Monday, May 07, 2007

மண்டைக்காடு, குமரிகண்ட ஒட்டகம், மாசிவகுமார் இத்யாதி

சிவகுமார் சில அற்புத வியாக்கியானங்களை தனிமனித தாக்குதல் குறித்து திருவாய் மலர்ந்தருளியுள்ளார். எனவே இது குறித்து நான் இட்ட பின்னூட்டங்களை இங்கே தருகிறேன். சிவப்பு நிறத்தில் உள்ளது சிவகுமார் அவரது வலைப்பதிவில் விலக்கியது ஆகும். அப்புறம் உங்கள் முடிவுக்கு விட்டுவிடுகிறேன்.


குமரிமைந்தன் அரவிந்தன் நீலகண்டனுக்கு ஆப்பு வைத்ததை அறிவிக்கும் - ஆப்பறிவிக்கும் படலம்:

எட்வின் said...
குமரி மாவட்ட கலவரம் பற்றிய கட்டுரை குமரிமைந்தன் எழுதியுள்ளார்
பார்க்க: http://kumarimainthan.blogspot.com
1:58 AM, May 06, 2007
பதிவு: அரவிந்தன் நீலகண்டனின் பதிவு


குமரிமைந்தன் அரவிந்தன் நீலகண்டனுக்கு ஆப்பு வைத்ததை கீரன் சிலாகிக்கும் - ஆப்பு சிலாகிக்கும் படலம்

ஜாம்பவான், ஆளுமை ;))))
மாசி சார் சிரிக்கத்தான் தோன்றுகிறது. திட்டமிட்ட புளுகர்களுக்கு ஜால்ராக்கள் சூட்டும் பட்டங்கள்.
இப்படி ஒருபக்கத்து புளுகுகளை வாரி இறைத்து ஆதா-ரம் காட்ட வேறு யாரால் முடியும். ஆகவே அவர் ஜாம்பவான் என்பது மெய்தான். இவரால் மூளைச்சலவை செய்யப் பட்ட மூடர்களுக்கு இவர் ஆளுமை தான்.
இந்தப் புளுகு மூட்டைகளின் ஆதாரங்களுக்கு குமரி மைந்தன் வைத்திருக்கும் ஆப்பு பார்த்தீர்களா? ஆதாரம், ஆய்வு என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று புரியாதவர்கள் படித்து புரிந்து கொள்ளட்டும். அதில் அவர் ஆர்எஸ்எஸ்ஸின் புரட்டு வித்தைகளை புட்டு வைத்திருக்கிறார்.
மண்டைக்காடு கலவரத்தின் உண்மை நிலவரத்தையும் நடுநிலையாக ஆய்ந்து விரிவாகவே சொல்லி இருக்கிறார். இந்த அண்டப் புளுகர்களைப் போல ஒருபக்க நியாயம் அவர் பேசவில்லை. நீங்கள் உண்மையை எழுதியபோது உங்களை தனிப்பட தாக்கியது இவர்களின் நிதானமான எழுத்து என்றால் மதக்கலவரங்களை இவர்கள் எப்படி கையாண்டிருப்பார்கள் என்பதற்கு இதற்கு மேல் சான்று தேவையா?
Sun May 06, 05:31:00 PM IST
பதிவு: மா.சிவகுமாரின் பதிவு


மா.சிவகுமார் கீரனை சிலாகித்து பதிவு மீள் அறிவிப்பு செய்யும் படலம்: ஆப்பு-மீள் அறிவிப்பு படலம்

மா சிவகுமார் said...
கீரன் குறிப்பிட்டுள்ள குமரி மைந்தன் அவர்களின் பதிவுகள் 10 பகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன:
முதல் சுட்டி இதோ

Sun May 06, 06:23:00 PM IST
பதிவு: மா.சிவகுமாரின் பதிவு


ஆப்படிக்கப்பட்ட அரவிந்தன் வேறுவழியில்லாமல் தனிமனித தாக்குதலில் இறங்கும்: தனிமனிததாக்குதல் முதல் படலம்:

அரவிந்தன் நீலகண்டன் said...
குமரிமைந்தனின் அறிவுபிரகாசம் [:-))))))))] அவரது குமரிக்கண்டம், குமரிகண்டத்தில் இருந்த ஆகாய விமானங்கள், எரிக் வான் டானிக்கன் என்ற மோசடி பேர்வழியை நாசா விஞ்ஞானி ஆக்கிய ஆராய்ச்சி வன்மை, மனிதன் பாம்பை பார்த்து தான் நிமிர்ந்து நடக்க ஆரம்பித்தான் என்கிற 'கோட்பாடு' ஆகியவற்றுடன் முடிந்துவிட்டதாக நினைத்தேன். ஐயகோ! கொடுமையிலும் கொடுமை குமரி கண்ட ஒட்டக புலமை மண்டைக்காடு கலவரம் வரை வந்து மேய ஆரம்பித்துவிட்டதே! அய்யா குமரி மைந்தனுக்கு இந்த வயதிலும் இத்தனை நகைச்சுவை இருப்பது மதிக்கத்தக்கது. விரைவில் இவர் பாளையங்கொட்டை சேவியரில் பிரதான ஆராய்ச்சி ஐயா ஆகிவிடலாம். வாழ்க. ஆனால் உண்மையில் இவருக்கு தேவை மனநலம். (here i am not sure the exact words)

பதிவுகள்: மா.சிவகுமாரின் பதிவு மற்றும் அரவிந்தன் நீலகண்டனின் பதிவு.


விவிலிய ஏசுவை நம்பமுடியாதா என எட்வின் பிரகாஷ் சிலிர்த்தெழும் பதிவு: சிலிர்த்தெழு படலம்

எட்வின் பிரகாஷ் said...
அரவிந்தன் தன் புளுகு மூட்டை அம்பலமாகிவிட்டதால் குமரிமைந்தனை நகைச்சுவைக்காரர் என்கிறாரோ?
"விவிலியம் சித்தரிக்கும் ஏசு வரலாற்றில் வாழ்ந்திடவில்லை" என்று இவர் கூறுவதை நம்பவேண்டும்; ஆனால் குமரிக் கண்டத்தில் ஒட்டகம் இருந்ததாக குமரிமைந்தன் கூறினால் அது நகைச்சுவையாம். விஷ்ணுவின் மச்ச அவதாரத்தை நம்பலாம்; ஆனால் அது குமரிக்கண்ட கடலோடிகளின் காம்பசின் குறியீட்டு வடிவமே என்று குமரிமைந்தன் கூறுவது நகைச்சுவையாம். குமரிமைந்தன் குமரிக் கலவரத்தை மத சாயம் பூசப்பட்ட சாதிக் கலவரம் என்றதனால் தன் கதை எடுபடாது என்று அஞ்சி அவர் மீது கிறித்துவ சாயம் பூச நினைக்கிறாரோ?

Mon May 07, 12:07:00 AM IST
பதிவுகள்: மா.சிவகுமாரின் பதிவு மற்றும் அரவிந்தன் நீலகண்டனின் பதிவு.


மீண்டும் தனிமனித தாக்குதல்களில் இறங்கி புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிடும் அரவிந்தன் நீலகண்டனின் பின்னூட்டத்தை மா.சிவகுமார் அனுமதிக்கும்:: அண்ணனுக்கு பெரியமனசு படலம்:

அரவிந்தன் நீலகண்டன் said...
அன்புள்ள எட்வின்,

நான் என்ன புளுகுகளை எழுதியிருக்கிறேன் என விளக்குவீரா? அல்லது என்னுடைய எந்த வார்த்தைகளை புளுகாக திரு.குமரிமைந்தன் கூறியுள்ளார் என்பதனை தெரிந்து கொள்ளலாமா? சரி குமரிமைந்தனின் ஆராய்ச்சி பார்வையின் ஆழத்தை சிறிதே பார்க்கலாம். பொதுவாக அவரது 'ஆதாரங்கள்' வாய்வழி செய்திகளுக்கு அப்பால் செல்லாமல் நின்று விடுகின்றன. அதையாவது இந்த மனிதர் சரிபார்த்தாரா என்றால் அதுகூட இல்லை. உதாரணமாக செவி வழி செய்திகளை ஐயா அடுக்குகிறார் பாருங்கள்: "மண்டைக்காட்டுக் கோயிலின் பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கியை மாதா கோயிலை நோக்கித் திருப்பிவைத்து இந்து மதப்பாடல்கள் ஒலிபரப்பப்பட்டனவாம். அதற்கு எதிர்ப்பாக மாதா கோயில் ஒலிபெருக்கி அம்மன் கோயிலை நோக்கித் திருப்பப்பட்டதாம். அதை நிறுத்தும் படி கேட்கப்போன காவலரைத் தாக்கினதால் அவர்கள் சுட்டார்களாம். இது இன்னொரு கதை." (http://kumarimainthan.blogspot.com/2007/05/4.html) இப்படி ஒருவித moral relativism - zeal உடன் 'கதைகளை' அடுக்குகிற இந்த குமரி மைந்தன், சிறிதே நேரம் செலவழித்து மண்டைக்காட்டுக்கு போய் பார்த்திருந்தால் அங்கே இருப்பது 'மாதாகோவிலா' குருசடியா என்பது தெரிந்திருக்கும். இந்த இலட்சணத்தில் இருக்கிறது குமரிமைந்தனின் ஆராய்ச்சி பார்வை. இது ஒரு சின்ன சாம்பிள்தான். வதவத என எழுதி தள்ளியிருக்கும் குமரிகண்ட ஒட்டக கண்டுபிடிப்பாளரின் எழுத்துக்களை படித்து ஒவ்வொரு புள்ளியாக இந்த ஆசாமி மறைத்தும் மிகைப்படுத்தியும் கூறிய விசயங்களை ஒவ்வொன்றாக காட்டத்தான் போகிறேன். அதற்கு முன் இந்த குமரி கண்ட புளுகுகளுக்கு வரலாம். மேதாவி குமரி மைந்தனின் குமரிக்கண்ட புளுகுகளை கிழித்து உலரவிட்டு விட்டார் கிறிஸ்டோ பர் ஜெயகரன் என்னும் நிலவியலாளர். அதற்கு உருப்படியான பதிலை இன்னமும் இந்த ஆசாமியிடமிருந்து காணோம். சரி அது போகட்டும் திருவாளர்.எட்வின் என்கிற உங்களது சீர் எப்படி இருக்கிறது என்றால் பரமார்த்த குமரிமைந்தனுக்கு ஏற்ற சீடராகத்தான் இருக்கிறீர். இதோ உங்களது கூற்று: "விஷ்ணுவின் மச்ச அவதாரத்தை நம்பலாம்; ஆனால் அது குமரிக்கண்ட கடலோடிகளின் காம்பசின் குறியீட்டு வடிவமே என்று குமரிமைந்தன் கூறுவது நகைச்சுவையாம்." ஆகா ஐயா குமரிக்கண்டத்தை குமரி மைந்தன் 'கண்டுபிடித்ததை'விட பெரிய கண்டுபிடிப்பையா இது. இதோ எனது எழுத்துக்கள்: "...இந்த இயா தெய்வம் தன் தூதுவர்களை உலகெங்கும் அனுப்புகிறது. இந்த தூதர்களில் முதன்மையானவன் ஓயன்னஸ் (Oannes) என்பவர் ஆவார்...." என கூறும் நான் தொடர்ந்து கீழ் குறிப்பில் எழுதுகிறேன்: "...மேலும் ஓயன்னஸுக்கும் விஷ்ணுவின் முதல் அவதாரமான மச்சாவதாரத்துக்கும் கூட இணைகளை காண முடியும்." அதாவது புரிகிற விதத்தில் (ஹும் இப்படி தெள்ளத்தெளிவாக எழுதியதையும் 'புரிகிற' விதத்தில் சொல்ல வேண்டி இருக்கிறது.) சொல்வதாக இருந்தால் விஷ்ணுவின் அவதாரம் குறித்த புராணத்திற்கும் சுமேரிய தொன்மக்கதைக்கும் இணைகள் இருப்பதைக் கூறுகிறேன். அதாவது ஒரு இந்திய கடவுள் குறித்த புராணத்துக்கும் சுமேரிய தெய்வத்தின் தூதன் குறித்த சித்தரிப்புக்கும் இணைகள் இருப்பதைக் கூறுகிறேன். ஒரு தீவிர வைணவருக்கு சங்கடம் ஏற்படுத்துகிற சமாச்சாரம் இது. ஆனால் எட்வினுக்கு இது 'விஷ்ணுவின் மச்ச அவதாரத்தை நம்பலாம்' என நான் கருதுவதாக ஆகிவிடுகிறது. சரி ஏன் எட்வின் சார் உங்களுக்கு இந்த எரிச்சல்...ஒருவேளை "விவிலியம் சித்தரிக்கும் ஏசு வரலாற்றில் வாழ்ந்திடவில்லை" என்று இவர் கூறுவதை நம்பவேண்டும்" என்கிற உங்கள் ஆத்திர வரிகளில் பூனை வெளியே வருகிறதோ? குமரிக்கண்ட கப்பல்களில் காம்பஸ்...:-)))) கிரேக்க .அண்டிகைதிரா அமைப்பு கூட கிமு(BCE) 150-100 என்கிறார்கள். நம்ம குமரிகண்ட காம்பஸ் எந்த காலம் எட்வின் சார்? நல்ல சிரிப்பு காட்டுறீங்க.


அரவிந்தன் நீலகண்டன்
பதிவுகள்: மா.சிவகுமாரின் பதிவு மற்றும் அரவிந்தன் நீலகண்டனின் பதிவு.


மா.சிவகுமார் அறிவுரை அருள வைக்கும் தனிமனித தாக்குதல் நிரம்பிய அரவிந்தன் நீலகண்டனின் அடுத்த பின்னூட்டம்: தனிமனிததாக்குதல் இரண்டாம் படலம்

அரவிந்தன் நீலகண்டன் said...
//1930 களில் நாகரிகத்தின் கதை என்ற பெருந்தலைப்பின் கீழ் முதல் மடலமாக கீழை நாடுகள் நமக்களித்த கொடைகள் ( Story of Civilisation- our Oriental Heritage ) என்ற நூலை எழுதிய வில்தூரன் அவர்கள் அவர் காலம் வரை இடம்பெற்றிருந்த மேலை அறிவியல், அரசியல், குமுகியல், ஆட்சியியல் வளர்ச்சிகள் அனைத்தும் கீழைநாடுகளில் ஏற்கனவே நிகழ்ந்தவற்றின் மறுகண்டுபிடிப்புகளே என்கிறார். அவரைத் தொடர்ந்து பண்டை மக்கள் விட்டுச் சென்றுள்ள அரிய சுவடுகளைத் தொகுத்து எழுதிய எரிக்வான் டெனிக்கன் என்ற நாசா அறிவியலாளர் எழுதிய Chariots of Gods என்ற நூலில் இன்றைய அணுவியல் மின்னணுவியல் வளர்ச்சிகளையும் நம் முன்னோர்கள் எய்தியிருந்தனர் என்கிறார்.//(http://kumarimainthan.blogspot.com/2005_11_01_archive.html)
குமரிமைந்தனின் ஆராய்ச்சியின் தன்மைக்கு இதோ மற்றொரு சான்று. எரிக் வான் டானிக்கன் நாசா அறிவியலாளர் என கூசாமல் கதை அளக்கிறார். எரிக் வான் டானிக்கன் ஒரு மோசமான சென்சேஷனல் எழுத்தாளர் என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்ட விசயம். 1978 இலேயே பிபிசியும் நோவா எனும் அமைப்பும் 'The case of ancient astronauts' என்கிற அறிவியல் ஆவண ஒளிபரப்பில் டானிக்கனின் மோசடித்தனங்களை வெளிக்கொண்டு வந்துவிட்டன. ஆனால் சுவிஸ் ஹோட்டல்காரராக இருந்து மோசடி வழக்கில் கைதான எரிக் வான் டானிக்கனை நாசா அறிவியலாளர் என கூசாமல் பேசுகிற குமரிமைந்தனுக்கும் அவருக்கு ஆமாம் சாமி போடுகிற எட்வினுக்கும் மதக்கலவரத்தை சாதியை கொண்டு ஓட்டை அடைப்பது அப்படி ஒன்றும் கடினமான செயல் இல்லைதான். தமிழர்களின் அறிவின் மீது அத்தனை நம்பிக்கை இந்த ஆசாமிக்கும் அவரது கும்பலுக்கும்.

7:15 PM, May 06, 2007


குமரிமைந்தன் மீது நடக்கும் அநியாய தனிமனித தாக்குலை பொறுக்காமல் : 'பொறுத்தது போதும் பொங்கி எழு' என மா.சி பொங்கி எழும் 'பொங்காலை' படலம்

மா சிவகுமார் said...
அரவிந்தன்,
நிதானமாக சொற்களைக் கையாளாமல் தனிமனிதத் தாக்குதலில் ஈடுபடும் பின்னூட்டங்களை நீக்கி விட்டேன்.
இனிமேலும் இது போன்ற பாணியில் எழுதத் தோன்றும் போது உங்கள் பதிவிலேயே போட்டுக் கொள்ளுங்கள். இங்கு வந்து எழுதி, அதை நான் நீக்கும் வேலை எதற்கு!
கருத்துக்களை மட்டும் விவாதிக்கும் பின்னூட்டங்களுடன்
மட்டும் உங்களுக்கு என்றும் வரவேற்பு உண்டு.
அன்புடன்,
மா சிவகுமார்

பதிவு: மா.சிவகுமாரின் பதிவு


அரவிந்தன் நீலகண்டன் மீண்டும் தனிமனித தாக்குதல்களையும் மாசியால் அனுமதிக்கப்பட்ட இதர பண்பான பின்னூட்டங்களையும் தாக்கும் : பயங்கர இந்துத்துவ பாசிச படலம்:

பொறுத்துக்கொள்ளுங்கள் மா.சிவகுமார். உங்கள் வரையறையில் தனிமனித தாக்குதல் என்பது எது என நான் அறிந்துகொள்ளலாமா? உதாரணமாக நீங்கள் நீக்கிய எனது பின்னூட்டத்தில் நான் கூறியிருப்பதையும் உங்கள் பதிவின் வேறு சிலர் கூறி நீங்கள் நீக்காததையும் ஒப்பிட்டு பாருங்கள்:
//அரவிந்தன் தன் புளுகு மூட்டை அம்பலமாகிவிட்டதால்// - எட்வின் பிரகாஷ்
//இப்படி ஒருபக்கத்து புளுகுகளை வாரி இறைத்து ஆதா-ரம் காட்ட வேறு யாரால் முடியும்// -கீரன்
//புளுகு மூட்டைகளின் ஆதாரங்களுக்கு குமரி மைந்தன் வைத்திருக்கும் ஆப்பு பார்த்தீர்களா? //-கீரன்
//இந்த அண்டப் புளுகர்களைப் போல// - கீரன்
இதெல்லாம் மா.சிவகுமாரைப் பொறுத்தவரையில் தனிமனித தாக்குதல்கள் இல்லை. இத்தனைக்கும் நான் கூறுவது புளுகு மூட்டை என்றால் அது என்ன புளுகு என்று இன்னும் கூறிட இவர்களுக்கு சொல்ல முடியவில்லை. நான் என்ன நடந்த ஒரு மத ஊர்வலத்தை மறைத்து ஏதோ இந்துக்கள்தான் முதலில் ஊர்வலம் நடத்தி கலவரம் வெடித்ததாக கூறினேனா என்ன? அப்படி சொன்ன புளு....மன்னித்துக்கொள்ளுங்கள் மாசி....அப்படி சொன்ன அரிசந்திரன் யார் என்பது எல்லோருக்கும் தெரியும். இல்லை கதைகளை அடுக்கும் போது குருசடியை மாதாகோவில் ஆக்கும் பித்தலாட்....மன்னித்துக்கொள்ளுங்கள் மாசி....குருசடியை மாதாகோவிலாக்கும் அற்புதர் யார் என்று எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இனி நான் கூறி மாசி விலக்கியதில் என்ன தனிமனித தாக்குதல் இருந்தது?

//ஆதாரம், ஆய்வு என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று புரியாதவர்கள் படித்து புரிந்து கொள்ளட்டும்.// என குமரிமைந்தனின் எழுத்துக்களை குறித்து கீரன் சொல்லுவதால்தான் ஒரு பானை சோத்துக்கு ஒரு பத்து பதம் என குமரிமைந்தனின் செல்லப்பிள்ளை தியரியான குமரிக்கண்ட தியரிக்கு அவர் அளிக்கும் ஆதாரங்களின் தன்மை மூலம் சுட்டிக்காட்ட தலைப்பட்டேன்.
//1930 களில் நாகரிகத்தின் கதை என்ற பெருந்தலைப்பின் கீழ் முதல் மடலமாக கீழை நாடுகள் நமக்களித்த கொடைகள் ( Story of Civilisation- our Oriental Heritage ) என்ற நூலை எழுதிய வில்தூரன் அவர்கள் அவர் காலம் வரை இடம்பெற்றிருந்த மேலை அறிவியல், அரசியல், குமுகியல், ஆட்சியியல் வளர்ச்சிகள் அனைத்தும் கீழைநாடுகளில் ஏற்கனவே நிகழ்ந்தவற்றின் மறுகண்டுபிடிப்புகளே என்கிறார். அவரைத் தொடர்ந்து பண்டை மக்கள் விட்டுச் சென்றுள்ள அரிய சுவடுகளைத் தொகுத்து எழுதிய எரிக்வான் டெனிக்கன் என்ற நாசா அறிவியலாளர் எழுதிய Chariots of Gods என்ற நூலில் இன்றைய அணுவியல் மின்னணுவியல் வளர்ச்சிகளையும் நம் முன்னோர்கள் எய்தியிருந்தனர் என்கிறார்.// மேற்கூறிய ஆராய்ச்சி விநோதத்தை எழுதிய பெருமகனார் குமரிமைந்தன். இது http://kumarimainthan.blogspot.com/2005_11_01_arc எனும் உரலில் இருக்கிறது.

இப்போது நான் குமரிமைந்தனின் புளுகு மூட்டை அம்பலமாகிவிட்டது என எட்வின் பிரகாஷ் போல கூறவில்லை. அண்டப்புளுகர் என்றோ புளுகுமூட்டையின் ஆதாரங்களுக்கு ஆப்பு என்றோ மாசி அனுமதித்திருக்கும் கீரன் போல சொல்லவில்லை. நான் என்ன சொல்கிறேன்: எப்படி எரிக் வான் டானிக்கன் என்கிற மோசடி பேர்வழியை - அவரது பொய்களை 1978 இலேயே பிபிசி பிட்டுபிட்டு வைத்திருக்கும் போது - எப்படி வாய்கூசாமல் நாசா விஞ்ஞானி என கூறுகிறீர்கள் என குமரிமைந்தனின் சீடர் எட்வின் பிரகாஷை கேட்கிறேன்.
//சுவிஸ் ஹோட்டல்காரராக இருந்து மோசடி வழக்கில் கைதான எரிக் வான் டானிக்கனை நாசா அறிவியலாளர் என கூசாமல் பேசுகிற குமரிமைந்தனுக்கும் அவருக்கு ஆமாம் சாமி போடுகிற எட்வினுக்கும் மதக்கலவரத்தை சாதியை கொண்டு ஓட்டை அடைப்பது அப்படி ஒன்றும் கடினமான செயல் இல்லைதான். தமிழர்களின் அறிவின் மீது அத்தனை நம்பிக்கை இந்த ஆசாமிக்கும் அவரது கும்பலுக்கும்.// இதில் தனிமனித தாக்குதல் - அதுவும் கீரனோ எட்வின் பிரகாஷோ எழுதியதில் இல்லாத தனிமனித தாக்குதல் என்ன இருக்கிறது என மாசி கூறிடுவாரா? எட்வின் பிரகாசோ கீரனோ எழுதியதில் எனக்கு ஆட்சேபனை இல்லை என்பது வேறுவிசயம். ஆதாரமில்லாமல் புளுகு மூட்டை என என்னை கூறுபவர்களை நான் கண்டுகொள்வதில்லை. இதனை எனது பதிவிலும் தாராளமாக அனுமதிப்பேன், இதனை வெளியிடுவதும் வெளியிடாமல் இருப்பதும் உங்கள் இஷ்டம். நீக்குவதும் உங்கள் இஷ்டம். எனது பதிவுகளை நீக்கியதனை நான் குறை சொல்லவில்லை. ஆனால் அதற்கு நீங்கள் அளித்துள்ள காரணங்கள் சரியானவை அல்ல என்பதை மட்டுமே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். மற்றபடி இதிகாசங்களில் அணு ஆயுதங்கள் ஜெட்விமானங்கள் பயன்படுத்தப்பட்டன என மேதாவித்தனமாக :) நம்பும் 'பெரிய மனுசர்களிடம்' பேசாமல் இருப்பதே நல்லது என்பதுதான் எனது எண்ணம்.

5 Comments:

Anonymous Anonymous said...

எலே ராசா நீலகண்டா,
அவிங்க எல்லாரும் என்னிய நல்லவன்னு சொல்லிட்டு இருக்காங்கய்யா. நீயும் என்ன நல்லவன்னு ஒரு வார்த்த சொல்லிப்பிட்டு எத்தன அடிவச்சாலும் பொறுத்துக்குவன்யா! புரியாத ஆளா இருக்கீரே!
-பாசி

3:53 AM, May 07, 2007  
Anonymous Anonymous said...

:-))

3:53 AM, May 07, 2007  
Anonymous Anonymous said...

மாசிக்கு சுத்தமாக பதிவுலகில் கிராக்கி கிடையாது. அவருக்கு போய் இத்தனை பில்டப் கொடுத்து நாலைந்து பதிவும் போடும் உங்களைத்தான் குற்றம் சொல்ல வேண்டும்

6:25 PM, May 07, 2007  
Anonymous Anonymous said...

அரவிந்தன்

இந்தக் கழிசடைகளுக்கும் குரோதக் குரங்குகளுக்கும் பதில் சொல்வதை விட்டு விட்டு உங்கள் பணிகளைத் தொடர்ந்து செய்யுங்கள். இவைகள் எல்லாம் அரை வேக்காடுகல் என்பது படிக்கும் எங்களுக்கும் நன்கு புரியும், உங்கள் தகுதிக்கு இது போன்ற காலி டப்பாக்களுடன் மரியாதை கொடுத்து பேசுவதே மிக அதிகம். கூலி கொடுத்தால் ஊளையிடும் வர்க்கம் இவை. பொருட்படுத்தாதீர்கள்.

அன்புடன்
ச.திருமலை

10:42 PM, May 07, 2007  
Anonymous Anonymous said...

அரவிந்தன் ஐயா,

உங்க எழுத்துக்களை திண்ணை என்கிற இதழிலிருந்து படிச்சிக்கிட்டு வரேன். உங்க பரிமாணமே வேற. நீங்கள் பதில் சொல்ல வேண்டியவர்களோட தரமும் புலமையும் வேற.

வெறுமனே வார்த்தைகளை மாத்தி மாத்தி எழுதறதைத்தவிர வேற ஒரு சுக்கும் தெரியாத ஆட்களோட நீங்க மோதுவதைப் பார்க்க எனக்கு வருத்தமா இருக்கு.

ஆடிஸத்தால் துன்பப்படுகின்ற குழந்தைகளுக்கு ஐன்ஸ்டைன் அவருடைய வேலையெல்லாம் விட்டுட்டு பாடம் எடுக்க போகலை. அந்த குழந்தைகளுக்கு பாடம் எடுக்கிறதுதான் நல்ல காரியம், அத விட்டுவிட்டு ரிலேட்டிவிட்டி தியரியால என்ன பிரயோசனம் என்று இங்கே இருக்கிற மேதாவிகள் கேப்பாங்க. அவனுக கேட்கிறானுங்களேன்னுட்டு சமூக சேவை செய்ய ஐன்ஸ்டைன் எறங்கிருந்தாருன்னா என்ன ஆயிருக்கும்?

ஆடிஸத்தால பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குக்கூட உதவி பண்ணிரலாம். ஆனா, இன்டெலெக்ட்சுவல் ஆடிஸத்தால் துன்பப்படுகிறவங்களுக்கு கதி மோச்சமே இல்லை. நீங்க என்ன மெனக்கிட்டாலும் சரி.

மகாத்மா காந்தி தலையிலேறி ஆய் போகிற பலம் காக்காய்களுக்கு இருக்கு. அதனால காந்தியோட பெருமை குறைஞ்சு போயிராது, பாக்கிரவங்களுக்கு மனசு வருத்தப்படும். அதுக்காக ஒரு காந்தியவாதி ஒவ்வொரு காக்காயும் ஆய் போகும்போது சுத்தம் பண்ணிக்கிட்டே இருந்தா காந்தி சிலைதான் இருக்கும். காந்தீயம் செத்துரும்.

நீங்க நாட்டுப்பற்று, தலித் முன்னேற்றம், அறிவியல் சார்ந்த ஆன்மீக (rational mysticism)ம்னு வாழ்கிற ஆளு. தன்னை காந்தீயவாதின்னுட்டு சொல்லிக்கிட்டு ஆனா பசுமாட்டை கொன்னு அதனோட தோல வித்து பிழைக்கிற ஆளு நீங்க இல்லை.

உங்கள மாதிரி ஆளுமையை வெளிய தெரியாம இந்த சமூகம் வச்சுருக்குது. உங்களால சண்டை போடக்கூடிய தளங்களுக்குள்ள உங்கள விடமாட்டாங்கங்கறதும் புரியுது. அதனால சோம்பியிராம நீங்க கிடைத்த இடங்களில் உண்மைக்காக ஒடுக்கப்படுகிறவர்களின் உரிமைக்காகப் போராட்ரீங்க. இதெல்லாம் எனக்கு புரியுது.

நீங்க நல்லாருக்கணும், உங்கள மாதிரி சமூக சிந்தனையாளர இந்த மக்கள் புரிஞ்சிக்கணும் ஏத்துக்கணும்னு அன்னை மரியாள வேண்டிக்கிறேன்.

இப்படிக்கு,

சகாயராஜ்

1:54 AM, May 08, 2007  

Post a Comment

<< Home