Thursday, September 15, 2005

நேசகுமாருக்கு விடுக்கப்பட்டுள்ள கொலை மிரட்டல் குறித்து


அண்மையில் தமிழோவியத்தில் நேசகுமார் தமக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டலை குறித்து எழுதியிருந்தார். இதனை உதாசீனப்படுத்துவதற்கு இல்லை என்பேன். நேசகுமார் இணையத்தில் எழுதியவற்றை பிரசுரித்திருந்தால் இந்நேரம் அவரது கதை முடிந்திருக்கும். அதே சமயம் இணைய தளத்தில் எழுதப்படுபவை பிரசுர தளத்திற்கு வருவதென்பது சிறிது காலமெடுக்கும் ஆனால் நிச்சயமாக நடக்கக்கூடிய நிகழ்வேயாகும். எனவே இணைய தளத்தில் எழுதுபவர் மீதும் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட முடியும் எனும் ஒரு சூழலை ஏற்படுத்தினால் தமிழ் இணைய உலகில் சிறிதே விட்டுப்போயிருக்கும் திமித்தனத்தை மீண்டும் கட்டுக்கோப்புடன் உருவாக்கலாம் என்பது நேசகுமாரை குறிவைக்கும் ஆசாமிகளின் எண்ணமாக இருக்கலாம். ஜிகாதிகளால் கொல்லப்பட்டவர்களுக்கு தமிழ் ஊடகங்களில் காணப்படும் போக்கு ஜிகாதி வெறியர்களுக்கு மிகுந்த ஊக்கம் அளிப்பதாக உள்ளது. உதாரணமாக ஏழை இஸ்லாமிய மாணவர்களுக்கும் உதவிய மதுரை பேராசிரியர் பரமசிவம் ஜிகாதிகளால் கொல்லப்பட்டதற்கு எவ்வித கண்டனமும் எழவில்லை. அவ்வாறே அண்மையில் இந்து மக்கள் கட்சியின் காளிதாஸ். இதில் தினமலர் காளிதாசை கொன்ற ஜிகாதியின் வாக்குமூலத்தை (தன்னிலை விளக்கத்தை) ஒரு அரசியல் தலைவனின் வாக்குமூலம் போல பிரசுரித்திருந்தது. அவர் இஸ்லாமிய பெண்களை தரம் தாழ்ந்து விமர்சித்ததுதான் அவரைக் கொன்றதற்கு காரணமாம். இத்தகைய நியாயப்படுத்துதல்கள் ஜிகாதி வெறியர்களுக்கு கை வந்த கலை. உதாரணமாக ஜிகாதிகளின் பூர்விக அரசியல் குடியிருப்பான முஸ்லீம்லீக்கின் முன்னாள் தலைவர் மறைந்த அப்துல் சமது துக்ளக்கில் இந்து முன்னணி தலைவர் தாணுலிங்க நாடார் மிகக்கேவலமாக இஸ்லாமியபெண்களை பேசியதாக கூறினார். பின்னர் ஆதாரம் கேட்டபோது ஒலிநாடா இருப்பதாக கூறினார், ஒலி நாடாவை காட்ட கூறிய போதுதான் அவர் கூறியது பச்சைப் பொய் எனத் தெரிந்தது. இத்தகைய ரீதியில் உருவாக்கப்படும் பொய்களைக் கொண்டு ஏற்கனவே 'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' என்கிற பெயரில் மூளைச் சலவை செய்யப்பட்டுள்ள இஸ்லாமிய இளைஞர் கூட்டத்திலிருந்து ஜிகாதி வெறியினங்களை உருவாக்குவது பெரிய காரியமில்லை. அமெரிக்க காண்டிராக்ட்டுகள் மூலம் கிடைத்த டாலர்கள் சவுதியிடம் இத்தகைய cost-effective foot soldiers of jihad ஐ உருவாக்க கிடைக்கவும் செய்கிறது. விஷயம் என்னவென்றால் இந்த கும்பல் இன்று இணைய தளத்தில் இஸ்லாமை கருத்தியல் தோலுரித்துக் காட்டியவர்களை கொல்ல முன்வந்தால் அவர்களுக்கு இலாபம்தான். ஆனாலும் ஒரு வாய்ப்பு உள்ளது. இணையவெளியில் வெளியாகும் ஒவ்வோர் கொலை மிரட்டலுக்கும், நனவுலகில் நடக்கும் ஒவ்வோர் கொலை முயற்சிக்கும், கொலைக்கும், காஃபீர்களாகிய நாம் இன்னமும் தீவிரமாக இந்த பரவும் இருளை கருத்தியல் தளத்தில் கடுமையாக எதிர் கொண்டு தோலுரித்துக் காட்ட வேண்டும். எதுவானாலும் நேசகுமாருக்கு விடுக்கப்பட்ட கொலைமிரட்டலுக்கு எனது கண்டனத்தை முழுமையாக வெளிப்படுத்திக்கொள்கிறேன். நேசகுமார்...முன்னெப்போதையும் விட வேகமாக தங்கள் பணியை தொடருங்கள். வாழ்த்துக்கள்.

3 Comments:

Anonymous Anonymous said...

Aravindhan,


I was among the first to oppose nesakkumar in thinnai. But it is only a debate with him.like me many muslims are debating and countering his ideas.Nesakkumar is only motivating all to read Islam. At this,why should someone bother about nesakumar? he is spreads Islam by his writing. We are not bother about his writings.May be this is just his fear.

12:45 AM, September 16, 2005  
Anonymous Anonymous said...

Whoever did that is a coward.Let Lord Ganesh save nesakumar from any troubles.
Arvindan here is some relevant news about sania.

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNS20050916125729&Title=Sports+Page&lTitle=%AE%FB%5BV%F4h%D3&Topic=0

12:27 PM, September 16, 2005  
Blogger Aravindan Neelakandan said...

அன்புள்ள அநாநிமஸ்,

உண்மையிலேயே வருத்தமான விவகாரம்தான் இது. அந்த பெண்ணிற்கு தேவையற்ற மன-அழுத்தத்தை ஏற்படுத்துகிறார்கள். ஆனால் இவற்றை மீறி அவர் எழுந்து பிரகாசித்தால் இஸ்லாமிய சமுதாயத்திற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த பாரத பெண் சமுதாயத்திற்கே இது ஒரு ஆற்றலேற்றம் (empowerment) அளிக்கும். மேற்கு வங்க அரசு ஒவ்வொரு முறையும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடம் மண்டியிட்ட அரசு. உதாரணமாக தஸ்லிமாவின் நூலை தடை செய்தது; மதரசாக்களில் ஐஎஸ்ஐ செயல்பாடுகள் குறித்து கூறி பின்னர் மறுதலித்தது என பல உதாரணங்களைக் கூறலாம். மார்க்ஸியத்திற்கும் இஸ்லாமிய மேலாதிக்க வாதத்திற்கும் இருக்கும் சில இணைத்தன்மைகள் கூட இதற்கு காரணமாக இருக்கலாம். அல்லது பங்காலி பாபு திமியாக மாறிவிட்டதும் காரணமாக இருக்கலாம். எதுவாயினும் வங்க அரசும் மிர்ஸாவை 'இஸ்லாமிய உடை' அணியக் கூறி வற்புறுத்தாமல் இருந்தால் சரி.

7:27 PM, September 16, 2005  

Post a Comment

<< Home