பண்பால் உயர்ந்து நிற்கும் மா.சிவகுமார்
மா.சிவகுமார் எனும் வலைப்பதிவர் பாரத சமுதாயத்தை மிக மோசமாக வர்ணித்தத்தை தொடர்ந்து அவரை கடுமையாக சாடியிருந்தேன். அந்த கடுமையான சாடல்கள் எவருக்கும் ஆத்திரத்தையே ஏற்படுத்தும். என்ற போதிலும் அதற்கும் மேலாக வார்த்தைகளுக்கு அப்பால் சென்று என்னைப்போன்ற ஒரு சாராசரி இந்தியனின் நியாயமான கோப உணர்வை புரிந்துகொண்டு அதன் நியாயத்தை கிரகித்துக்கொண்டு ஒரு பதிவை எழுதியிருக்கிறார் திரு.மா.சிவகுமார். இப்பதிவை அவர் மன்னிப்பு என தலைப்பிட்டிருந்தாலும் கூட அது உண்மையில் அவரது பண்பாட்டின் உயர்வினையே காட்டக்கூடியதாகும். நாம் அனைவருமே தவறிழைப்பவர்கள்தாம். தவறினை உணர்ந்திடும் பட்சத்தில் அதனை வெளிப்படையாக சொல்லி அதற்காக வருத்தம் தெரிவிக்கும் மாண்பு நம்மில் எத்தனை பேரிடம் உள்ளது? இப்போதும் மா.சிவகுமாரின் நிலைப்பாடுகள் பலவற்றை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. அவரும் எனது நிலைப்பாடுகளை எவ்விதத்திலும் ஏற்பார் என நான் கருதவில்லை. ஆனால் இந்த குறிப்பிட்ட அவரது பண்பாடு நாம் அனைவருமே பார்த்து கற்கவேண்டிய ஒன்று என கருதுகிறேன். அவரது நேர்மைதிறம் இவ்விசயத்தில் மிகவும் சிறந்தது. பாராட்டப்பட வேண்டியது. அதற்கும் மேல் பின்பற்றப்பட வேண்டியது. நிச்சயமாக இந்த விசயத்தில் உன்னத பண்பினை கற்றுத்தரும் ஆசானாகவே உங்களை மதிக்கிறேன். பாரத பண்பாட்டின் ஒரு சிறந்த பிரதிநிதியாகவே தாங்கள் திகழ்கிறீர்கள்.
12 Comments:
அப்படீன்னா?
என்னை மறந்துட்டீங்களா!
:-)
இங்கு எண்ணங்கள் உயர பறக்கின்றன.
உண்மையாக இது ஒரு அகப்பயணம்தான் அரவிந்தன் நீலகண்டன்.
பகிர்ந்தமைக்கு நன்றி. மனம் குளிர்ந்தது.
நல்ல மனிதரைப் பாராட்டும் நல்ல பதிவு.
எல்லாம் வல்ல இறைவன் திருப் பெயரால் ஆரம்பிக்கிறேன்.
அகம் குளிரும் அன்பு சகோதரர் அரவிந்தன் அவர்களே!
சகோதரர் மா சிவகுமார் அவர்களுடைய மன்னிப்பு பதிவு எனக்கு மிகுந்த மனம் வருத்தை தந்தது. அது குறித்து எனது எண்ணங்களை அவரது பதிவில் பின்னூட்டமிட்டிலருந்தேன். அது தொடர்பான பதிவு என்பதால் அதன் பிரதியை இங்கும் பின்னூட்டமாக பதிவு செய்கிறேன்.
-----------------------------------
அன்பு சகோதரர் மா சிவகுமார் அவர்களே!
//இந்தியாவின் கொடையாக எதையுமே கொடுக்காமல் பிறரின் உருவாக்கங்களை உறிந்து வாழும் ஒட்டுண்ணி மக்கள் கூட்டமாகத்தானே இருக்கிறோம். நமது மன வளமும் பண்பாட்டுச் செறிவும் இதை விட பல மடங்கு உயர்ந்த இடத்தை அடைய தகுதியுடையவை. எது நமமைத் தடுத்து நிறுத்துகிறது?//
உலக மக்கள் தொகையில் 6ல்1 பங்கு நமது மக்கள் தொகையாகும். அகில உலக அரங்கில் நமது பங்களிப்பு அதிகப்படியாக இருந்திருக்க வேண்டும். ஆனால், நமது மக்கள் வளத்தையும், இயற்கை வளத்தையும், நாகரிக பண்பாடு (அறிவு, மன முதிர்ச்சி) வளத்தையும் வைத்து பார்க்கும் போது, உலக சமூகத்திற்க்கு நமது பங்களிப்பு, மிக் குறைவானதே என்பது எனது கருத்தாகும். இந்த அடிப்படையில் அமைந்த சுயவிமர்சனமாக தான் உங்களுடைய கருத்தை நான் பார்க்கிறேன். அந்த கருத்து சுயப்பரிசோதனையின் விளைவாக வந்த சுய விமர்சனமாக நான் காணுகிறேன். இந்த கருத்தால் நமது நாட்டை நீங்கள், கேவலப்படுத்தியதாகவோ குறைத்து மதிப்பிட்டுவிட்டதாகவோ, தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தியதாகவோ என்னால் உணர முடியவில்லை. உங்களின் அந்த கருத்து, நமது முன்னேற்றத்திற்க்கு வினையூக்கியாக தான் அமையுமே தவிர, நம்மை நாதே தாழ்த்தியதாக ஆகாது.
இந்த அடிப்படையில், எல்லா வளங்களையும் பெற்றிருக்கும் போது, நாம் (இந்தியர்) ஏன் மேற்கத்திய உலகத்தை விட அதிகமாகவோ அல்லது அதற்கு நிகராகவோ சாதனைகளை உலக அரகில் நிகழ்த்தி காட்ட முடியவில்லை என்னும் சுயப்பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். அந்த சுயபரிசோதனையின் முடிவில் நமது சமூகத்திற்க்கு எதிராக குற்றசாட்டுகள் (ஆட்சி செய்பவர்களின் அவலம், புறையோடி போன ஊழல், ஆராய்ச்சி பணிகளுக்கு நமது நாடு செய்து தரும் வசதி வாய்ப்புகள்...) எழும். இவைகள் தான் எனது முன்னேற்த்திற்கான தடைகளாக இருக்கின்றன என்று பட்டியலிட்டால், உடனே நயவஞ்சகர்கள், போலி தேசிய பற்றாளர்கள், நம்மை (சுயவிமர்சனம் செய்பவனை)ஏதோ தேச விரோதியாக எடுத்து காட்டி, நம்மை தேச துரோகியாக, குற்றாவாளிகளாக, சித்தரிப்பார்கள். ஏதோ அவர்கள் (சுயபரிசோதனை செய்யாதவர்)தான் நாட்டுபற்றாளர்கள் போன்றும், சுயபரிசோதனையும், சுயவிமர்சனமும் செய்பவர்களை தேச விரோதிகளாகவும் குறை கூறுவார்கள். இவர்கள் தான் நயவஞ்சகர்கள், தேச விரோதிகள். சுயபரிசோதனையும், சுயவிமர்சனமும் நமது குறைகளை போக்கி முன்னேற்ற பாதைக்கு எடுத்து செல்லும். அதை விடுத்து பழம் பெருமைகளை மட்டும் மனதில் வைத்து கொண்டு, நமக்கு நாமே திருப்தியடைந்து கனவு கண்டு கொண்டிருக்க சொல்லும் இந்த போலி நாட்டு பற்றாளர்கள் தான் தேச விரோதிகள்.
இந்த அடிப்படையில் உங்களது மன்னிப்பு நமது முன்னேற்றத்திற்க்கு தடையாக இருப்பதோடு, தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும்.
தவறிழைப்பவன் தான் மனிதன். பொரும்பாலும் மனிதர்கள் தனது தவறுகளை ஒத்து கொள்வதில்லை. தனது தவறுகளை ஓத்து கொண்டு வருந்தி மன்னிப்பு கோறுபவன் மனிதருள் புனிதன்.
ஆதமின் மக்கள் தவறிழைப்பவர்களே. அவர்களில் சிறந்தவன் வெய்த தவறுக்கு வருந்தி இறைவனிடம் மன்னிப்பு கோருபவன். (நபி மொழி).
ஆனால், செய்யாத தவறுக்கு வருந்தினால்,அது தாழ்வு மனப்பான்மையை தான் கொண்டு வரும். மக்களை அடிமைப்படுத்தும் உயர்வு மனப்பான்மை கொண்ட கும்பல்களின் ஒரு தந்திரம் தான் மற்றவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படுத்துவது. அதனால் தான் நமது முன்னோர்கள் பிறபட்ட மக்களாக, தாழ்த்தபட்ட மக்களாக மனித விரோத கும்பல்களால் நடத்தப்பட்டார்கள். எனவே, நமது செயல்பாடுகளை குற்றமாக சித்தரித்து மன்னிப்பு கோர வைப்பது, நம்மை தாழ்வு மனப்பான்மையாளர்களாக ஆக்கி மீண்டும் பிற்படுத்த பட்டவர்களாக ஆக்க முயலும் சதியாகும். அதற்கு பலியடா ஆகி விடாதீர்கள் என்பதே எனது ஆலோசனை. இந்த அடிப்படையில் தங்களது //இந்தியாவின் கொடையாக எதையுமே கொடுக்காமல் பிறரின் உருவாக்கங்களை உறிந்து வாழும் ஒட்டுண்ணி மக்கள் கூட்டமாகத்தானே இருக்கிறோம். நமது மன வளமும் பண்பாட்டுச் செறிவும் இதை விட பல மடங்கு உயர்ந்த இடத்தை அடைய தகுதியுடையவை. எது நமமைத் தடுத்து நிறுத்துகிறது?// கருத்துக்கு மன்னிப்பு கோர வேண்டிய அவசியமில்லை. ஆகையால், உங்களுடைய மன்னிப்பு பதிவை மறுபரிசீலனை செய்யுமாறு அன்போடு கேட்டு கொள்கிறேன்.
எனது கருத்துகளில் உண்மையிருக்குமானால், புகழனைத்தும் இறைவன் ஒருவனுக்கே! தவறுகள் இருந்தால், அது என் சிறுமதியால் விழைந்ததாகும். அதனை சுட்டிகாட்டினால், மன்னிப்புகோரி திருத்தி கொள்வேன்.
நன்றியும் வாழ்த்துக்களும்
அன்புடன்
உங்கள் சகோதரன் நெய்னா முஹம்மது
----------------------------------
மேலே உள்ள எனது கருத்துக்கு சகோதரர் மாசி, இவ்வாறு கருத்து கூறியிருந்தார்.
//முதலில் சொன்ன வாக்கியத்தை மட்டும் எடுத்துப் பார்த்தால் ஒரேயடியாக எல்லாவற்றையும் ஒதுக்கித் தள்ளுவ்தாகவே இருக்கிறது.அதற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் அல்லவா!
மற்றபடி நீங்கள் சொல்வதை முற்றிலும் ஏற்றுக் கொள்கிறேன். என் நோக்கத்தைச் சரிவர விளக்கியதற்கு நன்றி.//
எப்பொருள் யார் வாய் கேட்பினும் அப்பொருள் தெய் பொருள் காண்பதறிவு (திருக்குறள்)
நன்றியும் வாழ்த்துக்களும்
அன்புடன்
உங்கள் சகோதரன் நெய்னா முஹம்மது
மொத்தத்துல சூடு தணிஞ்சுடுச்சா.. அப்படா.
உங்கள் பண்பையும் பாராட்டுகிறேன்.
:))
உண்மைகள் என்றும் நிலைத்து இருக்கும் நீல்ஸ். தாங்கள் உண்மையை உரைத்து கூறினீர்கள். மிக்க நன்றி.
அசத்தாமா சத் கமைய
அய்யா நைனா,
இதையே "அரபு நாட்டு மக்கள் தன் காலடி எண்ணெய் வளத்தை கூட அமெரிக்க தொழில்நுட்ப உதவியுடன் எடுத்து அதனை கொண்டு உலக பொருளாதாரத்தை ஆட்டிப்படைத்தபடி தங்களது பங்களிப்பாக எதுவுமே இல்லாமல் ஒட்டுண்ணி சமுதாயமாக வாழ்கிறவர்கள்" என எழுதியிருந்தால் இந்நேரம் மாய்ந்து மாய்ந்து 'எல்லாம் வல்ல இறைவன் திருப் பெயரால்'(:)))) ஆரம்பிக்கிறேன்.என்று எழுதி தள்ளியிருக்க மாட்டீர்களா? இப்போது மாட்டேன் என வித்தாரமாக சொன்னாலும் சொல்லுவீர், நல்லடி வல்லடி எல்லாம் வந்து ஜல்லியடி அடித்திருப்பீர்களே. ஆனால் இந்தியாவை குறைசொன்னால் மட்டும் ஏன் காஸிரங்கா பூங்காவின் தனிப்பெரும் அட்ற்றாக்ஷனின் தோலின் தன்மை தங்களுக்கு வந்துவிடுகிறது. இதற்காக உமது எல்லாம் வல்ல கற்பனையின் பெயரால் மீண்டும் ஆரம்பிக்காதீர்கள். தாங்காது,
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப் பெயரால் ஆரம்பிக்கிறேன்
அன்பு சகோதரர் அரவிந்தன் அவர்களே!
உலகத்தில் இரு வகையான விமர்சனங்கள் உண்டு. ஒன்று நன்மையை நாடி, முன்னேற்ற வழிவகையை காண்பதற்காக கூறப்படும் விமர்சனம். இரண்டாவது, சுயவெறுப்பு காரணமாக, கொஞசம் கூட உண்மையில்லாமல் வஞ்சகத்தால் வெளிப்படும் தரக்குறைவான விமர்சனம். முதல் வகை விமர்சனத்துக்கு உதாரணமாக மா. சிவகுமார் உடைய "நல்லதை செய்வோம்" என்ற பதிவை கூறலாம். இரண்டாவது வகை விமர்சனத்துக்கு உதாரணமாக, அரவிந்தன்&நேசக்குமார்& co வின் இஸ்லாத்தின் மீது வைக்கும் காழ்ப்புணர்ச்சி விமர்சனங்களை கூறலாம்.
சகோதரர் அரவிந்தன் அவர்களே! உங்கள் மனசாட்சியிடம் சில கேள்விகள்.
1) இந்தியா எல்லா துறைகளிலும் முன்னேற்றம் அடைந்து விட்ட, தன்னிறைவு பெற்ற விட்ட, நாடாக நீங்கள் கருதுகிறீர்களா?
இதை தான் சகோதரர் சிவக்குமார், நாம் மற்ற முன்னேறிய நாடுகளை ஒப்பிடும் போது எந்நிலையில் இருக்கிறோம் என்பதனை விருப்பு, வெறுப்பு வைக்காமல் நடுநிலையாக யோசித்து பார்க்கிறார். நாம் பெற்றிருக்க வேண்டியவை, சாதித்து இருக்க வேண்டியவை மிகக் குறைவாக உள்ளதே என்னும் வேதனை அவருக்கு வருகிறது. இதன் மூலம் நாம் சாதிக்க வேண்டியவை எவ்வளவோ இருக்கிறது என்னும் கடமை உணர்வு பிறக்கிறது. முன்னேறிய நாட்டின் மக்களும் நம்மை போன்ற மனிதர்கள் தானே? பின் அவர்கள் முன்னேறியதை போன்று நாமும் ஏன் முன்னேற முடியாது என்னும் உத்வேகம் பிறக்கிறது. இதன் மூலம், நாம் சாதனைகளை செய்ய, என்னென்னவைகள் தேவை? நம்மை சூழ்ந்திருக்கும் என்னென்னவைகள் நமது முன்னேற்றத்திறக்கு தடைகளாக உள்ளன? போன்ற சிந்தனைகள் உள்ளத்தில் எழுகின்றன.
2) இந்த மனநிலை ஒரு தேசபற்றாளனுக்கு வரவேண்டுமா? அல்லது பழம் பெருமைகளை எண்ணி பெருமைபட்டு கொண்டு அந்த கற்பனையிலேயே மூழ்கி மடியும் மனநிலை ஒரு தேசபற்றாளனுக்கு வரவேண்டுமா?
நம்மில் தலை சிறந்த மக்களை (கணிதத்துக்கு இராமனுஜத்தை, அறிவியலுக்கு சர் சிவி ராமனை, தலைமைக்கு காந்தியை, நிர்வாகத்துக்கு காமராஜரை, பகுத்தறிவுக்கு பெரியாரை, விளையாட்டிற்க்கு பிடி உஷாவை…..) நிறைவு கூறப்பட வேண்டும் என்பதில் அணுவளவு கூட எனக்கு கருத்து வேறுபாடில்லை. இதன் மூலம் நாம் நிச்சயமாக பலனடைவோம் என்னும் நம்பிக்கையும் எனக்கு உண்டு. இந்த உத்தமர்களை நினைவு கூறுவதால், நம் சமுதாயத்திற்க்கு இவர்கள் அளித்த பங்களிப்பு நன்றி கூறுவதாகும்.
3) ஆனால், வெறும் புகழ்ச்சி நமக்கு பலனை தர முடியுமா?
தரமுடியாது. அவர்கள் வாழ்விலிருந்து நாம் பெறும் படிப்பினைகளே நமக்கு, பலனை பெற்ற தரும். இது சிறந்த தலைமுறைகளை உருவாக்கிட உதவும்.
இன்றைய நவீன உலகத்தில், பொறியியல், தொழில் நுட்பம், மருத்துவம், வேளாண்மை, பொருளாதாரம், நிர்வாகம், ஊடகம் .... போன்ற பல்வேறு துறைகளில் பல்லாயிரக்கணக்கான ஆராய்ச்சிகளிலும், கண்டுபிடிப்புகளிலும் மற்ற நாடுகளை ஒப்பிடும் போது நமது பங்களிப்ப சதவீதம் எவ்வளவு? பெருமைபடக் கூடியதா?
4) சகோதரர் சிவக்குமார் இதனை எண்ணி, நமது சமுதாயத்தின் மீது அவருக்கிருந்த அக்கறையினால் தானே அவர் தனது ஆதங்கத்தை வெளிப்பாடுத்தினார். இதே உணர்வில் தானே நானும் எழுதி கொண்டிருக்கிறேன். இது தேச துரோகமா? தேசபற்றா?
இதில் கூட மதச் சாயம் பூசும் மத வெறியாளராக அடையாமிட்டு உங்களை நீரே அசிங்கப்படுத்துகிறீர்களே!
நிச்சயமாக, சத்தியமாக முஸ்லிம் நாடுகள் இந்தியாவை விட மிகக் கீழ் நிலையில் இருக்கிறார்கள் என்பதையும் வேதனையோடு கூறுவதில் எனக்கு தயக்கமில்லை. இந்தியாவை ஒட்டுண்ணி என்று விமர்சித்தால், முஸ்லிம் நாடுகளை இந்த விசயத்தில் அதை விட மிக மோசமான உதாரணத்தை கொண்டு விமர்சிக்க தகுதியானவர்கள்.
5) சரி. எண்ணெய் வளத்தை வைத்து என்று அரபு நாடுகள் உலக நாடுகளை மிரட்டின? எழுதுவது எல்லாம் செய்தியா? தகவல் என்றால் உண்மையிருக்க வேண்டும் என்ற சலனம் கூட உங்களுக்க கிடையாதா?
அமெரிக்க-ஐரோப்ப கள்ள உறவால் பிறந்த இஸ்ரேலுக்கு, அதர்மமான முறையில் தார்மீக ஆதரவை அமெரிக்க-ஐரோப்பகள் கொடுத்தும், இந்த அநியாயத்திறக்க எதிர்ப்பு தெரிவிக்கம் வகையில் கூட ஒரு வினாடி எண்ணெய் உற்பத்தியை நிறுத்தி மிரட்டியதில்லையே? சொல்லப் போனால் வெவ்வேறு பதட்டமான சூழ்நிலைகளின் (இராக் போர்...) போதும், பொருளாதார நெருக்கடி உலக சமுதாயத்தை சூழ வேண்டாம் என்ற அக்கறையால், தங்களது உற்பத்தியை அதிகரிக்க செய்தார்களே தவிர குறைக்கவில்லை. வரலாறு மோசடி செய்யாதீர்கள். சங்பரிவார கும்பலின் தலைமுறை நோயான வரலாற்று மோசடி செய்யும் நோய் உங்களையும் தாக்கியுள்ளது. தகுந்த பரிகாரத்தை எடுக்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.
எனது கருத்துகளில் உண்மையிருக்குமானால், புகழனைத்தும் இறைவன் ஒருவனுக்கே! தவறுகள் இருந்தால், அது என் சிறுமதியால் விழைந்ததாகும். அதனை சுட்டிகாட்டினால், மன்னிப்புகோரி திருத்தி கொள்வேன்.
நன்றியும் வாழ்த்துக்களும்
அன்புடன்
உங்கள் சகோதரன் நெய்னா முஹம்மது
அரவிந்தன் அய்யா
நானும் உங்கப்பக்கம்தான். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவன். நாசரெத்திலே பிறந்து வளர்ந்தவன்.
இந்துகிறுத்துவ மோதல்களை சிறுவயதிலிருந்தே கண்டு வந்திருக்கிறேன். என்
குடும்பத்திலே பலரும் சங்கத்துடன் தங்களைப் பிணைத்துக் கொண்டவர்கள்
என்பதால் சங்கத்தில் பலரை எனக்கு தனிப்பட்ட முறையில் நன்கு தெரியும்.
அவர்கள் தனிப்பட்ட முறையிலே நல்லவர்களாய் இருந்தாலும் மோதல் என்று
வந்தால் கிறுத்துவர்களை விட தீவிரமான வன்முறையாளர்களாய் இருப்பதைப்
பார்த்து மிகவும் பயந்து போனதுண்டு. அதனாலேயே சங்கத்தை விட்டு விலகி
இருக்கிறேன்.
எனக்கு சிறுவயது முதலே சிவாஜி படங்கள் என்றால்
உயிர். 'தங்கங்களே நாளைத் தலைவர்களே' என்ற பாட்டைக் கேட்டிருப்பீர்கள்.
அதிலே 'நம் தாத்தா காந்தி மாமா நேரு தேடிய செல்வங்கள்' என்ற வரியைக்
கேட்டால் இன்றும் அழுது விடுவேன். காந்தியைத் தாத்தாவாகவும் நேருவை
மாமாவாகவும் நெருக்கமாய் உணரும் அளவிற்கு எந்தத் தலைவரையும் நினைக்க
முடியவில்லை. தலைவர் ராஜீவ் அவர்கள் இந்த இடத்தை நிரப்பி இருப்பார்.
ஆனால் அவரும் வன்முறைக்குப் பலியானது சோகம்.
வளரும் தலைவர் ராகுல் அவர்கள் இந்த வெற்றிடத்தை நிச்சயம் நிரப்புவார்
என்று நம்புகிறேன். அவர் உபி தேர்தல் பிரச்சாரத்திலே பேசியதைக் கேட்டதும்
எனக்கு இந்த நம்பிக்கை வலுத்திருக்கிறது.
'என் தந்தையார் ராஜிவ் உயிருடன் இருந்திருந்தால் அயோத்தியாவிலே பாபர்
மசூதியை நிச்சயம் இடிக்க விட்டிருக்க மாட்டார்' என்று ராகுல் அவர்கள்
சொன்னது சத்தியம். இந்தியாவிலே மதநல்லிணக்கமும், தேசிய ஒருமைப்பாடும்
என்றும் நீடித்திருக்க காங்கிரஸ் பேரியக்கமே என்றும் பாதுகாவலாக
இருக்கும். அருமை நண்பர் மா.சிவகுமார் போன்ற சிறந்த எழுத்தாளர்கள்
கட்சியிலே இணைந்து பணியாற்றி தலைவர் ராகுல்காந்தி அவர்களின் தலைமையில்
இந்திய நாட்டிற்கே வழிகாட்ட வேண்டும் என்று இங்கே வேண்டுகோள் வைக்கிறேன்.
அன்புடன்
நாசரெத் நாகராசன் (நாநா)
நீல்ஸ், நைனா என்பவர் அரபு நாடுகள் எண்ணை வளத்தை வைத்து உலகத்தை மிரட்டவே இல்லை என்றும் பாலஸ்தீனத்திற்க்காக அரபுநாடுகள் எண்ணைத்தடையை (Oil Embargo) ஒரு போதும் அரபுநாடுகள் செய்யவில்லை என அரபுநாடுகளுக்கு வக்காலத்து வாங்கியிருக்கிறார்.
ஈராக் போருக்கு அமெரிக்காவிற்கு மறைமுக ஆதரவு அளித்ததே கட்டார் என்ற அரபு நாடுதான். போர் வந்தால் எண்ணைவிலை ஏறும் அதனால் லாபம் அடையலாம் என சப்புக் கொட்டி திரிந்து கொள்ளை லாபம் சம்பாதித்தது இந்த அரபு நாடுகள் தாம். போருக்கு முன் $20க்கு இருந்த எண்ணை இன்று $60. இது போன வருடம் $50க்கு இறங்கிய போது குய்யோ முறையோ எனக் கதறி அழுது உற்பத்தியைக் குறைத்து விலையை ஏற்றியதும் இதே அரபுநாடுகள்தாம். ஆதாரங்கள் அடுக்கமுடியும் இந்த துறையில் இருக்கும் என்னால். அப்படியே மனித இனத்தில் அக்கறை இருந்தால் இந்தியாவிற்கு வேண்டாம் கஷ்டபடும் முஸ்லிம் நாடுக்களுக்காவது குறைந்த விலையின் எண்ணையை விற்காத இந்த மனிதநேயர்கள் உலகத்தைப் பற்றி நினைப்பார்களாம். சூப்பராக எஜமான விசுவாசம் காட்டுகிறார் நைனா.
அடுத்த பாலஸ்தீனம். அரபு அரசும் சரி மக்களும் சரி பாலஸ்தீனர்களிடம் இறக்கம் அவர்கள் போரட்டத்தில் அக்கறை எல்லாம் இல்லை. இவர்கள் ஆதரவு எல்லாம் பாசாங்குதான். குவைத்தை சதாம் உசேன் கைப்பற்றிய போது சதாமை வரவேற்றவர்கள் பாலஸ்தீனர்கள். பாலஸ்தீனர்கள் சதாம் மட்டும்தான் அவர்களின் நாட்டை மீட்கமுடிய்ம் என நம்பினார்கள்.
சதாமை விரட்டியவுடன் திரும்பி வந்த குவைத்தியர்கள் முதலில் விரட்டியது இந்த பாலஸ்தீனர்களைதான். சவூதி பாலஸ்தீனர்களுக்கு குரல் கொடுப்பார்களே தவிர அவர்கள் நாட்டில் வாழ இடம் தரமாட்டார்கள்.
பாலஸ்தீனர்களை மனிதநேயத்துடன் நடத்தியது மறைந்த அபுதாபி அரசர் ஷேக் சாயத். அவரும் பாலஸ்தீனர்களுக்கு வேலை வாய்ப்பு போன்ற சில சலுகைகள் செய்தார். ஆனால் எந்த ஒரு பாலஸ்தீனரும் மேலைநாடுகளுக்கு எதிரான காரியங்களில் ஈடுபட்டால் உடனடியாக நாடு கடத்தப்படுவார். என்னுடன் வேலைசெய்த ஒரு பாலஸ்தீனர் 12 குழந்தைகளுக்கு தந்தை ஒரு நாளில் குடும்பத்துடன் நாட்டைவிட்டு அனுப்பபட்டார். இதுதான் அரபு மனிதநேயம்.
அரபுநாடுகள் ஒரு நாள்கூட அவர்களின் எண்ணை உற்பத்தியை நிறுத்த முடியாது. அரபுநாடுகளின் அரசர்கள் அவர்களின் வருமானத்தை அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் முதலீடு செய்துவைத்துள்ளார்கள். மேலைநாடுகள் போண்டி ஆனால் இந்த அரசர்கள் ஆண்டி ஆவர்கள்.
இவர்கள் எண்ணையை வைத்துதான் இவர்களின் அன்றாட உணவு பொருட்களை இறக்குமதி செய்யவேண்டும். அப்போதுதான் இவர்களுக்கு சாப்பாடு கிடைக்கும்.
ஒரு சம்பவத்தை விவரிக்கிறேன். 1994/5 இல் சூரத்தில் பிளேக் நோய் பரவி 56 பேர் இறந்தார்கள். ஏதோ இந்தியாவில் ப்ளேக் வந்து நாட்டில் அனைவருமே மடிந்து விழுகிறார்கள் என உலகமே அலறியது. அதனால் இந்தியாவிற்கு உலகநாடுகள் அனைத்தும் விமான போக்குவரத்தை நிறுத்தின. பிறகு மற்ற நாடுகள் ஆபத்தில்லை என்று விமான சேவைகளை தொடங்கியது. ஆனால் அரபுநாடுகள் விமான சேவையை தொடங்கவில்லை. மக்களை அரபுநாடுகளிலிருந்து இறக்கிவிட்டு போனது இந்தியாவிலிருந்து ஏற்றிக் கொண்டு போகவில்லை. ஆனால் கள்ளத்தனமாக உணவுபொருட்கள் கப்பலில் போய் கொண்டிருந்தன. விமான சேவையை தொடங்கு இல்லையேல் உணவில்லை என்றபிறகுதான் விமான சேவையை தொடங்கினார்கள் இந்த மனிதநேயம் மிக்கவர்கள்.
அரபுநாட்டவரின் "மனிதநேயத்தை" சொல்ல பல பதிவுகள் இடவேண்டும் நீல்ஸ்
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையயோனுமான எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப் பெயரால் ஆரம்பிக்கிறேன்.
அன்பு சகோதரர் கால்கரி சிவா அவர்களே!
நீங்கள் பதில் கூறியிருக்கும் எனது பின்னூட்டத்திலே ஐந்து கேள்விகளை சகோதரர் அரவிந்தனுடைய மனசாட்சியிடம் கேட்டிருந்தேன். அதிலுள்ள முதல் 4 கேள்விகளை பற்றி ஏதும் கூறாமல், 5வதுக்கு தாவியிருக்கிறீர்கள். இதற்கான காரணம்(ங்கள்) என்ன?
5வதாக நான் கேட்ட // 5) சரி. எண்ணெய் வளத்தை வைத்து என்று அரபு நாடுகள் உலக நாடுகளை மிரட்டின?// என்று நான் கேட்ட கேள்விக்கு உண்மையான பதில் இருந்திருக்குமானால், அது குறித்த விசயத்தில் நீங்கள் உண்மையாளராக இருந்தால், 1,2,3.... என்று, என்னென்ன சந்தர்பத்தில் தங்களது திட்டங்களை நிறைவேற்றவதற்காக, எண்ணெய் வளத்தை வைத்து உலக நாடுகளை அரபு நாடுகள் மிரட்டின, என்னும் ஆதாரங்களை, சான்றுகளை அடுக்கியிருக்க வேண்டும். ஆனால் உங்களது பதில், கேள்விக்கு சம்பந்தமேயில்லாமல்,
1) கத்தார், ஈராக் போரின் போது அமெரிக்கவுக்கு ஆதரவு வழங்கியதையும்,
2) குவைத் போரின் போது பாலஸ்தீனம் ஈராக்கிற்கு ஆதரவு வழங்கியதையும்,
3) ஏழை முஸ்லிம் நாடுகளுக்காவது குறைந்தபட்சம் குறைந்த (மானிய) விலையில் எண்ணெய் வழங்கியிருக்கலாம் என்ற கருத்தையும் (மனித நேயமோ?),
4) அரபு நாட்டு மன்னர்களுக்கு எண்ணெய் உற்பத்தி செய்தால் தான் சாப்பாடு எனவே எண்ணெய் உற்பத்தியை குறைக்க மாட்டார்கள் என்ற வாக்குமூலத்தையும் (same side goal)
5) 994/5 இல் சூரத்தில் பிளேக் நோய் பரவிய போது விமான சேவையை ரத்து செய்ததையும்
பதிவு செய்துள்ளீர்கள். உங்களது பதிலில் எனது கேள்விக்கு சம்பந்தமான ஆதாரத்தை ஒரு சந்தர்பத்தையாவது காட்டியுள்ளீர்களா? சகோதரர் கால்கரி சிவா அவர்களே!
அடுத்து நீங்கள் எழுதியுள்ள இன்னொரு செய்தி // போருக்கு முன் $20க்கு இருந்த எண்ணை இன்று $60. இது போன வருடம் $50க்கு இறங்கிய போது குய்யோ முறையோ எனக் கதறி அழுது உற்பத்தியைக் குறைத்து விலையை ஏற்றியதும் இதே அரபுநாடுகள்தாம்.//. ஈராக் போர் முஸ்லிம்கள் உருவாக்கிய போரல்ல. உலக பயங்கரவாதி அமெரிக்காவால் பொய் புணையப்பட்டு, மனித குல விரோதி ஜார்ஜ் புஸ் & co வால் உருவாக்கப்பட்டது. அந்த போர் உருவாகும் சற்று முன்பு 33 டாலராக (ஒலரு பேரல்), போரின் போது 38 டாலர் வரையிலும் சென்று பின்பு மே மாத வாக்கில் 27 டாலர் வரையிலும் குறைந்து பின்பு கொஞ்சம் கொஞ்சமாக கூடியது. 2004 ஜனவரியில் கூட 33 டாலர் அளவில் தான் கூடியது. அதை தொடர்ந்து ஏறுமுகத்தில் தான் இருக்கிறது. விலை ஏற்றம், இறக்கங்களுக்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. விலையேற்றம் நியாயமே என்பதும் எனது கருத்து அல்ல. எனது கேள்வி, அரபு நாடுகள் தங்கள் கொள்கைகளை, திட்டங்களை செயல்படுத்துவதற்காக எண்ணைய் வளத்தை வைத்து உலக சமூகத்தை மிரட்டியதா?
அடுத்து நீங்கள் எழுதியுள்ள இன்னொரு செய்தி, //ஈராக் போருக்கு அமெரிக்காவிற்கு மறைமுக ஆதரவு அளித்ததே கட்டார் என்ற அரபு நாடுதான். போர் வந்தால் எண்ணைவிலை ஏறும் அதனால் லாபம் அடையலாம் என சப்புக் கொட்டி திரிந்து கொள்ளை லாபம் சம்பாதித்தது இந்த அரபு நாடுகள் தாம்// ஐயா கால்கரி சிவா அவர்களே! சில ஆண்டுகளுக்கு முன்பு, நமது கண் கூடாக நடந்த சரித்திரத்திலும் கூட புரட்டு செய்கிறீர்களா? அமெரிக்கா போரை முடிவு செய்த விட்ட பிறகு, இறுதியாக சத்தாமுக்கு (இறைவன் அவருக்கு கிருபை செய்வானாக!) இறுதியாக ஒரு அவகாசம் வழங்கியது. சத்தாமும் (இறைவன் அவருக்கு கிருபை செய்வானாக!) அவரது குடும்பத்தாரும் ஈராக்கை விட்டு வெளியேறினால், அவரது உயிருக்கு உத்திரவாதம் உண்டு. அப்போது கத்தார் முன் வந்து, தனது நாட்டில் சதாமும் அவரது குடும்பத்தார்களும் வந்து கண்ணியத்தோடு வாழ வசதி செய்த தரப்படும். போர் வந்தால் எண்ணைவிலை ஏறும் அதனால் லாபம் அடையலாம் என சப்புக் கொட்டி திரிந்து கொள்ளை லாபம் சம்பாதிக்கலாம் என்ற அல்ப ஆசையிருந்திருந்தால், போர் சூழலை தவிர்க்கும் நடவடிக்கையில் கத்தார் இறங்கியிருக்காது. ஆனால், சத்தாம் (இறைவன் அவருக்கு கிருபை செய்வானாக!) அதை நிராகரித்து ஆக்கிரமிப்பு செய்ய வருபவர்களை தன்னால் முடியும் அளவுக்கு எதிர்க்க முயன்றதால், இராக் எண்ணெய் வளத்தை அபரிக்க போட்ட அமெரிக்காவின் கற்பனை கனவாகி போயுள்ளது. அல்லாஹ்க்கே எல்லா புகழும்.
அடுத்து நீங்கள் எழுதியுள்ள இன்னொரு செய்தி, // போன வருடம் $50க்கு இறங்கிய போது குய்யோ முறையோ எனக் கதறி அழுது உற்பத்தியைக் குறைத்து விலையை ஏற்றியதும் இதே அரபுநாடுகள்தாம்// கச்சா எண்ணெய் உற்பத்தியை நிர்ணயம் செய்வது OPEC என்னும் கூட்டமைப்பு. இதில் விவாதிக்கப்பட்டே முடிவுகள் அடுக்கப்படுகின்றன். முஸ்லிம் நாடுகளும் இதில் அங்கத்தினாகளாக உள்ளனர். ஆனால், இது முஸ்லிம் நாடுகள் மட்டுமே உள்ள அமைப்பு அல்ல. சென்ற ஆண்டு, OPEC என்னும் கூட்டமைப்பு 1 மில்லியன் பாரல்/நாள் (உற்பத்தி 28 மில்லியன் பாரல்/நாள்) அளவுக்கு எண்ணெய் உற்பத்தியை குறைக்க முடிவு எடுத்தது. திடீரென்று, கச்சா எண்ணெய் விலை 78.4 டாலரிலிருந்து 59.76 டாலராக குறைந்ததால், இந்த நிலை நீடித்தால், கந்நா எண்ணெய் விலை 22 டாலருக்கம் கீழே செல்லும் சூழ்நிலை உருவானது. அந்த நிலையை தடுப்பதற்க்கு இந்த உற்பத்தி குறைப்பு நடவடிக்கை மெற்கொள்ளப் பட்டதே தவிர்த்து, முஸ்லிம்களின் தனிப்பட்ட கொள்கையையோ, திட்டங்களையோ உலகில் அமலாக்கப்படுவதற்காக எவ்வித அச்சுறுத்தல்களையும் முஸ்லிம் நாடுகள் உலக சமுதாயத்திறக்கு முன் வைத்ததில்லை. மாறாக. நான் முன்பே சொல்லியது போல், பல்வேறு பதட்டமான சூழ்நிலைகளிலும், அந்த பதட்டங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக இருந்தாலும் கூட (ஈராக் போர்..), அப்போதும் உலக சமுதாயத்தின் நன்மையை கருதி, உற்பத்தியை கூட்டி, விலையேற்ற பாதிப்புகள் உருவாகாமல் நன்மை செய்தார்கள் என்பது தான் உண்மை. அந்த நன்றியை மறந்து, மேலும் பெய்யாக முஸ்லிம் நாடுகள் மீது குற்றம் சுமத்துவது பெரும் பழி பாவமே.
நீங்கள் அறிந்த கொண்டே உண்மையை பொய்யுடன் கலக்காதீர்கள். உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள். (திருக்குர்ஆன் அத்தியாயம்2,வசனம்42)
நன்றி மறப்பது நன்றன்று (திருக்குறள்).
எப்பொருள் யார் வாய் கேட்பினும் அப்பொருள்
மெய் பொருள் காண்ப தறிவு (திருக்குறள்)
நன்றியும் வாழத்துக்களும்
அன்புடன் சகோதரன் நெய்னாமுஹம்மது
நைனா,
உங்கள் அத்தனை கேள்விகளுக்கும் இந்த பின்னூட்டத்தில் பதில் அளிக்க தேவையில்லை. அரபு மயக்கத்தில் அவர்களை புனிதர்கள் ஆக்கும் உங்கள் நோக்கத்தை எதிர்க்க மட்டும்தான் நான் பதில் கூறினேன்.
எண்ணை எடுக்க சவூதி/குவைத்தில் ஆகும் செலவு $1. மற்ற அரபுநாடுகளில் $4.(உடனே இவர் பொய்கூறுகிறார் 1.36 மற்றும் 4.52 என்பதே சரியானது என ஜல்லிகள் அடிக்க வேண்டாம். இந்த நம்பர்கள் ஒரு புரிதலுக்கு மட்டுமே)
முதலில் OPEC நாடுகள் எவை எனப் பார்ப்போமா:Algeria, Angola, Indonesia,Iran, Iraq,
Kuwait,Libyan,Nigeria,Qatar
,Saudi Arabia,
United Arab Emirates மற்றும் Venezuela. இதில் அங்கோலாவும் வெனிசுலாவும் முஸ்லிம் நாடுகள் அல்ல. நைஜீரியா பாதி/பாதி. மற்றவை எல்லாம் முஸ்லிம் நாடுகள். இவர்கள்தாம் மெஜாரிட்டி. இவர்கள் வைத்ததுதான் சட்டம். உலகை உய்யவைக்கவேண்டும் என்றால் இவர்கள் எண்ணைவிலையை இவர்களின் கொள்முதல் விலையில் (மேலே பார்க்க கொள்முதல் விலைக்கு) சற்று ஏற்றிவைத்து விற்கலாம். ஆனால் இவர்கள் அடிப்பதோ கொள்ளை லாபம். உடனே மார்கெட் நிலவரம் அப்படின்னு ஜல்லிகள் வேண்டாம். லாபம் தேவையில்லை எல்லாம் வல்ல ஏக இறைவனின் இரக்கத்தில் உலக ஷேமத்திற்கு மட்டும் பாடுபடுபவர்க்ள் எண்ணைவிலையை $20க்கு மேல் என்ன நிலைமை வந்தாலும் விற்க கூடாது. அதற்குமேல் வைத்து விற்பது ஓபெக் என்ற கூட்டு கள்வாணிகள் உலகை பணியவைக்கதானே. இதில் உள்ள நாடுகளின் அபரீத பெரும்பான்மை கொண்டது ஏக இறைவனின் அற்புத சட்டத்தை அமல் படுத்தி ஆளும் கூட்டம்தானே. நல்லவர்போல் வேடம் போட்டு மறைமுகமாக தீவிரவாதம் செய்பவர்தாம் இந்த அரபுமக்கள்.
கட்டார் போருக்கு எதிரி என்றால் அவர்கள் நாட்டில் அமெரிக்க படைகளை அனுமதிருக்க கூடாது. அவர்களை அனுமதித்துவிட்டு ஷியாகளயும் குர்துகளையும் கொன்று தீர்த்த சதாம் என்ற கொடுங்கோலனுக்கு அடைக்கலம் தருவேன் என சொன்னது என்ன ஒரு குள்ளநரித்தனம். அமெரிக்கர்களின் தயவும் வேண்டும் முஸ்லிம்களிடம் நல்ல பெயரும் வேண்டும் என்பது கயமை அல்லவா. போருக்கு எதிரி என்றால் அமெரிக்காவை பகைத்துக் கொண்டிருக்கவேண்டும். அப்படி பகைத்துக் கொண்டவை எத்தனை அரபுநாடுகள் பட்டியலிடமுடியுமா. அல்லது ஈராக் போரை எதிர்த்து ஆர்பாட்டம் நடத்திய அரபுநாட்டு மக்கள்தாம் எத்தனை எனப்பட்டியலிடமுடியுமா?
எண்ணை விற்கவில்லை என்றால் இவர்களுக்கு சாப்பாடு கிடைக்காது என்று நான் சொன்னது சேம் சைட் கோல் என சொல்லியுள்ளீர்கள். இவர்களுக்கு மதம், இனம்,உம்மா எல்லாம் பேச்சுக்குதான். சாப்பாடுதான் முக்கியம் பிறகுதான் உம்மா எல்லாம் . இதைக் குறிக்கதான் நான் அவ்வாறு கூறினேன். கழககண்மணிகள் மாதிரிதான் ஊன்னா ஆன்னா மதத்திற்கு உயிர்தருவேன் என்பார்கள். ஆனால் அதெல்லாம் சும்மா. லாபம் வேண்டும் வாழ்க்க்கையை ஆனுபவிக்க வேண்டும். அடிமைகள் இவர்களுக்காக உழைக்க வேண்டும் என்பதே இவர்களின் நோக்கம். மதம் எல்லாம் இரண்டாம் பட்ஷம் தான்
எண்ணைவிலையை கண்ட்ரோலில் வைத்துக் கொண்டு உலகை பயமுறுத்துவது அரபுநாடுகள்தாம். அதை அவர்கள் மறைமுகமாக செய்கிறார்கள். நேரடியாக செய்தால் உலகநாடுகள் உறவை முறித்துக்கொள்ளும். அதன்பின் அரபுநாடுகளுக்கு தொழில்நுட்பமும், மனிதவளமும் தந்து அந்த எண்ணையை உபயோகித்து அவர்களை பணக்காரனாக்குவாது யார்?
ஆக தொழில்நுட்பம் தருவது மேலைநாடுகள், அங்குள்ளை எண்ணையை உபயோகித்து அதற்குரிய அதிகமாக விலைகுடுப்பது மேலைநாடுகள், அங்கே அடிமையாக உழைப்பது கீழைநாட்டு மக்கள் கொள்ளை லாபத்தை அடிக்கும் அரபுகள் தாம் உலக மக்களக்கு நன்றி செலுத்தவேண்டும் நாம் ஏன் செலுத்தவேண்டும். மூளைச் சலவை செய்யப்பட்ட அடிமைகள் தங்கள் எஜமானர்களுக்கு நன்றி செலுத்துவதில் வியப்பில்லை.
முடிவுரை: ஒபெக் என்ற அமைப்பே அரபுநாட்டு அதீத பெரும்பான்மை கொண்ட ஒரு கூட்டுகளவாணி அமைப்பு. அது அடிக்கும் கொள்ளைலாபம் உலகை அச்சுறுத்த தான் அன்றி உலகை காப்பாற்ற அல்ல.
போர்காலங்களில் உற்பத்தியை கூட்டிக் காட்டுவது ஒரு நாடகம் பின்வரும் காலங்களில் விலையை ஏற்றி மக்களை கொள்ளை அடிக்கத்தான்.
மற்ற கேள்விகளுக்கு பதில் வரும்
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையயோனுமான எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப் பெயரால் ஆரம்பிக்கிறேன்.
அன்பு சகோதரர் கால்கரி சிவா அவர்களே!
ஐயா கேள்வி புரியவில்லையா? இல்லை, புரிந்தும் பதில் இல்லாததால் சம்பந்தம் இல்லாத வற்றை எல்லாம் எழுதுகிறீர்களா? இதில் எது சரி?
இதற்கு முந்திய என்னுடைய பின்னூட்டத்திலும், உங்களின் பதிலில் கேள்விக்கு சம்பந்தமில்லாமல் எதை எல்லாம் பேசுகிறது என்று பட்டியலிட்டடேன். இன்னும் அந்த சம்பந்தமில்லாத பதிலில் குளறு படிகள் இருந்ததால் அவற்றிக்கு சில விளக்கங்களை நான் தர போக, அது பற்றி பேச ஆரம்பித்து இருக்கிறீர்கள்.
சகோதரர் சிவா அவர்களே! ஒருவன் ஒரு பொருளுக்கு விலை நிர்ணயம் செய்து, பின் அந்த விலை வெவ்வேறு காரணங்கள் காரணமாக, சந்தையில் ஏறுவது இறங்குவது, மிரட்டலா?
தன்னிடத்தில் இருப்பதை ஒருவருக்கு கொடுப்பதற்காக, அவருடைய அத்தியாவசிய சந்தர்பத்தை பயன்படுத்தி, பிறருக்கு பாதிப்பளிக்கும் தனது கொள்கையை அல்லது தேவைகளை நிறைவேற்றுவதற்காக முன் வைக்கும் கோரிக்கையே மிரட்டலாகும். இந்த அடிப்படையில் உலக சமுதாயத்தை தனது சுயலாப கொள்கையை நடைமுறைபடுத்தவோ அல்லது சுயநல தேவையை அடையவோ எண்ணெய் வள முஸ்லிம் நாடுகள் உலக சமுதாயத்தை மிரட்டியதா? இது தானே கேள்வி? ஆம் என்றால் ஆதாரத்தோடு பதில் தாருங்கள். இல்லை என்றால் சகோதரர் அரவிந்தனுக்கு தகுந்த அறிவுரைகளை கூறுங்கள். இதை விட்டுட்டு ஏன் சம்பந்தமில்லாத வற்றிக்கு எல்லாம் செல்லுகிறீர்கள்.
அடுத்து கேள்விக்கு சம்பந்தமில்லாத உங்கள் பதில்களிலிருந்து எனது விமர்சனங்கள் சில.
1) //எண்ணை எடுக்க சவூதி/குவைத்தில் ஆகும் செலவு $1. மற்ற அரபுநாடுகளில் $4.. .....லாபம் தேவையில்லை எல்லாம் வல்ல ஏக இறைவனின் இரக்கத்தில் உலக ஷேமத்திற்கு மட்டும் பாடுபடுபவர்க்ள் எண்ணைவிலையை $20க்கு மேல் என்ன நிலைமை வந்தாலும் விற்க கூடாது//
அதிகப்பட்சத் தொகையான $4 டாலரே உற்பத்தி விலை என்று வைத்துக் கொண்டாலும், $20க்கு விற்பது 500% வாபம் இல்லையா? நீங்கள் கூறும் இது மட்டும் கொள்ளை லாபமில்லையா? அது என்ன மேஜிக் நம்பர் $20 ?
2) //எண்ணைவிலையை கண்ட்ரோலில் வைத்துக் கொண்டு உலகை பயமுறுத்துவது அரபுநாடுகள்தாம். அதை அவர்கள் மறைமுகமாக செய்கிறார்கள்.//
நேரடியான ஆதாரத்தை தரக் காணோம் மறைமுகமான ஆதாரங்களை அள்ளி வீசுறீங்க!
3) //இவர்களுக்கு மதம், இனம்,உம்மா எல்லாம் பேச்சுக்குதான். சாப்பாடுதான் முக்கியம் பிறகுதான் உம்மா எல்லாம் . இதைக் குறிக்கதான் நான் அவ்வாறு கூறினேன். கழககண்மணிகள் மாதிரிதான் ஊன்னா ஆன்னா மதத்திற்கு உயிர்தருவேன் என்பார்கள். ஆனால் அதெல்லாம் சும்மா. லாபம் வேண்டும் வாழ்க்க்கையை ஆனுபவிக்க வேண்டும். அடிமைகள் இவர்களுக்காக உழைக்க வேண்டும் என்பதே இவர்களின் நோக்கம். மதம் எல்லாம் இரண்டாம் பட்ஷம் தான்//
நீங்கள் (சங்பரிவார கும்பல்) தான் குளறுகிறீர்கள், முஸ்லிம் நாடுகள் தங்கள் சித்தாந்தத்தை பிற மக்களிடம் திணிக்கும் மத வெறியர்கள் என்று. ஆனால் மேலே கூறிபிட்டுள்ள உங்கள் வார்த்தைகள் நேர் முரண்பாடானது.
முஸ்லிம் நாடுகளுக்கு வாழ்க்க்கையை ஆனுபவிக்க வேண்டும். மதம் எல்லாம் இரண்டாம் பட்ஷம் தான். இரு நேர் எதிரான முரண்பட்ட கருத்துக்கள். யோசிச்சு ஒரு கருத்தை சொல்லுங்கள்.
ஒரு சமயம் நீங்கள் சொல்வது போல முஸ்லிம் நாடுகள் எண்ணெய் வளத்தால் உலக நாடுகளை மிரட்டுவது உண்மையாக இருக்குமானால், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் வீட்டோ உரிமையை பெற்றிடாத முஸ்லிம் நாடுகள் மீது பொருளாதார நெருக்கடியையும், உலக சமுதாயத்திலிருந்து தனிமைபடுத்தியும் உலக நாடுகள் மிரட்டலை எதிர் கொள்ள முடியுமே? அவ்வாறு செய்ய வேண்டும் என்று ஏதாவது ஒரு ஐநா உறுப்பு நாடு எண்ணெய் வள முஸ்லிம் நாடு(கள்) மீது குற்றம் சுமத்தியிருக்கிறதா?
எண்ணெய் வளம் உலக சமூகத்திற்க்கு முக்கியமான தேவையானதாக இருந்தாலும், முஸ்லிம் நாடுகள் உலக நாடுகளை மிரட்டுவது என்பது கற்பனைக்கும் அடைபடாத கருத்தாகும்.
உண்மையை உணருங்கள். நன்மையை செய்யுங்கள். வீண் பகைமையையும், பழிசுமத்தலையும் விட்டொழியுங்கள்.
ஒருவரை ஒருவர் மதிக்க நாம் கற்று கொள்வோம். சகோதர வாஞ்சை நம்மிடையே தழைக்க வேண்டும்.
நன்றி வாழ்த்துக்களுடன்
அன்பு சகோதரன் நெய்னா முஹம்மது
Post a Comment
<< Home