Saturday, May 19, 2007

முறியடிக்கப்பட்ட கீழ்த்தர கிறிஸ்தவ மதமாற்ற மோசடி


கோவை மாவட்டம்:
பல்லடம் அருகே செஞ்சேரி மலைப்பகுதி
"சேவாபாரத் அமைப்பினை சேர்ந்தவர்கள் நாங்கள். பிற்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு சேவை செய்ய - விடுமுறை கால வகுப்புக்கள் நடத்த வந்திருக்கிறோம்." என்று சொல்லிக்கொண்டு வந்திருக்கிறது ஒரு கும்பல். நல்லதுதான் செய்கிறார்கள் என நம்பிய
பெற்றோர்களும் குழந்தைகளை இங்கு அனுப்பியிருக்கிறார்கள். குழந்தைகளுக்கு பிஸ்கெட்களும் கூல் டிரிங்க்ஸ்களும் புத்தகங்களும் கொடுத்திருக்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக குழ்ந்தைகள் மனதில் கிறிஸ்தவ விஷத்தை செலுத்தியிருக்கிறார்கள் அந்த சமூகசேவை தோல்
போர்த்திய போதக ஓநாய்கள். மெல்ல மெல்ல விஷம் கசிந்தது. பிஞ்சு குழந்தைகள் தங்கள் பெற்றோர் வைத்த பெயர்கள் மேல் வெறுப்புடன் கிறிஸ்தவ பெயர்களை அறிவித்திருக்கிறார்கள். "அப்பா இனிமேல் என் பெயர் இசக்கி இல்லை இலியாஸ்" என்ற போது அதிர்ந்த தந்தை சந்தேகம் அடைந்திருக்கிறார். வெள்ளிக்கிழமை ஊர் திருவிழா வந்த போது குழந்தைகள் "ஏசுதான் ஒரே சாமி இது சாமி இல்லை இதை கும்பிடக்கூடாது"
என சொன்ன போதுதான் ஊர் மக்களுக்கு விசயம் தெரிந்து சேவாபாரத் அமைப்பினை விரட்டி அடித்திருக்கிறார்கள். குழந்தைகளுக்கு கோடைக்கால வகுப்புகளில் அளிக்கப்பட்ட நூல்களை பார்த்த போது அனைத்துமே ஏசு குறித்த நூல்களாக இருந்தது தெரியவந்துள்ளது. விதம்
விதமாக கிறிஸ்தவபோதனைகள் அளிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, "விமானத்தை கண்டுபிடித்தவர்கள் ரைட் சகோதரர்கள், டெலிபோனை கண்டுபிடித்தவர் அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் என்றெல்லாம் சொல்லிவிட்டு இவுங்க பேரையெல்லாம் பாருங்க..இவங்க கிறிஸ்தவங்க ஏசு
சாமியை கும்பிட்டவங்க அதனாலதான் இவங்களால இதையெல்லாம் கண்டுபிடிக்க முடிஞ்சது. நீங்களும் பேரை மாத்திகிட்டு ஏசுவை கும்பிட்டா அவங்களை போல சாதிக்கலாம்"
என்றெல்லாம் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். கிராமத்தவர்கள் கோபம் அடைந்துவிட்டார்கள் என தெரிந்ததும் இதனை நடத்திய சாமுவேல் ஓடிப்போய்விட்டார். அந்த இடத்தில் ஆசிரியர் கையேடுகள் மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் இப்படிப்பட்ட மோசடி கோடைக்கால மதமாற்ற மூளைச்சலவை நிலையங்கள் நடத்துகின்றனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேற்கு மண்டல ஐ.ஜியான ராஜேந்திரன் இதனை கேட்டு "இப்படியெல்லாமா நடக்கிறது!" என அதிர்ந்திருக்கிறார். "காமநாயக்கன்பாளையம் போலீஸாரை சொல்லி உடனடியாக நடவடிக்கை எடுக்க சொல்கிறேன். மற்ற பகுதிகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கிறதா என விசாரிக்க சொல்கிறேன்" என்று கூறியுள்ளார். அதே நேரத்தில் புளியமரத்துபாளையம் என்ற இடத்திலும் இதைப்போன்ற சம்பவம் நடைபெற்றிருக்கிறது. இதில் ஈடுபட்ட பாபு என்கிற மோசடி மதமாற்ற ஆசாமி "நான் செய்தது தப்புதான். இனிமேல் இதுபோல மதமாற்ற சம்பவங்களில் ஈடுபடமாட்டேன். இந்த ஊர் பக்கமே வரமாட்டேன்." என எழுதி கொடுத்திருக்கிறார். இந்த விசயங்களை எல்லாம் மக்கள் புகாராக எழுதி போலிஸில் பாபுவை ஒப்படைத்திருக்கின்றனர். போலீஸ் பாபுவை எச்சரித்து அனுப்பியிருக்கிறது. சேவாபாரதி என்பது உண்மையான சமூக சேவை தொண்டு நிறுவனம். சுனாமியின் போது இந்த அமைப்பு கடலூர் பகுதிகளில் செய்த சேவை மூலம் மக்களிடம் நல்ல மதிப்பை பெற்றுள்ள அமைப்பாகும். எனவே அதே அமைப்பின் பெயரை போல மோசடியாக தமது அமைப்பின் பெயரை 'சேவாபாரத்' என தந்திரமாக வைத்துக்கொண்டு இந்த மோசடி வேலையில் கிறிஸ்தவ மதமாற்றிகள் ஈடுபட்டுள்ளனர். சரியான விதத்தில் எச்சரிக்கையாக செயல்பட்டு மதமாற்றத்தை தடுத்த ஊர் மக்களும் இந்த மோசடியை தைரியமாக வெளியே கொண்டு வந்திருக்கும் ஜூனியர் விகடனுக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும்.
நன்றி: ஜீனியர் விகடன், 'பிஞ்சுக்களை மதமாற்றியதா சமூக அமைப்புகள்?' ரிப்போர்ட் by R.லோகநாதன், 23-5-2007

Labels: , ,

4 Comments:

Anonymous Anonymous said...

நாளைக்கு அரவிந்தன் நீலகண்டன் பெயரில் சூனியக்காரர்களை கொல்ல வேண்டியதன் அவசியம் பற்றி ஏசுவின் தொண்டர்கள் கட்டுரை எழுதப்போகிறார்கள் !!

ஏசுவின் பெயரை வைத்து வியாபாரம் நடத்தும் இவர்கள் ஆன்மீக உணர்வே இல்லாதவர்கள் என்பதும், இந்த பாவிகளுக்காக ஏசு மரித்ததால் எந்த பலனும் ஏற்படவில்லை என்றும் கிருத்தவனான எனக்கே தோன்றுகிறது.

இவர்கள் ஆண்டவருக்கு எதிரான பாவிகள்.

1:17 AM, May 20, 2007  
Blogger லெனின் said...

மத உணர்வு என்பது அவனவன் உணர்வு சார்ந்த விசயம். அதை திணிக்க நினைக்கும் இது போன்ற புல்லுருவிகளை பிடித்து முதலில் சிலுவையில் அறைய வேண்டும். நான் நினைக்கிறேன் கிறிஸ்தவ வரலாற்றின் முன்காலக் கதை களம் இதுபோன்றது தானோ என்னவோ.

தமிழில் எழுதும் வாய்பளித்தமைக்கு கோடானு கோடி நன்றிகள் அரவிந்த் ஐயா.

2:40 AM, May 20, 2007  
Blogger ஜடாயு said...

// "விமானத்தை கண்டுபிடித்தவர்கள் ரைட் சகோதரர்கள், டெலிபோனை கண்டுபிடித்தவர் அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் என்றெல்லாம் சொல்லிவிட்டு இவுங்க பேரையெல்லாம் பாருங்க..இவங்க கிறிஸ்தவங்க ஏசு
சாமியை கும்பிட்டவங்க அதனாலதான் இவங்களால இதையெல்லாம் கண்டுபிடிக்க முடிஞ்சது. //

சே, எவ்வளவு கீழ்த்தரமான, வெட்கங்கெட்ட அசிங்கமான பிரசாரம்! உலகின் மாபெரும் விஞ்ஞானிகளைக் கூட தங்கள் மதமாற்ற குயுக்திக்காக பயன்படுத்தியிருக்கிறார்கள்.

// ஊர் மக்களுக்கு விசயம் தெரிந்து சேவாபாரத் அமைப்பினை விரட்டி அடித்திருக்கிறார்கள். //

இயல்பாகவே அவர்கள் மனத்தில் இருந்த இந்து உணர்வினால் இதைச் செய்திருக்கிறார்கள் இல்லையா? இந்த விஷயம் மகிழ்ச்சி அளிக்கிறது. இது போன்று ஒவ்வொரு கிராமமும், குடியிருப்பும் கிறித்தவ மதமாற்றப் பிசாசுகளை விரட்டி அடிக்க வேண்டும்.

3:28 AM, May 21, 2007  
Anonymous Anonymous said...

Hi Aravindan,

I request you to check this http://www.hvk.org/articles/0407/27.html
link. It is about the systamatic demolition of the tradition of Kalashaektra...

Since the director of this organization is a Christain, she does all these anti hindu activities.

Write a article about this and make others know about the mentality of a christianity


Subbu

1:33 AM, May 23, 2007  

Post a Comment

<< Home