Monday, April 23, 2007

மண்டைக்காடு கலவரத்தின் முன்னோடி நிகழ்ச்சிகள்

மா.சிவகுமார் போன்றவர்கள் அன்றைய குமரிமாவட்ட சூழல் குறித்து சொல்லும் பொய்களுக்கு அப்பால் எவ்விதத்தில் அன்றைய இந்துக்கள் குமரிமாவட்டத்தில் வாழ்ந்தார்கள், குறிப்பாக கிராமப்புறங்களிலிருந்து வசதி குறைவான தாழ்த்தப்பட்ட சமுதாய இந்துக்கள், மதம்மாற மறுத்தபோது எத்தகைய அவமானத்துக்கும் வன்முறைக்கும் ஆளானர்கள் என்பதன் வலியை உணருவது மிகவும் கடினம். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார். கோகட் கலவரத்தில் இஸ்லாமியர்கள் இந்து பெண்களுக்கு செய்த படுபாதக செயல்களை அறிந்தபோது "இந்துக்களிடம் முஸ்லீம்களை நம்புங்கள் என்றேனே இனி இந்துக்களுக்கு நான் என்ன பதில் சொல்லமுடியும்." என கண்ணீர் விட்டார் மகாத்மா காந்தி. ஆனால் இதோ நம் இணைய 'காந்தியவாதி' கூறுகிறார்: "என்னிடம் பேசும் பாகிஸ்தானி நன்றாக சிரிக்கிறான். அப்போது நான் ஏன் பாகிஸ்தானி இந்துக்களூக்காக கவலைப்பட வேண்டும்?"
1982 இல் மண்டைக்காட்டில் நிகழ்ந்த கலவரத்துக்கு பல நிகழ்ச்சிகள் அதற்கு முன்னரே கட்டியம் கூற ஆரம்பித்துவிட்டன. குமரி மாவட்ட காவல்துறைகளில் இந்துக்கள் தங்கள் வழிபாட்டுரிமை மறுக்கப்படுவதை கூறும் புகார்கள் குவிந்திருந்தன. இவை இயக்கம் சார்ந்த இந்துக்களால் அளிக்கப்பட்டவை அல்ல. இவை சாதாரண இந்துக்கள் தமது மதத்தினை பின்பற்ற முடியாத அளவில் தாக்கப்பட்ட போது அவமானப்படுத்தப்பட்ட போது அளித்த அவல சான்றிதழ்கள். இவர்கள் எவருமே 1982க்கு முன்னர் ஆர்.எஸ்.எஸ் என்ற அமைப்பினையே கேள்விப்பட்டதில்லை. இந்துக்களுக்கு என்று பேச ஒரு அமைப்பு இருக்கிறது என்று தெரியாதவர்கள். மேலும் இந்த புகார்களை கொடுத்தவர்கள் மேல்சாதி என அழைக்கப்படுபவர்கள் இல்லை. தாழ்த்தப்பட்ட மக்கள். தாக்கப்பட்ட கோவில்கள், உடைத்தெறியப்பட்ட வழிபாட்டுத்தலங்களின் பூசாரித்துவம் பிராம்மணர்களுடையதும் இல்லை. ஆனால் இவைதான் மதமாற்றத்துக்கு தடையாக கிறிஸ்தவ மிசிநரிகளால் கண்டறியப்பட்டன. 'பிற மத கோவில்கள் நாசமடைந்து உண்மைத்தேவனான ஏசுவின் வழிபாட்டுத்தலமே செழித்தோங்க வேண்டும்' என்கிற முன்னணி கிறிஸ்தவ பிரச்சாரகனின் வார்த்தைகளை செயல்படுத்த முற்பட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பில் ஒரு சிறிய துளி (proverbial tip of the ice berg) நீங்கள் கீழே காண இருக்கும் பட்டியல்:
12-1-1980: மருதூர்குறிச்சி சாஸ்தா கோவில் (தேவசம்போர்டுடன் இணைக்கப்பட்டது) கணபதி, நாகர் சிலைகள் உடைப்பு
1980-டிசம்பர்: நாராயணசாமி கோவில் திருவிழாவில் கல்லெறி தாக்குதல்
8-1-1981: காப்பிக்காட்டுவிளை மயிலாடும் பாறை நாகர் சிலைகள் உடைக்கப்பட்டு சிலுவை நடப்பட்டது. பின்னர் ஊர்மக்கள் அந்த சிலுவையை அமைதியாக மாற்றிவிட்டு நாகர்சிலைகளை மீள் பிரதிஷ்டை செய்தனர்,
21-1-1981: வில்லுக்குறி பஞ்சாயத்து பாறையடிக்கிராமம்: பத்திரக்காளி அம்மன் கோவில் திருவிழா நடக்கக்கூடாது என கிறிஸ்தவர்கள் எடுத்துச்சென்ற பொருட்களை கிறிஸ்தவர்களிடம் சமாதானம் பேசி அன்று காவல்துறை மீட்டது.
7-2-1981: கண்ணமங்கலம் கிராமம் கிருஷ்ணன் கோவில் பிள்ளையார் சிலை உடைப்பு
13-2-1981: குழித்துறை கல்லுக்கட்டி: கோவில் கிருஷ்ண விக்கிரகம் உடைப்பு
8-12-1981: பருத்திக்காட்டுவிளை கண்ணப்பச்சி கோவில் கச்சேரி மேடை தாக்குதல்: (MDI 1199 என்கிற காரில் வந்த கிறிஸ்தவர்கள் தலைமை தாங்க தாக்குதல்)
26-12-1981: வழிக்கலம்பாட்டு சிற்றூரில் வாழும் 50 சிறுபான்மை இந்து குடும்பங்கள் விரட்டியடிப்பு
27-12-1981: போலிஸ் பாதுகாப்புடன் இந்துக்கள் மீண்டும் ஊருக்குள் வந்த போது போலிஸ் முன்னாலேயே இந்துக்கள் தாக்கப்பட்டனர். காவல்துறையே நிலமை சரியாகும் வரை ஊருக்குள் வரவேண்டாம் என அறிவுரை கூறிய அவலநிலை.
26-12-1981 : மருவூர்க்கோணம் சாஸ்தாகோவில் நாகர் திருவுருவங்கள் உடைப்பு
ஒசரவிளை தலித் காலனியில் மதம்மாற மறுத்த தலித் பெண்மணி திருமதி வனவாள் அன்றைய தமிழக முதல்வர் திரு.எம்.ஜி.ராமச்சந்திரனுக்கு அளித்த மனுவில் கூறுகிறார்:
"குளத்தில் குளிக்கும் போது தொல்லை தருகிறார்கள். வீட்டு வாசலில் கோலம் போடுவது கல்லெறிகிறார்கள். கிறிஸ்தவர்கள் கூட்டு பஜனை பாடி வரும் போது வீட்டு முன்னால் நின்று உரக்க கத்தி தொல்லை தருகிறார்கள். என் குழந்தைகள் வெளியே செல்லும்போதும் தொல்லை தருகிறார்கள்." இது 1982 ஜனவரியில் அளிக்கப்பட்டது. அதே ஆண்டு சுண்டபற்றி விளை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அந்தோணி தங்கராஜ் பள்ளியில் பைபிள் விநியோகம் செய்ததற்காக மாற்றம் பெறுகிறார்.

இப்படி ஒவ்வொரு கட்டத்திலும் அடிவாங்கி மானமிழந்து இந்து என சொல்லவே வெட்கி மதமாறாவிட்டால் மானமுடைய வாழ்க்கை இல்லை எனும் நிலையில் குமரிமாவட்ட இந்து தள்ளப்பட்டான். நாகர்கோவில் டவுணுக்குள் மேல்சாதி இந்துக்கள் சிலருக்கு இந்த வலி புரியாது போவதில் அதிசயமில்லை. மூன்று வேளை சாப்பாடும், தன் பாதுகாப்புக்காக வேறொருவன் எங்கோ அடிபடும் சூழலும் அமைந்திருக்கும் போது காந்தியம் பேசலாம். கிறிஸ்தவ வெறியனால் ஆடையிழந்து பகவதி சரணம் என ஓடி தற்கொலைக்கு முயற்சித்த பெண் தன் தாயாராகவோ சகோதரியாகவோ இல்லாத நிலையில் வசதியாக சாய்ந்து கொண்டு காந்தியம் பேசலாம். தன் சொந்த முன்னோருக்கு படைத்த படையலை "பேய்க்கு வச்சத சாப்பிடமாட்டேன்" என பாதிரி மூளைச்சலவையால் தன் மகள் கூற அதிர்ந்து நிற்கும் தலித் தந்தையாக ஒருவர் இல்லாத போது போலி-காந்தியம் தாராளமாக பேசலாம். ஆனால் கன்னியாகுமரி மாவட்டத்தின் பாதிக்கப்பட்ட இந்துவுக்கு -நேற்றுவரை தன் சமயத்தவராலேயே தாழ்த்தப்பட்டு இன்று பிற சமயத்தவரால் தாக்கப்படும் இந்துவுக்கு- அன்றும் இன்றும் ஆதரவு அளித்த சக்தியின் பெயர் இந்துத்துவம்.

இது குறித்து மேலும் எழுதுவேன்

8 Comments:

Anonymous Anonymous said...

மா.சி யாரையோ சந்தோஷப்படுத்துவதற்காக இவ்வாறாக எழுதுகிறார். யார் கண்டது ஏதேனும் பணப்பட்டுவாடா நடக்கிறதோ என்னமோ?

11:16 PM, April 23, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

நெஞ்சில் உரமுமின்றி, நேர்மைத் திறனுமின்றி
வஞ்சனை செய்வாரடி- கிளியே வாய் சொல்லில் வீரரடி
...
சொந்த சகோதரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும்
சிந்தை இரங்கா ரடீ! - கிளியே!
செம்மை மறந்தா ரடீ!
எனும் பாரதி வார்த்தைகளுக்கு பிரத்தியட்ச உதாரணம் மா.சிவகுமார். பிஜி தீவில் வாடும் இந்து மாதுகளின் கொடுமைகளுக்காக கண்ணீர் வடித்தார் பாரதி. ஆனால் கன்னியாகுமரி மாவட்ட இந்துக்கள் ஒடுக்கப்பட்டால் சென்னை இந்துவுக்கு என்ன வந்தது என கேட்கிறார் மா.சிவகுமார். பங்களாதேஷில் இந்துக்கள் கொடுமைப்படுத்தப்பட்டால் எனக்கென்ன என்னிடம் பேசுகிற பங்களாதேஷி நன்றாக கோல்கேட் ஸ்மைல் செய்கிறான் அது போதாதா என்கிறார் சிவகுமார். ஹும்...அய்யா வைகுண்டரும் குரு தேஜ்பகதூரும் மா.சிவகுமார் போல நினைத்திருந்தால் எல்லோரும் முஸ்லீமாகவோகிறிஸ்தவர்களாகவோ மாறி இந்த நாட்டை இரண்டு ராட்சச மதங்களுக்கிடையே பங்கு போட்டு தொலைத்திருக்கலாம். அப்பாவி இந்துக்களுக்கு அது தெரியவில்லையே.

11:42 PM, April 23, 2007  
Anonymous Anonymous said...

வாழ்வில் தொலைத்து விட்டதை அணைந்து போன பந்தம் பிடித்து இருட்டில் தேடும் கூட்டம் இது.அதனால் வந்த விரக்தியை சாதீயம் பேசி தீர்த்துக் கொள்கிறார்கள்.வசதிக்கேற்ப நிறம் மாறுபவர்கள்,அதற்காக வெட்கமும் இல்லாதவர்கள்.நெஞ்சில் உரம் மட்டுமல்ல தரமும் இழந்து அந்த மகா கவிக்கே சாதிச் சாயம் பூசியவர்கள்.
நீங்கள் த.ம விலிருந்து விலகியதையே வெற்றியாக கொண்டாடும் இவர்களிடம் என்ன எதிர் பார்க்கிறீர்கள்,அரவிந்தன்.
அன்புடன்
ப.பாண்டியன்

3:25 AM, April 25, 2007  
Anonymous Anonymous said...

நீலகண்டன்,

இந்த விஷயங்களை திண்ணைக்கும் மற்ற இதழ்களுக்கும் அனுப்புங்கள்.தேன்கூட்டில் உங்கள் பதிவை இணையுங்கள்.நிறைய பேருக்கு இவை போய் சேர வேண்டும்

12:44 AM, April 26, 2007  
Anonymous Anonymous said...

Aravind,

Just a small suggestion.

Please enable full dates of comments to appear below the comments. Now only time appears and this doesn't give any idea of dates (how old are they). There is a setting for this. Thanks.

9:46 AM, April 26, 2007  
Anonymous Anonymous said...

"மூன்று வேளை சாப்பாடும், தன் பாதுகாப்புக்காக வேறொருவன் எங்கோ அடிபடும் சூழலும் அமைந்திருக்கும் போது காந்தியம் பேசலாம்".

100% right. Ask those people to visit Saudi Arabia or to work in saudi arabia. Then they will get clear idea about other religions.

For example, Saudi rule says if a muslim dies in accident he will get 12 lakh indian rupees as compensation. For a hindu this is only 1 lakh rupees. What is Ma. Sivakumar's comment on this.
With regards,
A tamil hindu ( Saudi Arabia ).

9:27 AM, April 27, 2007  
Blogger அருணகிரி said...

அரவிந்தன்,

பலருக்கும் முழுதாய்த்தெரியாத இந்நிகழ்வுகளை வெளிச்சம் போட்டதற்கு நன்றி. இவை மீண்டும் மீண்டும் தமிழ் மக்கள் அனைவருக்கும் கேட்கும் வகையில் உரத்த குரலில் சொல்லப்பட வேண்டும். Those who forget the past are condemned to repeat it.

அருணகிரி.

7:58 AM, April 28, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

அனிருத் நன்றி. செய்துவிட்டேன். அனானி நன்றி. அருணகிரி, //Those who forget the past are condemned to repeat it.// உண்மை இத்தொடரின் இறுதியில் அது தெள்ளத்தெளிவாக தெரியவரும்.

8:56 AM, April 28, 2007  

Post a Comment

<< Home