Wednesday, April 18, 2007

போலி காந்திய பொய்களும் கலவர-காரண உண்மைகளும்

மா.சிவகுமாரின் ஆதாரமற்ற பொய்கள் எனக்கு சிறிது அதிர்ச்சியூட்டின. 1982 இல் நடந்த மண்டைகாடு கலவரம் ஏதோ ஆர்.எஸ்.எஸ்ஸால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதாக அவர் எழுதியிருக்கிறார். இதற்கு ஜோவும் ஒப்புதல் அளித்திருக்கிறார். இதே போன்ற கருத்துகள் ஏறக்குறைய ஓர் ஆண்டுகளுக்கு முன்னர் திண்ணையில் கூறப்பட்ட போது நான் எதிர்த்து எழுதியது நன்றாக நினைவிருக்கிறது. ஆனால் காந்தியின் பெயரை சொல்லி தனக்கு கண்ணியத்தை ஏற்படுத்தி தன்னை காந்தியவாதியாக சுய-முத்திரை அளித்துக்கொள்ளும் ஒரு நபர் இவ்வாறு கூறியுள்ளது காந்தியம் என்பது எப்படி முகமூடியாக பயன்படுகிறது என்பதனைத்தான் காட்டுகிறது. காந்திஜி மதமாற்றத்தை எதிர்த்தார் என்றால் அவர் ஏதோ திண்டில் சாய்ந்துகொண்டு கூறிய பதில் அல்ல அது. கிறிஸ்தவ மிசிநரிகளின் அயோக்கியத்தனத்தை முழுமையாக பார்த்து கூறிய விசயம் அது.


இனி குமரி மாவட்டம் மத-கலவர பூமியான விசயத்துக்கும் வருவோம். மாசிவகுமார் தனது மானங்கெட்ட பொய்யை கூறுகிறார்: அதாவது வர்ணாசிரமம் இங்கு வேரூன்றி கிறிஸ்தவசமூக சேவைகளுக்கு துணை போனதாம். ஆனால் உண்மை என்னவென்றால் மன்னராட்சி சமுதாயமாக அன்று விளங்கிய திருவிதாங்கூரில் அரசியல் காரணங்களுக்காக கீழ்த்தரமாக சாதீய வெறி பிடித்து நாடார் சாதியினரை மிதித்தவர்கள் யார் என்றால் சூத்திரராக இருந்த நாயர் மற்றும் வேளாளர் ஆவர். அதாவது ரவிகுல வலங்கை ஷத்திரியரான நாடார்கள் கீழே தள்ளப்பட்டு அவர்கள் மீது ஏறி இருந்தவர்கள் சூத்திரர்கள். அது போலவே துளு பிராமணர்களும் கொடுமைப்படுத்தப்பட்டனர். ஆக, வர்ணாசிரமம் அல்ல இங்கே காரணம் சாதிய வெறியும் அரசியல் காழ்ப்புணர்ச்சியும் காரணமாக இருந்தது. இந்நிலையில் சமுதாயத்தில் அனைத்து சாதியினரும் ஏற்றம் பெறவும் மதமாற்றிகளின் நச்சு முயற்சிகளை வேரோடு கலியறுக்கவும் ஒரு அவதார புருஷன் தோன்றினார் இந்த புண்ணிய தட்சிணபதியிலே. அவர்தானடா எங்கள் அய்யா வைகுண்டர். கேடுகெட்ட சாதிவெறியர்கள் ஒருபுறம், சாதிய சாக்கடையில் உருவாகிய கொசுக்களென அன்னிய மதமாற்றிகள் மறுபுறம். காலனியாதிக்க மதமாற்ற ஒட்டுண்ணிகள் ஒருபுறம் சொந்த சகோதரரே சாதியின் பெயரால் நம்மை மிதித்திடும் கொடுமை மறு புறம். அப்போதுதான் சூரனை வேரறுத்த திருச்செந்தூரின் கிழக்கு கடலதனில் காவி சூரியனாக உதித்தெழுந்தார் அய்யா வைகுண்டர். தாழ்த்தப்பட்ட மக்கள் தருமத்தின் துணை கொண்டு தலை நிமிர்ந்தனர். தலைப்பாகையுடன் திருமண் சாத்திய காவிக்கொடியும் மேலெழுந்தது. சாதீயம் அழிந்தது. அழிவற்ற தரும யுகத்துக்கான சங்கொலி எழுந்தது.


இப்போது சாதியத்தை பயன்படுத்தி மதமாற்றம் செய்து வந்த மிசிநரிகள் அய்யா வைகுண்டரை எப்படி எதிர்கொண்டார்கள் என்பதிலேயே தெரிந்து விடும் அவர்களது 'சமூக சேவை' அரிதார இலச்சணம். மிசிநரிகளையும் இசுலாமியர்களையும் அய்யா வைகுண்டர் கடுமையாக சாடினார். இதில் நாம் கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால் 'வர்ணாசிரமம் தலைவிரித்தாடியதாக கூறப்படும் திருவிதாங்கூர் அரசுதான் மிசிநரிகளுக்கு அளவுக்கதிகமான இடம் கொடுத்திருந்தது. நீதித்துறை ஒரு மிசிநரியிடம் ஒப்படைக்கப்பட்டு அதனை வைத்து அவன் தனியாக மதமாற்றம் செய்துகொண்டிருந்தான். சிறைகைதிகளைக் கொண்டு கோவில் குளங்களை உடைத்து கர்த்தருக்கு தேவாலயம் கட்டிக்கொண்டிருந்தான். திருவிதாங்கூர் சமஸ்தானமோ ஆடம்பர செலவுகளில் மீள்கிக்கிடந்தது. பிற்காலத்தில் எழுந்த சாதிய ஒழிப்பு சக்திகளுடன் அன்றைய இந்துத்வவாதிகள் இணைந்து செயல்பட்டதை அய்யன் காளியின் வரலாறு கூறும். சுருக்கமாக சொன்னால் மதச்சார்பின்மை என மாய்மாலம் பேசும் இன்றைய கும்பலின் அன்றைய பிரதிநிதிகள் மிசிநரிகளுடன் சிநேகிதமாக இருந்தார்கள். மிசிநரிகளை எதிர்த்து தாழ்த்தப்பட்ட மக்களை உயர்த்த விடுவிக்க பாடுபட்டவர்கள் இன்று போல் அன்றும் காவி அணியினர்தாம். எனவேதான் அய்யா வைகுண்டர் காவிக்கொடியேந்தி போராடினார் அன்றே. சரி விசயத்துக்கு வருவோம்.



அய்யா வைகுண்டர் குறித்து அவரது இயக்கம் தோன்றிய நாள் முதல் மிசிநரிகள் ஓலமிட்டு வருகின்றனர் என்பதனை அறிவோம். 1980களில் கூட இந்த நிலை மாறிடவில்லை. இங்கே நீங்கள் காண்பது அய்யா வைகுண்டர் குறித்து இரண்டு ரூபாய்க்கு வெளியிடப்பட்ட ஒரு நூல்.இந்த நூலை எழுதியவர் 'அருள்திரு' வே ஜீவராஜ். வெளியிட்டவர்கள் Institute of Evangelism and Research என்பவர்கள், நாகர்கோவில் கன்கார்டியா செமினரியும் கலிபோர்னியா கிரைஸ்ட் காலேஜும் (இப்போது இது கன்கார்டியா பல்கலைக்கழகம் - மதமாற்றிகளுக்காகவே ஒரு பல்கலைக்கழகம்! http://www.cui.edu/) இணைந்து உருவாக்கிய அமைப்பு.

இந்த அமைப்பின் அந்நாளைய இயக்குநர் டாக்டர்.ஜே.சி.கமலியேல் எழுதிய 'Forward' இல் குறிப்பிடுவதை பாருங்கள்...
"கடந்த ஆறு வருடங்களில் கோவில்கள், சமய இயக்கங்கள், சமூகங்கள் ஆகியவை குறித்து 200 க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி தாள்களை இந்த அமைப்பு பாதகர்கள், செமிநரி மாணவர்கள், மூலமாக வெளியிட்டுள்ளது. ... இந்த அமைப்பு சமூக சமய இயக்கங்கள் குறித்த அறிவியல் பூர்வமான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும். அத்தகைய ஆராய்ச்சியினை மேற்கொள்ள இந்த நூல் ஒரூ தூண்டுகோலாக அமையும்."
ஆகா இதல்லவா சமய நல்லிணக்கத்துக்கான வழி. என்று தோன்றுகிறதல்லவா! 'அறிவியல் பூர்வமான ஆராய்ச்சி மேற்கொள்கிறார்களாம்! அடுத்ததாக 'பேராயர் உயர்மறைத்திரு ஜி கிறிஸ்துதாஸ் எம்.ஏ.பிடி எழுதிய மதிப்புரை. இதில் அய்யா வைகுண்டரை குறித்த கிறிஸ்தவத அவதூறு பிரச்சாரம் ஏதோ நடுநிலைத்தன்மை போன்ற பாவனையுடன் புகுத்தப்படுகிறது..
"சிலர் அவர் நாராயண சுவாமியின் அவதாரம் என்றும் சிலர் அவர் ஒரு கிறிஸ்தவராக - ஆலயத்தில் கோவில் பிள்ளையாகப் பணியாற்றினார் என்றும் கூறுகின்றனர்"
எப்படி இருக்கிறது கதை? அய்யா வைகுண்டர் சிலரால் நாராயண சுவாமியின் அவதாரம் என கூறப்படவில்லை. அய்யா வழியினை அன்புக்கொடியினை ஏற்றுக்கொண்ட மக்களால் நாராயண அவதாரம் என நம்பப்படுகிறார். அதற்கொப்ப ஏதோ 'சிலர்' அவர் கிறிஸ்தவராக கிறிஸ்தவ வழிபாட்டு தலத்தில் பணியாற்றியதாக கூறவில்லை. கிறிஸ்தவ மதமாற்றிகள் தூசனையாக அவ்வாறு பிரச்சாரம் செய்தனர். ஆனால் அறிவியல் பார்வை பாருங்கள்! நம்பிக்கையும் தூசனை பிரச்சாரமும் ஒரே தட்டில் வைக்கப்பட்டு கொடுக்கப்படுகிறது. (இது போல இந்துக்களும் அறிவியல் கண்ணோட்டத்துடன் ஏசுவை அணுகி 'சிலர் ஏசு பரிசுத்த ஆவியால் பிறந்ததாக சொல்லுகிறார்கள். சிலர் ஏசு ஒரு ரோமானிய படைவீரனுக்கு முறை தப்பி பிறந்தவர் என சொல்கிறார்கள்' என இரண்டு ரூபாய்க்கு பிரசுரம் வெளியிட்டால் மா.சிவகுமார் உட்பட அவருக்கு 'ஜோ ஜோ' என சிங்கியடிக்கிறவர்கள் உட்பட காந்திய சாமி வந்து ஆட மாட்டார்களா...ஞாபகம் இருக்கட்டும்: இந்த நூல் வெளிவந்தது 14-2-1981 அதாவது மண்டைக்காடு கலவரம் இன்னும் ஒரு வருடத்துக்கு அப்பால் இருக்கிறது.)

அடுத்ததாக நூன்முகம். ஆசிரியர் வே.ஜீவராஜ். இங்கே அறிவியல் பார்வை இத்யாதியெல்லாம் போய்விட்டது. பூனைக்குட்டி வெளியே வருகிறது.

"இந்திய தேசத்தில் வாழும் கிறிஸ்தவர்கள் முதல் நூற்றாண்டிலிருந்து இன்று வரை பிறசமயங்களிலிருந்து நெருக்கடிகளையும் இடர்ப்பாடுகளையும் சவால்களையும் முறியடித்து வளர்ந்து வருகின்றனர். இந்நிலையில் நெல்லை குமரி மாவட்ட கிறிஸ்தவ மக்களூக்கு அய்யா நெறி பெரியதொரு சோதனையாக முன் நிற்கிறது. விசேசமாக நாடார் கிறிஸ்தவர்களுக்குள் இது பெரும் புயலை கிளப்பியுள்ளது. ...கிறிஸ்தவர்கள் விழிப்படையவேண்டும் என்பதே எனது அவா."
1980களில் அய்யா வழி - தாழ்த்தப்பட்ட இந்து சமுதாய மக்களை வாழ்விக்க வந்த அய்யா வழி இந்த மதமாற்றிக்கும்பலுக்கு சோதனையாக அதுவும் சாதாரண சோதனை இல்லை பெரிய சோதனையாக முன் நிற்கிறது. தாழ்த்தப்பட்ட மக்களினை வாழ்விக்க வந்த மகானைக் குறித்து அறிவியல் பூர்வமான ஆராய்ச்சி என பெயர் பண்ணிக்கொண்டு பொய்களை, தூசனைகளை மதமாற்றிகள் பரப்புவார்களாம் அதை நாங்கள் கேட்டுக்கொண்டு இருக்க வேண்டுமாம்... இல்லாவிட்டால் நாங்கள் கலவரம் பண்ணுகிறோமாம். இப்படி வெட்கம் இல்லாமல் பொய் சொல்ல எதற்கையா காந்திய முகமூடி?


இந்த 'ஆராய்ச்சி நூலின்' 35-36 பக்கங்களில் அய்யா வைகுண்டர் குறித்து வழக்கமான மட்டமான கிறிஸ்தவ பிரச்சாரம் கீழ்த்தரமாக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. அவர் கிறிஸ்தவ வழிபாட்டு தல ஊழியர் என்றும் பெண் வெறியர் என்றும் அவரது உடல் இறந்த பின் அழுகி நாற்றமெடுத்தது என்றும் கூறப்பட்டுள்ளது. மதக்கலவரத்தை தூண்டும் இந்த நூல் யாரோ ஒரு தனிப்பட்ட மதவெறியனால் வெளியிடப்படவில்லை என்பதனை நினைவு கொள்ள வேண்டும். நாகர்கோவில் கிறிஸ்தவ டயோசிசனால் வெளியிடப்பட்டது என்பதனை நினைவில் கொள்ளவேண்டும். 1981 இல் இது வெளியிடப்பட்டது - அதாவது மண்டைக்காட்டு கலவரத்துக்கு முன்னால் என்பதனை நினைவில் கொள்ள வேண்டும். ஆக இந்து-கிறிஸ்தவ உறவு ஏன் சீர்குலையாது?





இதோ அந்த நூல் மேலும் கூறுகிறது:
"இனி மேலாவது நாம் 'அய்யாவழி' செயல்படுகிறவர்களினால் வரும் பேராபத்தை உணர்வது நலமானது. ஏனெனில் ஏற்கனவே கிறிஸ்தவ பெரியோர்கள் பலமுறை எச்சரித்தும் நாம் விழித்தெழ தவறிவிட்டோம். மத். 13:25 இல் மனுசர் நித்திரை பண்ணுகையில் அவன் சத்துரு வந்து கோதுமைக்குள் களைகளை விதைத்துவிட்டு போனான் என்று வாசிக்கிறோம். ஆகவே இன்னும் நாம் தூங்குவது கிறிஸ்தவத்திற்கு நலமாகாது....அய்யாவின் பக்தர்கள் என கூறப்படுகிறவர்களில் கல்வியறிவு உள்ளவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு. இந்நிலையில் மக்களின் சரீரசுகத்துக்கு அடுத்தவைகளை தேடும் போது நான் தருகிறேன் என்றால் ஓடிவராத பாமரர்கள் இருக்க மாட்டார்கள் என நான் நம்புகிறேன். இவ்விதமாக பேராபத்தை விளைவிக்கக்கூடிய அய்யாவின் நெறியைச் சுற்றி அமர்ந்திருக்க கூடிய நாம் இனிமேல் விழப்போகிறவர்களையாவது தடுத்து நிறுத்த முற்படுவோம். கிறிஸ்துவுக்குள் அவர்களை கட்டி நிலைநிறுத்துவோம். அவர்களும் கிறிஸ்துவின் ராஜ்ஜியத்தில் சுதந்திரவாதிகள் ஆகட்டும்." (பக்.37-39)


இப்போது மக்கள் சிறிதே சிந்தித்து பார்க்கவேண்டும். அய்யா வைகுண்டர் மிகச்சிறந்த தத்துவ கருத்துகளை போதித்தவர். மகாத்மா காந்தி அகிம்சை என்பதனை எழுதிப்படிப்பதற்கு முன்னரே அய்யா வைகுண்டர் அகிம்சா மார்க்கமாக தம் மக்களுக்கு விடுதலை வாங்கித் தந்தவர். இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் விவேகானந்தா கல்லூரி நிர்வாகத்தின் பெரும் பங்கு அய்யா வழி மக்கள் கையிலேயே உள்ளது என்றால் அதற்கான விழிப்புணர்வு அய்யா வைகுண்டர் அருளால் ஏற்பட்டது ஆகும்.

எளியாரைக் கண்டு இரங்கியிரு என் மகனே
வலியாரைக் கண்டு மகிழாதே என் மகனே
தாழக்கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம்
நன்றி மறவாதே நாம் பெரிதென் றெண்ணாதே
பொறுமை பெரிது பெரியோனே என் மகனே
தருமம் பெரிது தாங்கியிரு என் மகனே
எல்லோருக்கும் விளம்பி இரு என் மகனே

ஆன்மிக எழுச்சி கருத்துகளால் மக்களை வழிநடத்திய எம்மான். சாதிய வெறி பிடித்திருந்த பிராம்மணர்களையும் நாயர்களையும் கூட நல்வழிப்படுத்தி அனைத்து மக்களையும் ஒரு விந்துகொடியாக வாழவைத்த சிவத்துவத் திருமாலாம் எம்பெருமானை அன்றைக்கும் நீசசாதியினர் வெறுத்தனர் என்றால் 1981 இலும் ஒரு வெறி பிடித்த மிசிநரி எழுதும் வார்த்தைகள் 'மனுசன் தூங்கிய போது கோதுமைகளுடன் களைகளை கலந்துவிட்டு போன சத்துரு'. எத்தனை வெளிப்படையாக கூறுகிறார் ஆசிரியர் பாருங்கள்.. படிப்பறிவு குறைந்தவர்களாம், நாங்கள் சரீர சுகம் கொடுக்கிறோம் என்று சொன்னால் நம்பி வந்துவிடுவார்களாம்...(இது மிசிநரியே கொடுக்கும் ஒப்புதல் வாக்குமூலம். ஆனால் மா.சிவகுமார் நம்மிடம் கதை அளக்கிறார். அவர்கள் சோசியல் செர்வீஸ் பண்ணுனாங்கப்பா...சரிதான் நிறுத்தையா உன் கதையை.) இதுதான் இந்துக்களையும் இந்த மண் சார்ந்த ஆன்மிக இயக்கங்களையும் குறித்து கிறிஸ்தவ வெறியர்கள் 1980களில் வைத்திருந்த மன-மதிப்பீடு. இதற்கொப்ப இந்துக்கள் அடங்கி ஒடுங்கி நடக்கவில்லை என்பதுதான் கலவரங்கள் ஏற்பட காரணம். மேலே உள்ள நூல்கள் போன்றவற்றால் உசுப்பிவிடப்பட்ட கிறிஸ்தவ வெறிக்கும்பலால் 1982 இல் எரிக்கப்பட்ட அய்யா வழி கோவில் ஒன்றை கீழே காண்கிறீர்கள். இது வேணுகோபால் கமிசனுக்கும் அன்றைய எம்.ஜி.ஆர் அரசுக்கும் இந்துக்கள் சமர்ப்பித்த கோரிக்கை ஆவணத்திலிருந்து.


நாங்கள் மறந்துவிடவில்லை அந்த மாபாதகங்களை சிவக்குமார். ஆறிய புண்களை கிழித்துவிட்டீர்கள். மண்டைக்காட்டில் மார்சேலை கிழிக்கப்பட ஓடிய பெண்களில் உங்கள் குடும்பப் பெண்கள் இல்லை போலும். ஆனால் நாங்கள் அப்பாதகங்களை எங்கள் ஒவ்வொரு அணுவிலும் உணர்ந்திருக்கிறோம். அடுத்ததாக ஆர்.சி கிறிஸ்தவர்கள் செய்த அட்டகாசங்களை ஆதாரங்களுடன் தருகிறேன். இந்த தொடரை நான் எழுதவே ஆரம்பித்திருக்க மாட்டேன். நன்றி மா.சிவகுமார். மிகவும் மோசமான நினைவுகள், பிற மத சகோதரர்களுடன் கொள்ள வேண்டிய நல்லுறவுக்காக ஓரளவு மறந்திருந்த நினைவுகளை மீண்டும் கிளறிவிட்டுள்ளீர்கள். ஒருவிதத்தில் அதுவும் நல்லதுதான்.

16 Comments:

Anonymous Anonymous said...

// கிறிஸ்துவுக்குள் அவர்களை கட்டி நிலைநிறுத்துவோம். //

ஐரோப்பிலேயே முடியவில்லை. Koenraad Elst அவர்களின் எழுத்துக்களை இவர்கள் படிக்க வேண்டும் - koenraadelst.voiceofdharma.com/
articles/chr/missionaries.html

மண்டைக்காடு பற்றி முன்பு திண்ணையில் வந்தவை -
http://www.thinnai.com/
?module=displaystory&
story_id=20602035&format=html

http://www.thinnai.com/
?module=displaystory&
story_id=206021712&format=html

10:08 AM, April 18, 2007  
Anonymous Anonymous said...

அற்புதமான பதிவு நீலகண்டன். வாழ்க பாரதம் வளர்க நம் இந்துகள்.
ஜெய்ஹிந்த்

10:09 AM, April 18, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

இந்த பதிவை தமிழ்மணத்தில் சேர்க்கும் போது இணைய கனெக்ஷன் விட்டுப்போய்விட்டது. பிறகு இணைக்கும் போது ஏற்கனவே இணைக்கப்பட்டதாக வந்தது. எனவே பூங்காவுக்கு அனுப்ப சம்மதம் எனும் ஆப்ஷன் default ஆக க்ளிக்காகியிருந்தால் அதனை தவிர்த்து இதனை பூங்கா எனும் பாசிச பத்திரிகையில் வெளியிடவேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.

10:35 AM, April 18, 2007  
Anonymous Anonymous said...

Very good article. Keep it up Mr. Arvindan.

A request: Can you please throw some light on Vaikkom incident?

12:31 PM, April 18, 2007  
Anonymous Anonymous said...

மா.சிவகுமாரின் பதிவுகளை யாரும் கண்டுகொள்வதில்லை என்பதால் அவர் இம்மாதிரி தமாஷ் பதிவுகளை எழுதுவது வழக்கம்.மேலும் பர்தா பற்றி அவர் எழுதியதால் கோபத்துடன் இருக்கும் முஸ்லிம் பதிவர்களை தாஜா செய்யவும் ஆர்.எஸ்.எஸ் பற்றி உடனடியாக அவர் எழுதவேண்டி வந்தது.அவருக்கு எல்லாம் இத்தனை முக்கியத்துவம் கொடுப்பதே நேரவிரயம்.

போனவருடம் அவர் சிந்திய முத்துக்களில் ஒன்று

"முஸ்லிம்கள் இந்தியாவில் மைனாரிட்டி என்பதால் உலக அளவில் அவர்களுக்கு ஆதரவான நிலையையே இந்திய அரசு எடுக்க வேண்டும்".

12:56 PM, April 18, 2007  
Blogger கால்கரி சிவா said...

அய்யாவழி, வைகுண்டர் போன்றவைகளைப் பற்றி உங்கள் பதிவுகளின் மூலம் தான் அறிகிறேன். என்னை போன்றவர்க்கு பற்பல விஷயங்களை அள்ளி வழங்கும் உங்களுக்கு நன்றி.

மா.சிவகுமாருக்கும் நன்றி. ஆர்.எஸ்.எஸ் அரைகுறையாக எழுதி அதைப் பற்றி என்னை ஆராயதூண்டி ஆர்.எஸ்.எஸ் பற்றி கிடைக்கும் எத்துணை நல்ல விஷயங்களை அறிய தந்ததுற்கு.

1:37 PM, April 18, 2007  
Blogger Amar said...

மறுபடியும் ஒரு சிறந்த பதிவு.

நீங்களும் எழுதிகிட்டே தான் இருக்கீங்க பதில் வாதம் செய்ய தான் யாரையும் கானோம்?

4:37 PM, April 18, 2007  
Blogger ஜோ/Joe said...

அரவிந்தன் நீலகண்டன்,
இந்த தொடருக்கு நன்றி !

ஆர்.எஸ்.எஸ் காரர்கள் எங்கள் ஊரை தீக்கிரையாக்கி கொள்ளையடித்து ,கோவில் தேரை எரித்து ,தேவாலயத்தின் நற்கருனை கிண்ணத்தில் மூத்திரம் இருந்து வைத்ததை நேரடியாக பார்த்து அனுபவப்பட்ட எனக்கு ,ஆர்.எஸ்.எஸ் காரர்கள் எவ்வளவு புரட்டுவாதிகள் ,திரிபு வாதம் வைப்பதில் எவ்வளவு புத்திசாலிகள் என்பதை இன்னும் உறுதி செய்துகொள்ள இந்த தொடர் உதவும் என நம்புகிறேன்.

6:13 PM, April 18, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

Joe,

When riots became huge and spread in some places Hindus did retaliate. But it was not RSS. it was after the riots that Hindus felt the need for organization and RSS grew. Justice Venugopal rightly noted that the first provocation came from Christians and Church was responsible. Justice Venugopal also noted that in Hindu retaliation they mostly avoided murders and destroyed properties while in Christian attacks often innocent Hindus were abducted taken to the sea and killed. In many Hindu Nadar villages bordering fishermen villages the Hindus were driven out like refugees.

6:34 PM, April 18, 2007  
Blogger ஜோ/Joe said...

அரவிந்தன் நீலகண்டன்,
தயவு செய்து என்னை விட்டு விடுங்கள் .நெஞ்சு பொறுக்குத்தில்லை .எங்கள் ஊர் முழுக்க தீக்கிரையாக்கப்பட்டது .1 மாத குழந்தையிலிருந்து 95 வயது முதியவர்கள் வரை உயிருக்கு பயந்து அனாதைகளாக கையில் கிடைத்த கட்டு மரத்தில் ஏறி கடல் வழியாக தப்பிச்சென்றோம் . எங்கள் ஊரே பற்றி எரிவதை கடலில் இருந்து பார்த்த போது எனக்கு 10 வயது .ஆனால் அந்த காட்சிகள் என் கண்ணை விட்டு இன்னும் அகலவில்லை .கன்னியர்கள் நடத்தி வந்த மருத்துவமனை முற்றிலும் சூறையாடப்பட்டது .ஊர் முழுவதும் எரிக்கப்பட்டு கொஞ்சம் வசதியான வீடுகள் கொள்ளையடிக்கப்பட்டன. தேவாலயம் மிகப்பெரியது என்பதால் இடிக்க முடியவில்லை .ஆனால் அங்குள்ள உருவங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டது .நற்கருணை கிண்ணத்தில் ஒண்ணுக்கு அடிக்கப்பட்டது .

வேண்டாம் அரவிந்தன் ..உங்களோடு வாதம் செய்ய என்னால் முடியாது .என் மனசாட்சியே உயர்ந்தது .

வருத்தத்துடன்,
ஜோ

6:47 PM, April 18, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

உங்களிடம் நானும் வாதம் செய்யவில்லை ஜோ. உங்கள் ஊரில் நிகழ்ந்த வன்முறை போல உங்கள் ஆட்களும் வன்முறையை கட்டவிழ்த்து விட்டார்கள் என்பதனை நினைவில் கொள்ளுங்கள். இன்னும் சொன்னால் முதல்கல்லை எறிந்தவர்கள் தங்கள் ஆட்கள்தான். உங்கள் ஊரிலாவது கடலில் போய் தப்பினார்கள் ஆனால் மற்ற கிராமங்களில் வெறி பிடித்த கிறிஸ்தவர்களின் தாக்குதலுக்கு வயல்களிலும் பள்ளிக்கூடங்களிலும் தென்னந்தோப்புகளிலும் ஓடி ஒளிந்தவர்கள் எத்தனை எத்தனை பேர் ஜோ! அந்த கலவரத்துக்கான சூழலை உருவாக்கியவர்கள் யார்? இதோ 1981 இல் வெளியான ஒரு பிரசுரத்தை காட்டியுள்ளேன். இது போல் எத்தனையோ எத்தனையோ...மண்டைக்காட்டம்மனும் மாதாவும் சகோதரிகள் என இன்றைக்கு விஸ்தாரமாக கதை அளக்கிறீர்களே ஐயா.. அன்றைக்கு அம்மன் கோவில் பூசாரி தன் மனைவியை சிலைக்கு பின்னால் வைத்து பேசுவதாகவும் அதனை 'தூ'ய சவேரியார் என்பவன் கண்டுபிடித்து மக்களிடையே 'மூடநம்பிக்கையை' அகற்றுவதாகவும் உங்கள் 'திரு'ச்சபை கும்பல் போட்ட நாடகங்கள் மறந்துவிட்டதா? இந்த நாடகத்தை நான் பார்த்தது 1976-77 இல் ராமன்புதூர் சிறுமலர் பள்ளியில். இப்படி அன்றைக்கு தூசனை செய்துவிட்டு இன்றைக்கு எப்படி சகோதரி கதை விட முடிகிறது ஜோ.. மனசாட்சி தூங்கபோய்விட்டதா? வித்தாரக்கள்ளி விறகு வெட்ட போனால் கத்தாழை முள்ளு கொத்தோடு வந்ததென்ற கதையாக அல்லவா இருக்கிறது

9:34 PM, April 18, 2007  
Blogger ஜோ/Joe said...

அரவிந்தன்,
கண்முன்னே இத்தனை கொடுமைகளையும் கண்ட பின்பும் ,தூண்டி விடப்பட்ட என் பக்கத்தூர் இந்து சகோதரர்களிடம் இன்றும் நான் அன்பு பாராட்டி வருகிறேன் .யார் அவர்களை தூண்டி விட்டது ,எப்படி இவை நடந்தன என அவர்கள் வேதனைப்பட்டதையும் கேட்டிருக்கிறேன் .ஒரு காலத்தில் 'உயிரக்காரர்கள்' என்று ஒருவரை ஒருவர் சொந்தம் கொண்டாடிய இந்த இரண்டு சமூகங்களும் இடையில் சிலரின் தூண்டிதலால் திசை மாறினாலும் ,இன்றும் இணக்கத்துடனே இருந்து வருகிறோம் .

உங்களைப் போல் வெறுப்பை கக்காமல் ,இந்துக்களை மிகவும் மதிப்பவன் நான் .உங்கள் அப்பட்டமான திரிபு வாதங்களுக்கு உங்களைப்போல ஆதாரங்களை தேடித் தர உங்களைப் போல பெரிய முயற்சிகள் எடுக்க எனக்கு அவசியமில்லை .ஏனெனில் நான் நேரடியாக அனுபவப்பட்டவன் .இந்த கொடுமைகளுக்கு பின்னால் இருந்த அமைப்புகளை தான் நான் வெறுக்கிறேனேயன்றி என் இந்து சகோதரர்களை அல்ல.

இது பற்றி ,அடுத்த முறை நாகர்கோவில் வரும் போது ,நீங்கள் விரும்பினால் சந்தித்து பேசுவோம் .உங்கள் கருத்தை மாற்ற அல்ல .எனக்கு தெரிந்ததை வார்த்தை வழியாக உங்களுக்கு சொல்ல.

நன்றி!

10:08 PM, April 18, 2007  
Anonymous Anonymous said...

http://thamizmanam.blogspot.com/2007/04/blog-post_18.html

see this.

10:32 PM, April 18, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

//உங்களைப் போல் வெறுப்பை கக்காமல் ,இந்துக்களை மிகவும் மதிப்பவன் நான் .உங்கள் அப்பட்டமான திரிபு வாதங்களுக்கு உங்களைப்போல ஆதாரங்களை தேடித் தர உங்களைப் போல பெரிய முயற்சிகள் எடுக்க எனக்கு அவசியமில்லை//
வார்த்தைகளை புரியாமல் பயன்படுத்துகிறீர்கள் அன்பரே. இந்துக்களை மிகவும் மதிக்கும் உங்கள் கதை எனக்கு நன்றாகவே தெரியும் நண்பரே. இந்துக்கள் வணங்கும் தெய்வங்களை திட்டிய ஈவெராவை நீங்கள் விதந்தோதும் விதத்தில் தெரிகிறது அந்த மதிப்பு. எது திரிபு வாதம் ஜோ? அய்யாவைகுண்டரை குறித்து கிறிஸ்தவர்கள் மண்டைக்காட்டுக்கு முன்பு வரை தூசனை பிரச்சாரம் செய்ததா? நாராயணசாமி கோவிலை எரித்ததா? இந்து அம்மன் கோவில் பூசாரிகள் ஏமாற்றுவதாகவும் அதை 'தூ'ய சவுரியார் கண்டுபிடித்ததாக நாடகங்கள் அரங்கேற்றியதா? எது திரிபுவாதம்? நீதியரசர் வேணுகோபால் யார் கலவரங்களை தொடங்கினார்கள் எது காரணமாயிற்று என விலாவாரியாக எழுதியிருக்கிறார். ஆர்.எஸ்.எஸ் மீது எதிர்மறை எண்ணம் கொண்ட திக காரரான வேணுகோபலையே மதமாற்ற தடைச்சட்டம் வேண்டிட வைத்த கொடுமைகளை அந்நாளில் மிசிநரிகள் நிறைவேற்றியிருந்தனர். இன்றைக்கும் அது நடக்கத்தான் செய்கிறது. இன்றைக்கும் ஆங்காங்கே இந்துக்கள் அடி வாங்கிக்கொண்டும் பதிலடி கொடுத்துக்கொண்டும்தான் இருக்கின்றனர். நிச்சயமாக ஆர்.எஸ்.எஸ் அல்லாத தினகரன், தமிழ்முரசு நாளிதழ்களிலிருந்தே கொடுக்கலாம் ஆதாரம். நான் ஒன்றும் அதற்காக 'பெரிய முயற்சிகள்' எடுக்க வேண்டாம். 'பேயை வணங்குவது கிறிஸ்தவர்களா இந்துக்களா?' என இந்து வாழ்வுரிமை சங்கம் இன்று பிரசுரம் எழுதுகிறதென்றால் அதற்கு காரணம் 'இந்துக்கள் பேயை வணங்குபவர்கள்' என கிறிஸ்தவன் செய்த பிரச்சாரம். அவன் பிரச்சாரம் செய்தால் நாங்கள் பதில் கொடுக்கத்தான் செய்வோம். பிறகு திரிபு வாதம் என புலம்பினால் காரணம் என்ன?

12:04 AM, April 19, 2007  
Blogger ஜடாயு said...

அரவிந்தன், இந்த கசப்பான சென்சிடிவான விஷயங்களைப் பற்றி நீங்கள் கண்டிப்பாக எழுதத் தான் வேண்டும்.

புண்களைக் கிளறுவதற்காக அல்ல, உண்மையான வரலாற்றை மக்கள் அறிய வேண்டும் என்பதால், இனியும் இது போன்ற கலவரங்கள் வராமல் தடுப்பதற்கு அவை உருவான காரணங்கள் பற்றிய புரிதல் அவசியம், ஜெர்மனி முழுதும் ஹோலோக்லாஸ்ட் முயூசியங்கள் வைத்து நடந்த வன்முறைகளை இன்றைய தலைமுறையினருக்கு நினைவூட்டுவது இதற்காகத் தான்.

ஜோ, மா.சிவகுமார் இன்னும் வேறு சிலர் ஏன் நீங்கள் எழுத வேண்டாம் என்று புலம்புகிறார்கள்? இன்னும் ஒரு 5 வருடம் போனால் மறதிக் குணம் அதிகம் உள்ள இந்துக்களிடம் இவர்கள் பிளேட்டை முழுதாக மாற்றி தங்கள் பிரசார தந்திரங்கள் மூலம் இந்த விஷயத்தை திரிப்பார்கள்.

நன்கு ஆவணப் படுத்தப் பட்ட இந்த விஷயங்களின் விஷயத்தில் இது நடக்காமல் தடுப்பது நம் கடமை. அதற்காக இதை நினைவூட்டியே ஆக வேண்டும்.

// ஆர்.எஸ்.எஸ் மீது எதிர்மறை எண்ணம் கொண்ட திக காரரான வேணுகோபலையே மதமாற்ற தடைச்சட்டம் வேண்டிட வைத்த கொடுமைகளை அந்நாளில் மிசிநரிகள் நிறைவேற்றியிருந்தனர்.//

இந்த ஒரு விஷயமே போதாதா?

// இன்றைக்கும் அது நடக்கத்தான் செய்கிறது.//

உண்மை, உண்மை.

4:53 AM, April 22, 2007  
Anonymous Anonymous said...

////இது பற்றி ,அடுத்த முறை நாகர்கோவில் வரும் போது ,நீங்கள் விரும்பினால் சந்தித்து பேசுவோம் .உங்கள் கருத்தை மாற்ற அல்ல .எனக்கு தெரிந்ததை வார்த்தை வழியாக உங்களுக்கு சொல்ல.

நன்றி!////

ஜோ

இந்த தவறை மட்டும் செய்துவிட வேண்டாம்...!!!

6:21 AM, April 26, 2007  

Post a Comment

<< Home