Tuesday, May 08, 2007

குழந்தைகளைக் கொல்லும் காளி?

கிறிஸ்தவ அமைப்பு ஒன்றின் பிரச்சார பிரசுரத்திலிருந்து இவை அளிக்கப்படுகின்றன. இந்தியாவில் -குறிப்பாக வட இந்தியாவில்- மக்களுக்கு ஏசு குறித்த போதனைகளை அளிக்க இவை உருவாக்கப்பட்டுள்ளன. 40 வருடங்களாக கிறிஸ்தவ பிரச்சாரம் செய்யும் அமைப்பு இதனை உருவாக்கியுள்ளது.

பிரசுரத்தின் தலைப்பு : துரோகி


காளிக்கு நரபலி நடக்கிறது


நரபலியை ஏற்க காளி வருகிற காட்சி


நரபலி கொடுக்கும் காளி கோவில் பூசாரி ஏசுவை உண்மை தெய்வமாக ஏற்றுக்கொள்கிறார்



ஏசுவை ஏற்றுக்கொள்ள சொல்லும் வசனங்கள்



அன்புள்ள கிறிஸ்தவ சகோதரர்களே இதைப்போல ஒரு துண்டு பிரசுரத்தை எசுவை குறித்து எழுதி படங்களுடன் (ஏசு குழந்தைகளை கொல்ல வரும் சாத்தான் போல வரைந்து) உங்கள் வீடுகளில் சென்று விநியோகித்தால் என்ன நடக்கும்? அவ்வாறு உங்களுக்கு செய்யப்படுவதை நீங்கள் விரும்புவீர்களா? எனில் ஏன் இத்தகைய பிரச்சாரங்கள் உங்கள் மதத்தின் பெயரில் நடக்கின்றன? அதிர்ஷ்டவசமாக இந்த அமைப்புக்கு இன்னமும் இந்தியாவில் நேரடியாக கிளைகள் இல்லை என தெரிகிறது. குறைந்தபட்சம் அவர்கள் அதனை தங்கள் இணையதளத்தில் தெரிவிக்கவில்லை. ஆனால் இந்த அமைப்பு இந்துக்களை குறிவைத்து தாக்கும் விதம் புதியதல்ல. குறிப்பாக குமரிமாவட்டத்தில் இந்துக்களை குழப்பிடும் விதமாக கிறிஸ்தவ அமைப்புகள் விநியோகித்த சில பிரசுரங்களை அடுத்து காண இருக்கிறோம்.

Labels: , ,

8 Comments:

Blogger எழில் said...

இது போன்ற சில பிரசுரங்களை பார்த்திருக்கிறேன். ஒரு வெள்ளைகாரரோடு வந்த ஒருவர் எங்கள் வீட்டுக்கு வந்து வினியோகித்தார். வேண்டாம் என்று மறுத்துவிட்டேன். என்ன வெள்ளைக்காரர் கொடுக்கிறார் வேண்டாம் என்று சொல்கிறீர்களே என்றார்.

:-))
வெளியே அனுப்பிவிட்டேன்.

6:40 AM, May 08, 2007  
Blogger கரு.மூர்த்தி said...

//என்ன வெள்ளைக்காரர் கொடுக்கிறார் வேண்டாம் என்று சொல்கிறீர்களே என்றார்.

:-))
வெளியே அனுப்பிவிட்டேன்.//

20 வயதில்திண்டுக்கல் பஸ்டேண்டில் "நீங்கள் சாத்தானின் குழந்தைகள் என்று கூவியவாறு பிரசுரம் தந்த ஒருவனை செருப்பால் அடித்தேன் .

வெள்ளைக்காரன் எவனாவது வந்து தந்திருந்தால் இந்தியன் ஒருவனிடம் வாங்கிய பெருமையாவது கிடைத்திருக்கும்

8:18 AM, May 08, 2007  
Blogger எழில் said...

"சொல்கிறீர்களே".. என்று அவர் சொன்னதாக நான் எழுதினேன். மரியாதை கொடுத்து எழுதும் பழக்கத்தால் அப்படி எழுதிவிட்டேன் போலிருக்கிறது. யோசித்து பார்த்தால் அவர் "என்ன வெள்ளைக்காரர் கொடுக்கிறார்! வேண்டாம் என்று சொல்கிறாயே" என்று தான் சொன்னார்.

கரு மூர்த்தி செய்தது போல நான் நிச்சயம் செய்திருக்க மாட்டேன். ஆனால் எல்லோரும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்றும் சொல்ல மாட்டேன்.

11:00 AM, May 08, 2007  
Anonymous Anonymous said...

தமிழை நீசமொழி என்று சொல்லும் கூட்டத்தாருக்கும் இந்த மிஷனரிகளுக்கும் வேறுபாடு இல்லை.

3:08 AM, May 09, 2007  
Anonymous Anonymous said...

சரியாகச் சொன்னீர்கள் அனானி,

தமிழை நீசமொழி என்று சொல்லுபவர்கள் மட்டுமல்ல, மத வெறுப்பை தூண்டும் மிசனரிகள் மட்டுமல்ல, எந்த மொழியையும் தேவையில்லாமல் ஆதிக்க மொழி என்றோ வந்தேறிகளின் மொழி என்றோ வெறுப்புனர்வைத்தூண்டுபவர்களும் இந்த வெறுப்பு கருத்துக்கள் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான்.

இப்படிக்கு,

இருதயராஜ்

10:44 PM, May 09, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

இந்த நீசமொழி விவகாரம் ஒருவித hate-propaganda+urban legend என்றே நினைக்கிறேன். காஞ்சி பரமாச்சாரியாரின் பேச்சுகள் அதிகாரபூர்வமாக தெய்வத்தின் குரல் என பல பாகங்களாக வெளிவந்துள்ளன. அதில் பல சர்ச்சைக்குரிய, ஏற்றுக்கொள்ளமுடியாத கருத்துக்கள் இருக்கின்றன. அவர் தமிழை நீசமொழி என்று சொன்னால் அது கட்டாயம் அதில் பதிவாகியிருக்கும். ஆனால் அவர் தமிழை தெய்வத்தமிழ் என்று கூட குறிப்பிட்டுள்ளதாக ஞாபகம். ஜெயேந்திர சரஸ்வதி கட்டாயமாக தமிழின் தெய்வீகத்தன்மை குறித்து கூறியுள்ளார். திக இலக்கியத்துக்கும் அக்னிகோத்திரம் தாத்தாசாரி போன்றவர்களுக்கும் அப்பால் இதற்கு ஆதாரம் இருக்கிறதா என்றால் இல்லை என்றே நினைக்கிறேன். தெளிவான ஆதாரம் காட்டப்பட்டால் அப்படி கூறியவர் யாராக இருந்தாலும் அது பரமாச்சாரியாரோ வேறு எவரோ கட்டாயமாக கண்டிக்கிறேன். மேலும் அந்த மாதிரி ஒரு கண்டிக்கத்தக்க கருத்து வெளியிடப்படுவது என்பது வேறு. ஒரு குறிப்பிட்ட மக்களின் வழிபாட்டைக் குறித்து தவறான வெறுப்பியல் கருத்துக்களை வேண்டுமென்றே பெரும் பணம் செலவு செய்து பிரச்சாரம் செய்வது என்பது வேறு. முதலாவது ஒரு கருத்து - அது கண்டிக்கப்பட வேண்டியது. இரண்டாவது விசயம் ஒரு பெரும் பணபல பிரச்சாரம். அது தடுக்கப்பட வேண்டியது. இரண்டையும் குழப்புவது பின்னதை நீர்த்து போக வைக்கும் திறமை.

11:35 PM, May 09, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

நன்றி எழில் நன்றி கருமூர்த்தி
கருத்துகளுக்கும் அனுபவ பகிர்வுகளுக்கும் வருகைக்கும்.

11:36 PM, May 09, 2007  
Blogger உண்மை அடியான் said...

மற்று மதத்தவர்களின் நம்பிக்கையை புண்படுத்துவது கிறிஸ்தவ அழகல்ல.அப்படி செய்யும் எந்த கிறிஸ்தவ அமைப்பாகைருந்தாலும் அதை வண்மையாக கண்டிக்கிறேன்.

தங்கள் நம்பிக்கையை உயர்த்தி பேசுவது தவறல்ல.அதில் உள்ள நிறைவை கூறுங்கள்.

மாற்று மதங்களை தாழ்த்தி பேசாதீர்கள்

10:41 PM, September 07, 2007  

Post a Comment

<< Home