பொண்ணு ஏம்லே அடிமையாகமாட்டா?
கணவன் படுக்கைக்கு கூப்பிட்டால் உடனே வரவேண்டியது பெண்ணின் கடமை. அப்படி அவள் மறுத்தால் வானவர்கள் அவளை சபிப்பார்கள். அவள் எங்காவது புறப்பட்டிருந்தால் கூட கணவன் படுக்கைக்கு அழைத்தால் வரவேண்டியதுதான். இப்படி யாராவது சொல்லியிருந்தார் என வைத்துக்கொள்வோம். அதை தமிழ் சமுதாயமோ அல்லது மற்ற இந்துக்களோ பின்பற்றியிருந்தார்கள் என வைத்துக்கொள்வோம், ஆனால் இன்றைக்கு அப்படி அல்ல என்றாலும் கூட அத்தகைய பழக்கவழக்கங்களை இந்து சீர்திருத்த வாதிகளே எதிர்த்துவிட்டார்கள் என்றாலும் கூட அவை எத்தனை முறை மேற்கோள் காட்டப்படும். எத்தனை பேராசிரியர்கள் மீண்டும் மீண்டும் அதனை எடுத்து நம்முன் வைப்பார்கள்.சரி அதை விடுங்கள். இத்தகைய மேற்கோள்களை ஒரு இந்து பழமைவாத கும்பல் மிகுந்த பொருட்செலவில் அச்சடித்து விநியோகம் செய்தால்? தங்கள் மத-சடங்கில் இணையாத திருமணத்தினால் பிறந்த பச்சிளம் குழந்தையை பாவ பிறவி என ஒரு மத பத்திரிகை கூறுகிறது என வைத்துக்கொள்வோம்...அப்படிபட்ட பத்திரிகை நவீன தமிழ்நாட்டில் வெளிவந்திடுமா? நிச்சயம் முடியாதுதானே. இப்படி பெண்ணடிமைத்தனத்திற்கும் மானுடத்தன்மையற்ற கொடூரத்துக்கும் இந்த நவீன காலத்திலும் துணை போகும் ஒரு மதத்தை தமிழ் மக்களுக்கு ஏற்ற மதம் என்று ஒரு நபர் கூறினால், "அப்படி பெண்ணடிமைத்தனத்தை ஆதரிக்கிற மனுவாதி யாருக்கும் பகுத்தறிவு தந்தை பெரியார் பிறந்த மண்ணில் அப்படி சொல்ல தைரியம் வராது." என்றுதானே கூறுகிறீர்கள்?
சில சாம்பிள்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "ஒரு மனிதர் தமது மனைவியை படுக்கைக்கு அழைக்கும் போது அவள் வரமறுத்து அவள் மீது அவர் கோபத்துடன் இரவைக் கழிப்பாரானால் அவளை வானவர்கள் விடியும்வரை சபிக்கிறார்கள்." (ஸஹீஹுல் புகாரி)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஒருவர் தம் மனைவியைத் தமது படுக்கைக்கு அழைப்பாரானால் அவள் உடனடியாக ஏற்க வேண்டும். அவள் ஒட்டகத்துடைய அம்பாரத்தின் மீது அமர்ந்திருந்தாலும் சரியே!" (முஸ்னது அல்பஸ்ஸார்)
இப்போது இன்னொரு விசயத்தை பார்ப்போம். பெற்றவர் தவறு செய்ததாகவே வைத்துக்கொள்வோம். பிறந்த குழந்தை என்ன செய்யும்? இந்த நவீன உலகில் திருமண பந்தத்தில் பிறந்தாலும் மத நெறிக்கு வெளியே பிறந்ததால் பச்சிளம் குழந்தையை பாவ பிறவி எனக் கூறும் கொடுங்கோரர்களை என்ன என்று சொல்ல? இதுதான் பகுத்தறிவா?
இந்த பகுத்தறிவான பதில் வெளிவந்தது 'முஸ்லீம் முரசு' இதழில் (மார்ச் 1989) இந்த பகுத்தறிவு பெட்டகத்தின் அட்டையை அலங்கரித்த 'பகுத்தறிவு' யார் தெரியுமா?
M.காஜா நஜ்முத்தீன், துபாய்.
கேள்வி: வெளிநாட்டிலுள்ள தன்மனைவியை இந்நாட்டிலுள்ள கணவர் தலாக் சொல்லாமலேயே அவரது அந்த மனைவி வேறொரு கணவனை மணந்து ஒரு குழந்தையும் பெற்றுவிட்டாள். இந்த திருமணமும் இந்தப்பிறப்பும் ஏற்கத்தக்கதா?
ஒழுக்கத்தையும் வாழ்வின் நெறி முறைகளையும் இம்மியும் பிசகாமல் ஒவ்வொரு துறையிலும் பகுத்துத் தொகுத்து விரிக்கப்பட்டிருப்பது இஸ்லாத்தில் மட்டுமே. எனவே இங்கு ஆளுக்கு ஒரு நீதி இடத்திற்கு ஒரு சட்டம் என்றில்லை. நீங்கள் குறிப்பிடும் ஆணும் பெண்ணும் முஸ்லீமாக இருப்பின் நிச்சயமாக அந்தப் பெண்ணின் மறுமணமும் குழந்தையின் பிறப்பும் ஒழுக்கமுடையதாகவோ ஹலாலானதாகவோ ஏற்கப்படமாட்டாது. அந்தப் பெண் செய்தது முழுக்க முழுக்க விபச்சாரமே. அவள் பெற்ற குழந்தையும் ஹராமான பிறப்பே.
"தமிழ் மக்களுக்கு இஸ்லாமே பொருத்தமானது" கூறியவர் ஈவேரா (24-2-1935) 1980களிலும் 2000களிலுமே இப்படி என்றால் 1930களில் இந்த கும்பல் எப்படி இருந்திருக்க வேண்டும். அவர்களிடம் போய் இளித்தபடி ஈவேரா இப்படி அறிக்கை விட்டிருந்தால் அந்த ஆள் எப்படிப்பட்ட நயவஞ்சக பசப்பு வார்த்தை ஆசாமியாக இருந்திருக்க வேண்டும்! இப்படிப்பட்ட போலி பகுத்தறிவு ஆசாமி, சுயமரியாதை இல்லாத காட்டுமிராண்டி நயவஞ்சக முட்டாளை, 'பெண் விடுதலை போராளி' என்று சொன்னால், தெரியாமல்தான் கேட்கிறேன்...பெண் ஏன் அடிமையாக மாட்டாள்?
9 Comments:
நீலகண்டன்,
பெண் கணவனின் சாப்பாடு என்கிற பகுத்தறிவு சுயமரியாதை விளக்கம், கூடுதல் குறித்த "கூடுதலான" பெண்ணுரிமை சுயமரியாதையுடனான சிந்தனைகள் வருகிற ஒரு அறிவியல் மார்க்கத்தின் பிரச்சார பத்திரிக்கையின் அட்டையில் தமிழின் தமிழான
பகுத்தறிவுப்பகலவனின் பிரதம சிஷ்யன் கருணாநிதி வருவது கூடுதல் குறித்த செய்தியின் சுவையைக் கூட்டுகிறது!
வெங்காய வெடிச்சிரிப்புக்கு வெங்காயம் ஈவெராவின் சிபாரிசு சுயமரியாதை, பகுத்தறிவின் உண்மையான ஆழம் என்ன என்று விடுதலை செய்கிறது!
அழுதுகொண்டே சிரிக்கின்றேன்! தமிழகத்தின் தலைமைகளின் தலையாய கொள்கைகளை எண்ணியவாறே!
ஐயா,
இப்போ புரிகிறது இந்த ஈவேரா கயவனுடைய சதி. இஸ்லாமை இப்படி ஆதரித்தவன் இன்னும் கொஞ்ச நாள் இருந்தால் தமிழ் நாட்டில் எல்லா பெண்களுக்கும் பர்தா மாட்டியிருப்பான்.
இதெல்லாம் கற்பனை செய்து தான் அன்னிக்கே ஒரு புத்தகத்தை எழுதியிருக்கானோ "பெண் ஏன் அடிமையானாள்" என்று?
அமைதி மார்க்கத்தின் போதனைகளில் இருக்கும் நீதி புல்லரிக்க வைக்கிறது!
இதெல்லாமே வந்தேறி ஆரிய பார்ப்பனரின் சதி. இதை உடைத்தெறியத் தான் எங்கள் தந்தை தன் இன்னுயிர் ஈந்து உழைத்தார். இன்று எங்கள் முதல்வர் 'இருப்பது ஒரு முறை, போவது ஒரு முறை' என்று இந்த தள்ளாத வயதிலும் உழைக்கிறார். சிறுபான்மையினர் தூங்கிக் கொண்டிருக்கும் புலி - அவர்களை இடறினால் விளைவுகள் பயங்கரமாயிருக்கும்.
--கருப்பு கண்ணாடி போட்ட குருட்டு அனானி,
கருப்பு பாசறை,
சிங்கை.
நீலகண்டன்,
உணர்ச்சிப் பிழம்பாகவே மாறிவிடுகிறீர்கள்.
இப்ப அவர் சொல்லியிருக்கும் பதில் முழுக்க முழுக்க அவரது நம்பிக்கையின் படி. அநதக் குழந்தையின் பிறப்பு இழிவானது என்பது அந்தக் குழந்தையை பாதிக்கும் விஷயமல்ல அந்தப் பெண்ணை பாதிக்கும் விஷயம்தான். தவறான உறவில் பிறந்த பிள்ளைக்கு மோட்சம் கிட்டாது என்ச் சொல்வதாகவே வைத்துக்கொள்வோம்.. அப்படி ஒரு சட்டத்தின் உள் அர்த்தம் என்னவாக இருந்திருக்கும்? தகாத உறவுகளில் ஈடுபடாதீர்கள் என்பதே (அல்லது பாதுகாப்பாக ஈடுபடுங்கள் என்பதே - நன்றி டோண்டு சார் + குஷ்பு)
இதில் என்ன தவறுன்னு தெரியல..
உங்களிடம் சில நேரம் சில சில்லி கேள்விகளா கேட்கிறேன்னு நினைக்கிறேன்.
அன்னுடைய அறியாமை காரணமாயிருக்கலாம்.
:)
அன்புள்ள சிறில்,
பாகிஸ்தானில் மத சட்டத்தின் படி 'தவறான' உறவில் பிறந்த குழந்தையும் கல்லால் அடித்து கொல்லப்பட்டது குறித்து படித்த ஞாபகம். பழைய இல்லஸ்ட்ரேட்டட் வீக்லியில் வந்ததாகவோ அல்லது குஷ்வந்த்சிங் எழுதியதாகவோ படித்த ஞாபகம். இந்த சம்பவம் 1980களில்தான் நடந்தது. இதனை ஜியா அரசு மூடி மறைத்ததாகவும் அறிகிறேன். எதுவானாலும் அப்போது இது ஒரு சிறு சர்ச்சையாக எழுந்து அடங்கிவிட்டது ஞாபகம் இருக்கிறது. இந்த காலகட்டம்தான் பழமைவாத இஸ்லாமிய சட்டங்கள் தெற்காசிய பகுதிகளில் கடுமையாக அமுல்படுத்தப்பட்ட நேரம். இத்துடன் ஒட்டியே இந்த பதிலை படியுங்கள். 'பாவ பிறப்பு' என்பதன் முழு பொருளும் விளங்கும்.
//இப்ப அவர் சொல்லியிருக்கும் பதில் முழுக்க முழுக்க அவரது நம்பிக்கையின் படி.//
இந்த நம்பிக்கை நாளைக்கு சட்டமானால் பெண் உரிமையை விடுங்கள் அடிப்படை மனிதத்துவம் கூட அழிந்துதான் போகும். பின்னர் தலைமுறைகளை காவுவாங்கும் மிகக் கடுமையான ஒரு போராட்டத்துக்கு பின்னரே ஏதாவது ஒரு அளவாவது அடிப்படை வாழ்வுரிமைகளில் ஒரு சிலவற்றையாவது பெற்றுக்கொள்ள முடியும். ஆப்கானிஸ்தானில் போல. இதனைக்குறித்து எவ்வித அறிவும் இல்லாமல் ஈவேரா கூறியிருப்பவற்றை பார்க்கும் போதுதான் இவரது சமுதாய சீர்த்திருத்தம் எல்லாம் வெறும் பொய். சமுதாய அவலத்தை முதலாக்கி பிழைப்பு நடத்தியவர் என்கிற முடிவுக்கு வரவேண்டியுள்ளது. ஈவேரா நம் நாடு சார்ந்து முற்போக்கு விழுமியங்களை முன்வைத்திருக்க முடியும். பாபாசாகேப் அம்பேத்கருக்கும் இந்து தருமம் -குறிப்பாக இந்து சமுதாயம் தற்கொலைக்கு ஒப்பாக சாதீயத்தையும் இஸ்லாமிய ஆபத்தையும் எதிர்கொண்ட விதம், சில தலைவர்கள் தங்கள் குறுகிய வட்ட சுயநலங்களுக்காக ஒட்டுமொத்த சமுதாயத்தை பலி கொடுத்த விதம் ஆகியவற்றின் மீது கடும் விமர்சனம் இருந்தது. ஆனால் அண்ணல் அம்பேத்கர் எப்போதும் இஸ்லாமை ஒரு தீர்வாக முன்வைக்கவில்லை என்பது மட்டுமல்ல தலித்துகளை இஸ்லாம் குறித்து எச்சரிக்கவும் செய்தார். ஆரிய-திராவிட இனவாதத்தை கடுமையாக சாடினார். இந்த தன்மையுடன் ஈவேராவை ஒப்பிட்டால் ஈவேரா எத்தகைய மலினமான தலைவர் என்பது விளங்கும்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அன்புடன்
அரவிந்தன் நீலகண்டன்
வெண்தாடி வேஸ்ட்டுக்கு துட்டுதந்தாதான் போட்டோ எடுத்துக் கொள்வாராம். ஒரு போட்டொவிற்க்கே பைசா என்றால் கொள்கைக்கு கோடிதான். பலே கேடிகள் ஐயா இந்த கருப்பு கொடிகாரர்கள்
சிரில்,
இந்திய அளவில் இது மற்றொரு விதத்திலும் முக்கியமாகிறது.
பொது சிவில் சட்டம் என்று இல்லாமல் மத அளவில் சிவில் சட்டங்கள் இருக்கும் நிலையில், அதிலும் நம் நாட்டின் முஸ்லீம் மதச்சட்டங்கள் இப்படிப்பட்ட நம்பிக்கையின் அடிப்படையிலேயே அமைந்தவை என்பதனால் இவை வெறும் வழிகாட்டல்கள் மட்டுமே என்ற அளவில் எடுத்துக்கொள்ள முடியாது.
இப்படிப்பட்ட பிற்போக்கு எண்ணங்கள் சட்டமானதன் விளைவுதான் ஷா பானு கேஸ்களும் மாமனாரால் கற்பழிக்கப்பட்ட இம்ரானாவை அசுத்தமானவள் எனச்சொல்லி கணவரிடமிருந்து பிரித்து இரு முறை விக்டிமைஸாக்கிய கொடுமைகளும் தொடர்வதற்குக் காரணம்.
இப்படிப்பட்ட பிற்போக்கு மத நம்பிக்கைகள் கேடு கெட்ட இந்திய அரசியலில் முற்போக்கு முகமூடிகளால் சட்டமாக்கப்பட்டதால்தான், கட்டம் போட்டு இவற்றைக்காட்ட வேண்டியுள்ளது.
A child may be illegitimate before the eyes of faith but law has to give the child all the rights as (s)he deserves as a child and
as a human being. So any law that
denies such rights is against
human rights and civil rights.
The question is whether islamic
law and laws in islamic countries are compatible with human rights
and various Covenants and Declarations on Human Rights,
Childrens Rights and Womens Rights.
As far as I know Islam does not ban torture, nor inhuman punishments like killing
by stoning, mutilating the body
as punishment.
நீலகண்டன்,
உங்களுடைய ப்ளாக் இப்போதுதான் பார்க்க நேர்ந்தது. உங்களுக்கு ஹராம் மற்றும் ஹலால் பொருள் தெரிய வில்லை என்று எண்ணுகிறேன். காழ்புணர்ச்சி உடன் மற்ற மதங்களை பார்த்தல்அனைத்தும் தவறாக தன தெரியும்.
Post a Comment
<< Home