Thursday, April 26, 2007

கலவர சர்ச்சுகளின் வாஸ்து சாஸ்திரம்

குமரிமாவட்ட மதமோதல்களின் காரணிகள்
மா.சிவகுமார் பொய் சொல்வதில் ஒரு தேர்ந்த வித்தகர் என்றால் அவருக்கு ஜால்ரா போடுகிறவர்கள் வெறும் வித்தகர்களாக இல்லை நச்சுத்தன்மை வாய்ந்த Batman-காமிக்ஸ் வில்லத்தனமான 'ஜோ'க்கர்களாக இருக்கின்றனர். மக்கள் மனதில் மேரி மாதாவும் மண்டைக்காட்டு பகவதியும் சகோதரிகளாகத்தான் வாழ்ந்தார்கள் என்பதாக ஜோ என்பவர் எழுதியிருந்தார். இதில் பொதிந்திருப்பது ஒரு குரூரமான ஸிக் ஜோக். மண்டைக்காடு மட்டுமல்ல கொல்லங்கோட்டிலும் பகவதி அம்மன் கோவில் உண்டு. கன்னியாகுமரி பகவதி அம்மன் தொடங்கி மேற்கு கடற்கரையோரமாக சென்றால் கடற்கரையோர தேவி சேத்திரங்களை தரிசிக்க முடியும். மண்டைக்காட்டம்மனுடன் இணைந்த மற்றொரு அம்மன் கல்லியம்மன் என்றும் கலியாணத்தம்மன் என்றும் அழைக்கப்படுகிற மற்றொரு பகவதி. கடலாடி வந்த அம்மன் கல்லியம்மன் மலையாடி வந்தாள் மண்டைக்காட்டம்மா என்றும் மக்களிடையே பேச்சு வழக்கும் உண்டு. இருவருமே சகோதரிகள் என்பது ஐதீகம். கடலாடும் மீனவர்களின் குலதெய்வமாகவும் காக்கும் அன்னையாகவும் விளங்கியவள் இந்த தேவி. இரு அம்மனையும் அனைத்து மக்களும் வழிபட்டு வந்தனர். ஆனால் மீனவர்கள் கிறிஸ்தவர்களாக மதம் மாற்றப்பட்ட போது இந்த கோவிலும் அம்மன் சிலையும் அந்த நாள் வரை அதனை வழிபட்ட மக்களாலேயே அடித்துடைத்து அழிக்கப்பட்டது. அங்கே கிறிஸ்தவ ஆலயம் எழுப்பப்பட்டது. இதனை குறித்து 'புனித' சேவியரே ரோமாபுரிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளான்: "அவர்களது ஞான ஸ்நானத்திற்கு பிறகு புதிய கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளுக்கு சென்று அவர்களது மனைவிகளையும் குடும்பத்தவரையும் அழைத்துக்கொண்டு வந்து ஞான ஸ்நானம் பெறுவார்கள். அனைவரும் ஞானஸ்நானம் பெற்ற பிறகு நான் அவர்களது கோவில்களை உடைக்க உத்தரவிடுவேன். அவர்களது சிலைகள் அடித்து நொறுக்கப்படும். தாங்கள் வழிபட்ட கடவுள்களின் சிலைகளை அவர்களே தங்கள் கைகளால் அடித்து நொறுக்கிய போது எனது மனம் அடைந்த பேரானந்தத்தை உங்களுக்கு என்னால் வார்த்தைகளால் விளக்க முடியாது." (ஜனவரி 27 1545 எழுதிய கடிதம்) ஆக இன்றைக்கும் வயது மூத்த இந்துக்கள் அங்கு அம்மன் கோவில் இருந்த நினைவினை தங்கள் மூப்பர்களிடமிருந்து பெற்று தக்க வைத்துள்ளார்கள். எனவே இன்று புதூர் கிறிஸ்தவ வழிபாட்டு தலம் இருக்கும் இடத்தினை பார்த்து அவர்கள் தாம் இழந்த அம்மனை - மண்டைக்காட்டு பகவதியின் சகோதரியை வேதனையுடன் நினைவு கூர்வர். இந்த உண்மைகளையெல்லாம் மறைத்துவிட்டு இந்துக்களின் வேதனையை வேடிக்கையாக திரித்து ஜோ எழுதுகிறார் 'மக்கள் மனதில் மேரிமாதாவும் மண்டைக்காட்டு பகவதி அம்மனும் சகோதரிகளாக வாழ்ந்தார்கள்' என்று. சத்திய-சந்தர்கள்!


இந்துக்களின் வழிபாட்டுத்தலங்களுக்கு அருகிலேயே தங்கள் வழிபாட்டுத்தலங்களை வேண்டுமென்றே கட்டுவதும் அதன் மூலம் கலவரம் உண்டாக்குவதும் கிறிஸ்த மிசிநரிகள் திட்டமிட்டு செய்துவரும் பல்லாண்டுகால விசமத்தனமாகும். இந்த வழிபாட்டுரிமை மீறலை, வெளிநாட்டு பண உதவியுடன் செய்யப்படும் இந்த பட்டவர்த்தனமான ஆக்கிரமிப்பை தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர் இந்துக்கள். இதனால் தொடர்ந்து மதமோதல்கள் ஏற்பட்டு வந்த சூழலில் அரசாங்கமே கூட ஒரு சமயத்தவரின் ஆலயத்துக்கு அருகில் பிற சமயத்தவர் தங்கள் வழிபாட்டுத்தலங்களை கட்டுவதோ அல்லது பிரச்சாரங்களை செய்வதோ கூடாது என ஆணை பிறப்பித்தது. (GO Ms.No 2 4-1-1948 Dis.No 968/48) ஆனால் இந்த அரசு ஆணைகளை துளியும் சட்டை செய்யாமல் இந்துக்கள் மண்டைக்காட்டம்மனை ஆராட்டுக்கு எடுத்து செல்லும் பாதையில் குருசடி 1971 இல் உருவாக்கப்பட்டது. அதிலிருந்தே சிறுசிறு பிரச்சனைகள் தோன்றி மறையும் நிலை ஏற்பட்டது. ஆனால் இது மண்டைக்காட்டுக்கு மட்டும் உரிய பிரச்சனை அல்ல. குமரிமாவட்டமெங்கும் இந்த பிரச்சனை இருந்தது. உதாரணமாக தக்கலை மாவட்டம் கரைக்கண்டார்கோணத்தில் 1978 ஆம் ஆண்டு (அன்றைய மதிப்பீட்டில்) பல இலட்சம் செலவில் ஒரு பிரம்மாண்ட கத்தோலிக்க சர்ச் கட்டப்படவிருந்தது. இதற்கு உள்ளூர் இந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். (ஆர்.எஸ்.எஸ் இந்து முன்னணி எல்லாம் அப்போது அங்கு கிடையாது. உள்ளூர் இந்துக்கள் அவ்வளவுதான்) இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அதனைக் குறித்து விசாரிக்க கல்குளம் தாசில்தாருக்கு உத்தரவிட்டார். 4-1-1978 (B2 4269077) தாசில்தார் ஆர்.டி.ஓவுக்கு அனுப்பிய அறிக்கை மிசிநரிகள் தங்கள் சர்ச்சகளை கட்ட தேர்ந்தெடுக்கும் கலவர-வாஸ்து சாஸ்திரத்தை தெளிவாக்குகிறது:
"The site proposed for the construction of the Church at Manali (Karaikandarkonam) is on the southernside of Manali-Mekkamandapam road and at the distance of 50 feet from the main road...My enquiry reveals that the inhabitants of the locality are predominantly Hindus. There are places of worship for them like Narayanaswamy Temple at a distance of 150 feet and a Esakiamman temple at a distance of 250 feet from the proposed site. There is a place of worship for Esakkiamman just opposite to the proposed site which is only at a distance of 15 feet. There are Puja ceremonies every Tues day and Friday every week. A portion of the proposed site is covered by Temple Mayanam which are claimed to be Hindu ancestors' tombs living near and around the place selected for the Church site."


இந்த கிறிஸ்தவ மிசிநரி அடாவடித்தனத்தின் விளைவாக வகுப்பு மோதல்களை உருவாக்கும் விதத்தில் அதே காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட வேறு சில கிறிஸ்தவ வழிபாட்டு தலங்கள் (சபை பாகுபாடு இல்லாமல்) இவை:


  • வில்லுக்குறி ரோடோர இந்து கோவிலுக்கு எதிரே குருசடி
  • அதங்கோடு மாயகிருஸ்ணசாமி கோவிலுக்கு எதிரே பெந்தகோஸ்தே ஜெபப்பிரை
  • கொன்னக்குடிவிளை பூர்விக இந்து கோவிலுக்கு எதிரே சர்ச்

இப்படி எத்தனை எத்தனையோ!

[மண்டைக்காடு கலவரங்கம்: பின்னணியும் உண்மையும் இன்னும் வரும்]

8 Comments:

Blogger ஜடாயு said...

// அவருக்கு ஜால்ரா போடுகிறவர்கள் வெறும் வித்தகர்களாக இல்லை நச்சுத்தன்மை வாய்ந்த Batman-காமிக்ஸ் வில்லத்தனமான 'ஜோ'க்கர்களாக இருக்கின்றனர். //

Acid laced humor.. arumai.

//'மக்கள் மனதில் மேரிமாதாவும் மண்டைக்காட்டு பகவதி அம்மனும் சகோதரிகளாக வாழ்ந்தார்கள்' என்று//

அவர் 'வாழ்கிறார்கள்' என்று சொல்லியிருந்தால் அது இந்த அளவுக்கு மோசமான தவறாக இருந்திருக்காதோ?

கடந்த காலக் கசப்புகளை ஏதாவதொரு காலகட்டத்தில் மக்கள் மறக்கிறார்கள் இல்லையா?

// இந்துக்களின் வழிபாட்டுத்தலங்களுக்கு அருகிலேயே தங்கள் வழிபாட்டுத்தலங்களை வேண்டுமென்றே கட்டுவதும் அதன் மூலம் கலவரம் உண்டாக்குவதும் கிறிஸ்த மிசிநரிகள் திட்டமிட்டு செய்துவரும் பல்லாண்டுகால விசமத்தனமாகும். //

உண்மை. இதோடு கூட ஊர்ப் புறம்போக்கு நிலங்களில் வேண்டுமென்றே கிறித்தவப் பிணங்களைத் திட்டமிட்டுப் புதைத்து அதன் மீது சிலிவைகளை நட்டு வைத்து காலப் போக்கில் அந்த இடம், அதற்குப் பக்கத்து இடங்கள் எல்லாவற்றையும் கிறித்தவச் சொத்தாக்கி ஒருவிதமான திட்டமிட்ட நில ஆக்கிரமிப்பே செய்துள்ளார்கள் மிசநரிகள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

இதில் ஒரு சோகம் என்னவென்றால் இறந்தவர்களைப் புதைத்த இடம் என்பதால் பிற்காலத்தில் அந்த இடத்துக்குச் சொந்தக் காரர்களே கூட உரிமை கொண்டாடத் தயங்குவார்கள்! இந்த சென்டிமென்டல் பலவீனத்தை சரியாகப் பயன்படுத்துகிறார்கள்.

2:41 AM, April 26, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

கிறிஸ்தவ வெறியர்கள் திட்டமிட்டு நடத்திய ஆக்கிரமிப்பு நிகழ்ச்சிகள் மறைக்கப்பட்டு ஒருபக்க வரலாற்றை உருவாக்கும் உன்மத்தர்கள் இனியாவது புரிந்துகொள்ள வேண்டும் அவர்களின் பருப்பு குமரிமாவட்ட இந்துக்களிடம் வேகாது என்று.
மா.சிவகுமாரின் காந்திய சாயம் வெளுத்துப்போச்சு டும்டும்டும்
யோக்கியன் வேசம் கலைந்து போச்சு டும்டும்டும்.
ஆனால் கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் 'உண்மை'க்கும் 'எனக்கு தெரிஞ்சது அம்புடுதான்' என்கிற நிலைப்பாட்டிற்கு என்ன அநாயாசமாக துள்ளுகிறார் மனுசன் பாருங்கள். இதற்கிடையே இந்துக்களுக்கு அட்வைஸ் வேறு.

2:53 AM, April 26, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

//'மக்கள் மனதில் மேரிமாதாவும் மண்டைக்காட்டு பகவதி அம்மனும் சகோதரிகளாக வாழ்ந்தார்கள்' என்று//

அவர் 'வாழ்கிறார்கள்' என்று சொல்லியிருந்தால் அது இந்த அளவுக்கு மோசமான தவறாக இருந்திருக்காதோ?//

இல்லை ஜடாயு. மேரிமாதா என்பதில்தான் இருக்கிறது ஜோவின் விச கொடுக்கும் இந்துக்கள் மீது வீசப்படும் மதவெறி பிடித்த ஏளனமும். தன் அம்மன் இருந்த கோவில் இடிக்கப்பட்டு அங்கு நிற்கும் பிரம்மாண்ட சர்ச்சினை பார்த்து மண்டைக்காட்டமன்னனின் சகோதரித்தெய்வமான பழைய அம்மனை நினைத்து ஏங்கி (சிலசமயங்களில் அந்த திசை பார்த்து காணிக்கையையும் வீசி) நிற்கும் இந்துவின் நிலையில் இருந்து பாருங்கள். அப்போது ஜோவின் வார்த்தைகளில் பொதிந்திருக்கும் எள்ளலும் போலித்தனபொய் வேசமும் புரியும்.

2:56 AM, April 26, 2007  
Anonymous Anonymous said...

விவரமான பதிவு....மாசுக்குமார் ஒரு மக்கு குமார். நீங்க இவ்வளவு தெளிவான ஆதாரங்களுடன் எழுதுவீர்கள் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்.

தன்னுடைய காந்திய சாயம் வெளுப்பதால்தான் பதிவினை நிறுத்திவிட்டாரோ என்னமோ?.

ஜோ போன்ற வியாதிகளை புறந்தள்ளுங்கள். அந்தாளே 2-4 தலைமுறை முன் கன்வர்ட் ஆகிய கனவான் குடும்பமாக இருக்கும்...அதனால்தான் இந்த விஷ எள்ளல்கள்....

3:10 AM, April 26, 2007  
Anonymous Anonymous said...

Very informative and nice article.

Your viewpoints are full of facts and not contrived opinions like others.

Please keep it coming. I wish to know more details.

Please do not bother about idiots like Shivakumar etc. They think they are too "intellecuals" but in fact are moral and intellectual bankrupts.

3:28 AM, April 26, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

ஒரு உண்மையை சொல்லவேண்டுமென்றால் நான் மா.சிவகுமாருக்கு ஒரு பெரிய நன்றியைக் கூற வேண்டும். நானாக இந்த விசயங்களை எழுத ஆரம்பித்திருந்தால் ஆர்.எஸ்.எஸ் காரன் வேண்டுமென்றே பழைய விசயங்களை கிளறி மதக்காயங்களை ஏற்படுத்துகிறான் என்று சொல்லியிருப்பார்கள். ஆனால் மா.சிவகுமார் இந்த மாதிரி மொண்ணையாக ஆதாரங்கள் இல்லாத பிரச்சார பதிவை ஆரம்பித்து எனக்கு உண்மைகளை கூற ஒரு நல்ல வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். அடுத்ததாக ஆர்.எஸ்.எஸ் மீதான அவதூறு பிரச்சாரங்களுக்கு பதில் அளிக்கும் பதிவுத் தொடரையும் விரைவில் எழுதுவேன். இதற்கெல்லாம் உத்வேகமும் ஊக்கமும் அளிப்பதற்காக நான் மா.சிவகுமாருக்குதான் நன்றி சொல்லவேண்டும். எனக்கும் அவர் தொடரை நிறுத்தியது வருத்தம்தான். அவரைப்போல் பொய்களையும் பிரச்சார மாயைகளையும் கூச்சலிட்டு சொல்பவர்கள்தான் நாம் சொல்லும் உண்மைகளை மேலும் பிரகாசிக்க வைக்கிறார்கள். அந்த விதத்தில் சிவகுமாருக்கு நன்றிகள் பல.

6:47 AM, April 26, 2007  
Anonymous Anonymous said...

great post aravindan.keep it up.

Arun

7:45 PM, April 27, 2007  
Anonymous Anonymous said...

Now, I'm become your regular reader of your blog and not only that I used to forward the links to my friends.

Keep up your gr8 work, we all behind you!!

Subbu

5:54 AM, April 30, 2007  

Post a Comment

<< Home