Tuesday, October 11, 2005

ஜிகாதி மிருகங்கள் கொன்ற பாரதிய இஸ்லாமிய சகோதரர்கள்


"மகா மங்கலமான புண்ணிய பூமியே
இவ்வுடல் உனது பணிக்கே அர்ப்பணமாகட்டும்" - சங்க பிரார்த்தனை


பன்னிரண்டுக்கும் மேற்பட்ட குஜார் இன இஸ்லாமிய மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களுள் குழந்தைகளும் அடக்கம். கொலை செய்தவர்கள் இஸ்லாமிய ஜிகாதிகள். காரணம் இந்த மக்கள், பயங்கரவாதிகளுக்கு எதிரான கிராம பாதுகாப்பு படையில் இணைந்து செயல்படுவதுதான். எங்கோ ஈராக்கில் சித்திரவதை செய்ததாக சொல்லப்படுவதற்கு காஷ்மிர் முதல் நாகர்கோவில் வரை கொடி பிடித்து கூச்சல் போடும் வகாபி ரக இஸ்லாமிய சமுதாய தலைவர்களின் மவுனம் காதைச் செவிடாக்குகிறது. இந்த குஜார் இன மக்களின் தியாகம் யாராலும் நினைக்கப்படாமல் போகக்கூடாது. பொதுவாகவே நம் மதச்சார்பின்மைக்கு ஒரு நோய் உண்டு. அலி மியான்களுக்கும் அவுரங்கசீப்புகளுக்கும் வக்காலத்து வாங்கி அவர்களையே ஏதோ இஸ்லாமிய சமுதாயத்தின் ஒட்டுமொத்த பிரதிநிதியாக காட்ட முற்படும் இடதுசாரி, சோசலிச மதச்சார்பற்ற கட்சிகள், நமக்கு அஷ்பக்குல்லா கானையோ அல்லது தாரா ஷுகோவையோ, ரஸகானையோ நமக்கு கூறுவதில்லை. அல்லது காஷ்மிரில் அராபிய மேன்மைவாத பயங்கரவாதத்தால் அழிக்கப்படும் உண்மை காஷ்மிரியத்தின் சூஃபி அம்சங்கள் குறித்து சிறிதும் கவலை கொள்வதில்லை.


எனவேதான் கன்னியாகுமரி மாவட்டத்தில் இடலாக்குடி எனும் இஸ்லாமியர் அதிகம் வாழும் ஊரில் வாழும் சராசரி இஸ்லாமிய இளைஞனுக்கு ஒசாமா பின் லாடனுக்காக கூறப்படும் 'மதச்சார்பற்ற' நியாயங்கள் தெரியுமளவுக்கு, யூத வெறுப்பின் 'நியாயங்கள்' தெரியமளவுக்கு, தக்கலை பீரப்பாவின் பாடல்கள் தெரிவதில்லை.
எனவேதான் சராசரி இந்திய இஸ்லாமிய இளைஞனுக்கு பாலஸ்தினீய பயங்கரவாதிகளுக்கு ஏற்படும் பரிவு காஷ்மீரில் அல்லாவின் புனிதப்படை என்று தங்களை சொல்லிக்கொள்பவர்களால் படுகொலை செய்யப்பட்ட இந்த அப்பாவி முஸ்லீம்கள் குறித்து (குறைந்தபட்ச வருத்தமோ கோபமோ கூட) ஏற்படவில்லை. ஆனால் நாம் அனைவருமே அந்த பாரத இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு தலைவணங்க கடமைப்பட்டிருக்கிறோம்.


அடுத்ததாக 28 வயது சுதீர் குமார் புந்திர் மற்றும் அவரது சகோதரர் 18 வயது சகோதரர். சுதீர் ரயில்வே எஞ்சீனியர். காஸிகுந்த்-பாராமுல்லா புகைவண்டி இணைப்புப்பணியில் பணியாற்றி வந்தவர்.அவரையும் அவரை காண வந்த அவரது சகோதரரையும் ஷகீன் என்னும் வெறியனின் தலைமையில் இயங்கும் லக்ஷர்-ஈ-தொய்பா வெறியர்கள் கடத்திச் சென்றனர். 50 இலட்சம் ரூபாய் மீட்புத்தொகையாக கேட்ட இந்த வெறியர்கள் கடத்திச் சென்ற இருநாட்களுக்கு பின்னர் ஜூன் 25 ஆம் தேதி அவர்களை கொன்றனர். கழுத்துகளை வெட்டி. உலகெங்கும் இந்த கழுத்து வெட்டும் ஜிகாதி பண்பாடு அண்மையில் பிரசிக்தி வருகிறதென்றாலும் காஷ்மீருக்கு இது மிகவும் பழைய ஒன்று என்றுதான் கூறவேண்டும். பாரத பண்பாட்டில் சிறிது அதீத ஈடுபாடு கொண்ட சுற்றுலா பிரயாணியான நார்வேஜிய நாட்டு ஹான்ஸ் கிறிஸ்டியன் ஓஸ்ட்ரோ 1995 இல் அல்-பரான் (இன்று இந்த அமைப்பின் பெயர் ஹர்கத்-உல்-முஜாகிதீன்) அமைப்பினால் கழுத்து சீவப்பட்டார். தலை துண்டிக்கப்பட்ட அவர் உடல் அல்-பரான் என்ற எழுத்துக்களுடன் கண்டெடுக்கப்பட்டது. இதுதான் சர்வதேச அளவில் காஷ்மீரில் நடைபெறும் ஜிகாதி காட்டுமிராண்டித்தனத்தை வெளி உலகிற்கு கொண்டுவந்தது. ஆனால் இதற்கு முன்னரும் சரி பின்னரும் சரி பல காஷ்மீரி பண்டிட்களும் சரி, இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு தலைவணங்க மறுக்கும் இஸ்லாமியர்களும் சரி இந்த காட்டுமிராண்டித்தனத்தை அனுபவித்தே வருகின்றனர். 2001 இல் பூஞ்ச் மாவட்டத்தில் இரண்டு ஹிந்து கோவில் பூசாரிகள் தலை துண்டிக்கப்பட்டது. இம்முறை கொல்லப்பட்ட குஜார் இன மக்களில் ஐந்து வயது ஸாகிதாவும் அவளது நான்கு வயது தம்பியும் அடக்கம்.


இன்று மிகத்தெளிவாக லஷ்கர்-ஈ-தொய்பா பயங்கரவாதி என நிரூபிக்கப்பட்டுள்ள இஷ்ரத்துக்காக முதலைக்கண்ணீர் வடித்த அரசியல்வாதிகளும், 'மதச்சார்பற்ற' பத்திரிகையாளர்களும் இன்ன பிற இஸ்லாமிய மேன்மைவாதிகளும் ஸாகிதாவுக்காகவோ அல்லது சுதீர் குமார் புந்திருக்காகவோ ஒரு சொட்டு கண்ணீரையும் விடப்போவதில்லை. குறைந்த பட்சம் பாரதிய ஜனதாவாவது தங்கள் தோல்விக்கு யார் காரணம் என குடுமிப்பிடி சண்டை போடுவதை விட்டுவிட்டு இந்த உண்மையான தியாகிகளுக்காக தங்கள் மரியாதையையும் அஞ்சலியையும் காட்டி நாடு முழுவதும் அஞ்சலி கூட்டங்கள் நடத்தலாம். மீண்டும் இந்த தியாகிகளுக்கு சிரம் தாழ்த்துவோம். இந்த எழுதப்படாத தியாகங்களே நம் தேசத்தை வாழவைப்பவை. நம் ஒவ்வொரு செயலும் இத்தியாகங்களால் சுக வாழ்க்கை வாழும் நம்மை இத்தியாகங்களுக்கு சிறிதளவேனும் தகுதியுடையவர்களாக்கட்டும். ஜெய் ஹிந்த்!



('தியாகிகளுக்கு கண்ணீருடன் சிரம் தாழ்த்துவோம்' எனும் தலைப்பில் திண்ணை இணைய-இதழில் (ஜூலை 22, 2004) வெளியான கட்டுரை இது. நம் முற்போக்குகள் இன்ன மதச்சார்பற்ற ஜீவராசிகளின் உலகில் இத்தகையோர் வாழ்க்கைக்கு எவ்வித மதிப்புமில்லை என்பதால் அரவிந்தன் நீலகண்டன் போன்ற 'ஹிந்துத்வ பாசிஸ்ட்களாவது' அவர்களை நினைவு கூர்ந்து அவர்கள் பலிதானங்களை மதிக்கவேணும் என்பதற்காகவே இக்கட்டுரை.)
நன்றி: திண்ணை.காம்

3 Comments:

Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

நன்றி இறைவன். பாரதத்தில் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளுக்கும் காஃபீர் ஹிந்துக்களை கொல்வதை சமயக்கடமையாக நினைக்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கும் சிறிதும் பஞ்சமில்லை. பெரியண்ணன் புஷ் சொன்னதை 'இப்போதைக்கு இவுங்களால எங்களுக்கு பிரச்சனையில்லை' என்றே பொருள் கொள்ளவேணும். அல் கொயிதாவை காஷ்மீருக்கு திசை திருப்பினா அமெரிக்காவுக்கு பிரச்சனையில்லைன்னா அதுக்கான பிரச்சாரத்திலேயும் அமெரிக்கா இறங்கும். அமெரிக்காவோ ரஷ்யாவோ நாம அவங்களை நம்ம நன்மைக்கு பயன்படுத்திக்கணும் அவ்வளவுதான். என்னதான் அமெரிக்காவும் இஸ்ரேலும் கொஞ்சிக் குலாவுனாலும் மொசாட்டும் சிஐஏயும் ஒருத்தர ஒருத்தர் வேவுபார்த்திட்டுதான் இருக்காங்க. ஏன்னா இஸ்ரேலுக்கு தெரியும் நாளைக்கே தனக்க சுயநலத்துக்கு இஸ்ரேல்கிட்ட அறுத்துகிட்டா அமெரிக்காவுக்கு நல்லதுன்னா அத செய்ய அண்ணன் புச்சு தயங்கமாட்டான்னு. நமக்கு இன்னத்த தேதிக்கு வேண்டியது அமெரிக்காவுல ஒரு வலிமையான ஹிந்து லாபி.

11:08 PM, October 11, 2005  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

ராஜசிம்மன்,

நீங்கள் கூறிய தகவலின் உரலை அளிக்கிறீர்களா? ஏனெனில் இது குறித்து நான் கூகிள் செய்தித் தேடல் சேவையில் பார்த்த அளவில் (அக்டோ பர் 5, 6 ஆகிய தேதி செய்திகளின் படி) ஐயம் எழுப்பப்பட்டிருப்பதாகவும், இராணுவ விசாரணை நடப்பதாகவும் தெரிகிறது. 'ஆட்டோ ப்ஸி வந்த பின்னர்தான் எதுவும் கூறமுடியும்' எனக் கூறியதாகவும் தெரிகிறது. மாறாக, எத்தனை ஜிகாதி அமைப்புகளில் உறுப்பினர்கள் 'ஹிந்துக்களைக் கொன்றதற்காக' பத்வா அளிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்கள்/தண்டிக்கப்பட்டுள்ளார்கள்? ஜிகாத் வன்முறையல்ல என முழங்கும் மார்க்கப் பெரியவர்கள் சானியாவின் உடை நீளத்திற்கு அளித்த பத்வா தீவிரத்தை, அல்லது மௌல்விகளுக்கு சல்மான் ரஷ்டியின் பேனா மையால் எழுந்த ஆத்திரத்தை, ஜிகாத் எனக்கூறி சக தேச சகோதரர்களை கொன்று இஸ்லாமுக்கு கெட்டபெயர் வாங்கிக் கொடுப்பதாக அவர்கள் கூறிக்கொள்ளும் அமைப்புகளின் மீது காட்டக் காணோமே ஏன்? லஸ்கர்-இ-தொய்பா ஒரு இஸ்லாமிய அமைப்பல்ல என இம்ரானா-புகழ்-தியோபந்திகள் ஒரு பத்வா அளிக்கலாமே? ஏதாவது ஒரு பாஜக-சார்ந்த மௌலானாவோ அல்லது வலிகானோ ஒரு மூலையில் ஒரு குரல் எழுப்பினால் உண்டு. மற்றபடி நாம் கேட்பதெல்லாம் மௌனம்தான். ஆனால் இந்திய ராணுவத்தில் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் விசாரணை கமிஷன்கள் அமைக்கப்படுகின்றன. மனித உரிமை மீறல்கள் எனும் பழிகள் பொய்யென நிரூபிக்கப்பட்ட தருணங்களும் உண்டு; மனித உரிமை மீறல்களுக்காக ராணுவ வீரர்கள் தண்டனை பெற்ற தருணங்களும் உண்டு. ஆனால் ஜிகாதி தரப்பில்?

8:19 PM, October 13, 2005  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

//ஒரு ஊர் பேர் தெரியாத ஒரு மௌலவியைப் பிடித்து மீடியா பத்வா வாங்கி//
இதோ ஊர் பேர் தெரியாத மௌல்வி கும்பலின் லிஸ்ட்

"ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பின் ஆலோசகரான அஸ்லம் ராசி என்பவர் கூறுகையில், ``சானியாவின் சாதனைகளை நினைத்து பெருமைப்படுவதாகவும் அதே சமயம், விளையாடும் போது அவர் ஏன் இப்படி உடை அணிகிறார் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை'' என்றும் தெரிவித்தார். சானியாமிர்சா ஏன் நீளமான பாவாடையும், முழுக்கை சட்டையும் அணிந்து ஆடக்கூடாது? என்று கேள்வி எழுப்பிய அவர் 25 ஆண்டுகளுக்கு முன் வீராங்கனைகள் அந்த மாதிரிதான் உடை அணிந்து விளையாடியதாகவும் கூறினார்.
குட்டைப்பாவாடையும், இறுக்கமான சட்டையும் தான் அணிந்து விளையாட வேண்டும் என்று உடை சம்பந்தமான ஏதாவது விதிமுறைகள் இருக்கிறதா? என்றும் அஸ்லம்ராசி கேட்டு இருக்கிறார்."
உலமா கவுன்சிலைச் சேர்ந்த மவுலானா மகமூத் தரியாபாதி கூறுகையில், ``டென்னிஸ் ஒரு விளையாட்டுதானே தவிர, `பேஷன் ஷோ' அல்ல'' என்றார். சானியா அணியும் உடை மற்றவர்களை சங்கடப்படுத்துவதாக இருந்தால் தனது உடம்பை மறைத்தபடி உடை அணிந்து விளையாடும் பொறுப்பு அவருக்கு உள்ளது என்றும் கூறினார். (தினதந்தி செப்-5)
இவர்களெல்லாம் ஊர் பேர் தெரியாதவர்களா? அல்லது இஸ்லாமிய சமுதாயத்தில் கணிசமான தாக்கத்தை உருவாக்க முடிந்தவர்களா? அடுத்ததாக கல்கத்தா நகரில் அவருக்கு ஒரு அமைப்பு மிரட்டல் விடுத்ததும், ஐபி பிரிவும் உளவறிக்கை அடிப்படையில் மேற்குவங்க காவல்துறை அவருக்கு பாதுகாப்பளித்ததும் மீடியா நிகழ்வுகள் அல்ல."Siddiqullah Chowdhary of the Muslim body, Jamaat-e-Ulema-e-Hind said what Mirza wears offends Islam and Jamaat activists will prevent her from playing in the Sunfeast Open to be held in the eastern Calcutta city beginning Monday.ஓ She will be stopped from playing if she doesnஒt adhere to the Islamic dress codeஔ Chowdhary was quoted by the Asian Age newspaper as saying. The 18-year-old sportswoman has been criticised in the past week by some Muslim bodies and scholars for wearing short skirts, sleeveless shirts and make-up, which they say are un-Islamic. Some organisations, like the Sunni Ulema Board even issued a fatwa against her. Mirza has remained silent on the issue and is focusing on her game to try to break into the world top 10." இந்த செய்தி ஆர்கனைசரில் வந்ததல்ல. கலீஸ் டைம்ஸ் ஆன்லைன் (செப்டம்பர் 17) இன்றைக்கு சில முக்கிய இஸ்லாமிய அமைப்புகள் இந்த பத்வாவை எதிர்க்க முன்வந்திருப்பது சந்தோஷமான விஷயம். இதில் தமிழக முஸ்லீம் பெண்கள் ஜமாத்தும் இதில் அடக்கம் என்பது இன்னமும் சந்தோஷம்.

5:33 AM, October 16, 2005  

Post a Comment

<< Home