Monday, April 16, 2007

தமிழ்மணம் பாசிச பாதையில் அடியெடுத்து வைக்கிறது

தமிழ்மண ஐயன்மீர்,
நீர் என்னை நீக்க வேண்டுமென்றால் கெடு வைக்கவோ தனிமடல் அனுப்பவோ தேவையில்லை. தமிழ்மணத்தில் அறிவிப்பு அளித்து நீக்கிடலாம். நன்றி. இனி எனது கேள்விகள் அல்லது நேசகுமார் விசயத்தில் தமிழ்மணம் தரம் தாழ்ந்து பாசிச வெறியுடன் நடந்து கொண்டது குறித்து;


//தமிழ்மணத்தின் புதிய நிர்வாகிகள், அவரது ஐபி தகவல்களை வெளியிட்டு அவரை மாட்டிவிட்டுவிட்டார்கள் என்று எனக்கு ஒரு மடலும் வந்தது.//
இதில் உங்களை அவர் எங்கே குற்றம் சாட்டியிருக்கிறார். தனக்கு ஒரு மெயில் வந்ததை தெரிவித்திருக்கிறார். அவ்வளவுதான். வந்த மெயில் நம்பகமானது என்று அவர் சொல்லியிருந்தாலோ தன்னிடம் அதற்கு ஆதாரம் உண்டு என சொல்லியிருந்தாலோ நீங்கள் அவரை ஆதாரம் கேட்பதில் பொருளுண்டு. ஆனால் அவர் அப்படி சொல்லாத பட்சத்தில் ஆதாரத்தை தா என்றால் என்ன பொருள்? எதற்கான ஆதாரம்? அவருக்கு மெயில் வந்ததற்கான ஆதாரமா? இதென்ன பித்துகுளித்தனம்...ஆனால் இது ஒன்றும் அதிசயமில்லைதான். தமிழ்மணம் அடைந்திருக்கும் தொட்டால் சுருங்கித்தனத்தின் அல்லது தீண்டாமையின் முன்னேற்றம் இது. தமிழ்மணம் இதே பாதையில் போனால் அது விரைவில் ஒரு பக்க பதிவர்களை மட்டுமே வைத்து கும்மியடிக்கும் பாசிச திரட்டியாகவே மாறிடும் என அன்புடன் தமிழ்மண நிர்வாகிகளுக்கு கூறிட விரும்புகிறேன். தமிழ்மணத்துக்கு எதிராக திட்டமிட்டு சதி நடக்கிறதாம். திட்டமிட்டு தூசணைகள் பரப்பப்படுகின்றனவாம்...ஹூம் தமிழ்மண நிர்வாகிகளுக்கு இந்த அளவில் நேசகுமாரின் ஒரு பதிவினால் பிரச்சனை வருமானால் அதற்கான தீர்வு நேசகுமாரை நீக்குவதல்ல மாறாக பரானாய்ட் மனநிலைக்கான சிகிச்சைதான்.


//தமிழ்மணத்தினை, டிஎம்ஐ நிறுவனத்தினை அமைத்து அதன்கீழே தன்னாவர்த்துடன் இலாபநோக்கு எதுவுமின்றி நடந்தும் அங்கத்தவர்களுக்கும் //
அருமையான வரிகள். ஆனால் தமிழ்மணத்திலிருந்து வெளியாகும் பூங்கா எனும் ஒட்டுண்ணி இதழ் மூலம் ஒரு கருத்தியலை முன்னிறுத்தி (மாற்று கருத்துகளுக்கு இடமளிக்காமல்) பிரச்சாரம் நடத்துவதனை 'இலாப நோக்கு' (not in monetary terms) என்றே கருத வேண்டியுள்ளது. மேலும் இலாபநோக்கு இன்றி என்றால் 'தமிழ்மணத்தில் விளம்பரம் செய்யுங்கள்' என ஏன் ஒரு முத்து ஒளிருகிறது? இன்றைக்கு இலாபம் இல்லாத நிலையில் நடந்துகொண்டிருக்கும் தமிழ்மணம் இலாப நோக்கே வர்த்தக நோக்கே அற்றது என கூறிட முடியாது. எனவே இத்தகைய கழிவிரக்கம் எழுப்பும் சுயபிரஸ்தாபங்கள் தேவையற்றவை.
//எமது குடும்பம், தொழில் சார்ந்த அன்றாட வாழ்க்கை அழுத்தங்களுக்கிடையேயும் பரந்துபட்ட வலைப்பதிவுத்தமிழ்ச் சமூகத்தின் மீதுள்ள அக்கறையை முதன்மைக்குறிக்கோளாகக் கொண்டு அன்றாடம் எம் பொருள், நேரம், ஆற்றலைச் செலவிட்டு, இச்சேவையினை வழங்கி வருகிறோம் என்பதைப் பெரும்பாலான பதிவர்கள் புரிந்திருப்பார்கள் என உளப்பூர்வமாக நம்புகிறோம்.//
ஐயா வலைப்பதிவர்களுக்கும் குடும்பம் தொழில் எல்லாம் இருக்கத்தான் செய்கிறது. அவர்கள் நேரம் செலவிட்டு வலைப்பதிவுகள் நடத்தவில்லை எனில் நீங்களும் இல்லை. இது ஒரு symbiotic உறவு. எனவே மேற்படி 'குடும்பம் தொழில்' செண்டிமெண்டல்-தனங்கள் மறைமுகமாக 'எனவே எனக்கு நன்றியுடன் இருங்கள்' என்கிற பாடல் சிறிது சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது.


சரி அதையெல்லாம் விடுங்கள். அது உங்கள் சொந்த கதை. ஆனால் தங்கள் கெடு-cum-விளக்கத்தில் கூறியுள்ள ஒரு வரி பிரச்சனையாக உள்ளது. "எமது செயற்பாடுகள் குறித்து தார்மீகக்காரணங்களுக்காக நாமே விரும்பினால்மட்டுமே தகவல்களைத் தாமாகவே எமது விதிமுறைகளுக்கமைய வந்திணைந்து கொள்ளும் பதிவர்களுக்குத் தரமுடியும்." தார்மீகக்காரணம் என தமிழ்மணம் எதைக்குறிப்பிடுகிறது? தார்மீகக்காரணத்துக்காக தமிழ்மண நிர்வாகிகள் விரும்பினால் உங்கள் விதிமுறைக்கொப்ப இணையும் பதிவர்களுக்கு எந்த தகவல்களை தருவீர்கள்? "அவை முறையான விண்ணப்பமூடே சட்டம் கொணரக் கேட்டாலன்றி, எந்நிலையிலுங்கூட, எவருடனும் பகிர்ந்துகொள்ளப்படுவதில்லை" என்கிற வரிக்கும் 'தார்மீகக்காரணங்களுக்காக நாமே விரும்பினால்' தகவல்களை அளிப்பேன் என்பதற்கும் வேறுபாடு இருக்கிறதல்லவா? இந்த தார்மீகக்காரணங்களுக்காக நீங்களே விரும்பி அளிக்கும் தகவல்களில் ஐ.பி அட்ரஸ் இத்யாதி அடங்குமா? நிற்க நீங்கள் ஐ.பி தகவல்களை கொடுத்திருக்க மாட்டீர்கள் என நான் உறுதியாக நம்புகிறேன். உங்கள் 'தார்மீகக் காரணங்களுக்கும்' 'நாமே விரும்பும்' விரும்பங்களுக்கும் அப்பால் அந்த அளவுக்கான நேர்மை எஞ்சியுள்ளது என்றே நினைக்கிறேன்.
தமிழ்மணம் Tor சேவை பெறும் பதிவர்களை தன்னில் இணைத்துக்கொள்வதில்லையாமே, கேள்விப்பட்டேன். உண்மையா எனில் அது ஏன்? பதிவர்களின் ஐபி அந்த அளவு தமிழ்மணத்துக்கு அவசியப்படுகிறதா? இது குறித்து தமிழ்மணம் ஒரு விளக்கத்தை அளிக்கும் என எதிர்பார்க்கலாமா அல்லது ஆட்டோ வில் அடியாள் கும்பலை அனுப்பி வீட்டை காலிபண்ண மிரட்டுவதை பாலிஷாக செய்து 24 மணிநேர பத்வா போட்டு பதிலளிக்குமா தமிழ்மண நிர்வாகிகளின் 'தார்மீக' உச்ச வரம்பு?
இதோ எனக்கு வந்த மடலினையும் இங்கு அளிக்கிறேன்:
TOR is an add on to the firefox browser. By enabling TOR, you can hide your IP address. The IP packets will travel through different computers around the world and will reveal someone else's IP. Thamizmanam has barred those using this service from utilising its services(for example adding a blog to thamizmanam). This has been done with a view to trace the actual IPs of thamizmanam users.


இத்தருணத்தில் தமிழ்மணம் நேசகுமாரை நீக்கியிருக்குமென்றால் அது தமிழ்மணம் பாசிசம் நோக்கிய தன் முதல் அடியை எடுத்து வைத்துள்ளது என்பது தெளிவு. விரைவில் கறுப்புசட்டையுடன் முஸோலினியாக ஈவெரா வீற்றிருக்க நடக்கும் திராவிட இனவெறி பாசிச அரசியல். விரைவில் அந்த நிலைப்பாட்டை எதிர்க்கும் வலைப்பதிவாளர்கள் நான் உட்பட வெளியே தள்ளப்படும் நாளை ஆவலுடன் வரவேற்கிறேன். அவ்விதத்தில் தமிழ்மணம் குறித்த என் கணிப்பு சரியாயிற்று என்பதில் ஆனந்தமே.

54 Comments:

Blogger கரு.மூர்த்தி said...

நேசகுமார் முதலில் ,

அடுத்து

நீலகண்டன்

ஜடாயு

......
.......
......

கடிச்சியில் எல்லோரும் நல்லவ்ரே டோண்டு .

காத்திருங்கள் , உங்களுக்கு 24 மணிநேரமோ அறிவிப்போ எதுவும் வராது, இவர்களின் நேர்மையை நீங்கள் அறிவீர்கள் அல்லவா ?

2:25 AM, April 16, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

//காத்திருங்கள் , உங்களுக்கு 24 மணிநேரமோ அறிவிப்போ எதுவும் வராது, இவர்களின் நேர்மையை நீங்கள் அறிவீர்கள் அல்லவா ?//
பக்கத்தில் நடக்கும் அல்லேலுயா கும்பல் கூட்டத்தில் பிளிறிக்கொண்டிருக்கிறது லவுட் ஸ்பீக்கர் 'ஆனந்தமே பரமானந்தமே இது மாபெரும் பாக்கியமே' தமிழ்மணம் என்னை நீக்கியதென்றால் சிச்சுவேஷன் song என்பேன். :)

2:30 AM, April 16, 2007  
Anonymous Anonymous said...

கரு.மூர்த்தி அருமையாக சொல்லி இருக்கிறார்...

அந்த லிஸ்ட் படி தமிழ்மணம் செய்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்...

அரவிந்தன் நீலகண்டனின் பதிவுகளை நான் கூகுள் ரீடரில் வைத்து படித்துக்கொள்கிறேன்...அதே போல் மற்றவர்களுடையதையும்...

ஆனால் கசடாக எழுதும் இந்த லிஸ்ட் மட்டும் போய்விட்டதென்றால் தமிழ்மணம் உண்மையில் மிகவும் நன்றாக இருக்கும்...ஜாதி மத சண்டைகளில் 50% குறைந்துபோகும்...என்ன செய்ய விதி யார உட்டுது ?

2:34 AM, April 16, 2007  
Anonymous Anonymous said...

This comment has been removed by the author.

2:36 AM, April 16, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

//ஆனால் கசடாக எழுதும் இந்த லிஸ்ட் மட்டும் போய்விட்டதென்றால் தமிழ்மணம் உண்மையில் மிகவும் நன்றாக இருக்கும்...//
ஆமாம் நீங்களும் உங்கள் கும்பலும் இந்து சமுதாயத்தையும் இந்து தருமத்தையும் குறித்து என்ன பொய்யையும் சொல்லி ஜல்லியடிக்கலாம். வெளிப்படுத்தப்பட்டு ஜகா வாங்கவும் உடைந்த மூக்கை தடவிக்கொள்ளவும் வேண்டிய நிலை வராதுதான்.

2:39 AM, April 16, 2007  
Blogger ஜோ/Joe said...

அரவிந்தன்,
எப்போ பார்த்தாலும் இந்து தர்மம் ,அல்லேலுயா தானா?

நாஞ்சில் வலைப்பதிவர் சந்திப்பு பற்றி உங்கள் கோணத்தில் ஒரு பதிவு போடக்கூடாதா?

2:42 AM, April 16, 2007  
Anonymous Anonymous said...

//தமிழ்மணத்தின் புதிய நிர்வாகிகள், அவரது ஐபி தகவல்களை வெளியிட்டு அவரை மாட்டிவிட்டுவிட்டார்கள் என்று எனக்கு ஒரு மடலும் வந்தது.//

இது ரொம்ப ஈஸி. நீங்களே ஒரு போலி முகவரி ஏற்படுத்தி உங்களுக்கே அனுப்பிக் கொள்ளவும் :)
அடுத்து தமிழ்மணத்தின் மீது சேறு வீச பயன்படுத்திக்கொள்ளவும்.
தைரியமிருந்தால் யார் அனுப்பினார்கள் என்று எழுத வேண்டியதுதானே (யார் அனுப்பியது, மடலின் தேதி/நேரத்தோடு)?


//இதில் உங்களை அவர் எங்கே குற்றம் சாட்டியிருக்கிறார்.//


இதற்கு பேர் தான் "மாமோய், எஸ்கேப்பு".
ஐபி/தமிழ்மண கருத்தில் அந்த "மடலின்" கருத்தோடு ஒத்துப்போவதால் தானே அதனை அங்கு குறிப்பிடுகிறார்?

ஆதாரமில்லாமல் குற்றம் சுமத்த வேண்டுமென்றேதான் "யாரோ அனுப்பிய மின் மடல்" என்று ஜாகா வாங்குகிறார்.
படிப்பவர்கள் ஒன்றும் சிறு குழந்தையல்ல.

2:42 AM, April 16, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

அவர் அந்த மடலின் கருத்தோடு அந்த நேரத்தில் ஒத்து போகவில்லை என்றே நினைக்கிறேன் ஆனால் இப்போது தெரியவில்லை. ஒத்து போகலாம். ஆனால் ஒரு தரப்பினரிடம் இப்படி ஒரு ஐயம் எழுந்ததன் வெளிப்பாடுதான் அந்த மடல் குறித்து நேசகுமார் எழுதியது. அவருக்கு அந்த மடல் வரவில்லையென்றே ஒரு வாதத்துக்கு வைத்துக்கொள்வோம் (நான் நேசகுமாரை நம்புகிறேன்) அவர் தமிழ்மணத்தின் மீது நேரடியாக குற்றம் சொல்ல விரும்பாமலே அப்படி கூறுகிறார் என கொள்ளவேண்டியதுதான். என்றால் இப்படி மறைமுகமாக கூட ஒரு ஐயத்தை கூட தமிழ்மணத்தின் மீது கிளப்பக்கூடாது அப்படி கிளப்பினால் நாங்கள் அவர்களை நீக்குவோம்.. என்று சொல்லுகிற தமிழ்மணத்தின் மனநிலை பாசிசத்தின் பாதையில் நடைபோட ஆரம்பித்திருப்பதன் தெளிவான வெளிப்பாடுதான்.

2:53 AM, April 16, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

//எப்போ பார்த்தாலும் இந்து தர்மம் ,அல்லேலுயா தானா?

நாஞ்சில் வலைப்பதிவர் சந்திப்பு பற்றி உங்கள் கோணத்தில் ஒரு பதிவு போடக்கூடாதா? //
அதுதான் சரோ அக்குவேறு ஆணிவேறா பிட்டு வச்சுட்டாரே. இனி நான் என்ன எழுதினாலும் அதுக்கு முன்னாடி ஊசிப்போன மசால்வடையாத்தான் இருக்கும்.

2:54 AM, April 16, 2007  
Anonymous Anonymous said...

அரவிந்தன்,



இது குறித்து நிறைய பேசலாம். ஆனால், ஐபி திருட்டு என்பது இன்று மிகப்பெரிய வலைத்தளங்களாலேயே செய்யப்படுவதுதான். பல பிரபல நிறுவனங்கள் நமது ஆன்லைன் பிஹேவியரை ட்ராக் செய்கின்றன.

நான் கேட்டது, கொஞ்சம் விவரங்கள் தெரிந்த எவருக்கும் சாதாரணமாக எழக்கூடிய கேள்வி.

இந்த அளவுக்கு முதிர்ச்சியற்ற இவர்கள் குறித்த ஐயப்பாட்டை நான் பொதுவில் வைத்தேன். அதுவும் 'தமிழ்மணத்திலிருந்துதான் உனது ஐபியைப் பெற்றோம்' என்று பாலபாரதி குழு வெளிப்படையாக ஜயராமனை மிரட்டியது என்று பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில்தான் இந்தக் கேள்வியை முன்வைத்தேன்.


தெளிவாக நிலையை விளக்குவதற்கு இதை ஒரு சந்தர்ப்பமாக அவர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கலாம் அல்லது உதாசீனப்படுத்தியிருக்கலாம் அல்லது நான் அவதூறாக பேசுவதாக நினைத்தால் எனது பதிவை திரட்டுவதை நிறுத்தியிருக்கலாம். ஆனால், தங்களின் அதிகாரத்தை எல்லோருக்கும் காட்ட இது போன்று நடந்து கொண்டிருக்கிறார்கள்.


எது நடந்தாலும் அது நல்லதற்கே.

3:05 AM, April 16, 2007  
Blogger கரு.மூர்த்தி said...

//செந்தழல் ரவி said...


ஆனால் கசடாக எழுதும் இந்த லிஸ்ட் மட்டும் போய்விட்டதென்றால் தமிழ்மணம் உண்மையில் மிகவும் நன்றாக இருக்கும்...ஜாதி மத சண்டைகளில் 50% குறைந்துபோகும்...என்ன செய்ய விதி யார உட்டுது ? //

அப்புறம் விடாது கருப்புமட்டும் உங்கள் பதிவில் வேறுவேறு பெயரில் குச்சிக்காரி என்று எழுதுவான் , நீங்களும் அதை 10 நாட்கள் வைத்து மகிழலாம் , போங்க போங்க , போய் நீங்களும் அந்த மொழி பழகுங்க .

3:09 AM, April 16, 2007  
Blogger லக்கிலுக் said...

//இதில் உங்களை அவர் எங்கே குற்றம் சாட்டியிருக்கிறார். தனக்கு ஒரு மெயில் வந்ததை தெரிவித்திருக்கிறார். //

அநி!

நீங்கள் மதவெறியர், அடிப்படைவாதி என்று உள்ளத்துள் நினைத்திருந்தாலும் இதுநாள் வரை லாஜிக் பார்த்து எழுதுவீர்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அந்த நினைப்பை தகர்த்து விட்டீர்கள்!

நீங்கள் தான் சல்மா அயூப் என்பதாக எனக்கு மெயில் வந்திருந்தது என்று வைத்துக் கொள்வோம். இல்லையேல் யாராவது நண்பரிடம் சொல்லியும் அதுபோல மெயிலை வரவழைத்துக் கொள்ளலாம். அதை நான் தனி பதிவாக போட்டிருந்தால் உங்கள் மீது எந்தமாதிரியான ஒரு இமேஜ் வந்திருக்கும் என்பதை உணரமுடியாதா?

நேசக்குமார் அனானி யாரோ மெயில் போட்டாராம். அதை இவர் பதிவாக போட்டாராம். ஆனாலும் நேசகுமார் அந்த மெயிலை நம்பினேன் என்றோ, நம்பவில்லை என்றோ சொல்லவில்லையாம்.

என்னங்க இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியலை?

3:15 AM, April 16, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

This comment has been removed by the author.

3:31 AM, April 16, 2007  
Anonymous Anonymous said...

//இப்படி மறைமுகமாக கூட ஒரு ஐயத்தை கூட தமிழ்மணத்தின் மீது கிளப்பக்கூடாது அப்படி கிளப்பினால் நாங்கள் அவர்களை நீக்குவோம்.. என்று சொல்லுகிற //

அது என்ன மறைமுக குற்றசாட்டு?
ஒன்று, ஆதாரத்தோடு குற்றம் சுமத்த வேண்டும் அல்லது இப்படி செய்கிறார்கள் என்று சொல்ல வேண்டும். நேசகுமார் செய்ததற்கும், Popularityக்காக பொய் கேஸ் பொடுவதற்கும் என்ன வித்தியாசம்.
(அவர் Popularityக்காக இப்படி ஆதாரமில்லாமல் செய்கிறாரா இல்லை காவி கண்ணை மறைக்குதா தெரியவில்லை)

//(நான் நேசகுமாரை நம்புகிறேன்) //

ஆதாரம் கேட்கிறார்களே,
நீங்கள் நம்பும் நேசகுமார்
கொடுத்துவிடவேண்டியதுதானே????

//மறைமுகமாக கூட ஒரு ஐயத்தை கூட தமிழ்மணத்தின் மீது கிளப்பக்கூடாது அப்படி கிளப்பினால் நாங்கள் அவர்களை நீக்குவோம்.. என்று சொல்லுகிற தமிழ்மணத்தின் மனநிலை பாசிசத்தின் பாதையில் நடைபோட ஆரம்பித்திருப்பதன் தெளிவான வெளிப்பாடுதான்//

சந்தேகம் கிளப்பினால் நீக்குவோம் என்று சொன்னார்களா?
ஆதாரம் கொடுக்கவில்லை என்றால்தான் நீக்குவார்கள். ஆதாரமில்லாமல் என்ன வேண்டுமானாலும் சொல்லிவிட்டு தப்பிக்க நினைப்பது கோழைத்தனம்.
"நாங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்வோம் ஆனால் யாரும் ஆதாரம் கேட்க கூடாது" என்று பேசினால் எப்படி? நீங்கள் பேசுவதுதான் பாசிசம்.

3:32 AM, April 16, 2007  
Anonymous Anonymous said...

அரவிந்தன்...நீங்கள் "நானும் எனது கூட்டமும்" என்று குறிப்பிட்டிருக்கீங்களே ? நான் எந்த கூட்டத்தை சேர்ந்தவன் என்று தெரிந்துகொள்ளலாமா ?

கரு.மூர்த்தி...எனக்கு தெரிந்து எல்லாவற்றையும் நீக்கியதாக தான் நினைத்தேன், சில விடுபட்டுவிட்டது...ஏன் நீங்கள் உடனே எனக்கு மடல் அனுப்பி நீக்க சொல்லி இருக்கலாமே ? டோண்டு மற்றும் குழலி சொல்லித்தான் எனக்கு விவரம் தெரியும்...அது தெரியுமா ? என்னுடைய தொலைபேசி எண் தான் என் பதிவிலியேயே போட்டிருக்கிறேனே ? ஏன் நீங்கள் போன் செய்ய வேண்டியது தானே ?

சும்மா ஏதாவது சொல்லனும் என்பதற்காக சொல்லாதீங்க கரு.மூர்த்தி.

4:03 AM, April 16, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

இந்து தருமத்தை இந்து சமுதாயத்தை தாக்கி எழுதுபவர்களை விதந்தோதும் கூட்டம்.

4:10 AM, April 16, 2007  
Anonymous Anonymous said...

//'தமிழ்மணத்திலிருந்துதான் உனது ஐபியைப் பெற்றோம்' என்று பாலபாரதி குழு வெளிப்படையாக ஜயராமனை மிரட்டியது//
அரவிந்தன், மீண்டும் நேசகுமார் ஆதாரமில்லாத குற்றாச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே இருக்கிறார்..

ஒன்று மட்டும் தான் தெரிந்து கொள்ள வேண்டும்.. இந்த குற்றச்சாட்டை நீங்கள் நம்புகிறீர்களா?

பலரும் பேசிகிறார்கள் என்றால், அது வதந்தி. ஆனால், அந்த வதந்தியை அரவிந்தன் நம்புகிறார் என்றால் அது செய்தி. நான் மதிக்கும் பதிவரான நீங்கள் இதை நம்புகிறீர்களா என்று அறிய ஆவலாக உள்ளேன்.

4:17 AM, April 16, 2007  
Blogger லக்கிலுக் said...

//அரவிந்தன் நீலகண்டன் said...
இந்து தருமத்தை இந்து சமுதாயத்தை தாக்கி எழுதுபவர்களை விதந்தோதும் கூட்டம்.
//

அப்படி ஒரு கூட்டம் இருக்குமேயானால் அக்கூட்டத்தை மனிதநேயத்தில் ஆர்வம் கொண்டிருப்பவர்கள் கருவறுக்கப்போவது உறுதி!!!

4:21 AM, April 16, 2007  
Anonymous Anonymous said...

எங்கே எனது கேள்விகளுக்கு பதில் காணோம்??

4:23 AM, April 16, 2007  
Anonymous Anonymous said...

////இந்து தருமத்தை இந்து சமுதாயத்தை தாக்கி எழுதுபவர்களை விதந்தோதும் கூட்டம். ///

நல்லதொரு கூட்டம்.

4:53 AM, April 16, 2007  
Anonymous Anonymous said...

உங்களை தூக்கிட்டா என்ன ஆகப் போகின்றது? இருக்கவே இருக்கின்றது. புது பெயரு... புது ஐபீ... அதுல வந்துட்டா போவுது. இதெல்லாம் உங்க கும்பலுக்கு புதுசா என்ன?

4:54 AM, April 16, 2007  
Anonymous Anonymous said...

When comments from other religion come about Hinduism, those who don't know much about Hinduism, can be easily confused by those comments and people like Nesakumar, AN,Ezhil,Jadaayu....etc are giving / replying them with the same frequency (My weapon is decided by yours)as they are using. Anyway no one shouts when Hinduism is been crtisized and if their's is critisized?? I think everybody know about the story of "Tamiz Nandu"!!!

5:19 AM, April 16, 2007  
Anonymous Anonymous said...

//செந்தழல் ரவி said...
அரவிந்தன்...நீங்கள் "நானும் எனது கூட்டமும்" என்று குறிப்பிட்டிருக்கீங்களே ? நான் எந்த கூட்டத்தை சேர்ந்தவன் என்று தெரிந்துகொள்ளலாமா ?
//

//அரவிந்தன் நீலகண்டன் said...
இந்து தருமத்தை இந்து சமுதாயத்தை தாக்கி எழுதுபவர்களை விதந்தோதும் கூட்டம்.
//

//லக்கிலுக் said...
அப்படி ஒரு கூட்டம் இருக்குமேயானால் அக்கூட்டத்தை மனிதநேயத்தில் ஆர்வம் கொண்டிருப்பவர்கள் கருவறுக்கப்போவது உறுதி!!!
//

எங்கேயோ இடிக்குதே :-))

6:19 AM, April 16, 2007  
Anonymous Anonymous said...

Stop giving communal colour to this issue.

6:20 AM, April 16, 2007  
Anonymous Anonymous said...

`செண்டூர் வெடிவிபத்து, தமிழ்த்தீவிரவாதிகள் ஒத்திகையா` என்று எழுதும் தினமலருக்கும், `அப்படியான ஒரு கடிதம் வந்தது என்று` நேசகுமார் எழுதுவதற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது? இரண்டும் அவதூறுகள்தானே!

6:32 AM, April 16, 2007  
Anonymous Anonymous said...

செண்டூர் வெடிவிபத்து, தமிழ்த்தீவிரவாதிகள் ஒத்திகையா` என்று எழுதும் தினமலருக்கும், `அப்படியான ஒரு கடிதம் வந்தது என்று` நேசகுமார் எழுதுவதற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது? இரண்டும் அவதூறுகள்தானே!


ஆமாம். இந்தியாவிலுள்ள வறுமையைப்பார்த்து மற்ற நாட்டவர்கள் ஏளனம் செய்கிறார்கள் என்பதைச் சொல்லுவது இந்தியாவின்மீது அவதூறு பரப்புவது. எனவே, இந்தியாவிற்கு சுற்றுலா வந்துள்ளவர்களை 24 மணிநேர கால அவகாசம் கொடுத்து வெளியே அனுப்பிவிடவேண்டியதுதான்.

நீ சேட்டை செய்கிறாய் என்று எனக்குத் தகவல் வந்தது என்று சொல்லும் தந்தை மகனை எதிர்த்து அவதூறு பரப்புகிறார்.

அதெல்லாம் இருக்கட்டும்.

பாலச்சந்தரின் படத்தில் சந்தேகப் பிராணியாக ப்ரகாஷ்ராஜ் நடித்திருப்பாரே. அந்தப் படத்தின் பெயர் என்ன?

8:26 AM, April 16, 2007  
Blogger கரு.மூர்த்தி said...

`செண்டூர் வெடிவிபத்து, தமிழ்த்தீவிரவாதிகள் ஒத்திகையா` என்று எழுதும் தினமலருக்கும், `அப்படியான ஒரு கடிதம் வந்தது என்று` நேசகுமார் எழுதுவதற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது? இரண்டும் அவதூறுகள்தானே!//

வெறும் ஐபியை வைத்து நீங்கள் செய்யாத அவதூறா ?

ஏன் எவனும் டோண்டு கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லையாம் ?

(அடுத்ததாக இந்தந்த பதிவர்கள்தான் பின்னூட்டமிட வேண்டுமென்று சட்டம் போடப்படலாம் )

8:26 AM, April 16, 2007  
Blogger பங்காளி... said...

ஒரு குற்றவாளியை மறைக்க...பிரச்சினையை திசைதிருப்ப, நடத்தப்படும் திட்டமிட்ட நாடகத்தின் இன்னொரு காட்சியாகத்தான் உங்கள் பதிவினை பார்க்கிறேன்....

வாழ்த்துக்கள்....

8:42 AM, April 16, 2007  
Anonymous Anonymous said...

தேசியக் கொடிக்குப் பின்னும் காவி நிறத்தைப் போட்டு நீர் எந்த மாதிரியான தேசிய வியாதின்னு காண்பித்து இருக்கிறீர். இந்த லட்சணத்தில் அடுத்தவனுக்கு புத்தி சொல்ல புறப்பட்ட உம்மை வேணாம் அதுக்கும் இழுக்கு

8:45 AM, April 16, 2007  
Anonymous Anonymous said...

மனித நேயம் பேசும் இரட்டை வேடம் போடும் எட்டபன் லக்கிலுக், உன் நண்பன் அருணின் போட்டோகளையும் தனிபட்ட தகவல்களையும் நீ மூர்த்திக்கு கொண்டு கொடுத்தாய்? உன் இரட்டை வேடங்களை உன் நண்பன் அருணே கருத்து களத்தில் எழுதியதை இங்கே பதியட்டுமா?

9:43 AM, April 16, 2007  
Anonymous Anonymous said...

//எட்டபன் லக்கிலுக், உன் நண்பன் அருணின் போட்டோகளையும் தனிபட்ட தகவல்களையும் நீ மூர்த்திக்கு கொண்டு கொடுத்தாய்? //

அப்படிப்போடுங்க அருவாள...இவன் செய்யக் கூடியவந்தான்...இவனெல்லாம் நல்லவன் வேசம் போடுறத பாத்துதான் இந்தப் பக்கம் ஜாஸ்தி வர்றதில்ல..சமீபத்துல இவனுங செஞ்ச வேலை-யப் பாத்தா நெசமாவெ வலையுலகத்த அடுத்த கட்டத்துக்கு கொண்டு போயிட்டானுங்க:) அப்படியே அதுக்கடுத்த கட்டமா ஆள் கடத்தல்,கொல,கொள்ளை அப்டின்னு கொண்டுபோகச்சொல்லுங்க..தமிழ்மணம் அதுக்கும் ஒதவுமோ என்னமோ??? அந்த கருத்து-ல அருண் எழுதினதையும் போடுங்க கரு.மூர்த்தி..அந்தக் கேடுகெட்ட கபோதி, ஈனப்பய கருப்பு-க்கு சப்போர்ட் பண்ர இந்தக் கூட்டம் நியாயத்தையும், தருமத்தையும் பத்திப் பேசுது..அந்தக் கேவலத்துக்கு பொறந்த கருப்பு ஒரு பிராமணன எதிர்க்கிறாந்கிற ஒரே காரணத்துக்குத் தானே இந்தக் கும்பலும், தமிழ்மணமும் அவனக் கண்டும் காணாத மாதிரி நடிக்கிறானுஙக?? நியாயமாம் தூஊ...

10:43 AM, April 16, 2007  
Blogger வஜ்ரா said...

//
Stop giving communal colour to this issue.
//

நண்பன் என்ற இஸுலாமியத் தீவிரவாதத்தை தெரிந்தே ஆதரிக்கும் மூத்த பதிவர் நேசகுமாரை நீக்குவதனால் உலகில் சுபிக்ஷம் உண்டாகும் என்று முழங்கியபோதே கம்யூனல் கலர் பூசப்பட்டது உங்கள் செக்குலர் கண்களுக்குத் தெரியவில்லையா ?

11:47 AM, April 16, 2007  
Blogger கால்கரி சிவா said...

கரு.மூர்த்தி, உடனடியாக வழங்குங்கள். கெட்டவர்களை கெட்டவர்கள் என சொல்ல அவர்களின் அனுமதி எதற்கு. அருண் பற்றிய விவகாரங்களை அம்பலப் படுத்துங்கள்

12:24 PM, April 16, 2007  
Blogger கால்கரி சிவா said...

//ஏன் எவனும் டோண்டு கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லையாம் ?
//

அதானே ஏன் அளிக்கவில்லை

12:26 PM, April 16, 2007  
Blogger நண்பன் said...

// TOR is an add on to the firefox browser. By enabling TOR, you can hide your IP address. The IP packets will travel through different computers around the world and will reveal someone else's IP. //

யாருடைய முதுகிலோ சவாரி செய்து வருவேன் - அதைக் கேட்கக் கூடாது - எவனோ மாட்டிக் கொண்டு சாகட்டும் - ஆனால், என்னுடைய கருத்து மட்டும் வாழட்டும் - வசதியான ஒரு சந்தில் இருந்து வரும் கருத்துகள் மதிக்கப்பட வேண்டும். இது தான் உங்கள் தார்மீகமா?

சில எல்லைகளைக் கடந்தும் சிலரை நண்பர்களாக வரித்துக் கொண்டு, ஒரு மதிப்பு வைத்திருந்தேன் - சிலருடைய பதிவுகளை வாசித்து ஒரு சிநேகப்பூர்வமான தூரத்திலும், மேலும் ஒரு சிலரை வாசித்து கருத்தாட முயன்றும் - ஒரு கண்ணியமான இடைவெளியுடன் மதிப்பு வைத்திருந்தேன்.

அதிலும் நீங்கள் உங்களுடைய கூடுவிட்டு இருந்து வெளிவர தொடங்கி, பிற நண்பர்களைச் சந்திக்க ஆரம்பித்த பொழுது, வெளிப்படையாக நீங்கள் இயங்க ஆரம்பித்து விட்டீர்கள் என்றே மகிழ்ந்தேன்.

ஆனால், கடந்த இரண்டு நாட்களில், வெளியான சில பதிவுகள் அதை சிதைத்துக் கொண்டு வருகின்றன. மேற்கண்ட வரிகளை வாசித்த பின்பு - an intellect on the other bank - என்று உங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கை சிதையும் பொழுது,

உங்களிடம் கேட்கத் தோன்றுகிறது - YOU too Arvind?

உங்கள் மனசாட்சியைக் கேளுங்கள் - நான் சொல்வதை எதிரொலிக்கும்.


Google Reader இருப்பதால் நீங்கள் எழுதுபவற்றை வாசிக்க இயலும். சிலர் எழுதுவதை எதிர்க்க வேண்டுமென்பதற்காகவே வாசித்து வருகிறேன் - அதாவது I hate to Love you or Love to hate you என்ற வகை. எப்படி எடுத்துக் கொள்வது என்பது உங்களது சௌகரியம். ஏனென்றால், தாந்தோன்றித்தனமாகத் திரிந்து கொண்டிருந்த என்னை ஒரே அடியில் மாற்றிப் போட்டு, என் மதத்தைப் பற்றிய ஆய்வைத் தொடங்க வைத்த நண்பர்கள் நீங்கள் தானே?

இன்று தருமியுடனான எனது உரையாடலைப் படித்துப் பாருங்கள் - நண்பன் அடுத்த உரையாடலை எப்போ ஆரம்பிக்கலாம் - I am Game என்று எழுதி ஆவலுடன் காத்திருக்கிறார். ஏன் நீங்கள் ஆதரவளிக்கும் நண்பரால் அது முடியாமற் போயிற்று?

அமைப்பு ரீதியாக இயங்க வேண்டும், காவல் துறை, நீதித் துறையை முறைப்படி அணுக வேண்டும் என்ற வரிகளைப் பற்றியா விமர்சனங்கள் - ஆஹா, எத்தனை அழகு.!!!

இந்த மூன்றும், தங்களுக்கென ஒரு அமைப்பை நிறுவுதல், காவல்துறை, நீதிதுறையை அணுகுதல், இவை எல்லாம் ஒரு மனிதனின் அடிப்படை உரிமை அல்லவா? அல்லது இந்திய இறையாண்மை இந்த அடிப்படை உரிமைகளை இஸ்லாமியர்களுக்கு மறுக்கிறதா?

நண்பன் ஒரு தீவிரவாதி என்ற ரேஞ்சுக்கு எழுதியவர்கள் - சற்று காலம் பின்னோக்கிப் பார்க்கட்டும் - நேசகுமாரும், இஸ்லாமிய இனதுரோகிகளும் என்ற பதிவை எழுதியதும், என்ன என்ன பேசினீர்கள்? எழில் என் பதிவிற்கு சுட்டி கொடுத்து, நண்பன் ஷாஜஹானின் சிறப்பான பதிவு என்று ஒரு பதிவு போட்டு, அகமகிழ்ந்தீர்களே - அதில், நான் (நேசகுமார்) அங்கு வந்து கருத்து சொன்னால், அது அவருக்கு (நண்பனுக்கு) ஒரு நெருக்கடியைக் கொடுக்கும் அதனால் எழுதவில்லை

ஆஹா! இதல்லவோ நாடகம்!!!

விடாது கருப்பை எதிர்த்து ஒரு கருத்து சொல்லிவிட்டவுடன், ஒடோடி வந்து, அகமகிழ்ந்தவர்கள் எல்லாம் எங்கே?

ஆக, எனக்கு சாதகமானவற்றை பேசிக் கொண்டு, நாங்கள் வழங்குபவற்றை கையேந்தி வாங்கிக் கொண்டு, இணங்கி நடந்தால் உனக்கும் ஒரு வாழ்வு அளிப்போம். அவ்வாறின்றி என் உரிமை, சுதந்திரம், கருத்து என்றெல்லாம் பேசினால், உன் மீது சகல வித குற்றங்களையும் அள்ளி வீசி, அழிச்சாட்டியம் செய்து அழித்து விடுவோம் என்பது தான் உங்கள் தார்மீகமா?

இது தான் இந்துத்வம் இல்லையா?. தன்னை அம்மணம்மாக்கிக் கொண்டு, அவலட்சணமாக நிற்கும் அருவெறுக்கத் தக்க இந்துத்வம்.

தங்களுக்கு சௌகரியப்படும் பொழுது தூக்கி தலையில் வைத்துக் கொண்டு கொண்டாடுவது - இல்லையென்றால்
காலில் போட்டு மிதிப்பது

இதைத்தானே அனைவரும் எதிர்க்கின்றனர்!

சிந்தியுங்கள். தமிழ்மணத்தை விட்டு வெளியேறுவது தற்காலிகமாக ஒரு பாதுகாப்பு என உணர்ந்தீர்கள் என்றால், செய்யுங்கள். இல்லையேல், இந்த முடிவை தவிர்த்து விட்டு, வெளிப்படையாக இயங்குங்கள்.

எதை வேண்டுமானாலும் விமர்சியுங்கள். ஆனால், குறைந்தபட்ச மனித மாண்புகளை மீறாமல் செய்யுங்கள். ஆக்கபூர்வமான விமர்சனங்களுக்கு என்றுமே பதில் சொல்வோம் - பதிலை தேடுவோம் - தேடுவதில் கற்றுக் கொள்ளுவோம்.

மற்றவை உங்கள் விருப்பத்திற்கு,

அன்புடன்,
நண்பன்


(இதை ஒரு தனிப்பதிவாகவும் மற்றவர்கள் பார்வைக்கு வைக்கின்றேன்)

12:33 PM, April 16, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

ஒரு பெண்பதிவர் பெயரில் ஆபாச போலி பதிவு எழுதியவர் நிச்சயமாக தண்டிக்கப்பட வேண்டும். நியாயமான நீதியான விசாரணை இல்லாமல், தம்மிடமிருக்கும் தகவலையும் உருப்படியாக வெளியில் சொல்லாமல், இந்த ஆள்தான் குற்றவாளி என கூறுவதும் அவரிடமிருந்து நான்கு சுவர்களுக்குள் எழுதி வாங்குவதும் எந்த விதத்தில் நியாயம்? இன்று வரை ஆதாரங்களை நான் பார்க்கவில்லை. குற்றச்சாட்டுக்களை கேட்கிறேன். ஒப்புதல் வாக்குமூலங்களை பார்க்கிறேன். ஆனால் ஆதாரங்கள்? எனவேதான் இது சரியாக நடக்கவேண்டும் என்றால் குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டுமென்றால் அல்லது அப்பாவி குற்றவாளியாகாமல் இருக்கவேண்டுமென்றால் திரைமறைவு நாடகங்கள் தவிர்க்கப்பட வேண்டும். அதை செய்யாமல் ஜூனியர்விகடன் நக்கீரன் பாணி எழுத்துக்கள் மூலம் கதை எழுதுவது தவிர்க்கப்பட வேண்டும். இன்று ஒரு பதிவர் மீது குற்றம் சாட்டப்படுகிறது. பின்னர் பெயர் மட்டும் மறைக்கப்படுகிறது.பின்னர் அதன் மத பரிமாணங்கள் டிஸ்கி போட்டு சுட்டிக் காட்டப்படுகின்றன. உடனே 'நண்பன்' என்பவர் 'ஆரோக்கியம்' என்பவர் குற்றம் சாட்டப்பட்ட பதிவர்தான் என்கிறார். இதற்கெல்லாம் ஆதாரம் தேவையில்லை போலும். பின்நவீனத்துவ சிறப்பு கழிகிறது போலும். நாயே பேயே என்று பண்பட்ட வசையாடல். இஸ்லாம் என்கிற நம்பிக்கையை விமர்சித்துவிட்டாராம்...முகமதுவை ஏகவசனத்தில் பேசினால் பேசியவன் முகத்தில் காறித்துப்புவீர்களாம். சல்மான் ருஷ்டி நாவல் எழுதினால் அதற்கு தரம் தாழ்ந்து திட்டுவீர்களாம். திருவாளர்.'நண்பன்' அவர்களே பர்தா அணியாத எங்கள் பெண்களின் குழாயடிச்சண்டைகள் உங்கள் பின்நவீனத்துவ முகமூடியுடனான வஹீயிறக்க வசையாடல்களை விட எவ்வளவோ மேலானவை. ஒரு விசயம் திருவாளர். நண்பன்... If you think the feeling of letting down is mutual you are wrong...for some weeks now, going again through your writings, i had a strong feeling you are just another fundamentalist in post-modern disguise. i thank this episode for bringing out the real fundamentalist-violently obsessed face of yours.

3:27 PM, April 16, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

//அமைப்பு ரீதியாக இயங்க வேண்டும், காவல் துறை, நீதித் துறையை முறைப்படி அணுக வேண்டும் என்ற வரிகளைப் பற்றியா விமர்சனங்கள்//
திருவாளர்.'நண்பன்', தங்களது அடிப்படைவாத முகம் வெளிப்படுவது மேலே உள்ள வரிகளில் அல்ல. கீழே உள்ள வரிகளில்.
//22ஆம் தேதிய வலைப்பதிவர்கள் சந்திப்பிற்கு போக வேண்டும் - அனைவரையும் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் எனக்கும் இருந்தது. ஆனால், இந்த நாயும் கலந்து கொள்ளும் என்று தெரியவந்த பின்னர் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வது என்பது என்னால் இயலாது என்றே நினைக்கிறேன்.
ஏனென்றால்,
- குரானில் ஆபாசம் மலிந்து இருக்கிறது என்ற பொய்யான செய்தியைப் பரப்பிய இவனது முகத்தில் குறைந்தபட்சம் காரி உமிழாமல் நான் திரும்பினால்,
- இஸ்லாமிய அடிப்படை வாதி என்ற முத்திரை குத்தப்பட்டுவிடுவோமோ என்ற அச்சத்தால் எட்டு மாதங்கள் வலைப்பதிவே எழுதுவதை விட்டு அஞ்ஞான வாதம் புரிந்த என் மன வேதனைகளுக்காக இவன் முகத்தில் காரி உமிழாமல் நான் திரும்பினால்
- இஸ்லாமிய வலைப்பதிவர்களை தொடர்ந்து அவமானப்படுத்த வேண்டுமென்று முனைந்து செயல்பட்டவனை இவன் என்று தெரிந்து கொண்டும் இவன் முகத்தில் காரி உமிழாமல் நான் திரும்பினால்
அது என்னுள்ளே ஏற்படுத்தும் குற்ற உணர்விற்கு யார் பெறுப்பேற்பது?
அமுக நண்பர்கள் மன்னித்திருக்கலாம்.
ஆனால், இஸ்லாமிய வலைப்பதிவர்களே நீங்கள் சொல்லுங்கள் -
இவன் மன்னிக்கப்படவேண்டுமா?//
வலைப்பதிவர் கூட்டத்தில் அந்த குற்றம் சாட்டப்பட்ட வலைப்பதிவரை எப்படி இனம் கண்டு கொள்வீர்கள்...ஆதாரங்களை கையில் வைத்திருப்பதாக கூறும் பாலபாரதி அவர் பெயரை வெளியிடாத நிலையில்? பாலபாரதி அவரது மதத்தை குறிப்பிட்டிருக்க, சக-மனிதனை நாய் என்று கூறும் நீங்கள் அவரது சாதியை எப்படி மோப்பம் பிடித்தீர்கள்? ஒரு வேளை உங்களுக்கு அவரது பெயரும் அவர்தான் இதனை (ஆபாச போலி பெண்பதிவர் பக்கத்தை உருவாக்கியவர்) செய்தவர் என நிச்சயமாக தெரியுமானால் அதற்கான ஆதாரங்களை சொல்லுங்கள்...ஒரு குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்தான் ஆரோக்கியம் என கூறியுள்ளதற்கு ஆதாரம் என்ன? இதெல்லாம் தெளிவாக உள்ளதெனில் நீங்கள் ஏன் பதிவில் அதனை வெளிப்படுத்தக்கூடாது? இல்லையென்றால் சந்தடி சாக்கில் நாமும் இரண்டு உதை உதைப்போம் கேட்க நாதி கிடையாது என்கிற கும்பல்-தைரியத்தில் பேசியவையா மேலே இருப்பவை?

3:41 PM, April 16, 2007  
Blogger நண்பன் said...

// If you think the feeling of letting down is mutual you are wrong...//

There is no such feeling as mutual let down. Its only my opinion.

And Glad to know, there is no such feeling from your end.

If only, such a feeling exists from the other side, then it would be a loss.

And you can have whatever opinion about me and my writings - I had never let anything affecting my writing so far. And it would be so in the future too....

Regards & take care.

Thanks

Nanban

3:52 PM, April 16, 2007  
Blogger ஜடாயு said...

// லக்கிலுக் said...

அப்படி ஒரு கூட்டம் இருக்குமேயானால் அக்கூட்டத்தை மனிதநேயத்தில் ஆர்வம் கொண்டிருப்பவர்கள் கருவறுக்கப்போவது உறுதி!!!
//

இன்னொரு தடவை படித்துப் பார்க்கிறேன். ல.லு தானா இதை எழுதியது? அரவிந்தன் மற்றும் அவரது "கூட்டத்தை" மனிதநேயத்தில் ஆர்வம் கொண்டவர்கள் என்று உங்களை அறியாமலேயே உண்மையைச் சொல்லி அறிவித்ததற்கு நன்றி.

ரொம்பவே லாஜிக் பார்த்து எழுதறீங்க லாலு.

6:52 PM, April 16, 2007  
Anonymous Anonymous said...

//'தமிழ்மணத்திலிருந்துதான் உனது ஐபியைப் பெற்றோம்' என்று பாலபாரதி குழு வெளிப்படையாக ஜயராமனை மிரட்டியது//
இதை நீங்கள் நம்புகிறீர்களா என்று நேற்று கேட்டிருந்தேன். நீங்கள் என் பின்னூட்டத்தைப் பிரசுரிக்கவில்லை. இதிலிருந்து, நீங்கள் நம்பவில்லை, ஆனால் அதைச் சொன்னால் உங்கள் நண்பர்களுக்கு விரோதமாகப் போய்விடுமோ என்று அஞ்சுகிறீர்கள் என்று தோன்றுகிறது. நல்லது.

நீங்கள் இதை நம்ப மாட்டீர்கள் என்று நான் நினைத்தேன். உங்களைப் பற்றிய என் மதிப்பு இன்னும் உயர்கிறது.

ஆனால், அதை வெளிப்படையாக சொல்லி இருந்திருக்கலாம். கருத்துக்கள் வேறுபட்டாலும் மனிதர்களை நம்புவது முக்கியம் என்று சொன்னவராச்சே.. என்ன செய்ய, சில நேரங்களில் சில மனிதர்கள்..

உங்கள் நெருக்கடி புரிகிறது. இந்தப் பின்னூட்டத்தை நீங்கள் பிரசுரிக்காவிட்டாலும் பிரச்சனை இல்லை. நன்றி..

10:24 PM, April 16, 2007  
Anonymous Anonymous said...

1. தமிழ் மணம் தார்மீக அடிப்படை நண்பர்களுக்கு தகவல் வழங்கியுள்ளதா ? யார் யார் தார்மீக அடிப்படையில் நண்பர்கள் ஆவார்கள் ?

2. இது வரை தமிழ் மணம் ஒரு திரட்டி மட்டுமே அதற்கு கொள்கை என்று எதுவும் கிடையாது என்றுதான் அப்பாவி பதிவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது தார்மீக எண்ணங்கள் என்றும் ஒத்த கருத்துடையவர் என்றும் புது பூதம் வருகிறது. யார் அவர்கள், தமிழ் மணத்தின் கருத்துக்கள் யாவை ?

3. தார்மீக அடிப்படை நண்பர்களுக்கு சேகரிக்கும் தகவல்களை வழங்குவோம் என்று அக்ரிமெண்டில் எங்கு சொல்லப் பட்டுள்ளது ?

4. இப்பொழுது அதே தார்மீக அடிப்படையில் பாலபாரதி என்ற ப்ளாக் மெயிலருக்கும் நண்பன் என்ற இஸ்லாமிய ஜிகாதிக்கும் ஏதேனும் தகவல் வழங்கப் [பட்டதா? ஆம் அல்லது இல்லை என்ற பதில் வேண்டும்

5. ஆம் என்றால் என்ன விதமான தகவல்களை தமிழ் மணம் அளித்துள்ளது?

6. இது போல் வேறு யார் யாருக்கு என்ன என்ன தகவல்களை அழித்துள்ளீர்கள் ?

7. தமிழ் மணம் ஏன் ரகசியமாக ஐ பி யை சேகரித்து வைத்துக் கொள்கிறது? யாரை மிரட்ட ?

8. பால பாரதி தமிழ் மணத்தில் இருந்துதான் தகவலைப் பெற்று ஜெயராமனை மிரட்டியதாகச் செய்திகள் வருகின்றன,. இதுவரை தமிழ் மணமோ, பாலபாரதியோ அல்லது அவரை ச் சேர்ந்த பிற ப்ளாக் மெயிலர்களோ, ரவுடிகளோ இது வரை இல்லை என்று சொல்லவில்லை. அதனால் உண்மை என்று எடுத்துக் கொள்ளலாமா? அப்படியென்றால் தமிழ் மணம் ஆள் மிரட்டலில் ஈடுபடுகிறது என்பது உண்மையா? அதற்காக தமிழ் மணம் நிர்வாகிகள் மீது சட்ட பூர்வமான நடவசிக்கைகள் ஏன் தொடரக் கூடாது?

10:58 AM, April 18, 2007  
Blogger எழில் said...

Your comments are very scary. Looks like tamilmanam has no sanctity for the privacy of the blogger and the people who put comments .

If not for me, I have to protect the sanctity of the privacy of the people who put comments in my blog.

I doubted similar things for a while. Now, I feel confirmed.

I have removed tamilmanam code from my blog.

11:03 AM, April 18, 2007  
Anonymous Anonymous said...

அரவிந்தன்

உங்களது இந்தப் பதிவை மட்டும் நீக்கியிருக்கிறார்கள் ஆனால் கேட்ட கேள்விகளுக்குப் பதில் இல்லை. மீண்டும் கேட்க்கிறேன்

1. தார்மீக அடிப்படை நண்பர்கள் என்பவர் யார் யார் ?

2. தார்மீக நண்பர்கள் அடிப்படையில் பாலபாரதி ரவுடிக் கும்பலுக்கு எந்த விதமான தகவல்கள் அளிக்கப் பட்டன?

3. அமெரிக்க நீதித்துறை மூலமாக வந்தால் தருவீர்களா ? பாதிக்கப் பட்ட எந்த பதிவரும் அமெரிக்க போலீசை அணுக முடியும்.

4. தமிழ் மணத்தின் கருவிப் பட்டை எந்த எந்த தகவல்களை ரகசியமாக சேமிக்கிறது, பின்னூட்டம் இடுபவர்களின் ஐ பி போன்ற தகவல்களை அவர்களுக்குத் தெரியாமல் சேமிக்கிறதா? இதற்கும் பதில் இல்லையென்றால் அமெரிக்க போலீஸின் உதவி நாடப் படும்

5. மிரட்டல் செய்த ப்ளாக் மெயில் செய்த நபர்களை முகமூடி கேள்வி கேட்டால் காசிக்கு கோபம் ஏன் வருகிறது ? இருவருக்கும் என்ன கள்ள உறவு ?

6. தமிழ் மண நிர்வாகிகளில் பலரும் இதற்கு முன்பாக பல பெயர்களில் மிரட்டல் ஆபாசம் முதலிய வேலைகளைச் செய்து வந்தவ்ர்களா இல்லையா?


தமிழ் மணத்தில் சேர்ந்திருக்கும் பதிவர்கள் உடனடியாக தமிழ் மணத்தின் ஸ்கிரிப்டை நீக்குவது உங்கள் பாதுகாப்புக்கு நல்லது இல்லையென்றால் ப்ளாக்மெயில் ரவுடிகளால் புத்தகக் கடைகளில் வைத்து மிரட்டப் படுவீர்கள். வலைப் பதிவர் கூட்டங்களில் உங்கள் பேச்சும் போட்டோவும் ரகசியமாக ரெக்கார்ட் செய்யப் படும் ஆபத்தும் உள்ளது. மொத்தத்தில் உங்கள் உயிர் மானம் மரியாதை எல்லாவற்றையும் இதில் சேவதன் மூலம் இழக்க நேரிடும்
மேலும் கேள்விகள் வரும்

10:14 PM, April 18, 2007  
Blogger லக்கிலுக் said...

// ஜடாயு said...
// லக்கிலுக் said...

அப்படி ஒரு கூட்டம் இருக்குமேயானால் அக்கூட்டத்தை மனிதநேயத்தில் ஆர்வம் கொண்டிருப்பவர்கள் கருவறுக்கப்போவது உறுதி!!!
//

இன்னொரு தடவை படித்துப் பார்க்கிறேன். ல.லு தானா இதை எழுதியது? அரவிந்தன் மற்றும் அவரது "கூட்டத்தை" மனிதநேயத்தில் ஆர்வம் கொண்டவர்கள் என்று உங்களை அறியாமலேயே உண்மையைச் சொல்லி அறிவித்ததற்கு நன்றி.

ரொம்பவே லாஜிக் பார்த்து எழுதறீங்க லாலு. //

ஜடாயு!

லாஜிக் எல்லாம் பார்க்கவில்லை. நீங்களும், அரவிந்தனும் பதில் அளித்திருந்தால் எப்படி அளித்திருப்பீர்கள் என்பதற்கு ஒத்திகை பார்த்தேன் :-))))))))

11:14 PM, April 18, 2007  
Blogger லக்கிலுக் said...

மேலே கரு.மூர்த்தி என்ற பெயரில் என்னை குற்றம் சாட்டி அதர் ஆப்ஷனில் ஒரு கமெண்டு போட்டிருக்கும் பொட்டை உண்மையிலேயே ஆண்மை இருந்தால் ஆதாரங்களை காட்டட்டும்!

11:15 PM, April 18, 2007  
Blogger லக்கிலுக் said...

//Anonymous said...
அரவிந்தன்

உங்களது இந்தப் பதிவை மட்டும் நீக்கியிருக்கிறார்கள் ஆனால் கேட்ட கேள்விகளுக்குப் பதில் இல்லை. மீண்டும் கேட்க்கிறேன்

1. தார்மீக அடிப்படை நண்பர்கள் என்பவர் யார் யார் ?

2. தார்மீக நண்பர்கள் அடிப்படையில் பாலபாரதி ரவுடிக் கும்பலுக்கு எந்த விதமான தகவல்கள் அளிக்கப் பட்டன?

3. அமெரிக்க நீதித்துறை மூலமாக வந்தால் தருவீர்களா ? பாதிக்கப் பட்ட எந்த பதிவரும் அமெரிக்க போலீசை அணுக முடியும்.

4. தமிழ் மணத்தின் கருவிப் பட்டை எந்த எந்த தகவல்களை ரகசியமாக சேமிக்கிறது, பின்னூட்டம் இடுபவர்களின் ஐ பி போன்ற தகவல்களை அவர்களுக்குத் தெரியாமல் சேமிக்கிறதா? இதற்கும் பதில் இல்லையென்றால் அமெரிக்க போலீஸின் உதவி நாடப் படும்

5. மிரட்டல் செய்த ப்ளாக் மெயில் செய்த நபர்களை முகமூடி கேள்வி கேட்டால் காசிக்கு கோபம் ஏன் வருகிறது ? இருவருக்கும் என்ன கள்ள உறவு ?

6. தமிழ் மண நிர்வாகிகளில் பலரும் இதற்கு முன்பாக பல பெயர்களில் மிரட்டல் ஆபாசம் முதலிய வேலைகளைச் செய்து வந்தவ்ர்களா இல்லையா?


தமிழ் மணத்தில் சேர்ந்திருக்கும் பதிவர்கள் உடனடியாக தமிழ் மணத்தின் ஸ்கிரிப்டை நீக்குவது உங்கள் பாதுகாப்புக்கு நல்லது இல்லையென்றால் ப்ளாக்மெயில் ரவுடிகளால் புத்தகக் கடைகளில் வைத்து மிரட்டப் படுவீர்கள். வலைப் பதிவர் கூட்டங்களில் உங்கள் பேச்சும் போட்டோவும் ரகசியமாக ரெக்கார்ட் செய்யப் படும் ஆபத்தும் உள்ளது. மொத்தத்தில் உங்கள் உயிர் மானம் மரியாதை எல்லாவற்றையும் இதில் சேவதன் மூலம் இழக்க நேரிடும்
மேலும் கேள்விகள் வரும்
//

இந்த கேள்விகளை அனானியாக கேட்கிறாயே அனாதை? தில் இருந்தால் உன் ஒரிஜினல் பெயரில் தமிழ்மணத்தை கேளேன். அரவிந்தன் பதிவில் ஏன் வாந்தி எடுக்கிறாய்? அவரென்ன தமிழ்மண நிர்வாகியா?

11:17 PM, April 18, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

//இந்த கேள்விகளை அனானியாக கேட்கிறாயே அனாதை? தில் இருந்தால் உன் ஒரிஜினல் பெயரில் தமிழ்மணத்தை கேளேன்.//
ஏன் லக்கிலுக் ஐபி கிடைச்சதும் பொன்விழா முடிஞ்சதும் ஆட்டோ அனுப்பவா? :)

11:44 PM, April 18, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

//அவரென்ன தமிழ்மண நிர்வாகியா? //
தமிழ்மண நிர்வாகியா இருக்க நான் என்ன பாசிச பொறுக்கியா அல்லது திராவிட நாசி கழிசடையா

11:45 PM, April 18, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

அனானி அளித்த பின்னூட்டம் எடிட் செய்யப்பட்டு இடப்படுகிறது. தயை செய்து அனானி தேவையில்லாமல் சில மோசமான வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள். நான் தமிழ்மண நிர்வாகியோ பின்நவீனத்துவ முகமூடி அணிந்த ஜிகாதியோ அல்ல அத்தகைய வார்த்தைகளை நியாயப்படுத்த....

//லக்கி லுக்கு உன்னோட உண்மையெ பெயரா?. தமிழ் மணத்துல வந்து நேச குமாரும் அரவிந்தனும் கேட்டதுக்கு பதில் சொன்னியா? வந்துட்டான் என்னைய அநாதைன்னு சொல்றதுக்கு. உன்னோட ரவுடித்தனத்த இங்கே காட்டாத. கரு.மூர்த்தி ஏற்கனவே உன்னோட வேசத்த சொல்லியிருக்காரு. உனக்கும் மூர்த்திக்கும் என்ன உள்டக்கர் கூட்டு என்பதெல்லாம் ஊரே அறியும். அரவிந்தன், லக்கி லுக் என்னை அசிங்கமாக எழுதியதால் நானும் எழுத வேண்டி வந்து விட்டது அந்த ***** பின்னூட்டத்தை வெளியிட்ட நீங்கள் இதையும் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் //

12:11 AM, April 19, 2007  
Blogger லக்கிலுக் said...

//ஏன் லக்கிலுக் ஐபி கிடைச்சதும் பொன்விழா முடிஞ்சதும் ஆட்டோ அனுப்பவா? :) //

நாகர்கோவில் வரைக்கும் ஆட்டோ அனுப்பும் அளவுக்கு நான் கோட்டீஸ்வரன் அல்ல.


//பாசிச பொறுக்கியா அல்லது திராவிட நாசி கழிசடையா //

இல்லை பண்டார பரதேசின்னு வெச்சிக்கலாமா?


////லக்கி லுக்கு உன்னோட உண்மையெ பெயரா?. தமிழ் மணத்துல வந்து நேச குமாரும் அரவிந்தனும் கேட்டதுக்கு பதில் சொன்னியா? வந்துட்டான் என்னைய அநாதைன்னு சொல்றதுக்கு. உன்னோட ரவுடித்தனத்த இங்கே காட்டாத. கரு.மூர்த்தி ஏற்கனவே உன்னோட வேசத்த சொல்லியிருக்காரு. உனக்கும் மூர்த்திக்கும் என்ன உள்டக்கர் கூட்டு என்பதெல்லாம் ஊரே அறியும். அரவிந்தன், லக்கி லுக் என்னை அசிங்கமாக எழுதியதால் நானும் எழுத வேண்டி வந்து விட்டது அந்த ***** பின்னூட்டத்தை வெளியிட்ட நீங்கள் இதையும் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் //

அடேய் சைக்கோ! நானே நேரில் பல வலைப்பதிவர் சந்திப்புகளில் என்னை வெளிப்படுத்திக் கொண்டு என் நிஜப்பெயரை வெளியிட்டிருக்கிறேன். தமிழ்வலைப்பதிவர்களில் பெரும்பான்மையானவர்களுக்கு (அரவிந்தன் மாதிரி அடிப்படை வாதிகளுக்கல்ல)நான் நல்ல அறிமுகம். உன்னை மாதிரி பெங்களூர்லே ஒளிஞ்சிக்கிட்டு வீரம் பேசுர கோழையல்ல நான்.

நீ வலைப்பதிவர் யாருக்கு தொலைபேசி என்னைப் பற்றி புறம் பேசினாலும் அடுத்த நிமிடமே சம்பந்தப்பட்ட பதிவர் எனக்கு தகவல் தெரிவித்து விடுகிறார் :-)))))

12:27 AM, April 19, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

//இல்லை பண்டார பரதேசின்னு வெச்சிக்கலாமா?//
கட்டாயம் வச்சுக்கலாம். சந்தோசமான பெயர் லக்கிலுக், அப்படியே கூப்பிடுங்கள், மனசுக்கு நிறைவாக இருக்கிறது. அய்யா வைகுண்டரின் அகிலத்திரட்டில் பண்டாரம் என்பது பரம திவ்யமான ஒரு விளி. அப்படி அழைக்கப்பட கொஞ்சம் கூட தகுதியற்ற எனக்கு நீங்கள் அப்படி அழைப்பது சந்தோசமாக இருக்கிறது. ஏனெனில் அய்யா வைகுண்டர் அவதாரமாக வந்தபோது அவர் பண்டார வடிவில்தான் வந்தார். அப்போதுதான் மேல்சாதி விலங்குகள் அவரை துன்புறுத்தினார்கள்.

"அட்டி செய்ய இல்லையல்லோ ஆண்டியாய் நான் இருந்து
பண்டாரமாக பார் மீது அன்பரிடம்
நன்றாக பிச்சை நான் வேண்டியே குடித்து
தர்மமாயல்லோ சனங்களுக்கு நோய் தீர்த்தேன்."

என்று அய்யாவே கூறுகிறார். அப்படிப்பட்ட கிடைப்பதற்கரிய பெயரை நீங்கள் எனக்கு தருவதில் எனக்கு கோடானுகோடி ஆனந்தமே.

12:50 AM, April 19, 2007  
Blogger லக்கிலுக் said...

நன்றி அநீ!

பண்டாரப் பரதேசி என்ற பெயர் உங்களுக்கு இந்த அளவுக்கு பொருந்தும் என்று நான் நினைக்கவேயில்லை.

நீங்கள் மகிழ்ச்சி அடைந்தால் அதுவே எனக்கும் மகிழ்ச்சி!!!

1:21 AM, April 19, 2007  
Anonymous Anonymous said...

//அடேய் சைக்கோ! நானே நேரில் பல வலைப்பதிவர் சந்திப்புகளில் என்னை வெளிப்படுத்திக் கொண்டு என் நிஜப்பெயரை வெளியிட்டிருக்கிறேன். தமிழ்வலைப்பதிவர்களில் பெரும்பான்மையானவர்களுக்கு (அரவிந்தன் மாதிரி அடிப்படை வாதிகளுக்கல்ல)நான் நல்ல அறிமுகம். உன்னை மாதிரி பெங்களூர்லே ஒளிஞ்சிக்கிட்டு வீரம் பேசுர கோழையல்ல நான்.

நீ வலைப்பதிவர் யாருக்கு தொலைபேசி என்னைப் பற்றி புறம் பேசினாலும் அடுத்த நிமிடமே சம்பந்தப்பட்ட பதிவர் எனக்கு தகவல் தெரிவித்து விடுகிறார் :-)))))//

அட பாருடா.. இந்த கருணாநிதி அடிமை செய்றது எல்லாம் செஞ்சுட்டு போலி வேசம் போடுறதை பாருடா..

8:21 AM, April 25, 2007  
Anonymous Anonymous said...

யோய் ரவி லக்கிலுக் இரவுகழுகார் இலைகாரன் என்ற பெயர்களில் எழுதுகிறான் என்பதை நீருபித்தால் உன்னால் தமிழ்மணத்தை விட்டு விலக முடியுமா? கருத்துகளத்தில் லக்கிலுக் மட்டுறுத்தினராக இருந்து பின் ஏன் நீக்கபட்டான் என்று உனக்கு தெரியுமா?

8:35 AM, April 25, 2007  

Post a Comment

<< Home