ஆடியோ, வீடியோ எல்ஐஸி மற்றும் சச்சார்
காலையில் ஆட்டோ வில் வந்து இறங்கினார் அந்த பெயர் சொல்ல விரும்பாத இஸ்லாமிய சகோதரர் ரொம்ப நல்லவருங்க. சகோதரர் என்று சொன்னாலும் என் தந்தையார் வயதிருக்கும். கண்ணியமானவர். பேசும் போது குரல் அப்படி அமைதியாக இருக்கும் ஆற்றொழுக்காக வட்டார தமிழில் வார்த்தைகள் மென்மையாக வரும். என் எழுத்துக்களிலும் என் சமுதாய பார்வைகளிலும் மிகவும் அக்கறை காட்டுபவர் அவர். "என்ன சச்சார் கமிட்டி பத்தியா எழுதப்போற சரி அதுக்கு முன்னாடி இத கொஞ்சம் படி அப்படீன்னு நீட்டினாரு ஒரு புத்தகத்தை. 'இது என்ன பாய் புது குண்டு?' அப்படீன்னு நினைச்சபடியே வாங்கி பார்த்தேன். அப்பேரு 'குர்ஆனின் குரல்'. ஆசிரியர் அல்ஹாஜ் அ.முஹம்மது அஷ்ரப் அலி. செப்டம்பர் 1987 வெளியிட்டதுங்க. அதில் 25 இலிருந்து 32 ஆம் பக்கம் வரை கேள்வி பதிலுங்க. மார்க்க சம்பந்தமான கேள்விகள். அப்படீன்னு. சரி எதுக்கு பார்க்க சொல்றாருன்னு அவர் மார்க்கர் வச்சிருந்த பக்கங்களை பார்த்தேங்க. இதோ:
- 10. கேள்வி: ஆடியோ கேஸட்களில் இஸ்லாமிய பக்தி பாடல்கள், ஹிந்து கிறிஸ்தவ பாடல்கள் மற்றும் பல மொழிகளின் சினிமா பாடல்களை பதிவு செய்து கொடுக்கும் கடை வைத்து நடத்தலாமா? (அல்ஹஸா - கே.எம். ஷாஜகான்)
பதில்: பாவத்திற்கு துணை போகக் கூடாது என்ற அடிப்படையில் ஆடியோகேஸட் பதிவு கடை வைக்கக் கூடாது. - 19.கேள்வி: L.I.C பியர்லெஸ் போன்ற சிறுசேமிப்பு ஆயுள் இன்ஷ்யூரன்ஸ் திட்டங்களில் முஸ்லீம்கள் ஏஜெண்டுகளாக செயல்படலாமா? (பெரியகலையம்புதூர், கே.எஸ்.ஷர்புதீன்)
பதில்: வட்டித்தொழில் தாரளமாக இவற்றில் நடைபெறுகின்றது. எனவே கூடாது. - 20.கேள்வி: என் நண்பர் ஒருவர் வீடியோ படம் காட்டி சம்பாதிக்கிறார். கூடுமா? (சவூதி அரேபியா, இஸ்மாயில் ஏ.சலாம்)
பதில்: கூடாது.
தமிழனுக்கு பொருத்தமான மதம் இஸ்லாம் - ஈவெரா
"எல்.ஐஸி ஏஜெண்டாக முடியாது, ஆடியோவீடியொ கடை வைக்கமுடியாது. இன்னும் என்னென்னல்லாம், முடியாது அப்படீன்னு மார்க்க பெயரை சொல்லி இவனுக உரிமையை பறிச்சது யாரு? முதல்ல இவனுக கேட்க வேண்டிய உரிமை சிந்திக்கிற உரிமை தம்பி. இதெல்லாம் இவனுகளை யாரு தடுத்தானுவோ? படைச்சவனுக்கு தெரியும் யாருன்னு. ஆனா பழியை அடுத்தவன் மேல போடுவானுகோ. இப்பங்கூட போலியோ மருந்து சாப்பிட பத்வா போடுவானுகோ. அப்புறம் பத்துவருசம் கழிச்சி போலியோவால் பாதிக்கப்பட்ட குழந்தைங்கள்ல அதிகம் இசுலாமியர் இருக்க காரணம் ஆர்.எஸ்.எஸ் சதி அப்படீம்பானுங்கோ." என்று கூறியபடி இன்னமும் சில நூல்களை கொடுத்துவிட்டு போனார் அந்த நல்ல இனிய இசுலாமிய முதியவர். ஆட்டோ மறையும் வரை வழியனுப்பிவிட்டு வந்து அவர் தந்த நூல்களை பார்தேன். சே இந்த நேரம் பார்த்து நமக்கு நெட்ல எழுத நேரம் இல்லாம போச்சே என நினைத்து நொந்து கொண்டே.ன். அந்த நூல்களிலிருந்து சுவாரசியமான செய்திகள் அடுத்த வாரம் வரை காத்திருங்கள்.
7 Comments:
http://rasithathu.blogspot.com/2006/12/blog-post_20.html
நெஞ்சை நெகிழ வைக்கும் அந்த பதிவை பார்த்தேன். நன்றி.
//இந்த குண்டுவெடிப்புகளுக்கு ஒரு அமைப்பையோ இல்லை மதத்தையோ இல்லை அரசாங்கத்தையோ இல்லை அரசியலையோ குறை கூறி அதன் பின்னால் ஒளிந்து கொள்ளக் கூடாது.
இது போன்ற குண்டு வெடிப்புகள் குறைய வேண்டுமெனில் எல்லோரிடமும் மாற்றங்கள் வர வேண்டும்.
ஒவ்வொருவரும் கொண்டிருக்கும் துவேஷங்கள், கோபங்கள் குறைந்தாலொழிய மகள்(ன்), கணவர், தம்பி என்று தொலைத்துக் கொண்டே தான் இருப்போம்.//
எல்லோரிடமும் மாற்றங்கள் என்பதுதான் புரியவில்லை. மகளை தொலைத்து நடைபிணமாய் வாழும் தந்தை எவ்விதத்தில் லஸ்கர் இ தொய்பா பயங்கரவாதிக்கு ஒப்பாக இந்த குண்டு வெடிப்புக்கு காரணமாக இருக்க முடியும்? அந்த பயங்கரவாதி மாறவேண்டும் சரி. அந்த பயங்கரவாதத்தின் அடிப்படையாக அமையும் சித்தாந்தம் மாற வேண்டும் சரி. அந்த நடைபிணமாக வாழும் தந்தை எப்படி மாற வேண்டும் என நினைக்கிறீர்கள்?
துவேஷங்களை களையுங்கள் ப்ளீஸ் என்ற வேண்டுகோள் உங்கள் கண்ணில் படவே இந்த பதிவின் சுட்டியைக் கொடுத்தேன்.
மேலும் மேலும் துவேஷங்கள் வேண்டாமே ப்ளீஸ்.
எது துவேசம்? இரயிலுக்கு குண்டு வைப்பதா? அல்லது வைக்க தூண்டும் வெறுப்பியல் வெறியை சுட்டிக்காட்டுவதா?
பெண்ணுரிமை பேசுபவர்கள்கூட இஸ்லாத்தில் உள்ள பெண்ணடிமைத்தனத்தை எதிர்ப்பதில்லை. மனித உரிமை பேசுபவர்கள் இஸ்லாத்தில் உள்ள அப்பட்டமான மனித உரிமை மீறல்களை எதிர்ப்பதில்லை. பெண்ணுரிமை பேசுபவர்களுக்கும், மனித உரிமை பேசுபவர்களுக்கும் உயிர் மீது ஆசை இருக்கத்தானே செய்யும். இந்துக்களும் அரிவாள் தூக்கினால், குண்டு வைத்தால் ஹிந்துக்களை எதிர்க்க யாரும் துணியமாட்டார்கள். ஆயுதத்திற்கு இந்த காலத்தில் மரியாதை. ஆனாலும் இஸ்லாத்தில் உள்ள அநீதிகளை அம்பலப்படுத்தும் அரவிந்தன் நீலகண்டன் போன்றவர்களின் பணி காலத்தின் தேவை.
காத்திருக்கிறோம் கண்மணி!
கருத்துக்களை அள்ளித் தா எங்கள் பொன்மணி !
இவண்,
அரவிந்தன் நீலகண்டன் ரசிகர் மன்றம்
அரபி அல்வா கடை
குவைத்
அரவிந்தன்,
20.கேள்வி: என் நண்பர் ஒருவர் வீடியோ படம் காட்டி சம்பாதிக்கிறார். கூடுமா? (சவூதி அரேபியா, இஸ்மாயில் ஏ.சலாம்)
பதில்: கூடாது.
இதெல்லாம் இஸ்லாமிய பத்திரிக்கையில் மட்டுமே விரிக்கப்படும் பட்டுப் பீதாம்பரங்கள். உண்மையில் விபச்சாரத்திலும், கள்ளக்கடத்தலிலும் அதிகப் பணம் சம்பாதிப்பவர்கள் அவர்கள்தான். உதாரணம் வேண்டுமா? வாருங்கள் பெங்களூரிலுள்ள மார்க்கெட் பஸ் ஸ்டாண்டிற்கு. பெங்களூரையே அசிங்கப்படுத்தும் ஒரு இடம் உண்டெண்றால் தூய்மையான மார்க்கத்தாரின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் இந்தப் பகுதிதான். இஸ்லாத்தின் ஆதரவோடு விபச்சாரம் கொடி கட்டிப் பறக்கும் இடம் இது. பஸ் ஸ்டாண்ட் அருகிலேயே அழகான மஸூதியும் உண்டு. மஸூதியை சுற்றிலும் இஸ்லாமியர் மட்டுமே கடை வைத்திருக்கின்றனர். ஆபாச புத்தகங்களும், வீடியோக்களும் அள்ளிகொட்டும் இடம் இது. அதனை செய்பவர்கள் அனைவரும் இஸ்லாமியர்கள்தான். மஸூதிக்கருகில் இருக்கும் இஸ்லாமியர் இந்த மார்க்கத்தில் ஈடுபடுவது இஸ்லாமை பற்றி உயர்ந்த அபிப்பிராயம் வைத்திருக்கும் எனக்கு வேதனையையே தருகின்றது. என் இஸ்லாமிய நண்பர் ஒருவர் திரைப்படம்கூட பார்ப்பதில்லை. அவர் மட்டுமல்ல அவரது ஆறாவது மனைவி டிவி சீரியல் பார்ப்பதற்கும் அவர் தடை விதித்திருக்கிறார். அப்படிப்பட்டவர்கள் இருந்தாலும் இப்படிப்பட்ட இழிந்தவர்களையே இஸ்லாம் மறைமுகமாக ஊக்குவிக்கிறதோ என்பது என்னுடைய ஐயம்.
Post a Comment
<< Home