Saturday, May 19, 2007

ஆபத்தான மதநூல்கள்

உள்ளே புகுவதற்கு முன்னால், இதோ கீழே உள்ள படத்தில் இடதுபக்கம் இருக்கும் குழந்தை அமைதிவழியில் இறைவனின் ஒரே மார்க்கத்தில் செல்லும் குழந்தை. வலது பக்கம் உள்ள குழந்தை காஃபீர்களும் விக்கிரக ஆராதனையாளர்களுமான இந்துக்களுக்கு பிறந்ததால் ஜிகாதிகளால் கொல்லப்பட்ட குழந்தை. இதில் எது சுவனத்துக்கு செல்லும் என நினைக்கிறீர்கள்?

கீழே நீங்கள் காணும் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல. இடதுபக்க குழந்தையின் பெற்றோர்கள் பீகாரின் கூலித்தொழிலாளர்கள். வலது பக்க குழந்தையின் தந்தை ஹைதராபாத்தை சேர்ந்த ஒரு பொறியியலாளர். முந்தைய குழந்தையின் பெற்றோர் காஷ்மிர் ஜிகாதிகளால் கொல்லப்பட்டனர். ஹைதராபாத் குழந்தையின் தந்தை தலிபான் ஜிகாதிகளால் கொல்லப்பட்டார்.
ஆம் ஜிகாதி வெறியால் பெற்றோர்களை இழந்து கதறி அழும் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல...

இனி கீழ் கண்ட உளவியல் பரிசோதனையை படியுங்கள். இப்பரிசோதனை கனடாவின் லாவ்ரென்ஷியன் பல்கலைக்கழக மனவியல் துறை நடத்தியதாகும்.


முதலாண்டு மனவியல் மாணவர்கள் 40 பேரிடம் 10 மனநோயாளிகள் பேசிய வார்த்தைகள் அளிக்கப்பட்டன. இந்த மனநோயாளிகளின் சிந்தனைகள்/பேச்சுக்கள் என அளிக்கப்பட்டவை பொதுமக்களின் பாதுகாப்புக்கு எந்த அளவு ஆபத்தானவை என மாணவர்கள் மதிப்பிடுமாறு கூறப்பட்டது. ஆனால் உண்மையில் இந்த 10 மனநோயாளிகளும் கற்பனை ஆவார்கள். இந்த மனநோயாளிகளின் வார்த்தைகள் என கூறப்பட்டவை மதநூல்களிலிருந்து எடுத்தாளப்பட்ட வசனங்கள் ஆகும். இந்த வசனங்கள் பின்வரும் மதநூல்களிலிருந்து எடுக்கப்பட்டவை ஆகும் : கிறிஸ்தவ புதிய ஏற்பாடு, குரான், மோர்மோன் பைபிள், எகிப்திய மரண நூல், திபெத்திய மரண நூல் ஆகியவை ஆகும். பரிசோதனையின் இரண்டாவது கட்டமாக 39 முதலாண்டு மனவியல் மாணவர்களிடம் முதலில் கொடுக்கப்பட்ட அதே வசனங்கள் அவற்றின் உண்மையான மூலநூல்களுடன் கொடுக்கப்பட்டன. மீண்டும் இந்த வசனங்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்கு எந்த அளவு ஆபத்தை விளைவிக்கக் கூடியவை என்பதனை கணிக்குமாறு மாணவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். இந்த பரிசோதனைகளில் முதல் பரிசோதனையில் காஃபீர்களை கொலை செய்வதன் மூலம் சுவனம் செல்லலாம் எனும் குரானிய கருத்தாக்கம் அதிக ஆபத்தானதாக மாணவர்களால் கருதப்பட்டது. அதன் மூலநூல் தெரிந்து செய்த தேர்வினில் இந்த ஆபத்து குறித்த கருத்தாக்கம் 33 விழுக்காடு குறைவாக கணிக்கப்பட்டது. நம்பிக்கையற்றவர்களை கொலை செய்வது போன்ற வன்முறை கருத்தாக்கங்கள் புனிதநூல் மூலம் கூறப்படும் போது அது ஆபத்து குறைவானதாக கணிக்கப்படுகிறது. மேல் கூறிய பரிசோதனையை வடிவமைத்தவர் உலகப்புகழ் பெற்ற உளவியலாளரான மைக்கேல் பெர்சிங்கர் ஆவார்.1

பேரா.மைக்கேல் பெர்சிங்கர்

'இறை/இறைதூதர்' போன்ற அனுபவங்களை மூளை எவ்வாறு உருவாக்குகிறது என்பதனை ஆராய்ந்தறிந்துள்ள இவரது பரிசோதனைகள் 'இறை அனுபவம்' 'இறைதூதர் நிகழ்வு' போன்றவற்றை அறிவதில் நமக்கு முக்கிய உதவியாக அமைந்துள்ளன. மதநூல்கள் என்பதனாலேயே அதில் உள்ள ஆபத்தினை குறைத்து மதிப்பிடுவது தவறானது ஆகும். இதனை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக உயிரியல் பேராசிரியரான ரிச்சர்ட் டாவ்கின்ஸ் தெளிவுபடுத்துகிறார்.
பேரா.ரிச்சர்ட் டாவ்கின்ஸ்
"பொதுவாக (உங்களையும் என்னையும் போன்ற) சாதாரண மனிதர்களை ஒரு விமானத்தை பெரிய கட்டிடத்தில் மோதி தற்கொலை கருவியாக இயங்க வைக்கமுடியுமா? ...அவர்களுக்கு சுவனத்தில் பெரும் பாலைவன சோலை ஒன்றை வாக்களியுங்கள். இளம் வாலிபர்களுக்கு இறைவன் புகழை பாடும் வெள்ளையுடை தேவதைகள் கிளர்ச்சியை அளிக்கமுடியாது. எனவே இளம் வாலிபர்களிடம் புனிதப்போர் ஷகீத்துகளுக்காக 72 கன்னி இளம் பெண்கள் உடனடியாக நிச்சயமாக சுவனத்தில் அளிக்கப்படுவதாக கூறுங்கள். இது கொஞ்சம் பெரிய அளப்புதான், இருந்தாலும் பலனளிக்கும் பாருங்களேன். இது குறித்து ஒரு முழுமையான பின்னணி தொன்மத்தை -அதுதான் உண்மையென- அளியுங்கள். இதன் மூலம் இந்த பெரிய கப்ஸா உண்மை என்பதாக தோன்றவேண்டும். அவர்களுக்கு ஒரு புனிதநூலை அளித்து அதனை மனப்பாடம் செய்ய வையுங்கள். என்ன நினைக்கிறீர்கள்?எனக்கு இது நன்றாக வேலை செய்யும் என தோன்றுகிறது...நம் தலைவர்கள் அண்மையில் நடந்த கொடுமையை மூளையற்ற/அறிவற்ற செய்கை என்கிறார்கள். எனக்கு அப்படி தோன்றவில்லை. மூளையற்ற அறிவற்ற சமூக விரோத செயலாக ஒரு பொது தொலைபேசியை உடைப்பதை சொல்லலாம். ஆனால் செப்டம்பர் 11 அன்று நியூயார்க்கை தாக்கிய விசயத்தை அப்படி சொல்லிவிட முடியாது. மாறாக, இந்த கொடுஞ்செயலை செய்தவர்கள் கூர்மையான மூளையுடன் வெறிபிடித்த வைராக்கியத்துடனும் செயல்பட்டனர். இந்த வைராக்கியம் எங்கிருந்து வந்தது? அதன் மூலம் மதமே ஆகும். மத்தியகிழக்கின் அமைதியின்மைக்கு காரணமாக இருந்த மதமே இந்த ஆயுதத்தையும் (மானுட தற்கொலை தாக்குதல்) உருவாக்கியது. ஆனால் அதைகுறித்து நான் பேசிட புகவில்லை. இங்கு எனது பார்வை அந்த ஆயுதத்தின் மீதுதான். உலகினை ஆபிரகாமிய மதத்தினால் அல்லது ஆபிரகாமிய மதங்களால் நிரப்புவது - பரப்புவது என்பதும் தெருக்களில் குண்டுகள்டங்கிய துப்பாக்கிகளை கொட்டுவது என்பதும் சமமானது ஆகும். எனவே அவை பயன்படுத்தப்பட்டால் அதிர்ச்சி அடையாதீர்கள்."2


  • 1.மிக்கேல் பர்சிங்கர், Students' perceptions of dangerousness to public safety of paraphrases from the Koran, New Testament, Book of Mormon, Tibetan Book of the Dead, and Egyptian Book of the Dead presented as patients' beliefs., Journal Percept Motor Skills. 2004 ஜூன்; பக்.1345-55
  • 2.ரிச்சர்ட் டாவ்கின்ஸ், "Religion's misguided missiles", கார்டியன் செப்டம்பர் 15 2001.

Labels: , , , ,

4 Comments:

Anonymous Anonymous said...

ரிச்சர்ட் டாவ்கின்ஸின் "செல்ஃபிஷ் ஜீன்" படித்திருக்கிறேன்.

அவர் கடவுள் இல்லை என்று சொல்லுவதாகக் கேள்வி. அவர் இல்லை என்று சொல்லுவது ஆபிரகாமிய கருத்துக்களால் அளக்கப்படும் மற்ற மத மனிதர்களின் ரத்தத்தைக்கேட்கும் கடவுளர்கள் மட்டுமேதானா?

1:22 AM, May 20, 2007  
Blogger கால்கரி சிவா said...

ஐயா, பயமாக இருக்கிறது. இவ்வளவு அறிவியல் பூர்வமாக விளக்கியும் இன்னும் அமைதி மார்க்கம் என சொல்லி திரிகிறார்களே ஐயா பயமாக இருக்கிறது

9:09 PM, May 20, 2007  
Anonymous Anonymous said...

ரிச்சர்ட் டாக்கின்ஸின் சமீபத்திய வெளியீடான 'The God Delusion'படித்து பாருங்கள்! இந்த கடவுள்களும்,மதங்களும் படுத்தும் பாட்டை! அதிலும் இந்த ஆபிராஹாமிய மதங்கள் எப்படி அழிவிற்கு வழி வகுத்துத் தருகின்றன எனப் புரியும்.ஆதிலும் இஸ்லாம் ஓர் அழிவு மார்க்கம் என்பது தெளிவாகப் புரியும்.

12:46 PM, July 23, 2007  
Blogger shuhaib said...

ஆபத்தான மத நூல்கள் என்று ஒரு கட்டுரை உங்கள் இணைய தளம் மூலமாக படிக்ககண்டேன்...அதில் காபிர்களை கொலை செய்வதால் சுவர்க்கம் புகுவீர்கள். என்று எழுதப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது..நான் குரான் முழுவதையும் நல்ல முறையில் சரியான அர்த்தத்துடன் படித்தவன்..உண்மையில் அப்படி ஒரு வரியை நான் கண்டதோ, படித்ததோ கிடையாது..இன்று உலகில் கிறிஸ்தவ மக்களுக்கு அடுத்த படியாக இஸ்லாம் ஒவ்வொரு நாழும் வளர்ந்து வருகிறது.. உயிரினங்களையும் மனிதர்களையும் கொல்வது இஸ்லாத்திற்கு எதிரான செயலாகும்.இன்று உலகத்தில் நடக்கக்கூடிய ஒன்றும் ஜிகாத் இல்லை.எல்லாமே politics.முதலில் குரானை நல்லமுறையில் அதன் அர்த்தத்தோடு படியுங்கள்.எல்லாமே உங்களுக்கு புரியும். அதன் பிறகு எழுதுங்கள்..அல்லாமல் நமக்கென்றுள்ள ஒரு blog தானே அதில் என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்று நினைத்து எழுதாதீர்கள்...காரணம் நீங்களும் இறைவனின் முன் தண்டனைக்குள்ளாவீர்கள்.

7:06 PM, June 22, 2010  

Post a Comment

<< Home