Saturday, November 18, 2006

புத்த தருமத்தின் அழிப்பும் இஸ்லாமும்


இந்த புத்தரை தூக்கில் தொங்க விட்டவர்கள் யார்?
விடை காண பாருங்கள்:
http://video.google.com/videoplay?docid=-6331994107023396223
பௌத்த மதம் அழிந்தது குறித்து அண்ணல் அம்பேத்கர் என்ன சொல்கிறார்?

"இந்தியாவில் பௌத்த தர்மத்தின் வீழ்ச்சிக்கு காரணம் முசல்மான்களின் படையெடுப்பு என்பதில் எவ்வித ஐயமும் இருக்க முடியாது." என்று கூறும் பாபா சாகேப் அம்பேத்கர் மேலும் தெள்ளத்தெளிவாக கூறுகிறார் "இஸ்லாம் இந்தியாவில் மட்டுமல்ல அது எங்கெங்கு சென்றதோ அங்கெல்லாம் அழித்தது." இக்கொடுமையை அவர் விவரிக்கிறார்,
"முஸ்லீம் படையெடுப்பாளர்களால் அழிக்கப்பட்ட பௌத்த கலாசாலைகளில் ஒருசிலவற்றின் பெயர்களையாவது கூற வேண்டுமானால் நாலந்தா, விக்கிரமசீலா, ஜகத்தாலா, ஓடந்தபுரி ஆகிய இடங்களில் இருந்து முஸ்லீம் படையெடுப்பாளர்களால் அழிக்கப்பட்டவற்றைக் கூறலாம். முஸ்லீம் படையெடுப்பாளர்கள் நாடெங்கும் இருந்த பௌத்த மடாலயங்களையெல்லாம் அழித்தார்கள். பௌத்த துறவிகள் இந்தியாவிற்கு வெளியே நேபாளம், திபெத் என தப்பி ஓடினார்கள். மிக அதிக அளவில் பௌத்த துறவிகள் முஸ்லீம் தளபதிகளின் நேரடி ஆணைகளின் படி கொல்லப்பட்டார்கள். இசுலாமிய படையெடுப்பாளர்களின் வாளால் பௌத்த துறவிகள் அழிக்கப்பட்டதை முஸ்லீம் வரலாற்றாசிரியர்களே விவரித்து எழுதியுள்ளனர்" எனக்கூறும் அண்ணல் அம்பேத்கர் முடிக்கிறார்: " பௌத்த துறவிகள் மீது இஸ்லாமிய படையெடுப்பாளர்களால் ஏவப்பட்ட வன்கொலைகள் மிகக்கொடுமையானது. கோடாலியின் வெட்டு (பௌத்தம் எனும் மரத்தின்) அடிவேரிலேயே விழுந்தது. பௌத்த துறவிகளைக் கொன்றதன் மூலம் இஸ்லாம் பௌத்தத்தைக் கொன்றது. இதுவே பௌத்த சமயத்தின் மீது இந்தியாவில் ஏற்பட்ட மிகக் கொடுமையான அடியாகும்." (பாபா சாகேப் அம்பேத்கரின் எழுத்து தொகுப்பு பாகம்-2 பக். 229-38)

20 Comments:

Blogger மாசிலா said...

உங்கள் பதிவை, ஓடும்படத்தை பார்த்தேன்.
அம்பேத்கரின் கூற்றுகள் மற்றும் நினைவில் தங்கின.
வெள்ளைக்கார நாடுகளில் நடக்கும் அட்டகாசங்களை காட்டி வீணாக கலகம் உண்டாக்குவது போல் தெரிகிறது.
குழப்புகிறீர்கள்.
உங்கள் குறிக்கோள் இஸ்லாமியத்தை மட்டும் தாக்குவதா? அல்லது இந்திய மக்கள், குறிப்பாக புத்த சமயம் அடைந்த இன்னல்களை விவரிப்பதா? யாருக்காக வாதாடுகிறீர்?
புரியவில்லை!

11:48 AM, November 18, 2006  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

நன்றி. புத்ததருமம் பாரதத்திலிருந்து அழிந்ததற்கான மூல காரணி இசுலாமிய படையெடுப்பு. இதனை அண்ணல் அம்பேத்கர் மட்டுமல்ல பல பௌத்த நூல்களும் கூறுகின்றன. இன்றைக்கும் இந்த நிலை தொடர்கிறது என்பதுதான் கொடுமை. சிட்டகாங்க் பிரதேசத்தில் வனவாசி பௌத்தர்கள் இனசுத்திகரிப்புக்கு ஆளாக்கப்படுகின்றனர். இவர்களில் பலர் பாரதத்தில் அகதிகளாக இருக்கின்றனர். இவர்களுக்காக குரல் கொடுக்க 'இந்துத்வ பாசிஸ்டுகள்' என வர்ணிக்கப்படும் இயக்கங்களை தவிர வேறு எவருமிலர். ஆனால் நாளைக்கு இவர்கள் முழுமையாக துடைத்தழிக்கப்பட்டுவிட்டால் பழி என்னவோ 'பிராமனீயத்தின்' மீது எளிதாக விழுந்துவிடும். மேற்கத்திய நாடுகளில் ஜிகாதிய தாக்குதல்களையும் அத்தாக்குதல்களின் சித்தாந்த பின்னணியையும் விளக்கியது அப்படம். ஆனால் பாரதத்தில் இதே சித்தாந்த பின்ன்ணி கொண்டவர்கள் தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். பாகிஸ்தானிலும் பங்களாதேசிலும் ஆப்கானிஸ்தானிலும் இன அழிப்பு நடந்து வருகிறது. இந்துக்கள்=அந்தணர்கள்=சாதி கொடுமை = வஞ்சக இனம் என்பது போன்ற சமன்பாடுகளை முற்போக்கு என்கிற பெயரில் சில வெறியர்களை சமைத்துக்கொடுக்க அதனை கொண்டு வெறுப்பியல் கதையாடல்களை வளர்த்து இனப்படுகொலைகளை நிறைவேற்றுகின்றனர் இஸ்லாமிய பாசிஸ்டுகள். இதில் மானமிழந்து மரியாதையிழந்து நிலமிழந்து அழிவது கணிசமான பேர்கள் இவர்கள் யாரை வாழவைப்பதாக கூறுகிறார்களோ அதே தலித்துகள்தாம் என்பதுதான் கொடுமையான முரண்நகை.

12:13 PM, November 18, 2006  
Anonymous Anonymous said...

good post. is this listed in tamilmanam?

12:26 PM, November 18, 2006  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

நன்றி அனானி, ஆம். தமிழ்மணத்தில் இந்த வலைப்பதிவு உள்ளது.

12:32 PM, November 18, 2006  
Blogger thiru said...

நீலகண்டன்,

பௌத்த விகாரைகளை எரித்து பௌத்தர்களை கொன்றொழித்த பார்ப்பனீய பாசிசம் பற்றியும் அண்ணல் அம்பேத்கார் சொல்லியிருக்கிறார். அதை வசதியாக மறந்துவிட்டீர்களா?

12:48 PM, November 18, 2006  
Blogger மாசிலா said...

இனச்சுத்திகரிப்பு, இனப்படுகொலைகள் இவைகளை தடுத்து நிறுத்த இப்போது என்ன செய்யப் போகிறோம்?
உங்கள் பதிவு இதற்கு ஒரு ஆரம்பம் என வைத்துக்கொள்ளலாம். இதைத்தவிர வேறென்ன வழிகள் உள்ளன?

1:14 PM, November 18, 2006  
Anonymous Anonymous said...

All religions have indulged in wrongs. But islam's track record is the worst among religions. Muslims refuse to see the violence committed by themselves in the past as well as present but at the same time lament that others are persecuting them.

Good post.

3:52 PM, November 18, 2006  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

நன்றி மாசிலா.
இனப்படுகொலைகளுக்கு காரணமாக இருப்பது ஓற்றைப்பார்வையும் வெறுப்பியலும் கொண்ட சித்தாந்தங்கள். மக்களில் ஒரு சாராரை நயவஞ்சகராக வேற்றினத்தவராக காட்டும் சித்தாந்தங்கள் அத்தகைய சித்தாந்தங்களை தொடக்கத்திலேயே இனம் கண்டு அவற்றின் போலி தன்மைகளை வெளிப்படுத்துவது அவசியம். உதாரணமாக, அந்தண வெறுப்பு எனும் சித்தாந்தத்தை எடுத்துகொள்ளுங்கள். சாதீயத்தை ஆரியர்கள் சூழ்ச்சியாக ஆரியரற்றவர் மீது திணித்தாக கூறப்படும் இந்த கோட்பாடு அண்ணல் அம்பேத்கர், மகரிஷி அரவிந்தர் முதல் எஸ்.ஆர்.ராவ், பிஷ்ட், மார்க் கென்னோயர் வரை பலரால் தவறென கூறப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட சமுதாயங்களின் நிலைக்கு சாதிய அமைப்பு காலனிய ஆட்சியில் இறுக்கமடைந்தது முதல் இன்றைய அரசியல்வாதிகள் சாதியத்தை ஓட்டுவங்கிகளாக மாற்றியது வரை பல காரணிகள் உள்ளன. மனு சுமிருதி மற்றொரு காரணி. ஆனால் மனு அந்தணரல்லர். ஷத்திரியர். இதனை ஹிந்துக்கள் அனைவருக்குமான ஒரே சட்டநூலாக மாற்றியமையில் காலனிய ஆட்சியின் பங்கும் உள்ளது. இன்னும் எத்தனையோ கூறலாம். இவை அனைத்தையும் கணக்கில் எடுக்காமல் அந்தணரே காரணம் எனக் கூறுவதை காணுங்கள். உதாரணமாக கிறிஸ்தவ சமய பிரச்சாரகர்களால் 'பாம்பையும் பார்ப்பானையும்...' போன்ற வழக்குகள் 'பாம்பையும் யூதனையும் ...' எனும் ஐரோப்பிய வழக்குகளை இங்கே இறக்குமதி செய்து அவை திராவிட இயக்கத்தினரால் பரப்பப்பட்டதை காணுங்கள். பாரதத்தில் இயங்கும் அனைத்து பயங்கரவாத கும்பல்களும் (உல்பா முதல் சிமி வரை) இந்த கோட்பாட்டினை பயன்படுத்தி உள்ளதை காணுங்கள். 1971இல் வங்காளத்தில் பாகிஸ்தானிய ஜிகாதிகள் படுகொலை நடத்துவதற்கு முன்பாக இதே வந்தேறிகள்-ஆரியர்கள்-பிராமணர்கள் என்கிற பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. இலங்கையிலும் இன்று நாம் காணும் இனமோதல்களுக்கு பின்னால் சிங்களர்-ஆரியர் தமிழர் திராவிடர் என்கிற ஆதாரமற்ற காலனியபகுப்பு காரணமாயிற்று. தெற்காசியா எனும் பாரத கண்டத்தில் நடந்த முக்கிய இனப்படுகொலைகளை கணக்கிட வேண்டும்.
1) பாகிஸ்தான் இந்துக்களின் அழிப்பும் நிலையும்
2) ஆப்கானிஸ்தான் இந்துக்களின் அழிப்பும் நிலையும்
3) கிழக்கு பாகிஸ்தான்-பங்களாதேஷ் இனப்படுகொலைகள்
4) அங்கு இன்றும் தொடரும் பௌத்த அழிப்பு இந்து தலித் மக்களின் அவலநிலை
5) இலங்கையில் நடக்கும் இனப் போராட்டம்
6) மிசோவில் இருந்து துரத்தப்பட்ட ரியாங்குகளின் நிலை
7) காஷ்மீரில் இருந்து இன சுத்திகரிப்பு செய்யப்பட்டுள்ள இந்துக்கள்
8) திபெத்தில் நடத்தப்படும் இன சுத்திகரிப்பு பண்பாட்டு அழிப்பு
இவை அனைத்திற்கும் பின்னாலிருக்கும் வெறுப்பியல் சித்தாந்தம் ஏதோ மனித சகோதரத்துவத்தை பரப்பும் ஒரே மார்க்கம் என்பது போல பேசத்துணிவதை கவனியுங்கள். அதனை கருத்தியல் மூலம் எதிர்கொள்வதிலிருந்து ஆரம்பிக்கலாம்.

நன்றி திரு.
புஷ்யமித்திர சுங்கன் மட்டுமே நெடிய வேததருமத்தை பின்பற்றிய அரசர்கள் வரிசையில் பௌத்தத்தை வெறுத்தவனாக அறியப்படுகிறான். வெகு வெகு அரிதாக வேறு சிலரும் இருக்கலாம். மாறாக குப்த ஆட்சியில் பௌத்தம் பெருமளவு வளர்ச்சியே அடைந்திருந்தது. ஆனால் பௌத்த வெறுப்பியலை ஒரு இறையியலாக இந்துதருமம் மாற்றிடவில்லை. மாறாக பௌத்தத்தினை அரவணைத்து சென்றது. அதன் மேன்மைக்கும் இங்கு இடமிருந்தது. புஷ்யமித்திரனின் பின்னர் எழுந்த குப்த பேரரசிலும் அதன் பின்னர் ஹர்ஷர் காலத்திலும் பௌத்தம் மேலும் மேலும் உயர்வடைந்ததையே நாம் காண்கிறோம். பௌத்தம் பாரதத்தில் ஏற்படுத்திய ஆகப்பெரிய சாதனைகள் ஹிந்து ஆட்சியாளர்களின் ஆதரவுடன் நடந்தன. உதாரணமாக நாலந்தா பல்கலைக்கழகம் குப்தர் ஆட்சியில் உருவாக்கப்பட்டது. அஜந்தா குகை ஓவியங்கள் குப்தர் ஆட்சியில் ஏற்பட்டது. குப்த அரசின் இறுதிக்கட்டத்திலும் பௌத்தர்களை கொன்று குவித்த ஹூணர்களான தோராமானாவையும் மிகிராகுலனையும் அழித்தவர்கள் நரசிம்ம குப்த பாலாதித்யனும் யசோதர்மனும்.- அந்த காரணத்தை கூறியே எதிர்த்தனர். வேத சமயத்தை தான் தழுவிட ஆவலாக இருப்பதாக கூறிய மிகிராகுலனை அவன் பௌத்தர்களுக்கு செய்த வன்கொடுமைகளை காரணம் காட்டியே தாக்கினார் நரசிம்ம குப்த பாலாதித்யர். ஆக பௌத்தத்தை இரத்தம் சிந்த சிந்த அழித்ததற்கான பொறுப்பினை இஸ்லாமின் வாளே ஏற்கவேண்டும்.


நன்றி அனானி

7:11 PM, November 18, 2006  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

திரு, பாசிசம் போன்ற வார்த்தைகளை பொருளறியாமல் பயன்படுத்துவதற்கான மற்றொரு நல்ல உதாரணம் நீங்கள். தொழிற்புரட்சிக்கு முன் ஏது சார் பாசிசம்? பிடிக்காத எல்லாவற்றையும் பாசிசம் எனக் கூறிவதென ஆரம்பித்துவிட்டால், பிடிக்காத நாயர் கடை வெங்காயவடையை கூட பாசிச வடை என அழைக்கலாம். மேலும் இன்று பௌத்த்ததினை அழித்தொழிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது இசுலாமிய அடிப்படைவாத/பயங்கரவாத இயக்கங்களே. கற்பனை பிராம்மணீயத்தின் மீது நீங்கள் சுமத்தும் குற்றச்சாட்டுக்களை கண்ணெதிரே நடத்திக்காட்டிக் கொண்டிருக்கும் ஒரு சக்தியை எதிர்த்து குரல் கொடுக்க இயலாத சித்தாந்த நிர்ப்பந்தங்கள் எத்தகையவை?

7:23 PM, November 18, 2006  
Blogger கால்கரி சிவா said...

நீலகண்டன், பிஞ்சு குழந்தைகளின் மனதில் நஞ்சைக் கலக்கும் அந்த வீடியோ நெஞ்சை பிளக்கிறது.

நாம் களைய வேண்டியது இந்த நச்சுப் பாம்புகளை தான்.

அதைக் கண்டும் காணது மாசிலா மற்றும் திரு ஆகியோர் திசை திருப்புகிறார்கள்.

8:08 PM, November 18, 2006  
Anonymous Anonymous said...

அன்புள்ள அரவிந்தன்

தமிழர்களை அறியாமை இருளில் இருந்து மீட்டு அவர்களுக்கு இன்று உலகை அச்சுறுத்தும் மிகப் பெரிய அழிவு சக்தி எது என்பதை தொடர்ந்து அடையாளம் காட்டி வருகிறீர்கள். உங்களது ஆழமான அறிவுக்கும் அதை எங்களிடம் பகிர்ந்து கொள்ளும் தன்மைக்கும் என்னைப் போன்றவர்களது நன்றிகள் உரித்தாகுக. உங்கள் சேவையை தொடர்ந்து ஆற்றுங்கள் திராவிட மாயையால் திசை மாறிச் சென்று கொண்டிருக்கும் தமிழர்கள் தெளிவு பெறட்டும். இஸ்லாமியர்களை மனம் மாற்றம் செய்வது இயலாத காரியம், ஏன் தாம் செய்வது தீவீரவாதம் என்பதைக் கூட உணர மறுக்கும் அவர்களிடம் எந்த தர்க்க நியாயத்தைப் பேசிட இயலும்.

நன்றியுடன்
ச.திருமலை

8:28 PM, November 18, 2006  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

நன்றி சிவா,

வேண்டுமென்று திசை திருப்புவதாக நான் நினைக்கவில்லை. சில சித்தாந்தவய பார்வை அவர்களை சுற்றி நிற்கும் யதார்த்தத்தை பார்க்கவிடாமல் செய்கிறது என்றே நினைக்கிறேன். உதாரணமாக பங்களாதேஷ் தலித் இனக்கொடுமையை பற்றி சிறிதும் நினைக்காமல் பாலஸ்தீனியர்களுக்காக குரல் கொடுப்பது ஒரு வித சித்தாந்த குறைப்பார்வையால். இதற்கு இந்த கொடுமைகள் நம் அருகிலேயே நடந்தும் நம் ஊடகங்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதும் ஒரு காரணம். அண்ணல் அம்பேத்கர் சீனா திபெத்தில் மேற்கொண்ட பௌத்த்ததிற்கு எதிரான் வன்கொடுமைகளுக்கு எதிராக வெகு முதலில் குரல் கொடுத்தவர். ஆனால் அவர் பெயரை சொல்லி அரசியல் நடத்தும் எத்தனை பேர் இன்றும் தொடரும் அந்தவன்கொடுனமகளுக்கு எதிராக குரல் கொடுக்கின்றனர்? உண்மையான தலித் விடுதலைக்கு நாம் குரல் கொடுப்போம். ஆதிக்க அரசியலுக்கும் ஆதிக்க மதங்களுக்கும் எதிராக நாம் தொடர்ந்து குரல் கொடுப்போம். விரைவில் நம் சகோதரர்களுக்கும் உண்மை விளங்கும்.

8:29 PM, November 18, 2006  
Blogger bala said...

//கற்பனை பிராம்மணீயத்தின் மீது நீங்கள் சுமத்தும் குற்றச்சாட்டுக்களை கண்ணெதிரே நடத்திக்காட்டிக் கொண்டிருக்கும் ஒரு சக்தியை எதிர்த்து குரல் கொடுக்க இயலாத சித்தாந்த நிர்ப்பந்தங்கள் எத்தகையவை//

நீலகண்டன் அய்யா,

அந்த நிர்ப்பந்தங்கள் லாபகரமாக திராவிட அரசியல் வியாபாரம் பண்ண உதவும் நிர்ப்பந்தங்கள்.
பணத்துக்காக எதையும் செய்யலாம் என்ற கொள்கையை உடையவர்கள் நம்ம பகுத்தறிவு செல்வங்கள்.

பாலா

8:30 PM, November 18, 2006  
Blogger Amar said...

//கற்பனை பிராம்மணீயத்தின் மீது நீங்கள் சுமத்தும் குற்றச்சாட்டுக்களை கண்ணெதிரே நடத்திக்காட்டிக் கொண்டிருக்கும் ஒரு சக்தியை எதிர்த்து குரல் கொடுக்க இயலாத சித்தாந்த நிர்ப்பந்தங்கள் எத்தகையவை//

தெரிஞ்சதை பத்தி தானுங்க பேச முடியும்.

சொல்லிக்கொடுத்த "பிராம்ம்னீய" சமாச்சாரங்கள் தான் திராவிட குஞ்சுகளுக்கு தெரியும். புதுசா எதாவது படின்னு சொன்னா எப்பிடி...

11:28 PM, November 18, 2006  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

பாலா, சமுத்ரா,

கருத்துகளுக்கு நன்றி. இன்று திராவிட இனவாதம் பேசி தனித்து நிற்பதாக கற்பனை செய்யும் அவர்களும் நம்மவரே. நாளை இஸ்லாமிய பயங்கரவாதத்தின் கண்களில் அவர்களும் காஃபிர்கள்தாம். ஆர்.டி.எக்ஸ் வெடிக்கும் போது இவர்கள் மதானிக்காகவும் அப்சலுக்காகவும் குரல் கொடுத்தார்கள் என இவர்களை மட்டும் விட்டு வைக்கவா போகிறது. அல்லது 'இஸ்லாமின் தூய வடிவம்' என இவர்கள் விதந்தோதும் இஸ்லாமின் கரங்கள் முச்சந்திக்கு முச்சந்தி நிற்க வைத்திருக்கும் ஈவேரா சிலைகளை உடைத்து தள்ளாமல் இருக்க போகிறதா? அல்லது நாளை தூய இஸ்ல்லாமிய மயமாக்கப்பட்டால் சொந்த மண்ணை விட்டு அகதிகளாக அடித்து விரட்டப்படும் காஃபீர்களின் அகதிகள் முகாமில் இவர்களது குழந்தைகளுக்கு மட்டும் முன்னுரிமை வழங்கப்படுமா? அன்று இவர்களும் நம்முடன் தானே இருந்தாகவேண்டும். அவர்கள் சிந்திக்கட்டும். உண்மைகளை அவர்களே சீர்தூக்கி பார்க்கட்டும்.
கருத்துகளுக்கும் வருகைக்கும் நன்றி. அடிக்கடி வாருங்கள்.
அன்புடன்
காஃபீர் அரவிந்தன் நீலகண்டன்

1:58 AM, November 19, 2006  
Blogger ரா.சம்பத் said...

அரவிந்தன் சார்,
உங்கள் கட்டுரைகள் பல புதிய தகவல்களைத் தருகின்றன. திரு.வஜ்ராவின் பதிவில் ஆரியரின் உருவாக்கம் பற்றி நீங்கள் எழுதிய தகவல்களும் எனக்கு மிக உதவியாக இருந்தன. மிக்க நன்றி.

நிற்க. இங்கே இன்னொரு டவுட்டையும் நீங்கள் நிவர்த்தி செய்ய வேண்டும். பவுத்தத்தை, பவுத்தர்களை அழித்தது இஸ்லாம் என்று சொல்கிறீர்கள். ஆனால் நான் வேறு விதமாகக் கேள்விப்பட்டேன். சமணர்களையும் பவுத்தர்களையும் லட்சக்கணக்கில் கொன்று அவர்கள் வழிப்பாட்டுத்தலங்களை எல்லாம் சைவர்கள் அழித்து மிச்சம் இருந்தவர்களை எல்லாம் வலுக்கட்டாயமாக சைவர் ஆக்கிவிட்டதாக திக ஆட்கள் அடிக்கடி சொல்கிறார்கள். இந்து ஜிகாதிகள் என்றுகூட அவுட்லுக்கில் ஒருவர் எழுதியிருந்தார். இது எந்த அளவுக்கு உண்மை?

5:48 AM, November 19, 2006  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

சம்பத்,

இந்த கேள்வியை மேலும் பலரும் எழுப்பியுள்ளனர். இது குறித்து விரிவாக ஒரு தனி பதிவு இட எண்ணியுள்ளேன். ஏனெனில் ஒரு தனிப்பட்ட அனுபவமும் அத்துடன் இணைந்துள்ளது. அதற்கு முன் சுருக்கமாக திருவுக்கு நான் அளித்த பதிலை காணவும்.

அன்புடன் காஃபீர் ஹீத்தன்
அரவிந்தன் நீலகண்டன்

5:52 AM, November 19, 2006  
Blogger திருவடியான் said...

நீலகண்டன்... கந்தர் சஷ்டி கவசத்தை முதலில் அர்த்தம் உணர்ந்து படியுங்கள். அதில் சமணர்களைக் கொன்றதையும் பௌத்தர்களைக் கொன்றதையும் விபரமாகச் சொல்லியிருப்பார்கள்... இங்கு நிறையப் பேருக்கு இஸ்லாமோபோபியா இருக்கிறது... அதை நீங்கள்தான் போக்கவேண்டும். அதற்கு சுவனப்பிரியனோ.. நாகூர்ருமியோதான் வரவேண்டுமா என்ன...

7:02 AM, November 19, 2006  
Blogger enRenRum-anbudan.BALA said...

நல்ல பதிவு

//
இதற்கு இந்த கொடுமைகள் நம் அருகிலேயே நடந்தும் நம் ஊடகங்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதும் ஒரு காரணம். அண்ணல் அம்பேத்கர் சீனா திபெத்தில் மேற்கொண்ட பௌத்த்ததிற்கு எதிரான் வன்கொடுமைகளுக்கு எதிராக வெகு முதலில் குரல் கொடுத்தவர். ஆனால் அவர் பெயரை சொல்லி அரசியல் நடத்தும் எத்தனை பேர் இன்றும் தொடரும் அந்தவன்கொடுனமகளுக்கு எதிராக குரல் கொடுக்கின்றனர்? உண்மையான தலித் விடுதலைக்கு நாம் குரல் கொடுப்போம். ஆதிக்க அரசியலுக்கும் ஆதிக்க மதங்களுக்கும் எதிராக நாம் தொடர்ந்து குரல் கொடுப்போம்.
//
நிதானமான, சிந்திக்க வேண்டிய கருத்துக்கள் !

7:19 AM, November 19, 2006  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

நன்றி என்றென்றும்-அன்புடன்-பாலா. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. மற்ற பதிவுகளையும் பார்த்து உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
திருவடியான், இது குறித்து ஆழ்ந்த தமிழ் புலமை கொண்ட ஒரு அறிஞரின் கருத்தினை தனி பதிவாக இட்டுள்ளேன் பாருங்கள்.

7:45 AM, November 19, 2006  

Post a Comment

<< Home