Monday, December 10, 2007

ஒரு இஸ்லாமிய இளைஞரின் வந்தேமாதர திருமணம்

ஏப்ரல் 2007 இல் ஆக்ராவில் ஒரு இஸ்லாமிய திருமணம். திருமண ஊர்வலத்தில் ஒரு இசைக்குழு பாடல்களை பாடிக்கொண்டு செல்கிறது. அனைத்தும் தேசபக்தி பாடல்கள். இறுதியில் வந்தேமாதரம் இசைக்கப்படுகிறது. முஸ்லீம் மற்றும் இந்து இளைஞர்கள் தேசியக்கொடியுடன் அப்பாடலுக்கு நடனமாடுகின்றனர். திருமண வைபவத்தில் தேசபக்தி? ஆம்... சாதாரண தேசபக்தி அல்ல. சோதனைகளை தாண்டி தேசபக்தியை தூக்கிப்பிடித்த இரு மனங்களின் இணைப்பு விழா அது! ஆகஸ்ட் 2006 இல் குல் சமன் செர்வானி என்கிற இஸ்லாமிய இளைஞர் வந்தேமாதர நூற்றாண்டு கொண்டாட்டங்களில் கலந்து கொண்டார். வந்தேமாதரம் பாடினார். வெகு சீக்கிரமாக அந்த இளைஞருக்கு பத்வா விதிக்கப்பட்டது. மட்டுமல்ல அவருக்கு அப்போது திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அந்த திருமண நிச்சயமும் முறிக்கப்பட்டது. மதத்துக்கு ஒரு நீதி என ஓட்டு வங்கிகளுக்கு சோரம் போகும் அரசியல்வியாதிகளால் மதச்சார்பின்மையின் பெயரால் நீதிமன்றங்களே அடிப்படைவாதிகள் முன் மண்டியிட வைக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் ஷெர்வானி இந்த அநியாயத்துக்கு எதிராக தனிமனிதனாக குரல் கொடுத்தார். ஒரு நாள் உண்ணாவிரதத்தை கூட காலையில் ஒன்பது மணிக்கு வந்து 11 மணிக்கு முடித்துவிட்டு ஓடும் மஞ்சள்துண்டு அரசியல்வியாதிகள் வாழுகிற நாட்டில் ஒரு நாள் இருநாளல்ல 10 நாட்கள் அன்ன ஆகாரமின்றி வந்தேமாதரம் பாடியதற்கு கிடைத்த தண்டனைக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தார் ஷெர்வானி. இந்நிலையில் மதவெறியைக் காட்டிலும் தேசபக்தி பெரிது என அவரைப்போலவே நினைக்கிற வந்தேமாதரம் பாடதயங்காத ஒரு இஸ்லாமிய பெண்மணி அவரை கணவராக ஏற்றுக்கொள்ள முன்வந்தார். நஸ்மா எனும் அப்பெண்மணியும் ஷெர்வானியும் மணவிழாவில் இணைந்தனர. உள்ளூர் இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு இது பொறுக்கவில்லை. ஓட்டுப்பொறுக்கிகளுக்கு தங்கள் சமுதாய வாக்குகளை விற்று பிழைக்கும் இந்த அடிப்படைவியாதிகள் நஸ்மா மைனர் பெண் என புகார் கொடுத்தனர் (மைனர் பெண் திருமணம் குறித்து இஸ்லாமிய அடிப்படைவாதிகள் புகாரா என வியக்காதீர்கள். சவூதியிலும் மலேசியாவிலும் பாகிஸ்தானிலும் இல்லாத மனித உரிமைகளுக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டே இந்தியாவில் மதானி போன்ற கொலைகார வெறியர்களுக்கு மனித உரிமை பிலாக்கணம் பாடுவது ஜிகாதிகளுக்கே உரிய இரட்டை நாக்குப் போக்கு. இந்த ஜிகாதிகளிடம் இணைந்து இந்துத்துவத்தை எதிர்ப்போம் என்று குரல் கொடுப்பது போலி-அறிவுசீவிகளின் சோரத்தனம்...அதாவது சூரத்தனம்) ஆக காவல்துறை வந்தது. வந்தேமாதரமும் இதர தேசபக்தி பாடல்களும் முழங்கியபடி இருக்க காவல்துறை சான்றிதழ்களை சரிபார்த்தது. பின்னர் நஸ்மா 18 ஆண்டுகள் ஆறுமாதங்கள் ஆன மேஜர் என உறுதிப்படுத்தியது. அடிப்படைவாதிகள் செய்த சோதனைகளுக்கு அப்பால் தேசபக்தியில் இணைந்தன இரு உள்ளங்கள். ஷெர்வானி கூறுகிறார்: "நாங்கள் என்றென்றைக்கும் வந்தேமாதரத்தை பாடுகிறோம். என் மனைவியும் இணைந்து வந்தேமாதரத்தை பாடுகிறார். இந்தியனாக பிறந்த ஒவ்வொருவரும் கட்டாயமாக வந்தேமாதரம் பாட வேண்டும்." சாதி பார்த்து சமுதாய அந்தஸ்து பார்த்து இணைக்கப்படும் திருமணங்களை விட தேசபக்தியால் இணைந்த இந்த உண்மையான பாரதிய உள்ளங்களை
பாரதி தினத்தன்று
வாழ்த்துவோம்.
வந்தேமாதரம்
ஒன்றாய் நின்றினி வென்றா யினுமுயிர்
சென்றா யினும்வலி குன்றா தோதுவம்
வந்தே-மாதரம்-ஜய
வந்தே மாதரம்.
-மகாகவி பாரதி

14 Comments:

Anonymous Anonymous said...

இந்த இஸ்லாமிய இளைஞரின் தேசபக்தியை வாழ்த்துகிறேன். இவர்களைப்போன்றவர்களால்தான் இஸ்லாம் பெருமை பெறுகிறது. கொலையும் கொள்ளையும் செய்து பிழைத்திருப்பதே புனிதம் என்று போதித்த இறைத்தூதனைவிட, இந்த இஸ்லாமிய இளைஞரும் அவர் துணைவியாரும் புனிதமானவர்கள்.

அவர்களும் அவர் சந்ததியாரும் பல்லாண்டு நலமோடு வாழ, பாரதியாரிடம் அவர் பிறந்த நாளன்று வேண்டுகிறேன்.

10:54 PM, December 10, 2007  
Blogger அக்குஹீலர் சுப்ரமணியன் said...

மகிழ்ச்சி அரவிந்தன்,

இந்த மாதிரி நிக்ழ்வுகளை செய்தி ஊடகங்கள் ஏன் போட்டு காண்பிப்பதில்லை ?

நன்றி,
சுப்ரமணியன்.S

1:24 AM, December 11, 2007  
Blogger கால்கரி சிவா said...

நெஞ்சை நெகிழ வைக்கும் செய்தி. இந்த மாதிரி இளைஞர்கள் தான் இந்தியாவை தூக்கிப் பிடிப்பவர்க்ள்.

10:57 AM, December 11, 2007  
Anonymous Anonymous said...

வந்தே மாதரம் பாடுறவன் எல்லாம் தேசபக்தியாளன் அல்ல. வந்தே மாதரம் பாடாதவன் எல்லாம் தேசவிரோதியும் அல்ல.

தேசபக்தி என்பது நாட்டு முன்னேற்றத்துக்கு தன்னால் முடிந்த தியாகங்களை செய்வதும், குறைந்த பட்சம் நமது செயல்பாட்டால் நம் நாட்டிற்கு துன்பமே, தலைகுனிவோ ஏற்பட செய்யாமலிருப்பது கூட தேசபக்தியே.

தேசவிரோதம் என்பது செயல்பாட்டால் நம் நாட்டிற்கும துன்பமே, தலைகுனிவோ ஏற்பட செய்வதாகும் நமது சுயநலத்திற்காக ஒரு ரூபாய் ஏய்ப்பு செய்து விட்டு ஓராயிரம் முறை வந்தே மாதரம் என்ன ஜனகண மனமுருகி பாடினாலும் அவன் தேசதுரோகியே

நீதிமான்

10:32 PM, December 11, 2007  
Anonymous Anonymous said...

நானும் இந்த செய்தியை அந்த சமயத்தில் படித்த பொழுது (இந்தியன் எக்ஸ்பிரஸ்) கல்யாணத்தில் ஏன் வந்தேமாதரம் பாடினார்கள் என்று யோசித்தேன். இப்பொழுதுதான்
விவரம் புரிகிறது.

பாரத அன்னையே உனை நான் மறக்கினும் சொல்லு நா வந்தேமாதரமே!
வந்தேமாதரம் பாடித்தான் தேசபக்தியை நிருபிக்க வேண்டிய அவசியம் முஸ்லீம்களுக்கு இல்லை.
அவர்களை வந்தேமாதரம் பாடச்சொல்லி கட்டாயப்படுத்துவது பா.ஜ.க வின் இந்துத்துவ திணிப்பேயன்றி வேறில்லை. –மத்தியபிரதேச பா.ஜ.க அரசு வந்தேமாதரம் பாடலை கட்டாயமாக அனைவரும் பாடவேண்டும் என்று சொல்லிய பொழுது, தமிழகத்தை சேர்ந்த அறிவுஜீவிகள் செய்தித்தாள்களிலே இப்படியெல்லாம் பொருள்பட கட்டுரை எழுதினார்கள்.

கடந்த 15-11-07 அன்று காஷ்மீரில் முதல்வர் ஸ்ரீ குலாம் நபி ஆசாத் கலந்து கொண்ட குழந்தைகள் தின விழாவில் அனைத்து குழந்தைகளையும் வந்தேமாதரம் பாடவைத்ததற்கு
முப்தி பஷ்ருதீன் என்கிற பிரிவினைவாத தலைவனும், முஸ்லிம் பெண்கள் அமைப்பைச் சேர்ந்த ஆஷியா இந்திரபி என்பவரும், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் காஷ்மீரில் வந்தேமாதரம் பாட சொல்வது இஸ்லாமியர்களை புண்படுத்துகிற செயல் என்று எதிர்த்திருக்கிறார்கள்.

http://www.kashmirlive.com/latest/Singing-of-Vande-Mataram-opposed/92428.html

இதுபற்றியெல்லாம் ஒருவரும் மூச்சுவிடக் காணோம்! தமிழ்செல்வனுக்கு இரங்கற்பா எழுதியது சரியா தவறா? எனும் வினாடி வினாப் போட்டிதான் இங்கு நடந்தது அந்நிய மண்ணில் இறந்தவருக்கு காட்டும் அக்கறையை அப்படியே சொந்தமண்ணில் இருப்பவர்களிடமும்/இறப்பவர்களிடமும் காட்டினால் நல்லது.

கடந்த வருடம் வந்தேமாதரம் பாடலின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்ட பொழுது நாடெங்கிலும் ஆங்காங்கே இஸ்லாமியர்களும் பாடினார்கள். சில இடங்களில் பாடவும் மறுத்தனர்.
பிறந்த நாட்டை வணங்கியதற்காக, வந்தேமாதரம் பாடியவர்களை, அல்லா என்ன ஊமையாகவா ஆக்கிவிட்டார்?

விடுதலைப் போராட்ட காலத்தில், வந்தேமாதரம் சொல்லக்கூடாது என்ற தடையுத்தரவு இருந்த காலத்திலேயே தன் இரு பிள்ளைகளில் ஒருவனுக்கு “வந்தே” என்றும் இரண்டாமவனுக்கு “மாதரம்” என்றும் பெயர்சூட்டி உரக்க உச்சரித்த பூமியையா இது!

தான் வீழ்ந்தும், தாயின் மணிக்கொடியை கீழே விழ விடாமல் கடைசிமூச்சு வரை வந்தேமாதரம் கூறியவனைக் கண்ட பூமியையா இது!

தனி நாடு கண்ட பாகிஸ்தானும், பங்களாதேஷும் எந்தவிதத்திலும் முன்னேறவில்லை என்பது கண்கூடு. இதை மனதிற்கொண்டாவது பிரிவினை நஞ்சை விதைக்காமலிருப்பது தேசபக்தர்களுக்கு அழகு.


பெரும்பான்மை, சிறுபான்மை என்பதை விடுத்து, ஒரு மனப்பான்மையுடன்
வருவதை பகிர்ந்து உண்போம்; வந்தேமாதரம் என்போம்

4:00 AM, December 12, 2007  
Blogger ஜயராமன் said...

நீதிமான் அவர்களே,

எங்கே காணவில்லேயே என்று நினைத்தேன். அரவிந்தன் அவர்களின் அற்புதமான பதிவுகளை தினசரி படித்து பதில் எழுதாவிட்டால் உங்களுக்கு நிம்மதி இல்லைஎன்று தெரியும்!!!

நீங்கள் சொல்வது உண்மை. வந்தேமாதரம் பாடுவதால் மட்டும் ஒருவன் தேசபக்தனாக ஆக மாட்டான். ஆனால், இங்கு இந்த இஸ்லாமிய இளைஞன் முட்டாள் முல்லாக்களின் ஃபட்வாயையும் எதிர்த்து போராடியது, அவன் உயிரையையும் வாழ்க்கையும் பிணை வைத்து போராடியது நெஞ்சுருக்கும் தேசபக்திதான். அதை புரிந்துகொள்ள முடியாத மனம் மறத்துப்போன மதம் பிடித்த மனம்தான்.

மேலும், வந்தே மாதரம் பாடியதற்காக மட்டும் ஒரு சமுதாயமும், மதமும் அவனை துன்புறுத்துமானால் அந்த சமுதாயமும், மதமும் நிச்சயம் சமூக விரோதிகள்தான். ஒரு விளையாட்டு வீராங்கனையின் குட்டை பாவாடையில் அவர்களின் மதம் மதிப்பு இழக்கும் என்று ஃபட்வா போடுமானால் அந்த சமூகமும், மதமும் சமூக விரோதிகள்தான். நேற்று கனடா டொராண்டோவில் ஒரு பணக்கார தகப்பன் ஆயிஷா பர்வேஸ் என்ற தன் 16 வயது மகளை பர்தா போடாத காரணத்தால் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளான். அந்த வசதியான பாகிஸ்தானிய தகப்பனை தான் வளர்த்த மகளையே கொல்லும் அளவுக்கு ஒரு முக்காட்டுக்கு முக்கியம் கொடுத்து ஒரு மதம் அந்த முக்காட்டில் தொங்குமானால், இந்த தேசநம்பிக்கை என்பதும் ஒரு வந்தே மாதரத்தில் தொங்கும். சொல்லப்போனால் அல்லாஹ்வின் ஆணையை தேசத்தின் சட்டத்தை விட பெரியது என்று சொல்லும் ஒரு சமூகம்தான் மிகப்பெரிய தேசத்துரோக கூட்டம். நீங்கள் அப்படி சொல்லமாட்டீர்கள் என்று நினைக்கிறேன். அதை இங்கு தெளிவுபடுத்தினால் நீங்கள் அந்த தேசதுரோக கும்பலில் இல்லை என்று நாங்கள் தெரிந்துகொள்வோம்.

நன்றி

ஜயராமன்

4:36 AM, December 12, 2007  
Anonymous Anonymous said...

ஜயராமன! நமது தாய் திருநாடு "மதசார்பற்ற தத்துவத்துவம்" என்ற அடிப்படையில் அமைக்கப்பட்ட நாடு. அனைத்து மத மக்களும் அவரவர் மதகோட்பாடுகளை பின்பற்றுவதில் எள் முனையளவு கூட சிக்கல் வந்து விடக் கூடாது என்ற சீரிய சிந்தனையோடு தன்னலமற்ற தலைவர்களால் நமது நாட்டின் சட்ட கட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

முஸ்லிம்கள் அல்லாஹ்வை தவிர வேறு எதையும் வணங்கி வழிபடுபவர்கள் அல்ல. இது தான் இஸ்லாத்தின் அஸ்திவாரம். அப்படி உள்ள நிலையில் தாய் நாட்டை கடவுளாக உருவகபடுத்தி வணங்கபடும் கொள்கையோடு உருவாக்கப்பட்ட ஒரு பாடலை ஒரு போதும் தன் நாவினால் உச்சரிக்க முடியாது. தாய் நாட்டின் சிறப்புகளை கூறி புகழ்வதில் முஸ்லிம்கள் ஒரு போதும் மறுக்கவில்லை. எனவே தான் தேசிய கீதத்தை ஒவ்வொரு இந்திய முஸ்லிமும் பெருமையுடன் சந்தோசத்துடனும் பாடுகிறானே? அதை வைத்து சிந்திக்க வேண்டாமா? "வந்தே மாதரம்" என்ற கோஷம் சுதந்திர போராட்டத்தில் போது உச்சரிக்கபட்ட கோஷமாக இருந்தும் அது நமது தலைவர்களால் தேசிய கீதமாக அறிவிக்கபடவில்லையே ஏன்? "வந்தே மாதரம்" என்பது வேற்று மொழியில் அமைந்ததாகும். அதனால் அதன் பொருள் புரியாமல் ஒரு முஸ்லிம் பாடும் போது அவனுக்குஅதன் பொருளை எடுத்து சொல்லி பாட வேண்டாம் என்று எடுத்து சொல்வது எங்கள் கடமையும் உரிமையுமாகும். பிற மதத்தினரிடம் போய் ஏன் நீங்கள் "வந்தே மாதரம்" பாடுகிறீர்கள்? பாட கூடாது என்று பிரச்சாரம் செய்தோமா? அல்லது நிர்பந்தித்தோமா? எங்கள் மார்கத்தை பின்பற்றுவதாக சொல்பவனிடம் தான் சொல்கிறோம். அது எங்கள் உரிமையும் சுதந்திரமும். இது எந்த வகையிலும் இந்திய இறையாண்மைக்கு எதிரானது அல்ல. அது பொல தான் நமது நாட்டின் கேடு கெட்ட ஆடைகளை உடுத்தி கொண்டு எத்தனையோ பெண்கள் அழையும் போது அப்பெண்களை எல்லாம் அழைத்து கண்டித்தோமா? ஒரு பெண் தன்னை முஸ்லிமாக பிரகடனபடுத்துவதால், அவள் இஸ்லாத்திறக்கு மாற்றமாக செயல்படும் போது எனது கொள்கை சகோதரி என்னும் உரிமையோடு அவளது தவறுதலை சுட்டிகாட்ட எனக்கு உரிமையுண்டு.

அல்லாஹ்வின் அணை எல்லாவற்றையும் விட முஸ்லிம்களுக்கு உயர்வானது என்பதை புரிந்ததால் தான் நமது தலைவர்கள் நமது நாட்டின் சட்டதிட்டங்களை மிக எச்சரிக்கையோடு வகுத்து தந்தார்கள். நாடடின் சட்டத்தை பின்பற்றுவதால் அல்லாஹ்வின் அணை மீறபட்டுவிட கூடாது என்ற உன்னத நோக்கோடு எனது தாய்நாட்டின் தலைவர்கள் தேவையான சட்ட விலக்குகளை கொடுத்து எனது மார்கத்தை எவ்வித சிரமும் இன்றி பின்பற்ற வழிவகுத்த தந்துள்ளார்கள். எனவே இஸ்லாமிய சட்டத்தை முழுமையாக கடைபிடிப்பது ஒரு போதும் எனது இந்திய மணித் திருநாட்டை அவமதிப்பதாகவோ தேச துரோகமாக ஆகாது. அது என் தேச தலைவர்களின் புகழை நினைவு கூறுவதாகுவம் பெருமைபடுத்துவதாகவும் தான் அமையும்.

"இந்தியா எங்கள் தாய் நாடு, இஸ்லாம் எங்கள் வழிபாடு,
தமிழே எங்கள் மொழியாகும்,
தன்மானம் எங்கள் உயிராகும்,
யாரடா சொல்வது தேசதுரோகி என்று
எங்களை யாரடா சொல்வது"

நீதிமான்

12:40 AM, December 13, 2007  
Blogger ஜயராமன் said...

சகோதரர் நீதிமான் அவர்களே,பதிலுக்கும் விளக்கத்துக்கும் நன்றி. தங்களின் கண்ணியமான பதில்களில் மகிழ்ந்தேன்.நீங்கள் நான் சொன்ன கருத்துக்களில் புகாமல் திசைதிருப்பி உங்கள் வேறு கருத்துக்களை முன்வைத்திருக்கிறீர்கள்.வந்தே மாதரம் பாட்டை குறித்துஉ கருத்துகள் தெளிவாகத்தான் இருக்கின்றன. வந்தேமாதரம் பாடுவது ஒரு தேசபக்தனுக்கு அடிப்படை தேவையான தகுதி அல்ல. வந்தேமாதரம் பாடாததால் ஒருவன் தேசபக்தன் இல்லை என்றும் ஆகிவிடாது. இந்த கருத்துக்களில் நீங்கள் ஒத்துப்போகிறீர்கள்.அதனால், இந்த ஒரு கருத்தையே வலியுறுத்தி எழுதி மற்ற கருத்துக்களில் தாங்கள் நழுவுகிறீர்கள்.இப்போது நீங்கள் எழுதிய கருத்துக்களை பார்ப்போம்./// அப்படி உள்ள நிலையில் தாய் நாட்டை கடவுளாக உருவகபடுத்தி வணங்கபடும் கொள்கையோடு உருவாக்கப்பட்ட ஒரு பாடலை ஒரு போதும் தன் நாவினால் உச்சரிக்க முடியாது. ///வந்தே மாதரம் என்ற பாட்டில் தாய்நாட்டை கடவுளாக உருவகப்படுத்தி வழிபடுவதாக யார் சொன்னது. "மாதரம்" என்றால் கடவுளா? உங்கள் அம்மா என்ன அல்லாஹ்வா?ரஷ்டி, தஸ்லிமா விவகாரங்கள் போல இதையும் தப்பாக புரிந்துகொண்டு யாரோ சில முல்லாக்கள் சொன்னார்கள் என்பதற்காக இந்த பாடல் அல்லாஹ்வுக்கே இணைவைப்பதாக சொல்லி மாரடித்து அழுவது நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.தாயை வணங்குகிறேன் என்று சொன்னால் உடனே நரகத்தீயில் தள்ளுவேன் என்று சொல்பவன் இறைவனாக இருக்க முடியுமா சகோதரரே, கொஞ்சம் யோசியுங்கள்?இந்த இளைஞன் வந்தேமாதரம் என்று சொல்வதன் மூலம் எந்த விதத்தில் அல்லாஹ்வுக்கு இணைவைத்தான். அவன் உள்ளத்தில் உள்ள மத ஈமானும், இறைநம்பிக்கையும் எந்த விதத்தில் குறைந்துவிட்டது. மாறாக அவனை மிரட்டி சமூகத்தை விட்டு துரத்தி அவன் அடிப்படை மனித உரிமைகளை பறிக்கும் கூட்டம் ஒரு காட்டுமிராண்டிக்கூட்டம் என்பதே வெளிச்சம்.அப்படிப்பட்ட ஒரு சமூகத்தை இன்றைய நாகரீக உலகில் மதத்தின் பெயரால் காக்க இயலாது.இன்று ஒருவரின் மத நம்பிக்கை என்பது இரண்டு கட்டுப்பாடுகள் கொண்டது. முதலாவது, அது அடுத்தவரின் நம்பிக்கைக்கு இடையூறாக இருக்க கூடாது. இரண்டாவது, அடிப்படை மனித உரிமைகளை அந்த மதம் மீறாமல் இருக்க வேண்டும்.இந்த இரண்டு விதிகளையும் மீறிய எந்த மதத்திற்கும் இந்தியாவில் இடமில்லை.என்னைத்தவிர யாரையும் வணங்கும் காபிர்களை கண்டதும் வெட்டு என்று குர்ஆனில் அல்லாஹ் சொன்னதாக ஒரு மதம் சொல்லுமானால் அது மதம் இல்லை, சமூக விரோத சக்தி என்பதே வெளிப்படை.சகிப்புத்தன்மை இல்லாத மதம் மனிதகுலத்த்திற்கு அச்சூறு. அம் மதத்தை நாகரீக சமூகங்களில் அனுமதித்தால் அவை எல்லாவற்றையும் நாசமாக்கிவிடும் என்பதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள்தானே சகோதரரே?///// "வந்தே மாதரம்" என்பது வேற்று மொழியில் அமைந்ததாகும். அதனால் அதன் பொருள் புரியாமல் ஒரு முஸ்லிம் பாடும் போது அவனுக்குஅதன் பொருளை எடுத்து சொல்லி பாட வேண்டாம் என்று எடுத்து சொல்வது எங்கள் கடமையும் உரிமையுமாகும். ///என்னது, "எடுத்துச்சொல்வதா". மாறாக அவனை சமூகத்தை விட்டு ஒதுக்கி அவன் கல்யாணத்தையே அல்லவா நிறுத்தியிருக்கிறீர்கள். இது தேசவிரோதம் இல்லாமல் வேறென்ன. அப்படி மத விஷயங்கள் முக்கியமானால், மற்றதுக்கு எல்லாம் ஃபட்வா எங்கே? வட்டி கட்டி வண்டி வாங்கியிருக்கும் இளைஞர்களுக்கும் கல்யாணம் கிடையாதா. இந்த மதம் இஸ்லாமியர்களை வாழவிடாமல் அடிக்கிறது என்றுதானே இதன் பொருள்!!காபிர்களுடன் உரவு பாராட்டாதே என்று கூடத்தான் உங்கள் குர்ஆனில் அல்லாஹ் சொன்னதாக சிலர் எழுதிவைத்திருக்கிறார்கள். நாளைக்கு அதனால் முஸ்லிம்கள் இந்துக்களுடன் நட்பு பாராட்ட கூடாதுஎன்று ஃபட்வா போடுவீர்களா? இதை செய்தால் அது நாளைக்கு தானாக வரும் அல்லவா! இரண்டுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லையே!அடிப்படையில் பிரச்சனை இந்த ஒவ்வாத மதம்தானே! இதில் தங்களுக்கு வசதியானவற்றை மட்டும் நீங்கள் எடுத்துக்கொண்டு உங்கள் சமுதாயத்தை சில முல்லாக்கள் ஏன் மிரட்டுகிறார்கள்!அப்புறம் என்ன, மொழி தெரியாததால் எடுத்துச்சொன்னீர்களா? அப்படியானால், வங்காள அல்லது வடமொழி தெரிந்த முஸ்லிம்கள் இந்த பாடலை புரிந்துகொண்டு பாடினால் அதை உங்கள் மதம் தடுக்காதா?

/// அது பொல தான் நமது நாட்டின் கேடு கெட்ட ஆடைகளை உடுத்தி கொண்டு எத்தனையோ பெண்கள் அழையும் போது அப்பெண்களை எல்லாம் அழைத்து கண்டித்தோமா? ///நமது நாட்டின் கலாசாரமான சேலையும், சுடிதாரும் உங்கள் மதத்துக்கு கேடு கெட்ட ஆடைகளா? அந்த ஆடைகளை அணிந்தவர்கள் கேடுகெட்டவர்களா? இஸ்லாமிய ஆடைகளை அணிந்திருக்கும் சமூகத்தில் பாலியல் கொடுமைகள் இல்லையா என்ன? அப்படியே நீங்கள் நினைத்தாலும் அதற்காக ஒருவரை "கண்டிப்போம்" என்று நீங்கள் சொல்வது என்ன? ஒரு பெண்ணின் உடை அவள் தனி சுதந்திரம். அதை கேட்க எந்த முல்லாக்களும், அல்லாக்களும் உரிமை கிடையாது. அப்படி கண்டிப்போம், தண்டிப்போம் என்று சொல்லும் தலிபான் கூட்டம் சமூக வளர்ச்சிக்கு இடையூறு. இந்த கூட்டம் தங்கள் குழுவை 7ஆம் நூற்றாண்டில் முடக்க பார்க்கிறது./// அல்லாஹ்வின் அணை எல்லாவற்றையும் விட முஸ்லிம்களுக்கு உயர்வானது என்பதை புரிந்ததால் தான் நமது தலைவர்கள் நமது நாட்டின் சட்டதிட்டங்களை மிக எச்சரிக்கையோடு வகுத்து தந்தார்கள். ///இந்தியன் ஒவ்வொருவரும் இந்திய சட்டங்களுக்கு கட்டுப்பட்டவர்கள். இதில் எந்த ஒரு விலக்கும் கிடையாது. அல்லாஹ்வாகட்டும், ஆட்டுகுட்டியாகட்டும் அதே ரூல்தான்.உங்கள் கருத்துப்படி, என்ன சொல்கிறீர்கள் தெரியுமா? அல்லாஹ்வின் சட்டம் ஷரிய்யா. அதற்குத்தான் நீங்கள் ஆசைப்பட்டால் அந்த ஆசை நாகரீகத்தின் எதிரி.. முஸ்லிம்களின் வளர்ச்சிக்கும் தனி உரிமைக்கும் எதிரி.அது போகட்டும். அல்லாஹ்வின் ஆணை என்ன என்பதே ஒரே சண்டையாக இருக்கிறதே! இதை அல்லாஹ் ஒன்றும் விளக்க காணோமே. முஸ்லிம்களுக்குள்ளேயே ஆயிரம் க்ரூப்பாக அடித்துக்கொள்கிறார்கள். அதனால், எந்த அல்லாஹ்வின் எந்த ஆணையை பின்பற்றுவது, சகோதரரேதமிழ்நாட்டிலேயே ஆயிரம் குழப்பம். நண்டு சாப்பிடலாமா வேண்டாமா என்று கூட சண்டை போட்டுக்கொள்கிறார்கள். அதனால், எந்த சட்டம் இறுதியான சட்டம்.அல்லாஹ் இவ்வளவு குழப்பாக ஒரு புத்தகம் தந்திருந்தால் அது ஒரு இறைவன் அருளியதா என்று நீங்கள் சந்தேகப்படுவது நியாயம்தான்.மேலும், உங்கள் சட்டம் காபிர்களை திம்மியாக அடிமைப்படுத்தச்சொல்கிறது. காபிர்களை செக்ஸ் அடிமைகளாக்கி அவர்களை வண்புணர அனுமதி தருகிறது. அதை இந்தியாவில் நடைமுறைப்படுத்துவேன் என்று நீங்கள் சொல்வது உங்களுக்கே வெட்ககேடு தான்.. அதனால் நீங்கள் அவமானப்படுவது எனக்கு புரிகிறது. அதனால், இதனோடு நிறுத்திக்கொள்கிறேன்.என் வினாக்களுக்கு சரியான பதிலை எதிர்பார்க்கிறேன். புரிந்துகொள்ளாமல் எதையும் செய்யாதே என்று அல்லாஹ் குர்ஆனில் சொல்வதால் நீங்கள் எல்லாவற்றையும் புரிந்துகொண்டவர் என்று தெரிகிறது. விளக்கம் கொடுங்கள், கேட்க காத்திருக்கிறேன்.நன்றிஜயராமன்

4:28 AM, December 13, 2007  
Anonymous Anonymous said...

நீதிமான் என்று பெயரை வைத்துக்கொண்டிருக்கும் இஸ்லாமியரே,

வந்தே மாதரம் பாட விரும்பவில்லை என்கிறீர்கள்.

தேசிய கீதமான "ஜன கன மன" என்கிற பாடலையாவது இஸ்லாமியர்கள் பாடலாமா?

அல்லது, இன்னும் கொஞ்ச நாளில் அந்தப் பாடலும் தவறு, பாடக்கூடாது என்று சொல்லுவீர்களா? ஏனென்றால் உங்களின் இறைத்தூதனான முகம்மது நபிக்கு இசை என்பதே பிடிக்காது. எனவே எந்த பாடலையும் பாடக்கூடாது என்று சொல்ல ஆரம்பிப்பீர்களா?

4:46 AM, December 13, 2007  
Anonymous Anonymous said...

நீதிமானுக்கு: அதாவது மசூதியில் 5 முறை தொழுகிறவர்களெல்லாம் உண்மையான முஸ்லீம் ஆகிவிட முடியாது, அப்படித்தானே!

வந்தேமாதரம் பாடாமலிருப்பது என்பது வேறு, பாடமறுப்பது என்பது வேறு

ஒருவழியாக அடிப்படை விஷயத்தை இங்கு முன் வைத்திருக்கிறீர்கள்

அல்லாவைத் தவிர, அதாவது இறைவனைத் தவிர வேறு யாரையும் - இஸ்லாம் சொல்லுகிற இறைவனைத் தவிர வேறு எந்த இறையையும் வணங்கமாட்டோம்
என்பதுதான் எங்கள்(முஸ்லீம்கள்) கொள்கை என்கிறீர்கள்.

இங்கு பிறந்திருப்பதால் பாரதத்தின் மீது தாய்நாட்டு பக்தி இயற்கையாக இருக்கவேண்டும் என்று அனைவருமே எதிர்பார்க்கிறோம்.

இங்குள்ள பல மொழிகளில் ஒன்றை, தாய்மொழியாக கொண்டிருப்பதால் தாய்மொழிப் பற்று இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.


இந்த நாட்டின் எல்லா அம்சங்களையும் புனிதமாக கருதத் தெரிந்தவர்களுக்கு இந்த நாட்டிலேயேத் தோன்றியுள்ள பல்வேறு மதங்களில் ஏதேனும் ஒன்றை
பின்பற்றி தாய்மதப்பற்றையும் காட்டலாமே

ஸாரே ஜஹான் சே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா என்று சொல்லத் தெரிந்த நமக்கு, இந்த நாட்டிலேயே தோன்றியுள்ள மதங்கள் சிறப்பானவையாகத் தெரியவில்லையா?

அடிமைப்படுத்தி, ஆசை காட்டி மாற்றிய மதங்கள் மீது இவ்வளவுப் பற்றிருக்கக் காரணம் என்ன? இன்னும் அந்த மதங்களைப் பற்றிக் கொண்டிருப்பதன் காரணம் என்ன?

வந்தேமாதரம் பாடுவது இஸ்லாத்துக்கு விரோதம் என்றால்,

வந்தேமாதரம் பாடிய ஏ.ஆர்.ரகுமானை(திலிப்) முன் ஜன்ம காபிர் நினைப்பு வந்துவிட்டதோ எனக் கூறி இஸ்லாத்திலிருந்து ஏன் விலக்கவில்லை?

அல்லாவைத் தவிர வேறு யாரையும் வணங்க மாட்டோம் எனச் சொல்பவர்கள், நாகூர் தர்கா, சென்னை அண்ணாசாலை தர்கா, காயிதே மில்லத் சமாதி போன்றவற்றை
வணங்குவது ஏன்? அப்படி வணங்குபவர்களை காபிர்கள் என்று அழைக்காதது ஏன்? ஊர்விலக்கம் செய்யாதது ஏன்?

முன்னாள் ஜனாதிபதி உயர்திரு.அப்துல்கலாம் அவர்கள் திருப்பதி சென்று சாமி கும்பிட்ட போது ஏன் எந்த இஸ்லாம் ஜமாத்தாரும் அவரை ஊர்விலக்கம்
செய்யவில்லை, காபிர் என்று அழைக்கவில்லை? ஏதோ குடிப்பழக்கத்தைப் பற்றி எழுதிவிட்ட ரசூலுக்கு மட்டும் ஊர்விலக்கம்?

ஹிந்துக்களை வந்தேமாதரம் பாடவேண்டாம் என நாங்கள் சொல்லவில்லையே என்று சொல்பவர்கள், எம்.எப்.ஹூசேன் ஹிந்துக் கடவுள்களை நிர்வாணமாக
வரைந்தபோது சகோதர மதக் கடவுள்களை இழிவுபடுத்துகிறாயே என தட்டிக் கேட்காதது ஏன்? (சாத்தானைத் தானே நிர்வாணமாக வரைந்தார், வரைந்துவிட்டு
போகட்டுமே என்ற நினைப்பா?)

நான் பள்ளியில் படித்த பொழுது (10ம் வகுப்பு) சமூக அறிவியல் பாடத்தில் ஒவ்வொரு மதத்தின் போதனைகளை பற்றிய குறிப்புகள் இருந்தது.
இஸ்லாத்தின் போதனைகளில் முதல் வரியாக: கடவுள் ஒருவரே, அவரே அல்லா அவரைத் தவிர வேறு யாரும் இல்லை.
கிறிஸ்தவத்தின் போதனைகளில் முதல் வரியாக: கடவுள் ஒருவரே அவரே இயேசு கிறிஸ்து அவரைத் தவிர வேறு யாரும் இல்லை.
ஹிந்து மதத்தின் போதனைகளில் முதல் வரியாக: கடவுள் ஒருவரே அவரே ராமர்,கிருஷ்ணர்,இயேசு,அல்லா என எல்லாமாகவும் இருக்கிறார்.

இஸ்லாம், கிறிஸ்தவ போதனைகளின் அடிப்படையான இந்தவரிகளை படிக்கும் பொழுது, ஹிந்துக்கள், முஸ்லீம்கள்,கிறிஸ்தவர்கள்,இன்னும் பல மதங்கள்
இருக்கும் இந்த பாரத தேசத்தில் அல்லா,இயேசு கிறிஸ்துவைத் தவிர வேறு யாரும் கடவுள் இல்லை என இஸ்லாமும், கிறிஸ்தவமும் சொல்லும் போது
பிற சமயத்தவர்களின் மனது புண்படும் என யாருமே நினைக்கவில்லையா? அப்படி புண்படுத்துகிற மதத்தை நாம் பின்பற்றுகிறோமே இது சரியா என சுயக் கேள்வி
எழுப்பமுடியாத அளவுக்கு மூளை மழுங்கிவிட்டதா?

ஐயப்ப சாமி பூஜையில் "இலாஹி லாஹா இல்லல்லா; வாவர் முகம்மது சல்லல்லா" என்று, என்ன அர்த்தம் என்று கூடத் தெரியாமல் பக்தியுடன்
பாடும் சுதந்திரத்தைக் கொண்டுள்ள இந்த நாட்டின் சமயத்தின் மீது, அந்த சமயம் உருவகிக்கும் விஷயங்களின் மீது பற்றில்லையா?


மக்களை மதத்தின் பெயரால் பாரபட்சமாக நடத்தக் கூடாது என்பதுதான் மதசார்பற்ற நாட்டுக்கு அர்த்தம். அப்படிப்பட்ட மதச்சார்பற்றத் தன்மையை
சட்டம் போட்டெல்லாம் அமுல்படுத்த தேவையில்லாத அளவுக்கு தன் இயல்பிலேயே அந்த அம்சங்களைக் கொண்டுள்ள ஹிந்து சமயமத்தை சுயம்புவாகக் கொண்ட
நம் நாட்டில் அது ஒன்றும் விசேஷமில்லை. ஒரு வேளை மற்ற நாட்டு முஸ்லீம்களின் நிலைமையைப் பார்த்து இந்த சிறப்பை ஏற்றுக் கொள்ள உங்கள் மனசு உந்தியிருக்கலாம்.


அப்படி வாழ வகை செய்திருக்கிற நம்ம நாட்டு சார்பாக நீங்க ஒரேமதத்தைச் சேர்ந்தவங்க என்கிற அடிப்படையில பாகிஸ்தானுக்கும், பங்களாதேஷுக்கும், அரேபியாவுக்கும்
எங்க நாட்டுல (பாரதம்) நாங்க(முஸ்லீம்கள்) எவ்வளவு சௌகரியமா வழிபாட்டு சுதந்திரத்தோட வாழுறோம், அந்தமாதிரி நீங்களும், உங்க நாட்டுல
வாழுற மத்த சமயத்தை சேர்ந்தவங்களுக்கு வழிபாட்டு சுதந்திரம் கொடுக்கணும்; அவங்க ஒண்ணும் யாரையும் மதம் மாத்த மாட்டாங்க! (வழிபாட்டு
சுதந்திரத்தை அரசியல் சட்டரீதியா ஏற்படுத்திக் கொடுத்திருக்கிற இந்த நாட்டிலேயே நாங்கதான் மதம் மாத்துறோம்) கவலைப் படாம அவங்களுக்கு
பாரதநாட்டுல இருக்கிற மாதிரி வழிபாட்டு சுதந்திரம் ஏற்படுத்திக் கொடுங்க - என ஒரு கோரிக்கை வைத்தால் என்ன?


"மதம் என்னும் மதம் ஓயட்டும் தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்" என்னும் பாட்டை வைத்து படமெடுத்தவருக்கு வெடிகுண்டுதானே பரிசாக கிடைத்தது.

"அப்துல்ராமன்" என்ற திரைப்பட பெயரை மாற்றாவிட்டால் அவ்வளவுதான் எனும் மிரட்டலுக்குப் பணிந்து "ராமன் அப்துல்லா" என்று மாற்றியதுதானே
நாம் கண்ட காட்சி


வீட்டுக்குள்ள உருது பேசாம, அரேபிய பாணியில் பெயர் வைக்காம (நீதிமான், அந்தமான், கவிக்கோ, சைக்கோ - என்று இப்படியும் பெயர் வைக்காம)
நம்ம இறைவனிடம்(உங்க அல்லாவிடம்) உத்தரவு வாங்கிட்டு, அழகிய தமிழ்பெயர்களா பார்த்து வைத்துவிட்டு தமிழன் என்று தலைநிமிர்ந்து
திரைப்பட இயக்குனர் சீமான் -கிட்ட சொல்லுங்க (ஏன்னா- தமிழ்நாட்டு முஸ்லீம்கள் எல்லாம் தமிழன் இல்லையா! அவரு எனக் கேட்டிருக்கிறாரு.)

வேதம் புதிது திரைப் படத்தில் ஒரு வசனம் வரும் "எந்த வீட்டுக்குப் போனாலும் எல்லாத் தாயியும் ஒன்னுதேன்; எந்த கோயிலுக்குப் போனாலும்
எல்லாஞ் சாமியும் ஒன்னுதேன்" இந்த எண்ணம் எல்லா சமயத்தார்க்கும் வராத வரைக்கும் நம்ம நாட்டுக்கு கஷ்ட காலம்தான் போல!

4:51 AM, December 13, 2007  
Anonymous Anonymous said...

வந்தே மாதம் பாடலுக்கும் நாட்டுப்பற்றுக்கும் அப்படியென்னதான் சம்பந்தம் இருக்கிறது?

1882ஆம் ஆண்டு வெளிவந்த ""ஆனந்த மடம்'' எனும் வங்க நாவலில் இடம் பெற்ற பாடல்தான் "வந்தே மாதரம்'. இந்த நாவலை எழுதியவர் பங்கிம் சந்திர சாட்டர்ஜி என்ற வங்காளப் பார்ப்பனர், அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கத்தில் டெபுடி மாஜிஸ்ரேட்டாக விசுவாசமான காலனிய சேவை செய்த சாட்டர்ஜி, 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் வங்காளத்தில் நவாபுக்கு எதிராக நடந்த வைணவ சந்நியாசிகளின் கலகத்தைப் பின்னணியாகக் கொண்டு இந்நாவலை எழுதினார்.1773ஆம் ஆண்டில் வங்காளத்தில் வந்த பஞ்ச காலத்திலிருந்து நாவல் தொடங்குகிறது.

அன்றைய வங்காள நவாபான மீர் ஜாபரின் கஜானாவை சந்நியாசிகள் கொள்ளையடிக்கின்றனர். இந்த நாவலில் வரும் பவானந்தன் எனும் கதாபாத்தி ரம், நவாபுக்கு எதிராக வைணவத் துறிவிக் கூட்டத்துடன் அரசாங்கக் கஜானாவைக் கொள்ளையிடவும், முஸ்லீம் வழிபாட்டுத் தலங்களை இடிக்கவும் செல்லும்போது "வந்தே மாதரம்' பாடலினைப் பாடியபடியே மக்களைத் திரட்டுவதாய் நாவல் செல்கிறது.

""இந்தப் பாதகர்கள் நிரம்பிய யவனபுரியைத் தகர்த்து ஆற்றில் வீழ்த்தவிட வேண்டும்'' என்றும், ""இந்தத் துன்மார்க்கர்கள் கூட்டத்தை தீ வைத்து எரித்து அன்னையாகிய நமது தாய்நாட்டை மீண்டும் பரிசுத்தமாக்க வேண்டும்'' என்றும் ""நமது தேவாலயங்களை இடித்து அவற்றின் மீது அவர்கள் எழுப்பிய கட்டிடங்களைத் தகர்த்தெறிந்து மறுபடியும் ராதா மாதவர்களுக்கு (கிருஷ்ணனுக்கு) கோயில் கட்டுவோமாக!'' என்றும் முஸ்லீம்களுக்கு எதிராக இந்நாவல் நெருப்பைக் கக்குகிறது.

""இத்தாடிப் பயல்களைத் தேசத்தை விட்டுத் துரத்தினாலன்றி இந்து மார்க்கத்திற்குச் சேமமில்லை'' என்றும் ""இம் மகம்மதியர் ஜாதி எனும் குருவிக் கூட்டைப் பிரித்தெறிய வேண்டுமென்று அடிக்கடி நினைத்தோம். நம் மத எதிரிகள் நகரை அழித்து ஆற்றில் விடக் கருதினோம். இப்பன்றிகளின் கிடையைச் சாம்பலாக்கிப் பூமாதேவியின் துன்பத்தைத் துடைத்தெறிய எண்ணினோம்! நண்பர்களே! அதற்கான காலம் வந்துவிட்டது. வாருங்கள்! நாம் சென்று அந்த இஸ்லாமியப் பாவிகளின் இருப்பிடத்தை அழிப்போம். அப்பன்றிகளை அடைக்கும் பட்டியை எரிப்போம். அக்குருவிக் கூட்டைக் கலைத்துக் குச்சிகளை எல்லாம் காற்றில் பறக்க விடுவோம்'' என்றெல்லாம் நஞ்சைக் கக்கி விட்டு, கூடவே, ""பகவான் நாமம் ஸ்தோத்திரம் செய்வோமாக!'' என்கிறார் பங்கிம் சந்திர சாட்டர்ஜி.

முஸ்லீம்களை தீ வைத்துப் பொசுக்குவதுதான் தேசத்தைப் பரிசுத்தமாக்குவதாம்! இதைத்தானே சங்கப் பரிவார பாசிஸ்டுகள் குஜராத்தில் செய்து முடித்தார்கள்! முஸ்லீம்கள் எழுப்பிய கட்டிடங்களைத் தகர்த் தெறியும் திட்டத்தின் மூல விதையை பார்ப்பனபாசிச கும்பலுக்கு இந்த நாவல்தான் விதைக்கிறது எனும்போது, இந்நாவலில் இடம் பெறும் பாடலும் இந்து பயங்கரவாதிகளுக்கு உவந்து போனதில் வியப்பென்ன?

வந்தே மாதரம் என்றால் "தாய்க்கு வணக்கம்' என்று பொருள். எந்தத் தாய்க்கு வணக்கமாம் அது? பாட்டின் இரண்டாம் பகுதியில் இதற்கு பதில் இருக்கின்றது. பார்வதி, காளி, துர்க்கை, சரஸ்வதி, லட்சுமி என்றெல்லாம் சுட்டப்படுபவள்தான் இந்தத் தாய்.

பாரதியார் மொழிபெயர்த்துள்ள வந்தேமாதம் பாடலில் இது தெளிவாகவே உள்ளது.இந்தத் தாயைப் ""அகண்ட பாரத மாதா''வாக புரமோஷன் கொடுத்த கைங்கர்யத்தைக் காங்கிரசுக் கட்சி 1906இல் செய்தது. 1930களின் இறுதியில் இப்பாடலை "தேசிய கீதமாக்க' காங்கிரசுக் கட்சி முயன்றது.

இப்பாடலுக்கு இசையமைத்த கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் ""வந்தே மாதரம் பாடல் துர்க்கை அன்னையை வணங்குவது போலப் பாடப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்துக்கள் தவிர முஸ்லீம்கள் மற்றும் பல மதத்தினர் இருக்கின்றனர். எனவே இந்தப் பாடலைத் தேசிய கீதமாக அறிவிக்கக் கூடாது'' என்று 1937இல் எதிர்த்துள்ளார். எம்.என்.ராயும், சுபாஷ் சந்திரபோசும் இப்பாடலுக்கு எதிர்ப்பைத் தெரிவித்தார்கள்.

1937இல் சென்னை மாகாண பிரீமியராக ராஜாஜி இருந்தபோது, சென்னை சட்டசபையில் இப்பாடலைப் பாடச் சொல்லி கட்டாயப்படுத்தினர். பாடல் பாடுகையில் எழுந்திருக்க மறுத்து 2 இஸ்லாமிய உத்யோகஸ்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒரிஸ்ஸா சட்டசபையிலும் இது எதிர்ப்பை சம்பாதித்தது. பெரியாரின் ""குடியரசு'' பத்திரிகை அப்போதே இப்பாடலின் முஸ்லிம் விரோதப் போக்கை அம்பலப்படுத்தியிருக்கின்றது.

நான்கு கைகள் முளைத்த லட்சுமியைக் காட்டி அவள்தான் "பாரதமாதா' என்றும், அவளை அனைவரும் வழிபட வேண்டும் என்று மற்ற மதத்தினரைக் கட்டாயப்படுத்துவதும் பார்ப்பன (இந்து) வெறியன்றி வேறென்ன?

முஸ்லீம்களை வெறுக்கக் கற்றுத்தரும் இதே நாவல், ஆங்கிலேயர்களுக்கு அதிக விசுவாசமாக ""ஆங்கிலேயர்கள் நமக்குப் பகைவர்கள் அல்லர்'' என்றும் ""இந்த சந்தான சந்நியாசிகள் செய்த புரட்சியின் காரணமாகவே அரசுப் பொறுப்பை ஆங்கிலேயர்கள் ஏற்க வேண்டி வரும்'' என்றும் கூறுகிறது. பல இடங்களில் பிரிட்டிஷாரை வெகுவாகப் புகழ்கிறது. இந்து தர்மம் தழைக்கக் கூட ஆங்கிலேயனின் ஆதிக்கம் வேண்டுமென ஆன்மீகக் கயமைத்தனத்தைக் காட்டுகிறது இந்நாவல்.

நமது நாட்டின் சக குடிகளான இசுலாமியர்களை அழிக்கவும் அந்நிய ஏகாதிபத்தியத்திற்கு அடிவருடிகளை உருவாக்கவும் முனையும் இந்த நாவலில்தான் இன்றைக்கு தேசபக்தியின் அடையாளமாகக் காட்டப்படும் "வந்தே மாதரம்' பிறந்துள்ளது.

இப்பாடலை வைத்து தேசபக்தி பஜனை பாடும் பா.ஜ.க., காங்கிரசு இரண்டுமே நாவல் குறிப்பிடுவது போலவே நாட்டின் சிறுபான்மை மக்களை அழிப்பதிலும், நாட்டை அன்னியனுக்குக் காட்டிக் கொடுப்பதிலும் ஓரணியில் நிற்கின்றன.

வந்தே மாதரத்தைப் பாடுவதன் மூலம் ஒருவன் தேசப் பற்றாளன் என்றோ, அதைப் பாட மறுப்பவன் தேசத்துரோகி என்றோ கருதி விட முடியுமா? அப்படியானால் ""வண்டே... மாட்றம்'' என்று நவீன மெட்டுக்கள் மூலம் ஏ.ஆர்.ரகுமான் போன்ற பிரபலங்களை வைத்து இந்தியா முழுவதும் இப்பாடலை ஒலிக்கச் செய்து, கல்லாவை நிரப்பிக் கொண்ட அந்நிய நிறுவனமான ""சோனி''தான் "இந்திய நாட்டின் சிறந்த தேசபக்தனாக' இருக்க முடியும்.

அதீத கூச்சல் போடும் பா.ஜ.க.வோ, சீமைச் சாராயம், விபச்சார அழகிகளுக்காக ராணுவ ரகசியங்களை விற்க முன்வந்ததையும், கார்கில் போரில் மாண்ட வீரர்களின் உடலை எடுத்துச் செல்லும் சவப்பெட்டிகளில்கூட கமிஷன் அடித்ததையும் மறைத்துவிட்டு, "வந்தே மாதரம் பாடுவதுதான் தேச பக்தி' எனக் கூச்சல் போடுகிறது. காசுக்காகவும், சாராயத்துக்காகவும், விபச்சாரிகளுக்காகவும் நாட்டின் பாதுகாப்பையே விற்ற இவர்களுக்குத் தேச பக்தி பற்றிப் பேசிட அருகதை உண்டா?

நன்றி: சிந்திக்க உண்மைகள்

12:40 PM, December 13, 2007  
Anonymous Anonymous said...

"வேதம் புதிது திரைப் படத்தில் ஒரு வசனம் வரும் "எந்த வீட்டுக்குப் போனாலும் எல்லாத் தாயியும் ஒன்னுதேன்; எந்த கோயிலுக்குப் போனாலும்
எல்லாஞ் சாமியும் ஒன்னுதேன்" இந்த எண்ணம் எல்லா சமயத்தார்க்கும் வராத வரைக்கும் நம்ம நாட்டுக்கு கஷ்ட காலம்தான் போல"

அழகாகச் சொன்னீர்கள்!

3:07 PM, December 13, 2007  
Anonymous Anonymous said...

"The militant Muslim is the person cutting the head off the infidel while the moderate Muslim holds the victim's feet."

யாரோ சொன்னது.

3:39 PM, December 13, 2007  
Blogger அத்திவெட்டி ஜோதிபாரதி said...

அவருக்கு இதயபூர்வமான வாழ்த்துக்கள்! இப்படியும் சில முத்துக்கள்!!

அன்புடன் ஜோதிபாரதி

1:35 AM, December 14, 2007  

Post a Comment

<< Home