Monday, October 10, 2005

காஷ்மிரில் இன்று ஒரு படுகொலை-நிலநடுக்கத்தால் அல்ல!
ஜிகாதி வெறி பிடித்த மிருகங்களுக்கு இந்த நிலநடுக்க அழிவுக்காலத்திலும் காஃபீர்களைக் கொல்லுவதுதான் மானுடசேவை போலும். பாரத இராணுவமும் பாரதம் அனைத்தும் ஒன்றாக ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கத்தால் இறந்த-பாதிக்கப்பட்ட மக்களுக்காக -அவர்கள் ஹிந்துக்களோ இஸ்லாமியர்களோ- மன வேதனையுடன் உதவத் துடிக்கின்றனர். போலி-மதச்சார்பின்மை எனும் பர்தாவை போட்டுக்கொண்டு இஸ்லாமிய வெறியர்களுடன் கை கோர்க்கும் கீழ்த்தரங்கள் வில்லனாக சித்தரிக்கும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஜம்மு காஷ்மீருக்கு மட்டுமல்ல மிக மோசமாக பாதிக்கப்பட்ட பாகிஸ்தானுக்கும் உதவ நேசக்கரம் நீட்டியுள்ளார். ஆனால் ஜிகாதி வெறி பிடித்தலையும் கீழ்த்தர ஜென்மங்களுக்கோ இந்த வேளையும் கூட காஃபீர்களான ஹிந்துக்களை கொல்லும் வேளைதான் போலும். ஜம்மு காஷ்மீர் ராஜவுரி மாவட்டத்தில் இரு குடும்பங்களைச்சார்ந்த 10 ஹிந்துக்கள், குழந்தைகள் உட்பட, கழுத்து வெட்டப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். முன்ஷி ராம் வீட்டிற்குள் வந்து உணவருந்தி விட்டு ஹிபுல் முஜாகிதீன் எனும் ஜிகாதி அமைப்பினைச் சார்ந்த மிருகங்களை விட கேவலமான இந்த ஜென்மங்கள் (ஹிஸ்புல் முஜாகிதீன் ஜாமயத்-எ-இஸ்லாமி எனும் அமைப்பின் வளர்ப்பினங்கள். 'பீஸ்-அமைதி' என்கிற பெயரில் கண்காட்சிகளை தமிழ்நாட்டில் நடத்துவதில் ஈடுபட்டுள்ள அமைப்புகளில் இந்த ஜாமயதி இஸ்லாமி அமைப்பின் க்ளோன்கள்தான்.) முன்ஷிராமையும் அவரது மகன்களையும் அவரது உறவினரையும் கழுத்தை வெட்டிக் கொன்று தங்கள் 'அமைதி-மார்க்க' வெறியை தணித்திருக்கின்றன. மீண்டும் 'அமைதி மார்க்கப் பற்று' விறைப்படைந்து விட்டது போலும். பின்னர் மோரா-காபர் எனும் கிராமத்திற்கு சென்று இந்த மார்க்கவெறியும் இரத்தவெறியும் பிடித்தலையும் மனிதத்தன்மையற்ற கீழ்த்தரங்கள் கர்த்தார் சிங் வீட்டிற்குள் புகுந்து அவரையும் அவருடைய மகன்களையும் கொன்றுள்ளன. இந்த கொலைவெறியாட்டத்திற்கும் ஒரு ஜிகாதி சப்பைக்கட்டு இருக்கும். இவ்வாறு தொடர்ந்து செய்யப்படும் படுகொலைகளுக்கு அத்தி பூத்தாற்போல என்றாவது ஹிந்துக்கள் வெகுண்டுவிட்டால் 'ஹிந்து பாசிசம்' என வாய் கிழிய ஓலமிடும் முற்போக்கு அஃறிணைகளே எங்கே போனீர்கள்? எங்கே உங்கள் மனித நேயம் போற்றும் தலையங்கங்கள்? எங்கே புதைந்துள்ளன உங்கள் முகங்கள்? எங்கே கலைந்து போயின உங்கள் முகங்களில் பூசப்பட்ட மத நல்லிணக்க அரிதாரங்கள்? ஹிந்துக்களே நீங்கள் எந்த சாதியாக இருந்தாலும் சரி, எந்த கட்சியாக இருந்தாலும் சரி, என்னதான் உயர்ந்த தத்துவங்களையும் ஆன்மிக உண்மைகளையும் உங்கள் முன்னோர்கள் உங்களுக்கு அளித்து அதன் வாரிசுகளாக நீங்கள் வாழ்ந்து வந்தாலும் சரி ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் - நீங்கள் ஒரு அரசியல் சக்தியாக மாறாவிட்டால் - நாளை உங்கள் குழந்தைகளும் கழுத்து கிழித்து வெட்டிக் கொல்லப்படலாம், அதைவிட மோசமாக சொந்த நாட்டிலேயே அகதிகள் முகாம்களில் விலங்குகளை விட கீழான நிலையில் வாழலாம். அன்றைக்கு, இன்று உங்களிடையே முற்போக்கும் இடதுசாரி அறிவுஜீவித்தனமும் பேசிக் கொண்டு வாழும் முற்போக்குகள் உங்களுக்காக வாயை அசைப்பது கூட அதிசயம். இன்று திபெத்தியர்களையும், பங்களாதேஷ் தலித் ஹிந்துக்களையும் பௌத்த வனவாசிகளையும் நாம் மறந்து வாழ்வதை போல அன்று நமது கொல்லப்பட்ட குழந்தைகளை அல்லது அகதி முகாம் வாழ் நம் குழந்தைகளை இந்த உலகம் கண்டு கொள்ள போவதில்லை.


பத்து ஹிந்துக்கள் படுகொலை: பிடிஐ செய்தி அக்டோபர் 10, 2005

13 Comments:

Blogger art lover said...

This comment has been removed by a blog administrator.

8:55 AM, October 10, 2005  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

இறைவன்,
எந்த தனிநபர் ஆளுமையாலும் ஒரு சமுதாயம் காக்கப்பட முடியாது. ஹிந்து சமுதாயம் ஒருங்கிணைவதில் தான், அரசியல் ரீதியில் ஆரோக்கியமான ஒரு சக்தியாக மாறுவதில்தான் ஹிந்து சமுதாயம் இனிவரும் காலங்களில் ஜீவித்திருக்க முடியுமா எனும் கேள்விக்கான பதில் உள்ளது. இந்திரா காந்தி காலத்தில்தான் பாகிஸ்தான் தனது உளவுத்துறையின் மூலம் சீக்கிய சகோதரர்களையே தம் வசப்படுத்தி காலிஸ்தான இயக்கத்தை வலுவுடன் அரங்கேற்றியது. இந்திரா காந்தியும் அரசியல் ஆதாயத்திற்காக அதில் தம் பங்கிற்கு அந்த இயக்கத்தை வளர்த்தார். வீர சாவர்க்கர் கூறியது போல "ஹிந்துக்கள் ஒருங்கிணையவில்லையெனில் அவர்கள் அனாதைகளாகும் போது எவரும் அவர்களுக்காக கண்ணீர் கூட சிந்த மாட்டார்கள்".

10:54 AM, October 10, 2005  
Blogger குழலி / Kuzhali said...

I Strongly condemn this murder. these terrorists are not human beings, same time I do not agree Aravind's last feed back also.

1:21 AM, October 11, 2005  
Blogger AATHAVAN said...

சக மனிதனை கொல்லும், கொல்லத்துடிக்கும் அனைவரும் வன்மையாக கண்டிக்கவும் தண்டிக்கவும் பட வேண்டியவர்களே.
இதில், மதத்தால் கூறு போடுவது சரியல்ல.
புஷ், பின் லேடன், மோடி, இந்த ஹிச்புல் எல்லோரும் தத்தம் மதத்தையே கேவலப்படுத்துகிறவர்கள்.
'இந்துக்களே! ஒன்றினணயுங்கள் என்பதும் 'இசுலாமியெரே ஒன்றிணைவீராக' என்பதும் பயங்கரவாத கூப்பாடுகளே.

பயங்கரவாதத்துக்கெதிராக மனிதர்களே ஒன்றிணையுங்கள் என்று கோரலாம்.
அப்படி சொல்லும்போது தாம் சார்ந்திருக்கிற கட்சி/மதத்திலுள்ள _____________வர்களுக்கும் எதிராக குரல் எழுப்ப வேண்டி வரும்

5:45 AM, October 11, 2005  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

அன்புள்ள குழலி மற்றும் ஆதவன்,

தங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி.
பாலஸ்தீனியர்கள் என அழைக்கப்படும் இஸ்ரேலிய அராபியர்களுக்காக குரல் எழுப்பப்படும் அளவிற்கு திபெத்திய அகதிகளுக்கு சர்வதேச அளவில் வலுவான குரல் எழுப்பப்படுகிறதா கவனியுங்கள். சர்வதேச அளவில் பங்களாதேசத்தின் ஹிந்து தலித்களுக்கு எதிராக இழைக்கப்படும் மிக மோசமான வன்கொடுமைகள் மற்றும் வனவாசி பௌத்த சமுதாயங்களுக்கு எதிராக இழைக்கப்படும் இனத்துடைப்பழிப்புகளுக்கு எதிராக இங்கே தங்களை தலித் காவலர்கள் என பறை சாற்றுவோர் கடைபிடிக்கும் இறுகிய மௌனத்தை கவனியுங்கள். டர்பனில் இனவாத எதிர்ப்பு எனும் பெயரில் நடைபெற்ற சர்வதேச நிகழ்வொன்றில் இங்கிருந்து சென்றிருந்த தலித் அமைப்புகள் மேல் கூறிய கொடுமைகளுக்கு எதிராக மௌனம் சாதித்து அதே நேரத்தில் இஸ்ரேலுக்கு எதிராக, பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக பலத்த குரலில் கண்டனம் எழுப்ப தவறவில்லை. திரிபுராவின் ஜமாத்தியா வனவாசிகளுக்கு எதிராக பாப்டிஸ்ட் திருச்சபை ஆதரவுடன் நடத்தப்படும் வன்முறைகள் கூட்டுப்படுகொலைகள் ஆகியவையும் அவ்வாறே தெளிவான செய்தி அறிக்கைகள் இருந்தும் கண்டுகொள்ளப்படாமல் போகின்றன. எங்கள் பகுதிக்கு வருவது 'தி கிண்டு' எனும் நாளேட்டின் திருவனந்தபுரம் பதிப்பு. முழுக்க தேடிவிட்டேன். இந்தப்படுகொலை குறித்து சிறிய தகவல் கூட இல்லை. நாலுவரி கூட. இதுவே ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தின் ஜன்னல் உடைக்கப்பட்டால் கூட தலையங்கமே தீட்டியிருக்கக் கூடும் 'தி கிண்டு'. தவறெனக் கூறவில்லை. இது ஒரு வித மனநிலையின் ¦வளிப்பாடு. நாகர்கோவில் நகரில் சிறுபத்திரிகைகள் விற்கும் 'முற்போக்கு'களின் கடைகளில் இஸ்லாமிய அடிப்படைவாத பத்திரிகைகள் விற்கப்படுவதை கண்டிருக்கிறேன். அல் ஜஸீரா போன்ற இஸ்லாமிய மேலாதிக்கத்தை வலியுறுத்தும் ஊடக அமைப்புகளுக்கு அமெரிக்க எதிர்ப்பு என்னும் போர்வையில் இடதுசாரி-போலி மதச்சார்பற்ற அறிவுஜீவிகள் (வாணிப இலாப சமன்பாடுகள் திரைமறைவில் இயங்க) ஊக்கமளிப்பதையும் கண்டிருக்கிறேன். என்றாலும் இவர்கள் 'மானுடநேயம்' என்கிற வார்த்தையை இவையெல்லாவற்றையும் மறைக்க பயன்படுத்துவதையும் கண்டிருக்கிறேன். கேள்வி...இவர்கள் ஏன் ஹிந்துக்களுக்கு எதிராக பலதளங்களில் நடத்தப்படும் வன்முறைகளை கண்டுகொள்வதில்லை. நேற்று நாகர்கோவில் குளத்து பஸ் ஸ்டாண்டில் உள்ளேயிருக்கும் அம்மன் கோவில் அருகில் நின்றுகொண்டு ஒருவர் ஒரு பிரசுரத்தை கொடுத்தார். ஏசுவே மீட்பர் எனக்கூறும் அப்பிரசுரம் கனடாவில் அச்சடிக்கப்பட்டது. அப்பிரசுரம் நான் சேகரித்துள்ள பல கிறிஸ்தவ துண்டு பிரசுரங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் மென்மையானது. அதில் உள்ள பாவப்பட்டியலில் 'விக்கிர ஆராதனை' விபச்சாரம் எனும் பாவத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. எனது தாய் தந்தையர் அல்லது அந்த அம்மன் கோவிலில் வணங்கிச்செல்லும் பெண்கள் 'விபச்சாரத்திற்கு இணையான' பாவத்தை செய்வதாக வெளிப்படையாக கூறும் ஒரு பிரசுரத்தை இவ்வாறு பொது இடத்தில் விநியோகிப்பதிலிருக்கும் வன்முறை ஏன் நம் அறிவுஜீவிகளின் கண்களை உறுத்துவதில்லை? ஏனெனில் ஹிந்துக்கள் ஒரு வலிமையான சக்தியாக, ஆரோக்கியமான சமுதாயமாக இல்லை என்பதே. இந்த நாட்டில் உண்மையிலேயே சாதிய கொடுமைகள் அகலவேண்டுமென நீங்கள் விரும்புவீர்களெனில், உண்மையான மத நல்லிணக்கம் உருவாக வேண்டுமெனில், ஹிந்துக்கள் ஒரு ஆரோக்கியமான வலிமையான சமுதாயமாக இருப்பது அவசியம். அவ்வாறு அவர்கள் இல்லாதிருப்பின் அவர்கள் பரவுதன்மை கொண்ட மேலாதிக்க சக்திகளையும், சமுதாயத்தை உள்ளிருந்து நாசம் செய்யும் சாதீய சக்திகளையும் தாங்களே தங்கள் மீது பாய்ந்தழிக்க வரவேற்பவர்களாவார்கள். ஹிந்து சமுதாயத்தை வலிமையுடன் திகழச் சொல்வது பயங்கரவாதமல்ல. உதாரணமாக ஒன்று: நாசிகள் ஜெர்மானியத்தை ஒருமைப்படுத்த உருவாக்கிய 'மற்றவர்' பிம்பம் ஒற்றைத்தன்மை கொண்ட யூதர். நாசிகளால் உருவாக்கப்பட யூத பிம்பம் எவ்வித உள்-வேற்றுமையையும் இல்லாத ஒற்றைத்தன்மை கொண்டது. அவ்வாறே ஹிந்து விரோத சக்திகளால் உருவாக்கப்படும் பிராம்மணிய பிம்பம். அவ்வாறே இஸ்லாமிய மேன்மவாதிகளால் உருவாக்கப்படும் யூதர் குறித்த பிம்பம். மாறாக ஹிந்துத்வமோ கிறிஸ்தவ-இஸ்லாமிய சமுதாயங்களின் ஒற்றைத்தன்மையின்மையை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறது. உதாரணமாக, கபீர், ரஸகான், அஷ்பகுல்லாகான், பிஸ்மில்லாகான், ஜோஸப் கர்னீலியஸ் குமரப்பா, அஸிஸியின் புனித பிரான்ஸிஸ், தெயில் தி சார்டின், அப்துல்கலாம் ஆகியோரை தமது ஆதர்ச புருஷர்களாக ஏற்க அது தயங்கியதில்லை. 1980களில் அஷ்பகுல்லாகான் குறித்த குழந்தைகளுக்கான ஒரே நூல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பிரசுர கிளையான ராஷ்ட்ரோத்பவன் வெளியிட்ட நூல் மட்டும்தான். ஆனால் மதச்சார்பின்மை பேசும் இடதுசாரிகளால் இவர்களெல்லாம் 'பாதி ஹிந்து-பாதி முஸ்லீம்' 'முக்கால் ஹிந்து-கால் முஸ்லீம்' என்றெல்லாம் இழிவாக பேசப்பட்டனர். எனவே ஹிந்து ஒற்றுமை குறித்து பேசுவது பயங்கரவாதம் ஆகாது.

7:35 AM, October 11, 2005  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

ஜனநாயகம் பின்னூட்டம் எனும் பெயரில் இங்கு இட்ட 'தண்ணீரில் எழுதப்பட்ட மனுநீதி' எனும் பிரச்சார கட்டுரையை நீக்கியுள்ளேன். ஆனால் இது முக்கியமான கட்டுரை. அக்கட்டுரையில் உள்ள தகவல்களில் நூற்றில் பத்து உண்மை இருப்பினும் அது வருத்தம் தரத் தக்கது. எனவே இக்கட்டுரையை முழுமையாக இவ்வலைப்பதிவில் ஒரு தனிப்பதிவாக இட அவர் அனுமதி தேவை. 'சூழலியல் பிரச்சனைகளும் கோட்பாடுகள் சார்ந்த நிலைபாடுகளும்' எனும் பெயரில் நவம்பர் மாத தொடக்கத்தில் நான் எழுத நினைத்திருக்கும் பதிவினில் இப்பின்னூட்டம் இட்டவர் தமது பங்களிப்பை அளிப்பாரெனில் மகிழ்ச்சி அடைவேன்.

7:19 PM, October 11, 2005  
Blogger P.V.Sri Rangan said...

நல்லது போடுங்கா,விமர்சிங்கோ.

7:39 PM, October 11, 2005  
Blogger Sankaran said...

Why you never care about the Tamil Hindus killed by Singhalese army in Tamil Elam?

9:52 PM, October 11, 2005  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

இந்த சுட்டியை பாருங்கள்:
http://www.geocities.com/hindoo_humanist/lankan.html

11:01 PM, October 11, 2005  
Blogger AATHAVAN said...

//.......எனவே ஹிந்து ஒற்றுமை குறித்து பேசுவது பயங்கரவாதம் ஆகாது.//

"..... எனவே முசுலிம் ஒற்றுமை குறித்து பேசுவது பயங்கரவாதம் ஆகாது"

".....எனவே கிறித்துவ ஒற்றுமை குறித்து பேசுவது பயங்கரவாதம் ஆகாது"

அவரவர் பார்வை, அவரவர் நியாயங்கள்...ஹூம்.!!!

11:04 AM, October 15, 2005  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

நிச்சயமாக நண்பரே.
ஹிந்துக்களை மதமாற்ற கிறிஸ்தவர்களே ஒருங்கிணையுங்கள் என்று சொல்வது பயங்கரவாதத்தின் ஒரு முகம். அல்லது காஃபீர்களை துடைத்தழிக்க ஈமான் கொண்ட இஸ்லாமியர்களே ஒருங்கிணையுங்கள் என்பது பயங்கரவாதம். ஆனால் 'பாரத இஸ்லாமிய சகோதரர்களே நம் பண்பாடு காக்க ஒருங்கிணைவோம். கபீர் முதல் அப்துல்கலாம் வரை ஒரு பாரம்பரியம் உள்ள நாம் வகாபியிச குறுகிய அடிப்படைவாத இறையியலுக்கு அடிமையாக வேண்டியதில்லை. நம்மை கல்வி-பொருளாதார அடிப்படையில் முன்னேற்றுவோம்' என்றெல்லாம் இஸ்லாமிய சமுதாயத்தை ஒருங்கிணைக்க முன்வருபவர்களுக்கு என்றென்றும் ஆதரவளிக்க காத்திருக்கிறோம். கிறிஸ்தவர்களே மதமாற்றமல்ல நம் நம்பிக்கை. ஜோசப் கர்னீலியஸ் குமரப்பாவையும், அந்தோனி தி மெல்லாவையும் உருவாக்கிய இச்சமுதாயத்திற்கு மேற்கத்திய பணமுதலைகள் தூக்கி எறிந்த எலும்புத்துண்டுகளை வைத்து மதமாற்றம் செய்யும் ஏமாற்று மதமாற்றிகள் தேவையில்லை. அனைத்து பாரத சமுதாயத்துடன் இணைந்து தேச முன்னேற்றத்துக்கு உழைக்க இணைந்து செயல்பட கிறிஸ்தவர்களே ஒருங்கிணைந்து வாருங்கள்" என அழைப்பு விடுக்கும் கிறிஸ்தவர்களுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோம். பணியாற்றியும் வருகிறோம்.

6:37 PM, October 15, 2005  
Blogger Vetrivel said...

Neels,
Add GF also to your list.
Vel

India empowered to me is Bharat and India ceasing to be two different people

George Fernandes
NDA Convenor, former Defence Minister

To me, India Empowered means a country where poverty has been eliminated and no one goes to bed without a meal. Where the old slogan of roji, roti aur makan (job, food and house) is a reality and no more a slogan. Where the State looks after the citizens’ health so that no one has to die at the hospital gates for want of medicine they cannot afford. A nation which is at peace with itself and with its neighbours with no power on earth daring to threaten it.

Where religion does not divide the people but binds them in love. Where man-woman equality is not a favour to women but a dogma. Where child mortality is a bad dream from the distant past. Where all children—from the Prime Minister’s to the sweeper’s—have the same opportunities to study and learn so that talent stands out and mediocrity is left behind.

When the casual way the farmers are treated by the political establishment, the government and corrupt financial institutions is over and the farmers are given the same respect which any other labouring class receives.

Where dynastic politics which breeds corruption, generation after generation, has no space.

Where truth reigns and lies are shown up for what they are, whether uttered by an individual or by a journalist or by a politician or within a family. Where justice is not on sale and the unjust get the punishment they deserve. Where the curse of caste system has been ostracised and **the whole nation works together to raise India to its heights in the spirit of Vasudeva Kutumbakam (the whole world is one family)**.

If I am not mistaken, it was the then leader of the farmers, Sharad Joshi, who divided India into two parts. Bharat, being the other part. In this divide, India was the land of the haves and Bharat, the land of the poor. The rich landlords were a part of India along with industrialists, while the small farmers and workers were Bharat.

The ‘Reforms’, whatever they may mean, have not bridged this divide. If anything, the ‘Reforms’ have widened the divide, with the poor becoming poorer and the rich growing richer by the day at the expense of the poor. It is not that the Reforming Indians were not aware what was waiting for the poor of Bharat. But it was not their concern. Their eyes were riveted to the manna that was about to drop for them from heaven.

After all, it was Jesus who said, ‘‘To those who have, more will be given, and those who have little, even whatever they have, will be taken away from them.’’

It was under the leadership of the United States, whose white population believes that theirs is God’s own land, that the ‘Reforms revolution’ started. Indians, who benefited from the largesse they received from the US, joined its bandwagon. Thereafter, many natives joined in. To cut a long story short, Bharat is going down as India is shining.

When Charu Mazumdar started his Revolution in Naxalbari in West Bengal in 1967, it was a few months since I had entered Parliament after defeating S K Patil in South Mumbai constituency. Dr Ram Manohar Lohia called me over to his residence and asked me to proceed immediately to Bengal and meet Charu Mazumdar. The brief he gave me was to see if we could establish a political relationship with him.

Though Naxalbari had made a deep impression on me, the violence built into it was not something I could appreciate. I mentioned this to Dr Lohia. He told me to discuss it with Charu Mazumdar and his associates and said nothing remains static in politics, a version of it I had an occasion to hear from British Prime Minister Harold Wilson: ‘‘Seven days is a long time in politics.’’

The Naxal movement began among the farm labour whose exploitation by the landlords was crying to the high heavens but the Congress government of the day had shut its ears to their cries, so rooted were their interests with the landlords. The tea labour in West Bengal’s huge tea gardens had labour which was mostly indentured and included as many women as men, with the women's population often being more than that of men.

Working conditions in these tea estates were so miserable that more often than not, the sick were allowed to die rather than provided medication, a situation that prevails even now in the Assam tea gardens.

Whatever may be the state of the Naxal movement at the moment, it cannot be denied that it is only through their work among the most deprived among the country that they have established control over vast areas from the north to the south and the east to the west. All efforts of every government to deal with the Naxal movement have failed for the simple reason that every government could not relate itself to the poor and the dispossessed.

The empowerment of India, that is Bharat in this case, must start from the lowest rung of the ladder of our society. If it does not, talk of empowerment is bound not to take us anywhere. India may have to go through what Latin American countries had to go through. To avoid this, India will finally have to extricate itself from the rigid grip of corrupt, vested interests and continuation of the British Raj that goes on under different colours. All else will be mere tinkering.

URL: http://www.indianexpress.com/full_story.php?content_id=80088

10:07 PM, October 15, 2005  
Blogger Aarokkiyam உள்ளவன் said...

ஜிகாதி வெறி பிடித்த மிருகங்களுக்கு இந்த நிலநடுக்க அழிவுக்காலத்திலும் காஃபீர்களைக் கொல்லுவதுதான் மானுடசேவை போலும்.

குஜராத்தில் முஸ்லிம்களை (குழந்தைகளை, கற்பினிகளை, முதியவர்களை,ஊனமுற்றுவர்களை,பெண்களை) கொன்ற இந்துத்துவாவில் இருந்து கொண்டு, தீவிரவாதம் பற்றி பேசுவதற்கு வெட்கமாக இல்லை உமக்கு?

ஆடு நனைந்தால் ஓநாய் அழுகுமாம்.

இஸ்ரேலிய அராபியர்களுக்காக குரல் எழுப்பப்படும் அளவிற்கு திபெத்திய அகதிகளுக்கு சர்வதேச அளவில் வலுவான குரல் எழுப்பப்படுகிறதா கவனியுங்கள்

பாலஸ்தீனர்களின் நாட்டை அபகரித்துக் கொண்டு (உம் போறோரின் கும்பல் பாபர் மசூதியை அபகரித்தது போல்) அவர்களுக்கு எதிராக நடக்கும் அடக்குமுறைக்குத் தான் உலகம் குரல் கொடுக்கிறது. திபேத்தியர்களின் நிலையை பாலஸ்தீனர்களின் நிலையுடன் ஒப்பிட்டு நியாயவான்களுக்கு எதிரான உமது அரிப்பை சொரிந்து கொள்ளாதீர்.

ஹிந்துக்கள் ஒரு வலிமையான சக்தியாக, ஆரோக்கியமான சமுதாயமாக இல்லை என்பதே. இந்த நாட்டில் உண்மையிலேயே சாதிய கொடுமைகள் அகலவேண்டுமென நீங்கள் விரும்புவீர்களெனில், உண்மையான மத நல்லிணக்கம் உருவாக வேண்டுமெனில், ஹிந்துக்கள் ஒரு ஆரோக்கியமான வலிமையான சமுதாயமாக இருப்பது அவசியம்.

எப்படி ஐய்யா? விளக்குங்களேன். அதற்கு முன் இந்து மதம் என்றால் என்ன? யார் இந்து? என்றும் மனசாட்சியென்று ஒன்று இருந்தால் அதனை முன் வைத்து விளக்கவும்.

மக்களின் வரிப்பணத்தில் கட்டப்படும் பள்ளிகளில் கூட பூமி பூஜை செய்யும் வன்முறையை என்னவென்று சொல்வீர்?

11:36 PM, October 16, 2005  

Post a Comment

<< Home