Monday, November 20, 2006

ஆர்.எஸ்.எஸ்ஸின் பாசிச பார்ப்பனீய சதி-1

ஆம் நண்பர்களே! என்ன அதிசயமாக இருக்கிறதா? என்ன எப்போதும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை ஆதரித்து எழுதுகிற இவன் ஏன் இப்படி எழுதுகிறான் என்று. எத்தனையோ பகுத்தறிவு இயக்கத்தவர்கள் கூறினார்களே அப்போதெல்லாம் அவர்களை எள்ளி நகையாடினேன். ஆனால் இப்போதுதான் எனக்கே புரிந்தது ஆர்.எஸ்.எஸ் ஒரு பார்ப்பன பாசிச சதிகார இயக்கம் என்று. இதற்கு காரணம் இன்று மதியம் நான் அறிய நேர்ந்த ஒரு நிகழ்ச்சிதான். அதனை விளக்கமாக கூறுகிறேன் அப்போது உங்களுக்கெல்லாம் புரியும்.பாசிச அமைப்பில் பிரச்சாரக்காக இருந்து திராவிடருக்குள் ஊடுருவிய திரு. தனுசுஜி

1932 இல் சென்னை புளியந்தோப்பில் பிறந்த தனுசு என்பவர் 1955 இல் வந்தேறி பார்ப்பனகும்பலான ஆர்.எஸ்.எஸ்ஸில் பிரச்சாரக்காக சேர்ந்தார். இந்த பாசிஸ்டு அவரது தீவிர பார்ப்பனீய பாசிச ஈடுபாட்டால் பிராந்த வ்யவஸ்தா ப்ரமுக்காக பதவி உயர்வு பெற்றார். 1998 இல் இந்த பார்ப்பனீய வெறியர் இறந்துவிட்டார். அதற்கு பிறகு நடந்ததை படித்த போது எனது இரத்தம் அப்படியே உறைந்துவிட்டது நண்பர்களே. தந்தை பெரியார் கூறினாரே பார்ப்பன சதி என்று அந்த சதிதான் நடந்தேறியுள்ளது. ஆமாம் பார்ப்பன கும்பல் அந்த சாவை திராவிட இயக்கத்தில் ஊடுருவ பயன்படுத்திவிட்டது. அந்த வெட்கங்கெட்ட மனிதாபிமானமற்ற வந்தேறி கும்பல் அவரது கண்ணை தானமாக கொடுப்பதாக கூறி அதில் ஒரு கண்ணை ஒரு திராவிடர் கழக பிரமுகருக்கு அளித்துள்ளது.

பாருங்கள் எவ்வளவு தந்திரமாக பாசிச இயக்கத்தின் கண்ணை திராவிடர் கழகத்தில் உளவு பார்க்க ஊடுருவ வைத்துள்ளது இந்த சதிகார வந்தேறிகள் கும்பல் பார்த்தீர்களா நண்பர்களே. இந்த கண்தான -மன்னிக்கவும் - வந்தேறிகளின் கண் ஊடுருவல் விசயத்தை- வெளியே தெரியாமல் கமுக்கமாக உள்ளுக்குள்ளே வைத்திருக்கிறார்கள் இந்த பாசிஸ்ட்கள்.இதிலிருந்தே இந்த சதிகார கும்பலின் மனிதநேயமின்மை தெரியவில்லையா? எவ்வளவு பகுத்தறிவுவாதிகளாய் நாத்திகர்களாய் இருந்தாலும் பார்ப்பானை உள்ளேவிடக்கூடாது எனக் கூறிய பகுத்தறிவு தந்தை(விடுதலை, 20-10-1967) பெரியாரின் மனிதாபிமானம் எங்கே?பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே என்று கூறிய வந்தேறி முண்டாசு கவிஞனின் சூழ்ச்சியை கடைபிடிக்கும் இந்த ஆர்.எஸ்.எஸ் கயவர் கும்பலெங்கே? இறந்த பிறகும் திராவிடர் கழக உறுப்பினருக்கு கண்ணை கொடுத்து ஊடுருவ பார்க்கும் வந்தேறி ஆர்,எஸ்,எஸ் கும்பலின் பாசிச போக்கு எங்கே! உண்மை அப்போதுதான் என் உள்ளத்தில் உறைத்தது என்னருமை தமிழ் மக்களே!
எனவேதான் தோழர்களே நான் ஆர்.எஸ்.எஸ்காரனாகவே இருந்துவிட்டு போகிறேன். நீங்கள் எப்படி?

7 Comments:

Blogger ஜயராமன் said...

உங்களுக்கு நையாண்டியும் நன்றாகத்தான் கலக்குகிறீர்கள்.

தூக்கிவாரிப்போடுகிறது. இவ்வளவு பெரிய சதி நடந்திருக்கிறது என்று தெரிந்தபின் நம் திராவிட குஞ்சுகள் வீறு கொண்டு எழுந்து இந்த சதியை முறியடிக்கவேண்டும் என்று நான் அந்த எல்லாம் வல்ல வெண்தாடி ஏக இறைவனை வேண்டுகிறேன்

நன்றி

10:09 AM, November 20, 2006  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

இன்னமும் பயங்கர சதி வேலைகளை இந்த வந்தேறி ஆர்.எஸ்.எஸ் பாசிச பார்ப்பனீய நாசி ஹிட்லேரிய சாதீய, பிற்போக்கு ஏகாதிபத்திய (மூச்சு வாங்குது எதயாவது விட்டுட்டா சேத்துக்குங்க) கும்பல் செய்யுது ஒவ்வொன்றாக வெளிப்படுத்துகிறேன்.

11:17 AM, November 20, 2006  
Blogger கால்கரி சிவா said...

நீல்ஸ்,

RSS இயக்கம் பல நல்ல காரியங்களை சத்தமில்லாமல் செய்கிறது என படித்துள்ளேன். இது போன்ற காரியங்கள் மனதை நெளிய வைக்கிறது. RSS இயக்கம் சுனாமி காலத்தில் மிக பெரிய சேவை ஆற்றியதாக ஒரே ஒரு பத்திரிக்கையில் படித்தேன். ஏன் இந்த இருட்டடிப்பு?


மேலும் ஒருவர் பதிவுகளில்
(பெயர் ஞாபகமில்லை) அவர் RSS இயக்கத்திலிருந்து விலகி நாத்திகர் ஆகிவிட்டதாகவும் RSS இயக்கம் ஒரு டுபாக்கூர் என்றும் புளுகியிருந்தார்.

அவரிடம் RSS இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கம் என சொல்கிறார்களே? அவர்களிடமிருந்து நீங்கள் கற்ற தீவிரவாதம் என்ன என கேட்டிருந்தேன் அவரிடமிருந்து பதிலில்லை.

11:18 AM, November 20, 2006  
Blogger bala said...

//மேலும் ஒருவர் பதிவுகளில்
(பெயர் ஞாபகமில்லை) அவர் RSS இயக்கத்திலிருந்து விலகி நாத்திகர் ஆகிவிட்டதாகவும் RSS இயக்கம் ஒரு டுபாக்கூர் என்றும் புளுகியிருந்தார்.

அவரிடம் RSS இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கம் என சொல்கிறார்களே? அவர்களிடமிருந்து நீங்கள் கற்ற தீவிரவாதம் என்ன என கேட்டிருந்தேன் அவரிடமிருந்து பதிலில்லை//

கால்கரி அய்யா,

எனக்கும் அந்த தோழர் பெயர் ஞாபகம் இல்லை. ஆனா இப்பொ அவர் பாம்பு பிடிப்பது எப்படி ட்ரைய்னிங் எடுத்திகிறார்.கூடவே புதிய கலாசாரம் பத்திரிகை சந்தா ஏஜென்டாகவும் பார்ட் டைம் வேலையும் செய்யறார்.தோழர் அசுரன் அய்யாவோட சேர்ந்து அஃப்சல் போன்ற ஒடுக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுக்கிறார்.
இப்படி பல வேலைகளை அநாயசமாக செய்து முடிக்கும் அசகாய சூரர் அவர்.

பாலா

6:54 PM, November 20, 2006  
Blogger ஜடாயு said...

அரவிந்தன், திரு. தனுசு அவர்கள் பற்றிய ஒரு செய்தியை மட்டும் வெளியிட்டு அவர்கள் திட்டங்களை எல்லாம் சொல்லாமல் விட்டுவிட்டீர்களே.

எல்லா ஆர்.எஸ்.எஸ். பிரசாரகர்களும் தாங்கள் இறந்தபின் தங்கள் உறுப்புக்களைத் தானமாக வழங்குவதற்காகப் பதிவு செய்திருக்கிறார்களாம். இப்படி எத்தனை திராவிடக் கண்களுக்குள் நுழைந்து வேவு பார்க்கப் போகிறார்களோ தெரியவில்லை. நாம் *கண் காணிக்க* வேண்டிய விஷயம் இது.

இது மட்டுமல்ல எல்லா ஊர்களிலும் ரத்ததானம் என்ற பெயரில் ஏகத்துக்கு ஆர்.எஸ்.எஸ். ரத்தத்தை பாட்டில்களில் அடைத்து வைத்திருக்கிறார்கள். விபத்து சமயங்களில் இந்த வந்தேறிகளில் ரத்தம் உடலில் ஏறி ஒடுக்கப்பட்ட திராவிட, சிறுபான்மை சகோதரர்கள் திடீரென்று "பாரத் மாதா கீ ஜய்" என்றெல்லாம் கோஷம் போடவும் வாய்ப்பு இருக்கிறது. இந்த பாசிச சதியை நினைத்தாலே "ரத்தம்" கொதிக்கிறது!!

9:35 PM, November 20, 2006  
Anonymous Anonymous said...

ஏதேது ஆளாளுக்கு நையாண்டியில் தூள் கிளப்புகிறீர்கள். அரவிந்தன் உங்களுக்கு சீரியஸ் மாட்டர் போலவே நையாண்டியும் மிக அருமையாகவே வருகிறது. அவ்வப் பொழுது இப்படி எழுதி ஆர் எஸ் எஸ் இந்துத்துவா சதிகளை அம்பலப் படுத்துங்கள்.

10:01 PM, November 20, 2006  
Blogger Muse (# 01429798200730556938) said...

ஜடாயு அவர்களே,

எல்லா ஆர்.எஸ்.எஸ். பிரசாரகர்களும் தாங்கள் இறந்தபின் தங்கள் உறுப்புக்களைத் தானமாக வழங்குவதற்காகப் பதிவு செய்திருக்கிறார்களாம்.

இது போன்ற செயலை எந்த அமைப்பும் செய்தது கிடையாது. இதற்கு தனிமனித அளவிலும், அமைப்பு ரீதியாகவும் ஆன்மீக பலம் தேவை.

11:03 AM, November 22, 2006  

Post a Comment

<< Home