Wednesday, March 14, 2007

ஏசுவின் வரலாற்றுத்தன்மையும் அப்பாலும்


ஜோ என்கிற வலைப்பதிவாளர் ஒரு நூலை எனக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கூறியிருக்கிறார். ஏசு என்பவர் கற்பனை என நான் சொன்னது அவரை மிகவும்
வருத்தப்படுத்தியிருக்கும் போலிருக்கிறது. எனவே கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட 'இயேசு என்றொரு மனிதர் இருந்தார்' நூலை எனக்கு அனுப்ப வேண்டும் என கூறியிருக்கிறார்.
வாழ்க அவர் என் மீது கொண்டிருக்கும் பாசம். ஆனால் விசயம் என்னவென்று சொன்னால் ஏசு குறித்த புனைவுகளும் சடங்குகளும் நிறுவனமயமாக்கப்பட்ட கால கட்டம் முதல்
இன்றைய தேதி வரை அன்னாரைக் குறித்து கிறிஸ்தவ விவிலியத்துக்கு அப்பால் எவ்வித ஆதாரமும் இல்லை என்பதுதான் உண்மை. சேவியர் தாம் எழுதிய இந்த நூலைக் குறித்து
அதன் ஆசிரியர் என்ற முறையில் பெருமைப்பட்டுக்கொள்ளலாம். "என்னுடைய படைப்புகளில் எனக்கு மிகவும் பிடித்தமான நூல் என்று இதைச் சொல்வேன், காரணம் இந்த நூலை எழுதுவதற்காக அமெரிக்காவின் பல நூலகங்களில் இரவு பகல் பாராமல் தவம் கிடந்து வாசித்திருக்கிறேன்." என அவரே கூறியுள்ளார். ஆனால் அவர் அப்பதிவில் கொடுத்துள்ள
பின்னட்டை அப்படி தீர்க்கமான ஆராய்ச்சி பார்வையை ஒன்றும் வைக்கவில்லை. ஆராதனைப் பார்வையைத்தான் முன்வைக்கிறது. அதை நான் தவறெனக் கூறவில்லை. அவர் யூதகுல மக்களின் வாழ்க்கையை சீரமைக்கும் பணியை மேற்கொண்டதாகவும், அக்கால கட்டத்தில் மௌடீகமும் பூர்ஷ்வாத்தனமும் மேலோங்கி இருந்ததாகவும், இயேசுவின் குரல் அமைதி மற்றும் பகுத்தறிவினை கூறியதாகவும் எனவே அவர் குலத்துரோகியாக கருதப்பட்டதாகவும் எனவே தான் அவர் மரணத்தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் இந்நூல் கூறுகிறது.


1960களில் கேரளா மற்றும் கன்னியாகுமரி மாவட்ட பகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சி 'மாஸ்கோவில் ஏசு' என ஒரு துண்டு பிரசுரத்தை வெளியிட்டது. (என்னிடம் வெகுகாலம் இருந்த இந்த பிரசுரம் எங்கோ தொலைந்து போயிற்று. பழைய சகாக்கள் இதனை வைத்திருந்தாலும் வைத்திருக்கலாம். சிவப்பட்டையில் ஒளிரும் சிலுவை போட்ட பிரசுரம்.). ' அமெரிக்காவின் பல நூலகங்களில் இரவு பகல் பாராமல் தவம் கிடந்து' எழுதிய சேவியரின் நூலினை நான் படிக்கவில்லை. ஆனால் பின்னட்டை கூறுகிற கதைக்கருவே உள்ளே பக்கங்களில் விரித்தோதப் பட்டிருக்குமெனில் 'மாஸ்கோவில் ஏசு கிறிஸ்து'வின் விளக்கவுரையாகவே அது அமைந்திருக்குமென கருதுகிறேன். ஏசு உயிர்த்தெழுந்ததாக கூறும் கிறிஸ்தவ நம்பிக்கையை கூறிவிட்டு சேவியர் மறு நிமிடமே மூன்று நாட்களில் கிறிஸ்தவ நம்பிக்கைகள் அனைத்தும் உயிர்த்தெழுந்ததாக கொள்ள வேணுமெனச் செப்புவது அவரது நூலின் முன்னட்டையில் 'மிகைக்கலப்பற்ற ... வாழ்க்கை வரலாறு' எனக்கூறுவதனை எள்ளி நகையாடி மறுதலிக்கிறது என்பதுடன் இந்த நூலின் வரலாற்று நேர்மைக்கும் கட்டியம் கூறுகிறது. கிழக்கு பதிப்பகம் ஏதோ மிகவும் தரமான புத்தகங்களை வெளியிடும் நிறுவனம் என்பதிலும் எனக்கு ஐயமுண்டு. தமிழ்நாட்டு பதிப்பகங்களில் சில பிரகடனப்படுத்தப்படாத பத்வாக்கள் உண்டு. கிறிஸ்தவத்தை ஆழமாக சர்ச்சைக்கோ விவாதத்திற்கோ உள்ளாக்கும் நூல் எதுவும் வெளி வந்திட முடியாது. ஓரளவு விமர்சனத்தன்மையுடன் கிறிஸ்தவத்தின் மையத்தை தொடாது ஏதாவது ஒரு நூல் வந்துள்ளதென்றால் அது சாதீயமும் கிறிஸ்தவமும் குறித்த ஒரு நூல் மட்டுமே. ஒரு புத்தக வெளியீட்டாளர் என்னிடம் கூறியது : "கிறிஸ்டியானிட்டியை தாக்குற மாதிரி கட்டுரைகள் வேண்டாம் சார். அது லைப்ரரி காப்பி போகமுடியாத மாதிரி அவுங்க செஞ்சிருவாங்க." கூறியவர் தனது அலமாரியில் இருந்து ஒரு கத்தையை எடுத்துக் காட்டினார். ஒரு கிறிஸ்தவ நண்பர் 'ஞான விவிலியங்களை' (Gnostic Gopels) மொழி பெயர்த்திருந்தார். "இதையே நான் வெளியிடாண்டாம்னு முடிவு பண்ணிட்டேன். கடனைவாங்கி நடத்துற தொழில் சார் இது. அவுங்களுக்கு எங்க அடிக்கணும்னு தெரியும்." என்றார். அவுங்க என்பது யார் என்பதனை ஊகங்களுக்கு விட்டுவிடுகிறேன். அண்மையில் உலகமெங்கும்
ஒளிபரப்பப்பட்ட கிறிஸ்துவின் அடக்க அறை குறித்த விவரணப்படத்தை இந்தியாவில் தடை செய்த கத்தோலிக்க சபையின் வலு அதன் பாசிச பரிமாணத்துக்கு மற்றொமொரு
எடுத்துக்காட்டு.


முன்பு நான் எழுதி பின் பல அலுவல்களாலும் மறதியாலும் எழுதாமல் நிறுத்திய இரு கட்டுரைத் தொடர்களை மீள் தொடர என்னை தூண்டிய முன்னிலையாக சகோதரர் ஜோவின்
செயல் அமைந்தது. அதற்கு நான் அவருக்கு நன்றி செலுத்தியே ஆகவேண்டும். ஏசுவின் வரலாற்று/தொன்மப் பின்னணியினை ஆராய்வதுடன் அதன் பின்னணியிலிருக்கும் அரசியலையும் அதிகார அமைப்பையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். கிறிஸ்தவத்தின் பிற மத உரையாடல்கள் உண்மையில் உரையாடல்கள் அல்ல மாறாக ஒரு வழிபாதையே ஆகும். (இது மேல்தள இறையியலாளர்களாலேயே பலமுறை ஒப்புகொள்ளப்பட சமாச்சாரம்) எனவே இக்கட்டுரை தொடர் எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதப்படும். கிறிஸ்தவத்தின் தொன்ம பரிமாணங்கள், யூத-கிறிஸ்தவ உறவுகள், கிறிஸ்தவ-பாரத தருமங்களின் சந்திப்புக்கள், மானுட வரலாற்றில் கிறிஸ்தவத்தின் பங்கு (இனப்படுகொலைகள் என்றில்லை மார்ட்டின் லூதர் கிங்கும் பிஷப் டுட்டுவும் கூட கிறிஸ்தவ இறையியலின் வெளிப்பாடுகள்தாம்.) என பல விசயங்களை இக்கட்டுரைத் தொடர் மூலம் காட்ட உத்தேசிக்கின்றேன்.

யூதத்தின் வாக்களிக்கப்பட்ட மெசையாவா ஏசு?
ஏசு புனைவு யூத வெறுப்பியலின் ஊற்றுக்கண்ணாக விளங்கியது: ஏசு யூதத்தின் வாக்களிக்கப்பட்ட மெசையாவாக இருக்க மூடியுமா?

இந்த நூல் முன் வைக்கும் யூத சமுதாய சித்திரம் விசித்திரமான ஒன்று: மௌடீகமான பூர்ஷ்வாத்தனமானதாக யூத சமுதாயத்தை அது காட்டுகிறது. பகுத்தறிவையும் அமைதியையும் வெறுத்த சமுதாயமாக எனவே ஏசுவை வெறுத்து அவர் கொலைக்கு காரணமான சமுதாயமாக அது யூத சமுதாயத்தினை சித்திகரிக்கிறது. வாஸ்தவத்தில் நிறுவன கிறிஸ்தவத்தின் ஏசு புனைவிலும் யூத சமுதாயம் இவ்வாறே சித்திகரிக்கப்படுகிறது. ஆனால் யூத சமுதாயம் யூத வரலாறு என்ன கூறுகிறது அக்கால கட்டத்தைக் குறித்து என்பது இந்த கிறிஸ்தவ மேன்மையாளர்களால் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதே இல்லை. யூத நெறியின் திருமறையை பழைய ஏற்பாடு எனக் கூறுவதிலேயே கிறிஸ்தவத்தின் அகங்கார பயணம் தொடங்கி விடுகிறது எனலாம். 'உன்னைக் குறித்து நான் கூறுவதுதான் நீ' என்கிற பிறரை தீர்ப்பிடும் தன்மை. 'ஆண்டவன் உன்னோடு செய்த ஏற்பாடு பழையதாகிவிட்டது.' எனும் கருத்துருவாக்கத்தின் வெளிப்பாடே 'பழைய ஏற்பாடு' எனும் பதத்தில் உறைந்திருக்கும் மமதையான தீர்ப்பீடு ஆகும். என்றாலும் ஏசு பிறரை தீர்ப்பிடக்கூடாது என கூறியதாக கூறுவது இம்மதத்தின் பெயரிடும் விநோதத்திலேயே மறுக்கப்பட்டிருப்பதை நாம் உணர வேண்டும். ஏசு ஒரு கற்பனை புனைவு என்பதனை பலர் கூறியுள்ளனர் என்பதுடன் அன்று முதல் இன்று வரை குறைந்தது 1700 ஆண்டுகளுக்கும் மேலாக கிறிஸ்தவ சபை ஏசு குறித்து போலித் தரவுகளை உருவாக்குவதை ஒரு கலையாகவே செய்து வந்துள்ளது. யூத இறையியலாளர்கள் தம் சமுதாயத்தின் இத்தகைய சித்திகரிப்பை தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளார்கள் என்ற போதிலும் ஏழை சொல் அம்பலம் ஏறுவதில்லை என்ற கதையாக கடந்த ஐம்பதாண்டுகளுக்கு முன்பு வரை அவர்களது வார்த்தைகள் எடுபடவே இல்லை. அதே நேரத்தில் அவர்களது இறைநூல் கிறிஸ்தவ மொழிபெயர்ப்புகளில் அருமையான நுணுக்கமான மாறுதல்களுடன் ஏசுவுக்கான முன்னறிவிப்பாக மாற்றப்பட்டது. ஏசுவே வாக்களிக்கப்பட்ட மெசையா என்பதற்கான ஆதாரங்களாக இன்றைக்கும் மிசிநரிகளால் முன்வைக்கப்படும் தரவுகள் இவ்வாறு
மாற்று மதத்தவரின் நூலை தகாத முறையில் தவறாக மாற்றி அமைத்து செய்யப்படும் பிரச்சாரங்களே ஆகும். இது குறித்து யூத அறிஞர்கள் மிக தெளிவான ஆதாரங்களை ஒரு
இணைய தளத்தில் முன் வைத்துள்ளனர். அதனை இங்கே காணலாம்.ஏசு ஏன் யூதத்தின் வாக்களிக்கப்பட்ட மெசையா இல்லை


இந்த இணைய தளத்தில் வேண்டிய அளவு தரவுகள் உள்ளன. உதாரணமாக 'அபிஷேகிக்கப்பட்டவன்' என தானியேல் 9:25 கூறுகிறதை கிறிஸ்தவ விவிலியத்தில் 'பிரபுவாகிய மெசையா' என மாற்றி அதனை தொடர்ந்து வருகிற வசனங்களை ஏசு குறித்த முன்னறிவிப்பாக மாற்றியுள்ளமையை என்னவென்பது! ஆனால் அதே ஹீப்ரு வார்த்தை 2-சாமுவேல் 1:21 இல் (அபிசேகிக்கப்பண்ணப் படாதவன் போல) என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆக, இது கிறிஸ்தவ மொழி பெயர்ப்பாளர்கள் ஹீப்ரு தெரியாததால் செய்ததது அல்ல. மாறாக திட்டமிட்டு வார்த்தை திரிப்பு விளையாட்டில் இறங்கியதே ஆகும். யூத அறிஞர்களால் வெளிப்படுத்தப்பட்டுள்ள இந்த மோசடி முன்னறிவிப்புகள் இந்தியாவில் இன்னமும் ஆன்மீக அறுவடைக்கு
பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பதனை சிந்தித்தால், இந்த யூத இணைய தளம் கூறுகிற விசயங்களை நாம் ஏன் தமிழ்படுத்தி துண்டு பிரசுரங்களாக மற்றும் சிறு நூல்களாக
விநியோகிக்க வேண்டுமென தெரியவரும். இந்த மொழிபெயர்ப்பு மோசடி குறித்து முழுமையானதோர் கட்டுரையை கீழே படிக்கலாம்: மெசையா என்பதன் வேர் பொருளே
அபிசேகிக்கப்பட்டவர் என சிலர் வாதிடலாம். ஆனால் வாக்களிக்கப்பட்ட மெசையா என்பதனை குறிக்கும் பதத்திற்கும் வெறுமனே அபிசேகிக்கப்பட்டவன் (அரசன் கூட அவ்வாறுதான்) எனும் பதத்திற்கும் நிச்சயமாக வேறுபாடு உண்டு என்பதனை யூத அறிஞர்கள் 2-சாமுவேல்1:21 ஐயும் தானியேல் 9:25 ஐயும் ஒப்பிட்டு காட்டி விளக்குகின்றனர். யூத சம்பிரதாயத்தின் படி தானியேல் இறை-அறிவிப்பாளர் (prophets) வரிசையிலேயே சேர்க்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. (பார்க்க: விக்கிபீடியா மெசியா:
http://en.wikipedia.org/wiki/Messiah

விக்கிபீடியா யூத மெசியா: http://en.wikipedia.org/wiki/Jewish_Messiah)

அபிசேகிக்கப்பட்டவரும் வாக்களிக்கப்பட்ட மெசையாவும் கிறிஸ்தவ விவிலியத்தின் மொழிபெயர்ப்பு சரியா?: யூத
அறிஞர்களின் விளக்கம்டான் ப்ரவுன் சர்ச்சையின் ஆழமான வேர்கள்:
அண்மையில் வெளியாகி மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தி தடைகளைச் சந்தித்துள்ள திரைப்படம் 'தி டாவின்சி கோட்'. ஏசு கிறிஸ்து குறித்து அறியப்படாத சில கதையாடல்களை
இத்திரைப்படமும் இத்திரைப்படத்தின் அடிப்படையான டான் ப்ரவுன் என்பவரின் நாவலும் முன்வைக்கின்றன. இக்கதையாடல்கள் நிறுவன கிறிஸ்தவத்தின் தொடக்கம் முதலே
இருப்பவை. நிறுவன கிறிஸ்தவ அமைப்புகளால் கடுமையாகத் தண்டிக்கப்பட்டு அடக்கி அழிவுக்கு உள்ளானவை. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம் முதல் அவை மேற்கத்திய அறிவுலகில் மட்டுமே ஓரளவு பேசப்பட்டவை. 1970களில் மேற்கில் ஏற்பட்ட நிறுவன எதிர்ப்பு அலைகளின் போது பொது பிரக்ஞைக்குள்ளும் புகுந்தவை. உளவியலாளர் கார்ல் உங் மற்றும் தொன்மவியலாளர் ஜோசப் கேம்பெல் ஆகியோரின் எழுத்துக்கள் இந்த மாறுபட்ட கிறிஸ்தவ கதையாடல்களை பிரபலப்படுத்தின. நிறுவன கிறிஸ்தவ கண்ணோட்டத்திற்கு மாறுபட்ட கதையாடல்களை கொண்ட ஞான விவிலியங்கள் (Gnostic Gospels) குறித்த சிறந்த ஆராய்ச்சியாளராக எலைன் பேகல்ஸ் எனும் பெண்மணி அறியப்படுகிறார்.எலைன் பேகல்ஸ்

'ஸ்டிக்மட்டா' எனும் ஆங்கிலத் திரைப்படம் இந்நூல்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட பிரபல திரைச்சித்திரமாகும்.

ஆனால் மிகுந்த சர்ச்சைகளுடன் உலகின் கவனத்தையே
கிறிஸ்தவத்தின் இந்த அறியப்படாத பரிமாணங்கள் பக்கம் திருப்பியுள்ள பெருமை 'தி டாவின்சி கோட்' திரைப்படத்தையும் நாவலாசிரியர் டான் ப்ரவுனையுமே சாரும். ஏதோ
பரபரப்பினை ஏற்படுத்தி பிரபலமடைவதாக 'டாவின்ஸி கோட்' குறித்து கூறுகிற நண்பர்கள் சில விசயங்களை இங்கே கோட்டைவிடுகிறார்கள்.

மார்க்ரெட் ஸ்டார்பேர்ட்

மேலோட்டமாக ஏசு மேரி மேக்தலைனை மணந்துகொண்டது குறித்ததாக இந்த திரைப்படமும் நாவலும் அறியப்பட்டாலும், அதன் அடி நீரோட்டம் மேலும் வலுவான ஒன்றாகும்.
இறைமையின் பெண்மை தன்மை கிறிஸ்தவத்தில் முழுமை அடையவில்லை என்பதனால் எழும் ஒரு பூர்த்தியடையாத ஆன்மிகத் தேவையினையே இந்நூல் வெளிப்படுத்துகிறது. இந்நாவல் எழுத அடிப்படை ஆதாரங்களாக அமைந்த நூல்களில் ஒன்றின் ஆசிரியை மார்க்ரெட் ஸ்டார்பேர்ட் என்பவர். இவருடன் இரண்டாண்டுகளுக்கு முன்னர் இக்கட்டுரையாளன் நடத்திய உரையாடல் திண்ணை இணைய இதழில் (திண்ணை.காம். மார்ச் 4 2005) வெளியாகியிருந்தது. அவ்வுரையாடலில் தற்போதைய இச்சர்ச்சைகளை வரவேற்று ஸ்டார்பேர்ட் பின்வருமாறு கூறியிருந்தார்: "ஆயிரமாண்டுகள் பாலைவன வாசத்திற்கு பின்னர் மேரி மகதலேனை மீண்டும் வரவேற்கும் ஓர் சபையை நான் எதிர்நோக்குகிறேன். கார்டினல் ராட்ஸிங்கர் (இன்றைய போப்) அவளை என்றைக்கும் வரவேற்கப்போவதாக நான் நினைக்கவில்லை. ஆனால் மக்கள் கட்டாயமாக வரவேற்பார்கள். அதற்கு சில காலமாகலாம். ஆனால் மேரி மகதலேன் ஏசு கிறிஸ்து ஆகியோரது மண-இணைவு மையமாக - சில அண்மை நாகரிகங்களின் தொன்மங்களுடன் இணைத்தன்மையுடன் (தாமுஸ் ஓஸிரிஸ் அடடீனிஸ் மற்றும் டயோனிஸ்)-
விளங்குவதற்கு ஆதாரங்கள் உள்ளன...."
இது மற்றோர் கேள்வியையும் எழுப்புகிறது. ஏசுவின் வரலாற்றுத்தன்மை குறித்தது அது. ஸ்டார்பேர்ட் கூறும் 'தொன்மங்களின்
இணைத்தன்மை' என்பது கிறிஸ்துவுக்கு முந்தைய காலகட்டங்களைச் சார்ந்த பல புராணக்கதைகளுடன், கிறிஸ்துவ விவிலியத்தை ஒப்பு நோக்குகையில் மீண்டும் மீண்டும்
உறுதிப்படுகிறது.


இரண்டு உதாரணங்களை மட்டும் இங்கு காணலாம்.

 • இனானா பெண் தெய்வ வழிபாட்டின் பலகூறுகளை ஏசு புனைவுக்குள் கண்டறியப்பட முடியும்

 • 'நரிகளுக்குக் குழிகளும், காயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மனுஷகுமாரனுக்கோ தலை சாய்க்க இடமில்லை' என்று ஏசு கூறியதாக லூக்கா (9:58) கூறுகிறது. ஏசுவுக்கு பல நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட சுமேரிய பண்பாட்டினைச் சார்ந்த தெய்வமான இனானாவின் வேதனைப்பாடல் எனும் துதி "பறவைகளுக்கு கூடுகள் உண்டு ஆனால் எனக்கோ...விலங்குகளுக்கு தலைசாய்க்க ஓர் இடமுண்டு, ஆனால் எனக்கோ - எனக்கு தலை சாய்க்க ஓர் இடமில்லை" எனக் கூறுகிறது. (சாமுவேல் கிரேமரின் 'From the Poetry of Sumer', பக். 93 கலிபோர்னிய பல்கலைக்கழக வெளியீடு 1979) • வழிகாட்டிய விண்மீன் அல்ல சோதிட கிரக நிலை குறித்த கதையே மறு உருவாக்கம் செய்யப்பட்டது

 • 'நியூ சயிண்டிஸ்ட்' எனும் பிரபல அறிவியல் பத்திரிகை டிசம்பர் 2001 இல் ஒரு செய்தியினை வெளியிட்டது. ஏசுவின் பிறப்புடன் தொடர்புபடுத்திக் கூறப்படுவது பெத்லகேம்
  விண்மீன். இது வழிகாட்ட கீழ்திசை ஞானிகள் குழந்தை ஏசுவை தரிசிக்க வந்ததாக விவிலிய நம்பிக்கை. ஆனால் உண்மையில் இது வானவியலுடன் தொடர்புடைய உண்மை நிகழ்வு
  அல்ல என்றும், பாகன் (pagan) நம்பிக்கை மற்றும் சோதிடவியல் ஆகியவை சார்ந்ததோர் நிகழ்வே என்றும் ஜோசியத்தையும் ஏசு பிறப்பு கதையும் தொடர்பு படுத்தி அந்நாளைய ரோமில் பிரபலமடைந்த புனைவே இவ்வாறு இணைந்துள்ளது. இந்த உண்மை ஆரம்பக்கால கிறிஸ்தவ தலைவர்களால் மறைக்கப்பட்டு பெத்லகேம் விண்மீன் குறித்த புனைவு
  உருவாக்கப்பட்டதென்றும் அறிவியலாளரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அப்பத்திரிகை வெளியிட்டது. ஆக, டான் ப்ரவுன் கிறிஸ்தவத்தின் உருவாக்கத்தின் அடிப்படையில் பல
  கிறிஸ்தவமற்ற மதங்களின் சேர்க்கை உள்ளதென்பதைக் கூறியுள்ளது, மூழ்கியுள்ள பெரும் பாறையின் ஒரு சிறிய நுனியே ஆகும்.

(தொடரும்)

23 Comments:

Blogger ஜோ/Joe said...

//ஏசு என்பவர் கற்பனை என நான் சொன்னது அவரை மிகவும்
வருத்தப்படுத்தியிருக்கும் போலிருக்கிறது.//
கண்டிப்பாக இல்லை .உலகில் பலகோடி பேர் இப்படி இருக்கலாம் .எல்லோருக்காகவும் நான் வருத்தப்பட்டுக்கோண்டிருக்க முடியாது .இதில் வருத்தப்படவேண்டிய அவசியம் எதுவுமில்லை.

//இரு கட்டுரைத் தொடர்களை மீள் தொடர என்னை தூண்டிய முன்னிலையாக சகோதரர் ஜோவின்
செயல் அமைந்தது. அதற்கு நான் அவருக்கு நன்றி செலுத்தியே ஆகவேண்டும். //
மகிழ்கிறேன் .கட்டுரைகளுக்கு நன்றி .ஆனால் உங்கள் கட்டுரைகளில் இயேசு கிறிஸ்தவர் சொல்லுவது போல அப்படி இல்லை ,இப்படி இல்லை ,இப்படி இருந்திருக்கலாம் ,அப்படி இருந்திருக்கலாம் என்று தான் பொருள் வருகிறதே தவிர ,இயேசு என்ற ஒருவரே பிறக்கவில்லை ,அது முழுக்க முழுக்க ஒரு கற்பனைக்கதை என்ற உங்கள் கருத்துக்கு வலு சேர்ப்பதாக எதுவுமில்லை.

8:03 PM, March 14, 2007  
Blogger ஜோ/Joe said...

சேவியர் என்பவர் 'இயேசு என்றொரு மனிதர் இருந்தார்' என்ற தலைப்பில் தான் எழுதிய புத்தகம் பற்றி எழுதியிருந்தார் .அதே காலகட்டத்தில் தான் நீங்கள் இயேசு என்ற ஒரு மனிதரே பிறக்கவில்லை.அது ஒரு கற்பனை கதாபாத்திரம் என்ற வகையில் எழுதியிருந்தது ஞாபகம் வந்தது .எனவே 'இயேசு என்றொரு மனிதர் இருந்தார்' என்ற தலைப்பே நேரடியாக உங்கள் நிலைப்பாட்டுக்கு எதிராக இருப்பதால் உங்களுக்கு இந்த ப் புத்தகம் பயனுள்ளதாக இருக்கலாம் என்ற அர்த்தத்தில் உங்களுக்கு ஒரு பிரதி அனுப்பலாம் என குறிப்பிட்டிருந்தேன் .மற்றபடி உங்கள் கருத்துக்கு பதிலடி அந்த புத்தகம் என்று நான் பொருள்படவில்லை.அதை நீங்கள் இவ்வளவு சீரியஸாக எடுப்பீர்கள் என நினைக்கவில்லை .

8:15 PM, March 14, 2007  
Blogger ஜோ/Joe said...

அரவிந்தன் சார்,
மேலேயுள்ள பின்னூட்டத்துக்கு முன்னரே ஒரு பின்னூட்டம் இட்டிருந்தேனே .அது ஏன் பிரசுரிக்கப்படவில்லை?

9:08 AM, March 15, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

இப்ப வந்துருச்சு ஜோ சார். மிஸ்ஸானதுக்கு சாரி. சொன்னதுக்கு நன்றி.

9:14 AM, March 15, 2007  
Anonymous Anonymous said...

ultimately the question boils down to one thing.

If you believe its there then its there. If you dont then its not.


The problem starts when Joe and the likes try so much hard to say they dont believe by supporting Periyarists and when questions arise about Jesus they take offense. Atleast Cyril alex is truthful in this respect.

Its a pity, that the periyarists and dravida R's look the other way when these things happen with Joe's Iraineesans, maraikkaayars etc.,

10:00 AM, March 15, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

மரைக்காயர் சுவனப்பிரியன் இறைநேசன் போன்ற அடிப்படைவாதிகள் போன்றவர் அல்ல ஜோ என நம்புகிறேன்

10:15 AM, March 15, 2007  
Anonymous Anonymous said...

suvanapriyanin pathivil irunthu .. mugamathuvin purattalgalaivelippaduththum azagana pathivu.. poonai veliyE vanthuvittathu :)

my comment on that post

///

'அடிமைப் பெண்களுடன் திருமணம் செய்யாமல் அவர்களின் எஜமானர்கள் குடும்பம் நடத்தலாம்' என்று பல வசனங்களில் கூறப்பட்டுள்ளது.////


ithu kuran vasagam :)
//
அப்படியே அனைத்து அடிமைகளுக்காகவும் நஷ்ட ஈடு கொடுத்து விடுவிக்க முகமது நபி அவர்கள் கட்டளையிட்டாலும் அது கேடாகத்தான் முடியும்.//

///
நபிகள் நாயகத்தை எதிர்த்துப் போர் செய்தால் நமக்குப் பெரிய இழப்பு ஏற்படாது. அவருக்குத்தான் இழப்பு ஏற்படும் என்ற எண்ணம் சுற்றியுள்ள நாடுகளுக்கு ஏற்படும். எனவேதான் உத்தரவு போட்டு அடிமை முறையை ஒழிக்கவில்லை.
///உலக நாடுகள் அனைத்தும் ஒருமித்த தீர்மானத்திற்கு வரும் வரை முகமது நபி மட்டும் முடிவெடுப்பது நன்மை பயக்காது.kuran vasagam muzuvathum iRaivanal mugammathuvukku anuppappattathu enbathai poy enRu sollum vagaiyil allavaa ungalin vaatham irukkiRathu :)

you are letting the cat out

-- ezuthiya pin thiruththanggalum , comment maruppugalum ungalin nErmaiyinmaiyai mElum thella thelivaaga kaattakkoodiyavai


anbulla anany

/////

11:08 AM, March 15, 2007  
Anonymous Anonymous said...

இராமன், கிருஷ்ணன், இயேசு, நபி அனைவரும் வாழ்ந்த மனிதர்கள் என்றே நான் நம்புகிறேன்.

11:19 AM, March 15, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

Thanks Anonys

11:33 AM, March 15, 2007  
Anonymous Anonymous said...

//இராமன், கிருஷ்ணன், இயேசு, நபி அனைவரும் வாழ்ந்த மனிதர்கள் என்றே நான் நம்புகிறேன். //

என்ன கொடுமை, அனானி!! :)):)):))

11:34 AM, March 15, 2007  
Anonymous Anonymous said...

அடிமை வியாபாரம் நிறுத்தப்பட்டால் 'அடிமை வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள்' என கவலைப்படுகிறார் சுவனப்பிரியன்:-) அப்புறம் அடிமைப்பெண்களை எஜமானன் கற்பழிப்பது அடிமைப் பெண்களின் பாலியல் தேவைகளை நிறைவேற்றுவதற்காம்.அடிமைப்பெண்கள் மீது என்ன ஒரு கருணை பார்த்தீர்களா? இதுவல்லவா மதம்?இவரல்லவா சாமி?

3:57 PM, March 15, 2007  
Blogger suvanappiriyan said...

அன்புள்ள அனானி!

இஸ்லாமிய சட்டங்கள் ஒவ்வொரு நபிக்கும் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு ஏற்ப இறைவனால் அருளப்பட்டவை. இது ஆதாமிலிருந்து முகமது நபி வரை அனைவருக்கும் பொதுவான ஒன்று. அந்த சட்டங்களை மக்களோடு மக்களாக இருந்து செயல்படுத்தும் அதிகாரம் முகமது நபிக்கு கொடுக்கப்பட்டிருந்தது. மனிதனுக்கு மனிதன் அடிமை என்ற நிலையை ஒழிக்க இறைவன் விரும்புகிறான். அதை முகமது நபிக்கும் அறிவிக்கிறான். இதை அந்த மக்களிடையே எவ்வாறு கொண்டு செல்வது என்பதன் உரிமையை முகமது நபிக்கு இறைவன் கொடுக்கிறான். முகமது நபி அடிமைகள் விஷயத்தில் சற்று நிதானமாக நடந்து கொண்டதால்தான் அவர்கள் காலத்திலேயே அரபு நாடுகளில் அடிமை முறை ஒழிக்கப்பட்டது. நம் நாடுகளிலோ இன்றும் கொத்தடிமைகளை வைத்துக் கொண்டு சிரமப்படுகிறோம்.

வாழும் மார்க்கம் இஸ்லாம். எல்லோரும் பின்பற்றத் தக்க மார்க்கம் இஸ்லாம் என்பது இதிலிருந்து தெளிவாகிறதல்லவா! முகமது நபி எடுத்த முயற்ச்சிக்கு அவர் காலத்திலேயே வெற்றி கிட்டி அடிமை முறை ஒழிக்கப்பட்டதா இல்லையா?

எனவே எலிக்குட்டி வெளியே வந்து விட்டது. புலிக்குட்டி வெளியே வந்து விட்டது என்று உங்களுக்கு நீங்களே சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டாம் அனானி!

5:54 AM, March 16, 2007  
Anonymous Anonymous said...

பலர் கண்களைத் திறக்கும் கட்டுரை!


Da Vinci code-க்கு முன்னமையே "The Holy Blood and the Holy Grail" என்ற நூல் இதே விஷயத்தை கூறியிருக்கிறது. ஆனால் அது இந்த அளவு பேசப்படவில்லை.

எஸ்.கே

9:20 AM, March 16, 2007  
Anonymous Anonymous said...

இராமர் வாழ்ந்ததுக்கு ஆதாரம் இருக்கா ? அகழ்வாராய்ச்சியில் நாய் எழும்புமட்டுமே அயோத்தியில் கிடைச்சுதாம். அப்பறம் எதுக்கு ஓய் இராமர் அங்குதான் பிறந்தார் என்றும் கோவில் கட்ட வேண்டும் என்று குரங்குகள் கும்மாளம் அடிக்கின்றன ?

9:56 AM, March 16, 2007  
Blogger எழில் said...

அடிமைமுறையும் கிறிஸ்துவமும் என்று வீடியோ பதிவு இட்டிருக்கிறேன்.

பார்த்து கருத்து கூறுங்கள்.

http://ezhila.blogspot.com/2007/03/blog-post_16.html

5:45 PM, March 16, 2007  
Blogger suvanappiriyan said...

அரவிந்தன் நீலகண்டன் said...

//மரைக்காயர் சுவனப்பிரியன் இறைநேசன் போன்ற அடிப்படைவாதிகள் போன்றவர் அல்ல ஜோ என நம்புகிறேன்//
10:15 AM


ஒரு கொள்கையில் இருந்தால் அதில் உறுதியோடு இருக்க வேண்டும். நான் ஒரு முஸ்லிம். குர்ஆன் என்ன கட்டளையிடுகிறதோ அதை பின்பற்ற வேண்டியவன். குர்ஆன் இறைவனால் அருளப்படவில்லை. இது முகம்மதின் கற்பனை என்று நான் நினைத்தால் அந்த நிமிடமே நான் இஸ்லாத்தை விட்டு விலகி விடுகிறேன். எம்மதமும் சம்மதம் என்று போலியாக என்னால் நடிக்க முடியாது. இதனால் மற்ற மார்க்கத்தவரை விரோதிகளாக பார்க்க வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. இஸ்லாம் எனக்கு அதைப் போதிக்கவும் இல்லை. எனவே என்னை இஸ்லாமிய அடிப்படைவாதி என்று யாரும் சொன்னால் அது எனக்குப் பெருமையே!

நான் ஏன் குர்ஆனை இறைவனின் வேதம்தான் என்று கூறுகிறேன் என்பதற்கும் எனது முந்தய பதிவுகளில் விளக்கமும் கொடுத்துள்ளேன்.

//ஆக, டான் ப்ரவுன் கிறிஸ்தவத்தின் உருவாக்கத்தின் அடிப்படையில் பல
கிறிஸ்தவமற்ற மதங்களின் சேர்க்கை உள்ளதென்பதைக் கூறியுள்ளது, மூழ்கியுள்ள பெரும் பாறையின் ஒரு சிறிய நுனியே ஆகும்.//-Aravindhan

'வேதமுடையோரே! உங்கள் மார்க்கத்தில் வரம்பு மீறாதீர்கள் இறைவனின் மீது உண்மையைத் தவிர வேறெதனையும் கூறாதீர்கள். மேரியின் மகன் ஏசு எனும் மஸீஹ் இறைவனின் தூதரும் அவனது கட்டளையால் உருவானவருமாவார். அக்கட்டளையை அவன் மேரியிடம் போட்டான்.அவனது உயிருமாவார்.எனவே இறைவனையும் அவனது தூதர்களையும் நம்புங்கள். கடவுள் மூவர் எனக் கூறாதீர்கள். விலகிக் கொள்ளுங்கள். அது உங்களுக்குச் சிறந்தது. அந்த இறைவனே ஒரே வணக்கத்திற்குரியவன். அவனுக்குப் பிள்ளை இருப்பதை விட்டும் அவன் தூயவன்.வானங்களில் உள்ளவையும் உலகில் உள்ள அனைத்தும் அவனுக்கே உரியன. அந்த இறைவன் பொறுப்பேற்கப் போதுமானவன்.
-குர்ஆன் 4 : 171

இந்த ஒரு வசனமே பல கேள்விகளுக்கு விடையளிக்கிறது.

6:00 PM, March 16, 2007  
Blogger Muse (# 01429798200730556938) said...

ஒரு கொள்கையில் இருந்தால் அதில் உறுதியோடு இருக்க வேண்டும்.

பொய்யெனத் தெரிந்தாலும்?

4:54 AM, March 17, 2007  
Blogger Muse (# 01429798200730556938) said...

உலகம் தொடர்புகொள்ளக்கூடியதாகி வருகிறது. பல நம்பிக்கையாளர்களோடு பகிர்ந்துகொள்ள, செயல்பட, செல்வம் பெருக்க இத்தொடர்பு பயன்படும் இவ்வேளையில் ஆங்கில சொற்களைப் பயன்படுத்தும் முறையில் கவனம் அதிகம் எடுத்துக்கொள்ளப்பட்டு "உலகப் பொதுவான" ஆங்கிலம் உண்டாக்கப்பட்டு வருகின்றது.

"டெக்னிக்கல் ரைட்டிங்" என்று அறியப்படும் என் துறையில் நாங்கள் இத்தகைய "இந்டெர்நேஷனல் இங்க்லீஷையே" பயன்படுத்த ஊக்கப்படுத்தப்படுகிறோம். இவ்வாங்கிலம் பொலிட்டிக்கலி கரெக்டாக இருக்க மெனக்கெடுகிறது.

உதாரணமாக, வருஷங்களைக் குறிக்கும்போது 123 BC (Before Christ) என்பதற்குப்பதிலாக 123 BCE (Before Common Era) என்பது பயன்படுத்தவேண்டும். 2007 AD (Anno Domino) என்பதற்குப்பதிலாக 2007 CE (Common Era) என்றே பயன்படுத்தவேண்டும். ஏனெனில், BC என்பதும் AD என்பதும் கிருத்துவின் பிறப்பின் முன்பும் பின்பும் என்கின்ற வகையில் அமைகின்றன. மற்ற நம்பிக்கையாளர்களின் மேல் இதை திணிப்பது சரியல்ல என்ற தொழிற்புரட்சியின் விளைவான மனிதத்துவம் வலியுறுத்துவதால் இங்கனமே பயன்படுத்தல் அனைத்து மனிதர்களையும் மதிப்புத் தருவதாகவும் அமைகின்றது.

(மேலதிகத் தகவல்களுக்கு: http://en.wikipedia.org/wiki/Common_Era)

ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் எங்கள் துறை மட்டுமல்லாது, ஆர்க்கியலாஜி, வரலாறு, ஸோஷியாலஜி, பொலிட்டிக்கல் ஸையன்ஸ், மனிதவியற் துறை போன்ற துறைகளிலும் இத்தகைய சீர்திருத்தம் வந்து பல்லாண்டுகளாகிவிட்டன. அதாவது அனைத்து மேலை நாடுகளிலும், சில பல கீழை நாடுகளிலும். இத்தகைய மாற்றத்தை ஏற்க விரும்பாத நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.

உண்மையான ஸெக்யூலரிஸம் என்பது இது போன்ற பொதுவான வார்த்தைப் ப்ரயோகங்களைப் பயன்படுத்தும்போதுதான் நிகழும். ஆனால், உண்மையான ஸெக்யூலரிஸத்திற்கு ஹிந்துத்துவவாதம் என்று பெயர் கொடுத்து ஜல்லியடிக்க நிறைய த்ராவிட வெறி காண்ட்ராக்டர்கள் இருப்பதால் ஹிந்து மதங்கள் ஒடுக்கும் மதங்களுக்கு முன் நடுங்கிக்கொண்டு இருக்கின்றன.

இந்த AD என்பதன் ஆரம்ப காலம் கிரிகோரிய காலண்டரின் முதல் ஆண்டில் இருந்து ஆரம்பிக்கின்றது. எனவே BCE, CE என்பவற்றை தமிழில் க்ரிகேரிய காலம் (கி.கா), அதற்கு முன்பு (அ.மு) என்று குறிப்பிடலாமா?

சரியாக வருமா?

இல்லாவிட்டால் இவற்றைவிட சரியான பதங்களை வலைப்பதிவுலகிலுள்ள யாரேனும் தமிழ் பற்றாளர்கள் தர இயலுமா?
பி.கு: இதை ஒரு போட்டியாகக்கூட வைக்கலாம்.

7:40 AM, March 17, 2007  
Anonymous Anonymous said...

சுவனப்பிரியன் பிதற்றுகிறார்.

//குர்ஆன் இறைவனால் அருளப்படவில்லை. இது முகம்மதின் கற்பனை என்று நான் நினைத்தால் அந்த நிமிடமே நான் இஸ்லாத்தை விட்டு விலகி விடுகிறேன்.//

இஸ்லாத்தை விட்டு விலகினால் தலை துண்டாடப்படும் என்று தைரியமாக இந்தியாவுக்குள்ளேயே இருந்துகொண்டே ஜாகிர்நாயக் இந்திய தொலைக்காட்சிகளில் பேசுகிறார். அதனை தவறு என்று சுவனப்பிரியன் உட்பட யாருமே கூறவில்லை.

இந்த லட்சணத்தில் குரான் பொய் என்று தெரிந்தால் இஸ்லாத்திலிருந்து விலகி விடுவாராம்..

என்ன வாய்ஜாலம்! மூக்கறுந்தவன் எல்லோரையும் மூக்கறுக்க முயற்சி செய்வதுதான் இது!

7:55 PM, March 17, 2007  
Anonymous Anonymous said...

கவனப்பிரியன்

உங்களுக்கு மொகமது சொன்னது கடவுள் சொன்னதாகத் தெரியலாம், ஆனால் குரானைப் படிக்கும் அறிவுள்ளவர் எவருக்கும், மூளையுள்ளவர் எவருக்கும் அது மொகமது தனது காமவெறியையும், கொலைவெறியையும் தீர்த்துக் கொள்ள தனக்குத் தானே வலிப்பு நோய் வந்த பொழுது வந்த பிதற்றலை ஒட்டி இட்டுக் கட்டிக் கொண்டது என்பது தெளிவாகப் புரியும். எந்தக் கடவுளாவது உன் சொந்த மருமகளையே பொண்டாளு என்று சொல்லுவானா ? அப்படிச் சொன்னால் அவன் கடவுளா ?

சரி, இஸ்லாமைப் பின்பற்றாத இந்துக்களும் , கிறிஸ்துவர்களும் என்ன ஆவார்கள் என்று சொல்ல முடியுமா? அவர்கள் நரகத்துக்குப் போவார்களா சொர்க்கத்துக்குப் போவார்களா ? உதாரணமாக காந்தி, மார்ட்டின் லூதர், விவேகானந்தர் எல்லோரும் இஸ்லாமை பின்பற்றாததால் என்ன ஆகியிருப்பார்கள் என்று சொல்ல முடியுமா?

இஸ்லாத்தைப் பின்பற்றாதவனிடம் வரி வசூலித்தலும், கொலை செய்தலும் சரியா? உங்கள் மார்க்கத்தைப் பின்பற்றாதவர்களைக் கொலை செய் என்று சொல்லும் மதம் காடுமிராண்டி மதம் அல்லவா? ஜிஹாத் என்ற பெயரில் அப்பாவி மக்களைக் கொலை செய்வதால் நாங்கள் இஸ்லாத்தை ஒரு கொலைகார மதமாகவும், குரானை கொலைகார நூலாகவுமே பார்க்கிறோம். 9/11 க்குப் பிறகு உலகத்தில் கோடிக்கணக்கான மக்கள் குரானைப் படிக்க ஆரம்பித்து அது ஒரு காட்டுமிராண்டித்தனமான நூல் என்பதைப் புரிந்து கொண்டு விட்டார்கள். அது மெண்டல் சைக்கோவினால் எழுதப் பட்டு விட்டது என்பதை பின்லாடன் முதல் மரக்காயர் வரை நிரூபித்து விட்டார்கள்.

9:50 PM, March 17, 2007  
Anonymous Anonymous said...

அமெரிக்காவின் கிறிஸ்தவ ஆராய்ச்சிக் குழு ஜான் ட்ரான்குவிஸ்ட் என்பவரிடம் ஒரு கேள்வி கேட்டார்கள். டாவின்சி கோட் திரைப்படம் கிறிஸ்தவத்தை இழிவு படுத்துகிறதே என்று. அவர் சொன்னார், இல்லை இல்லை.. இது வரை இயேசு வின் வரலாற்றுத் தன்மையை நம்பாத மக்கள் இப்போது தான் நம்பத் துவங்கியிருக்கிறார்கள். ஒருவகையில் டாவின்சி கோட் இயேசு என்பவர் இருந்தார் என்னும் நம்பிக்கையை மக்கள் மத்தியில் வலுவாக்கியிருக்கிறது என்று.

ம்... எல்லா விசைக்கும் அதற்குச் சமமான எதிர் விசை உண்டு !

7:19 AM, March 18, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

நன்றி சேவியர். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.
இதுவரை வரலாற்றாசிரியர்கள் இடையே மட்டுமே நிலவி வந்த சில கருத்துக்கள், உதாரணமாக ஏசு என்பவர் குறித்து இன்றைய கிறிஸ்தவ விவிலியம் கூறுவது மட்டுமே உண்மை அல்லது ஒரே கதையாடல் என்பது தவறு என்கிற கருத்து, இன்றைக்கு பொது பிரக்ஞைக்கு பெரிய அளவில் கசிந்திருக்கிறது. டாவின்ஸி கோட் நாவல் மற்றும் திரைப்படத்தின் வரலாற்று ரீதியில் பலவீனமான இடங்களே அது ஏசுவின் வரலாற்றுத்தன்மையை ஏற்றுக்கொண்டு பேசும் இடங்கள்தாம். இவை குறித்து விரிவாக அடுத்தடுத்த வலைப்பதிவுகளில் எழுத உத்தேசித்துள்ளேன்.

7:46 AM, March 18, 2007  
Anonymous Anonymous said...

don't waste your time and energy to research the history. the god is not answer your research only he answer to your truth and prayer. so this way you can experience the god's power and signs. so make sure your experience with all religion gods and then post your comments.that will help to all. each and every gods has some mistake so leave that mistake because knowingly or unknowingly written by men right. so don't waste time for history.(decide yourself what is god?) and then spend your precious time for right god. surely god will help you to all your troubles.

3:48 AM, June 26, 2010  

Post a Comment

<< Home