Tuesday, January 30, 2007

கலாமுக்கு எதிராக பால்தாக்கரே

நமது மதிப்பிற்கும் அன்பிற்கும் உரிய குடியரசு தலைவர் கலாமுக்கு எதிராக பால்தாக்கரே கூறிய தரமற்ற விமர்சனத்தை கண்டனம் செய்கிறேன்.
பால் தாக்கரே வெறும் அரசியல்வாதிதான். அதுவும் ஒரு சமயம் மாநிலவாதம் பேசி வந்த அரசியல்வாதி. மாறாக கலாம் தேசத்திற்கு உதவிய அறிவியலாளர் மட்டுமல்ல அதற்கும் மேலாக கோடிக்கணக்கான பாரதிய மனங்களை ஒருங்கிணைத்த தெய்வீக மனிதர். அவரது பாததூசி கூட பால் தாக்கரே போன்ற அரசியல்வாதிகளை விட உயர்ந்தது. இதனை வன்மையாக கண்டிக்கிறேன். அப்ஸல் விஷயத்தில் கலாம் சரியாகவே நடந்திருக்கிறார். அவனது கருணைமனுவில் அவர் கையெழுத்து போடவும் இல்லை அதனை குறித்து அவர் ஏதும் பேசவும் இல்லை. இதில் கீழ்த்தர தேசவிரோதியாக நடந்திருப்பது சோனியா வீட்டு நாய்க்குட்டியாக நடக்கும் மன்மோகன்சிங் என்கிற கைகட்டி நிற்கும் கோழையின் அரசுதான். எனவே பால்தாக்கரே மனநிலை பிறழ்ந்து பேசியிருக்கிறார். நிற்க இதனை திருவாளர் சீத்தாராம் எச்சியூறி என்கிற சிவப்பு அஃறிணை கண்டித்திருக்கிறது. இந்த இரட்டைநாக்கு பிறவிதான் முன்னர் கலாமை வாஜ்பாயின் ரப்பர் ஸ்டாம்ப் என வர்ணித்தது.

19 Comments:

Anonymous Anonymous said...

மொத மொதலில் காக்கி அரைடிராயரை கழட்டி வச்சிட்டு படித்தீரா அந்த செய்தியை ?
மனசு மாறிடப் போறது :)

8:51 AM, January 30, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

இல்லை. காக்கி நிக்கரால்தான் இத்தனை கடுமையாக விமர்சிக்க முடிந்தது. ஏனெனில் இதற்கு முன்னர் மராத்தா பல்கலைக்கழகத்திற்கு அண்ணல் அம்பேத்கர் பெயர் வைப்பது முதல் பல விசயங்களில் ஆர்.எஸ்.எஸ் எடுத்த நிலைபாடு சிவசேனாவின் நிலைப்பாட்டிற்கு எதிரானது.

8:54 AM, January 30, 2007  
Blogger சிறில் அலெக்ஸ் said...

கலாம் மேலான உங்கள் மதிப்பு பாராட்டுக்குரியது.

அப்சலுக்கு அவர் மன்னிப்பு வழங்கினாலும் இது மாறாது என்றே நினைக்கிறேன்.

//நிற்க இதனை திருவாளர் சீத்தாராம் எச்சியூறி என்கிற சிவப்பு அஃறிணை கண்டித்திருக்கிறது. //

இதுபோல (நீங்கள்) எழுதுவது (எனக்கு)ஏற்புடையதாக இல்லை.

இந்தக் கண்டனத்தையே வேறு வார்த்தைகளில் சொல்லியிருக்கலாம் என நினைக்கிறேன்.

Have a gr8 day.

9:03 AM, January 30, 2007  
Blogger S.L said...

neengaluma? ada kadavuley. thakarey mela enna kutham kandupuducheenga? namathu thamilnattukku innikku theevai thakarey mathiri veeramulla indhu thalaivarkkalthaan.

9:07 AM, January 30, 2007  
Blogger கரு.மூர்த்தி said...

கடுமையாக கண்டிக்க பட வேண்டிய விசயம் , வயதானதால் என்ன பேசுகிறொம் என்று தெரியாமல் பேசுகிறார் தாக்கரே .

9:08 AM, January 30, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

மன்னித்துக்கொள்ளுங்கள் சிறில். கம்யூனிஸ்ட்கள் -குறிப்பாக அறிவுசீவி போல ஆட்டம் போடும் யெச்சூரி போன்ற தேசதுரோகிகள்- திடீரென கலாமுக்காக பேசும் போது பற்றிக்கொண்டு வருகிறது. அந்த பேச்சில் தாக்கரே முதலில் கலாமை புகழ்ந்துள்ளார். பிறகு அவர் கூறிய வார்த்தைகள் "அப்ஸல் விஷயத்தில் ஏனோ கலாமின் நீண்ட முடி அவரது கண்ணை மறைத்துவிட்டது. ஏன் அந்த மனுவை அவரே படித்து தள்ளுபடி செய்யமுடியாதா? அதை கூட புரியமுடியாதவரா நம் குடியரசு தலைவர்? அதை மத்திய மந்திரி சபைக்கு அனுப்ப வேண்டிய அவசியம் என்ன?" என்னை பொறுத்தவரையில் கலாம் நம் தேசத்துக்கு கிடைத்த இறை பிரசாதம். 'தெய்வ சாபம் நீங்கவே நங்கள் சீர் தேசம் மீது தோன்றுவாய் வா வா வா' என பாரதி பாடிய தீர்க்கதரிசனம் உயிர்த்தெழுந்து வந்தவர் கலாம். அவரை பேசும் தகுதி நிச்சயமாக பால் தாக்கரேக்கு கிடையாது. ஆனால் இத்தகைய மகானை 'வாஜ்பாயின் ரப்பர் ஸ்டாம்ப்' என வர்ணித்த ஒரு மற்றொரு அரசியல்வியாதிதான் சீத்தாராம் யெச்சூறி.

9:14 AM, January 30, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

எஸ்.எல்,
தாக்கரே நல்ல கார்ட்டூனிஸ்டாக தமது வாழ்க்கையை தொடங்கியவர். பிறகு முழுக்க முழுக்க மாநிலவெறியை தூண்டி அரசியல் நடத்தியவர். ஈழத்தமிழரை தவிர பிற தமிழரை தாழ்வாக கருதுபவர். அவரது மாநிலவெறி அரசியலின் போது அவருக்கு துணை போனவர்கள் காங்கிரஸ்காரர்கள். ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் எப்போதுமே அவரது போக்கினை எதிர்த்து வந்துள்ளது என்பது அதிசயமான உண்மை. உதாரணமாக மரத்வாடா பல்கலைக்கழகத்திற்கு அண்ணல் அம்பேத்கர் பெயர் சூட்டுவதை எதிர்த்தது சிவசேனா. அதனை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றியது.பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டை ஆதரிப்பது ஆர்.எஸ்.எஸ்ஸின் நிலைப்பாடு. எதிர்ப்பது சிவசேனாவின் நிலைப்பாடு. ஆர்.எஸ்.எஸ். தலித் விஷயமாகட்டும் தமிழர் விஷயமாகட்டும் சிவசேனாவுக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும் பொருந்துவதில்லை. 1990களுக்கு பின்னர் தனது மாநிலவெறியை விட்டு சிவசேனா நகர்ந்ததென்று பாஜக அதனுடன் கூட்டணி வைத்தாலும் சங்கம் எப்போதுமே தெளிவான இடைவெளியை பின்பற்றியே வருகிறது. பால் தாக்கரேக்கு கலாமை குறித்து பேச முகாந்திரமே இல்லை. உண்மையில் அவர் தாக்கி பேசியிருக்க வேண்டியது சோனியா குல பினாமி கும்பல் மன்மோகன் அரசினை.

9:24 AM, January 30, 2007  
Blogger Muse (# 01429798200730556938) said...

அட விடுங்கள் அரவிந்தன் அவர்களே,

பால் தாக்கரே ஒரு கார்ட்டூனிஸ்ட். வார்த்தைகளால் கார்ட்டூன்கள் வரைந்து மக்களின் ஓட்டுக்களை வாங்குவது தவிர்த்து அவர் ஹிந்து சமுதாயத்திற்கு என்று பெரியதாக எதுவும் சாதித்துவிடவில்லை.

வயாதாகிவிட்டது. கட்சியில் பிரச்சினைகள்.

அதுவுமன்றி, ஹிந்து மதம் பற்றிய எந்தப் புரிதலும் இல்லாது தன்னை ஹிந்து மதத்தின் பாதுகாவலாரக அவர் காட்டிக்கொள்ளுகிறார். உண்மையில் அவரது நடவடிக்கைகள் எல்லாம் ஆபிரகாமிய மதங்களின் விழுமியங்களே. விக்டோரியன் மதிப்பீடுகளை பின்பற்றி காதலர் தினத்தை கொண்டாடுபவர்களை எதிர்ப்பதும், மற்ற மதத்தின் மீதும் மதத்தினர் மீதும் எள்ளலை வாரி வீசும் ஜிகாதிப் போக்கும் அவரது ட்ரேட் மார்க்குகள். இந்த வகை அரசியல் காவிக்கொடியை ஏந்தியிருந்தாலும் ஆபிரகாமிய வெறுப்புணர்வை எதிர்த்து எதிர்த்து அந்த வெறுப்பாகவே மாறிப்போய் விட்டதன் விளைவுகளே.

நீட்ஷே சொன்ன பின்வரும் விஷயம் இவருக்கு முற்றிலும் பொருந்தும்:

If you fight too long against Dragons, you become a Dragon yourself.

தன் மதம் தவிர்த்து மற்ற மதத்தினரின்மேல் வெறுப்பு உமிழ்பவர்களுக்கு மத்தியில் அப்துல் கலாம் போன்றவர்கள் தாமரை மலர்கள். மதிக்கப்படவேண்டியவர்கள்.

ஹிந்துத்துவ கட்ஷியாக அடையாளப்படுத்தப்படும் பாஜாகாவின் மிகப் பெரிய தலைவராக (அகில இந்திய வைஸ்-ப்ரஸிடென்டாக) இருப்பது முக்தார் அப்பாஸ் நக்வி என்னும் ஒரு இஸ்லாமியர். ப்ரெஸிடென்டாக இருப்பது அத்வானி. ஒரு ஹிந்துத்துவ கட்ஷியில் ப்ரெஸிடெண்டுக்கு அடுத்த பதவியில் இஸ்லாமியர் இருப்பது ஹிந்துத்துவத்தின் வெளிப்பாடு என்பதால் இதை விளம்பரப்படுத்த அவர்கள் முயலவில்லை.

நம்மூர் தமிழக முஸ்லீம்கள் முன்னேற்றக் கழகத்தில் ஒரு ஹிந்து மெம்பராகக்கூட முடியாது. முஸ்லீம் லீக்கில் என்னையோ, செந்தழல் ரவியையோ, சிறில் அலெக்ஸையோ சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். ஜாதி ஒழிய வேண்டும் என்று சொல்லுகின்ற திக மடத்தில் பார்ப்பனர்களுக்கு அனுமதியில்லை.

எல்லா மதத்தையும் மதிக்கவேண்டும் என்று சொல்லுகின்ற ஹிந்துத்துவ கோட்பாட்டை நடைமுறைப்படுத்தும் கலாம் எங்கே, ஆபிரகாமிய விழுமியங்களை கொள்கைகளாகக் கொண்டுள்ள பால் தாக்கரே எங்கே.

அப்துல் கலாமும், அவர் மதிக்கும் அன்னை ஸரஸ்வதியும், அவர் வணங்கும் அல்லாவும் பால் தாக்கரேயை மன்னிப்பார்கள். ஆனால் இப்படிப் பேசுகின்ற நடந்துகொள்ளுகின்ற பால் தாக்கரேவை ஹிந்து மதம் பற்றிய புரிதல் உள்ளவர்களும், காக்கி ட்ரவுசர்களும் மதிக்காதிருப்பர் என்பதுதான் உண்மை.

10:50 AM, January 30, 2007  
Anonymous Anonymous said...

இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களை பரப்புவோர்களே, கவனமாயிருங்கள்.

அளவற்ற அருளாளனான அல்லா உங்கள் மத்தியில் அடையாளத்தை காட்டுகிறான். இஸ்லாமியராக பிறந்தாலும் இஸ்லாத்திற்கு எதிரான சரஸ்வதி வந்தனம் போன்ற மூட பழக்கங்களை வரவேற்கின்றவனை அந்த ஹிந்துத்துவவாதிகளே கேவலப்படுத்துவதைப் பாருங்கள்.

மற்ற மதத்தினரையும், மத அடையாளங்களையும் மதிப்பது ஹராம் என்பது அறியுங்கள்.

அல்லாவே அனைத்தும் அறிந்தவன். அனைத்திலும் பெரியவன்.

11:05 AM, January 30, 2007  
Anonymous Anonymous said...

நண்பரே,

தவறு செய்கிறீர். பால் தாக்கரே அப்துல் கலாமை பாராட்டிப் பேசினார். அதன் பின் நகைச்சுவையாக இந்த விஷயத்தை சொன்னார். அவர் பாராட்டிப் பேசியவற்றை விட்டுவிட்டு இந்த ஒரு விஷயத்தை பற்றி மட்டுமே மீடியாக்கள் பேசி பெரிதுபடுத்துகின்றனர். நீங்களும் அங்கனம் செய்ய வேண்டிய அவசியம் என்ன?

இதை ஒரு நகைச்சுவை என்கின்ற அளவைத் தாண்டி எடுத்துக்கொண்டு செல்வது சரியல்ல.

நேர்மையை பெரிதாக மதிக்கின்ற நீங்கள் பால் தாக்கரே அப்துல் கலாமை பாராட்டிப் பேசினார் என்பதையும் இங்கே ஒத்துக்கொள்ள வேண்டும்.

11:11 AM, January 30, 2007  
Blogger புதுவை சரவணன் said...

பால் தாக்கரே ஒரு கார்ட்டூனிஸ்ட் என்பதால் கார்ட்டூனில் மட்டுமல்ல அவரது பேச்சிலும், எழுத்திலும் ஒரு கூர்மை இருக்கும். நமது மதிப்பிற்குரிய குடியரசுத் தலைவரை பால்தாக்கரே பலமுறை பாராட்டி பேசியிருக்கிறார். குறிப்பிட்ட இந்த நிகழ்ச்சியிலும்கூட கலாமை பாராட்டிவிட்டு பயங்கரவாதி அப்சல் விஷயத்தில் அப்துல் கலாமை விமர்சித்திருக்கிறார். அப்சல் விஷயத்தில் அப்சலின் மனைவியை சந்தித்து போன்ற கலாமின் நடவடிக்கைகளை பா.ஜ.க உட்பட பலர் விமர்சித்திருக்கிறார்கள். அதையே நக்கலான பாணியில் அவரது ஹேர் ஸ்டைலை ஒப்பிட்டு விமர்சித்திருக்கிறார் பால் தாக்கரே. பால் தாக்கரே என்றால் மீடியாவுக்கு அல்வா சாப்பிடுவதுபோல. அவர் முஸ்லிமுக்கு எதிராக அதுவும் தேசமே மதிக்கும் ஒரு மாமனிதருக்கு எதிராக கமெண்ட் அடித்தால் விட்டுவிடுவார்களா? அதனால் தான் மீடியா தாக்கரே கலாமை பாராட்டியதை விட்டுவிட்டு அவர் கமெண்ட் அடித்ததை மட்டும் வெளியிட்டிருக்கிறது.
அப்துல் கலாமை கம்யூனிஸ்டுகள் பலமுறை கடுமையாக விமர்சித்திருக்கிறார்கள். அணுகுண்டு வெடித்தையே கடுமையாக எதிர்த்தவர்கள்தானே அவர்கள். சோனியாவை பிரதமராக்க ஒத்துக்கொள்ளததால் அவர் மீது சோனியா கோபமாக இருக்கிறார். பீகார் விஷயத்தில் கலாமின் நடவடிக்கையால் லல்லுவும் அவர் மீது எரிச்சலில் இருக்கிறார். பகவத் கீதை படிப்பதாலும், சரஸ்வதி வந்தனம் பாடுவதாலும் முஸ்லிம்கள் அவர் மீது கோபமாக இருக்கிறார்கள். இப்படி கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ், லல்லு, முஸ்லிம்கள் என எல்லோரின் எதிர்ப்புகளையும் அவர் பெற்றிருப்பதால் கலாமுக்கு மீண்டும் குடியரசுத் தலைவர் ஆகும் வாய்ப்பு இல்லை என்றே எல்லோரும் கருதுகிறார்கள். மீடியாவும் அப்படியே எழுதி வருகிறது. இந்த நிலையில் தாக்கரே அப்துல் கலாமை தான் எதிர்த்தால் மற்றவர்கள் ஆதரிப்பார்கள். அதனால் மீம்டும் கலாம் ஜனாதிபதி ஆகலாம் என்று நினைத்து கமெண்ட் செய்திருக்கலாம் என்று நினைக்கிறேன். ஒருவகையில் தாக்கரே கலாமுக்கு மட்டுமல்ல நாட்டுக்கே நல்லது செய்திருக்கிறார் என்றே நினைக்கிறேன்.
பால்தாக்கரே காங்கிரஸோடு இருக்கும் வரை மாநிலவாதம் பற்றியே பேசி வந்தார். பா.ஜ.கவோடு கூட்டணி. ஆர்.எஸ்.எஸ்ஸோடு நட்பு என்று வந்த பிறகுதான் மாநிலவாத்தை கைவிட்டு இந்துத்துவா பற்றி பேச ஆரம்பித்தார். என்ன இருந்தாலும் எல்லோரும் போற்றும் கலாமை விமர்சித்தை தாக்கரே தவிர்த்திருக்கலாம்.

6:04 AM, January 31, 2007  
Blogger வாக்கீசர் said...

அன்பு நண்பரே,
பால்தாக்கரேவின் விமர்சனத்தில் தவறில்லை என நினைக்கிறேன். மவுனம் சம்மதம் என்பது பலரது கருத்து. ஒரு விஷயத்தில் பதில் சொன்னால் அதற்கு ஒரு அர்த்தம் மட்டுமே. பதில் சொல்லவில்லை என்றால் அதற்கு பல அர்த்தங்கள். கலாமின் மவுனத்தில் பல அர்த்தங்கள் உள்ளதாக மக்கள் நினைப்பது இயல்புதானே. இதற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டியது அப்துல் கலாமே. ஆனால் அவரோ மவுனத்தை அனுஷ்டித்து சந்தேகத்தை ஊர்ஜிதமாக்கிறார். மவுனம் கலைவாரா அப்துல் கலாம்?
விஞ்ஞானி அப்துல் கலாம் பாராட்டுக்குரியவர். இதுவரை குடியரசுத்தலைவர் அப்துல் கலாமும் பாராட்டுக்குரியவராகவே செயல்பட்டு வந்தார். மதிப்பிற்குரியவர் என்பதால் அவர் செயல்கள் எல்லாம் நியாமாகி விடாது. இங்கு பால் தாக்கரேவின் நோக்கம் அவரது செயலே விமர்சிப்பதே. தனிப்பட்ட முறையில் அவரை தாக்குவதாக ஆகாது. இது ஒவ்வொரு ஹிந்துவும் கேட்க வேண்டிய கேள்வியே.

6:16 AM, January 31, 2007  
Blogger மரைக்காயர் said...

//உண்மையில் அவரது நடவடிக்கைகள் எல்லாம் ஆபிரகாமிய மதங்களின் விழுமியங்களே. விக்டோரியன் மதிப்பீடுகளை பின்பற்றி காதலர் தினத்தை கொண்டாடுபவர்களை எதிர்ப்பதும், மற்ற மதத்தின் மீதும் மதத்தினர் மீதும் எள்ளலை வாரி வீசும் ஜிகாதிப் போக்கும் அவரது ட்ரேட் மார்க்குகள். இந்த வகை அரசியல் காவிக்கொடியை ஏந்தியிருந்தாலும் ஆபிரகாமிய வெறுப்புணர்வை எதிர்த்து எதிர்த்து அந்த வெறுப்பாகவே மாறிப்போய் விட்டதன் விளைவுகளே. //

அடக்கடவுளே, பால் தாக்கரேயை கண்டிக்கிற பதிவாக இருந்தாலும் இஸ்லாத்தை பழிக்காமல் இவங்களால இருக்கவே முடியாது போலிருக்கே!

நல்லா இருங்கடே!

6:50 AM, January 31, 2007  
Blogger Muse (# 01429798200730556938) said...

மரைக்காயரே,Muse (# 5279076) said...

அவரது நடவடிக்கைகள் எல்லாம் ஆபிரகாமிய மதங்களின் விழுமியங்களே

மற்ற மதத்தின் மீதும் மதத்தினர் மீதும் எள்ளலை வாரி வீசும் ஜிகாதிப் போக்கும்

ஆபிரகாமிய வெறுப்புணர்வை


மரைக்காயர் said...

அடக்கடவுளே, பால் தாக்கரேயை கண்டிக்கிற பதிவாக இருந்தாலும் இஸ்லாத்தை பழிக்காமல் இவங்களால இருக்கவே முடியாது போலிருக்கே!

நல்லா இருங்கடே!இவைகள்தான் இஸ்லாம் என்பதை ஒத்துக்கொண்டதற்கும், இதை புரிந்து கொண்டவர்கள் நலமுடன் வாழ வாழ்த்தியதற்கும் நன்றிகள் !

8:23 PM, January 31, 2007  
Blogger மரைக்காயர் said...

//இவைகள்தான் இஸ்லாம் என்பதை ஒத்துக்கொண்டதற்கும், இதை புரிந்து கொண்டவர்கள் நலமுடன் வாழ வாழ்த்தியதற்கும் நன்றிகள் ! //

எதிர் தரப்பினராக இருந்தாலும் நல்லா இருங்கடேன்னு வாழ்த்த முஸ்லிமால முடியும். ஆனால் மற்ற மதத்தின் மீதும் மதத்தினர் மீதும் எள்ளலை வாரி வீசுறது யாருடைய போக்கு?

9:02 PM, January 31, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

தவறு செய்பவர் யாராக இருந்தாலும் -தன் மதத்தவனோ கட்சியினனோ - தட்டிக் கேட்பதும் கண்டிப்பதும் இந்துத்வவாதிகளின் பண்பு. அதைப்போல அவர் இவர் எனாது நற்செயல் செய்பவர் யாராக இருப்பினும் அவரை போற்றுதலும் இந்துத்வவாதிகளின் பண்பு. ஆனால் சவுதிக்கும் ஜிகாதிக்கும் வக்காலத்து வாங்குவதும், பார்ப்பன எதிர்ப்பு என்கிற பெயரில் இந்து தருமத்தை முத்திரை குத்துவதும், பிற தருமங்களை அறிய மூயற்சிக்காமல், அதன் தத்துவார்த்த பார்வைகளை விளங்கிக்கொள்ள மறுத்து, புராணம் ஒரு குறியீட்டு மொழி என்கிற அடிப்படை பால பாடத்தைக் கூட மனதிலேற்றிட மறுத்து 'நீ கும்பிடும் சாமி பன்றி' என்று பேசிடும் மனப்பாங்கு யாருடையது என நினைக்கிறீர்கள் மரைக்காயர்.

1:00 AM, February 01, 2007  
Blogger சுந்தர் / Sundar said...

பால்தாக்கரே - கண்டிக்கபடுவது சரியே ... இதுல நான் உங்க கட்சி .

//இதில் கீழ்த்தர தேசவிரோதியாக நடந்திருப்பது சோனியா வீட்டு நாய்க்குட்டியாக நடக்கும் மன்மோகன்சிங் என்கிற கைகட்டி நிற்கும் கோழையின் அரசுதான். //

//இதனை திருவாளர் சீத்தாராம் எச்சியூறி என்கிற சிவப்பு அஃறிணை கண்டித்திருக்கிறது. இந்த இரட்டைநாக்கு பிறவிதான் முன்னர் கலாமை வாஜ்பாயின் ரப்பர் ஸ்டாம்ப் என வர்ணித்தது.//

மேல் நீங்கள் கூறிப்பிட்டு இருபதற்கு , நான் உங்களை கண்டிக்கிறேன்

1:08 AM, February 01, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

என்னுடைய பதிவுகளில் ரெகுலராக 'அல்லாவின் திருப்பெயரால்' என தொடங்கி நீளமாக ஆங்கிலத்தில் அனானியாக ஒரு இஸ்லாமிய சகோதரர் பின்னூட்டம் இடுகிறார். தன்னுடைய மின்னஞ்சலையும் கொடுத்து 'இஸ்லாம் குறித்த விளக்கங்களை' அவரிடம் கேட்டு தெரிந்து கொள்ள அழைத்திருந்தார். நீங்களும் கவனித்திருப்பீர்கள். அந்த சகோதரர் அப்துல் கலாமை ஏறத்தாழ பெயர்தாங்கி என பொருள் பட அழைத்திருந்தார். மார்க்கத்துக்கு மாறியவன் எனும் பெயருடைய நண்பர் இன்னமும் கடுமையாக அவரை விமர்சித்திருந்தார். குங்குமம் அணியவும், மாதா தேவாலயத்தில் மண்டியிட்டு வணங்கவும், இராமேஸ்வர கோவில் வழிபாடும் மசூதி தொழுகையும் ஒரே இறைக்குதான் செய்யப்படுகின்றன என கூறும் ஆன்மிக தெளிவும், அனைத்து பாரத மக்களையும் பாரத அன்னையை பாரினில் உயர்த்திடுவதையே இலட்சிய கனவாக கொண்ட ஒரு மகாமனிதனை பால் தாக்கரே போன்ற அரசியல்வாதி பேசக்கூட தகுதியற்றவர் என நான் கருதுகிறேன். அப்துல் கலாம் வராது வந்த மாமணி. இந்த தேசம் மீண்டும் மகத்துவம் அடைய நம் முன்னோர் செய்த தவமோ நாம் எப்போதோ செய்த புண்ணியமோ இந்த மனிதர் வாழ்கிற காலத்தில் நாம் வாழ்வதற்கே பாக்கியம் செய்திருக்க வேண்டும். இந்துவாக இருந்தாலும் இஸ்லாமியனாக இருந்தாலும் இந்த மகத்தான மனிதரை நம் குழந்தைகளுக்கு ரோல் மாடலாக நாம் அளிக்க வேண்டும்.

1:12 AM, February 01, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

////இதில் கீழ்த்தர தேசவிரோதியாக நடந்திருப்பது சோனியா வீட்டு நாய்க்குட்டியாக நடக்கும் மன்மோகன்சிங் என்கிற கைகட்டி நிற்கும் கோழையின் அரசுதான். //

//இதனை திருவாளர் சீத்தாராம் எச்சியூறி என்கிற சிவப்பு அஃறிணை கண்டித்திருக்கிறது. இந்த இரட்டைநாக்கு பிறவிதான் முன்னர் கலாமை வாஜ்பாயின் ரப்பர் ஸ்டாம்ப் என வர்ணித்தது.//

மேல் நீங்கள் கூறிப்பிட்டு இருபதற்கு , நான் உங்களை கண்டிக்கிறேன்//
பெரிய தவறுதான் சுந்தர். மன்னித்துக்கொள்ளுங்கள். நான் கடுமையாக கூறியதை பின்வாங்கிக்கொள்கிறேன். எனக்கே வருத்தமாகவும் அவமானமாகவும் இருக்கிறது. மன்மோகன் அரசை நாய்குட்டி என கூறியதற்கும், சீதாராம் யெச்சூரியை அஃறிணை என கூறியதற்கும் மன்னித்துக்கொள்ளுங்கள். நான் நாய்குட்டிகளையோ அல்லது அஃறிணை பொருட்களையோ இந்த ஒப்பீட்டின் மூலம் அவமானப்படுத்த நினைக்கவில்லை என்றாலும் அவ்வாறு ஒப்பிட்ட இயலாத இழிவுகளான மன்மோகன் சிங் அரசையும், எதற்கும் பிரயோசனம் இல்லாத மார்க்சிஸ்ட்களையும் நாய்குட்டிகளோடும் பல பயன்பாடுகளை உடைய அஃறிணைகளோடும் ஒப்பிட்டது மன்னிக்கமுடியாத தவறுதான். நன்றாக கண்டியுங்கள். சுட்டிக்காட்டியதற்கு நன்றி.

1:20 AM, February 01, 2007  

Post a Comment

<< Home