Thursday, November 30, 2006

வேதாளம் சொன்ன சவூதி விமான டிக்கட் கதை


தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் மீண்டும் மரத்தின் மீதேறி அங்கு தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழே இறங்கி அதனைச் சுமந்து கொண்டு மயானத்தை நோக்கி செல்லுகையில் அதனுள் இருந்த வேதாளம் எள்ளி நகைத்து "மன்னனே நீ யாரையோ திருப்தி செய்வதற்காக இந்த வேலையை செய்வதாக தெரிகிறது. அவர் உண்மையில் எப்படிபட்டவரோ! இப்போது மிகவும் பரந்த மனப்பான்மை கொண்டவர் போலவும், இனிய மார்க்கத்தவர் போலவும், அமைதியை விரும்புபவர் போலவும் தெரியலாம். ஆனால அவரது கைக்கு வலிமை ஏற்பட்டதும் சின்ன விசயங்களில் கூட உன்னுடைய சுவடே இல்லாமல் அழித்து விடலாம். சாதாரண விசயங்களில் கூட உன்னை நினைவுபடுத்தும் சின்ன தடையம் கூட இல்லாமல் செய்துவிடலாம். இது குறித்து நான் உனக்கு ஒரு கதை சொல்கிறேன்" என்று கதை சொல்ல தொடங்கியது.


"பின்னொரு காலத்திலே சவூதி சவூதி என்றொரு பட்டணம் உண்டு. அந்த பட்டணம் அமைதியின் திருமார்க்கத்தின் சட்டங்கள் உன்னதமாக நிறைவேற்றப்படும் நாடு என அமைதி மார்க்கத்தவரால் கருதப்படும் நாடு ஆகும். புனிதப்போராளிகளான அமைதி மார்க்கத்தவர் இன்னொரு மார்க்கத்தவரும் சிலுவைப் போராளிகளுமான அன்பு மார்க்கத்தவர் தேவனின் ஒரே குமாரன் என வணங்குகிறவரையும் தம்முடைய இறைவாக்கினர் அதாவது நபி என சொல்லுவதுண்டு. இதனை அன்பு மார்க்கத்தவர் அவமானமாக நினைப்பதுண்டு. ஆனால் அமைதி மார்க்கத்தவரோ அன்பு மார்க்கத்தவரிடம் தாம் அந்த தேவகுமாரனை இறைவாக்கினர் என்று மிகவும் மதிப்பதாகவே சொல்லுவதுண்டு. டாவின்ஸி கோட் என்றாகப்பட்ட ஒரு நூல் வந்தபோது அந்த நூல் தேவகுமாரன் என தாம் வழிபட்ட கடவுளை பழித்ததாக அன்பு மார்க்கத்தவர்கள் ஆர்ப்பாட்டம் செய்த போது, அந்த நூல் தங்கள் இறைத்தூதர் ஒருவரை பழித்ததாக அன்பு மார்க்கத்தவர்களும் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்படியாக இந்தியா என்கிற தேசத்திலே படம் காட்டி ஒன்றுக்குள் ஒன்றாக இருக்கிற இவர்களின் ஆதர்ச தேசமாக சவூதி விளங்கியது. அழுத்தி கேட்டால் 'உள்ளத்துக்குள் ஆதர்சம். முழு ஆதர்சம் அல்ல' என்று அமைதி மார்க்கத்தில் அமைதியை அதிகமாக விரும்புகிறவர்கள் சொல்வார்கள்."

"அப்படியாக இருக்கும்போது 1988 என்கிற வருசத்தில் அல்லது அதற்கு ஒன்றிரண்டு வருசங்களுக்கு இடையில் வானம் வழியாக சவூதிக்கும் சவூதியிலிருந்தும் செல்லும் பயணிகளுக்கு விமான டிக்கட்கள் வழங்கப்பட்டன. அதனை கவனித்த அமைதி விரும்பி மதத்தவர்கள் சிலர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அந்த டிக்கட்டுகளை கொண்டு சென்று சவூதியில் அமைதி மார்க்க பண்பாட்டு காவலர்களிடம் எடுத்து சொன்னார்கள். உடனே தனது தவறை உணர்ந்த சவூதி அரசும் அந்த டிக்கட்டுகளை திரும்பப் பெற்று அதன் விநியோகத்தையும் நிறுத்தி புதிய டிக்கட்டுகளை பிரசுரித்து விநியோகம் செய்தது."

வேதாளம் இந்த கதையைக் கூறி அந்த இரண்டு டிக்கட்டுகளையும் காலவெளியில் டெலிபோர்ட் செய்து அவன் முன்னால் காட்டியது.
பின்னர் வேதாளம் விக்கிரமாதித்தனிடம்,
"ஏ அரசனே இதோ அந்த இரு டிக்கட்டுகளையும் பார். இந்த டிக்கட்டுகளில் அமைதி மார்க்கத்துக்கு புறம்பான அமைதிக்கு புறம்பாக பிரசுரிக்கப்பட்டிருக்கும் விசயத்தை நீ கண்டுபிடித்து சொல். விடை தெரிந்தும், நீ அமைதியாக இருந்தால் நான் உன் தலையை சுக்கு நூறாக சிதறடிப்பேன். அல்லது அமைதி மார்க்கத்தவர்கள் காஃபீர்களின் தொண்டைகளைக் கிழிப்பது போல கிழித்து விடுவேன்."
என்றது.

"அந்த டிக்கட்டுகளை கூர்ந்து நோக்கிய விக்கிரமாதித்தன் மேலே உள்ள டிக்கட்டில் s மற்றும் a ஆகிய எழுத்துகளுக்கு நடுவே உள்ள பகுதி ஒரு சிலுவை போல இருக்கிறது. இது சிலுவைப்போராளிகளான 'அன்பு' மார்க்கத்தவர்களின் சின்னம் என்று சில அதீத அமைதி விரும்பிகள் கண்டுபிடித்திருக்கக் கூடும். இது யூத-அமெரிக்க சதி என்று கூட எண்ணியிருக்கக் கூடும். எனவேதான் அந்த டிக்கட் அமைதி மார்க்கத்துக்கு எதிரானது என தடை செய்யப்பட்டு புதிய டிக்கட் விநியோகிக்கப்பட்டது."
என்று விக்கிரமாதித்தன் பதிலளித்தான்.


விக்கிரமாதித்தனின் சரியான இந்த பதிலால் அவனது மௌனம் கலையவே வேதாளம் அவன் சுமந்து வந்த உடலோடு உயரக்கிளம்பி மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது.


  • கதை அமைப்பு : நன்றி. அம்புலிமாமா
  • தகவல் நன்றி: பெயர் கூற வேண்டாமென்று கேட்டுக்கொண்ட முஸ்லீம் சகோதரருக்கும் அவர் தந்த இதழ்: 'முஸ்லீம் முரசு' ஏப்ரல் 1988 -க்கும்

18 Comments:

Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

test

12:19 AM, November 30, 2006  
Anonymous Anonymous said...

This comment has been removed by a blog administrator.

12:45 AM, November 30, 2006  
Blogger bala said...

நீலகண்டன் அய்யா,

விக்ரமாதித்தன்/வேதாளம் கதை சூப்பரா இருக்கிறது.ரொம்ப நாளைக்கப்புறம் அம்புலிமாமா படித்த திருப்தியை தந்தது.

அப்படியே விக்ரமாதித்தன்/வேதாளம் கதை மூலமா நம்ம அசுரன் அய்யா/ரோசா அய்யா/புதுவை சுகுமாரன் அய்யா இவங்களெல்லாம் அஃப்சலுக்கும்/மதானிக்கும் ஏன் அடிவருடறாங்கன்னு விளக்கமா சொல்லுங்கய்யா.

பாலா

12:46 AM, November 30, 2006  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

This comment has been removed by a blog administrator.

12:46 AM, November 30, 2006  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

நன்றி பாலா,
//அப்படியே விக்ரமாதித்தன்/வேதாளம் கதை மூலமா நம்ம அசுரன் அய்யா/ரோசா அய்யா/புதுவை சுகுமாரன் அய்யா இவங்களெல்லாம் அஃப்சலுக்கும்/மதானிக்கும் ஏன் அடிவருடறாங்கன்னு விளக்கமா சொல்லுங்கய்யா.//

அனந்த வாய்கள் கொண்ட ஆதிசேஷனாலும் விவரிக்க இயலாத பந்தங்கள் ஐயா அது. அதனை விவரிக்க என்னால் இயலுமா? ஏதோ ஏழைக்கேத்த எள்ளுருண்டை அப்படீன்னு அம்புலிமாமா ரேஞ்சுல போய்ட்டுருக்கேன். ஆனாலும் இந்த முதலைக்கண்ணீர் பத்தி எழுத டிரை பண்றேன்.

12:50 AM, November 30, 2006  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

நன்றி அரிகரன். தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

12:52 AM, November 30, 2006  
Anonymous Anonymous said...

நல்ல கதை ஐயா. அமைதி மார்க்கத்தினரின் கூர்மைப் பார்வை, அவர்கள் அன்பு மார்க்கத்தினரிடம் கொண்ட பாசம் எல்லாம் புல்லரிக்க வைக்கிறது.

இப்படியாகத் தான், தென்னிந்தியாவில் வெளிவரும் டெக்கன் ஹெரால்டு என்ற நாளிதழ் 90களின் தொடக்கத்தில் ஒரு நாள் அப்பாவித் தனமாக "Mohammmed, the idiot" என்று ஒரு சிறுகதையை வெளியிட்டது. இந்தக் கற்ப்னைக் கதையில் வரும் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் முகமது. வந்ததே கோபம் அமைதி மார்க்கத்தினருக்கு, எப்படி தங்கள் நபியை முட்டாள் என்று சொல்லலாம்?? அந்த நாளிதழ் அலுவலகத்தை அடித்து உடைத்து நொறுக்கி விட்டார்கள். பெரிய கலவரம் நடந்தது. பின்னர் அந்தக் கதையை வெளியிட்டதற்காகப் பலதடவை மன்னிப்பு எல்லாம் கேட்டது நாளிதழ் நிர்வாகம்.

ஆனால், அறிவியல் கண்ணோட்டப்படி இதில் தவறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

* உலகத்தில் மிக அதிகமான பேர் வைத்திருக்கும் பெயர் "முகமது" - புள்ளி விவரம்

* உலகத்தில் மிக அதிகம் பேர் முட்டாள்கள், மீதிப்பேர் அயோக்கியர்கள் - பகுத்தறிவுப் பகலவன் பெரியார்

12:57 AM, November 30, 2006  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

நன்றி உண்மை விளம்பி.

ஏறத்தாழ பெங்களூரில் அத்தனை முக்கிய ஆங்கில பத்திரிகைகளும் அமைதி மார்க்கத்தவர்களிடம் மண்டி இட்டுள்ளன என படித்ததாக ஞாபகம். ஆமாம் அமைதி மார்க்கம் என்றால் சும்மாவா? கழுத்தை வெட்டுவது முதல் இரயிலுக்கு வெடிகுண்டு வைப்பது வரை மனிதவாழ்வில் நிரந்தர அமைதி கொண்டுவர முயலுவது தானே அமைதி மார்க்கத்தவரின் தலையாய கடமையே.

1:02 AM, November 30, 2006  
Blogger Hariharan # 03985177737685368452 said...

நீலகண்டன் இங்கு ஹரிஹரன் என்று வந்திருக்கும் பின்னூட்டம் போலியானது. அதை நீக்கிவிடுங்கள்

1:14 AM, November 30, 2006  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

நன்றி அரிகரன்

1:21 AM, November 30, 2006  
Blogger வஜ்ரா said...

//
* உலகத்தில் மிக அதிகமான பேர் வைத்திருக்கும் பெயர் "முகமது" - புள்ளி விவரம்

* உலகத்தில் மிக அதிகம் பேர் முட்டாள்கள், மீதிப்பேர் அயோக்கியர்கள் - பகுத்தறிவுப் பகலவன் பெரியார்
//

என்னே காம்பினேஷன்.! ஆஹா!

ரெண்டுக்கும் நடுவுல ஈக்வல்டு போட்டீங்கன்னா...முட்டாள்களெல்லாம் முகம்மது என்று பெயர் வைத்துக் கொள்கிறார்களா அல்லது முகம்மது என்று பெயர் வைத்தாலே முட்டாள் ஆகிவிடுவார்களா என்ற கேள்வி வரும்.!

1:54 AM, November 30, 2006  
Anonymous Anonymous said...

SUPER PUNCH # 2

2:27 AM, November 30, 2006  
Anonymous Anonymous said...

அவர்கள் நாட்டின் சட்டப்படி அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார்கள். உங்களுக்கு என்ன வந்தது?

2:48 AM, November 30, 2006  
Blogger கால்கரி சிவா said...

ஒரு கார்ட்டூனை வரைந்து அதில் உள்ள ஒரு காரெக்டருக்கு முகமது என பெயரிட்டனர் என்று அதை புறகணிப்பதை விட்டு ஆர்பாட்டம் செய்து தங்கள் பெயரை கெடுத்துக் கொண்டனர் அமைதி மார்க்கத்தினர்.

முகமது என பெயர் சூட்டிக் கொண்டு கயமை செய்பவர்களை எல்லாம் வெட்டிவிட்டால் அப்புறம் உலகில் கணிசமான அளவில் மக்கள் தொகை குறைந்துவிடும்

7:42 AM, November 30, 2006  
Anonymous Anonymous said...

//
அவர்கள் நாட்டின் சட்டப்படி அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார்கள். உங்களுக்கு என்ன வந்தது?
//

பின்ன இந்திய நாட்டின் சட்டப்படி நடவடிக்கை எடுத்தால் உங்களுக்கு ஏன் வலிக்கிறது. தீவிரவாதியை தூக்கில் போட்டால் தப்பு என்பதெல்லாம் எதனால்?

அப்பவும் உங்களை கண்ணாடியில் நீங்களே பார்த்துக் கொண்டு இந்தப் பதிலைச் சொல்லி ஆருதல் படுத்திக் கொள்ளவேண்டியது தானே?

8:30 AM, November 30, 2006  
Blogger arunagiri said...

அவர்களின் மதம் பிடித்த கிறுக்கு சட்டத்தைத்தானே கிண்டல் செய்கிறார். உங்களுக்கு என்ன வந்தது ராஜா?

2:50 PM, November 30, 2006  
Anonymous Anonymous said...

ராசா

அவர்கள் நாட்டில் அவர்கள் சட்டம் என்றால் ஏனைய்யா டென்மார்க் காரன் முட்டாக்கை எடுக்கச் சொன்னால் கலவரம் பண்ணுறீங்க ? இந்திய நாட்டுல வரதட்சணை கொடுன்னா கலவரம் பண்ணுறீங்க ? அமெரிக்காக் காரன் குவாண்டானமோல அவன் நாட்டுச் சட்டப் படி உள்ளே வைத்தால் மனித உரிமை மீறல் அப்பிடீங்கிறீங்க.

நீலகண்டன் சவுதி எப்படிப் பட்ட ஒரு அடிப்படைவாத முட்டாள்தனமான நாடு என்பதை விளக்கியிருக்கிறார். உனக்கேன் காண்டு ?

3:15 PM, November 30, 2006  
Anonymous Anonymous said...

// அவர்கள் நாட்டின் சட்டப்படி அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார்கள். உங்களுக்கு என்ன வந்தது? //

இங்கு தான் நாம் அமைதி மார்க்க ஆட்களை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

இதே போல ராஜாவின் நாட்டிலும் அமைதி மார்க்கத்தினர் "அவர்கள் மதத்தின் சட்டப்படி" திருமண சட்டங்களைக் குப்பையில் போடச் சொல்லுவார்கள், ராஜாவின் வீட்டுப் பெண்கள் பர்தா அணியவேண்டும் என்பார்கள், ராஜாவைக் கொன்று அவன் குடும்பத்தை அழித்து விட்டு நாங்கள் செய்வது புனிதப் போர் என்பார்கள், ராஜாவின் நாட்டுச் சட்டம் கொன்றவர்களுக்கு தூக்குத் தண்டனை வழங்கினால் அது மனித உரிமை மீறல் என்று போராடுவார்கள்!

இதெல்லாம் வேண்டுமா என்று யோசியுங்கள் ராஜா.

இது வெறும் ticket மேட்டர் அல்ல, ரொம்ப wicked மேட்டர்.

11:47 PM, November 30, 2006  

Post a Comment

<< Home