Monday, January 22, 2007

தாழ்த்தப்பட்டோருக்காக வைகுண்டம் துறந்து வந்தார்

அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா
சிவசிவ சிவசிவா அரகர அரகரா
சிவசிவா குருவுக்கும் குரு பண்டாரத்திற்கும்
முறையோம் முறையோம் முறையோம் முறையோம்
சிவசிவா ஆண்டிக்கும் ஆண்டிச்சிக்கும்
முறையோம் முறையோம் முறையோம் முறையோம்


ஐயா வைகுண்டர் இயக்கம் குறித்து வழக்கம் போல திரு என்கிற ஆசாமி பொய்களையும் அரைகுறை தகவல்களைக் கொண்டு ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். எனவே உண்மைகளை விளக்க எனது பல முந்தைய கட்டுரைகளைத் தொகுத்து இங்கே அளித்துள்ளேன். அவசரமாக வெளியூர் போக வேண்டியிருப்பதால் ஒரு முழுக்கட்டுரையாக எழுத முடியவில்லை. இவை பல்வேறு சமயங்களில் கற்பக விநாயகத்தின் பொய்களை வெளிப்படுத்த எழுதப்பட்டவை திண்ணையில். முடிந்தவரை கோர்வையாக்கி உள்ளேன். எதுவானாலும் ஊருக்கு போய்விட்டு வந்து முழுமையாக -2000க்கு பின்னர் ஐயாவின் பதிகள் கிறிஸ்தவ வெறியரால் தாக்கப்பட்டது வரை- ஒரு பதிவினை போடுகிறேன்.


ஐயா வைகுண்டர் முத்துக்குட்டி சுவாமியின் சூடப்பட்ட பெயர் முடிசூடும் பெருமாள். அரசதன்மை கொண்ட பெயர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் வைக்ககூடாதென எதிர்ப்பு எழுந்தது. அந்நேரத்தில் வேற்று சாதியில் பிறந்தும், அரசனுக்கு அணுக்கராக இருந்தும், தமதுயிரையும் பொருட்படுத்தாமல் ஐயா வைகுண்டர் பக்கம் நின்று தோள் கொடுத்த பூவண்டரின் கருத்தியல் எதன் அடிப்படையில் எழுந்தது ? பாகவத கிருஷ்ணனின் ஒளி பாய்ந்த கருத்தியல் அல்லவா அது ? ஐயா வைகுண்டர் அரசனையும் மேல்சாதிக் கொடுமையாளரையும் குறிப்பிட பயன்படுத்தும் வார்த்தை கலிநீசன் என்பது மிசிநரிகளை வெண்நீசன் என்கிறார். மட்டுமல்ல வெளிப்படையாகவே 'ஒரு வேதம் தொப்பி உலகமெல்லாம் போடு என்பான் ' 'மற்றொரு வேதம் சிலுவை வையமெல்லாம் போடு என்பான் ' எனக்கூறி அவர்கள் வீண்வேதம் என்கிறார். அவரது கருத்துகளில் அத்வைத ஒளியும் சமுதாயப்புரட்சி கனலும் உள்ளது. ஐயா வைகுண்டர் காணிக்கை வேண்டாம் என்று சொன்னாராம் அதனால் அவர் இந்து மதத்தவர் அல்லவாம். ஆனால் இதே திரு இன்னொரு இடத்தில் கூறுகிறார் மாடனுக்கு கோழி பலியிடுவதை நீக்கி இந்துத்வ படுத்துகிறார்களாம். என்றால் ஐயா வைகுண்டர் கூறுகிறாரே:


'ஆடுகிடாய் கோழிபன்றி ஆயனுக்கு வேண்டாம்
கொட்டு மேளம் குரவைத்தொனி ஈசனுக்கு வேண்டாம்
அன்பு மனமுடன் அனுதினமும் பூசை செய் '
என்று


உளத்தூய்மையுடன் ஒரு பூவோ இலையோ எனக்கு சமர்ப்பித்தால் போதும் எனக் கூறிய குருசேத்திர ஆயனின் குரல் அல்லவா இது. இதனை படிப்பவர்கள் சிந்திக்க வேண்டும். ஐயா வைகுண்டர் தென்னகத்தில் ஒரு மூலையில் ஒடுக்கப்பட்ட சாதியில் தோன்றினார். ஆனால் அவரது திருவாயிலிருந்து வெளியான ஒவ்வோர் திருவாக்கும் வேதமும் வேதத்தின் அந்தமும் பகவத் கீதையும் திருமந்திரமும் கூறியவற்றின் சாரத்தை எளிய மக்களிடம் கொண்டு செல்வதாக இருந்தது. இது எவ்வாறு ?என்பது குறித்து இன்றும் எனக்கு வியப்புதான். இது குறித்து ஒரு நீண்ட கட்டுரை எழுத வேணும். நேரம் வாய்க்கும் போது பார்க்கலாம். ஒரு சின்ன எடுத்துக்காட்டு மட்டும் இப்போது.


உதாரணமாக கீழ்காணும் வேத வாக்கியம் நம் அனைவருக்கும் தெரிந்ததுதான்:'சத்தியம் ஒன்றே அதனை ஞானிகள் பலவாறு அழைக்கின்றனர் ' அவ்வாறே பகவத் கீதையில் 'யார் யார் என்னை எவ்விதம் தியானிக்கிறார்களோ அவர் அவர்களுக்கு அவ்வாறே காட்சியளிப்பேன்,' என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறியுள்ளார்.

'எவ்வாறு காண்பான் அறிவு தனக்கெல்லை
அவ்வாறு அருள் செய்வான் ஆதிபரன் '
என்பது திருமூலர்.
ஐயா வைகுண்டரும் அதிசயிக்கதக்க விதத்தில் கூறுவதை கேளுங்கள்:
'அவரவர் மனதில் ஆனபடி இருந்து
எவரெவரையும் பார்த்திருப்பேன் நான் '

தன் மதத்தை சாராதவர்களை சைத்தான் எனவும் காஃபிர் எனவும் வையும் மிலேச்சத்தனம் ஐயா வைகுண்டரிடம் இல்லை. அவரிடம் இருந்தது இம்மண்ணின் மரபிற்கே உரிய பிரபஞ்ச ஏற்புத்தன்மை (Universal Acceptance). அதுதான் ஐயா இந்துத்வமும்.


தாழ்த்தப்பட்டவர்கள் என குறிப்பிடப்படும் நாடார் சமுதாயத்தவர்கள் ஷத்திரிய வம்சத்தினைச் சார்ந்தவர்கள் தாம். தென்னாடு என்றில்லை பாரதம் முழுவதுமே வர்ண அமைப்பு ஒரு மிக நெகிழ்வான சாதிக்குடிகள் அங்குமிங்கும் செல்லும் தன்மைத்ததாகவே இருந்திருக்கிறது. அது இறுக்கமுடையதானதற்கு வெளிநாட்டு படையெடுப்புகளும், மூலதன வெளியேற்றமுமே முக்கிய காரணங்களாகும். குயவனான சாதவாகனன் ஷத்திரியன் தாம். நாயர்கள் சூத்திரராக இருந்து ஷத்திரியர்கள் ஆனவர்கள்தாம் (அவர்கள் கிறிஸ்தவ மிஷிநரிகளின் இலக்கியங்களில் நாயர்கள் சூத்திரர் என்றே குறிப்பிடப்படுவதைக் காணலாம்.) தோள்சீலை போராட்டத்திலும் பங்கெடுத்தவர்கள் மதம் மாறாத நாடார்கள்தாம். பின்னர் அவர்கள் குறிவைத்து மதம் மாற்றப்பட்டனர். எனினும் மதமாற்றி மிசிநரிகள் உண்மையில் பாரத சமுதாய சமத்துவ எழுச்சிகளில் உண்மையில் எத்தகைய பங்காற்றினர் என்பதனை ஒரு உதாரணம் மூலம் காணலாம்.


ஐயா வைகுண்டர் சாதீயக் கொடுமைச்சூறாவளியின் நடுநாயகக் கண்ணில் நின்று தர்மத்திற்காகப் போராடினார். ஏசி அறைகளில் இருந்தபடி சமுதாயம் குறித்து சித்தாந்த கோட்பாடுகளை முன்வைக்கும் சித்தாந்தி அல்ல அவர். அல்லது எடைக்குஎடை பொருட்கள் வாங்கி சொத்து சேர்த்து, வெள்ளைக்காரன் தூக்கிப்போட்ட அறிவியல் அடிப்படையற்ற இனவெறிக்கோட்பாடுகளால் சுகம் கண்டு, மடையர்களே எனக்கு சீடர்களாக இருக்கவேண்டும் என வேண்டிய போலி-பகுத்தறிவின் தந்தையான சிறியார் ஈவெரா அல்ல அவர். இத்தகைய போலிகளால் ஐயா அவரது காலடி மண்ணையும் தொட இயலாது. உயர்ந்த உத்தம அவதார புருஷர் என இன்றும் வணங்கப்படும் ஐயா வைகுண்டர் இயக்கம் சாதீய கொடுமைகளுக்கு எதிராக காவிக் கொடியினை அன்புக்கொடியாக ஏந்திப்பிடித்து போராடிய வரலாறு இந்துத்வ வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டியது.
இன்றைக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் மதமாற்றிகளுக்கும், சாதீய வாக்குவங்கி நடத்தி தர்மத்தின் மக்களை பிரிக்கத்தூண்டும் போலி மதச்சார்பற்ற அரசியல்வியாதிகளுக்கும் எதிராக போராடும் சமுதாய இயக்கங்களின் சமத்துவ போராட்டத்தின் அடிநாதமாக விளங்குவது. இந்த மகத்தான இயக்கத்துடன் கிறிஸ்தவ மிசிநரிகள் என்னவித உறவினைக் கொண்டிருந்தார்கள் என்பதை பார்க்க, கிறிஸ்தவ மதமாற்றத்தின் உண்மை தன்மைகள் விளங்கும்.


ஐயா வைகுண்டரை பொதுவாக ஒரு சாதிக்கு உரியவர் என சிலர் நினைத்தாலும், அவர் முழுமையான இந்து சமுதாயத்தினை ஒருங்கிணைக்கும் பார்வையினைக் கொண்டிருந்தார் என்பதே உண்மை.

'சாணா ரிடையர் சாதி வணிகருடன்
நாணாத காவேரி நல்ல துலுப்பட்டர் முதல்
சூத்திரர் பிரமர் தொல் வாணியர் பறையர்
உத்திர நீசர் உழவருடன் குறவர்
கம்மாளரீழர் கருமறவர் பரவர்
வெம்மா நசுறாணி வேகவண்ட ரிடலையர்
சக்கிலியரோடு சாதி பதினெட்டுகளும் ' (அகிலத்திரட்டு)


ஐயா வைகுண்டரின் தர்ம பார்வையில் ஒன்றாகவே இருந்தன.
அவர்களை ஒரே இடத்தில் நீர் அருந்தச் செய்தார் ஐயா வைகுண்டர். அவர்களை ஒரு தாய் மக்களாக உறவாட வைத்தார்.

'சாதி பதினெண்ணும் தலமொன்றிலே குவிந்து
கோரிக் குடிக்கும் ஒரு கிணற்றில் ' (329)


சாதீய வெறி, மிஷிநரி ஆதரவு ஆகியவை மேலோங்கிய திருவாதாங்கூர் மேல்வர்க்கத்தினர் கடும் சித்திரவதைகளை ஐயா வைகுண்டர் மீது சுமத்தியதை அமைதியாக தாங்கிக்கொண்டார் அம்மகான்:

'குண்டியிலே குத்தி குனியவிடு வானொருத்தன்
நொண்டியிவ னென்று அடித்தடித்து தானிழுப்பான்
சாணாருக்காக சமைந்தாயோ சுவாமியென்று
வாணாளை வைப்போமோ மண்டிப்பதனிக்காரா
பனையேறி சுபாவம் பட்டுதில்லையென்று சொல்லி
அனைபேரையும் வருத்தி ஆபரணந் தேடவென்றோ
சமைந்தாயோ சாமியென்று சாணாப்பனையேறி
உனைச் சாமியென்று உன் தேகத்தைப் பார்த்தால்
பனைச் சிரங்கின்னம் பற்றித் தெளியலையே
உனைச் சாமியென்றால் ஒருவருக்கு மேராதே
ஆளான ஆளோ நீ ஆளில் சிறியவனாய்த்
தாழக்கிடந்து சாமியென்று வந்தாயோ ' (அகிலத்திரட்டு)

என்றெல்லாம் அவரை சித்திரவதை செய்தனர்.
ஐயாவை திருவிதாங்கூர் அரசனின் ஆட்கள் எத்தனையோ வதை செய்தனர். மூத்திரக்குழியில் தள்ளி அங்கே போட்டு அடித்து சித்திரவதை செய்தனர்.
'மோளுக்குழிக்குள் மொகுமொகனவே புழுக்கள்
தோளு வழி புழுக்கள் தூணி மிகச் சொரியும்
அட்டை மிதக்கும் அரிய தேள் மிதக்கும்
விட்ட நரகு மிகுவாய் புழு மிதக்கும்
நாற்ற துறைகள் நரகத் துறை போலே' இருந்த சிறையில் அன்புருவான ஐயாவை சித்திரவதை செய்தனர்.
'குண்டியிலே குத்தி குனியவிடுவானொருத்தன்
நொண்டியிவ னென்று அடித்தடித்து தானிழுப்பான்
சாணாருக்காக சமைந்தாயோ சுவாமியென்று
வாணாளை வைப்போமோ மண்டிப்பதனிக்காரா
பனையேறி சுபாவம் பட்டுதில்லையென்று சொல்லி'
எல்லாம் ஐயாவை கொடுமை செய்தனர் சாதி வெறி பிடித்த மிருகங்கள்.
இந்த சித்திரவதைகளை அறிந்தால்தான் ஐயா வைகுண்டர் சொல்லுகிற அன்புரைகளின் ஆழம் நமக்கு புரியும்:
"பொறுமை பெரிது பெரியோனே என்மகனே
தருமம் பெரிது தாங்கியிரு என் மகனே
எல்லோருக்கும் விளம்பி இரு நீ என் மகனே
பொல்லாதாரோடும் பொறுமையுரை என் மகனே
...
சத்துருவோடும் சாந்தமுடனே இரு
புத்திரரோடும் பேசி இரு என் மகனே"


சரி. மிசிநரிகள் இந்த சமுதாய போராட்டத்தில் எந்த இடத்தில் இருந்தனர் ? ஆகா, இதோ சமுதாய தலைமையை ஏற்று சமத்துவம் ஏற்படுத்த நல்ல கருத்துக்களுடன் ஒருவர் தாழ்த்தப்பட்ட மக்களிடமிருந்தே எழுந்துவிட்டார் எனவே அவரை ஆதரிப்போம் என ஐயா வைகுண்டருக்கு தோள் கொடுத்தார்களா மிசிநரிகள் ? கிறிஸ்தவம் சமுதாய சமத்துவத்தை ஆதரித்ததெனில், தாழ்த்தப்பட்ட நாடார்களின் மிகச்சிறந்த எழுச்சியாக்கமான ஐயா வைகுண்டருக்கு எதிராக கட்டுக்கதைகளையும், அவதூறுகளையும் பரப்பியதுமில்லாமல், அவரை 'எதிரி ' 'சாத்தான் ' என்றெல்லாம் தமது மேலதிகாரிகளுக்கு எழுதியது ஏன் ? அரசனை இம்மகானை விடுவிக்கவும் தார்மீக சமுதாய புரட்சியினை ஏற்கவும் வகை செய்தது யார் ? மிசிநரிகளா இல்லையே. மாறாக, மண்டைக்காடு கலவரத்தின் போது மிசிநரிகள் தம் முதல் எதிரியாக கண்ட கிருஷ்ணவகை (இடையர்) குடியினைச் சார்ந்த பூவண்டர் என்பவரே ஆவார். மிசிநரிகளோ ஐயா வைகுண்டரை 'ஏமாற்றுக்காரன் ' 'சாத்தான் ' 'வஞ்சகன் ' என்றெல்லாம் தூற்றினரே தவிர அவருடன் கைகொடுத்து சமுதாய ஏற்றம் செய்ய முன்வரவில்லை. மாறாக பூவண்டன் இந்து சமய அடிப்படையிலேயே சமத்துவ பார்வையினைப் பெற்று மன்னருக்கு அறிவுரை பகர்ந்தார்.


'போற்றி நம்பூரி பிராமண சூத்திரர் குலத்தில்
ஏற்றிப் பிறக்க இயல்பில்லாமல் இந்த
பிறர் தீண்டாச் சாணார் குலத்தில் அவதரித்து
பிறக்க வருவாரோ பெரிய நாராயணரும் '
எனும் அரசன் கேள்விக்கு பூவண்டர் பகர்ந்த விடை சாதீய இருளும், மதமாற்ற நோயும் சூழ்ந்திருந்த அன்றைய காலகட்டத்திலும் இந்து தர்மத்தின் சமுதாய சமத்துவ ஒளி அணையாது வீசியதனைக் காட்டுகிறது. பூவண்டர் பகிர்ந்தார்:

'சாணெனக் குலத்தில் மாயன் சார்வரோ வென்றெண்ண வேண்டாம்
பாணெனத் தோன்றி நிற்பார் பறையனாய்த் தோன்றி நிற்பார்
தூணெனத் தோன்றி நிற்பார் தோலனாய்த் தோன்றி நிற்பார்
ஆணெனத் தோன்றி நிற்பார் அவருரு கேட்டிலீரோ
குசவெனக் குலத்தில் வந்தார் குறவெனக் குலத்தில் வந்தார்
மசவெனக் குலத்தில் வந்தார் மாடெனக் குலத்தில் வந்தார்
விசுவெனக் குலத்தில் வந்தார் வேடெனக் குலத்தில் வந்தார்
அசுவெனக் குலத்தில் வந்தார் அவருருக் கேட்டிலீரோ ' (அகிலத்திரட்டு)


ஆனால் இத்தகைய சமுதாய சமத்துவ கருத்தாக்கம் கிறிஸ்தவ இறையியலில் எழ சாத்தியமே இல்லை என்பதனை நாம் நினைவுகொள்ளவேண்டும். ஏனெனில் ஏசு குறித்த இறை-முன்னறிவிப்பே அவர் தாவீது அரசரின் வம்சத்தவர் என்பதுதான். அந்த வம்சாவளியில் ஏசுவை நுழைத்திட பொய்யான இரு வேறு வம்சாவளி வரலாற்றினை மத்தேயு ஒன்றாம் அதிகாரத்திலும் லூக்கா மூன்றாம் அதிகாரத்திலும் காண இயலும். அது போலவே ஒரு குறிப்பிட்ட மக்கள் வாழும் பகுதி நுழையத்தக்கதல்ல எனும் கருத்தாக்கம் ஸ்மிருதிகளில் காணப்பட்டாலும் கூட, அதனை ஸ்மிருதிதான் என தூக்கி எறிந்து விடும் சுதந்திரம் இந்துவுக்கு உண்டு. ஆனால் கிறிஸ்தவ விவிலியத்தில் அவ்வாறல்ல. மேலும் அவ்வாறு கூறியது பரமபிதாவின் ஒரே மகனும் கூட. சரி, மிசிநரிகள் ஐயா வைகுண்டருக்கு ஆற்றிய எதிர்வினை என்ன ?


'எளியாரைக் கண்டு இரங்கியிரு என்மகனே
வலியாரைக் கண்டு மகிழாதே என்மகனே
தாழக்கிடப்பவரை தற்காப்பதே தர்மம் '
என்று எடுத்துரைத்த எம்பிரானை 'மக்களை வஞ்சிப்பவன் ' எனக் கூசாமல் ஏசினான் சாமுவேல் சகரியா எனும் கிறிஸ்தவ வெறிபிடித்த வெள்ளைத்தோல் பிரச்சாரகன் (1843). (இன்றைக்கும், நலிந்த சமுதாய முன்னேற்றத்துக்கு பாடுபடும் ஆன்மிக அருளாளர்களை வைவதை முற்போக்காக காட்டும் சகரியாக்களுக்கு பஞ்சமில்லைதான்.) 'காணிக்கை வேண்டாதுங்கோ கைக்கூலி கேளாதுங்கோ ' என்று கூறிய மகான் மிசிநரி பார்வையில் 'எதிரி 'யானார் (1869-ஜேம்ஸ் டவுண் மிசிநரிஅறிக்கை) 'ஞாயமுறை தப்பி நன்றி மறவாதுங்கோ ' என்று எடுத்துரைத்த மகான் மிசிநரி பார்வையில் 'சாத்தான் '(1875 நாகர்கோவில் மிசிநரி அறிக்கை) ஆனார். மேலும் ஐயா வைகுண்டர் உண்மையில் ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் கடைநிலை ஊழியம் செய்தவர் என்பது போன்ற பச்சைப்பொய்களையும் பரப்பினர். இந்த அவதூறு பிரச்சாரம் கிறிஸ்தவ சபைகளால் 1980கள் வரைக்கும் கூட வெளிப்படையாக நடந்தன. கிறிஸ்தவ மிசிநரி அறிக்கைகள் பறந்தன. கிறிஸ்தவ மிசிநரி அறிக்கை புலம்புகிறது: 'தாமரைக்குளம் பகுதியின் அனைத்து கிராமங்களும் கிறிஸ்தவ ஆதிக்கத்துக்கு கீழ் வரும் நிலையில் இருந்தன. ஆனால் முத்துக்குட்டி வழியினரின் எழுச்சியால் நம்பணிகளில் வலுவான தடை ஏற்பட்டுள்ளது. நமது பகைவனின் செயல்கள் எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை என்று எடுத்துச்சொன்னாலும் எவரும் ஏற்றுக்கொள்வதாக இல்லை. இந்த இயக்கம் கிறிஸ்தவத்தை விட வேகமாக செயல்படுவதுடன் கிறிஸ்தவம் பரவவும் தடையாக இருக்கிறது." (நாகர்கோவில் டயசீஸ் ஆண்டறிக்கை- இது ஐயா சமாதியடைந்த 20 வருடத்துக்கு பிறகு.) ஐயாவை கைது செய்த போது திருவிதாங்கூரின் நாகர்கோவில் கன்னியாகுமரி பகுதிக்கு நீதிபதியாக மீட் என்கிற மிசிநரி நியமிக்கப்பட்டான். இது கிழக்கிந்திய கம்பெனியின் வலியுறுத்தலால் கர்னல் முன்ரோ என்பவனது சூழ்ச்சியின் விளைவாகும். இந்த மிசிநரி நீதிபதியின் செயல்பாடு 'highly favourable to the external sources of the missionary cause' என சாமுவேல் மட்டீர் என்கிற மிசிநரி குறிப்பிடுகிறான் ('The Land of Charity', Early history of the London Mission in Travancore, பக்.267, 1870 இலண்டன், 1991 டெல்லி.) இவனது காலகட்டத்தில்தான் ஐயா கைது செய்யப்பட்டதும் அடிக்கப்பட்டதும். மேலும் ஐயாவை அடித்தவர்களில் கிறிஸ்தவ கும்பெனிக்காரர்களும் இருந்தார்கள். அவரை துப்பாக்கி பின்பகுதியால் அடித்தார்கள். கும்பெனி வீரர்கள் (ஆங்கிலேய , இந்தோ-ஆங்கிலேய கிறிஸ்தவர்கள்) மட்டுமே துப்பாக்கி வைத்திருந்தனர். ஆக, எப்படி இந்துக்களின் சாதீயத்தை பயன்படுத்தி தந்திரமாக தமது மதமாற்ற இழிவேலைக்கு தடையாக இந்து சமுதாயத்தை கடைத்தேற்ற வந்த ஐயா வைகுண்டரை அழித்திட திட்டமிட்டிருக்கிறார்கள் பாருங்கள். ஆனால் அரசனது அவையிலிருந்த படியே இந்து புராண மரபின் அடிப்படையில் ஐயாவுக்காக குரல் எழுப்பிய பூவண்டரின் மகத்துவத்தையும் சிந்தியுங்கள்.இதே நூலில் மட்டீர் மிசிநரி நமது ஐயா வைகுண்டரின் வழிபாட்டை பேய் வழிபாடு என எழுதுகிறான். இத்தகைய பிரச்சாரங்களை இன்றும் குமரிமாவட்டத்தில் கிறிஸ்தவ மிசிநரிகள் செய்கின்றனர். எனவேதான் நாங்கள் பதிலடி கொடுத்தோம் : 'பேயை வணங்குபவன் கிறிஸ்தவனே என்று. அதற்கு பிறகு இது கொஞ்சம் ஓய்ந்தது. அவனை நிறுத்த சொல்லு நான் நிறுத்துறேன்) அவன் சொல்கிறான்: ஐயா வைகுண்டரின் வழிபாடு அரக்கத்தனமும் இந்துமதமும் இணைந்த முட்டாள்தனமான வழிபாடாம் ('absurd medley of Hinduism an Demonolatory') (('The Land of Charity',, 'Devil-Worship' பக்.222-223)


ஐயா வைகுண்டரே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மிசிநரிகளின் நோக்கம் சமுதாய விடுதலையன்று, மாறாக சமுதாய தீமைகளை பயன்படுத்தி நடத்தும் மதமாற்றமே எனும் உண்மையை நமக்கு உணர்த்துகிறார். மிசிநரிகளின் போலி புனுகல்களை பார்த்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அவர்களை தெளிவாக 'மாநீசர்கள் ' என அடையாளம் காட்டினார். தருமத்திற்கும் தம்மக்களுக்கும் எதிராக இந்த மாநீச மிசிநரிகள் நடத்தும் அநியாயங்களையும் தம் மக்களுக்காக பாடுபடும் தம்மை 'ஏமாற்று வேலைக்காரன் ' என்று அழைத்த மிசிநரி பிரச்சாரங்களையும் ஐயா வைகுண்டர் எதிர்த்தார். இந்த பரவுத்தன்மை கொண்ட அந்நிய மதக்கண்டனத்தினை, சாதீய வெறியர்களுக்கு எதிராக அவர் நடத்திய போராட்டங்களுடனேயே அதே உக்கிரத்துடன், சிம்மகர்ஜனையாக வெளியிட்டார்:


'நான் பெரிது நீ பெரிது நிச்சயங்கள் பார்ப்போ மென்று
வான் பெரிதென்றறியாமல் மாள்வார் வீண் வேதமுள்ளோர்
ஒரு வேதந் தொப்பி உலகமெல்லாம் போடுவென்பான்
மறுத்தொரு வேதஞ் சிலுவை வையமெல்லாம் போடுவென்பான்
அத்தறுதி வேதமொன்று அவன் சவுக்கம் போடுவென்பான்
குற்றமுரைப்பான் கொடுவேதக் காரனவன்
ஒருத்தருக்கொருத்தர் உனக்கெனக் கென்றேதான்
உறுதியழிந்து ஒன்றிலுங் கை காணாமல்
குறுகி வழிமுட்டி குறை நோவு கொண்டுடைந்து
மறுகித்தவித்து மடிவார் வீண்வேதமுள்ளோர் ' (அகிலத்திரட்டு)

கிறிஸ்தவ சமயத்தினால் சமுதாய மேன்மையா ஏற்பட்டது ? தாழ்த்தப்பட்ட மக்களிடையே பகைமை ஏற்பட்டது. ஐயா வைகுண்டரின் அருள்வாக்கு உண்மை வரலாற்றினை விளக்குகிறது:

'விருச்சமுள்ள நீசன் வேசை நசுறாணியவன்
வையகங்களெல்லாம் வரம்பளித்த மாநீசன்
நெய்யதியச் சான்றோரின் நெறியெல்லாந் தான் குலைத்துப்
பேரழித்துத் தானம் பூப்பியமுந் தானழித்து
மார்வரையைக் கூடும் மைப்புரசு சஞ்சுவம் போல்
தானமழித்து சான்றோரின் கட்டழித்தான். '
(வையகங்களெல்லாம் வரம்பளித்த மாநீசன் என்பதில் அனைத்துக்கண்டங்களிலும் மிசிநரிகள் நடத்திய நச்சுவேலைகளையும் இனக்கருவறுப்புகளையும் வெளிப்படுத்துகிறார் ஐயா வைகுண்டர்.)


ஐயா முத்துக்குட்டி வைகுண்டசுவாமிகளின் சமுதாய சமரசப் புரட்சி காட்டும் உண்மை என்னவென்றால், சமுதாய ஏற்றம் பெற ஒரே நேரத்தில் சாதீய ஏற்றத்தாழ்வுகளையும், ஆன்ம அறுவடை செய்யும் அன்னிய விரிவாதிக்க சித்தாந்தங்களையும் எதிர்க்க வேண்டும். அதனையே ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கமும் அதன் குடும்ப அமைப்புகளும் செய்கின்றன. ஆக, ஆரியசமாஜமாகட்டும், சுவாமி விவேகானந்தராகட்டும், அய்யன் காளியாகட்டும், ஸ்ரீ நாராயணகுருவாகட்டும், ஏன் மகாத்மா காந்தியேயாகட்டும், மிசிநரிகள் பாரத தர்ம நெறி நின்று சமுதாய புரட்சி கண்ட செம்மல்களையும் இயக்கங்களையும் எதிர்த்துள்ளனர், நசுக்கி அழிக்க முயற்சித்துள்ளனர். உதாரணமாக சர்.ஹெர்கோர்ட் பட்லர் அவுத் மற்றும் வடமேற்கு மாகாணங்களின் லெப்டினண்ட் கவர்னர் 1-12-1907 தேதியிட்ட அறிக்கையில் கூறுகிறார்: 'அரசாங்கம் தலையிடவில்லை என்றால் ஆரியசமாஜத்தினால் பெண்களுக்கு கல்வி அளிக்கப்பட்டுவிடும். நமது பெண்கள் இங்கிலாந்திலிருந்து பெருமளவுக்கு வரவழைக்கப்பட்டு அவர்களே பெண்கல்வி அளிக்கும் படிக்கு பார்த்துக்கொள்ள வேண்டும்..ஆரிய சமாஜம் மிகவும் ஆபத்தான இயக்கம். அது தேசிய சிந்தனையையும் கீழ்ஜாதி மக்களை மேம்படுத்துவதையும் ஒருங்கிணைக்கிறது. '( 'Servant of India ' by Martin Gilbert). சுவாமி விவேகானந்தர் அனைத்து மக்களுமான சமஸ்கிருத கல்விசாலையை நிறுவ எடுத்துக்கொண்ட முயற்சிகள் மிசிநரி தூண்டுதலால் அரசாங்கத்தால் தடைபடுத்தப்பட்டன. இவ்வாறு முன்னூறு ஆண்டுகள் தேசியவாத சமுதாய சீர்திருத்தவாதிகளை முட்டுக்கட்டை போட்ட காலனிய அரசாங்கம், மறுபக்கம் தமது மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்ள தயங்காத சில சிறியோரை பெரியாராக சமுதாய சீர்திருத்தவாதிகளாக உலாவர செய்தது. ஏன்..இன்றைக்கும் காலனிய மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்ட சிந்தனையான மார்க்சியத்தின் அடிப்படையில் சிந்திக்கும் இடதுசாரிகள், இந்து தேசியவாதிகளின் நலிவுற்ற சமுதாய மேம்பாட்டு முயற்சிகளுக்கு இதர கிறிஸ்தவ இஸ்லாமிய அடிப்படைவாதிகளுடன் இணைந்து முட்டுக்கட்டைகள் போடுவதைக் காணலாம்.


உண்மைகள் இவ்வாறிருக்க பூசி முழுகும் பிரச்சார புனுகு வேலைகள் சில அறிவுஜீவிகள் என தம்மை காட்ட விரும்புவோருக்கு தேவைப்படுவதில் ஆச்சரியமென்ன ? ஆம். அவர்கள் தங்கள் கண் உத்திரத்தை அறியாதவர்கள்.

சிவசிவா அய்யா நாராயணருக்கும்
நாட்டுக்குப் பெரிய வைகுண்டருக்கும்
சிவசிவா கட்டியம் கட்டியம் கட்டியம்
சிவசிவா அரகரா ஜெயம் ஜெயம் ஜெயம்
தேசம் மயம் ஏகம் திட்டித்த மகாபர
இந்திர நாராயண அய்யா நிச்சயித்தபடி
யல்லாது மனுஷன் நிச்சயித்தபடியல்ல அய்யாவே

[ஐயா வைகுண்டர் சாமி தோப்பு தலைமை துவாரகபதி திருக்கோவிலிலே வழிபாட்டு மண்டப வாயிலின் வலப்பக்க சுவரில் பொறித்த உகப்படிப்பு]

12 Comments:

Anonymous Anonymous said...

Excllent article. I wonder how you get so much time in knowing things and putting in coherent manner. Keep it up.

10:11 AM, January 22, 2007  
Blogger கால்கரி சிவா said...

// wonder how you get so much time in knowing things and putting in coherent manner. Keep it up.
//

I too wonder Neels ability to remember. good work

3:23 PM, January 22, 2007  
Blogger ஜடாயு said...

நீலகண்டன்,

நீங்கள் திண்ணைய்யில் ஐயா வைகுண்டர் பற்றி எழுதிய கட்டுரைகளைப் படித்ததாகவே நினைவு. இந்தத் தொகுப்பு அருமை. அதுவும் மூலப் பாடல்கள் பலவற்றைக் கொடுத்துள்ளது மிக நன்று.

இவரது புனித சரித்திரத்தைப் படிக்கையில் மெய் சிலிர்க்கிறது. எப்பேர்ப்பட்ட ஆன்ம பலமும், மன உறுதியும் இருந்தால் இந்தக் கொடுமைகள் அனைத்தையும் சகித்திருப்பார்! குமரி மாவட்டத்திற்கு வெளியே அவ்வளவாக அறியப் படாதிருக்கிறது இவர் வரலாறு. இதை ஆன்மிக உள்ளம் கொண்டார் அனைவரிடமும் பரப்பிட வேண்டும். அச்சில் கொண்டு வாருங்கள்.

5:18 AM, January 23, 2007  
Anonymous Anonymous said...

பேயை வணங்குபவன் கிறிஸ்தவனே என்று


கிருத்துவ குஃபார்கள் பேயை வணங்குவதில்லை. பிணத்தைத்தான் வணங்குகிறார்கள்.

சிலுவையில் அறைந்து இறந்து போன உடலை வணங்குபவர்கள் பிணத்தை வணங்குபவர்கள் ஆகின்றார்கள்.

மார்க்கம் பிணத்தை வணங்குவதை எதிர்க்கிறது. பிணத்தை வணங்குபவர்கள் அந்த பிணத்தோடு குடும்பம் நடாத்தாமல் இருந்தால் சரி :-) !

10:12 AM, January 26, 2007  
Anonymous Anonymous said...

ஜீனியஸாக எனக்கு ஆசையிருக்கிறது.

கம்யூனலிஸ்ட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா, கம்யூனலிஸ்ட்டிக் பார்டி - மார்க்கஸீயம், அல்லது Chaste Prostitutes of India, Chaste Prostitutes - Marxism, Desparado Korporation, திருடர்கள் கழகம் இவர்களிடம் போனால் காபி பேஸ்ட் செய்தாலே அந்த பட்டம் கிடைத்துவிடுகின்றது. இந்த வேலைக்கு அதிகம் அறிவு தேவை இல்லை என்றாலும் (உண்மையில் அறிவு இல்லாமலிருப்பதுதான் முதல் தேவை) காபி பேஸ்ட் செய்ய கொஞ்சம் சோம்பேறித்தனமாக இருக்கிறது.

வாலிக்கும் சுக்ரீவனுக்கும் சண்டை நடந்த இடம் எது என்று சொல்ல முடியுமா?

அங்கே போய் வாலியின் கழுத்திலிருந்த ஸ்பெஷல் மாலையை எப்படியாவது கண்டுபிடித்து உங்களின் முன் நிற்க ஆவலாக உள்ளது.

10:26 AM, January 26, 2007  
Blogger HINDHU said...

//இவரது புனித சரித்திரத்தைப் படிக்கையில் மெய் சிலிர்க்கிறது. எப்பேர்ப்பட்ட ஆன்ம பலமும், மன உறுதியும் இருந்தால் இந்தக் கொடுமைகள் அனைத்தையும் சகித்திருப்பார்! குமரி மாவட்டத்திற்கு வெளியே அவ்வளவாக அறியப் படாதிருக்கிறது இவர் வரலாறு. இதை ஆன்மிக உள்ளம் கொண்டார் அனைவரிடமும் பரப்பிட வேண்டும். அச்சில் கொண்டு வாருங்கள்.//

ஆம் ஐயா இப்போதுதான் இவரைப்பற்றி முதன் முதலாக அறிகிறேன். இதை அனைவரும் அறிய வழிசெய்ய வேண்டும்.

2:46 AM, January 27, 2007  
Blogger arunagiri said...

அரவிந்தன், அய்யா வைகுண்டர் குறித்து நேரம் கிடைக்கையில் விரிவாகப் பதிவு போட வேண்டுகிறேன். உங்கள் விரிந்த படிப்பும் இப்பதிவுகளும் பலருக்கும் (எனக்கும் சேர்த்து), சமூக வரலாற்றில் தூசு படிந்திருக்கும் பல உண்மைகளை சுத்தப்படுத்தி சூரிய ஒளிக்குக் கொண்டு வரும் மகத்தான பணியைச் செய்து கொண்டிருக்கின்றன. இப்பணிக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

3:14 PM, January 27, 2007  
Blogger thiru said...

அரவிந்தன்,

உங்களது இந்த பதிவில் (வழக்கம் போல) அய்யாவை இந்து மதத்தில் அடையாளப்படுத்த முனைந்திருக்கிறீர்கள்.

//காவிக் கொடியினை அன்புக்கொடியாக ஏந்திப்பிடித்து போராடிய வரலாறு இந்துத்வ வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டியது.//

அய்யா இந்து மதத்தின் அடிமைத்தனத்திற்கு எதிராக எழுந்தவர். மக்களை அய்யாவழி என்னும் புது மதத்தில் வழிநடத்தி விடுதலையும், தன்மானமும் பெற்றுத்தந்தவர். இந்துத்துவ கொள்கையும் அய்யாவின் கொள்கையும் ஒன்றுக்கொன்று எதிரானவை.

//ஐயா வைகுண்டர் காணிக்கை வேண்டாம் என்று சொன்னாராம் அதனால் அவர் இந்து மதத்தவர் அல்லவாம். ஆனால் இதே திரு இன்னொரு இடத்தில் கூறுகிறார் மாடனுக்கு கோழி பலியிடுவதை நீக்கி இந்துத்வ படுத்துகிறார்களாம்.//

அய்யாவழி தனிமதம் என்பதை அறிய (அறியாமல் இருப்பின்) இந்த சுட்டிகளை படிக்கவும்: http://aalamaram.blogspot.com/2007/01/blog-post_21.html

இந்துமதம் ஒன்று தான் என நிறுவும் முயற்சியில் சங்கப்பரிவாரங்கள் பன்முக கலாச்சாரங்களையும், மதங்களையும் இந்துமதம் என்ற போர்வையில் விழுங்குவதை கண்டிக்கிறேன். ஒவ்வொரு வழிப்பாட்டுமுறைகளும் அதன் அடையாளங்களோடு அந்த மக்களின் முறையாக தொடர்வது அவசியம். பன்றிக்கறி படையல் வைத்து வழிபடுவதை அழித்து அவர்களை ஆரிய இந்துமத்தில் இழுக்கும் ஆதிக்கவெறி கண்டிக்கப்படவேண்டியது.

//என்றால் ஐயா வைகுண்டர் கூறுகிறாரே:

'ஆடுகிடாய் கோழிபன்றி ஆயனுக்கு வேண்டாம்
கொட்டு மேளம் குரவைத்தொனி ஈசனுக்கு வேண்டாம்
அன்பு மனமுடன் அனுதினமும் பூசை செய் 'என்று//

அய்யா பூசை, காணிக்கை, பூசாரி, தேர், சிலைகள், பேய்வழிபாடு, சாதியை உருவாக்கியவர்கள் என எல்லாவற்றையுமே எதிர்த்தார். பார்ப்பனீய இந்து மதத்தின் அடிமைத்தனத்திலிருந்து மக்களை மீட்டு அய்யாவழி என தனிமதத்தை தோற்றுவித்தார்.

இது பற்றிய இன்னொரு சுட்டி இங்கே http://aalamaram.blogspot.com/2007/01/blog-post_23.html

இந்த தனிமதத்தை இந்துமதம் என்று சொல்லும் உங்கள் போக்கு ஆதிக்க இந்துமதத்தில் அய்யாவழியை விழுங்கும் முயற்சியாக தான் இருக்க இயலும். இது அய்யாவின் கொள்கைகளுக்கே எதிரான செயல். அய்யா பார்ப்பனீய சாதி அடிமைத்தனத்திலிருந்து மக்களை மீட்டெடுத்தவர். நீங்கள் அய்யாவின் பக்கமா? பார்ப்பனீயத்தின் பக்கமா?

7:52 AM, January 29, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

திரு, உங்கள் திருகல் வேலைகள் சமயத்தில் நகைசுவையாகவும் இருக்கின்றன. ஐயா வழியை வாழ்க்கை பாதையாகவே உணர முடிந்த எனக்கு கேவலம் இணையசுட்டிகள் தேவையில்லை. அதுவும் உங்கள் சுட்டிகளே ஆதாரமாக! முதலில் இந்த மார்சேலை சமாச்சாரத்தை பார்ப்போம். 18 சாதி என்கிறீர்களே அதில் நாயர் வரவில்லை என்கிறீர்களே அங்கிருந்தே உங்கள் அறிவு தெரிய ஆரம்பித்துவிடுகிறது. அகிலம் 18 சாதிகளில் துளுபட்டரையும் சூத்திரரையும் குறிப்பிப்பிடுவதைக் காணலாம். திருவிதாங்கூரில் சூத்திரர் என்பது ஆதிக்க சாதியாக இருந்த நாயரை குறிக்கும். துளு பட்டர் என்பது திருவிதாங்கூரில் மோசமாக நடத்தப்பட்ட அந்தண சாதி பிரிவு. மேலும் நீங்களும் உங்களைப் போன்றோரும் கருதுவது போல நாடார்கள் அனைவரும் உழைக்கும் கீழ்சாதியாகவும் இருக்கவில்லை. வெள்ளாளர் அனைவரும் நிலசுவான்தாரராகவும் இருந்திடவில்லை. 'மேல் சாதி' பெண்களும் அந்த காலகட்டத்தில் மேலாடை உடுக்காமல்தான் இருந்தனர். ஐயா தோள்சீலை போராட்டத்தை ஆசிர்வதித்தார். ஆனால் மிசிநரிகள் அதனை பயன்படுத்தினர். ஐயா சாதியத்தை எதிர்த்தார் நீசன் என அவர் கூறுவது இந்துமதக் கடவுளை என சொல்வது நல்ல ஜோக். சாதிய அடக்குமுறையை -குறிப்பாக வெள்ளையன் கைப்பாவையாக அதனை பயன்படுத்திய திருவிதாங்கூர் அரசனை- அவர் நீசன் என்கிறார்.
நாடுங் குறோணி நாத வழியாய்ப் பிறந்த
மூடமடைந்த முழு நீச மாபாவி
இருந்த வூர்விட்டு எழுந்திருந்து தானேகி
வருந்த படையோடு வந்தான் என்றெல்லாம் சொல்வதிலிருந்தும் அகிலம் முழுவதிலும் இருக்கும் அனைத்து பாடல்களிலிருந்தும் தெரிந்து கொள்ளலாம்.


போனவாரம் பாஜக தலைவர் திரு. ராஜ்நாத்சிங் அவர்கள் வந்திருந்த போதும் கூட அவருக்கு ஐயாவழி தலைமைப்பதியில் வாத்திய வரவேற்பு வழங்கப்பட்டது. ஐயாவழி மக்களே மண்டைக்காடு கலவரத்தின் போது எத்தனையோ இடங்களில் கிறிஸ்தவ வெறியர்களால் பாதிக்கப்பட்டனர். 2005 இல் கூட கன்னியாகுமரி அருகே கடற்கரை யோர துவாரகா பதி கிறிஸ்தவ வெறியர்களால் தாக்கப்பட்டு ஒரு கலவரத்தை தூண்டும் கட்டத்தை அடைந்து பிறகு காவல்துறை இடையீட்டால் தணிந்தது. சரி தலைமைப்பதியான சாமிதோப்பு பதி கர்ப்பகிருகத்தை போயாவது நீர் பார்த்திருந்தால், கருவறைக்கதவிலேயே மகாவிஷ்ணுவின் தசாவதார சிற்பங்களை நீர் காண முடியும். சுவாமி கொடிமர உச்சியில் கருடாழ்வார் அமைந்திருப்பதைக் காணலாம். துவாபர யுகத்தின் பஞ்சபாண்டவரே கலியுகத்தில் ஐயாவின் சீடர்களாக பிறந்தார்கள் என்கிறது அகிலம். மேலும் ஐயாவின் தெய்வீக திருமணத்தை அகிலம் விவரிப்பதை நோக்கலாம்:
"மலர்மாரி சலமாரி வானோர் தூவ
நான்முகனும் வேதமுறை முகூர்த்தங் கூற" என்பது அகிலம். 1841 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் வெள்ளிக்கிழமை ஐயா தன் அரிகோபாலன் சீடருக்கு அகிலத்திரட்டை எழுதப்பணித்தருளினார். அது முதல் அதனை 17 பகுதிகளாக பிரித்து நாளைக்கு ஒன்றாக ஏடு வாசிப்புத்திருவிழாவில் வாசிப்பர். அதன் முதல் நாள் சூரபத்துமனை அழிக்கும் நிகழ்ச்சியும், அதற்கு அடுத்த நாள் கம்சனை அழிக்கும் நிகழ்ச்சியும் அதன் தொடர்ச்சியாக ஐயா கலிநீசனை எதிர்த்த நிகழ்வுகளும் பாரதத் தேசிய தருமமும் விவரிக்கப்படும். ஆக, திரு சொன்னதற்கு நேர் மாறான ஒரு பார்வையை ஐயா நமக்கு அருளுகிறார். சாதீய பாகுபாடுகள் இந்து தருமத்தின் பரம்பொருளுக்கு எதிரான அசுரசக்தியாகவே அவர் காண்கிறார். ஐயா சாதியற்ற தரும சமுதாயத்தை உருவாக்கி அன்புக்கொடியாம் காவிக்கொடியின் கீழ், தேசம் புனர்நிர்மாணம் செய்யப்பட வேண்டுமென விரும்பியவர்.
வாரி மூன்று கோதி வளைந்திருக்கும் ஓர் தீவை
சாதியொரு நிரப்பாய் ஆள்வாய் என் மகனே
சரி அது யாரால் செய்யப்பட வேணும்? அதற்கு அனுமானைப் போன்ற தந்நலமற்று இராமசேவையாக ராஷ்டிர சேவை செய்யும் தொண்டர் படை உருவாகும் என்று முன்னுரைக்கிறார் ஐயா:
நாட்டிலொரு அனுமன் நல்லவனை நானயச்சு
கோட்டிசெய் என்றுரைப்பேன் கோமகனே உன்காலம்.
சங்கத்தின் கோட்பாடுகள் அனைத்துமே ஐயா வைகுண்டர் கூறியவைதாம். சாதியமற்ற சமுதாயம், மதமாற்றிகளால் பாழ்படுத்தப்படாத சமுதாயம், எத்தனை வேறுபாடுகள் இருந்தாலும் அந்த வேற்றுமைகளிலும் ஒற்றுமை கண்டு ஒரே மக்கள், குமரி முதல் இமயம் வரை ஒரே தேசம் எனும் தேச ஒற்றுமை. ஐயா அளித்த புனித காவிக்கொடியே இன்று எங்கெங்கும் தாழ்த்தப்பட்ட மக்களின் சமுதாய மேம்பாட்டிற்கு உழைக்கும் உத்தம சின்னமாக திகழ்கிறது. எனவே ஒவ்வொரு முறை காவிக்கொடியின் முன் ஸ்வயம் சேவகனாக சிரம் தாழ்க்கும் போதும் ஐயாவின் ஆணையை தேசம் முழுவதும் செயல்படுத்துகிறோம் என்பதனை ஐயாவின் உண்மை பக்தர்கள் அறிவார்கள்.

5:28 PM, January 29, 2007  
Blogger arunagiri said...

அரவிந்தன்,

சரியான ஆணித்தரமான பதில். இந்து மதத்தின் சமூக மாற்றங்கள் பலவும் இந்து சமூகம் மீது மிகுந்த அக்கறை கொண்டு இந்துக்களாகவே மனதில் தங்களைக் கண்ட மகான்களால்தான் நடத்தப்பட்டது. நல்ல விஷயங்கள் எதுவாயிருந்தாலும் அதனை இந்து மதத்திலிருந்து கழற்றிப் பிரித்துத் தூர வைத்து விட்டு, கெட்ட அவலங்களையும் மட்டுமே இந்து மதத்தின் அடையாளமாக்கும் காலனீய அடிமைக் கண்ணோட்டம் பார்வைக்கோளாறுகளை உருவாக்குவது இயல்புதானே.

6:10 PM, January 29, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

நன்றி அருணகிரி. மிகவும் மோசமான இந்த உக்தியை ஸ்ரீ நாராயணகுரு போன்றவர்கள் அருமையாக எதிர்த்திருக்கிறார்கள். சுவாமி விவேகானந்தரால் தூண்டப்பட்டு சமுதாயக்கொடுமைகளை எதிர்க்க ஸ்ரீ நாராயணகுருவிடம் வந்த பல்பு அவர்கள் ஒருமுறை இது குறித்து ஸ்ரீ நாராயணகுரு அவர்களிடம் கேட்ட போது இந்து சமுதாயத்தின்ல் அங்கமாக இருப்பதன் அவசியத்தை ஸ்ரீ நாராயணகுருதேவரே விளக்கினார்கள். மற்றொரு விசயத்தை கவனியுங்கள். பசுவினை அடிப்படையாக கொண்டு தலித்துகள்/சாதீய எதிர்ப்பு ஆகியவற்றை இந்துத்வத்திற்கு எதிராக நிறுத்தும் ஒரு போக்கு உள்ளது. ஐயா வைகுண்ட சாமிகளும் சரி ஸ்ரீ நாராயண குருதேவரும் சரி பசுவதையை கண்டித்தார்கள். குருஜி கோல்வால்கரிடம் பசுவினை உண்ணும் வனவாசிகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது அப்போது குருஜி ஒருவரது பழக்க வழக்கத்தினை மாற்றிட வேண்டிய அவசியமில்லை என்று சொல்லிவிட்டார்கள். இந்துத்வம் என்பது பரந்து பட்டது. தன்னுள் ஆயிரமாயிரம் வண்ணங்களைக் கொண்டது. ஆனால் இந்துத்வத்தை ஒற்றைப்பரிமாணப்பார்வையில் முத்திரை குத்திட விரும்பும் பாசிச சக்திகளுக்கோ இந்த உண்மைகளைக் குறித்து அக்கறையில்லை. முத்திரை குத்த உண்மை தரவுகள் எப்போதுமே இடைஞ்சலானவை. எனவேதான் தரவுகளையே அழித்து தமக்கு சாதகமான கதையாடல்களை கூற விரும்புகிறார்கள் போலி-முற்போக்குகளும் மிசிநரி ஆதரவு 'அறிஞர்களும்'. உதாரணமாக அ.கா.பெருமாளின் 'தென்குமரியின் கதை' என்பதை எடுத்துக்கொள்ளலாம். ஐயா வைகுண்டரை குறித்து கூறும் அவரது எழுத்துக்கள் மிகவும் மேலோட்டமானவை மட்டுமல்ல கிறிஸ்தவத்தின் ஐயா வைகுண்டர் எதிர்ப்பையும் அவர் பூசி மெழுகியிருப்பதை காணலாம். அண்மையில் தோள்சீலைப் போராட்டத்தை குறித்த உண்மைகளை கணேஷ் நாடார் அவர்கள் அருமையாக விவரித்திருந்ததையும் மிசிநரி சூழ்ச்சிகளை தோலுரித்திருந்தமையையும் பார்த்திருப்பீர்களே.

6:30 PM, January 29, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

ஆனால் பொதுவாக மிசிநரிகள் செய்யும் திருகு வேலையோடு ஒப்பிடுகையில் 'திரு' வின் திருகு வேலை அமெச்சூரிஷ் என்றே சொல்லவேண்டும். :)

6:31 PM, January 29, 2007  

Post a Comment

<< Home