொருத்தவரையில்அவர்கள் ஆளும் கூட்டணியை ஒன்றாகவைத்திருக்க முயற்சிப்பதுடன், ஆர்.எஸ்.எஸ்இனதும் பி.ஜே.பி இனதும் உயர் அங்கத்தவர்களைஉள்ளடக்கிய தீவிர இந்து இனவாதிகள் மீதானவிசுவாசத்தையும் பராமரிக்க முயல்கின்றனர்.

ஆனால் பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் இற்க்கு இடையேயான முரண்பாடுகள் தவிர்க்கமுடியாதவை.அந்த இரு அமைப்புகளும் மிக நெருக்கமாகபிணைக்கப்பட்டிருந்தாலும் கூட அவைஒன்றல்ல. பி.ஜே.பி.யும் அதற்கு முன்னோடியானஜனசங்கமும் எப்பொழுதுமே ஆர்.எஸ்.எஸ்.அல்லாத பகுதியினரையும் அதாவது இளவரசர்கள், பழைய ஜமீன்தார்கள் (நிலப்பிரப்புத்துவநில உடமையாளர்கள்), காங்கிரசிலிருந்துவிலகியவர்கள், மற்றும் ஆளும்வர்க்கத்தின்வட்டங்களுடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டவர்களையும் உள்ளடக்கியிருந்தது.பாராளுமன்றத்தில் பி.ஜே.பி.-இன் பாத்திரமும்,இப்பொழுது அரசாங்கத்தில் அதன்பாத்திரம் பி.ஜே.பி. தலமையிலுள்ள ஆர்.எஸ்.எஸ்.காரியாளர்களுக்கு அவர்களின் தாய்அமைப்புகளிலிருந்து சுதந்திரமான சக்திக்கானஒரு தளத்தை வழங்கியுள்ளது. மற்றும்அது அவர்களை இந்தியாவின் மிகப்பெரும்தொழில் அதிபர்களின் நிதி மற்றும் அரசியல்ஆதரவிலும் அதிகப்படியாக சார்ந்திருக்கும்படியாகவும் உருவாக்கியுள்ளது.

ஆர்.எஸ்.எஸ்.-இல் அதிகம் பிரசாரம்செய்யப்பட்ட கட்டுப்பாடுஇருந்தபொழுதிலும் ஆர்.எஸ்.எஸ். அதன்இயல்பான தன்மையின் காரணமாகஸ்திரமின்றி இருக்கின்றது. அது ஒரு கூட்டிசைவானசமூகப்பொருளாதார வேலைத்திட்டத்தைஅடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை.ஆனால் குட்டி முதலாளித்துவத்தின் முரண்பட்டமற்றும் நிலையில்லாத உணர்வுகளிலும், வெறுப்புக்கோளாறுகளிலும் தான் தங்கியிருக்கிறது.ஆர்.எஸ்.எஸ். அதன் குட்டி முதலாளித்துவபகுதியினரின் உண்மையான தேவைகளைதிருப்திபடுத்த முடியாமல் வெளித்தோற்றத்திற்க்குரிய, வகுப்புவாத, வாய் சவடால் மற்றும்வன்முறை அரசியலில் ஈடுபடவேண்டியதாகஇருக்கின்றது. நீண்ட காலப்போக்கில் வாஜ்பாயிஒரு கூட்டணி அரசாங்கத்திற்கு தலைமைதாங்கினாலும் சரி அல்லது ஒரு பெரும்பான்மையான பி.ஜே.பி. அரசாங்கத்திற்கு தலைமைவகித்தாலும் சரி அவரின் குட்டி முதலாளித்துவஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்களை அதிருப்தியடையசெய்யத்தான் முடியும்

எவ்வாறாயினும்தீவிரமான வலதுசாரி அபாயம் அதன் சொந்தபிரச்சனைகளினாலேயே வீழ்ச்சி அடையும்என்று முடிவுக்கு வருவதைவிட தொழிலாளவர்க்கத்திற்க்கு அபாயகரமானது வேறொன்றுமில்லை. பி.ஜே.பி. அதன் ஆதரவாளர்களை அதிகாரத்துவம் மற்றும் அரசின் ஒடுக்குமுறை படைகளின்தலைமை பதவிகளில் புகுத்த அரசாங்கஎந்திரத்தின் மீது அதற்குள்ள கட்டுப்பாட்டைபயன்படுத்தும். இந்திய கப்பல் படையின்முன்னைய தலைவர் அட்மிரல் ஜே.ஜி.நட்கர்ணிசமீபத்தில் கீழ்க்கண்டவாறு எச்சரித்தார்:''இந்துத்துவாவிற்கான (இந்து ராஜ்யத்திற்குமறுபெயர்) ஆதரவு சந்தேகப்பட்டதைவிட மிகவும் பரந்தளவில் உயர் அதிகாரிகள்மத்தியில் இருக்கிறது''.

மிகமுக்கியமாக பிரதானமாக பி.ஜே.பி. மற்றும் ஆர்.எஸ்.எஸ். பின்னால் இருப்பதுபெரும் முதலாளித்துவமாகும். வாஜ்பாயிஅரசாங்கத்தின் இறுதி முடிவு எதுவாகஇருப்பினும், ஆளும் வர்க்கமானது சமூகசேவைகளை வெட்டுவது, தனியார் மயப்படுத்துவது மற்றும் நிலக்கட்டுப்பாட்டுகளைஅகற்றுவது போன்றவற்றின் மூலமாகஏகாதிபத்திய சுரண்டலுக்கு எதிராக இருக்கும்அனைத்து தடைகளையும் தகர்க்க முன்னோக்கிச் செல்லும். அதனால் விளையும் அமைதியின்மையைகட்டுப்படுத்தவும் திசைதிருப்பபும் அதுஜாதிவாதம், வகுப்புவாதம் மற்றும்எதேச்சாதிகார ஆட்சி வடிவங்களைபயன்படுத்தும்.

ஒரு அழிவை தவிர்க்கவேண்டுமாயின் இந்திய தொழிலாள வர்க்கம் ஒருபுதிய பாதையை தேர்ந்தெடுக்கவேண்டும்.அது ஒரு சுதந்திரமான அரசியல் சக்தியாகஒழுங்கமைத்துக்கொண்டு தொழிலாளர்விவசாயிகள் அரசாங்கத்திற்கான ஒருஜனநாயக மற்றும் சோசலிச வேலைத்திட்டத்தை விரிவுபடுத்தவேண்டும். தேசிய முதலாளித்துவத்திற்கு எதிரான பொதுப்போராட்டத்தில்தொழிலாளர்கள் அவர்களின் பின்னால்விவசாயிகளையும் நகர்ப்புற குட்டி முதலாளித்துவ தட்டுக்களையும் அணிதிரட்டி, ஏகாதிபத்திய ஒடுக்குமுறைக்கு எதிரான இந்திய மக்களின்போராட்டத்துடன் சர்வதேச தொழிலாளவர்க்கத்தின் போராட்டத்தை ஒன்றிணைக்கவேண்டும்.

5:30 PM, August 23, 2005  
Anonymous Anonymous said...

இந்தியாவின் ஆளும் கட்சி வகுப்புவாத படுகொலையைத் தூண்டிவிடுகிறத

இந்தியாவின் கூட்டரசாங்கத்தில் மேலாதிக்கம் செய்யும் சக்தியான, பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவர்கள், கடந்த வாரம் மேற்கு குஜராத்தை அதிரவைத்த முஸ்லிம் எதிர்ப்பு கலவரங்களைத் தூண்டிவிட்டதற்கு நம்பவைக்கும் ஆதாரம் உள்ளன.

வகுப்புவாத வன்முறையை நடத்தியவர்கள் என போலீசாரால் முக்கியமாகப் பெயர் குறிக்கப்பட்டவர்களுள் பி.ஜே.பி மற்றும் பி.ஜே.பி யின் கூட்டாளி விஸ்வ இந்து பரிஷத்தின் (அல்லது உலக இந்து பேரவை) உள்ளூர் செயல்வீரர்கள் மட்டும் அல்லர். பி.ஜே.பி மற்றும் விஸ்வ இந்து பரிஷத் செயல்வீரர்களால் திரட்டப்பட்ட கும்பல்கள், முஸ்லிம்கள் வட்டாரத்திலும் கிராமங்களிலும் தாக்குகையில் போலீஸ் அருகில் நின்று கவனித்துக் கொண்டிருந்ததாக பத்திரிகையாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களிடமிருந்து பல செய்திகள் வந்திருக்கின்றன. உண்மையை மறைத்துக்காட்டும் விதமாக, குஜராத் மாவட்ட நகரான கோத்ராவில் முன்னரே முஸ்லிம்களால் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்று கூறப்படும் கொடூரத்திற்கு, விஸ்வ இந்து பரிஷத் ஆல் அழைப்பு விடுக்கப்பட்ட மற்றும் மாநில பி.ஜே.பி. ஆல் ஆதரிக்கப்பட்ட அடைப்பு அல்லது பொது வேலைநிறுத்தத்திற்கு இந்தக் கும்பல்கள் ஆதரவுக் குரலைக் காட்டியிருந்தனர்.

இந்தியாவின் தேசிய மனித உரிமைக் கழகம், பி.ஜே.பி கட்டுப்பாட்டில் உள்ள அரசாங்கம் குஜராத் மாநிலத்தில் அரசாங்கம் வகுப்புவாத வன்முறையைக் கட்டுப்படுத்த என்ன செய்திருக்கிறது என்று விளக்கம் கேட்டிருக்கிறது மற்றும் "மாநிலத்தில் உள்ள உயர் அதிகாரிகளாலும் போலீஸ் படைகளாலும் நிலைமையைக் கையாளுவதற்கு செயலற்றிருக்கும்படி கூறும்" செய்திகளைப் பற்றி மேலும் கூறி இருக்கிறது.

காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உள்ளடங்கலான பிரதான எதிர்க்கட்சிகள் குஜராத் அரசாங்கத்தை மனித உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாக்கத் தவறிய அதன் "மோசமான நடத்தை" க்காகக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளன. "குற்றத்தனமான புறக்கணிப்பு இல்லாது, அரசாங்கம் கண்டும் காணாததுமாய் இல்லாதிருந்தால், அத்தகைய நிகழ்ச்சிகள் நடைபெறாதிருந்திருக்கக் கூடும்."

குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடி, முஸ்லிம் விரோத வன்முறையைப் பகிரங்கமாக ஆதரித்தார். முதலாவதாக அவர் "ஒவ்வொரு வினைக்கும் சமமான மற்றும் எதிரான வினை உண்டு" என்று குறிப்பிட்டார். பின்னர் கோத்ரா தாக்குதல் தொடர்பாக இண்டாவது தடவை குறிப்பிடுகையில், "ஆழமான ஆத்திரமூட்டலின் கீழ் தனிச்சிறப்பு மிக்க வகையில் கட்டுப்படுத்தலுக்காக" மாநிலத்தின் மக்களைப் பாராட்டினார். போலீசும் மாநில அரசாங்கமும் நெருக்கடியைக் கையாண்ட விதத்தை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற அனைத்து அழைப்புக்களையும் மோடி நிராகரித்துக் கொண்டிருக்கிறார் என்பதைப் பற்றிக் கூறத் தேவையில்லை.

லண்டன் நாளிதழான டெய்லி டெலிகிராப்பில் வந்த செய்தி அறிக்கை பி.ஜே.பி மேலாதிக்கம் செய்யும் தேசிய ஜனநாயகக் கூட்டணியினால் கட்டுப்படுத்தப்படும் மத்திய அரசாங்கமும் கூட முஸ்லிம் விரோத வன்முறை தொடர்வதற்கு அனுமதிக்கும் முக்கிய பாத்திரத்தை வகித்ததாகக் கூறுகின்றது.

கடந்த வியாழன் மாலை அன்று இராணுவம் பக்கத்தில் உள்ள ராஜஸ்தானில் ஜோத்பூரில் இருந்து அகமதாபாத்துக்கு துருப்புக்களை அனுப்புவதற்காக 13 போக்குவரத்து விமானங்களை எரிபொருள் நிரப்பி ஆயத்தமாக வைத்திருந்ததாக பெயர் குறிப்பிடப்படாத உயர் இராணுவ அதிகாரி கூறியதாக மேற்கோள் காட்டி டெலிகிராப், "விளக்க முடியாத காரணத்திற்காக, மாநிலப் போலீஸ் திறமையற்றிருந்தது என்பது வெளிப்படையாகத் தெரிகின்றபோதும், 1000 துருப்புக்கள் அடுத்தநாள் காலையில் தான் சென்றனர்" என்று கூறியது.

மேலும்கூட, துருப்புக்கள் வந்து சேர்ந்த பொழுது, அவர்களுக்கு முறையான போக்குவரத்து வசதி மற்றும் உளவுத் தகவல்கள் வழங்கப்படவில்லை. "இறுதியாக இராணுவமானது வெள்ளிக் கிழமை மாலை அனுப்பப்பட்டபோது, அது தொந்திரவுக்கு உள்ளான இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படவில்லை" என்று டெலிகிராப்பால் உளவுத்துறை அதிகாரி என்று கூறப்படும் இரண்டாம் நிலை அதிகாரி ஒருவர் கூறினார். இராணுவமானது "ஏற்கனவே முஸ்லிம்கள் இருந்து வெளியேறிச் சென்ற பகுதிகளுக்கு போகுமாறு மட்டும் கேட்டுக் கொள்ளப்பட்டது. அது மாநிலத்தின் இந்து தேசியவாத அரசாங்கத்தினால் செய்யப்பட்ட திட்டமிட்ட முடிவாகும்."

குஜராத்தில் நடைபெறும் வன்முறை அயோத்தியில் பாபர் மசூதி டிசம்பர் 1992ல் அழிக்கப்பட்டதால் இயக்கப்பட்ட கலவர அலைக்குப் பின்னர், இந்தியாவின் மோசமான வகுப்புவாத இரத்தம் சிந்தலாகும். பி.ஜே.பி தலைமையானது அதன் கூட்டணி பங்காளர்களுக்கு மாறுபாடாக, அயோத்தியில் இந்துக் கோவிலைக் கட்டுவதற்கான அதன் முந்தைய கடப்பாட்டிலிருந்து விலகி இருந்த போதிலும், 1990 களின் ஆரம்பத்தில் அது பி.ஜே.பி யின் பிரதான அணிதிரளல் அழைப்பாக இருந்ததிலிருந்து, கட்சியானது அயோத்தி விவகாரத்துடன் விடுவித்துக் கொள்ள முடியாததாக இருக்கின்றது.

கோரமான வன்முறை

திங்களன்று குஜராத் போலீஸ் ஆறு நாட்களாக நடைபெற்ற கோரமான வன்முறையில் சாவு எண்ணிக்கை 572 ஐ அடைந்தது என அறிவித்தது. வகுப்புவாத படுகொலையானது பிப்ரவரி 27 அன்று அயோத்தியிலிருந்து குஜராத்துக்கு திரும்பிக்கொண்டிருந்த இந்து அடிப்படைவாதிகளை ஏற்றி வந்த பல ரயில்பெட்டிகள் மீது, கோத்ராவில் நடைபெற்ற தாக்குதலால் விரைவுபடுத்தப்பட்டது. அவர்கள் மசூதி அழிக்கப்பட்ட இடத்தில் இந்துக் கோவிலைக் கட்டுவதற்கான திட்டத்திற்கு அங்கு போயிருந்தனர். முஸ்லிம் கும்பலால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல் 58 பேர்கள் இறப்பை ஏற்படுத்தி இருந்தது.

48 மணி நேர பின்நிகழ்வாக அகமதாபாத், ராஜ்கோட், சூரத், பரோடா மற்றும் குஜராத்தின் இதர நகர் மையங்களிலும் பல கிராமங்களிலும் வகுப்புவாத வன்முறை வெடித்தது. வேதனையூட்டும் ஒரு நிகழ்ச்சியில், முஸ்லிம் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் சாகும் வரை குண்டாந்தடியால் அடிக்கப்பட்டனர், திரவ எரிவாயுவால் குளிப்பாட்டப்பட்டு தீவைத்துக் கொளுத்தப்பட்டனர் அல்லது அவர்களின் இல்லங்களில் உயிரோடு கொளுத்தப்பட்டனர். முஸ்லிம்களுக்குச் சொந்தமான தேநீர்க்கடைகள், கடைகள் மற்றும் வர்த்தக இடங்கள் முறையே கொள்ளை அடிக்கப்பட்டு தீவைத்துக் கொளுத்தப்பட்டன. கலவரக் கூட்டத்தின் மீது திரட்டப்பட்ட இராணுவத்தினர் திரும்பத்திரும்ப துப்பாக்கிச்சூடு நடத்திய பின்னர்தான் --போலீஸ் துப்பாக்கிச்சூடு காரணமாக 93 பேர்கள் இறந்தனர் என்று போலீஸ் அறிவித்த-- வன்முறை தணிந்தது.

குறிப்பாக, இந்தியாவில் பி.ஜே.பி-யால் இன்னும் ஆளப்படுகின்ற ஒரே பிரதான மாநிலமான, குஜராத்துக்கு வெளியில் தனித்தனி சம்பவங்கள் மட்டும் நடைபெற்றன. மேலும் மார்ச்1, வெள்ளிக் கிழமை நாடு தழுவிய பொதுவேலை நிறுத்தத்துக்கான அழைப்பு புறக்கணிக்கப்பட்டது.

சனிக்கிழமை அன்று நாடு முழுவதற்குமான தொலைக்காட்சி உரையில், இந்தியாவின் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயி குஜராத் வகுப்புவாத வன்முறையை "தேசத்தின் நெற்றியில் விழுந்த கரும் புள்ளி" என குறிப்பிட்டு, அது "உலகில் இந்தியாவின் கௌரவத்தைத் தாழ்த்தியுள்ளது" என்று மேலும் கூறிப்பிட்டார்.

இருப்பினும், பி.ஜே.பி தலைவர் குஜராத் மாநில அரசாங்கத்தின் நடவடிக்கைகள் பற்றி எதனையும் கூறவில்லை. தமது சொந்தக் கட்சியுடன் அணிசேர்ந்துள்ள இந்து செயல்வீரர்களால் அயோத்தி விவகாரம் பேரில் தட்டி எழுப்பப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான குரோதம் பற்றியோ மற்றும் அது தமது பாக்கிஸ்தான் விரோத யுத்த நாட்டத்தில் எதிரொலிப்பது பற்றியோ கூட அவர் ஒன்றும் கூறவில்லை.

குஜராத் சம்பவங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் உடைவை விளைவிக்கக் கூடும் என்பது வாஜ்பாயி இன் உடனடி அச்சமாக இருந்தது. ஜம்மு காஷ்மீரின் தேசிய மாநாட்டுக் கட்சி, தெலுங்கு தேசம் கட்சி அரசாங்கம் உள்ளடங்கலான கூட்டணியின் பங்காளிகள் கணிசமான முஸ்லிம்களின் ஆதரவைப் பெறுகின்றனர். அவர்கள் இந்து பேரினவாத பி.ஜே.பி உடனான அவர்களது கூட்டை, அதன் வகுப்புவாதத்தைக் கட்டுப்படுத்தி வைத்திருத்தல் என்ற அடிப்படையில் நியாயப்படுத்துகின்றனர். கடந்த மாதம் நடைபெற்ற மாநிலத் தேர்தலில் பி.ஜே.பி தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் குஜராத் சம்பவங்கள் வந்தன. அந்தத் தோற்கடிப்பு தேசிய அரசியல் சமநிலையை மாற்றி இருக்கிறது மற்றும் இந்தியாவின் அனைத்து அரசியலாளர்களையும் தங்களின் நிலையை மறு மதிப்பீடு செய்யும்படி பாதித்துள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியை சாமர்த்தியமாக வைத்திருக்கும் அதேவேளை, வாஜ்பாயி தனது கட்சியின் இந்து தேசியவாத அடித்தளத்தைக் கொண்டவர்களின் அதிகரித்து வரும் அமைதியின்மையை சமரசப்படுத்தும் பிரச்சினையையும் எதிர்கொண்டிருக்கிறார். குஜராத் நெருக்கடியைக் கையாளுவதற்காக வாஜ்பாயி ஆஸ்திரேலியாவில் கடந்த வார பொதுநல நாடுகளின் அரசாங்கத் தலைவர்கள் கூட்டத்திற்கான தனது பயணத்தை ரத்துச் செய்தார். அவரது பெரும்பாலான நேரம் இல்லை எனினும், பிஜேபி பொறுப்பாளர்கள், இந்து மதத் தலைவர்கள் இந்து மேலாதிக்க ராஷ்ட்ரிய சுய சேவக் சங்க் ( ஆர்.எஸ்.எஸ்) தலைவர்களைச் சந்தித்து, விஸ்வ இந்து பரிஷத்தை இந்திய உச்ச நீதிமன்றத்தினை மறுத்து மற்றும் மார்ச் 15ல் அயோத்தியில் கோவில் கட்டுவதை ஆரம்பிக்கும் அதன் திட்டத்தை மேற்கொள்ள முடியாமல் எப்படி இணங்க வைப்பது என்பது தொடர்பாக ஆலோசனை செய்வதில் அதிகம் செலவழித்தார்.

பி.ஜே.பி தலைவர்களைப் பொறுத்தவரை மூன்றாவது அக்கறை, ஜனநாயகம் மற்றும் சகிப்புத்தன்மை எண்ணம் உடைய இந்தியா, இஸ்லாமிய அடிப்படை வாதத்துடன் கூட்டுச் சேர்ந்துள்ள இராணுவம் ஆட்சி செய்யும் பாக்கிஸ்தானுடன் வேறுபடுத்திக் காட்டுவதன் மூலம், பாக்கிஸ்தானுடனான அதன் மோதலில் சர்வதேச ஆதரவை வெல்வதற்கான அதன் முயற்சிகளை வகுப்புவாத வன்முறை சிதற அடித்து விடும் என்ற கவலை ஆகும். உண்மை என்னவென்றால் இந்திய மற்றும் பாக்கிஸ்தானிய இரு செல்வந்தத் தட்டுக்களும் சமூக அதிருப்தியை திசைதிருப்பி விடுவதற்கு வகுப்பு வாதத்தையும் மத அடிப்படை வாதத்தையும் விசிறி விட்டு வருகின்றனர்.

பி.ஜே.பி, பாக்கிஸ்தானுக்கு எதிரான போரில் ஈடுபடும் அதன் நிலையை உக்கிரமடையச் செய்யவில்லை என்றால், தற்போதைய நெருக்கடியை தொடர விரும்பும் பலமான குறிகாட்டலாக, பி.ஜே.பி-யின் மூத்த தலைவர்கள், கோத்ராவில் இந்து செயல்வீரர்கள் மீதான தாக்குதல், பாக்கிஸ்தான் உளவுப் பிரிவினரால் முஸ்லிம் விரோத கலவரத்தைத் தூண்டிவிடவும் இந்தியாவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கவுமான நோக்கத்துடன் ஒழுங்கமைக்கப்பட்டது என்று கூறி இருக்கிறார்கள். இந்தக் கூற்று இரண்டு காரணங்களுக்காக செய்யப்பட்டது: பாக்கிஸ்தானுடனான குரோதத்தை விசிறிவிடவும் மற்றும் குஜராத்தில் வகுப்புவாத படுகொலைக்கு பி.ஜே.பி-ன் பொறுப்பை மூடி மறைக்கவும் ஆகும்.

5:35 PM, August 23, 2005  
Anonymous Anonymous said...

நீலகண்டண்ணே... ஹிட்லர், ஸ்டாலின், முசோலினி, போல் போட், நரேந்திர மோடி, அத்வானி, வாஜ்பாயி, ராஜீவ் காந்தி, ஏரியல் ஷெரான், அல்லாரும் ஒரே கட்சிதானேண்ணே... நீங்க வாழ்கண்ணே...

2:15 AM, September 17, 2005  
Anonymous Anonymous said...

IF YOU ARE CONSIDERING YOURSELF AS AN HONEST INDIAN, FIRST YOU SHOULD WRITE FOR THE RESIGNATION OF MODI. (AS LIKE AS THE BJP LEADER M.L. KHURANA).
LET US LEAVE THE OTHER 'JUSTIFICATIONS'
- VISHNU

6:13 AM, September 18, 2005  
Blogger Shankaran er said...

சமூக நீதி, மத சுதந்திரம் என்றெல்லாம் பேசும் இவர்களின் இரட்டை வேடம் நன்கறிந்ததே. ஒரு முஸ்லிமுக்கு எதிராக ஒரு வார்த்தை சொன்னாலும் நீலிக் கண்ணீர் வடிக்கிற , கூப்பாடு போடுகிற இந்த கேடு கெட்ட கம்யுனிஸ்ட்கள், பகுத்தறிவு வாதிகள், சிறிதும் வெட்கம் இல்லாமல் 6௬0 பேர் கருகிய சம்பவத்தை விபத்து என்கின்றனர். முஸ்லிம்களின் சுயரூபம், பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியிலும் நன்றாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. எட்சரிக்கையாக இல்லை என்றால் நாளை ஹிந்துக்களும் அகதிகளாக வேண்டியது தான். நல்ல வேளை பெரும்பாலான இந்தியர்கள் சுயமாக சிந்திக்கின்றனர். அதனால் தான் மோடி வென்றார், ராமர் கற்பனை என்ற மத்திய அரசு பிறகு பல்டி அடித்தது.

6:15 PM, October 20, 2008  

Post a Comment

<< Home