நல்லடியின் ஜல்லியடிகள்-1: குர்-ஆனில் விண்வெளிப்பயணம்
அண்மையில் தமிழோவியத்தில் நேசகுமாருக்கு பதிலளிப்பதாக வெளியான நல்லடியாரின் கட்டுரைத்தொடரில் நபி என இஸ்லாமியர் நம்புகிற முகமதுவுக்கு வந்த வஹி என்பது நரம்பியல் பாதிப்பால் ஏற்பட்டதல்ல அமானுடமானது எனக் காட்ட நல்லடியார் பின்வருமாறு எழுதியிருந்தார்:
உரல்:http://www.tamiloviam.com/unicode/thodargalpage.asp?folder=nalladiyar1&taid=6
விண்வெளிப் பயணம்
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?. 'மனித, ஜின் கூட்டத்தார்களே! வானங்கள், பூமி ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெறுவீர்களாயின், (அவ்வாறே) செல்லுங்கள். ஆனால், (வல்லமையும் நம்) அதிகாரமும் இல்லாமல் நீங்கள் கடக்க முடியாது." அல்குர்ஆன் 55:32-33
இவ்வசனம் விண்ணுலகம் வரை மனிதன் பயணம் மேற்கொள்ள முடியும் என்று தெளிவாகச் சொல்கிறது. அதே நேரத்தில் அது எவ்வாறு சாத்தியமாகும் என்பதற்கான வழிகளையும் சொல்கிறது.
ஒரு ஆற்றலை உருவாக்கிக் கொள்வதன் மூலமாகவே தவிர நீங்கள் இந்த எல்லைகளையெல்லாம் கடக்க இயலாது என்றும் கூறுகிறது.
விண்ணில் பறக்க முடியுமா? என்பதைக் கற்பனை செய்து கூட பார்த்திராத அந்த சமுதாயத்தில் முடியும் என்பதையும், அதற்கென ஓர் ஆற்றல் தேவை என்பதையும் கூறி, இறை வேதம் தான் என்று திருக்குர்ஆன் தன்னை நிரூபித்துக் கொள்கிறது.
இது தொடர்பாக நான் அளித்த பின்னோட்டம்
உரல்: http://www.tamiloviam.com/unicode/thodargalpage.asp?folder=nalladiyar1&taid=7
தேதி: 10/29/2005
நல்லடியின் ஒவ்வொரு கருத்தையும் நார் நாராக கிழிக்க முடியும் என்றாலும் சாம்பிளுக்கு ஒன்றே ஒன்று: நல்லடி விண்வெளி பிரயாணம் குறித்து குறிப்பிடும் குரான் வசனங்களை பார்ப்போம்:
நல்லடியாரின் வார்த்தைகளில்:
//"ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?. 'மனித, ஜின் கூட்டத்தார்களே! வானங்கள், பூமி ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெறுவீர்களாயின், (அவ்வாறே) செல்லுங்கள். ஆனால், (வல்லமையும் நம்) அதிகாரமும் இல்லாமல் நீங்கள் கடக்க முடியாது." அல்குர்ஆன் 55:32-33 இவ்வசனம் விண்ணுலகம் வரை மனிதன் பயணம் மேற்கொள்ள முடியும் என்று தெளிவாகச் சொல்கிறது. அதே நேரத்தில் அது எவ்வாறு சாத்தியமாகும்
என்பதற்கான வழிகளையும் சொல்கிறது. ஒரு ஆற்றலை உருவாக்கிக் கொள்வதன் மூலமாகவே தவிர நீங்கள் இந்த எல்லைகளையெல்லாம் கடக்க இயலாது என்றும் கூறுகிறது. விண்ணில் பறக்க முடியுமா? என்பதைக் கற்பனை செய்து கூட பார்த்திராத அந்த சமுதாயத்தில் முடியும் என்பதையும், அதற்கென ஓர் ஆற்றல் தேவை என்பதையும் கூறி, இறை வேதம் தான் என்று திருக்குர்ஆன் தன்னை நிரூபித்துக்கொள்கிறது.//
அராபியர்கள் இஸ்லாமின் வருகைக்கு முன்னர் நாகரிகமே அறியாதவர்கள் இல்லை. சுமேரிய நாகரிகத்துடன் அராபிய நாகரிகத்தின் தொடர்பினை விளக்க அசாதாரண ஆராய்ச்சியாளர்கள் தேவையில்லை. சாதாரண கல்லூரி
ஆசிரியர்கள் போதும். சுமேரியர் கலாச்சாரத்திலும் சரி ஏனைய உலக கலாச்சாரங்களிலும் சரி விண்ணில் பறப்பது குறித்த கற்பனைகள் அதற்கு காற்றின் ஆற்றலை பயன்படுத்தலாமா என்பது போன்ற ஊகங்கள் தொடங்கிவிட்டன. விண்ணறைகள் கொண்ட வான் ஊர்த்தி குறித்தெல்லாம் கற்பனைகளை சுமேரிய எழுத்துரு மண்படிவங்களில் காணலாம். இந்திய இதிகாசங்களிலும் இத்தகைய கற்பனைகளுக்கு பஞ்சமேயில்லை.ஆனால் இதையெல்லாம் வைத்துக்கொண்டு எங்கள் முன்னோர்கள்தாம் விண்வெளி ஓடங்களை கண்டுபிடித்தார்கள் என்று யாராவது கதை விட்டால் (அப்படி கதை விடும் நல்லடி கூட்டம் எங்கும் உண்டு) 'மடப்பயலே' என்று நாங்களே அதட்டி காதை திருகி உட்கார வைப்போம் இப்படி 'ஆகா பேஷ் பேஷ்' என்று காக்கா கச்சேரி வைக்க மாட்டோம்.
என்ன சொல்லவந்தேன் என்றால் //விண்ணில் பறக்க முடியுமா? என்பதைக் கற்பனை செய்து கூட பார்த்திராத அந்த சமுதாயத்தில்// என்கிற நல்லடியின் வல்லடி வெறும் ஜல்லியடி அன்றி வேறில்லை. இனி குரான் கூறும் வசனத்திற்கு வருவோம்.
[அர்-ரஹ்மான்:அளவற்ற அருளாளன் 55:33] மனு, ஜின் கூட்டத்தார்களே! நீங்கள் வானங்கள் பூமியின் எல்லையைக் கடந்து சென்றுவிட உங்களால் கூடுமாயின் அவ்வாறே சென்று விடுங்கள். ஆயினும், (அவைகளை ஆட்சி புரியக் கூடிய மிகப்பெரும்) ஆற்றலுடனன்றி, நீங்கள் செல்ல முடியாது. (அத்தகைய ஆட்சியும் ஆற்றலும் உங்களுக்கு இல்லை.) நான் மேலே கொடுத்துள்ள வசனத்தில் வளைவுக்கோடுக்களுக்குள் இருக்கும் பதங்கள் குறித்து "வசனங்களின் கருத்தைத் தெளிவுபடுத்தும் பொருட்டு ஆங்காங்கு சில பதங்கள் வளைவுக்கோட்டுக்குள் கொடுக்கப்பட்டிருப்பதாக" என்னிடமிருக்கும் தர்ஜுமதுல் குர்ஆன் நூல் தொடக்கத்தில் அதன் 'சிறப்பியல்புகள்' கூறுகிறது.
ஆக, மனிதர்களும் ஜின்களுக்கு 'வானங்கள் பூமியின் எல்லை ஆகியவற்றை ஆட்சி செய்யும் ஆற்றல் உங்களுக்கு இல்லை. அந்த ஆற்றல் இல்லாமல் கடக்க முடியாது. எனவே உங்களால் முடியாது' என்பதே இவ்வசனத்தின் உட்கிடக்கை. இவ்வாறு கூறுகிறவர் அல்லாமா ஆ.கா.அப்துல் ஹமீது பாகவி. [மவ்லானா இன்று உயிருடன் இல்லை.] இம்மொழிபெயர்ப்பு அகில உலக முஸ்லீம் லீக் 'ராபிதயெ ஆலமெ இஸ்லாமீ' மற்றும் 'ரியாஸத்தெ தாருல் புஹூஸ் அல்-இல்மிய்யா வல் இஃப்தா வத் தஅவத் வல் இர்ஷாத்' ஆகியவற்றின் அங்கீகாரம் வாய்க்கப் பெற்ற ஒரே தமிழ் மொழிபெயர்ப்பு. ஆக இந்த மொழி பெயர்ப்பின் படி மேற்கண்ட வசனத்தின் ஷரஹ் என்னவென்றால் "மனு, ஜின் கூட்டத்தார்களே! நீங்கள் வானங்கள் பூமியின் எல்லையைக் கடந்து சென்றுவிட உங்களால் கூடுமாயின் அவ்வாறே சென்று விடுங்கள். ஆயினும், (அவைகளை ஆட்சி புரியக் கூடிய மிகப்பெரும்) ஆற்றலுடனன்றி, நீங்கள் செல்ல முடியாது. (அத்தகைய ஆட்சியும் ஆற்றலும் உங்களுக்கு இல்லை.)" என்பது.
நல்லடியாரின் கூற்று என்னவென்றால் //இவ்வசனம் விண்ணுலகம் வரை மனிதன் பயணம் மேற்கொள்ள முடியும் என்று தெளிவாகச் சொல்கிறது.// என்பதாகும். ஆக ஒரே வசனத்திற்கு நேரெதிராக இருவிதப் வாசிப்புக்கள். ஒரு வாசிப்பு அகில உலக அளவில் இஸ்லாமிய உலேமாக்களால் ஏற்கப்பட்டது. அது கூறுகிறது விளக்கவுரையாக (-ஷரஹ்)-"உங்களால் கூடுமாயின் அவ்வாறே சென்று விடுங்கள். ஆயினும், (அவைகளை ஆட்சி புரியக் கூடிய மிகப்பெரும்) ஆற்றலுடனன்றி, நீங்கள் செல்ல முடியாது. (அத்தகைய ஆட்சியும் ஆற்றலும் உங்களுக்கு இல்லை.)" மற்றொன்று நல்லடி காஃபீர்களாகிய நம்மிடம் ஜல்லியடிக்க கொடுக்கும் சிறிதே திருகல் வேலை செய்து அளிப்பது. இரண்டுக்கும் எவ்வளவு வேறுபாடு! ஒன்று நல்லடி சொல்வது பொய் அல்லது செத்துப்போன மவ்லானா அளித்த மொழிபெயர்ப்பு தவறானது. அதை சரி எனக்கூறி சொன்ன உலேமா கூட்டம் மடையர்கள்!
இந்த எளிய வசனத்திற்கே ஏக-விளக்கம் அளிக்க முடியாதவர்கள் இறைவன் ஏகன் என்பதில் தெளிவாக இருக்கிறார்களாம். (உடனே இந்துக்களின் புராண இதிகாச தத்துவ நூல்களுக்கு பலவாசிப்புக்கள் இருக்கிறதே என வரப்போகும் பின்னோட்டங்களுக்கு, ஹிந்துக்கள் எங்கும் இதுதான் உண்மை இதை நம்பாவிட்டால் உனக்கு நித்திய நரகம் என இன்றைக்கு கூறவில்லை. பெரும்பான்மை இந்துக்கள் என்றைக்கும் கூறியதில்லை.)
Peace கண்காட்சியில் அறிவியல்-குர்ஆன் குறித்த பேனல்கள் இருந்த இடத்தில் விளக்கமளிக்க நின்ற எர்ணாகுளத்தை சார்ந்த இஸ்லாமிய இளைஞரிடம் இது குறித்து உரையாடியது ஞாபகம் வருகிறது. பெயரைச் சொன்னால் அவருக்கு பிரச்சனை. சில பிரச்சனையான விசயங்களை அவரிடம் விளக்கி உரையாடிக்கொண்டிருந்தேன். அவர் சொன்னதை அப்படியே தருகிறேன் நம்புவதும் நம்பாததும் உங்கள் இஷ்டம்: "Actually we took many English translations and found which translation comes close in sense to a modern scientific discovery and then made a panel. I know it is wrong and not scientific but you should understand Koran is a book of signs and not science. This is to boost the faith in One God." அவர் நல்லடியைக் காட்டிலும் நேர்மையானவர். குரானில் அறிவியல் என்பதெல்லாம் நம்பிக்கை ஊட்ட செய்யப்படும் முயற்சிகள் என ஒத்துக்கொண்டார். இப்படியே நல்லடியின் ஒவ்வொரு ஜல்லியடியையும் தோலுரித்துக் காட்டமுடியும்.
நல்லடியார் இதற்கு பதிலளிக்கவில்லை. இதற்கு முஸ்லீம் எனும் பெயரில் ஒருவர் பின்வருமாறு பதிலளித்தார்.
உரல்: http://www.tamiloviam.com/unicode/thodargalpage.asp?folder=nalladiyar1&taid=8
தேதி: நவம்பர்-1-2005
- 1) மனு ஜின் கூட்டத்தார்களே! நீங்கள் வானங்கள் பூமியின் எல்லையைக் கடந்து சென்றுவிட உங்களால் கூடுமாயின் அவ்வாறு சென்று விடுங்கள். ஆயினும் (அவைகளை ஆட்சி புரியக்கூடிய மிகப் பெரும்) ஆற்றலுடனன்றி நீங்கள் செல்ல முடியாது. (அத்தகைய ஆட்சியும் ஆற்றலும் உங்களுக்கு இல்லை) (55:33) இது அப்துல் ஹமீது பாகவி அவர்களின் குர்ஆன் தமிழ் மொழி பெயர்ப்பு. நண்பர் அரவிந்தன் நீலகண்டன் அவர்களின் சார்பில் வைக்கப்பட்டது.
- 2) 'மனு, ஜின் கூட்டத்தார்களே! வானங்கள், பூமி ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெறுவீர்களாயின், (அவ்வாறே) செல்லுங்கள்; ஆனால், (வல்லமையும் நம்) அதிகாரமும் இல்லாமல் நீங்கள் கடக்க முடியாது. (55:33) இது ஜான் டிரஸ்ட் நிறுவனம் வெளியிட்ட குர்ஆன் தமிழ் மொழி பெயர்ப்பு. நண்பர் நல்லடியார் அவர்களின் சார்பில் வைக்கப்பட்டது.
அரவிந்தன் நீலகண்டன் எப்படி ஒரு மொழி பெயர்ப்புப் புத்தகத்திலிருந்து 55:33வது வசனத்தை எடுத்துக் காட்டினாரோ, அவ்வாறே நல்லடியாரும் வேறொரு மொழி பெயர்ப்புப் புத்தகத்திலிருந்து 55:33வது வசனத்தை முன் வைத்திருக்கிறார், இதை நல்லடியாரே மொழி பெயர்த்து வைத்தமாதிரி அ.நீலகண்டன் குற்றப்படுத்துவது சற்று அதிகம்தான். இன்று இணையத்தளத்தில் உள்ள தமிழ் குர்ஆனிலிருந்தே 55:33வது வசனத்தை நல்லடியார் மேற்கோள் காட்டியிருந்தார். இணைத்தளத்திலிருந்து கையாண்டதைக்கூட பின்னூட்டத்தில் சொல்லப்பட்டிருந்தது (சென்ற கட்டுரையில் படித்த ஞாபகம்)
சரி, இரண்டு மொழி பெயர்ப்பிலும் வித்தியாசம் இருப்பதாகச் சொல்வது சரியா என்றால் இல்லை - மொழி பெயர்ப்பிற்கு உள்ளே இல்லை. வெளியில், மொழி பெயர்த்த அறிஞரின் கருத்தில்தான் முரண்பாடு இருக்கிறது இங்கே பாருங்கள்,
1) மனு ஜின் கூட்டத்தார்களே! நீங்கள் வானங்கள் பூமியின் எல்லையைக் கடந்து சென்றுவிட உங்களால் கூடுமாயின் அவ்வாறு சென்று விடுங்கள். ஆயினும் ஆற்றலுடனன்றி நீங்கள் செல்ல முடியாது. (55:33) இது அப்துல் ஹமீது பாகவி அவர்களின் குர்ஆன் தமிழ் மொழி பெயர்ப்பு.
2) 'மனு, ஜின் கூட்டத்தார்களே! வானங்கள், பூமி ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெறுவீர்களாயின், செல்லுங்கள்; ஆனால், அதிகாரமும் இல்லாமல் நீங்கள் கடக்க முடியாது. (55:33) இது ஜான் டிரஸ்ட் நிறுவனம் வெளியிட்ட குர்ஆன் தமிழ் மொழி பெயர்ப்பு.
இரண்டு மொழி பெயர்ப்புகளிலும் அடைப்புக் குறிகளை நீக்கிவிட்டு இப்போது படியுங்கள் வார்த்தைகளில் மாற்றங்களைத் தவிர, சொல்லும் கருத்தில் முரண்பாடுகள் எதுவும் இல்லை. அப்படியானால் குர்ஆன் தமிழாக்கம் 1ல் அடைப்புக் குறிக்குள் (அத்தகைய ஆட்சியும் ஆற்றலும் உங்களுக்கு இல்லை) என்ற அறிஞரின் கருத்து, குர்ஆனின் நேரடி ''ஆற்றலுடனன்றி நீங்கள் செல்ல முடியாது.'' - அதாவது ''ஆற்றல் மூலம் செல்ல முடியும்'' என்றக் கருத்துக்கு முரண்படுகிறதே?
இதைத் தெளிவுபடுத்திக்கொள்ள மூல மொழி இருக்கிறதே!
குர்ஆன் தமிழ் மொழி பெயர்ப்புகளின் வசனங்கள் ஒன்றுக்கொன்று முரண்பாடாகத் தெரிய வந்தால் அதை மூல மொழியோடு உரசிப்பார்த்து அறிஞர்களின் தனிப்பட்ட ஆய்வுக் கருத்து குர்ஆன் வசனங்களோடு (நபிமொழிகளும்) ஒத்திருந்தால் ஏற்றுக்கொண்டு, முரண்பட்டால் அதை அப்படியே விட்டு விடலாம், சுட்டிக் காட்டினால் வெளியீட்டாளர்கள் அடுத்த பதிவில் திருத்திக் கொள்வார்கள் அதற்காக குர்ஆனைத் திருத்தச் சொல்வதாக யாரும் முடிவுக்கு வரவேண்டும் மொழிபெயர்ப்பில் தவறு இருந்தால் திருத்திக் கொள்ளலாம் என்பதே இதன் கருத்து.
மனிதர்கள் தவறு செய்பவர்களே என்ற அடிப்படையில் அறிஞர்களும் மனிதர்கள்தான் அவர்களின் சிந்தனையிலும் தவறுகள் எற்படவே செய்யும் என்பது மிகச் சாதாரண விஷயம். 55:33வது வசனத்தில் ''இல்லா பிசுல்தான்'' என்ற மூலவார்த்தைகளுக்கு ''ஆற்றல் மூலம் தவிர'' என்றே 1லும் 2லும் சரியாகவே மொழி பெயர்க்கப் பட்டிருக்கிறது. மூன் பப்ளிகேஷன் வெளியிட்டுள்ள குர்ஆன் தமிழ் மொழி பெயர்ப்பில் அடைப்புக் குறிகளின் அவசியமில்லாமலேயே 55:33வது வசனத்தின் தமிழ் விளக்கத்தை விளங்க முடியும்.
- 3) மனித ஜின் கூட்டமே! வானங்கள் மற்றும் பூமியின் விளிம்புகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெற்றால் கடந்து செல்லுங்கள்! ஆற்றல் மூலம் தவிர நீங்கள் கடந்து செல்ல மாட்டீர்கள் (55:33) இது மூன் பப்ளிகேஷன் வெளியிட்டுள்ள குர்ஆன் தமிழ் மொழி பெயர்ப்பு.
- 4) ஓ, ஜின் மற்றும் மனிதக்கூட்டங்களே! வானங்கள் மற்றும் பூமியின் எல்லைகளை விட்டு ஓடிச் செல்ல உங்களால் முடியுமானால் ஓடிப்பாருங்கள். உங்களால் ஓடிச் செல்லவே முடியாது, அதற்கெனப் பெரும் வலிமை வேண்டும். (55:33) இது I.F.T வெளியிட்ட குர்ஆன் தமிழாக்கம். (இதை என் நண்பர் வாங்கிச் சென்றிருந்தார் யார் என்று தெரிந்து கொள்ளவே இன்றைய பகல் பொழுது சென்று விட்டது விடாமல் விசாரித்ததில் கிடைத்து விட்டது)
- 5) O assembly of jinns and men! if you have power to pass beyond the zones of the heavens ant the earth, then pass (them) but you will never be able to pass them, with authority (from allah)! (55:33) இது மதீனா, மக்தப தாருஸ்ஸலாம் வெளியிட்ட குர்ஆன் ஆங்கில மொழி பெயர்ப்பு.
இதில் 1ம் மொழியாக்கம் சுமார் 60வருடம் பழமையானது. 4ம் மொழியாக்கமும் பழமையானதுதான் முதலில் உருது மொழியில் பெயர்க்கப்பட்டு, உருது மொழியிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டது.
நண்பரே! மொழியாக்கத்தில் உள்ள குறைபாடுகள் மொழிபடுத்தியவரைத்தான் சாரும் என்பதை நீங்களும் மறுக்க மாட்டீர்கள், மொழி பெயர்ப்பின் குறைகள் மூல மொழியை கறைபடுத்திடும் என்பதையும் நம்பமாட்டீர்கள் என்று நம்புகிறேன். (எழுதியதின் மீது (மட்டும்) தர்ம அடி இருந்தால் தொடங்கலாம் மீண்டும் நாளை இரவில் சந்திக்கிறேன்)
"(நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பி வைத்த ஒவ்வொரு தூதரும், நபியும், (ஓதவோ, நன்மையையோ) நாடும்போது, அவர்களுடைய அந்த நாட்டத்தில் ஷைத்தான் குழப்பத்தை எறியாதிருந்ததில்லை¢ எனினும் ஷைத்தான் எறிந்த குழப்பத்தை அல்லாஹ் நீக்கியப் பின்னர் அவன் தன்னுடைய வசனங்களை உறுதிப்படுத்துகிறான் - மேலும், அல்லாஹ் யாவற்றையும் அறிந்தவனாகவும், ஞானம் மிக்கோனாகவும் இருக்கின்றான். " (திருக்குரான் வசனம் - 22:52)
இதேத் திரியின் கருத்தில் மேற்கண்ட 22:52வது வசனத்தைப் பற்றியும் எனக்கு எழுத வேண்டியுள்ளது அதையும் விரைவில் வைக்கிறேன்.
-முஸ்லிம்
இதற்கு எனது பதில்:
அதே உரல் அதே தேதி.
//1) மனு ஜின் கூட்டத்தார்களே! நீங்கள் வானங்கள் பூமியின் எல்லையைக் கடந்து சென்றுவிட உங்களால் கூடுமாயின் அவ்வாறு சென்று விடுங்கள். ஆயினும் ஆற்றலுடனன்றி நீங்கள் செல்ல முடியாது. (55:33) இது அப்துல் ஹமீது பாகவி அவர்களின் குர்ஆன் தமிழ் மொழி பெயர்ப்பு.
2) 'மனு, ஜின் கூட்டத்தார்களே! வானங்கள், பூமி ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெறுவீர்களாயின், செல்லுங்கள்; ஆனால், அதிகாரமும் இல்லாமல் நீங்கள் கடக்க முடியாது. (55:33) இது ஜான் டிரஸ்ட் நிறுவனம் வெளியிட்ட குர்ஆன் தமிழ் மொழி பெயர்ப்பு.
இரண்டு மொழி பெயர்ப்புகளிலும் அடைப்புக் குறிகளை நீக்கிவிட்டு இப்போது படியுங்கள் வார்த்தைகளில் மாற்றங்களைத் தவிர, சொல்லும் கருத்தில் முரண்பாடுகள் எதுவும் இல்லை.//
ஆற்றல் என்பதற்கும் அதிகாரம் என்பதற்கும் வெகு வேறுபாடு உள்ளது நண்பரே. ஆற்றல் என்பதை அதிகாரத்திற்கு உருவகப்படுத்தி கூறப்பட்டுள்ளது என்பது தெளிவு. இந்த ஆற்றலுக்கும் இயற்பியலின் ஆற்றலுக்கும் வேறுபாடு உள்ளவன். உதாரணமாக 'வேலன் இந்நிலத்தில் வீடு கட்டும் அதிகாரம் உள்ளவன்' என்பதற்கும், 'வேலன் இந்நிலத்தில் வீடு கட்டும் ஆற்றல் உள்ளவன்' என்பதற்கும் வேறுபாடில்லை.ஒரு வழக்குரைஞர் இவ்வாறு கூறலாம். ஆனால் ஒரு பொறியியல் நிபுணர் 'ஒரு வீடு கட்ட இத்தனை அளவிகள் ஆற்றல் தேவை படுகிறது' எனக் கூறுவதுடன் ''வேலன் இந்நிலத்தில் வீடு கட்டும் ஆற்றல் உள்ளவன்' எனும் வாசகத்தை பொருத்தி இரண்டும் ஒன்றுதான் எனக் கூறுவது பிழையானது. ஆக இங்கு ஆற்றல் மற்றும் அதிகாரம் எனும் பதங்கள் என்ன பொருளில் பயன்படுத்தப்படுகின்றன என்பது தெளிவானதாகும். இது மிகவும் தெளிவாக கீழ் கண்ட நீங்கள் தந்த மொழிபெயர்ப்பில் தெளிவு படுகிறது: //5) O assembly of jinns and men! if you have power to pass beyond the zones of the heavens ant the earth, then pass (them) but you will never be able to pass them, with authority (from allah)! (55:33) இது மதீனா, மக்தப தாருஸ்ஸலாம் வெளியிட்ட குர்ஆன் ஆங்கில மொழி பெயர்ப்பு.// a small correction. In this "but you will never be able to pass them, with authority (from allah)!" should have been "but you will never be able to pass them, without authority (from allah)! (55:33)" Right?Comment dated: 2-Nov-2005
இங்கு கவனிக்க வேண்டிய பதம் ஆங்கில மொழிபெயர்ப்பில் கொடுக்கப்பட்டுள்ள 'அத்தாரிட்டி' என்பதே இதற்கும் எனர்ஜி என்கிற ஆங்கில பதத்திற்கும் முடிச்சு போடுவது கடினம். ஆனால் தமிழில் ஆற்றல்/அதிகாரம் ஆகியவற்றினை எளிதாக குழப்பிட முடிகிறது. அதை வைத்துக்கொண்டு விண்வெளிப்பயணத்தின் முன்னறிவிப்பையும் குரானில் காண முடிகிறது.
நண்பர் முஸ்லீம் அதே தேதியில் அளித்த பின்னூட்டம் : அதே உரல்
//1) மனு ஜின் கூட்டத்தார்களே! நீங்கள் வானங்கள் பூமியின் எல்லையைக் கடந்து சென்றுவிட உங்களால் கூடுமாயின் அவ்வாறு சென்று விடுங்கள். ஆயினும் >>ஆற்றலுடனன்றி>அதிகாரமும் இல்லாமல>authority (from allah)>authority (from allah)>authority (from allah)// -அரவிந்தன் நீலகண்டன்.
நண்பரே! ஆற்றல், வல்லமை, அதிகாரம், அத்தாட்சி - ஆதாரம் - சான்றுகள் இப்படி பல பொருள்களில் "சுல்தான்" என்ற பதம் குர்ஆனில் பயன்படுத்தப்படுகிறது. சுல்தான் - அரசன். சுல்தானா - அரசி என்றும் அகராதியில் பார்க்க முடிகிறது. பல பொருள்களைத்தரும் சுல்தான் என்ற வார்த்தையை நீங்கள் புரிந்து கொள்வதற்காகவே முந்தைய பின்னூட்டத்தில் ஒரு முறை குறிப்பிட்டிருந்தேன்.
7:71, 10:68, 11:96, 12:40, 14:10,11,22, 15:42, 16:99, 17:65, 18:15, 23:45, 27:21, 24:21, 37:30, 37:156, 40:23,35,56, 44:19, 15:38, 52:38, 53:23, மேலும் பல குர்ஆன் வசனங்களில் சுல்தான் என்பதற்கு தமிழில் எப்படி மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது என்பதை உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது படித்து வையுங்கள். ரமளான் விடுமுறைக்கு எங்காவது சென்று வரலாம் என்று கிளம்பி விட்டேன் இன்னும் ஒரு வாரத்தில் இடையில் நேரமிருந்தால் சந்திப்போம். நன்றி!
//authority (from allah)>authority (from allah)>authority (from allah)// இது மொழி பெயர்ப்பும், (from allah) பெயர்ப்பாளரின் கருத்தும் என்று நினைவில் கொள்க!
ஒன்றை ஆதிக்கம் செலுத்தும்போது அதை அதிகாரம் செய்கிறோம் என்று சொல்லலாமா? புவி ஈர்ப்பு சக்தியை நமது ஆற்றலைக்கொண்டு மிஞ்சும்போது பூமியை - அதன் ஈர்க்கும் விசையை நாம் ஆதிக்கம் செய்து, அதிகாரியாகி விட்டோம் என்று சொன்னால் அது தவறாகுமா? நானும் யோசிக்கிறேன், நீங்களும் யோசித்து வையுங்கள். பிறயாவும் பின்
அதே தேதியில் நான் அளித்த பதில் ; அதே உரலில்:
சரி 31:55 இன் முதல் வாக்கியங்களையும் எடுத்துக்கொள்ளலாம். //ஓ, ஜின் மற்றும் மனிதக்கூட்டங்களே! வானங்கள் மற்றும் பூமியின் எல்லைகளை விட்டு ஓடிச் செல்ல உங்களால் முடியுமானால் ஓடிப்பாருங்கள். உங்களால் ஓடிச் செல்லவே முடியாது, அதற்கெனப் பெரும் வலிமை வேண்டும். // 'ஆற்றல்' 'சக்தி' 'வலிமை' இதுவே பிக்த்ஹாலின் மொழிபெயர்ப்பில் 'power' என மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இந்த வலிமைக்கும் விண்வெளி பயணங்களுக்கு தேவையான எரிசக்திக்கும் என்ன தொடர்பு? இணையத்தில் கிடைக்கும் அதிகார பூர்வ ஆங்கில மொழி பெயர்ப்பில் இது பின்வருமாறு உள்ளது: "O you jinns and humans, if you can penetrate the outer limits of the heavens and the earth, go ahead and penetrate. You cannot penetrate without authorization" (http://www.submission.org/suras/sura55.html மொழிபெயர்ப்பு ரஷத் காலீஃபா பி ஹெச்டி) ஆக அந்த ஆதரைசேஷனை கடவுளையே நம்பாத சோவியத்களுக்கு அல்லா அளித்ததாக நாம் பொருள் கொள்ள வேண்டி இருக்கிறது. //Ya maAAshara aljinni waalinsi ini istataAAtum an tanfuthoo min aqtari alssamawati waalardi faonfuthoo la tanfuthoona illa bisultanin O assembly of Jinn and Mankind if you can run away beyond the boundaries of earth and skies then try to run away. (You both) Cannot run away. An enormous power is required for it.//இம்மொழிபெயர்ப்பினை காணுங்கள். 'ஓடிவிட முயன்று பாருங்கள். உங்களால் முடியாது. அதற்கு மிகுந்த வலிமை தேவைப்படுகிறது' என அல்-புகாரி எனும் இணையதளம் கூறுகிறது. சர்வ நிச்சயமாக 'முடியாது' என மறுக்கப்பட்ட ஒரு விசயமாகத்தான் விண்வெளிப்பயணம் இங்கு காட்சி அளிக்கிறது.(http://www.al-bukhari.org/)////authority (from allah) authority (from allah) authority (from allah)// இது மொழி பெயர்ப்பும், (from allah) பெயர்ப்பாளரின் கருத்தும் என்று நினைவில் கொள்க!
ஒன்றை ஆதிக்கம் செலுத்தும்போது அதை அதிகாரம் செய்கிறோம் என்று சொல்லலாமா? புவி ஈர்ப்பு சக்தியை நமது ஆற்றலைக்கொண்டு மிஞ்சும்போது பூமியை - அதன் ஈர்க்கும் விசையை நாம் ஆதிக்கம் செய்து, அதிகாரியாகி விட்டோம் என்று சொன்னால் அது தவறாகுமா? நானும் யோசிக்கிறேன், நீங்களும் யோசித்து வையுங்கள்.//இதில் கூற என்ன இருக்கிறது. "authority (from allah)" என [O assembly of jinns and men! if you have power to pass beyond the zones of the heavens ant the earth, then pass (them) but you will never be able to pass them, without authority (from allah)! (55:33) இது] மதீனா, மக்தப தாருஸ்ஸலாம் வெளியிட்ட குர்ஆன் ஆங்கில மொழி பெயர்ப்பு, "நாம் ஆதிக்கம் செய்து, அதிகாரியாகி விட்டோம் என்று சொன்னால் அது தவறாகுமா" என ஒரு ஈமான் கொண்ட இஸ்லாமிய சகோதரரால் பொருள் படுத்த முடியுமெனில் ...அதாவது அல்லாவின் அதிகாரம் என மதீனா மக்தப தாரூஸ்ஸலாம் வெளியிட்ட பொருளுக்கு 'நமது அதிகாரம்' என பொருள் கொள்ள முடியுமென்றால், வேறெப்படியெல்லாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வசனத்தையும் பொருள் கொள்ள முடியுமென சிந்திக்கிறேன். 'மிக எளிதாக விளங்கிக் கொள்வதென்றால்' இதுதானா? விடுமுறைக்கு வாழ்த்துக்கள் முஸ்லிம் எனும் பெயரில் பின்னோட்டம் அளித்த நண்பரே உங்கள் சிந்தனை இந்த பாதையிலேயே சிறக்க வாழ்த்துக்கள்!
5-நவம்பர் அன்று முஸ்லீம் எனும் பெயரில் ஒரு இஸ்லாமிய நண்பரால் அளிக்கப்பட்ட பதில்
குர்ஆனை பிற மொழிகளில் மொழியாக்கம் செய்யும்போது, மொழிபெயர்க்கும் அறிஞர்கள் - மக்கள் விளங்குவதற்காக அடைப்புக் குறிக்குள் சொல்லும் - தங்கள் கருத்துக்களை தவறுதலாக சொல்லப்பட்டு பின் அடுத்த பதிவில் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. இது மொழி பெயர்ப்புக்கு வெளியே நடந்தது என்று வைத்துக்கொள்வோம். இதே நிலைமை நேர் எதிர்மறையாக மொழி பெயர்ப்பிற்குள்ளேயே மிகச் சரியானக் கருத்தைச் சொல்லாமல் முரண்பட்ட - தவறானப் பொருளைத்தரும் கருத்தைச் சொல்லி தமிழாக்கம் செய்யப்பட்ட வசனம் 22:52ம் வசனமாகும்.
22:52. (நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பி வைத்த ஒவ்வொரு தூதரும், நபியும், (ஓதவோ, நன்மையையோ) நாடும்போது, அவர்களுடைய அந்த ''நாட்டத்தில்'' ஷைத்தான் குழப்பத்தை எறியாதிருந்ததில்லை; எனினும் ஷைத்தான் எறிந்த குழப்பத்தை அல்லாஹ் நீக்கியப் பின்னர் அவன் தன்னுடைய வசனங்களை உறுதிப்படுத்துகிறான் - மேலும், அல்லாஹ் யாவற்றையும் அறிந்தவனாகவும், ஞானம் மிக்கோனாகவும் இருக்கின்றான்.
இவ்வசனத்தில் இறைத்தூதர்கள் ''நாட்டத்தில்'' ஷைத்தான் குழப்பத்தை ஏற்படுத்துவான் என்று கூறப்படுகிறது. நாட்டத்தில் என்று தமிழாக்கம் செய்யுமிடத்தில் 'உம்னிய்யாத்' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இச்சொல் ''உள்ளம்''என்றும் ''ஓதுதல்'' என்றும் இரண்டு பொருள் தரும் சொல்லாகும். சில மொழிபெயர்ப்பாளர்கள் உள்ளம் என்று இச்சொல்லுக்கு இந்த இடத்தில் மொழிபெயர்த்துள்ளனர். இவர்களது தமிழாக்கம்படி இறைத்ததூதர்களின் உள்ளங்களில் ஷைத்தான் தனது தீயக் கருத்துக்களைப் பதியச் செய்து விடுவான் என்ற கருத்து வரும்.
இதை அடிப்படையாகக் கொண்டே சாத்தனின் வசனங்கள் என்று குர்ஆனை விமர்சித்தார்கள், இன்னும் விமர்சிக்கிறார்கள் - நபி (ஸல்) அவர்களின் உள்ளத்தில் ஷைத்தான் தனது கருத்துக்களைப் போட்டதாக வாதிடுகிறார்கள். இவ்வாறு வாதம் செய்வதற்கு இவ்வசனத்திற்கு தவறான பொருள் செய்த அறிஞர்களே பொறுப்பேற்க வேண்டும்.
இறைவனின் தூதுச் செய்தியை இறைவனே பாதுகாப்பதாக கூறும்போது இறைத்தூதரின் உள்ளத்தில் ஷைத்தான் தான் விரும்புவதை போட முடியாது, அவ்வாறு பொருள் கொள்வது தவறான கருத்தாகும். இறைவனால் அறிவிக்கப்படும் செய்திகளை இறைத்தூதர்கள் மக்களுக்கு கூறியவுடன் அது பற்றிய பலவிதமான சந்தேகங்களையும் ஆட்சேபனைகளையும் மக்களிடம் ஷைத்தான் தோற்றுவிப்பான் என்பதே இவ்வசத்தின் பொருளாகும்.
சரியான மொழிபெயர்ப்பு!
22:52,53 (நபியே) உமக்கு முன்னர் நாம் அனுப்பிய எந்த நபியானாலும், தூதரானலும் அவர் ஓதும்போது ஷைத்தான் அவரது ஓதுதலில் (தவறான குழப்பத்தைப்) போடாமல் இருந்ததில்லை. எவரது உள்ளங்களில் நோய் இருக்கிறதோ அவர்களுக்கும், கடினசித்தம் கொண்டோருக்கும் ஷைத்தான் போட்டதை சோதனையாக ஆக்கிட ஷைத்தான் போட்டதை அல்லாஹ் மாற்றுகிறான். பின்னர் தனது வசனங்களை உறுதிப்படுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன், ஞானமிக்கவன், அநீதி இழைத்தோர் தூரமான பிளவில் உள்ளனர். (தமிழாக்கம் மூன் பப்ளிகேஷன் வெளியீடு)
தாருல் குதா நிறுவனத்தினர் 3வது பதிப்பாக ஜனவரி 2005ல் சிறிய அளவு கொண்ட குர்ஆனை வெளியிட்டுள்ளார்கள் (இன்று தான் பார்த்தேன்) அதில் தமிழாக்கத்தில் ''ஓதுதலில்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முன்பு உள்ள பதிவுகளில் ''விருப்பத்தில்'' என்றிருந்தது. இது அப்துல் ஹமீது பாகவி (ரஹ்) அவர்கள் மொழிபெயர்த்தது.
எனது பதில்: அதே தேதி அதே உரல்
நீங்கள் அளித்துள்ள பின்னூட்டங்கள் மொழிபெயர்ப்பின் பிரச்சினையை காட்டுகின்றன. மொழிபெயர்ப்பிற்கும் அப்பால் வியாக்கியானங்களிலேயே வேறுபாடுகள் நேர் எதிர் எதிராக இருப்பதற்கு என்ன சொல்லப் போகிறீர்கள்?உதாரணமாக: //ஒன்றை ஆதிக்கம் செலுத்தும்போது அதை அதிகாரம் செய்கிறோம் என்று சொல்லலாமா? புவி ஈர்ப்பு சக்தியை நமது ஆற்றலைக்கொண்டு மிஞ்சும்போது பூமியை - அதன் ஈர்க்கும் விசையை நாம் ஆதிக்கம் செய்து, அதிகாரியாகி விட்டோம் என்று சொன்னால் அது தவறாகுமா?// என்பது நீங்கள் கூறுவது ////5) //5) O assembly of jinns and men! if you have power to pass beyond the zones of the heavens ant the earth, then pass (them) but you will never be able to pass them, with authority (from allah)! (55:33) இது மதீனா, மக்தப தாருஸ்ஸலாம் வெளியிட்ட குர்ஆன் ஆங்கில மொழி பெயர்ப்பு.//
இது மதீனா, மக்தப தாருஸ்ஸலாம் வெளியிட்ட குர்ஆன் ஆங்கில மொழி பெயர்ப்பு. என நீங்கள் அளித்தது. ஆக அதிகாரம் அல்லவினுடையதா மனிதர்களுடையதா என்பதிலேயே இத்தனை நெகிழ்வாக இரு துருவங்களாக நீங்கள் நம்புபவற்றிற்கிடையே (படைத்தவன் என நீங்கள் நம்பும் அல்லா, படைக்கப்பட்டவர்கள் என நீங்கள் நம்பும் மனிதர்கள்) பொருள் கொள்ள முடியுமெனில் அதற்கான பொறுப்பினை ஏற்க வேண்டியவர் யார் என்பதையும் தெளிவுபடுத்தி விடுங்கள்.
நவம்பர் 9 அன்று நல்லடியார் அளித்த 'பதில்'
¯Ãø: http://www.tamiloviam.com/unicode/thodargalpage.asp?folder=nalladiyar1&taid=9
குர்ஆன் ஒரு அறிவியல் நூல் அல்ல. தற்கால அறிவியல் மெய்பிக்கும் உண்மைகள் அமானுடமாக 1400 வருடங்களுக்கு முன்பு கோடிடப்பட்டுள்ளது என்றுதான் குர்ஆனின் முன்னறிவிப்புகளையும் அறிவியல் உண்மைகளையும் மேற்கோள் காட்டினேன். இவற்றில் எதுவும் என் சொந்த கருத்துக் கிடையாது.
அறிவியல்/விஞ்ஞானம்/மருத்துவம் சம்பந்தப்பட்ட உலகலாவிய மாநாடுகளில் அந்தந்த துறை சார்ந்த வல்லுநர்களால் குறிப்பிடப்பட்டவற்றையே நான் மீண்டும் சுட்டியுள்ளேன்.
விண்வெளி பயணம் குறித்து குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கும் விடயம் உம்மால் புரிந்து கொள்ள முடியாவிட்டாலோ அல்லது உமக்கு புரிந்துகொள்ளும் அளவுக்குத் உமது ஞானம் தெளிவாக இல்லாவிட்டாலோ, யாரை குறை சொல்லவேண்டும் என்பதை உமது முடிவுக்கே விட்டுவிடுகிறேன். தமிழ் மொழி பெயர்ப்புகளில் கையாளப்பட்ட வார்த்தை பிரயோகங்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் வேறுபட்டே இருந்துள்ளது. ...
விண்வெளிப்பயணம் குறித்த குர்ஆன் வசனத்தை சகோதர்.முஸ்லிம் மிகத்தெளிவாக விளக்கி இருக்கிறார். நானும் குர்ஆனின் மூலத்துடன் வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்த்து விளக்கமுடியும். ஆனால் இதுவரை கொடுக்கப்பட்ட விளக்கங்களை தவிர்த்து விவாதத்தை முடிவின்றி இழுத்துச் செல்வது அல்லது விவாதத்திற்கு சம்பந்தமில்லாதவற்றைச் சொல்லி 'வதவத'ப்பதால் (நன்றி:ஆரோக்கியம்) தவிர்க்கிறேன்.
எனது பதில்: அதே உரல் : தேதி நவம்பர் -11-2005
மீண்டும் கேட்கிறேன்...தமிழ் மொழிபெயர்ப்பு மட்டுமல்ல ஆங்கில மொழிபெயர்ப்புகளில் கூட விண்வெளி பயணம் சாத்தியமில்லை எனக் காட்டும் வசனங்களே உள்ளனவே. அதற்கு நீர் என்ன கூறுகிறீர்? இதில் உண்மையான பிரச்சனை விண்வெளி பயணம் குர்ஆனில் முன்னறிவிக்கப்பட்டிருந்தால் -இருவருக்கு மார்க்க கல்வி நன்றாக கற்றவர்களுக்கே இரு நேர் எதிர் விதமாக பொருள் படும்படியாக தெளிவின்மையுடன்தான் அது இருக்கிறது என்றாகிறது. மாறாக விண்வெளி பயணம் சாத்தியமில்லை என பொருள்படும் படி இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் மொழிபெயர்த்தது சரி என்றால் நீர் எழுதியது தவறு - வேண்டுமென்றே திரித்து பொருள் கொடுத்து எங்களை ஏய்க்க பார்த்தீர் என்றாகிவிடுகிறது. அவ்வளவு ஏன் நண்பர் முஸ்லீம் அந்த வசனத்தில் அதிகாரம் நம்முடையது என்கிறார். மார்க்க அறிஞர்களோ அதிகாரம் அல்லாவுடையது என அதே வசனத்திற்கு பொருள் கொள்ளுகிறார்கள். இந்த அளவு தெளிவின்மையான வாசிப்புகளை தன்னகத்தே கொண்ட நூலாக குர்-ஆன் இருக்கும் போது வஹி எப்படி ஐயா அமானுடமானதாக இருக்க முடியும்? என்று கேட்டால் அது விதண்டாவாதமாக இருக்கிறது.
11-நவம்பர் அன்று முஸ்லீம் எனும் பெயரில் ஒரு இஸ்லாமிய நண்பர் அளித்த பதில்: அதே உரல்.
நண்பரே! நான் எடுத்து வைத்த ஐந்து குர்ஆன் மொழிபெயர்ப்பில் ''சுல்தான்'' என்ற வார்த்தைக்கு மூன்று மொழிபெயர்ப்பில் ''ஆற்றல்'' என்றும், இரண்டு மொழிபெயர்ப்பில் (ஜான் டிரஸ்ட் மற்றும் தாருஸ்ஸலாம் வெளியீட்டில்) ''அதிகாரம்'' என்றும் பொருள் கொண்டிருக்கிறார்கள். ஆற்றலும் அதிகாரமும் ஒரே பொருளில் வருமா? என்ற ஒப்பீடுக்காகவே நான் இப்படி- //ஒன்றை ஆதிக்கம் செலுத்தும்போது அதை அதிகாரம் செய்கிறோம் என்று சொல்லலாமா? புவி ஈர்ப்பு சக்தியை நமது ஆற்றலைக்கொண்டு மிஞ்சும்போது பூமியை - அதன் ஈர்க்கும் விசையை நாம் ஆதிக்கம் செய்து, அதிகாரியாகி விட்டோம் என்று சொன்னால் அது தவறாகுமா? நானும் யோசிக்கிறேன், நீங்களும் யோசித்து வையுங்கள்.// -கேட்டிருந்தேன். (முஸ்லிம் 11/2/2005 , 3:43:38 AM, 8வது தொடர் பின்னூட்டம்)
உங்கள் மீது எனக்கு எந்த ''அதிகாரமும்'' இல்லை.(14:22) வழிகேடர்களைத் தவிர மற்றவர்கள் மீது உனக்கு எந்த ''அதிகாரமும்'' இல்லை. (15:42) இறைவனையே சார்ந்திருப்போர் மீதும் அவனுக்கு ''அதிகாரம்'' இல்லை. (16:99) இணை கற்பிப்போர் மீதுமே அவனுக்கு ''அதிகாரம்'' உள்ளது. (16:100) எனது அடியார்கள் மீது உனக்கு எந்த ''அதிகாரமும்'' இல்லை. (17:65) இந்த வசனங்களில் சுல்தான் என்பதை அதிகாரம் என்றே சொல்லப்பட்டுள்ளது. இங்கு, ''உங்கள் மீது எனக்கு எந்த ''ஆற்றலும்'' இல்லை (14:22) என்று சொன்னாலும் பொருள் குற்றம் ஆகிவிடாது. 55:33வது வசனத்திற்கு ''அதிகாரம்'' என்று மொழிபெயர்த்தாலும் அதை ''ஆற்றல்'' என்று கூறுவதால் தவறில்லை என்பதை சுட்டவே //ஒன்றை ஆதிக்கம் செலுத்தும்போது அதை அதிகாரம் செய்கிறோம் என்று சொல்லலாமா?...// என்று எழுதி என் ஆலோசனையை வைத்திருந்தேன். எந்த ஆன்மீகவாதியும் தனக்கேற்படும் செயல்பாடுகளை இறைவனின் அருள் என்றே ஏற்றுக்கொள்வார். நன்மை, தீமை எதுவானாலும் இது இறைவனின் புறத்திலிருந்து வந்தது என ஏற்றுக்கொள்வதே ஆன்மீகத்தின் அடிப்படை. இதை ஆன்மீகவாதியாகிய நீங்களும் மறுக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். அதிகாரம் நம்முடையது என்று நான் எழுதியதையும் அந்த அதிகாரம் இறைவன் புறத்திலிருந்து வந்ததாகவே புரிந்து கொள்ளுங்கள். (ஒருவேளை நான் புரியும்படி எழுதவில்லையோ?)
//சரி 31:55 இன் முதல் வாக்கியங்களையும் எடுத்துக்கொள்ளலாம். //ஓ, ஜின் மற்றும் மனிதக்கூட்டங்களே! வானங்கள் மற்றும் பூமியின் எல்லைகளை விட்டு ஓடிச் செல்ல உங்களால் முடியுமானால் ஓடிப்பாருங்கள். உங்களால் ஓடிச் செல்லவே முடியாது, அதற்கெனப் பெரும் வலிமை வேண்டும். // 'ஆற்றல்' 'சக்தி' 'வலிமை' இதுவே பிக்த்ஹாலின் மொழிபெயர்ப்பில் 'power' என மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இந்த வலிமைக்கும் விண்வெளி பயணங்களுக்கு தேவையான எரிசக்திக்கும் என்ன தொடர்பு? இணையத்தில் கிடைக்கும் அதிகார பூர்வ ஆங்கில மொழி பெயர்ப்பில் இது பின்வருமாறு உள்ளது: "O you jinns and humans, if you can penetrate the outer limits of the heavens and the earth, go ahead and penetrate. You cannot penetrate without authorization" (http://www.submission.org/suras/sura55.html மொழிபெயர்ப்பு ரஷத் காலீஃபா பி ஹெச்டி) ஆக அந்த ஆதரைசேஷனை கடவுளையே நம்பாத சோவியத்களுக்கு அல்லா அளித்ததாக நாம் பொருள் கொள்ள வேண்டி இருக்கிறது. //Ya maAAshara aljinni waalinsi ini istataAAtum an tanfuthoo min aqtari alssamawati waalardi faonfuthoo la tanfuthoona illa bisultanin O assembly of Jinn and Mankind if you can run away beyond the boundaries of earth and skies then try to run away. (You both) Cannot run away. An enormous power is required for it.//இம்மொழிபெயர்ப்பினை காணுங்கள். 'ஓடிவிட முயன்று பாருங்கள். உங்களால் முடியாது. அதற்கு மிகுந்த வலிமை தேவைப்படுகிறது' என அல்-புகாரி எனும் இணையதளம் கூறுகிறது. சர்வ நிச்சயமாக 'முடியாது' என மறுக்கப்பட்ட ஒரு விசயமாகத்தான் விண்வெளிப்பயணம் இங்கு காட்சி அளிக்கிறது.(http://www.al-bukhari.org/)////authority (from allah)>authority (from allah)>authority (from allah)// இது மொழி பெயர்ப்பும், (from allah) பெயர்ப்பாளரின் கருத்தும் என்று நினைவில் கொள்க!// (அரவிந்தன் நீலகண்டன் 11/2/2005 , 4:42:19 AM 8வது தொடர் பின்னூட்டம்)
மனிதக் கூட்டமே! என மொத்த மனித குலத்தையும் அழைத்து பேசுகிறது (55:33) இந்த வசனம். ஆத்திகன், நாத்திகன் என்ற வித்தியாசமில்லாமல் நாடு, இனம், மொழி என்ற பேதமில்லாமல் பலதரப்பட்டக் கொள்கைளையுடைவர்களையும் உள்ளடக்கியே அழைக்கிறது. //ஆக அந்த ஆதரைசேஷனை கடவுளையே நம்பாத சோவியத்களுக்கு அல்லா அளித்ததாக நாம் பொருள் கொள்ள வேண்டி இருக்கிறது.// தவறேயில்லை! தாராளமாகப் பொருள் கொள்ளலாம். சோவியத்களும் ''மனிதக் கூட்டமே'' என்ற வட்டத்திற்குள் வருகிறார்கள். (ஆதரைசேஷன் என்பதை நாம் சரிகாணவில்லை)
//இம்மொழிபெயர்ப்பினை காணுங்கள். 'ஓடிவிட முயன்று பாருங்கள். உங்களால் முடியாது. அதற்கு மிகுந்த வலிமை தேவைப்படுகிறது' என அல்-புகாரி எனும் இணையதளம் கூறுகிறது. சர்வ நிச்சயமாக 'முடியாது' என மறுக்கப்பட்ட ஒரு விசயமாகத்தான் விண்வெளிப்பயணம் இங்கு காட்சி அளிக்கிறது.// விண்வெளிப்பயணம் சர்வ நிச்சயமாக முடியாது என்றால் la tanfuthoona என்பது வரையுள்ள வார்த்தையே போதுமே. illa bisultanin ''ஆற்றல் மூலம் தவிர'' என்ற வாசகம் தேவையில்லையே, நண்பரே! சிந்திப்பீர்களா?. //'ஓடிவிட முயன்று பாருங்கள். உங்களால் முடியாது. அதற்கு மிகுந்த வலிமை தேவைப்படுகிறது'// ''வலிமை தேவைப்படுகிறது'', வலிமையைப் பெற்றுக்கொண்டால் மனிதன் விண்வெளியில் பயணிக்க முடியும் என்பதையே உறுதிப்படுத்துகிறது.la tanfuthoona illa bisultanin இந்த வசனம் அருளப்பட்ட சமயத்தில் மனிதன் விண்வெளிப் பயணத்திற்கு ஆற்றலைப் பெற்றிருக்கவில்லை. இப்போது மனிதன் தன் அறிவைக்கொண்டு ''சுல்தானை'' பெற்று விண்வெளியில் ஊடுருவிக்கொண்டிருப்பது கண்கூடு. மனிதனால் விண்வெளிப் பயணம் சாத்தியமே இல்லை என்றிருந்த காலத்திலேயே, மனிதனால் விண்வெளிப் பயணம் முடடியும் என்றுரைத்து அதற்கான ''ஆற்றலை'' சேகரித்துக்கொண்டால் விண்வெளியில் மனிதனால் பயணிக்க முடியும் என்றே 55:33வது வசனம் கூறுகிறது
- 72:8 வானத்தைத் தீண்டினோம் அது கடுமையான பாதுகாப்பாலும், தீப்பந்தங்களாலும் நிரப்பப்பட்டுள்ளதைக் கண்டோம்.
- 72:9 (ஒட்டுக்) கேட்பதற்காக அங்கே பல இடங்களில் அமர்வோராக இருந்தோம் இப்போது யார் (ஒட்டுக்) கேட்கிறாரோ அவர் காத்திருக்கும் தீப்பந்தத்தை தனக்கு (எதிராக) காண்பார்.
- இன்னும் பார்க்க, குர்ஆன் 37:6,7,8,9,10 ஆகிய வசனங்கள். ஜின் இனம் விண்வெளியில் ஊடுருவிக் கொண்டிருப்பதையும், வானத்தைத் தொட்டுப்பார்த்ததாகவும் குறிப்பிடுகிறது இந்த வசனங்கள்.
//இணையத்தில் கிடைக்கும் அதிகார பூர்வ ஆங்கில மொழி பெயர்ப்பில் இது பின்வருமாறு உள்ளது:// நண்பரே! அது என்ன அதிகார பூர்வ!? யார் அதிகாரம் வழங்கினார்கள்? (வார விடுமுறையில்தான் எழுத முடிந்தது நண்பரே பொறுத்துக் கொள்க!)
அன்புடன்
-முஸ்லிம்
அதே தேதி எனது பதில்:
//அதிகாரம் நம்முடையது என்று நான் எழுதியதையும் அந்த அதிகாரம் இறைவன் புறத்திலிருந்து வந்ததாகவே புரிந்து கொள்ளுங்கள்// இத்தகைய வாதத்தில் எத்தனை அளவு சுற்றிவளைத்து பொருள் கொள்ள வேண்டியுள்ளது? Authority of Allah என்பதற்கும் ஆன்மிகபரமாக 'Authority obtained by humans derived from Allah' என்பதையும் ஒன்றாக பொருள் கொள்ள வெகு நெகிழ்வான வியாக்கியானத்தால்தான் முடியும். If Muhammed or Allah through wahi meant the latter then he could have been explicit.மேலும்
'ஆற்றலால் ஓடிவிட முடியும்' எனக் கூறியிருந்தால் நீங்கள் கூறியதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் 'முடியாது' என்பது எக்காலத்திற்கும் பொருந்தும் கூற்றாக அமைந்துள்ளது. அது அல்லாவின் அதிகாரத்திற்குட்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே இவ்விடத்தில் விண்வெளிப்பயணம் அல்ல கூறப்படுவது மாறாக ஒரு Fantasy flight not different -perhaps even inferior in terms of imagination- from other fantasies of the yore. (ஏற்கனவே மெசபடோ மிய எகிப்திய புராணங்களில் உள்ளதற்கொப்பவே) கூறப்பட்டுள்ளதே அன்றி விண்வெளிப்பயணம் அல்ல.//இன்னும் பார்க்க, குர்ஆன் 37:6,7,8,9,10 ஆகிய வசனங்கள். ஜின் இனம் விண்வெளியில் ஊடுருவிக் கொண்டிருப்பதையும், வானத்தைத் தொட்டுப்பார்த்ததாகவும் குறிப்பிடுகிறது இந்த வசனங்கள். //
உதாரணமாக வானத்தை தொட்டுப்பார்த்ததாக நீங்களே கூறியுள்ள விசயமே இதற்கு சான்றாக உள்ளது. வானத்தை தொட்டுப்பார்க்க முடியுமா? அன்றைய நம்பிக்கைகளின் எல்லைக்குள்தான் குர்-ஆன் உள்ளது என்பதற்கு நீங்களே அளித்துள்ள சாட்சியம் இது. தாங்கள் 'விண்வெளிப்பயணத்திற்கு' ஆதாரமாக அளித்துள்ள வசனங்கள் மீண்டும் எனது நிலைப்பாட்டையே உறுதி செய்கின்றன.
உதாரணமாக:
- வானங்களையும் பூமியையும் அவைகளுக்கு மத்தியிலுள்ளவைகளையும் சிருஷ்டித்து போஷிப்பவன் ...[37:5]
- பின்னர் நிச்சயமாக நாம் தாழ்வாக உள்ள வானத்தைச் சுடரிடும் நட்சத்திரங்களைக் கொண்டு அழகுபடுத்தி வைத்துள்ளோம். [37:6]
- விஷமிகளான ஷைத்தான்களுக்கும் தடையாகவும் [37:7]
பூமிக்கு தாழ்வாக உள்ள வானத்தில் அழகுக்காகவும் ஷைத்தான்களின் தடைகளாகவும் இருப்பவைதான் இவைதான் விண்மீன்களா? முந்தைய நாகரிகங்களின் புராணக் கதைகளில் இதையொத்த கற்பனைகள் இல்லையா? எவ்விதத்தில் அக்கற்பனைகளை விஞ்சி நிற்கிறது இது?
ஜின்கள் வானத்தை தடவிப்பார்த்தன எனக் கூறப்படுவதற்கு கூட ஒரு வியாக்கியானத்தை தர முடியுமா என்ன? எனினும் இங்கு விண்வெளி இருக்கிறதோ இல்லையோ ஒரு முக்கியமான புதை மணல் இருக்கிறது. சிக்காமல் விளக்க முயல்வீர்கள் என நம்புகிறேன்.
//மனிதனால் விண்வெளிப் பயணம் முடடியும் என்றுரைத்து அதற்கான ''ஆற்றலை'' சேகரித்துக்கொண்டால் விண்வெளியில் மனிதனால் பயணிக்க முடியும் என்றே 55:33வது வசனம் கூறுகிறது// //if you can run away beyond the boundaries of earth and skies then try to run away. (You both) Cannot run away.// இதற்கு பின்னர் வரும் ஆற்றல்-அதிகாரம் ஆகியவை இயற்பியல் கூறும் ஆற்றலோ விசையோ அல்ல. இவை கற்பனை வானுலகங்களில் சஞ்சாரித்த அதீதகற்பனை மட்டுமே என்பதற்கு உதாரணமாக முகமது தான் வானுலகங்களுக்கு ஜிப்ரயீலால் அழைக்கப்பட்டு காட்டப்பட்டதாக மயங்கிய கற்பனை (என்பதே எனது அறிதல். அது உங்கள் நம்பிக்கையை புண்படுத்தும் பட்சத்தில் மன்னித்துவிடுங்கள்) காட்டும் வானுலகங்களை கூறலாம். வானுலகம் திறக்கப்படுவதும் அங்கு வானுலகங்களில் ஆதாமை பக்கத்து வானிலும் இப்றாகீமை ஆறாவது வானிலும் கூறியதாகவும் அனஸ் கூறுகிறார். (இது ஸஹீஹில் புகாரி (பாகம்-1) ஆசிரியர் அல்ஹாஜ் மௌலவீ மர்ஹூம், எஸ்.எஸ்.முஹம்மது அப்துல்காதிர் ஸாஹிபு பாக்கவீ (ரஹ்) உத்தம பாளையம் அவர்களால் மொழி பெயர்த்து எழுதப்பட்டது. திருக்குர்ஆனுக்கு அடுத்தபடியாக உலகமுஸ்லீம் அறிஞர்களால் போற்றப்படும் அரிய நூல் என அதன் முகப்பட்டை கூறுகிறது.)
//எந்த ஆன்மீகவாதியும் தனக்கேற்படும் செயல்பாடுகளை இறைவனின் அருள் என்றே ஏற்றுக்கொள்வார். நன்மை, தீமை எதுவானாலும் இது இறைவனின் புறத்திலிருந்து வந்தது என ஏற்றுக்கொள்வதே ஆன்மீகத்தின் அடிப்படை. இதை ஆன்மீகவாதியாகிய நீங்களும் மறுக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். அதிகாரம் நம்முடையது என்று நான் எழுதியதையும் அந்த அதிகாரம் இறைவன் புறத்திலிருந்து வந்ததாகவே புரிந்து கொள்ளுங்கள்// இறை என்பதே நம் அகத்திலிருந்து உருவான/உருவாக்கப்பட்டதோர் கருவி என்பதுதான் எனது கருத்தாக்கம்.
அன்புடன்
அரவிந்தன் நீலகண்டன்
12 -நவம்பர் அன்று தமிழோவியம் இத்தொடருக்கான பின்னூட்ட கதவுகளை மூடிவிடும்வரை எந்த பதிலும் இதற்கு அளிக்கப்படவில்லை.
ஆக இதுதான் இவர்களின் ஆதாரங்களின் இலட்சணம். மொழிபெயர்ப்புகள் கடித்துத் துப்பிய சூயிங்கம் (இதுவும் கூட அவர்கள் கூறும் அற்புத லிஸ்டில் வருகிறது) இழுக்கப்படுவது போல இழுத்து இழுத்து வலிந்து கொள்ளப்படும் பொருள்கள் பின்னர் அதை முன்னறிவித்த அற்புதங்களாக மக்களிடம் கூறி அவர்களை பசப்புவது. சுருக்கமாக முகமதுவின் கற்பனை அந்த கால கட்ட மூடநம்பிக்கைகளின் அடிப்படையிலானது. அதுவே குர்-ஆனிலும் உள்ளது. அதலிருந்து மேலெழும்பிய ஒரு ஆன்மிகத்தாவல் கூட குர்-ஆனில் காணப்படவில்லை.
2 Comments:
Dear Iraivan,
my guess is that 'they' are searching with all their might to find him out.so he should have removed the profile.The blog is still available.
His blog is at http://ennamopo.blogspot.com
it contains very valuable information. Please take a copy and if possible convert it into a pdf and distribute.
Post a Comment
<< Home