Saturday, September 17, 2005

வெளிக்கிரக அறிவார்ந்த நாகரிகங்களை கண்டுபிடிக்க நீங்க உதவலாமே!



உள்ளப்போற முன்னாடி ஒரு புளிச்சுப்போன ஜோக்குங்க. வெளிக்கிரகத்தில அறிவுள்ள உயிரினங்கள் இருக்கான்னு கண்டுப்பிடிக்கப் போறீங்களா அதுக்கும் முன்னாடி இந்த கிரகத்துல அறிவுள்ள ஜீவராசிங்க இருக்கான்னு கண்டுபிடிங்களேன். ரொம்ப சமயம் நம்ம கணினியோட முழு சக்தியையும் நம்ம பயன்படுத்துறதில்லீங்க. அதே நேரம் பிரம்மாண்டமான கணினி ஆற்றல் தேவைப்படுற சில அறிவியல் சமாச்சாரங்களும் இருக்குதுங்க. உதாரணமா சொன்னாமாதிரி வேற நட்சத்திர மண்டலங்கள்ல அறிவுள்ள ஜீவராசிங்க இருக்கா அவங்க ஏதாவது செய்திய ஏதாவது அலைவரிசைல அனுப்புறாகளா அப்படீன்னு பார்க்கிறது. இதுக்கு நம்ம பிரபஞ்ச வெளில இருந்து வர்ற மின்காந்த அலைகளையெல்லாம் ஆராயணும். பிரபஞ்சத்தில இயற்கையா இருக்கிற பொருட்களும் இந்த மின்காந்த அலைகளை அனுப்புறதால இந்த அலைவரிசைகளுல ஏதாவது செயற்கைத்தன்மை இருக்கான்னு பாக்கணுங்க. "அதுக்கெல்லாம் நாங்க பணம் ஒதுக்குவமா...சும்மா அலைவரிசைகள்ல செய்தி இருக்கான்னு பார்த்துட்டு இருக்கிறதுக்கு மக்கள் வரிப்பணமா?" அப்படியெல்லாம் அரசியல்வாதிங்க கிட்டாருந்து கேள்வி வர்றதுனால தர்ம சங்கடங்களும் ஏற்படுங்க. இதனால உலகத்துல உள்ள எல்லா நம்ம மாதிரி சாதாரண ஜனங்க கிட்ட உள்ள கணினிகளோட இந்த பயன்படுத்தப்படாம இருக்கிற ஆற்றலை நாம வேல செஞ்சிட்டுருக்கும்போதே அதும்பாட்டுக்கு பின்னாடி இந்த ஆராய்ச்சி வேலைக்கு செலவிடுறமாதிரி ஒரு ஏற்பாட்ட சில நல்ல ஆத்மாக்கள் சேர்ந்து செஞ்சிருக்காங்க. வான்வெளிலேருந்து உலகமெங்கும் ரேடியோ டெலஸ்கோப்புகள் மூலம் சேகரிக்கிற மின்காந்த அலை தரவுகளை உங்க கணினிக்கு இறக்குமதி பண்ணி நீங்க வேற வேலை செஞ்சிட்டுருக்கும் போது அந்த அலைக்கூட்டத்தில ஏதாச்சும் தலைல ஆண்டனா வச்ச பச்சை மனுசங்க அனுப்பிச்ச செய்திகள் ஏதுனாச்சும் இருக்குறாப்பில தெரியுதான்னு பாத்து அனுப்புறதுக்கான மென்பொருள் இங்கே கிட்டும் பாருங்க. ஒருவேளை ஆண்ட் ரோமிடா காலக்ஸிலயோ அல்லது காலபுருஷன் அப்படீங்கிற ஓரையன் நட்சத்திரக்கூட்டத்திலேயோ இருக்கிற ஒரு கிரகத்துல இருந்து வர்ற 'நான் இங்கு நலமே நீ அங்கு நலமா' மாதிரி ஒரு மின்காந்த கோலத்தை கண்டுபிடிக்கிறது உங்களோட கணினியா இருந்துச்சுன்னா தமிழர் எல்லாரும் காலரை உசத்தி விட்டுக்கிடலாம் இல்லீங்களா. இங்கேயும் கொஞ்சம் பாருங்க.
வேற்றுகிரக வாசிங்கன்னு மட்டுமில்லீங்க:
  • உலக பருவநிலை முன்னறிவிப்புக்கான மாடலிங்(இங்கே பாருங்க),
  • புரதத்தொடரை வச்சு புரத அமைப்பைக் கண்டுபிடிக்கிறதுக்கு ( இங்கே
  • சுழல்கிற நியூட்ரான் நட்சத்திரங்களை (பல்ஸாருன்னும் சொல்வாங்க) தேடுறதுக்குஇங்கே
இப்படி பல ஆராய்ச்சிகளுக்கு -இயற்கையோட மர்மங்களை தெரிஞ்சுக்கிறதுக்கு உங்க கணினியோட ஆற்றலை நீங்க குறைவா பயன்படுத்தறப்ப கொஞ்சம் கடன் கொடுக்கலாங்க. முதல்லேயே சொல்லியிருந்த மாதிரி இங்கேருந்து நீங்க அதுக்கான மென்பொருளை இறக்கிகிடுறீங்களா? உங்க ஸ்கிரீன் ஸேவருல்ல இந்த வேலை நடக்கிறதயும் நீங்க பார்க்க முடியுங்க. ஒரு வாரம் ஊருல இருக்க மாட்டேங்க. அதுனால ஒருவாரம் கழிச்சு பாக்கலாம். அதுக்குள்ள ஏதாவது வேற்றுகிரகவாசியோட மெசேஜ் கிடைச்சா மறக்காம சொல்லுங்க.

14 Comments:

Blogger Sri Rangan said...

அரவிந்தன் இப்படி வாங்க கொஞ்சம்.இப்ப போட்டிருக்கிறீங்களே பதிவு-இஃதுதாம் பதிவு.இப்படித் தாங்க அறிவுடைய விஷயங்களை.உங்களால் இவைகளை நன்றாகச் செய்ய முடியும்.இதைவிட்டு நல்லடியாரோடு மல்லுக்கட்டி என்ன ஆவப்போகுது?அவர் தனது நிலையில் தெளிவாகவே இருக்கிறார்-நீங்கள் உங்கள் நிலையில் அப்படியே.வலைப்பதிவு வாசகர்கள் அவர்களும் அப்படியே.ஆனால் விஞ்ஞான அறிவு எல்லோருக்கும் அவசியமானதாகவே இருக்கிறது.இது வளர்வுறு நிலையிலிருப்பதால் நீங்கள் இது குறித்துப் பல தகவல்களை நம்மோடு பகிர்வது நன்று.

அன்புடன்
ப.வி.ஸ்ரீரங்கன்

2:48 AM, September 18, 2005  
Anonymous Anonymous said...

Sri Rangan,
Aravindan has interests in various fields.Along with that he has social responsibility also.He asks questions which should have been asked 50 years before.For example threats to sania mirza,can that be ignored?Should that issue not be written about?

'Nadu ekkedu ketta enekkena' apapdinu ninaikama he dares to bell the cat.

I will remind you of a famous quote by a german.

"First the nazis came for the communists.I did not bother because I was not a communist.

Then they came for the jews,I did not bother because I was not a jew.

Then they came for liberals,I did not bother because I was not a liberal.

Finally they came to me.Nobody bothered because they were not me."

Aravindan is fighting against terrorism.He fights against fascism.He fights for the right of an Indian woman to freely wear the dress which she wants to wear.He fights for the right of women of minority community.He fights for jammu kashmiri pandits.Should these issues be dropped?Should we follow 'I dont care about the rest of the world' attitude?

You want him to be an ordinary man.But he has chosen to be a revolutionary.He writes for you and me.Not for himself.

-anbudan
vedalam

10:25 AM, September 18, 2005  
Anonymous Anonymous said...

Aravindan is fighting against terrorism.He fights against fascism.He fights for the right of an Indian woman to freely wear the dress which she wants to wear.He fights for the right of women of minority community.He fights for jammu kashmiri pandits.Should these issues be dropped?Should we follow 'I dont care about the rest of the world' attitude?

You want him to be an ordinary man.But he has chosen to be a revolutionary.He writes for you and me.Not for himself.


what a sarcastic comment .

11:27 AM, September 18, 2005  
Blogger Sri Rangan said...

Dear Vedalam,
We may be disappointed if we fail,
but we are doomed if we don't try.
yes!
Time brings counsel, it will ripen a thing.Ideas are not responsible for what people make out of them.

Regards
P.V.Sri Rangan

2:00 PM, September 18, 2005  
Anonymous Anonymous said...

//Time brings counsel, it will ripen a thing.Ideas are not responsible for what people make out of them.//

Dear Sri Rangan,
Aravindan is trying to make people to interpret ideas in a different way.
Nietzsche said "Most people would prefer to believe than to know"
How true he was?

--Vedalam

3:14 PM, September 18, 2005  
Anonymous Anonymous said...

A Muslim girl himmasta kohistani became miss england 2005 and guess what?She has a fatwa issued against her.

http://mypetjawa.mu.nu/archives/116122.php

she even participated in swim suit contest......

http://www.afghanland.com/entertainment/hammasa.html

The website quotes her as

"I never even considered pulling out. I’m not going to let someone else dictate my life.

"I don’t think anyone has the right to tell me what to do because I don’t tell them what to do..."

Ithu eppadi irukku?

-vethalam

3:48 PM, September 19, 2005  
Anonymous Anonymous said...

Inomeno
andha Nietzsche quote kooda dharumi annan blogla irundhu sutathuthan

vethalam

10:44 PM, September 19, 2005  
Anonymous Anonymous said...

Sania won todays match.Good.

10:22 PM, September 20, 2005  
Anonymous Anonymous said...

Erai Nesan said...
//குரானில் முஸ்லீமல்லாதவர்கள் தீண்டத்தகாதவர்கள் என்று சொல்லியிருப்பதை//

Hi!Hi!Hi! (Please Smile in Nakkal Style)

Wednesday, September 21, 2005 12:58:54 AM


Erai Nesan said...
I couldn't post this in appropriate Post //மலாய்பெண்ணின் அடையாள அட்டையிலிருந்து இஸ்லாம் என்ற வார்த்தையை நீக்க கோரி விடுத்த மனு நிராகரிக்கப்பட்டது//

That's why i post here!

Sorry for the inconvenience!!!!



//தமிழ்நாட்டில் யார் வேண்டுமானாலும் எந்த மதத்துக்கு வேண்டுமானாலும் போகலாம், ஆனால் இஸ்லாமுக்கு ஒருவர் மதம் மாற முடியாது என்று சட்டம் கொண்டுவரவேண்டும். தற்போது இஸ்லாமில் இருப்பவர்களுக்கு இரண்டு மாத அவகாசம் கொடுத்து வேறொரு மதத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படி தேர்ந்தெடுக்காத பட்சத்தில் அரசாங்கமே அவர்களை வேறொரு மதத்திற்கு மதம் மாற்றிவிடும் என்று சட்டம் கொண்டு வரலாம்.//

Forward to Tamil Nadu Chief Minister J.Jayalalitha.

//"எல்லா இஸ்லாமிய நாடுகளி"லும் இருக்கும் "இஸ்லாமிலிருந்து வெளியேற முடியாது" சட்டம்//

Forward to "ALL ISLAMIC COUNTRIES"(!!!?????)

Unfortunately this message is return back.Can you give me the list of "ISLAMIC COUNTRIES".

//அதே போல, எல்லா இஸ்லாமிய நாடுகளிலும் சர்ச்சுகளையும் கோவில்களையும் கட்ட அனுமதிக்கும் வரைக்கும்,//

First you support to make one "ISLAMIC COUNTRY". Then surely i will support to you.

//இருக்கும் மசூதிகளும் இடிக்கப்படும்//

Go Ahead with ur "SANK GROUP"!

Wednesday, September 21, 2005 1:12:41 AM

1:22 AM, September 21, 2005  
Anonymous Anonymous said...

//Aravindan is fighting against terrorism.He fights against fascism.//

Good!
Can anybody show Aravindan's writings demanding the resignation of Narendra Modi?

Can anybody show Aravindan has wriiten against the demolish of Babri Masjid?

Can anybody show Aravindan oppose The culprits who burnt alive the Australians in Orissa?
- VISHNUVARDHAN

4:20 AM, September 21, 2005  
Anonymous Anonymous said...

Every week something or the other happens in world.what is the point in asking 'why you dint write on this issue and that issue?'.If aravindan writes on everything,then he has to run several newspapers on his own.

Aravindan has opposed valentine day violence by shivsena.He has written about gujarat also.whichever side does mistake he condemns it.He is not partial.

vethalam

10:39 AM, September 22, 2005  
Anonymous Anonymous said...

//Every week something or the other happens in world.//

But it will catch the attention of people like aravindan only if it is related to muslims!!!

Bravo to his impartiality!!

7:15 PM, September 22, 2005  
Anonymous Anonymous said...

இந்துத்வ கும்பல்களுக்கு சிங்கி போடும் வெள்ளைத்தோல் யூதகும்பலில் ஒருவன் கார்ல்சாகன். காபாவில் இருப்பது விண்கல் என்றும் அதனை உடைத்து மேற்கத்திய விஞ்ஞானிகளுக்கு ஆராய்ச்சி செய்ய அனுப்ப வேண்டும் என்றும் கூறியவன் இந்த கார்ல்சாகன் இதிலிருந்தே அவனது இஸ்லாமிய வெறுப்பினை தெரிந்து கொள்ளலாம். ஆனால் தனது "அறிவியல்" புத்தகங்களில் நடராசரையும் ஆரிய வேதங்களையும் புகழ்ந்திருக்கிறான். இவனது மூளையில் உருவானதுதான் இந்த Seti. இதன் மூலம் படைத்தவனை மறுக்க முடியும் என கார்ல்சாகன் கூறியுள்ளான். நீலகண்டன் போன்ற வெறியன் ஏன் இதை ஆதரிக்கிறான் என்பதன் உண்மை காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

10:09 AM, September 24, 2005  
Anonymous Anonymous said...

Your blog keeps getting better and better! Your older articles are not as good as newer ones you have a lot more creativity and originality now keep it up!

6:14 PM, January 04, 2010  

Post a Comment

<< Home