வாழ்க எங்கள் திராவிடம்
குடமுருட்டி குண்டு முதல் ஆகிவந்த திராவிடம்
ஐயையோ கொல்லுறாங்க அதுவும் கூட திராவிடம்
குடும்பத்தகராறுக்காக கொல்லும் வீர திராவிடம்
காவல் துறையும் கைகட்டி செய்யுமடா சேவகம்
குண்டுக்கட்டை திராவிடம் குடும்ப சொத்து திராவிடம்
பிடிக்காத செய்தி வந்தால் அடித்து கொல்லும் திராவிடம்
கொன்னதுக்கும் எரிச்சதுக்கும் கருத்து கணிப்பு காரணம்
என்று சொல்லி கொன்னவனின் அடிவருடும் திராவிடம்
முற்பகலில் தேசக்கொடியை எரிச்ச வீர திராவிடம்
பிற்பகலில் தினகரனை எரிச்சு கொல்லும் இன்ப திராவிடம்
தழிழ்நாட்டை பங்கு போட்டு ஆளும் எங்கள் திராவிடம்
கேள்வி கேட்டால் வீட்டுக்கு ஆட்டோ அனுப்பும் திராவிடம்
கலைவிழாவும் திராவிடம் பொன்விழாவும் திராவிடம்
பொன்விழாவை வெறுக்கும் கொலைஞர் நாடகமும் திராவிடம்
பேச்சுரிமை பேசுகிற இடதுசாரி தலைவர்களும்
சால்ஜாப்பாய் ஒத்து ஊத வைச்ச அதிசயம்தான் திராவிடம்
வாழ்க எங்கள் திராவிடம் வளர்க கொலைஞர் நாடகம்
ஆனா
உங்க குடும்ப சண்டைக்கு எங்க பிள்ளைங்களா சாகணும்?
டி.சுதர்சனம் (காங்.): மதுரையில் தினகரன் பத்திரிகை அலுவலக தாக்கப்பட்டு 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்காக காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பத்திரிகை சுதந்திரம் என்ற பெயரில் கருத்துக்கணிப்பு என்று சொல்லி தேவையற்ற நேரத்தில் வெளியிட்டதால் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது.
யாராக இருந்தாலும் இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பத்திரிகைகளும் சிறப்பாக செயல்படும் அரசுக்கு நல்ல வழி காட்ட வேண்டுமேயொழிய அமைதி குலைய காரணமாக இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. உயிரிழந்த ஊழியர்களின் குடும்பத் துக்கு வழங்கப்படும் நிதியுதவியை அதிகரித்து வழங்க வேண்டும்.
ஜி.கே.மணி (பாமக): மதுரை சம்பவம் மிகுந்த வருத்தம் அளிக்கக் கூடியது. இதற்கு பாமக சார்பில் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். நமது நாட்டில் ஊடகங்கள் நடத்துகிற கருத்துக்கணிப்புகள் சரியானதல்ல. அவரவர் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டுக்கு 13 மத்திய அமைச்சர்கள் கிடைத்துள்ளனர். இந்த காலம் ஒரு பொற்காலம் ஆகும். மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் மிக நன்றாக செயல்படுவதாக பிரதமர், சோனியாகாந்தி ஆகியோர் பாராட்டியுள்ளனர். இந்த நிலையில் தேவையற்ற கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு அதன் விளைவாக இந்த துயரச்சம்பவம் நடந்துள்ளது. இப்போது ஊடகங்கள் வன்முறையை தூண்டும் வகையிலும், ஆபாசத்தை திணிக்கும் வகையிலும், தீவிர வாதத்தை வளர்க்கும் வகையிலும், தமிழை கொலை செய்யும் வகையிலும் செய்திகளை வெளியிடுகின்றன. பத்திரிகை சுதந்திரம் காக்கப்பட வேண்டும் என்பது ஒருபுறம் இருக்க அவர்கள் தங்களுக்குள் கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ள வேண்டும். எனவே இந்த கருத்துக்கணிப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும். பத்திரிகைகளை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும், கண்டிக்கவும் வேண்டும்.
கோவிந்தசாமி (சிபிஎம்): முதலமைச்சரின் பொன் விழா நடைபெறும் வேளையில் தேவையில்லாத கருத்துக்கணிப்பை வெளியிட்டதன் மூலம் குழப்பம் ஏற்பட்டு அதன் தொடர்ச்சியாக தினகரன் பத்திரிகை தாக்கப்பட்டு பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டு 3 பேர் பலியாகி இருக்கிறார்கள். இதை முதலமைச்சரும் வன்மையாக கண்டித்திருக்கிறார்.
சிவபுண்ணியம் (சிபிஐ): தேவையில்லாத கருத்துக்கணிப்பால் விரும்பத்தகாத சம்பவம் ஏற்பட்டுள்ளது. பத்திரிகை சுதந்திரம் என்ற கருத்து ஏற்புடையது என்றாலும் அதிர்ச்சி தரும் சம்பவத்திற்கு அது காரணமாகிவிட்டது. பத்திரிகை சுதந்திரம் இருக்க வேண்டும் என்பது பொதுவான கருத்து. உயிரிழப்பு ஏற்றுக்கொள்ள முடியாதது. ஏற்கனவே உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
செல்வம் (வி.சிறுத்தைகள்): உயிரிழந்த 3 பேருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். முதலமைச்சரின் வாழ்க்கையில் இன்பத்தைவிட துன்பமும், துயரமும் சூழ்ந்தது தான் அதிகம். பொன் விழா சந்தர்ப்பத்தில் இத்தகைய சம்பவம் நடந்திருப்பது வேதனையானது. தேவையில்லாத இத்தகைய கருத்துக்கணிப்புகளை கட்டுப்படுத்த வேண்டும். எனவே இந்த சம்பவத்தில் அதுபோல நடந்துள்ளதா என்பதை பார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலமைச்சர் இந்த விஷயத்தில் எடுத்து வரும் நடவடிக்கைகளை நாங்கள் பாராட்டுகிறோம்.
வாழ்க திராவிடம்!
இறுதியாக திரு.மு.கருணாநிதி, தமிழக முதலமைச்சர் சட்டசபையில் இது குறித்து ஒரு அறிவிப்பினை செய்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
"...காலை 10 மணிக்கு சரவணன் என்பவர் தலைமையில் சிலர் தினகரன் அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து கண்ணாடிகளை உடைத்தனர் ...இந்த சம்பவத்தைத் தொடர்ந்து துணை கண்காணிப்பாளர் தலைமையில் 17 போலிஸார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பகல் 11.30 மணிக்கு சிலர் டாடா சுமோவில் வந்து காவலர்களின் பாதுகாப்பையும் மீறி தினகரன் அலுவலகத்துக்குள் நுழைந்து பெட்ரோல் அடைக்கப்பட்ட பாட்டில்களை வீசி தீ வைத்து சேதப்படுத்திச் சென்றுள்ளனர். இதில் தீயிலும் புகையிலும் சிக்கி கோபி, வினோத் முத்து ராமலிங்கம் ஆகிய மூவரும் இறந்துள்ளனர்." (தமிழ்முரசு, 10.-5-2007)
சட்டசபையில் பொன்விழா காணும் மப்பில் இருக்கும் கருணாநிதி பேசிய 'உண்மை' மேலே இருப்பது. அதாவது தீயிலும் புகையிலும் 'சிக்கி'தான் கோபி, வினோத் மற்றும் முத்து ராமலிங்கம் ஆகியோர் இறந்தனர் என்று. ஆனால் அவர்கள் எப்படி 'சிக்கினார்கள்? 'தினகரன் பத்திரிகை செய்தி கூறுவது:
"அழகிரி ஏவிய ரவுடிகள் உள்ளே வந்துவிட்டதை அறியாமல் கம்யூட்டர் இன்ஜினியர்கள் கோபி (25) வினோத் (26) ஆகியோர் இருவரும் செர்வர் அறைக்குள் வேலை செய்துகொண்டிருந்தனர். கும்பலைப் பார்த்ததும் அவர்கள் தப்பியோட முயன்றனர். ரவுடிகள் விரட்டி சென்று உருட்டுக்கட்டைகளால் தலையில் அடித்தனர். பின்னர் அவர்களை ஒரு அறைக்குள் தள்ளி கதவைப் பூட்டி ஜன்னல் வழியாக அறைக்குள் பெட்ரோல் குண்டுகளை வீசியது. பின்னர் அந்த கும்பல் சாவகாசமாக வெளியே வந்து தப்பிச்சென்றது." (தினகரன் 10-மே-2007)
சாப்ட்வேர் இஞ்சினியர் கோபியின் தலையில் அடிபட்டு ரத்தம் வழிந்திருப்பதை படத்தில் காணலாம். அதுபோல 'காவலர்களின் பாதுகாப்பையும் மீறி தினகரன் அலுவலகத்துக்குள் நுழைந்து'விட்டதாக கூறப்படுபவர்கள் தினகரன் அலுவலகத்தை தாக்குவதையும் அதை காவலர்கள் அமைதியாக வேடிக்கை பார்ப்பதையும் பார்த்தால் 'காவலர்களின் பாதுகாப்பு' செயல்பட்ட இலட்சணத்தை தெரிந்துகொள்ளலாம்.
ஒருவேளை ஈவெரா பட பாடலான 'கடவுளா நீ கல்லா' பாணியில் 'கலைஞனா நீ கொலைஞனா' என்று யாராவது பாட்டு எழுதி பொன்விழாவில பாடிடாதீங்க, கம்பவுண்டருக்க, சாரி... டாக்டரின் பொன்னான மனசு பூவான மனசு புண்பட்டுரும்.
('தலைவர்கள்' கருத்துகள் நன்றி: http://idlyvadai.blogspot.com/)
அப்படியே ஜெயலலிதா ஆதரவு அராஜக கும்பல் விவசாய கல்லூரி மாணவிகளை எரித்த மிருகத்தனத்தையும் அந்த கும்பல் மீதான வழக்கு அரசால் ஆமை வேகத்தில் நடத்தி செல்லப்பட்ட அருவெறுப்பான வக்கிரமும் நினைவில் இருக்கின்றன. இந்த கீழ்த்தரங்களை என்ன செய்தாலும் தகும்....
12 Comments:
// கொன்னதுக்கும் எரிச்சதுக்கும் கருத்து கணிப்பு காரணம்
என்று சொல்லி கொன்னவனின் அடிவருடும் திராவிடம் //
நச் வரிகள்..
இது கொல்வதுமில்லை
கொல்லப்படுவதுமில்லை
- பகவத்கீதை
இது கொல்கிறது,
கொல்லப் படவும் செய்கிறது
- திராவிட பாதை
// முற்பகலில் தேசக்கொடியை எரிச்ச வீர திராவிடம்
பிற்பகலில் தினகரனை எரிச்சு கொல்லும் இன்ப திராவிடம் //
கலக்கல் திராவிட கவிதை அரவிந்தன்.
பாராட்டுக்களுக்கு நன்றி ஜடாயு. ஆட்டோ வராம இருக்கணும். மதுர பக்கம் வேற.
அடுத்த தலைவர் ஸ்டாலின் என்பது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. இதில் இந்த ரவுடிக்கும்பல் ஏன் இந்த அளவுக்கு வெறிபிடித்து ஆடியிருக்கிறது என்றுதான் புரியவில்லை. எஜமான விசுவாசத்தைக் காட்டுவதற்கு அதீதமாய் செய்துவிட்டார்கள் என்று கருத வாய்ப்பில்லை. ஏனெனில், அனைவருக்கும் தெரியும் சன் டிவியின் செல்வாக்கு, பலம்.
ஏற்கெனவே ஸ்டாலினுக்கு தன்னை சண்டிவி காட்டுவதில்லை என்ற குறை. இப்போது அவரும் உடனடியாக அழகிரிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
முதல்வர் அழகிரியை உடனடியாக கைது செய்து கட்சியை விட்டு நீக்கியிருந்தால், அனைவராலும் பாராட்டப்பட்டிருப்பார்.பொது மக்களுக்கும் ஒரு நம்பிக்கை வந்திருக்கும்.அதுவே ஒரு முதல்வருக்கு அழகு. அதுவே ராஜதந்திரமாகவும் இருந்திருக்கும். ஆனால், முதல்வருக்கு தனது மகன்களை கட்டுப்படுத்தும், கண்டிக்கும் அளவுக்கு தைரியம் இல்லை. ஏற்கெனவே அழகிரி தண்ணீர் தெளித்துவிட்ட மகன் வேறு. இப்போது இன்னமும் தெளித்து விட்டுவிட்டிருக்கிறார். இது ஜெயலலிதாவுக்கு சாதகமாகப் போய்விடும் என்பதும் அவருக்கு புரியாத அளவுக்கு புத்திரபாசம் கண்ணை மறைக்கிறது.
எனக்கு இந்த ரவுடித்தனத்தை விட அதிர்ச்சியைத் தருவது கிட்டத்தட்ட எல்லா கட்சிகளும் கருத்துக் கணிப்பை கண்டிப்பது போன்று பேசியிருப்பது.
அதாவது ஒரு ரவுடி தனது அடியாள் படையை ஏவிவிட்டு(அழகிரி இப்படி செய்வது முதல் முறையல்ல. இன்னும் தா.கிருஷ்ணன் வழக்கு நிலுவையில் இருக்கிறது) அடித்தால், உடனடியாக அடிவாங்கிய பத்திரிகையை எல்லோரும் சேர்ந்து கண்டிக்கின்றார்கள், ரவுடியின் மனதைப் புண்படுத்திவிட்டதாக.
என்ன ஜனநாயகமோ!
Your thiravida kavithai is simply superb. Someone shud show this to mu.ka and co.
No auto will come to you Mr. Arvindan. He is ZERO out side madurai. If he had real guts, he could have gone to chennai and attacked arivalayam and gopalapuram.
Long Live Arvindan.
"ஆனா உங்க குடும்ப சண்டைக்கு எங்க பிள்ளைங்களா சாகணும்?"
பின்னே எத்தனை குடும்பங்களை அடித்து சம்பாதித்த பணத்தை பங்கு செய்ய மேலும் சிலபேர் செத்தா என்ன?
நாங்கதான் ஆளுக்கு 15+2 லட்சம் தர்ரோம்லே.. ஒருவாட்டி செத்தா என்ன
இதுதான் ஐயா திராவிடம்.
//எனக்கு இந்த ரவுடித்தனத்தை விட அதிர்ச்சியைத் தருவது கிட்டத்தட்ட எல்லா கட்சிகளும் கருத்துக் கணிப்பை கண்டிப்பது போன்று பேசியிருப்பது.//
ஆம், எனக்கும் அதுதான் அதிர்ச்சி தந்தது. இனி கருத்துக்கணிப்பு, கட்டுரை, எடிட்டோ ரியல், கேலிப்படம் எல்லாவற்றையும் எந்த பத்திரிகையும் வெளியிடும் முன்னர் பாமகவிடமும் திமுகவிடமும் இதர கருணாநிதி குடும்பத்தவரிடமும் முடிந்தால் அவர் வீட்டு நாய்குட்டியிடமும் காட்டி அவர்கள் எல்லோரும் சரி என்று சொன்ன பிறகு வெளியிட வேண்டும். என்கிற ரீதியில் சட்டசபையில் பேசியிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் கருத்து சுதந்திரம் திட்டமிட்டு அழிக்கப்படுகிறது. கொடூரமாக.
//நாங்கதான் ஆளுக்கு 15+2 லட்சம் தர்ரோம்லே.. ஒருவாட்டி செத்தா என்ன இதுதான் ஐயா திராவிடம்.//
ிவா சார், இந்த நிமிசம் வரை அழகிரி கைது செய்யப்படவில்லை பார்த்தீர்களா...கருணாநிதி கேடுகெட்ட திருதாஷ்டிரன் ஆகியிருக்கிறார். குருஷேத்திரம் விரைவில் நடக்க பிரார்த்திப்போம்.
//Your thiravida kavithai is simply superb. Someone shud show this to mu.ka and co.//
ஐயா அனானி ஒரு முடிவோடத்தான் இருக்கீங்க போல. :))))))
Indians have the liberty to choose their dictators.
As British wanted and said as an answer to pleadings of freedom, India will certainly go into pieces with all its differences.
இப்படிக்கு,
இருதயராஜ்
கருணாநிதி கட்டுப்பாட்டில் இருந்து திமுக எப்போதோ விலகிவிட்டது என்று சொல்லப்படுகிறது. இதுவும் இந்த பாதக செயல்களுக்கு கருணாநிதியை ஒரு பங்காளியாக ஆக்காமல் இருப்பதற்கு சொல்லப்படும் ஒரு காரணம்தான். எனக்கென்னவோ இது சன் டிவி குழுமம் கலைஞரை கேட்டுத்தான் இப்படி கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளார்கள் என்றே தோன்றுகிறது. அழகிரியை அதிகமாக எரிச்சல் பட வைத்ததற்கும் இதுவே காரணம். இல்லையென்றால் இப்படி கொடுமையாக நடந்திருக்காது என்றே தோன்றுகிறது. அப்பா, பிள்ளைகள் மோதலில் தமிழகம் பலியாகிறது.
இதே கருத்துக்கணிப்பை தினமலர் நடத்தியிருந்தால் இவர்கள் எப்படியெல்லாம் இதை திரித்திருப்பார்கள் என்று நினைக்கவே பயமாக இருக்கிறது. கழிசடை திராவிட கழகம். எப்போது ஒழியுமோ.
வழக்கம்போல தங்கள் பதிவு ஒரு கருத்துக்கோவை. மிக அருமையாக செய்திகளை உணர்வோடு தங்திருக்கிறீர்கள்.
அரவிந்தன்
நடந்ததற்குக் காரணம் கருத்துக் கணிப்பும் அல்ல ஒரூ மண்ணாங்கட்டியும் அல்ல பணம் ஐயா பணம். அழகிரியும், ஸ்டாலீனும் சண் டிவீ ஸ்டாக்கில் அதிகம் ஒதுக்கச் சொல்லி நெருக்கடி கொடுத்தூள்ளனர், மாறான்கள் மறுக்கவே இப்படி நெரூக்கடி கொடுக்கிறார்கள். இதில் கரூணாந்நிதியும் கூட்டுக் களவாணி, 3 பேரின் பிணத்துக்கு காரணாமாக இருந்ந்தாது கருணாந்நிதியே, அவனைத்தான் முதலீல் தூக்கில் போட வேண்டும்
அருமையான திராவிடக் கவிதை அரவிந்தன். வாழ்க உமது பதிவுத்திறன்.
கொலைஞரின் பொன்விழா நாளில் எனக்கு நினைவில் வந்த அவரது, மற்றும் அன்னாரது குடும்பத்தினரின் சில கல்யாண குணங்களை கூறிப்பிட்டு கொலைப்பொன்விழா சிறக்க வாழ்த்திவிடுகிறேன்.
இளவயதில் எத்தனை பெண்கள் கற்பை சூரயாடிய சூரன், மீட்டிங் வரும் வழியில் பார்த்த பெண்ணை இரவில் பலாத்காரம் செய்த குடும்பத்தலைவனது மகனல்லவா இந்த ரவுடி.....
பாத்திமா பாபுவுக்கல்லவா தெரியும் இத்தலைவனது வாரிசின் குணம்?...
இந்த திராவிடகும்பலை ஆதரிக்கும், ஜால்ரா அடிக்கும் உடன்பிறப்புக்கள், தங்கள் முளையை மொத்தமாக கழட்டி தாங்களே தின்று உடம்பை மட்டும் வளர்த்தார்களோ?.
இந்த குடும்பத்துப் பெண்களைப் பார்த்தால் பரிதாபம்தான் மிஞ்சுகிறது.
இன்னமும் தமிழ்மணத்தில் எழுதும் அனேகமானோர், மு.க சார்பாகவே எழுதுவதும், பஸ் எரிப்பு சம்பவத்துடன் ஒப்பிடுவதுமாக ஜல்லி அடிக்கிறார்கள். பஸ் எரிப்பு சம்பவத்தை யாரும் நியாயப்படுத்தவில்லை. என்னமோ கேள்வி கேட்பவர்களெல்லாம் அ.தி.மு.க உறுப்பினர் அட்டை வைத்திருப்பது போல், மகாமக சம்பவத்தின் போதும், பஸ் எரிப்பு சம்பவத்தின் போதும் எங்கே போயிருந்தாய் என எழுதி, முட்டாள் தனமான விஸ்வாசத்தை காண்பித்திருக்கிறார்கள். எப்போது தான் திருந்தப்போகிறார்களோ?
அருமையான பதிவு.பாராட்டுக்கள்.
நேற்று கருணாநிதியின் பொன்விழாவினை சன் டிவி ஒளிபரப்பவில்லை ,ராஜ் டிவியில் ஒளிபரப்பினார்கள்.
மாற்று சேனலை தேடுகிறாரா கருணாநிதி.
Monopoly சன் டிவி க்கு முடிவு வந்து விட்டது.
அப்புறம் நாளை தினகரனில் கருத்து கணிப்பு: வன்முறைக்கு காரணம்
1.ஹிந்து
2.கிருத்துவர்கள்
3.முஸ்லிம்
Post a Comment
<< Home