Monday, May 07, 2007

கிறிஸ்தவரின் ஆத்திரம் : 30 வெள்ளிக்காசாகிறதா என் பணம்?

கிறிஸ்தவர்கள் பொம்மலாட்ட பொம்மைகள் அல்ல. கிறிஸ்தவ சபைகள் அவர்களை தேசியத்திற்கு எதிராக நயவஞ்சகமாக அழைத்து சென்றிடவும் தேசிய கலாச்சாரத்திலிருந்து
அவர்களை அழித்திடவும் தனிமைப்படுத்திடவும் நினைத்தாலும் அதற்கான எதிர்ப்பு குரல் அவர்களுக்கு உள்ளிருந்து சர்ச் விதைக்கும் நயவஞ்சக நஞ்சுக்கு எதிராக குரல்கள் எழுந்து
கொண்டுதான் இருக்கின்றன. கத்தோலிக்க சர்ச்சின் ஒரு முக்கியமான அச்சம் இதுதான். இதனால்தான் இந்துத்துவாவை பூச்சாண்டியாக காட்டி இவர்கள் கிறிஸ்தவர்களை தேசிய
நீரோட்டத்திலிருந்து தனிமைப்படுத்த தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்கின்றனர். அண்மையில் சர்ச்சின் இத்தகைய ஒரு முயற்சிக்கு ஒரு எழுந்த தேசியம் இழக்காத கிறிஸ்தவ எதிர்ப்பு குரலின் பதிவு இது.


குமரி கிறிஸ்தவ பரதவர் அமைப்பின் இதழாக வெளிவரும் 'குமரி பரவை' இதழின் ஆகஸ்ட் 2006 இதழில் வெளிவந்த கட்டுரையின் பகுதி இது:


ஞானதூதனும் 30 வெள்ளிக்காசுகளும்


A.ஜஸ்டின் திவாகர்

பார் எங்கும் பரவி இருக்கும் பரதகுல மக்களின் நினைவஞ்சலி செய்திகளை கழிந்த 78 வருடங்கள் 'ஞானதூதன்' நமக்கு தந்து கொண்டிருக்கிறது. பாராட்டப்பட வேண்டிய பணி. இது பரதகுல மக்களின் அபிமானத்தையும் ஆதரவையும் பெற்ற பத்திரிகை.


ஆகஸ்ட் 2005-ஆம் இதழ் என் கண்பார்வையில் பட்டது. சுதந்திர தின சிறப்பு செய்தியாக "ஆசிரியர் பேனா..." பகுதியில் 'பிணம் எங்கே கழுகுகள் அங்கே' என ஒரு கட்டுரை 1-ம் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்தது. இந்தியர்கள் தங்கள் சுதந்திர தினவிழாவைக் கொண்டாடும் இந்த வேளையில் ஆசிரியரது 14 பாராக்களில் நமது சுதந்திரத்தை பரிகாசமாய் பிரசுரிக்கப்பட்டிருந்தது. "இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றுத் தந்தார் அப்பாவி அண்ணல் காந்தி" என்றும் "வெள்ளையனே வெளியேறு கறுப்பு பணமே உள்ளே வா" என்றும் "வெள்ளையன் காலத்திலாவது நாட்டில் நீதி கட்டுப்பாடு இருந்தது" என்றும் "பெண்களை தீயிலிட்ட சதியை ஒழித்தனர் நரபலியை தடைசெய்தனர். குழந்தை திருமணத்தின் தாலியை அறுத்தனர்" என்றும் எழுதி "அடிமைத்தன சுதந்திரமே இன்று இந்தியாவில் தேசியக்கொடியாகப் பறக்கிறது" என்று முடிக்கிறார். அதே இதழின் 2-வது பக்கத்தில் "சுதந்திர தின சிந்தனை என்கிற பகுதியில் இவை இரண்டும் இல்லாமல் விடுதலையா என்கிற தலைப்பில் "குடும்பத்துக்கு ஒரு வீடு ...மொழி வழி இனத்துக்கு ஒரு நாடு" என்று நாட்டுப்பிரிவினை சிந்தனை தூண்டப்பட்டிருப்பதையும் நாம் பார்க்கலாம்.


மாதம் சுமார் 25,000/- ரூபாய் சந்தா, வாழ்த்து, இரங்கல் செய்திகளுக்காக நம்மவர் வாரிக்கொடுக்கும் இப்பத்திரிகையை ஒரு வேளை குடியரசு தலைவர் டாக்டர். அப்துல்கலாம் அவர்கள் வாசித்தால் எழுதியவரைப் பற்றியும் அந்த எழுத்துக்கள் பத்திரிகை வடிவில் வெளிவர உறுதுணையாக நின்ற நமது இனமக்களைப் பற்றியும் அவர் என்ன நினைப்பார்? நாம் சற்று சிந்திக்க வேண்டும்.


நம்மினத்தவரின் தோள் மேல் துப்பாக்கியை வைத்துக்கொண்டு யாரையோ சுடுவது போல் இல்லையா? சமய உணர்வும் நாட்டு உணர்வும் ஒன்றுடன் மற்றொன்று இசைவுபட்டு செயலாற்ற வேண்டும். முரண்பட நிற்றல் கூடாது என்பதையும் நாம் சிந்திக்க வேண்டாமா?


ஊருக்கொரு தேவாலயம், அதைச்சுற்றி நான்கு குருசடிகள், ஆண்டு முழுவதும் ஆடம்பர திருப்பலியும் திருவிழாக்கள் கொண்டாடும் மறைமாவட்டங்கள் நம்மவர்களுக்கு சிலுவை அடிமை, அந்தோணி அடிமை, சூசை அடிமை, மிக்கேல் அடிமை, குரூஸ் அடிமை, சேசு அடிமை, பனியடிமை, பவுல் அடிமை என பெயர் சூட்டி அன்பியம் மூலமாக நம்மை ஆன்மிக கொத்தடிமையாக வைத்திருப்பது போதாதென்று தேசிய நீரோட்டத்தில் நம் பார்வை இப்படித்தான் என்று பறைசாற்றுவது போலில்லையா?


ஞானதூதனின் நம் விளம்பர காசு முப்பது வெள்ளிக்காசுகளாக மாறுவது நியாயமா.....?

நன்றி: குமரி பரவை, ஆகஸ்ட் 2006

2 Comments:

Blogger ஜடாயு said...

// இப்பத்திரிகையை ஒரு வேளை குடியரசு தலைவர் டாக்டர். அப்துல்கலாம் அவர்கள் வாசித்தால் எழுதியவரைப் பற்றியும் அந்த எழுத்துக்கள் பத்திரிகை வடிவில் வெளிவர உறுதுணையாக நின்ற நமது இனமக்களைப் பற்றியும் அவர் என்ன நினைப்பார்? //

ஒரு தேசியவாதியின் மனச்சாட்சியில் இருந்து பிறக்கும் கேள்வி.

// சமய உணர்வும் நாட்டு உணர்வும் ஒன்றுடன் மற்றொன்று இசைவுபட்டு செயலாற்ற வேண்டும். முரண்பட நிற்றல் கூடாது என்பதையும் நாம் சிந்திக்க வேண்டாமா? //

"புத்தரே எங்கள் நாட்டின் மீது ஆக்கிரமிப்பு எண்ணத்துடன் வந்தால், அவருக்கு வரவேற்பு அல்ல, தாக்குதல்கள் தான் பதிலாகக் கிடைக்கும்" என்று ஜப்பானிய பள்ளிக் குழந்தைகள் நேதாஜி சுபாஷ் போஸிடம் கூறியதாகப் படித்த ஞாபகம். இதே சிந்தனையை எதிரொலிக்கிறார்.

பதிவை எழுதியவருக்குப் பாராட்டுக்கள்.

10:19 PM, May 07, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

ஜஸ்டின் திவாகர் சிறந்த சிந்தனையாளர். மா.சிவகுமார் போன்றவர்கள் நிச்சயமாக ஜஸ்டின் திவாகரிடமிருந்து நாட்டுப்பற்றை படிக்கவேண்டும்.

11:33 PM, May 07, 2007  

Post a Comment

<< Home