Wednesday, September 14, 2005

'நல்லடியாருக்கு' பதில்


இங்கு காணப்படும் விவாதத்தின் தொடக்கத்தை திருவாளர். நல்லடியாரின் வலைப்பதிவில்
இங்கு காணலாம்.அதன் தொடர்ச்சியின் நகல் இங்கே. நல்லடியாரின் வாதங்கள் சிவப்பு நிறத்தில் உள்ளன.
//காஷ்மீர் பண்டிட்கள் மறுவாழ்வு பெறுவதற்கு இந்திய முஸ்லிம்கள் எந்தவகையில் தடையாக இருக்கிறார்கள்? இவர்களை அகதியாக்கியது மத்திய-மாநில அரசுகளின் அரசியல்தானே தவிர முஸ்லிம்களல்ல.அரவிந்தன் 50 வருடங்களாக காஷ்மீரில் நடக்கும் அட்டூழியங்களுக்கு எந்தவகையில் குஜராத் முஸ்லிம்கள் காரணம் என்று விளக்குவீர்களா? பரிவார ரவுடிகளிடமிருந்து பாதுகாப்பு கொடுத்த மனிதாபிமான குஜராத்திகளே இல்லையென்று சொல்லவில்லை. கலவரத்திற்கு சில வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட பூகம்ப பாதிப்பில் சக் இந்துவுக்கு இரத்தக் கொடுத்த முஸ்லிம்களின் ரத்தத்தைத்தானே உங்கள் பரிவாரங்கள் அதே குஜராத்தில் குடித்தார்கள்.//
இது குறித்து விளக்கமாகவே எழுதியுள்ளேன். குஜராத் பூகம்பத்தில் இடிந்த மசூதிகளை ஆர்.எஸ்.எஸ் காரர்கள் கட்டிக்கொடுத்தார்கள். ஆனால் ஆர்.எஸ்.எஸ் காரர்கள் நிவாரண உதவி செய்வதில் வகுப்புவாதத்துடன் செயல்படுவதாக கூறின சில ஊடகங்கள் ஆனால் அவற்றால் அதனை நிரூபிக்க முடியவில்லை. மேலும் கல்வித்துறையிலும் இஸ்லாமியர்களுக்கு ஆர்.எஸ்.எஸ் குறிப்பிடத்தக்க உதவிகளை செய்துள்ளது. இது குறித்து விளக்கமாக விரைவில்.இவ்வாறு உதவி செய்தவர்களின் பெண்டுகளையும் குழந்தைகளையும் தானே கோத்ராவில் உங்கள் ஜிகாதி சித்தாந்த சகோதரர்கள் உயிருடன் எரித்தார்கள் என பதில் கேள்வி கேட்கலாம்.
//காஷ்மீர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பண்டிட்டுகள் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் மாதம் 3,000 ரூபாய் உதவித் தொகையும், இலவசமாக ரேஷன் பொருட்களும் வழங்கப்படுகின்றன. டில்லியில் 4,100 காஷ்மீர் பண்டிட்டுகள் தங்கியுள்ளனர். இவர்களுக்கு குடும்பம் ஒன்றுக்கு மாதந்தோரும் 3,200 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுகிறது. முகாம்களில் இருக்கும் குடும்பமாக இருந்தால் மாதம் 2,400 ரூபாய் மற்றும் ரேஷன் பொருட்கள் இலவசமாக தரப்படுகின்றன.இந்தச் சலுகைகளை ஜம்முவில் வசிக்கும் பண்டிட்டுகள் 34,088 பேரும், டில்லியில் உள்ள பண்டிட்டுகள் 19,338 பேரும், பிற மாநிலங்களில் உள்ள 2,050 பண்டிட்டுகளும் அனுபவித்து வருகின்றனர். இதற்காக மத்திய அரசு 2004-2005 ஆம் ஆண்டில் 32 கோடி ரூபாயும், 2005-06ல் 30 -கோடி ரூபாயையும் ஒதுக்கியுள்ளது. இந்த தகவலை மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் தெரிவித்துள்ளார். இந்தத் தகவலைத் தொடர்ந்து பேசிய பாஜக வின் மூத்த தலைவர் மல்ஹோத்ரா, ""காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு தரப்படும் உதவித் தொகை மிக மிக குறைவானது. இந்தத் தொகையை 5,000 ரூபாயாக அதிகரிக்க வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டார். - நன்றி அவுட்லுக் AUG 29-2005//

காஷ்மீர் பண்டிட்களின் எண்ணிக்கை குறித்து நல்லடியார் கூறியிருப்பதும்
கூட மிகக்குறைக்கப்பட்ட எண்ணிக்கைதான். ரீடிப் இணைய தளம் ஜூலை 13 1999 இல் கொடுத்துள்ள புள்ளிவிவரங்களின் படி: ஜம்முவில் அகதி முகாம்களில் வாழ்வோர் 216820, புது டெல்லியில் 143565. இதர மாநிலங்களுக்கு புலம் பெயர்ந்தோர் குறித்து சரியான எண்ணிக்கை தெரியவில்லை என்கிறது. முதல் ஜிகாதி வெறியாட்டத்தின் போது 55000 காஷ்மீரி பண்டிட் குடும்பங்கள் விரட்டப்பட்டன. யூனியன் உட்துறை அமைச்சக தகவலின் படி 250000 பண்டிட்கள் இன்று ஜம்முவிலும் 100000 பேர் டெல்லியிலும் உள்ளனர். இன்றைய தினத்தில் பாரதம் முழுவதுமாக அகதிகளாக வாழும் காஷ்மீரி பண்டிட் குடும்பங்களின் எண்ணிக்கை
56380. ஒரு குடும்பத்துக்கு சராசரியாக ஐந்துபேர் என்றால் கூட எண்ணிக்கையை நீங்களே கணக்கு போட்டுக்கொள்ளலாம். அதுவும் பத்து வருடங்களுக்கு மேலாக. இந்நிலையில் நல்லடியார் ஏதோ மத்திய-மாநில அரசுகளிடையே நடந்த அரசியலின் விளைவு இது என்கிறார். எப்படிபட்ட நயவஞ்சக நேர்மையற்ற பேச்சு இது? காஷ்மீரி பண்டிட்கள் அடித்து விரட்டப்பட்டதன் காரணம் ஜிகாதி வெறி. அதற்கு இத்தனை பூசி மெழுகல். இதில்
கூட நல்லடியார் கூறியுள்ள பொய்யினை பாருங்கள். அவர் கூறுகிறார்//இந்தச் சலுகைகளை ஜம்முவில் வசிக்கும் பண்டிட்டுகள் 34,088 பேரும், டில்லியில் உள்ள பண்டிட்டுகள் 19,338 பேரும், பிற மாநிலங்களில் உள்ள 2,050 பண்டிட்டுகளும் அனுபவித்து வருகின்றனர். இதற்காக மத்திய அரசு 2004-2005 ஆம் ஆண்டில் 32 கோடி ரூபாயும், 2005-06ல் 30 -கோடி ரூபாயையும் ஒதுக்கியுள்ளது. இந்த தகவலை மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர்
சிவராஜ் பாட்டீல் தெரிவித்துள்ளார்.// இதோ பிடிஐ செய்தியை அப்படியே தருகிறேன். "There are 55,476 registered Kashmiri migrant families, 34,088 in Jammu, 19,338 in Delhi and 2,050 in other states, Patil informed the House." (பிடிஐ: ஆகஸ்ட் 29 2005)
குடும்பங்களை தனிமனிதர்களாக்கிவிட்ட நல்லடியாரின் நேர்மையை என்னவென்பது. வார்த்தையை பாருங்கள்: "பண்டிட்கள் அனுபவித்து வருகிறார்களாம்" தங்கள் நிலபுலன்களை ஏறத்தாழ நிரந்தரமாக இழந்து இத்தனை ஆண்டுகளுக்கு பின்னரும் குடும்பத்திற்கு 2400-3500 ரூபாயை வாங்கும் பண்டிட்களுடன், கலவரங்களில் அழிக்கப்பட்ட தம் சொத்துக்களின் மதிப்பிற்கு குறைவாக கிடைத்த பணத்தை பத்தாயிரம் என்கிற போதிலும் கூட வாங்காத குஜராத் கலவரங்களால் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்களுடன் ஒப்பிட்டு பார்க்கலாம்.
உதாரணமாக PUCL அறிக்கை கூறுகிறது: "Many reported suffering losses of several hundreds of thousands of rupees and being offered cheques of 10,000 rupees which they had refused on principle. Other women had accepted this as they were too desperate to refuse." காஷ்மீரில் பல இலட்ச மதிப்புடைய தங்கள் சொத்துக்களை
அதைவிட முக்கியமாக தமது முன்னோர் நிலத்தை விட்டு இன்று அகதிகளாக பத்தாண்டுகளுக்கும் மேலாக வாழும் காஷ்மீரி அகதிகளுக்கு கிடைக்கும் மாதம் ரூபாய் 2400-3500 ஐ மேல்கூறிய நிலையுடன் ஒப்பிட்டு பாரும் நல்லடியாரே. கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்கள் இஸ்லாமியரானாலும் ஹிந்துவானாலும் அவர்களுக்கு நீதி
கிடைக்கவேண்டும் என்பதில் மறு பேச்சு கிடையாது. ஆனால் காஷ்மீரில் பயங்கரவாதத்தால் வீடிழந்து இன்றும் தெருவில் வாழ்பவர்கள் 3500 ரூபாயை 'அனுபவித்து' வருவதாக கூறும் உம் கோணல் பார்வையை என்ன சொல்வது. உமது நிலையில் நின்று பேசினால் வேண்டுமானால் "குஜராத் இஸ்லாமிய சகோதரர்களிடம் 'தங்கள் சொத்து நாசத்திற்கு பதிலாக 10000 ரூபாய் வாங்கி 'அனுபவித்து' போங்களேன் என்று அறிவுரை வழங்கலாமே
நல்லடியார்" என்று கூறலாம்...ஆனால் அதிர்ஷ்டவசமாக நான் உம்மை போல ஈமான் கொண்ட முஸ்லீம் அல்ல. காஃபீர்.எனவே அவ்வாறு கூறமாட்டேன். கலவரங்களால் பாதிக்கப்பட்ட குஜராத் சகோதரர்களுக்கு கட்டாயமாக நீதி கிடைக்கவேண்டும். பீடித்துண்டால் ரயில் பெட்டி எரிந்ததாக கூறும் ஆசாமிகளால் அது கிடைக்கப்போவதில்லை. அவ்வாறே காஷ்மீரில் இனத்துடைப்பு செய்யப்பட்டுள்ள பண்டிட்களுக்கும் பங்களாதேஷில் அனைத்து வித வன்கொடுமைகளுக்கும் ஆளாகும் ஹிந்து தலித் சமுதாயத்தினருக்கும், சக்மா பௌத்த வனவாசி
சமுதாயத்தினருக்கும், ஜமாத்தியாக்களுக்கும், ரியாங்குகளுக்கும் நீதி கிட்டியாக வேண்டும். குஜராத் கலவரங்களை 'இனப்படுகொலையாக்கிய' ஊடக வெளிச்சம் குஜராத்தை விட பன்மடங்கு அதிக வன்முறையும் மனிதகுலத்திற்கெதிரான குற்றங்களும் நிகழ்ந்த இடங்களில் இருண்டு போவதில் இருக்கும் வக்கிரத்தையும் கண்டிக்கிறேன்.

//அகதிகளாக வெளியேறிய பண்டிட்களுக்கு ஆதரவாக எங்களால் குரல் கொடுக்க முடியும். ஆனால் கடந்த ஐம்பது வருடங்களாக கொல்லப் பட்ட காஷ்மீர முஸ்லிம்களுக்கும் அப்பாவிளுக்கும் என்றைக்காவது நீங்கள் குரல் கொடுத்திருக்கிறீர்களா?//
அரவிந்தன் நீலகண்டன் எழுதிய திண்ணைக் கட்டுரைகளை தேடி பாருங்கள். நான் குரல் கொடுத்துள்ளேனா இல்லையா என்று தெரியும். அண்மையில் VDC இல் இருந்ததற்காக ஜிகாதிகளால் கொல்லப்பட்ட இஸ்லாமிய சகோதரர்களுக்காக நான் எழுதியுள்ள கட்டுரையை படித்த பின்னர் பேசும்.
//குஜராத் கலவரத்தில் வீடிழந்தவருக்கு கொடுக்கப்படதொகை எவ்வளவு தெரியுமா? அதிகமில்லை ஜெண்டில்மேன் வெரும் 100 ரூபாய். http://www.onlinevolunteers.org/gujarat/relief/
மற்றபடி வரிக்குவரி உங்களுடன் வாதிட விரும்பவில்லை. நீங்கள்தான் கர்வம் கொண்டவராச்சே!//

ஐயா நல்லடியாரே,
ஒரு உதாரணம். பீபீ பானோ கலவரங்களில் தமது கணவரை இழந்தவர். இவருக்கு அகதி முகாம்களில் நெருக்கமான தன்வீர் அகமது அவரை எரித்து கொல்ல முயன்றிருக்கிறான். தமது கணவரையும் குழந்தைகளையும் இழந்த பீபீ பானோவிற்கு கிடைத்த நிவாரண நிதி எத்தனை தெரியுமா? மூன்றரை இலட்ச ரூபாய். (பார்க்க: பிடிஐ செய்தி : டிசம்பர் 9 2004)

4 Comments:

Anonymous Anonymous said...

This comment has been removed by a blog administrator.

10:16 AM, September 14, 2005  
Anonymous Anonymous said...

They will not listen Mr.Aravidh.You explain thousand times they will argue till death. These biased statements from the radical muslim will split India again.

3:06 PM, September 14, 2005  
Anonymous Anonymous said...

Yo.. anonymous.. and aravidh..
get a life.. do something useful than blogging your crap ..

5:15 PM, September 14, 2005  
Anonymous Anonymous said...

Aravindan,
You have a very good style of writing.I am reading your postings in thinnai for a long time.You have terrific writing style.I liked your bengal posting very much.

11:24 PM, September 14, 2005  

Post a Comment

<< Home