Monday, October 31, 2005

பாயி மணி சிங் - தீபத்திருநாளின் சீக்கிய பலிதானி

தீபாவளி கொண்டாடும் அனைவருக்கும் அதன் தாத்பரியம் தெரிந்திருக்கலாம். அதன் ன்மீக-உள் அர்த்தங்கள் தெரிந்திருக்கலாம். னால் ஒரு காலத்தில் இந்த தேசத்தில் அந்த தீபத்திருநாளைக் கொண்டாட நம் முன்னோர் செய்த பலிதானம் தீபப் பண்டிகையைக் கொண்டாடும் ஒவ்வொரூவரின் ஞாபகத்திலும் இருக்கவேண்டியது அவசியம். நமது மேன்மை தங்கிய குடியரசுத் தலைவர் டாக்டர்.அப்துல் கலாம் அவர்கள் கூறுவது போல பாரதியர்களாகிய நாம் பிறரின் விடுதலையை மதித்தவர்கள். நம் வழிபாட்டுமுறையை நம் வாழ்க்கை முறையை பிறரும் ஏற்கவேண்டும் என நிர்ப்பந்திக்காதவர்கள் நாம். னால் நம் மீது படையெடுத்து வந்த அன்னியர் நம்மை நயவஞ்சகமாக வென்று அவர்களது வழிபாட்டு முறைகளை நம்மை ஏற்கும்படி கட்டாயப்படுத்தியனர். யிரமாண்டுகள் அன்னியர் திக்கத்திற்கு எதிராக இன்று உலகிலேயே உயர்ந்ததாக உலகின் ன்றோர்கள் போற்றும் நம் வாழ்க்கை முறையை நம் கலாச்சாரத்தை அதன் அடிநாதமாக விளங்கும் தர்மத்தை, நம்முடையதாக நாம் உரிமை கொண்டாட நம் முன்னோர்கள் செய்த மகத்தான தியாகங்களை நாம் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டும். நம் முன்னோரின் வீர வரலாறுகளையும் தியாகங்களையும் வருங்கால சந்ததியினருக்கு கூறி அவர்களையும் தர்மத்திற்காக தியாகங்கள் செய்திட தயாராக்க வேண்டும். நமது சனாதன தர்மம் அழிவற்றது. ஏனெனில் பிரபஞ்சம் அளாவிய பொதுமை சத்தியத்தை கூறுவது அது. அது நம் பாரதிய சமுதாயத்திற்கு, பாரத தேசத்திற்கு அருளப்பட்டுள்ளது. அதனை காப்பதும் உலகிற்கு ஒளியாக விளங்குவதுமே நம் தேசத்தின் ஜீவித நியாயமாகும்.
எனவேதான் அந்நியப்படையெடுப்பு மற்றும் க்கிரமிப்புகளின் போது நம் முன்னோர்கள் தமது குலத்தையே பலிதானமாக தந்தனர். நம் தர்மம் சனாதனமாக ஐயாயிரம் ண்டுகளுக்கும் மேற்பட்ட அறுபடாத செழுமையுடன் கற்பக விருட்சமாக விளங்க எத்தகைய பெரும் ன்மாக்கள் தங்கள் இதயக்குருதியை அதன் வேர்களில் அர்ப்பணித்தனர் என்பது நம் அனைவரும் ஒவ்வொரு நாளும் நினைக்க வேண்டிய ஒன்று. அவ்வாறே தீபத் திருநாளாம் தீபாவளியன்று அத்திருநாளைக் கொண்டாடும் உரிமையைக் காக்க தம் உயிரை அர்ப்பணித்த ஒரு மகாஞானியும் வீரருமான பலிதானியை நாம் இத்தீப திருநாளன்று நினைவு கூர்வோம்.

பொது சகாப்தம் 1662 இல் பஞ்சாபின் பட்டியாலா மாவட்டத்தில் உள்ள கைபோவால் எனும் கிராமத்தில் துலாத்-தயா கவுர் தம்பதிகளுக்கு புதல்வனாக மணி ராம் பிறந்தார். அக்காலகட்டத்தில் காஷ்மீரில் மதவெறி இருளினைப் பரப்பி மத வெறியாட்டம் டிக்கொண்டிருந்தான் அவுரங்கசீப் எனும் கொடுங்கோலன். காஷ்மிரத்து பண்டிதர்தம் உரிமை காக்கவும் ஹிந்துஸ்தானின் தர்மம் காக்கவும் முன்வந்தார் சத்குரு தேஜ்பகதூர். அவுரங்கசீப்பிற்கும் அவனைச்சார்ந்த மதவெறிக்கும்பலுக்கும் தம்மை மதமாற்ற சவால் விட்டார். அவ்வாறு மதம் மாற்றினால் தாம் மட்டுமல்ல ஹிந்துஸ்தானமே அவுரங்கசீப்பின் மார்க்கத்தை தழுவும் என வாக்குறுதியும் அளித்தார் அவர். குரு தேஜ் பகதூரை மிரட்ட அவுரங்கசீப்பால் முஸ்லீமாகும் படி வற்புறுத்தப்பட்டு குருவின் கண் முன்பே சித்திரவதை செய்து கொல்லப்பட்ட பாய் தயால் தாஸ் மணிசிங்கின் மூத்த சகோதரராவார். ஹிமயம் முதல் குமரி வரை பரந்து விரிந்த ஹிந்துஸ்தானத்தின் தொடக்கம் காண இயலாத வேதகாலம் முதல் இன்றைக்கும் என்றென்றைக்குமாக விளங்கும் தர்மமே ஒரு மானுட வடிவம் தரித்து நின்றது போல குரு தேஜ்பகதூர், அயோக்கியன் அவுரங்கசீப்பின் மதவெறி முன் நின்றார். தேஜ்பகதூர் காலடியில் அவுரங்கசீப்பின் மிரட்டல்களும், சித்திரவதைகளும், அவனைச் சார்ந்தவர்களின் சைவார்த்தைகளூம் தர்க்கங்களும், மதவெறி பிடித்த உருட்டல்களும் மண்ணைக்கவ்வின. வன்முறையில் மதம் வளர்க்கும் அடக்குமுறை ட்சி புரிந்த அந்நியக் கும்பல் தர்மத்தை கைவிடாத குருவின் தலையை வெட்டியது. தம்மையே இம்மண்ணின் தர்மத்துக்காக பலிதானம் செய்தார் அருட்குரு. அப்படியும் இரத்த வெறி தீராது பாரதம் முழுவதும் இருள் பரப்ப நினைத்த ஈன ட்சியாளருக்கு அன்று குரு தேசமான பஞ்சாப்தான் பெரும் சவாலாகவும் தர்மத்தின் அரணாகவும் விளங்கியது.

மணி ராம் பெற்றோர் னந்தபுரி சென்ற போது அவர்களுடன் சென்ற மணி ராம், குருவின் அருள் கிரகணங்களால் வெகுவாக ஈர்க்கப்பட்டார். தம் பெற்றோரிடம் தாம் இனி வீடு திரும்ப முடியாது என்றும் குருவின் பாத சேவையே இனி தமது வாழ்க்கை என்றும் தெள்ளத்தெளிவாக அறிவித்தார் அப்பெருமகனார். தம் மகனை மீண்டும் வீடு அழைத்து செல்லமுடியாது எனப் புரிந்து கொண்ட அப்பெற்றோர், தேஜ்பகதூரின் தர்ம பத்தினியான மாதா குருஜியிடம் தம் மகனை கவனிக்கும்படி கூறி விடைபெற்றனர். குருமாதா தம் புதல்வனைப்போலவே மணிசிங்கைக் கவனித்துக்கொண்டார். குரு மைந்தரான குரு கோவிந்த சிங்கின் சமவயதேயுடைய இச்சிறுவர் குருகுடும்பத்தில் ஒருவராகவே வளர்ந்து வரலானார்.குரு தேஜ்பகதூரின் புதல்வர் குரு கோவிந்த சிங் இச்சூழலில் கால்ஸா எனும் தொண்டர் படையைத் தோற்றுவித்தார்.

விக்கிரம் சகாப்தம் 1756 ம் ண்டு வைசாக திருநாள் பாரத தர்மத்தின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய திருநாளாகும். அன்றுதான் புனிதமான கால்ஸா உருவானது. தருமத்தின் பொன்னிறக் கொடி உயர்ந்தது. அந்நாளில் குரு கோவிந்த சிம்மரின் திருக்கரத்தால் அமிர்தம் அருந்தி தர்மம் காக்கும் மகத்தான தூய சீடர் படையில் முக்கிய அங்கமாக இணைந்தார் பாயி மணிசிங். மதவெறி பிடித்த அன்றைய ட்சியாளர் வீர சத்குரு கோவிந்த சிங்கின் குடும்பத்தையே அழிக்கத் துணிந்தனர். பொது சகாப்தம் 1704 ம் ண்டு டிசம்பர் 20 ம் தேதி குருவின் குடும்பத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குருவின் குடும்பத்தை பாய்மணிசிங் காப்பாற்றினார். பின்னர் கால்ஸா அமைப்பில் ஒற்றுமையைக் கட்டிக்காக்கும் பணியை குருமாதா சுந்தரிஜி பாய் மணிசிங்கிற்கு அளித்து அவரை அமிர்தசரஸிக்கு அனுப்பினார். இவ்வாறு 1721 இல் அமிர்தசரஸிற்கு திரும்பிய பாயி மணிசிங் கால்ஸாவில் ஒற்றுமையை ஏற்படுத்தியதோடு பவித்திரமான பொற்கோவிலாம் ஹரி மந்திர் சாகேப்பிலும் திறமையான நிர்வாகம் ஏற்பட வழிவகுத்தார். அவுரங்கசீப் தம் புதல்வர்களைக் கொன்றிருந்த போதிலும் அவுரங்கசீப்பின் மகனுக்கு அடைக்கலம் அளித்து, அவன் நோய் தீர சிகிச்சையளித்து தீயவர் நாண நன்னயச் செயல் புரிந்த மகாத்மா குருகோவிந்தசிங். கா! தேசத்தையும் தர்மத்தையும் காக்க வாளெடுத்து போராடிய குரு கோவிந்த சிங், தம் சொந்த சாபாசங்களுக்கு தனி வாழ்வில் இடங்கொடுக்காது வாழ்ந்தார் என்றால் அவரல்லவோ உண்மை மகாத்மா. பின்னாளில் அவர் இஸ்லாமிய மதவெறியனால் தூங்கிக்கொண்டிருக்கையில் கோழைத்தனமாகக் கொல்லப்பட்டார். யின் தர்மமும் தாயகமும் காக்கும் வீரர்தம் கால்ஸா தளரவில்லை. எனவே அன்றைய மதவெறி பிடித்த ஆட்சியாளருக்கு கால்ஸாவின் மைந்தர்களைத் துன்புறுத்துவதில் நாட்டம் குறையவில்லை. குரு கோவிந்தர் சமாதியடைந்துவிட்டதால் இனி மிக எளிதாக சீக்கியர்களை அடக்கிவிடலாம் என கருதிய அவர்கள் கடுமையான அடக்குமுறைகளை பஞ்சாபில் அவிழ்த்துவிட்டனர். அமிர்தசரஸுக்கு சீக்கியர் வரவும் புனித தடாகத்தில் நீராடவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தாம் அழிக்க அழிக்க சீக்கியர்கள் மேலும் மேலும் தோன்றுவதற்கு காரணம் அமிர்தசரஸ் எனும் அமிர்த தடாகத்தின் புனித நீரே காரணம் என நினைத்து அத்தடாகத்தை அழிக்கவும் முற்பட்டனர். இந்த பாதகச் செயலை செய்ய தூண்டியவன் அப்துல் ரஸாக் என்கிற அதிகாரி. விரைவில் இவன் குழந்தைகள் நோய்வாய்ப்பட்டன என்றும் அவன் பாயி மணிசிங்கை சரணடைய, எந்த தடாகத்தை மூட, அந்த மூடன் தூண்டினானோ அதே தடாகத்தின் நீரினால் மணிசிங் அக்குழந்தைகளுக்கு நோய்கள் அகற்றுவித்து ரோக்கியம் அருளினார் எனவும் சீக்கிய வரலாறுகள் கூறுகின்றன. வைசாகத் திருநாள் அன்றும் தீபாவளித் திருநாள் அன்றும் சீக்கிய வீரகுல மக்கள் அமிர்தசரஸில் கூடுவர். உணர்ச்சியும் உரமும் பெறுவர். இது தர்மமற்ற அரசின் கண்ணை உறுத்தியது.

அடுத்ததாக தீபாவளித்திருநாளை அமிர்தசரஸில் கொண்டாட தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் பாயி மணிசிங் அன்றைய மொகலாய ஆளுநராக இருந்த ஸகாரியா கானுக்கு தீபாவளித் திருநாளை கொண்டாட அனுமதி வழங்கக் கோரிக்கை விடுத்தார். தீபாவளித்திருநாளுக்கு முன்னர் 5000 பணம் கொடுத்தாலே தீபாவளி கொண்டாட அனுமதி வழங்கமுடியும் என தெரிவித்தான் ஸகாரியா கான். சொந்த நாட்டின் தர்மத்தின் ஒளி ஏற்றும் தீபத் திருநாளை கொண்டாட மாற்றானுக்கு பணம் அளிக்க நிர்ப்பந்திக்கப்பட்ட போதும் பாயி மணிசிங் அதற்கு சம்மதித்தார். ஏனெனில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் அமிர்தசரஸிற்கு ஹரி மந்திரத்திருத்தலத்திற்கு தீபத்திருநாளைக் கொண்டாட வருவார்கள். அவர்களிடமிருந்து காணிக்கைகளை சேகரித்து மிகக் குறுகிய காலகெடுவுக்குள் இந்த மிக அதிகமான அநியாயக் கட்டணத்தை செலுத்தமுடியும் என அவர் எண்ணினார். இதனை அறிந்து கொண்ட ஸகாரியா கான் அமிர்தசரஸிற்குள் சீக்கியர் வருவதை தடைசெய்தான். ஸ்காரியா கானின் அடிவருடியும் கூலிப்படையாளனும் துரோகியுமான லக்பத்ராய் (இன்றைய போலி மதச்சார்பற்ற அஃறிணைகளின் மூதாதைகளில் ஒருவன்) மொகலாய இராணுவத்தை ஏவி திருவிழாவிற்கு வந்தவர்களை விரட்டினான். பின்னர் ஸகாரியா கான் கூறிய கட்டணத்தை செலுத்தவில்லை எனக் கூறி பாயி மணிசிங்கை கைது செய்தான். எந்த தீபாவளித் திருநாளைக் கொண்டாட பாயி மணிசிங் அனுமதி கேட்டாரோ அதே திருநாளன்று காஸியின் முன்னிலையில் 'விசாரணை' நடத்தப் பட்டது. இந்த போலி விசாரணைகளும் சிறை வாசமும் சித்திரவதைகளும் தீபாவளி கைதில் ரம்பித்து று மாதங்கள் தொடர்ந்தன. பாயி மணிசிங் தமது தர்மத்தை துறந்து ஸகாரியாகானின் மதத்தை ஏற்க வேண்டும் இல்லையேல் அவரது உடல் அங்கங்கள் ஒவ்வொன்றாக வெட்டப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு அவர் கொல்லப்படுவார் என தீர்ப்பளிக்கப்பட்டது. தீர்ப்பளித்தவன் யார் தெரியுமா யாருடைய குழந்தைகளுக்கு பாயி மணிசிங் வாழ்வளித்தாரோ அதே அப்துல் ரசாக்தான்.

ஏக ஓங்கார தியானத்தில் ழ்ந்த அந்த ஞானியை, அன்னிய மார்க்க வெறி பிடித்த மாபாதகர்கள் செய்த சித்திரவதைக் கொடுமைகள் அனைத்து மக்கள் பார்வையிலும் நிறைவேற்றப்பட்டது. சீக்கிய அன்னைகள் பின்னர் தங்கள் குழந்தைகளுக்கு கூறுவார்கள்:
"தண்டனையை நிறைவேற்றுபவன் பாயி மணிசிங்கின் சில விரல்களை வெட்டினான். இவ்வாறு ஒருவரை சித்திரவதை செய்வதை அவனாலேயே தாங்க முடியவில்லை. எனவே மற்ற விரல்களை விட்டுவிட்டு அவரது கைகளை வெட்ட நிமிர்ந்த போது, பாயி மான் சிங் அன்புடன் அவனை அழைத்து, "ஒவ்வொரு அங்கத்தையும் துண்டாக்க வேண்டுமென்பது கட்டளையல்லவா! இதோ சில விரல்களை விட்டுவிட்டாயே அதையும் வெட்டிவிட்டு பின்னர் கரத்தை வெட்டு இல்லையேல் உடலை சோதிப்பவர்கள் உன்னை கடமையை சரிவர செய்யவில்லை என தண்டிக்கக்கூடும்" எனக் கூறினார். அனைவரும் அதிசயத்துடன் நோக்க அம்மகான் தம் அங்கத்தையே துண்டுதுண்டாக்கி பாரத தர்மத்திற்கு பலிதானமளித்தார். ஆனால் அவர் தமது தர்மத்தை என்றென்றும் விடவில்லை."
இப்புனித பலிதானம் வீணாகவில்லை என்பதை வரலாறு கூறும். பாயி மணிசிங்கின் மரணத்தின் பின்னர் 42 ண்டுகளுக்குப் பின்னர் ரஞ்சித் சிங் எனும் மாவீரர் தோன்றியதும் அன்னியரை அவர் விரட்டியடித்து தர்மத்தின் பொற்கொடியின் பட்டொளியை பாரதத்தின் ஆப்கானிய எல்லை வரை வீசிட வைத்தமையும், வல்லரசுகளாலும் அடக்கமுடியாத ப்கானியர் அவருக்கு கப்பம் கட்டி அடிபணிந்து வாழ்ந்தமையும் வரலாறு கூறும் செய்திகள். இன்று நாம் கொண்டாடும் தீபாவளித்திருநாளின் அதிகாலையில் புனித நீராட, பாரதத்தின் புண்ணிய நதிகளின் பெயர் சொல்லி நம் விரல்கள் நீரைத் தொடும் அத்தருணத்தில் ஒவ்வொரு விரல் முதல் தம் அங்கங்கள் அனைத்தையும் தர்மத்திற்கு ஈந்த அம்மகான் பாயி மணிசிங்கை நாம் நினைவு கூர்வோம். தியாகங்களால் வளர்க்கப்பட்ட இப்பண்பாட்டை சொத்தாகப் பெற்றிருக்கும் நாம் அப்பண்பாட்டிற்கு நம்மை நாமே தகுதியானவர்கள் ஆக்கிக் கொள்வோம்.

எஸ் அரவிந்தன் நீலகண்டன்

இணையதளங்கள்

க http://allaboutsikhs.com/bhagats/bhaimanisingh.htm
க http://www.sikh-history.com/sikhhist/martyrs/mani.html
க http://www.gurbani.net/Religion/sikhcommunity/manisingh.htm

0 Comments:

Post a Comment

<< Home