Friday, April 27, 2007

சில அமர சித்திர கதைகள்-1

உபநிடதக் கதைகள்:
இந்த அமர்சித்திரக்கதை பின்வரும் அழகிய உபநிடதக்கதைகளை கூறுகிறது:

  • 1. சுவேதகேது ஆத்மஞானம் பெறும் கதை. இக்கதையிலேயே 'தத்வமஸி' எனும் மகா வாக்கியம் வருகிறது. (சாந்தோக்ய உபநிடதத்திலிருந்து)
  • 2. ரைகவன் எனும் ஆத்மஞானியான வண்டி இழுப்பவரிடம் அரசனான ஜனஸுருதி பணிந்து ஞானம் பெறும் கதை.(சாந்தோக்ய உபநிடதத்திலிருந்து)
  • 3. வெற்றியால் மமதை அடைந்த தேவர்களுக்கு உண்மையில் அவர்களுக்கு வெற்றியை அளித்ததும் பிரபஞ்சத்தின் அனைத்து இயக்கங்களுக்கு ஆதாரமாக விளங்குவதும் பிரம்மமே என சக்தி உமாவாக வந்து உணர்த்திய கதை. (கேனோபநிடதத்திலிருந்து)
  • 4. வயது முதிர்ந்த முனிவர்களுக்கு வேதத்தின் உண்மைப் பொருளை ஒரு இளம் பிரம்மச்சாரி உணர்த்தும் கதை (சாந்தோக்ய உபநிடதத்திலிருந்து)

இக்கதைகள் அனைத்துமே ஆத்மஞானம், சமுதாய ஒற்றுமை, ஆன்ம நேய சமத்துவம், அறிவியல் பார்வை ஆகியவற்றினை நம் மனதில் பதிய வைக்கக்கூடியதாக அமைந்துள்ளன. ஒவ்வொரு பாரதக்குழந்தைக்கும் இந்த அமர்சித்திரக்கதை தனது பாரம்பரிய சிறப்பினை விளக்குகிறது.
நூலிலிருந்து சில காட்சிகள்:

எங்கும் நிறைந்த ஆன்ம சத்தியத்தை ஆலவிதைகளை கொண்டு ஸ்வேதகேதுவுக்கு முனிவர் விளக்குகிறார்


வண்டி இழுக்கும் ரைகவரின் தேஜஸை புகழுகின்றன அன்னங்கள். இதனை கேட்கிறான் மன்னன் ஜனசுருதி


மன்னன் ஏன் இந்த வண்டி இழுப்பவரிடம் தம்மை அனுப்புகிறார் என அதிசயிக்கின்றனர் சேவகர்.
செல்வங்களை அளித்து ஞானத்தைக்கோரும் மன்னனிடம் ஞானம் விற்பனைக்கல்ல என கடிந்து அனுப்புகிறார் ரைகவர்.


மன்னன் ரைகவர் காலில் பணிந்து ஞானத்தைக் கோரி பெறுகிறார்.


வீர சிவாஜி கதைகள் (சிறப்பு பதிப்பு)மராட்டியத்தில் ஹிந்தவ சுவராஜ்யம் கண்ட மாமன்னர் சக்கரவர்த்தி வீர சிவாஜி. இவர் குறித்து வரலாற்றாசிரியர்கள் மட்டுமல்ல வட்டாரக்கதைகளும் பாடும்
புகழ்மாலைகள் எண்ணிலடங்கா. வீர சிவாஜி குறித்து ஏற்கனவே வெளிவந்திருந்த மூன்று அமர்சித்திரக்கதைகளின் தொகுப்பு இந்த சிறப்பு பதிப்பு. இதில் முதல் கதை
வீர சிவாஜியின் வாழ்க்கை வரலாறு. இரண்டாம் கதை அவர் குறித்த நாட்டார் கதைகளின் தொகுப்பு. இதில் மாற்று மத பெண்ணை தன் தாயாக சகோதரியாக
சிவாஜி பாவித்த சிறப்பு, ஒரு பால்காரியின் தாய்ப்பாசத்தினால் கோட்டை பாதுகாக்கப்பட்ட கதை போன்ற கதைகள் இடம் பெறுகின்றன. சிம்மக்கட் கோட்டையை
அன்னியரிடமிருந்து மீட்க தன்னுயிரை தியாகம் செய்த வீர சிவாஜியின் உயிர் தோழர் தானாஜியின் கதை அடுத்ததாக உள்ளது. நாட்டுப்பற்று, மானுட நேயம்,
தருமத்தின் மீது அன்பு, கடமை உணர்வு ஆகியவை குழந்தைகளுக்கு ஊட்டப்பட இந்த நூல் மிகவும் உதவும்.
நூலிலிருந்து சில காட்சிகள்:கொடுமைகள் செய்த அப்சல்கானை மரியாதையுடன் புதைக்க சிவாஜி உத்தரவிடுகிறார்
பிறர் மனை நோக்கா பேராண்மை காட்டிய இந்து சுவாராஜ்ய ஸ்தாபகர் வீர சிவாஜி

5 Comments:

Anonymous Anonymous said...

Good post. This in deed gives more clarity to children about the Hindu value system.

1:54 AM, April 27, 2007  
Blogger ஜடாயு said...

அருமையான கதைகள் அரவிந்தன்! இவை தமிழில் வருவது நின்றுபோனது பெரிய துரதிர்ஷ்டம். பை நிறுவனம் ஆங்கிலத்தில் மட்டுமல்லாமல் அனைத்து மொழிகளிலும் மீண்டும் இந்தக் கதைகளை எல்லாம் வெளியிட வேண்டும்..

2:10 AM, April 27, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

நன்றி ஜடாயு. ஆம் இவை தமிழில் வரவேண்டும். கண்ணகி-சிலப்பதிகாரத்தையும் அமர்சித்திரக்கதையினர் போட்டிருக்கிறார்கள். அப்படியே அவ்வையாரையும். நன்றி அனானி. இந்து தருமத்தின் நல்லம்சங்கள் அடுத்த தலைமுறையை அடைய நாம் இந்த அமர்சித்திரகதைகளை வாங்கி நம் அருகில் உள்ள நூல் நிலையங்களுக்கு அளிக்க வேண்டும்.

3:00 AM, April 27, 2007  
Anonymous Anonymous said...

Very good post.

Please write in detail about Shivaji.

I always regret that Shivaji, after he reversed the trend of mogul expansion, should have converted all those unfortunate victims who were forced to embrace islam, by converting them back as Hindus. This is what Spain did successfully. But, our Hindu tolerance did not do this. I want to read your views on that.

Thanks

(sorry no tamil font...)

6:04 AM, April 27, 2007  
Anonymous Anonymous said...

amazing

7:43 PM, April 27, 2007  

Post a Comment

<< Home