Friday, September 16, 2005

சானியா மிர்ஸாவுக்கு மிரட்டல்


மதக்கோட்பாட்டின் படி ஆடை அணியாவிட்டால் சானியா மிர்ஸாவை விளையாடவிட மாட்டோம் என இஸ்லாமிய அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது. இதையடுத்து சானியாவுக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என கோல்கத்தா நகர காவல்துறை கூடுதல் ஆணையர் மோகன் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்....கோல்கத்தாவை சேர்ந்த ஜமாத்-இ-உலேமா-இ-ஹிந்த் எனும் அமைப்பு சானியாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இஸ்லாமிய மதக்கோட்பாட்டுக்கு எதிராக ஆடை அணிந்து விளையாடுவதை நிறுத்தாவிட்டால் சானியா மிர்ஸாவை விளையாடவிட மாட்டோ ம் என அந்த அமைப்பு மிரட்டியுள்ளதாகத் தெரிகிறது.... (தினமணி செய்தி : செப்டம்பர் 17-2005) முழு செய்தியும் இங்கே பார்க்க: தினமணி செய்தி
உண்மையிலேயே வருத்தமான விவகாரம்தான் இது. அந்த பெண்ணிற்கு தேவையற்ற மன-அழுத்தத்தை ஏற்படுத்துகிறார்கள். ஆனால் இவற்றை மீறி அவர் எழுந்து பிரகாசித்தால் இஸ்லாமிய சமுதாயத்திற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த பாரத பெண் சமுதாயத்திற்கே இது ஒரு ஆற்றலேற்றம் (empowerment) அளிக்கும். மேற்கு வங்க அரசு ஒவ்வொரு முறையும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடம் மண்டியிட்ட அரசு. உதாரணமாக தஸ்லிமாவின் நூலை தடை செய்தது; மதரசாக்களில் ஐஎஸ்ஐ செயல்பாடுகள் குறித்து கூறி பின்னர் மறுதலித்தது என பல உதாரணங்களைக் கூறலாம். மார்க்ஸியத்திற்கும் இஸ்லாமிய மேலாதிக்க வாதத்திற்கும் இருக்கும் சில இணைத்தன்மைகள் கூட இதற்கு காரணமாக இருக்கலாம். அல்லது பங்காலி பாபு திமியாக மாறிவிட்டதும் காரணமாக இருக்கலாம். எதுவாயினும் வங்க அரசும் மிர்ஸாவை 'இஸ்லாமிய உடை' அணியக் கூறி வற்புறுத்தாமல் இருந்தால் சரி.பாரதத்தின் பெண் குழந்தைகள் நலம் குறித்த சர்வதேச நல்லெண்ண தூதுவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மூவரில் சானியாவும் ஒருவர் என்னும் முறையில் இந்த கீழ்த்தர மிரட்டல் பாரத இறையாண்மைக்கும் ஒரு சவால்.


இந்த உள்ளீட்டினைத் தொடர்ந்து பின்னோட்டத்தில் ஒரு நண்பர் ஒரு முக்கிய சுட்டியினை அளித்திருந்தார், அதனையும் அதனைத் தொடர்ந்து எனது பதிலையும் இந்த உள்ளீட்டுடன் இணைத்துள்ளேன். நண்பரின் பின்னோட்டம் சிவப்பு வர்ணத்தில் உள்ளது:
Arvindan,
This discussion on sania's dress looks funny.You might be interested in the website too.
http://www.jihadwatch.org/dhimmiwatch/archives/008066.php
I sent you an email before 10 days.Just an appreciation of your jainulabdeen and vedalam article.Maybe you were in bengal then. Good luck in your quest for truth.

எனது பதில்:
அன்புள்ள அநாநிமஸ்,

நீங்கள் தானா அது. மகிழ்ச்சியும் தங்கள் பாராட்டுகளுக்கு நன்றியும். பதிலளிக்காமைக்கு மன்னியுங்கள். சானியாவின் உடை குறித்த 'சர்ச்சை' 'funny' ஆக உள்ளதாக கூறியுள்ளீர்கள். It is not funny and it is disturbing. டெல்லியில் மாநில ஆட்சியில் பெண்களுக்கு உடை கட்டுப்பாடு கொண்டுவந்தபோது அதையும் நான் எதிர்த்தேன். ஒரு முக்கியமான பாஜக தலைவரிடம் நான் கூறிய வார்த்தைகளை கூறுகிறேன், "பெண்களின் உடை நீளங்களை குறித்து பத்வா அளிப்பதை இலட்சிய தேசத்தின் அறிகுறிகளாக கொள்பவர்களால் நல்ல நிர்வாகிகளாகவோ அல்ல தேச புனர் நிர்மாணம் என நீங்கள் ஏற்றெடுத்துள்ளதாக கூறுகிற கடுமையான முள் நிறைந்த பாதையில் நடக்கும் விவேகம் கொண்டவர்களாகவோ இருக்க முடியாது." மறைந்த சீதாராம் கோயல் கூட இதே வித கருத்தினைக் கொண்டிருந்ததாக பின்னர் அறிந்தேன். மிகக் கணிசமான அளவு ஸ்வயம் சேவகர்களிடமிருந்தே எனது கருத்துக்கு ஆதரவு கிடைத்தது. முக்கியமான விஷயம் என்னவென்றால் மிர்சாவிற்கு உடைக் கட்டுப்பாடு விதித்த தலை கழண்ட அஃறிணைகள் அனைத்து சமுதாயங்களிலும் உள்ளனர். ஆனால் இஸ்லாமில் அது 'being disgustingly funny' என்கிற அளவையும் தாண்டி ஏறத்தாழ ஒட்டுமொத்த அளவில் அதனை அவர்கள் வாழ்க்கை நெறி என்பது போல வலியுறுத்துவதும், அதனை மீறுபவர்களை எந்த அளவிற்கும் சென்று தண்டிக்க தயாரவதும் தான். தாங்கள் அளித்திருந்த சுட்டி முக்கியமானது. அதில் டால்பின் என்கிற பெயரில் ஒருவர் அளித்துள்ள உள்ளீடு இந்த 'சர்ச்சை'யின் முழு வேதனையை காட்டுகிறது.
-------------------------------------------------------
" Go back and reread her statements. Try reading between the lines. Try feeling her tone, her voice. It's faltering. She's scared. A thin thread of fear goes through her entire speech and is most vividuly manifested in the following sentence: "Every word I speak, every skirt I wear is discussed and analysed. I have to take all this in my stride. That's why these days I prefer to stay at home." Note the last sentence. She is already intimidated enough to spend her days in isolation from the rest of the world. Wherever she goes, she sees her former Muslim friends and supporters turning against her in a matter of days and even hours. Sania is learning a painful lesson. I think she gradually begins to understand where the true loyalties of her fellow Muslims lay. They're not with her. In Islam, the concept of personal loyalty isn't nearly as powerful as in the secularized cultures. What matters the most is loyalty to the word of God who has banned all possible displays of a female pride. When it comes to standing for Sania or standing for Islam, her friends make an abhorrent but fairly predictable choice: to stand for Islam. No one wants to be called an apostate. But, alas, that's not the worst part.It is at this age when having support in one's endeavours matters the most. The values and aspirations of a young mind haven't been shaped completely yet, and that's why encouragement from the closest people plays a crucial role in one's future career. Sania needs exactly that." And she doesn't get it an ounce of it.
Her own father, who once encouraged her to begin playing tennis, now seems to agree with the members of Ulema. See more here: He wants Women's Tennis Association to twist its regulations to allow Sania to wear proper Muslim clothing. Now, having said that, just imagine what happens behind the walls of Sania's house. She faces DAILY pressure from her closest relatives to start behaving 'properly'

----------------------------------------------------------
உங்களையோ என்னையோ சானியாவின் தகப்பனாரின் இடத்தில் வைத்து பாருங்கள். என்ன சொல்லுவோம், " மகளே உனக்கு ஏன் இந்த வம்பு. இந்த கிறுக்கனுங்க என்ன செய்வான்களோ தெரியாது. பேசாம நீயும் அந்த ஈரான் பொண்ணுங்க மாதிரி டிரெஸ் பண்ணிட்டு விளையாடு" என்று தானே சொல்லுவோம்? வெளியில் என்ன சொல்லுவோம்? பயந்து விட்டோம் என்றா? இஸ்லாமிய கலாச்சாரத்தின் உயர்வினை புரிந்து கொண்டோம் என்றுதானே?இஸ்லாம் வெற்றி பெறும், நமது தனி மனித சுதந்திரம் தோல்வியுறும் புள்ளி இதுதான். இஸ்லாமின் எதிரிகள் எனக் கருதப்படுவோர் மனங்களில் அச்சத்தை உருவாக்குவது ஜிகாதின் முக்கிய அம்சங்களில் ஒன்று. மீண்டும் தங்கள் சுட்டிகளுக்கும் கருத்துகளுக்கும் நன்றி.
மேலும் அறிய சுட்டிகள்:
இங்கே
ஜிகாத் வாட்ச்-திமி வாட்ச்
பிபிஸி-1
பிபிஸி-2

10 Comments:

Anonymous Anonymous said...

how abt you play with a kovanam or a some kavi jatti with thrisulam etc.. jerkulis

8:33 PM, September 16, 2005  
Blogger NambikkaiRAMA said...

ஆண்வீரகள் அணியும் ஆடையையே இவர்களும் அணிந்தால் பிரச்சனை இருக்காது.
இருந்தாலும் இப்படியெல்லாம் மிரட்டுவது தவறு.
எதற்கும் நம் சானியா மிர்சாவுக்கு அண்ணா யுனிவர்சிட்டியில் படிக்க ஒரு சீட் வாங்கி கொடுப்போம்.

8:50 PM, September 16, 2005  
Anonymous Anonymous said...

Arvindan,
This discussion on sania's dress looks funny.You might be interested in the website too.
http://www.jihadwatch.org/dhimmiwatch/archives/008066.php

I sent you an email before 10 days.Just an appreciation of your jainulabdeen and vedalam article.Maybe you were in bengal then.

Good luck in your quest for truth.

9:00 PM, September 16, 2005  
Anonymous Anonymous said...

Arvindan,
I meant the discussion in the website which I quoted was funny.
good luck

9:05 PM, September 16, 2005  
Blogger Unknown said...

அரவிந்தன்,

இந்த சமயத்தில் இந்தியர்களாக நாம் எல்லோரும் சானியாவுக்கு உறுதுணையாக இருக்கவேண்டும். மதத்தின் பெயரில் எழும் எந்தவிதமான மிரட்டல்களும் கண்டிக்கப்படவேண்டியது. அது இஸ்லாமாக இருந்தாலும் சரி, இந்துமதமானாலும் சரி.

அந்த முதல் கமெண்டை எடுத்தெறியுங்கள்.

-ரமணி

10:53 PM, September 16, 2005  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

அன்புள்ள ரமணி,
நன்றி. எனது முதல் எண்ணமும் அந்த பின்னோட்டத்தை அகற்றுவதாக இருந்தது. ஆனால் இத்தகைய பின்னோட்டங்கள் serve as an indicator to a particular mindset for all to see. குறிப்பிட்ட மக்களை (இஸ்லாமியரோ, அந்தணரோ, திராவிடக் கழகத்தினரோ) ஒட்டுமொத்தமாக வெறுப்புடன் குறிப்பிடும் பின்னோட்டங்கள், அல்லது உள்ளீட்டிற்கு தொடர்பற்று 'வத வத வைக்கோல் படப்பு' போல உள்ளிடப்படும் பின்னோட்டங்கள் போன்றவற்றை மட்டுமே அகற்றுவது நல்லதெனக் கருதுகிறேன். எனவேதான் 'நேசகுமார்' பெயரில் போலியாக கீழ்த்தர வசவுகளை உள்ளிட்டதை கூட நான் நீக்கவில்லை. இத்தகைய பின்னோட்டங்கள் ஒருவிதத்தில் மற்றோர் விரிவான சமூகவியல் ஆய்வுக்கான தரவுகள். Within some limits we can live them.
அன்புடன்
அரவிந்தன் நீலகண்டன்

11:17 PM, September 16, 2005  
Anonymous Anonymous said...

http://dharumi.blogspot.com/2005/09/67-6.html

12:36 AM, September 17, 2005  
Anonymous Anonymous said...

சுதந்திர தினத்துக்கு போகலுன்னு கோவிக்கிறீங்க. இங்க பாருங்க தேசிய கொடி ஏத்தி கொண்டாடுறத .

தேசிய கொடிக்கு வெறும் பச்ச நிறமாம் ஆமா சொல்லிபுட்டேன்

5:25 AM, September 17, 2005  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

அநாநிமஸ்,

நீங்கள் குறிப்பிட்டுள்ள விஷயம் குறித்து ஏதாவது புகைப்படத்திற்கான சுட்டி இருப்பின் அதனை அளிக்க முடியுமா?

அரவிந்தன் நீலகண்டன்

5:39 AM, September 17, 2005  
Blogger Vaa.Manikandan said...

அதெப்படீங்க ஒரு இந்தியபொண்ணு அதுவும் முஸ்லீமூ உலக அளவுல ஜெயிக்கலாம்?...கத்தறவங்க கத்திகிட்டே தான் இருப்பாங்க!விடுங்க.

4:44 AM, September 18, 2005  

Post a Comment

<< Home