Wednesday, August 24, 2005

வெளிவராத/எடுக்கப்படாத ஆவணப்படம்; மறைக்கப்படும் இறுதித்தீர்வுகள்



குஜராத் கலவரம் குறித்த என் பதிவிற்கு ஒருவர் ஒரு குறிப்பிட்ட பிரச்சாரப்படத்தை வைத்து எதிர்வினையாற்றியிருந்தார். அது குறித்து ஏற்கனவே நான் எதிர்வினையாற்றியுள்ளேன். போனபதிவின் பின்னோட்டத்தில் அதனை காண்க. இங்கு எவ்வாறு 'ஆவணப்படம்' என்கிற பெயரில் பிரச்சாரப்படங்கள் எடுப்பவர்கள் புறக்கணிக்கும் உண்மையாக நடத்தப்படும் இறுதித்தீர்வுகளில் ஒன்றை அடிக்கோடிட்டு காட்ட முயற்சித்துள்ளேன். கவனியுங்கள்...இன்றைய தினத்தில் எத்தனை குஜராத் முஸ்லீம்கள் அகதி முகாம்களில் வசிக்கிறார்கள்? ஆனால் ஆண்டுக்கணக்கில் இலட்சக்கணக்கான வனவாசிகளும், காஷ்மீர் பண்டிட்களும் அகதி முகாம்களில் விலங்குகளை விடக் கேவலமாக வாழ்கின்றனர். மிக மெதுவான ஆனால் உறுதியான சமுதாய அழிவினை எதிர்-நோக்குகின்றனர். அவர்கள் தம் வீடு-திரும்பல் இன்று ஏறத்தாழ நடவாத காரியமாகிவிட்டது. ஆனால் இவர்கள் குறித்து எவ்வித ஆவணங்களும் இல்லையே ஏன்? உங்கள் மனச்சாட்சிக்கு இப்பதிவை நான் சமர்ப்பிக்கிறேன்.

நல்ல காங்கிரீட் கட்டிடங்கள். பல குடும்பத்தினர் இருக்கின்றனர். சமையல் நடந்து கொண்டிருக்கிறது. பலர் உறவினர்களை இழந்த சோகங்களில் இருக்கிறார்கள். காயம் பட்ட கட்டுப்போட்ட கை, கால், முகங்களுடன் குழந்தைகள். இந்தியாவின் முதன்மை தேர்தல் அதிகாரி அவர்களை நலம் விசாரிக்கிறார். அருகிலுள்ள ஐஏஎஸ் அதிகாரியை அவர்களுக்கு போதுமான ஏற்பாடுகளை செய்யாமைக்காக திட்டுகிறார். [தொலைக்காட்சி செய்தியிலிருந்து] அடுத்ததாக அதே முகாம்...பாரத குடியரசு தலைவர் பார்வையிடுகிறார்...அதே முகாம் ...வேறுபல முக்கிய அதிகாரிகள் ஊடகத்தினர் அரசு-சாரா அமைப்பினை சாராதவர்கள் என பலர் அதனை பார்வையிடுதல். ...இனி மற்றொரு அகதி முகாம். மண் பூச்சு தரை...சில கிழிந்த சில்பாலின் ஷீட் கூரைகள். ஒரு வேன் வந்து நிற்கிறது. இரு காவலர்களுடன் சிலர் சாக்கு மூட்டைகளை வெளியேற்றுகிறார்கள். சற்று தூரத்தில் ஒரு அவலக்குரல் எழுகிறது. வயிற்றுப்போக்கினால் ஒரு குழந்தை இறந்துவிட்டது. ஓசை கேட்டு திரும்பிய ஒருகாவலர் விஷயம் தெரிந்தவுடன் இதெல்லாம் இங்கு சகஜம் என்கிற ரீதியில் திரும்பிக்கொள்கிறார். டாக்டர் பி.சி.தாஸ், மாநில அரசின் சிறப்பு மருத்துவ குழு உறுப்பினர், கூறுகிறார், " கஷ்டம்தாங்க, இதுவரை 700 பேர் பார்த்துட்டேன். மோசமான தண்ணீருங்க, நல்ல சத்தான ஆகாரம் கிடையாது. சிறப்பு மருத்துவ குழுன்னாலும் வேண்டிய அளவு மருந்தும் கிடையாது." அப்படியே காமிரா ஒரு பத்து வயது சிறுவனை நோக்கி செல்கிறது. அந்தச் சிறுவனைப் பார்க்கையில் உங்களுக்கு ஒருவேளை கட்டியணைத்து ஆறுதல் சொல்லவேண்டும் என்றெல்லாம் தோன்றாது. ஏனெனில் அவன் மேலெல்லாம் சிரங்குகள். அவன் கூறுகிறான், "எங்க அப்பா வயத்துபோக்குல ஒரு வாரத்துக்கு முன்னாடி செத்தாச்சுங்க. எங்க அம்மாவுக்கும் நல்லா உடம்பு முடியல்லீங்க அவங்களும் செத்தாச்சுன்னா நான் அனாதையாடுவேங்க." பத்துவயது பிண்டு ரியாங்கின் முகத்திலிருந்து காமிரா நகர்ந்து அந்த முகாமின் பல பகுதிகளை காட்டுகிறது. லால் தங்க்வாலாவினை அடுத்ததாக காமிரா காட்டுகிறது . மிஸோரம் முதலமைச்சர். அவர் தீவிர கிறிஸ்தவரும் கூட என்பதை அவரது மேசை மீதிலேயே இருக்கும் சிலுவை காட்டுகிறது. "அவர்களெல்லாம் அயலாட்கள். அவர்களுக்கு திரிபுராதான் சொந்த ஊர். அங்கேயேயிருக்க வேண்டியதுதானே. அங்கிருந்து இங்கு வந்த வந்தேறிகள், இங்கு தனி மாவட்டம் கேட்டால் எப்படி?" கேள்வியாளர் கேட்கிறார், " ஆனா அவுங்க இங்கயே வாழ்ந்ததாவும், கொலை பாலியியல் பலாத்காரம் கலவரம் இதுக்கு பயந்து அங்கே அகதியா போயிட்டதாவும் சொல்றாங்களே!" முதலமைச்சரின் முகம் மாறித்தெளிகிறது."இது ஆர்,எஸ்.எஸ் பிரச்சாரங்க. ரியாங்குகள் ஹிந்துக்கள் கிடையாது. அப்ப அவுங்களுக்காக ஆர்.எஸ்.எஸ் எப்படி குரல் கொடுக்கலாம்?" அடுத்ததாக காமிரா நகர்கிறது மிஸோரமெங்கும் நிமிர்ந்து நிற்கும் சர்ச்கள். என்டிடிவியின் செய்திதொகுப்பிலிருந்து ஒரு பகுதி காட்டப்படுகிறது, "இங்கு தேர்தல்களில் சர்ச்சின் கட்டுப்பாடு உள்ளது. சர்ச்சின் ஆதரவு பெற்ற வாக்காளர்களே இங்கு வெல்ல முடியும். நிற்கமுடியும்." ரியாங்களுக்கு எதிரான கலவரங்களில் ஈடுபட்ட மிசோ இளைஞர் அமைப்பின் தொடக்கம் மிஷினரிகளால் என்பதையும் எவ்வாறு மிஸோக்கள் எவ்வாறு மிஷினரிகளால் 'தேர்ந்தெடுக்கப்பட்ட இனமாக' கூறி மேன்மைப்படுத்தப்பட்டனர் என்பதையும் அந்த விவரணப்படம் விளக்கலாம், உலகளாவிய மிசோ கிறிஸ்தவ இணைப்பமைப்பின் பிரகடனம் கூறும் வாசகத்தை இந்நேரம் காட்டலாம்: "We believe that the Bible is the complete and revealed Word of God, fully inspired and without error in the original writings; and that it has supreme authority in all matters of faith and conduct....We believe that all men are sinners by nature and by choice and are, therefore, under condemnation; and that salvation is by grace alone solely through faith in Jesus Christ: "...for there is none other name under heaven given among men whereby we must be saved."
அத்துடனே கூட ப்ரு தேசிய சம்மேளனத்தலைவர் (BNU) சய்பங்கா "நாங்கள் மதம் மாற மறுத்தமையால், மத மாற்ற முயற்சிகளை எதிர்த்தமையால் விரட்டப்பட்டோ ம்" எனக்கூறுவதை காட்டலாம். மேலும் ரியாங்குகளுக்காக தேசிய அளவில் குரல் எழுப்பிய வனவாசி கல்யாண ஆசிரமக்காரர்கள் அன்று கே.ஆர்.நாரயணனை சந்தித்து ரியாங்குகளின் நிலையை கூறியதையும் அதற்கு மதிப்பிற்குரிய அன்றைய குடியரசுத்தலைவரின் எதிர்வினை மௌனத்தின் காதைப்பிளக்கும் ஒலியை இன்று அவர் குஜராத் குறித்து எழுப்பும் ஒலியோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். அகதி முகாம்களிலேயே 500 பேர் இறந்திருக்கிறார்கள் -நல்ல குடித்தண்ணீர் கிடைக்காத காரணத்தால் என்பது இந்த விவரணப்படத்தில் குறிப்பிடப்படலாம். இன்றைக்கு இந்த ரியாங்க் குழந்தைகளுக்கான கல்விக்கு உதவும் வகையில் வன்வாசி கல்யாண் அமைப்பினர் மாதச்சம்பளம் நானூறு ரூபாய்க்கு நிஅயமித்த ஆசிரியர்களால் இலவச வகுப்புக்கள் எடுப்பதைக் காட்டலாம். அத்துடன் கூடவே இம்மக்களுடன் இருந்து அவர்களின் சுகாதாரத் தேவைகளுக்காக தம்மையே அர்ப்பணித்திருக்கும் ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷனின் ஷயதானந்த மகராஜ் அவர்களுடன் இருந்து அவர்களுக்கு உதவுவதை காட்டலாம். களத்தில் எந்த உதவியும் செய்யாமல், ரியாங்குகளை ஹிந்துக்களா அல்லவா என பட்டிமன்றம் நடத்தும் சில இடதுசாரி அறிவுஜீவிகளையும், 'காஷ்மீர் பண்டிட்களுக்கு அகதி முகாம்களில் கிடைக்கும் வசதிகள் ரியாங்களுக்கு கிடைக்கவில்லை' எனப் பொய் பிரச்சாரம் செய்யும் அரசுசாரா அமைப்புகளின் குரலையும் இந்த ஆவணப்படத்தில் சொல்லி கீழ் காணும் படங்களில் பார்வையாளரிடம் ஆறுவித்தியாசம் கேட்கலாம்.




ஆனால் இத்தகையதோர் விவரணப்படம் வரப்போவதில்லை. ஏனெனில் அவ்வாறு வந்தால் அப்படம், சேவை, காருண்யம் ஒரு கன்னத்தை அறைந்தால் மறுகன்னத்தை காட்டும் அன்பு போன்ற வெளித்தோல்களுக்கு அப்பால் உள்ளிருக்கும் இராட்சத விலங்கு எப்படி அம்மணமாக ஆட்டம் போடுகிறது என்பதை காட்டக்கூடும் அத்துடனே கூட எப்படி இன்றும் நிகழும் மத்தியகால புனித விசாரணைகளை மிஞ்சும் கொடுமைகளுக்கு, ஹிட்லர் ஆறு மில்லியன் யூதர்களை கொன்ற போது மவுனித்த 'நாகரிக மேற்குக்கொப்ப' இங்கிருக்கும் மதச்சார்பற்ற ஊடகங்கள் அமைதி காத்து துணை போகின்றன் என்பதையும் இந்த விவரணப்படம் காட்டக்கூடும். எனவே இந்த விவரணப்படம் வருவது நடவாத ஒன்று.

இங்கிருக்கும் ரியாங்க் குழந்தைகளின் முகத்தை ஒருமுறை பார்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் ஆபிரகாமிய மார்க்கத்தை சாராதவராக இருப்பின் நாளை உங்கள் குழந்தைக்கும் இக்கதி வரலாம் என்பதை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.

13 Comments:

Blogger Ramesh said...

Good capture Arvindan.

The kind of intellectual hogwash we see in today's media should be countered by equally intelligent propaganda.

Let us do justice to whatever really happened.

Satyameva jayate.

9:45 AM, August 24, 2005  
Blogger Unknown said...

நீங்கள் குஜராத் கலவரத்துக்கு பதிலாக மிஸோரத்தையும் காஷ்மீரையும் காட்டுகிறீர்கள். நான் எந்தவிதமான state sponsored அடக்குமுறையையும் எதிர்க்கிறவன். ஒன்றைக் காண்பிப்பதால் இன்னொன்று சரி ஆகாது. கேள்வி என்னவென்றால் ஹிந்துத்வாவின் உண்மையான முகம் எது? - பஜ்ரங்தள் குண்டர்படையின் அட்டகாசமா?

12:13 PM, August 24, 2005  
Anonymous Anonymous said...

நீலகண்டன், உண்மையிலேயே உங்களுக்கு அக்கறை இருக்குமானால் இந்த கொடுமைகளைப் பற்றி ஆவணப் படம் எடுங்கள். ஆவண செய்யப் பாருங்கள். 5 வருடங்கள் "இந்தியா ஒளிர்ந்த" ஆட்சியில் "உருப்படியாக" ஏதாவது செய்திருக்கலாமே. இதற்காக சங்பரிவார்கள் வாஜ்பேயை மிரட்டியது உண்டா?
சும்மா பாபர் மசூதியில் உட்காந்துகொண்டு குப்பயக் கிளறாமல் நல்லது செய்ய உங்களின் இந்துத்துவ கோஷ்டிகளுக்கு உருப்படியாக ஏதாவது செய்ய கற்றுக்கொடுங்கள்

12:21 PM, August 24, 2005  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

ரமேஷ்,
நன்றி.

வெங்கட்ரமணி,

குஜராத் கலவரங்கள் குறித்து நீண்டதோர் பதிவும், 'இறுதித்தீர்வு' பிரச்சாரப்படம் குறித்த எனது எதிர்வினையும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட பிரச்சாரப் படம் மிகவும் நேர்மையற்ற விதத்தில் எடுக்கப்பட்டுள்ளது...உதாரணமாக தங்களை குஜராத் போலிஸ் படையினர் காப்பாற்றியதை குறித்து பல முஸ்லீம்கள் கூறியுள்ளனர்.இது குறித்து அந்த பிரச்சாரப் படம் காக்கும் அமைதி எந்த வித நேர்மையில் சேர்த்தி? 'இந்தியா டுடே' முஸ்லீம்களை காப்பாற்ற முயன்று தாக்கப்பட்ட பாஜக காரரை குறித்த செய்தியை வெளியிட்டிருந்தது. மதச்சார்பின்மை ஊடகவாதிகள் எவ்வாறு முதலில் கோத்ரா படுகொலைகளை திட்டமிட்ட மின்னஞ்சல் போலிச்செய்திகள் மூலம் நியாயப்படுத்த முனைந்தனர் என்பதையும், எவ்வாறு 28 பிப்ரவரி அன்றே இஸ்லாமியர் கலவரங்களில் ஈடுபட்டதுடன் அதனை வெளிக்கொணரா வண்ணம் ஊடகத்தினரை தடுத்தனர் என்பதையும் வெளிக்காட்டியுள்ளேன். இதற்கும் பதிலைக் காணோம். நியூட்டன் விதியை மோடி கூறினார் என்பதற்கு மோடி மறுப்பு தெரிவித்ததுடன் அக்குறிப்பிட்ட செய்தியாளர் கூட்டத்தில் "மக்களின் உணர்வுகள் என்கிற பெயரில் யாரும் சமூக அமைதியை சீர்குலைப்பதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது" என்று கூறியதையும் சுட்டிக்காட்டியதை மதச்சார்பின்மை ஊடகங்கள் வெளிப்படுத்தவில்லை. அல்லது சிங்கால் 'குஜராத்தை ஹிந்துத்வ பரிசோதனை வெற்றிகரமாக நடந்த பரிசோதனைக் கூடம்' எனக்கூறியதாக வெளிவந்த பத்திரிகை செய்தியும் கற்பனையாக வார்த்தைகள் சேர்த்து உருவாக்கப்பட்டது என்பது தங்களுக்கு தெரியுமா? KPS கில் மிகத்தெளிவாக இச்சம்பவத்தின் பின்னால் பாகிஸ்தானிய சதி இருக்கலாம் எனக் கருதி அது குறித்த ஆதாரங்களை வழங்கியுள்ளார். குறைந்தபட்சம் இந்த ஆவணப்படத்தயாரிப்பாளர் கில்லினை குறுக்கு விசாரணையாவது செய்திருக்கலாமே? ஆக அப்பட்டமான நேர்மையற்றதோர் பிரச்சாரப்படத்தின் அடிப்படையில் குஜராத் கலவரங்களைப் பயன்படுத்தி தங்களுக்கு பல தளங்களில் ஆதாயம் தேடும் 'பிணந்தின்னிக் கழுகு'களைப் போல நடந்துகொண்டுள்ளனர் இந்த இடதுசாரி அறிவுஜீவிகள். இவர்களது இரட்டை டம்ளர் முறையை வெளிப்படுத்தத்தான் மிஸோரமில் (பழைய தேர்தல் ஆணையர் -லிண்டோ - ஊர்தானே அது! ரியாங்குகள் அந்நியர் எனச் சொல்கிற முதலமைச்சரை ஜோக்கர் என்று போகிறபோக்கில் சொல்ல லிண்டோ வாய்க்குள் என்ன இத்தாலிய பிட்ஸா அடைத்திருக்கிறதா?) ரியாங்குகளின் நிலை மிருகங்களினும் கீழாக, ஆண்டுகளாகத் தொடர்வதை சுட்டிக்காட்டியுள்ளேன்.

அநாநிமஸ்,

தமிழ்நாட்டிலேயே ஹிந்துக்களுக்கு குறிப்பாக ஹிந்து தலித்துகளுக்கு எதிராக மதமாற்றச் சக்திகளும், திராவிட அரசியல்வாதிகளும், இன்னபிற மதச்சார்பற்றவாதிகளும் செய்யும் கொடுமைகள் ஆவணப்படுத்தப்பட்டு வருகின்றன. அது விரைவில் வெளிவரும் பின்னர் மிசோர ரியாங்குகள், திரிபுராவின் ஜமாத்தியாக்கள், பங்களாதேஷில் எல்லாவித கொடுமைகளுக்கும் உள்ளாக்கி அழிக்கப்பட்டு வரும் எம் தாழ்த்தப்பட்ட இனச் சகோதரர்கள், பௌத்த வனவாசிகள், பாரதத்திலேயே பாலியல் கொடுமைகளுக்கும், மதமாற்ற கொடுமைகளுக்கும் ஆளாகி அழிந்துவரும் திபெத்திய அகதிகள் - என so-called அறிவுஜீவிகள் போலி மதச்சார்பின்மை-கருத்தியல் கபோதிகள் ஆகியோரால் புறக்கணிக்கப்பட்ட, அழிந்துவரும் இச்சமுதாயங்களைக் குறித்த ஆவணங்கள் வெளிவரும். ஏற்கனவே பங்களாதேஷ் தலித் சமுதாயத்தினர் குறித்தும் கஷ்மீர் பண்டிட்கள் குறித்தும் குறுந்தகடுகள் வெளிவந்துள்ளன. ...ஓ குஜராத்தில் முடிந்து போன கலவரக்குப்பைகளை கிளறியே பிழைப்பு நடத்துபவர்களுக்கு நடந்துவரும் உண்மையான அழிவுகளை எதிர்க்க ஏது திராணி? பாவங்களுக்கு பிராயசித்தமாக ஒன்று செய்கிறீர்களா! ஹிந்துத்வ குடும்பத்தைச் சார்ந்த சேவாபாரதி அமைப்பு தலித்களுக்கு கழிப்பறைகள் கட்டிக் கொடுப்த்துள்ளது. (ஆமா சார் யாரை நீங்களெல்லாம் பார்ப்பார பயல்கள் என்று ஏசினீர்களோ அவர்களேதான் செப்டிக் டாங்க் இறங்கி வேலை செய்றாங்க ...ஆனா பாருங்க திண்ணியத்தில் தலித்தை மலந்தின்ன வைத்த ஆளுடைய திராவிட அரசியல் பேக்ரவுண்டை சத்தே விளக்குறீயளா சாமி) நீங்களும் எங்களோட சேர்ந்து இந்த வேலையை செய்யுங்களேன். உருப்படாத போலி மதச்சார்பின்மை குப்பையைக் கிளறுறதை விட்டுட்டு உருப்படியாக ஏதாவது செய்த மாதிரி இருக்குங்கிறேன்.

நம்பி சார்,

அது எப்படி சார் குஜராத் கலவரம் குறித்த முழுமையான விளக்க கட்டுரையை பிச்சு பிடுங்கி கடிச்சு குதறி என்னை பொய்யன்னு ஆதாரத்தோட நிரூபிப்பீங்கன்னு பார்க்கற இடத்துல அப்படி ஒரு அமைதி காத்திட்டு இப்ப வந்து நீ ஏன் குஜராத் கலவரம் பத்தி எழுதலன்னு கேக்கறிங்க? சரி ஏதுவானாலும் பழைய பின்னோட்டங்களையும் ஒருமுறை பார்த்துட்டு வாங்க. போங்க.

6:01 PM, August 24, 2005  
Anonymous Anonymous said...

//ஹிந்துத்வ குடும்பத்தைச் சார்ந்த சேவாபாரதி அமைப்பு தலித்களுக்கு கழிப்பறைகள் கட்டிக் கொடுப்த்துள்ளது.//

so ஹிந்துவும் தலித்தும் வேற வேற. ஏம்பா நீங்கள்ளாம் எப்ப திருந்தப் போறீங்க?

//ஆமா சார் யாரை நீங்களெல்லாம் பார்ப்பார பயல்கள் என்று ஏசினீர்களோ அவர்களேதான் செப்டிக் டாங்க் இறங்கி வேலை செய்றாங்க //

உங்க பார்வையில செப்டிக் டேங் கழுவுறது இவ்வளவு நாளா கேவலமா இருந்த்திச்சோ?
இதுவுமொரு வேலைதான். வேலையில் எந்த வித்தியாசமும் கிடையாது. பிறப்பைவைத்து சாதி பிரித்த உங்கள் மன செப்டிக்டேங்கை யார் கழுவுவது?

//நீங்களும் எங்களோட சேர்ந்து இந்த வேலையை செய்யுங்களேன்.//

நான் செப்டிக் டேங் கழுவுவதை கேவலமாகவோ சாதிரீதியாகவோ பார்த்தது இல்லை. சம்பளம் கம்மியா கிடைகும் என்ற காரனத்திலாயே செய்யாமல் வேரு வேலை செய்து கொண்டுள்ளேன். செய்யாமல் இருப்பதற்கு வேறு காரணம் கிடையாது. மதவாதியாக இல்லாமல் மனிதனாக நீங்கள் "மாறி" வந்தால் உங்களுடன் கக்கூஸ் அல்லத் தயார். அரவிந்தன் நீலகண்டன் மதத்தைவிடு மனிதனாக மாறினால் சன்ஹ்தோசமே

//மதச்சார்பின்மை குப்பையைக் கிளறுறதை விட்டுட்டு உருப்படியாக ஏதாவது செய்த மாதிரி இருக்குங்கிறேன்/

மதச்சார்பின்மை அல்ல சாரே மதமின்மை.

***
கஷ்டப்படும் அந்த பண்டிகளைப் பற்றி மட்டும் அல்லாமல் அனிவருக்கும் உங்கள் மனத்தில் இடம் கொடுங்கள். நீங்கள் நல்லவராக இருக்கலாம். ஆனால் சாதி/,மயப் போர்வையில் உம்மால் பயன் பெறும் மக்கள் வட்டத்தை குறைத்துக் கொள்ள வேண்டாம்.

7:43 PM, August 24, 2005  
Anonymous Anonymous said...

**கஷ்டப்படும் அந்த பண்டிட்களைப் பற்றி மட்டும்...

7:45 PM, August 24, 2005  
Anonymous Anonymous said...

"so ஹிந்துவும் தலித்தும் வேற வேற. ஏம்பா நீங்கள்ளாம் எப்ப திருந்தப் போறீங்க?"

எந்த இடத்தில் தலித்துகளும் இந்துக்களும் வேறு வேறு என்று எழுதியிருக்கிறார்?

"உங்க பார்வையில செப்டிக் டேங் கழுவுறது இவ்வளவு நாளா கேவலமா இருந்த்திச்சோ?"

உங்கள் மனதில் இன்னும் இருக்கிறது என்பதைத்தான் எழுதியிருக்கிறார்.

"//நீங்களும் எங்களோட சேர்ந்து இந்த வேலையை செய்யுங்களேன்.//

நான் செப்டிக் டேங் கழுவுவதை கேவலமாகவோ சாதிரீதியாகவோ பார்த்தது இல்லை. சம்பளம் கம்மியா கிடைகும் என்ற காரனத்திலாயே செய்யாமல் வேரு வேலை செய்து கொண்டுள்ளேன். செய்யாமல் இருப்பதற்கு வேறு காரணம் கிடையாது."

இதன் பெயர் நழுவுதல்.

சொல்லுதல் யார்க்கும் எளிய, அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்.

வாய்சவடால் விடுவது எளிது. பார்ப்பார பசங்கள் காசுக்காக அந்த வேலையைச் செய்யவில்லை.

"உம்மால் பயன் பெறும் மக்கள் வட்டத்தை குறைத்துக் கொள்ள வேண்டாம்."

ஏன் நீங்கள் ஏதும் செய்யமாட்டீர்களா? காசு வாங்கிகொண்டுதான் செய்வீர்களா?

உம்மால் பயன்பெறும் வட்டத்தையும் அதிகரிக்கலாமே? சரி பயன்பெறும் வட்டம்தான் இல்லை. உங்கள் அனுதாபத்தையாவது சாதி மதம் தாண்டி, அங்கங்கு மத ரீதியாக ஒடுக்கப்படும் இந்துக்களுக்கும் தரலாமே?

8:10 PM, August 24, 2005  
Anonymous Anonymous said...

நீ ஏன் கிழக்குப் திசையில் போனாய்? என்று கேள்வி கேட்டால்,

ராம்கி ஏன் தெற்கு பக்கம் போனான்?
வெங்கி ஏன் வடக்கு பக்கம் போனான்
சுப்புனி ஏன் வெளிக்குப் போனான்
மோடி ஏன் மூத்திரம் போனான்

என்ற கேள்விகள் பதிலாகுமா?


இதுதான்யா நெத்தியடி. அரவிந்தன் சும்மாங்காட்டியும் மடத்துல பெசா வாங்கினு எதுனாச்சும் உளரதேயும். மக்கள் விவரமானவர்கள்.

அரவிந்தன் நீலகண்டன்கிற பேர, அரைவேக்காடு நீலகண்டன்னு போடுறப்போறாங்க :-))))))

8:41 PM, August 24, 2005  
Anonymous Anonymous said...

'அரைவேக்காடு' நீலகண்டன் பற்றிய கவிதை

8:43 PM, August 24, 2005  
Anonymous Anonymous said...

"இன்றைய தினத்தில் எத்தனை குஜராத் முஸ்லீம்கள் அகதி முகாம்களில் வசிக்கிறார்கள்? "

வாஸ்தவந்தேன். பரலோகத்துல இன்னும் அகதிகள் முகாம் கட்டலே. சொர்க்கம், நரகம்
ரெண்டுதேன். இனிமேதான் அகதிகள் முகாம் கட்ட அப்ளிகேசன் போடணும்.

11:36 AM, August 25, 2005  
Blogger P.V.Sri Rangan said...

தமிழகம்:
ஆதிக்க சாதி வெறியர்களின்
சொர்க்க பூமி
''நாலு எழுத்துப் படிக்கப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பப்பட்ட தாழ்த்தப்பட்ட சிறுவர்கள் மீது பள்ளிக்கூடக் கழிப்பறையைச் சுத்தம் செய்யும் வேலை திணிக்கப்படுகிறது.''

''சாமி கும்பிடுவதற்காகக் கோவிலுக்குள் நுழைந்த தாழ்த்தப்பட்ட இளைஞர், மேல்சாதி வெறியர்களால் அடித்தே கொல்லப்படுகிறார்.''

''இரட்டை குவளை முறையை எதிர்த்த தாழ்த்தப்பட்ட சிறுவன் சிறைக்குள் தள்ளப்படுகிறான்.''
'சமூக நீதி'யின் பிறப்பிடம் எனத் தூக்கி வைத்துக் கொண்டாடப்படும் தமிழகத்தில்தான் இப்படிப்பட்ட சமூக அநீதிகளும் ஒடுக்குமுறைகளும் எவ்விதத் தடையுமின்றி நடந்து வருகின்றன.

திருச்சி மாவட்டம் மணப்பாறைக்கு அருகே அமைந்துள்ள கிராமம் பன்னாங்கொம்பு. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய மாதிரி தொடக்கப்பள்ளியில் தான் தாழ்த்தப்பட்ட மாணவர்களைக் கழிப்பறையைக் கழுவ வைத்து, பிஞ்சு மனங்களிலே தீண்டாமையையும், சாதிய ஏற்றத்தாழ்வுகளையும் பதிய வைத்திருக்கிறார்கள், ஆசிரியப் பெருமக்கள்.

பள்ளியையும், வகுப்பறைகளையும் சுத்தமாக வைத்துக் கொள்வதற்காக சுகாதாரக் கமிட்டியை அமைத்து, அக்கமிட்டியில் பல்வேறு சாதிகளைச் சேர்த்த தலைமையாசிரியர் ஆரோக்கியசாமி, கழிப்பறையைக் கழுவி சுத்தம் செய்யும் வேலையை மட்டும் தாழ்த்தப்பட்ட மாணவர்களின் மீது சுமத்தி, தீண்டாமையை நடைமுறைப்படுத்தி வந்திருக்கிறார். தனலெட்சுமி என்ற ஆசிரியை தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கழிப்பறையை ஒழுங்காகச் சுத்தம் செய்கிறார்களா என்பதைக் கண்காணித்து வந்திருக்கிறார். தலைமையாசிரியரின் உத்தரவுப்படி நடந்து வந்த இந்த 'வேலைப் பிரிவினை'யை மற்ற ஆசிரியர்கள், கையைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்து வந்திருக்கிறார்கள்.

''தினசரி மதியம் ரெண்டு மணிக்குத்தான் சுத்தம் பண்ணுவோம். வாளி நிறைய தண்ணீர் எடுத்துட்டுப் போய் விளக்குமாறால சுத்தமா கழுவணும். டீச்சர் வந்து பார்ப்பாங்க. கழுவினது அவங்களுக்கு சரியாத் தெரியலைனா, அன்னிக்கு நாங்க கிளாஸுக்குப் போக முடியாது. முழுசுமே கக்கூஸ்தான் கழுவிக்கிட்டிருக்கணும்'' என இவ்வன்கொடுமையை விளக்குகிறான், இப்பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் தாழ்த்தப்பட்ட சிறுவன்.

சனி, ஞாயிறு போன்ற பள்ளி விடுமுறை நாட்களில் கூட, இவ்''வேலை''யைச் செய்வதில் இருந்து தாழ்த்தப்பட்ட சிறுவர்கள் தப்பித்து விட முடியாது. இது மட்டுமின்றி, ''இப்பள்ளி வகுப்புகளில் தாழ்த்தப்பட்ட மாணவர்களையும், பிற மேல்சாதி மாணவர்களையும் தனித்தனியாகப் பிரித்துதான் உட்கார வைப்பார்கள்'' எனக் குற்றஞ்சுமத்துகிறார்கள், பன்னாங்கொம்பு கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள்.

கடந்த இரண்டு ஆண்டுகளாகி அப்பள்ளியில் நடந்து வந்த இத்தீண்டாமைக் கொடுமை பத்திரிகைகளின் வழியே வெளியே கசிந்த பின்னர்தான், திருச்சி மாவட்ட ஆட்சியாளர் விசாரணை நடத்தி, உண்மையைக் கண்டுபிடித்து, தலைமையாசிரியர் ஆரோக்கியசாமியையும், தனலெட்சுமி டீச்சரையும் தற்காலிகப் பணி நீக்கம் செய்திருக்கிறார். ஆனாலும், அவர்கள் இருவரும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாகத் தெரியவில்லை.
-------

திருச்சி மாவட்டம் துறையூருக்கு அருகேயுள்ள குருவம்பட்டியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட இளைஞர் சங்கர். புத்தனாம்பட்டியில் உள்ள ஆறுநாட்டு வேளாளர் சாதியினருக்குச் சொந்தமான கல்லடி கருப்புசாமி கோவில் திருவிழாவின்போது, மேல்சாதி வெறியர்களால் சங்கர் அடித்தே கொல்லப்பட்டார்.

சம்பவம் நடந்த அன்று, தனது நண்பனின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக, கரியமாணிக்கத்துக்குக் கிளம்பிப் போன சங்கர், போகும் வழியில் உள்ள கல்லடி கருப்பசாமி கோயில் திருவிழாவைப் பார்த்தவுடன் சாமி கும்பிடுவதற்காக அக்கோவிலுக்குள் சென்றிருக்கிறார். அடிக்கடி 'சாமி' வந்து 'அருள்வாக்கு' சொல்லும் சங்கருக்கு, கோவிலுக்குள் நுழைந்தவுடனேயே 'சாமி' வந்துவிட்டது.
அக்கோவில் திருவிழாவிற்கு வந்திருந்த மேல்சாதியினர், சங்கருக்கு சாமி மலையேறியவுடனேயே, 'யாரு எவரு'னு விசாரித்துள்ளனர். சங்கர், ''நான் குருவம்பட்டி சேரித் தெருன்னு'' சொன்னவுடனேயே, ஆதிக்கசாதி வெறியர்கள், ''சேரிப்பய கோவிலுக்குள்ள நுழைஞ்சதால கோவிலுக்குத் தீட்டுப் பட்டுருச்சு... அவனக் கட்டி வெச்சு உதைங்கடா''னு சொல்லிட்டு சங்கரை ஒரு வேப்பமரத்துல கட்டிப் போட்டு, ஆளாளுக்கு விறகுக் கட்டையால் தாக்கியும், காலால் மிதித்தும், அவரைக் கதற கதற அடித்தே கொன்று விட்டனர்.

''கோவிலுக்குள் நுழைந்து வேலைத் திருட முயன்ற சங்கரைப் பிடித்து, நாலு தட்டு தட்டி விசாரித்தபொழுது, சங்கர் எதிர்பாராத விதமாகச் செத்துப் போய்விட்டதாக'' ஒரு கட்டுக் கதையை ஆதிக்கசாதி வெறியர்கள் பரப்பி வருகின்றனர். இதன் மூலம் சாதிவெறியால் நடந்த இப்படுகொலையை, 'திருட்டைத் தடுக்க முயன்ற பொது மக்களின் கோபமாக'ப் பூசிமெழுகிவிட முயலுகின்றனர்.

கடந்த ஆறேழு ஆண்டுகளாக பெங்களூரில் கொத்தனார் வேலை பார்த்துவரும் சங்கருக்குத் திருடிப் பிழைக்க வேண்டிய அவசியமே கிடையாது. மேலும், அவர் மீது இதுவரை எந்தவொரு கிரிமினல் வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை. இதற்கும் மேலாக, பட்டப் பகலில் கோவிலுக்குள் பல நூறு பேர் இருக்கும் பொழுது, எந்தவொரு திருடனும், நூறு ரூபாய் கூடப் பெறாத வேலைத் திருடி, தானே மாட்டிக் கொள்ளத் துணிய மாட்டான்.

இப்படி குறுக்கு கேள்விகள் கேட்டு உண்மையைக் கண்டுபிடிக்காத போலீசு, ஆதிக்கசாதி வெறியர்கள் சங்கர் பற்றி அவிழ்த்துவிடும் பொய்யையும், அவதூறையுமே முதல் தகவல் அறிக்கையாகப் பதிவு செய்து, இவ்வன்கொடுமையை மூடி மறைத்து சாதிவெறியர்களைக் காப்பாற்றிவிட ஒத்துழைக்கிறது.

-------

சேலம் மாவட்டத்தில் இரட்டைக் குவளை முறை நடைமுறையில் இருக்கும் நூற்றுக்கணக்கான கிராமங்களில், திருத்தலைகிரியும் ஒன்று. ''இந்த ஊரில் உள்ள தேநீர்க் கடைகளில் இரட்டைக் குவளை முறை நடைமுறையில் இருப்பதோடு, இங்குள்ள உணவகங்களில் தாழ்த்தப்பட்டோர் உட்கார்ந்து உணவருந்த முடியாது; முடித்திருத்தகங்களில் தாழ்த்தப்பட்டோருக்கு முகம் மழிக்க மாட்டார்கள்'' எனத் தீண்டாமைக் கொடுமை தலைவிரித்தாடுகிறது.

இவ்வூரைச் சேர்ந்த 17 வயதான கஞ்சமலையான் என்ற தாழ்த்த்ப்பட்ட சிறுவன், விஷ்ணு காபி பார் என்ற கடையில் தாழ்த்தப்பட்டோருக்கு மட்டும் தனிக் குவளையில் தேநீர் தரும் தீண்டாமையை எதிர்த்து நியாயம் கேட்டான். இதனால் ஆத்திரமடைந்த அக்கடையின் உரிமையாளர் மாணிக்கம் மற்றும் பாண்டியன், ஆறுமுகம், வெங்கடாசலம் ஆகியோர் அச்சிறுவனைக் கொலைவெறியோடு தாக்கியதோடு, அச்சிறுவன் தங்களைக் கொலை செய்ய முயன்றதாகப் பொய்ப் புகாரும் கொடுத்தனர். இப்புகாரின் அடிப்படையில், கஞ்சமலையான் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு தொடுத்து, அச்சிறுவனை சேலம் மத்திய சிறையில் அடைத்தது போலீசு.

கஞ்சமலையான் 18 வயது நிரம்பாத சிறுவன். அவனது கல்விச் சான்றிதழின் அடிப்படையில், கஞ்சமலையானுக்கு 17 வயது 9 மாதமே ஆகிறது. எனவே, ''அச்சிறுவனை மத்திய சிறைச் சாலையில் அடைத்தது சட்டப்படி செல்லாது; மனித உரிமை மீறல்'' என வழக்குத் தொடுத்ததன் அடிப்படையில், கஞ்சமலையான் சேலம் மத்திய சிறைச்சாலையில் இருந்து சிறுவர் கூர்நோக்கு இல்லத்திற்கு மாற்றப்பட்டான்.

எனினும், சேலம் குற்றவியல் நீதித்துறை நடுவர்மன்ற நீதிபதி மாலதி, அச்சிறுவனை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி, கஞ்சமலையானுக்கு 19 அல்லது 20 வயது இருக்கலாம் என மருத்துவர்கள் கொடுத்த சான்றிதழ் அடிப்படையில், அச்சிறுவனை மீண்டும் சேலம் மத்திய சிறைச்சாலையில் அடைக்க உத்தரவிட்டார்.

இந்நிலையில் கஞ்சமலையானின் தந்தை சேலம் மாவட்டத்தில் நிலவும் இரட்டை டம்ளர் தீண்டாமையைக் குறிப்பிட்டு, கஞ்சமலையானை பொய் வழக்குகளில் இருந்து விடுவிக்கக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தார். உயர்நீதி மன்ற நீதிபதிகள், இரட்டை டம்ளர் முறை குறித்து அறிக்கை தரும்படி சேலம் மாவட்ட ஆட்சியர், மாவட்ட போலீசு கண்காணிப்பாளர் மற்றும் உள்துறைச் செயலாளர் ஆகியோருக்கு உத்தரவிட்டனர். இதற்கு, சேலம் மாவட்ட போலீசு கண்காணிப்பாளராக இருந்த பொன்.மாணிக்கவேல், ''சேலத்தில் இரட்டை டம்ளர், அரைடம்ளர், கால் டம்ளர் என எதுவும் இல்லை'' எனத் திமிரோடு பதில் கூறினார்.

விடுதலைச் சிறுத்தைகள், தமிழக முசுலீம் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து, ''தலித் உரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு'' என்ற முன்னணியை உருவாக்கி, இரட்டை டம்ளர் முறையை அம்பலப்படுத்தியும், அதற்கு எதிராகப் போராடிய கஞ்சமலையானை விடுவிக்கக்கோரியும் பல்வேறு போராட்டங்களை நடத்திய பிறகுதான், அச்சிறுவனைத் தாக்கிய ஆதிக்கசாதி வெறியர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. எனினும், அக்குற்றவாளிகளைக் கைது செய்து சிறையில் அடைக்க போலீசு முயலவேயில்லை. அதேசமயம், தீண்டாமையை எதிர்த்துப் போராடியதற்காக பிப்ரவரி 2005இல் சிறையில் அடைக்கப்பட்ட சிறுவன் கஞ்சமலையானுக்கு, பத்திரிகை செய்திகளின்படி ஏப்ரல் 2005 முடிய பிணைகூட கிடைக்கவில்லை.

------

தமிழகம் ஆதிக்கசாதி வெறியர்களின் சொர்க்க பூமியாக இருக்கிறது என்பதைப் புட்டு வைக்கும் உதாரணங்கள்தான் இந்தச் சம்பவங்கள். ஆனால், ''தீண்டாமையை முற்றிலும் ஒழித்துவிடும் பாதையை நோக்கித் தமிழகம் சென்று கொண்டிருப்பதாக'' சட்டமன்றத்திலேயே புளுகியிருக்கும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் எஸ். கருப்பசாமி, இதற்கு ஆதாரமாக, கடந்த மூன்று ஆண்டுகளாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குறைவான அளவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதை எடுத்துக் காட்டியிருக்கிறார்.

தாழ்த்தப்பட்டோர் மீது வன்கொடுமையை ஏவிவிடும் ஆதிக்கசாதி பெரிய மனிதர்கள் மீது வழக்குப் பதிய வேண்டும் என்றால், அவர்களால் பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்டவர்கள் அதற்குத் தங்களின் உயிரையே விலையாகத் தர வேண்டியிருக்கிறது.

கோவைக்கு அருகிலுள்ள நாகமநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த சம்பத், தனக்குத் தரவேண்டிய பணத்தையும் தராமல், தன்னைச் சாதிப் பெயரைச் சொல்லி இழிவுபடுத்திய ''கல்யாண் டெக்ஸ்டைல்ஸ்'' அதிபர் சண்முகம் உள்ளிட்ட 6 பேர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனக் கோரி, 26.4.2005 அன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சாவுக்குப் பிறகும்கூட, கவுண்டர் சாதியைச் சேர்ந்த சண்முகத்தின் மீது கொலைமிரட்டல் வழக்குதான் பதிவு செய்யப்பட்டுள்ளது. கவுண்டர்களுக்கு ஆதரவாக நடந்து கொண்டு, சம்பத் கொடுத்த புகாரை, அவரை மிரட்டி திரும்பப் பெற்றுக் கொள்ள செய்த காவல்துறை ஆய்வாளர் மீது எந்தச் சட்டமும் பாயவில்லை.

அரசு ஆதிக்கசாதி வெறியர்களுக்கு ஆதரவாக மட்டும் நடந்து கொள்ளவில்லை; அரசே மனுதர்மத்தின்படி தீண்டாமையைக் கடைப்பிடித்து வருகிறது என்பதை கடந்த மாதம் நடந்த கண்டதேவி சொர்ணமூர்த்தி ஈஸ்வரர் கோவில் தேரோட்டம் பச்சையாக அம்பப்படுத்தி விட்டது.

கண்டதேவி கிராமத்தைச் சுற்றிலும் பல்லாயிரக்கணக்கான போலீசைக் குவித்துத் தாழ்த்தப்பட்ட மக்களை பீதியூட்டி; அதையும் மீறி தேரோட்டத்தில் கலந்து கொள்ள முயன்ற தாழ்த்தப்பட்ட மக்களைச் சட்டவிரோதக் காவலில் அடைத்து; போலீசு பாதுகாப்போடு நாட்டார்களைத் தேரிழுக்க வைத்து, தீண்டாமையைக் காப்பாற்றியிருக்கிறது, பார்ப்பன ஜெயா அரசு. வழிபாட்டு உரிமைக்காகப் போராடிய தாழ்த்தப்பட்ட மக்களை, தலித் அமைப்புகளின் தலைவர்களை தீய சக்திகள் எனக் கூறி அவமானப்படுத்தியிருக்கிறார், சிவகங்கை மாவட்ட ஆட்சியாளர் ஆனந்த் பாட்டில்.

நியாயமாகப் பார்த்தால், போலீசு துறையைத் தன் கையில் வைத்திருக்கும் ஜெயா தொடங்கி, கண்டதேவியில் காவலுக்கு நின்ற போலீசுக்காரன் வரை அனைவரின் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இந்தச் சாதிவெறி பிடித்த அதிகார வர்க்கத்தின் மீது மிகச் சாதாரண நீதிமன்ற அவமதிப்பு வழக்குக் கூடத் தொடரப்படவில்லை. உயர்நீதி மன்றமும், போலீசும் ''நீ அடிக்கிற மாதிரி அடி; நான் அழுகிற மாதிரி அழுகிறேன்'' என்ற பாணியில் நடந்து கொண்டு தாழ்த்தப்பட்டவர்களின் முகத்தில் கரியைப் பூசிவிட்டன.

கடந்த ஆண்டு நடந்த கண்டதேவி கோவில் தேரோட்டத்தின் பொழுது, 10 தாழ்த்தப்பட்டவர்கள் தேரிழுப்பதில் கலந்து கொண்டார்களாம். இந்த ஆண்டு சென்னை உயர்நீதி மன்றம் அளித்த முற்போக்கான தீர்ப்புக்குப் பிறகு, தேரோட்டத்தில் 26 தாழ்த்தப்பட்டோர் கலந்து கொண்டார்களாம். இந்த 'முன்னேற்றத்தின்'படி பார்த்தால், கண்டதேவியைச் சுற்றிலும் வாழும் தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவரும் தேரோட்டத்தில் கலந்து கொள்ள இன்னும் எத்தனை முற்போக்கு தீர்ப்புக்களுக்காக நாம் காத்திருக்க வேண்டும்?

முற்போக்கான தீர்ப்புகள், அதை நடைமுறைப்படுத்தக் கூடிய நியாயமான அதிகாரிகள் என்ற அரசு இயந்திரத்தின் உறுப்புகள் மூலம் மட்டுமே தாழ்த்தப்பட்டோர் தங்களின் உரிமைகளைப் பெற்றுவிட முடியும் என்பதெல்லாம் மாயை என்பதைத்தான் கண்டதேவி தேரோட்டப் பிரச்சினை எடுத்துக் காட்டியிருக்கிறது. சட்டம், நீதிமன்றம், அதிகார வர்க்கம் என இவை அனைத்துமே தாழ்த்தப்பட்டவர்களை நம்ப வைத்துக் கழுத்தை அறுக்கும் பொழுது, அவர்கள் தங்களின் சமூக உரிமைகளுக்காக, சட்ட வரம்புகளை மீறி, தெருப் போராட்டத்தில் இறங்குவதைத் தவிர வேறு வழி கிடையாது என்பதுதான் கண்டதேவி தேரோட்டப் பிரச்சினையும், ஒவ்வொரு தீண்டாமைக் கொடுமையும் எடுத்துக் காட்டும் பாடம்!
மு ரஹீம்

3:48 PM, August 25, 2005  
Anonymous Anonymous said...

பயங்கரவாத மோடி
இந்திய நாட்டின் அவமானச் சின்னம்

""மதச் சுதந்திர உரிமைகளை நேரடியாகவோ / மறைமுகமாகவோ மீறும் எந்தவொரு அந்நிய நாட்டு அதிகாரிக்கும், விசாவினை (நுழைவுச் சீட்டு) மறுக்கலாம்'' என்ற அமெரிக்க சட்டத்தின்படி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு வழங்கியிருந்த வர்த்தக / சுற்றுலா விசாவினை அமெரிக்கா ரத்து செய்திருக்கிறது.


""மோடியின் அமெரிக்க பயணம் அரசுமுறை பயணம் அல்ல. அதனால் அவருக்கு அரசுமுறை விசாவும் வழங்க முடியாது' என மறுத்துவிட்டது, அமெரிக்க அரசு.


குஜராத்தில் கொத்துக் கொத்தாக முசுலீம்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருந்த பொழுது, விசுவ இந்து பரிசத்தின் குஜராத் மாநிலத் தலைவர் கேசவ்ராம் காசிராம் சாஸ்திரி, ""ஆம். நாங்கள் திட்டமிட்டுத்தான் கலவரம் நடத்தினோம்'' எனப் பகிரங்கமாகவே பேட்டி கொடுத்தார். இந்த இனப்படுகொலையின் தளபதி நரேந்திர மோடிதான் என்பதை கலவரத்துக்குப் பின் கோவாவில் நடந்த பா.ஜ.க.வின் உயர்மட்டக் கூட்டம் மறைமுகமாக ஒப்புக் கொண்டிருக்கிறது. இவை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நம் கண் முன் நடந்தவை.


இந்த சமீபத்திய வரலாற்று உண்மைகளை முசுலீம் பிணங்களோடு போட்டுப் புதைத்துவிட்டு, ""எந்த நிரூபணமும் இல்லாமல், அரசியல் கட்சிகளும், மத்திய அரசும், அதன் அமைச்சர்களும், பத்திரிகை உலகமும் நரேந்திர மோடிக்கு, குஜராத் கலவரங்களைப் பின் நின்று நடத்தி, அந்தக் கொலைகளுக்குக் காரணமானவர் என்ற முத்திரையைக் குத்தி விட்டன... அமெரிக்காவிற்கு இந்த முத்திரை பயன்பட்டது.... அமெரிக்க நடவடிக்கை கண்டிக்கத் தகுந்தது'' எனப் பொய்யைக் கக்கி, மோடிக்கு வக்காலத்து வாங்குகிறார், துக்ளக் ""சோ''.


ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. கும்பலோ இன்னும் ஒருபடி மேலே போய், மோடிக்கு விசா மறுக்கப்பட்டதை, ""இந்திய அரசியல் சாசனத்திற்கும், இந்திய மக்களுக்கும் நேர்ந்துவிட்ட அவமானமாகவும்; இந்திய நாட்டிற்கு ஏற்பட்ட இழுக்காகவும்'' ஊதிப் பெருக்குகிறது.


பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் இராணுவ மந்திரியாக இருந்த ஜார்ஜ் பெர்ணான்டசு, அமெரிக்க விமான நிலையம் ஒன்றில், ""சோதனை'' என்ற பெயரில் துகில் உரியப்பட்டார். ஒரு கிறித்தவ இந்திய அமைச்சருக்கு நேர்ந்த அவமானத்தை, இந்திய அரசியல் சாசனத்திற்கு நேர்ந்த அவமானமாக பா.ஜ.க. அரசு கருதவில்லை. மாறாக, ""அது அமெரிக்காவின் சட்டம்'' என்று சொல்லி, அவமானத்தைச் சகித்துக் கொண்டார்கள்.
உலக வர்த்தக மையக் கட்டிடங்கள் தகர்க்கப்பட்ட பின், இந்தியா உள்ளிட்ட சில ஏழை ஆசிய கண்டத்து நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்குச் செல்லும் அனைவரும், தங்களின் கைரேகைகளை அமெரிக்க அதிகாரிகளிடம் பதிவு செய்ய வேண்டும் என்ற சட்டத்தை அமெரிக்கா கொண்டு வந்தது. இரவு நேரத்தில் சந்தேகத்தில் பிடித்துக் கொள்ளும் நபர்களின் கைரேகைகளை போலீசார் பதிவு செய்து கொள்கிறார்களே, அதற்கும் அமெரிக்காவின் சட்டத்திற்கும் பெரிய வேறுபாடு எதுவும் கிடையாது.


இந்திய நாட்டு மக்கள் ஒவ்வொருவரையும் தீவிரவாதியாகச் சந்தேகிக்கும் இந்தச் சட்டத்தை பா.ஜ.க., அவமானமாகப் பார்க்கவில்லை. ஆனால், இந்துமத பயங்கரவாதி மோடிக்கு விசா மறுக்கப்பட்டதை அரசியல் சாசனத்தின் அவமானமாக ஒப்பிடுகிறது. அப்படியென்றால், மோடி என்ற கேடியைக் காப்பாற்றுவதுதான் அரசியல் சாசனத்தின் வேலையா?
இந்தக் கேள்விக்கு பா.ஜ.க. மட்டுமல்ல, "மதச்சார்பற்ற, காங்கிரசும் கூட ""ஆம்'' என்று தான் பதில் அளிக்கிறது. ""மோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; குஜராத் மாநிலத்தின் முதல் மந்திரி; குஜராத் கலவரங்களுக்காக அவர் எந்தவொரு இந்திய நீதிமன்றத்தாலும் தண்டிக்கப்படவில்லை; எனவே, அவருக்கு விசா மறுக்கப்பட்டதை அமெரிக்கா மறுபரிசீலனை செய்ய வேண்டும்'' என இந்திய அரசின் சார்பாகவே அமெரிக்காவிடம் வேண்டுகிறார்கள்.
2,000 முசுலீம்களைக் கொன்ற மோடி, சட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் என்பது இந்திய அரசியல் சாசனத்தின் ஓட்டாண்டித்தனத்தைத் தான் காட்டுகிறது.


""இந்து என்பது மதமல்ல; அது ஒரு வாழ்க்கை முறை'' என உச்சநீதி மன்றம் ஒரு தீர்ப்பில் சொல்லியிருக்கிறது. இதைத்தான் பா.ஜ.க., இந்துத்துவா என்கிறது.


ராமர் கோவில் கட்டுவதற்காகச் செதுக்கப்பட்ட தூண்களை பாபர் மசூதி வளாகத்தில் வைத்துப் பூசை செய்ய வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். ஆர்ப்பாட்டம் செய்தபொழுது, உச்சநீதி மன்றம் அப்பூசையைத் தடை செய்யவில்லை. மாறாக, வளாகத்திற்கு வெளியே பூசை நடத்திக் கொள்ளுங்கள் என்ற சந்தை ஏற்படுத்திக் கொடுத்தது. இப்படி பலவிதங்களில் ஆர்.எஸ்.எஸ்.க்கு அனுசரணையாக நடந்து கொள்ளும் நீதிமன்றங்கள் மோடியைத் தண்டிக்க வேண்டும் என்றால், சூரியன் மேற்கேதான் உதிக்க வேண்டும். மோடி தண்டிக்கப்படாமல் இருப்பதுதான் அவமானமேயொழிய, அவருக்கு அமெரிக்கா விசா மறுக்கப்பட்டிருப்பது அவமானத்திற்குரியதல்ல!
···


""சவூதி அரேபியா, ஈரானில் எல்லாம் மதவெறி ஆட்சி நடக்கிறது. பாகிஸ்தான், வங்காள தேசத்தில் சிறுபான்மை இந்துக்கள் கொல்லப்படுகிறார்கள். அந்நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்களுக்கு விசாவை மறுக்காத அமெரிக்கா, மோடிக்கு மட்டும் மறுத்திருக்கிறது'' என அமெரிக்காவின் இரட்டை வேடத்தை பா.ஜ.க. அம்பலப்படுத்துகிறது.
அமெரிக்காவின் இந்த இரட்டைவேடத்தினால் பா.ஜ.க.வும்தான் பலன் அடைந்திருக்கிறது. கொசாவாவில் முசுலீம்கள் படுகொலை செய்யப்பட்டதைச் சாக்காக வைத்து, யுகோஸ்லாவியா நாட்டின் மீது அமெரிக்கா போரே தொடுத்தது. அதே அமெரிக்கா, குஜராத்தில் முசுலீம்கள் படுகொலை செய்யப்பட்ட பொழுது, அதைக் கண்டித்து ஒரு அறிக்கைகூட விடவில்லை. இதற்குக் காரணம், குஜராத் கலவரம் நடந்தபொழுது ஆட்சியில் இருந்த வாஜ்பாயி அரசுக்கும், ஜார்ஜ் புஷ்ஷûக்கும் இடையே இருந்த நெருக்கம்தான்.


அமெரிக்காவில் உண்டியலைக் குலுக்கி வசூலிக்கப்பட்ட டாலர்கள், குஜராத் கலவரத்திற்குப் பயன்படுத்தப்பட்டன என்பதை பல்வேறு அமைப்புகள் அம்பலப்படுத்தியுள்ளன. ஆனாலும், விசுவ இந்து பரிசத் அமெரிக்காவில் உண்டியல் குலுக்குவதை இன்று வரை புஷ் தடை செய்யவில்லை.
"சுதந்திரத்துக்கு' முன்னும் பின்னும் ஆர்.எஸ்.எஸ். கும்பல் நூற்றுக்கணக்கான மதவெறிக் கலவரங்களை நடத்தியிருக்கிறது. மதச் சுதந்திரத்துக்கே வேட்டு வைக்கும் மதமாற்றத் தடைச் சட்டம் இந்தியா முழுவதும் கொண்டு வரப்பட வேண்டும் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ்.இன் கொள்கை. இதன்படி பார்த்தால் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களைச் சேர்ந்த அனைவருக்குமே ""விசா'' மறுக்கப்பட வேண்டும். ஆனால், அமெரிக்காவோ மோடிக்கு மட்டும் விசாவை மறுத்துவிட்டு, எங்களுக்கும், பா.ஜ.க.விற்கும் இடையே நல்ல உறவு இருப்பதாக அறிக்கை விடுகிறது.
இந்தியாவின் அத்வானி, இசுரேலின் ஏரியல் ஷரோன் போன்ற மதவெறி பிடித்த அரசியல் தலைவர்களுக்குக் கூட ""விசா'' வழங்கி வரும் அமெரிக்கா, கம்யூனிஸ்டுகள், இடது சாரி முற்போக்கு சிந்தனை கொண்டவர்களுக்கு ""விசா'' வழங்க மறுப்பதை அரசியல் தந்திரமாகவே கடைப்பிடித்து வருகிறது. அமெரிக்காவின் இந்த இரட்டை வேடத்தைப் பற்றி பா.ஜ.க. என்றைக்காவது வாயைத் திறந்ததுண்டா?
அமெரிக்காவின் நலன்களுக்கு அனுசரணையாக நடந்து கொள்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மதச் சர்வாதிகாரியாக இருந்தாலும் அவர்களுக்கு விசா வழங்க எந்தத் தடையும் இல்லை என அமெரிக்க சட்டமே கூறுகிறது. அதனால்தான், அத்வானி, வாஜ்பாயி வகையறாக்களின் விசா ரத்து செய்யப்படவில்லை. மோடியின் விசா ரத்து செய்யப்பட்டிருப்பது ஒரு விதி விலக்கு. நமது நாட்டு நீதிமன்றங்கள் மனித உரிமைகளை மீறிய போலீசு அதிகாரிகளை அதிசயமாகத் தண்டிப்பது போல!
···


ஈராக் ஆக்கிரமிப்பு, அபு கிரைப் சிறைச்சாலை சித்திரவதைகள் இவற்றைக் காட்டி, மனித உரிமை பற்றிப் பேச அமெரிக்காவுக்குத் தகுதியில்லை என வாதாடுகிறது ஆர்.எஸ்.எஸ். கும்பல். ஈயத்தைப் பார்த்து பித்தளை இளித்த கதைதான் இது.


இந்திய மக்களின் சட்டபூர்வ மனித உரிமைகள் அனைத்தையும் பறிப்பதற்காகவே ""பொடா'' என்ற கருப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தவர்கள் பா.ஜ. கட்சியினர். மனித உரிமைப் போராளிகள் இச்சட்டத்தை எதிர்த்த பொழுது, அமெரிக்காவிலும் இது போன்ற சட்டம் பேட்ரியாட் சட்டம் கொண்டு வந்திருப்பதாகக் கூறி நியாயப்படுத்தினார்கள்.
இது மட்டுமின்றி, ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுக்கத் திட்டம் போட்ட பொழுது, தீவிரவாதத்துக்கு எதிரான போரில் தன்னை இளைய பங்காளியாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என பா.ஜ.க. கூட்டணி ஆட்சி மன்றாடியது.


அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமித்த பின், அமெரிக்காவின் தயவில் இந்தியத் தரகு முதலாளிகளுக்கு வியாபார ஒப்பந்தம் வாங்கித் தருவதற்காக, ""அமெரிக்காவுக்கு உதவ ஈராக்கிற்கு இந்தியப் படைகளை அனுப்புவதாக'' புஷ்ஷிடம் வாக்குறுதி கொடுத்தார், அத்வானி. உள்நாட்டு எதிர்ப்பின் காரணமாக படைகளை அனுப்ப முடியாமல் போனதால், முன்னாள் இராணுவ வீரர்களைக் கூலிப் படைகளாக ஏற்றுமதி செய்ய பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அனுமதித்தது.


இப்படி அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்கு அடியாளாக வேலை செய்ய விருப்பம் கொண்ட இந்து மதவெறிக் கும்பல், ""மனித உரிமைகளை மீறிய அமெரிக்க அதிகாரிகளுக்கு இந்தியா விசாவை மறுத்தால் என்னவாகும்?'' எனச் சவால் விடுகிறது.


ஒருவேளை அப்படி நடந்து விடுகிறது எனக் கற்பனை செய்து கொள்வோம். பிறகு, அந்நிய நிதி மூலதனத்தையும், தொழில்நுட்பத்தையும் பெறுவதற்கு இந்தியா எந்த நாட்டிடம் கையேந்தி நிற்க முடியும்?
1994இல் நடந்த மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலின் பொழுது, அமெரிக்க என்ரான் நிறுவனத்தை அரபிக் கடலில் தூக்கியெறிவோம் எனச் சவடால் அடித்தது, பா.ஜ.க. ஆனால், அந்தத் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்தபின், என்ரானின் இரண்டாவது மின்திட்டத்திற்கும் சேர்த்தே அனுமதி கொடுத்தது.


வாஜ்பாயின் ஆட்சியில் அணுகுண்டு வெடித்த பொழுது, அமெரிக்கா இந்தியா மீது அணு ஆராய்ச்சி சம்மந்தமான பொருளாதாரத் தடைகளை விதித்தது. அந்நியப் பொருட்கள் இறக்குமதிக்கு இந்தியாவில் உள்ள தடைகளை நீக்கி விடுகிறோம் என அமெரிக்காவோடு பேரம் நடத்திதான், பொருளாதாரத் தடையை நீக்கச் செய்தது, வாஜ்பாயி அரசு. இதுதான் பா.ஜ.க.வின் கடந்தகால அமெரிக்க எதிர்ப்பு வீர வரலாறு!
மோடிக்கு விசா வழங்கப்பட்டதை எதிர்த்து அகமதாபாத் நகரில் நடந்த பேரணியில், ""நமது நாட்டின் சட்டம் இப்படி இருக்க வேண்டும்; நமது நாட்டின் பாடநூல்கள் இப்படி இருக்க வேண்டும் என அமெரிக்கா கட்டளையிடுவதா?'' என்று கொதிப்போடு பேசினாராம் மோடி. பா.ஜ.க., இந்தப் பேரணிக்கு ""சுயமரியாதை பேரணி'' எனப் பெயரிட்டிருந்தது.
அமெரிக்கா உத்திரவு போட்டு காப்புரிமைச் சட்டம் திருத்தப்பட்ட பொழுது; அமெரிக்கா உத்திரவு போட்டு தொழிலாளர் நலச் சட்டங்கள் திருத்தப்பட்டபொழுது பா.ஜ.க.வின் சுயமரியாதை எங்கே ஒளிந்து கொண்டிருந்தது?


""குஜராத்தில் நடந்த கலவரம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். அதில் தலையிட்டுத் தீர்ப்புச் சொல்ல அமெரிக்காவிற்கு அதிகாரம் கிடையாது'' என பா.ஜ.க.வோடு சேர்ந்து கொண்டு காங்கிரசும் தர்க்க நியாயம் பேசுகிறது.
இந்திரா காந்தியின் அவசரநிலை காட்டாட்சியை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா தலையிட்டதை, ஆர்.எஸ்.எஸ். கும்பல் வரவேற்றிருக்கிறது. கார்கில் போரை முடிவுக்குக் கொண்டுவர, கிளிண்டனோடு இரகசியப் பேச்சு வார்த்தை நடத்தினா

ர், வாஜ்பாயி. இவையெல்லாம் சர்வதேசப் பிரச்சினைகளா?
இந்த உள்நாட்டு அளவுகோலை ஈராக் நாட்டிற்கும், ஆப்கானிஸ்தானுக்கும் பிரயோகித்தால், அமெரிக்கப் படைகளை அந்நாடுகளில் இருந்து வெளியேறச் சொல்ல வேண்டும். அந்த நாணயம் காங்கிரசு, பா.ஜ.க. விடம் உண்டா?


அமெரிக்கா சதாமை சர்வாதிகாரி எனக் குற்றம் சாட்டியபொழுது, ""அதை ஈராக் மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்; அதில் அமெரிக்கா தலையிடக் கூடாது'' என மோடியோ, அத்வானியோ எதிர்த்துப் பேசியதுண்டா? மாறாக, ""சதாமை நீங்கள் தண்டிக்க விரும்பினால், ஐ.நா.வின் ஒப்புதலோடு தண்டியுங்கள்'' என்றுதான் அமெரிக்காவிடம் மன்றாடினார்கள்.


இன்றுள்ள உலகச் சூழலில், சில பிரச்சினைகளை உள்நாட்டு பிரச்சினைகள் என ஒதுக்கி விட முடியாது. தென்னப்பிரிக்காவில் நடந்த வெள்ளை இனவெறி அரசு கருப்பின மக்களுக்கு எதிராக நிறவெறிக் கொள்கையைக் கடைப்பிடித்த பொழுது, அந்நாட்டை உலக நாடுகள் கண்டித்ததோடு, அந்நாட்டோடு வர்த்தக அரசியல் உறவுகள் வைத்துக் கொள்ளாமல் புறக்கணித்தன. பாலஸ்தீன மக்களுக்குச் சொந்தமான பூமியை முழுமையாக ஆக்கிரமித்துக் கொள்ளும் நோக்கத்தோடு இசுரேல் கட்டிவரும் சுவரை, இடித்துத் தள்ள வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது. போஸ்னியாவிலும், கொசாவாவிலும் முசுலீம்களை இனப்படுகொலை செய்த யுகோஸ்லாவியாவின் முன்னாள் அதிபர், அந்தக் குற்றங்களுக்காக சர்வதேச நீதிமன்றத்தால் விசாரிக்கப்படுகிறார்.
குஜராத்தில் நடந்த இனப்படுகொலை கூட, சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டிய அளவிற்குக் கொடூரமானவைதான். இந்த இனப்படுகொலையின் தளபதியான மோடியை இந்தியச் சட்டங்கள் தண்டிக்க மறுக்கும் பொழுது, அவனைத் தண்டிக்கக் கோரும் உரிமையை அமெரிக்க அரசிற்கு (அதனின் இரட்டை வேடம் காரணமாக) வேண்டுமானால் மறுக்கலாம். ஆனால், உலக மக்கள் அப்படிக் கோருவதைத் தடுக்கும் உரிமை யாருக்கும் கிடையாது. இன்று, போர் குற்றவாளி ஜார்ஜ் புஷ்ஷைத் தண்டிக்கக் கோரி போராடும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள், நாளை, மோடியையும் தண்டிக்கக் கோரி போராடினால், அதை நாம் இருகரம் கூப்பி வரவேற்கத்தான் வேண்டும்.


· முத்து

4:24 PM, August 25, 2005  
Anonymous Anonymous said...

is there any relationship between what is written in the article and some of the comments that have come? why some people only want to harp about Gujarat at the drop of a hat and sweep under the carpet other issues like kashmiri pandits, and north eastern violence?

i think they all have conveniently forgotten that some kashmiri terrorist groups have warned against the return of pandits back to kashmir. all the pseudo secularists here don't want to talk about it only becasue they are hindus. do these pseudo secularists and so called communists have the guts to accept the violence perpetuated by other communities? all they can do is cut and paste job of articles from other commie jurnals and harp on it.

raj

6:42 PM, September 01, 2005  

Post a Comment

<< Home