Monday, September 26, 2005

ஹமீது ஜாஃப்பருக்கு வணக்கங்களும் வாழ்த்துக்களும்



மதிப்பிற்குரிய சகோதரரே,
தங்கள் திண்ணை கட்டுரை உணர்ச்சி பூர்வமாகவும் அறிவுப் பூர்வமாகவும் இருந்தது. முகமது கரீம் சாக்லா தமது சுயசரிதையில் தேசிய உணர்வுள்ள முஸ்லீம்கள், மதச்சார்பற்ற ஹிந்து தலைவர்களால் தனித்து விடப்பட்டார்கள் என்றும் மதச்சார்பற்ற ஹிந்து தலைவர்கள் மதவெறியை தூண்டிய இஸ்லாமியர்களையே இஸ்லாமிய தலைவர்களாக கருதி அவர்களை தாஜா செய்ய முற்பட்டதால் தேசிய உணர்வுடைய இஸ்லாமியர்கள் தமக்கு துரோகம் இழைக்கப்பட்டதாகவே உணர்ந்தார்கள் என்றும் கூறியுள்ளார். அன்புள்ள சகோதரர் ஜாஃபர் அவர்களே இப்பிரச்சனையில் மிகச்சிறந்த துணிவான ஒரு நிலைபாட்டை எடுத்துள்ள தங்கள் துணிவுக்கு வணக்கங்கள். இத்தனை நேர்மையான சுய-சமுதாய விமர்சனம் என்னிடம் உண்டா என என்னையே நான் கேட்டுக்கொள்கிறேன். தங்கள் திண்ணை கட்டுரையை இங்கு மீண்டும் உள்ளீடாக இடுவதில் நான் பெருமை அடைகிறேன்.நாம் பல விடயங்களில் முழுக்க முழுக்க வேறுபடுகிறோம் என்பதையும் நான் அறிவேன். எனவே இங்கு இக்கட்டுரையை இட்டிருப்பதால் எனது அனைத்து கருத்துகளையும் திரு.ஜாஃப்பர் ஏற்கிறார் என்பது பொருளல்ல.
அரவிந்தன் நீலகண்டன்


இவர்கள் அறிவீனர்கள்


ஹமீது ஜாஃபர்


சானியா மிர்ஜா - ஔதருகின்ற சினிமா தாரகையுமல்ல, சின்னத் திரை சீரியலில் வரும் நட்சத்திரமுமல்ல. 110 கோடி மக்களின் ஔத வீசும் ஒரேயொரு டென்னிஸ் வீராங்கனை. இந்திய திருநாட்டிற்குப் பெருமைத் தேடி தரும் ஒரேயொரு வீர மங்கை.


அந்த பெண் விளையாட்டிற்காக அணிந்துள்ள உடையைப் பார்த்துவிட்டு பொருக்க முடியாத மார்க்க அறிஞர்கள் என்று பறைச் சாற்றிக்கொள்ளும் சிலர், அந்த உடை இஸ்லாத்திற்கு விரோத மானது, அணியக்கூடாதது, தடை செய்யப்படவேண்டியது, அப்படி இப்படி என்று ஃபத்துவா கொடுத்துள்ளார்கள் என்ற செய்தியை சன் தொலைக்காட்சியில் கேட்டபோது ஆயிரக்கணக்கான உள்ளங்களுடன் நானும் அதர்ச்சி அடைந்தேன்.


இவர்கள் அடிப்படைவாதிகளா? இல்லை இல்லை, இஸ்லாத்தின் பெயரைக் கெடுக்கவந்த அறிவீனர்கள், அபு ஜஹில்கள். படிக்கவேண்டும் அறிவைத் தேடவேண்டும் என்ற உண்மையான ஆர்வத்துடன் மதரஸாவுக்குச் சென்றிருந்தால் நல்ல கருத்துக்கள் வௌதவரும். எதோ வறுமைக்குப் பயந்து அங்கேயாவது நல்ல சோறு கிடைக்குமே என்ற எண்ணத்தில் ஐந்தேழு ஆண்டுகள் பெஞ்சைத் தேய்த்துவிட்டு வௌதவந்தால், இவர்களிடமிருந்து என்ன வௌதவரும்? இப்படிப்பட்ட தீர்ப்புகள்தான்! இவர்களுக்கு அல்லாஹ்வையும் தெரியாது, ரசூலையும் தெரியாது, குர்ஆனும் புரியாது, ஹதீஸும் விளங்காது.


பெண்கள் படிக்கக்கூடாது விளையாடக்கூடாது, வேலைக்குப் போகக்கூடாது என்று எங்கேயாவது இறைவன் சொல்லியிருக்கிறானா? இல்லை அவனது தூதர் ரசூல் (சல்) அவர்கள்தான் சொல்லியிருக்கிறார்களா? எதையும் சிந்தித்துப் பார்க்காமல் நீங்களாக ஒரு முடிவு எடுத்து ஃபத்துவா கொடுப்பதல்ல! பெரியப் பெரிய தலைப்பாவும் நீண்ட தாடியும், கையில் தஸ்பிஹ் மணியும் வைத்துக்கொண்டிருந்தால் மட்டும் போதாது? ஆழ்ந்த சிந்தனையும் தௌதவான அறிவும் வேண்டும். இப்படிப்பட்டவர்கள் ஏமாற்றுகாரர்கள் என்று அப்போதே இமாம் கஜ்ஜாலி (ரஹ்) அவர்களும் தக்களை ஞானி பீர் முஹம்மது அப்பா அவர்களும் சொல்லிவிட்டார்கள்.


பெண் என்பவள் ஆணுடைய இச்சையைத் தணிக்கக்கூடிய வடிகால் அல்ல; பிள்ளை பெற்று கொடுக்கக்கூடிய இயந்திரம் அல்ல; அடுப்படியில் அடங்கிக்கிடக்கும் அடிமையும் அல்ல. அவள் மென்மையானவள். இறைவனுடைய படைப்புகளிலேயே மிக புனிதமானப் படைப்பு பெண். இதை இந்த அறிவீனர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். உன்னிடம் வீரமிருந்தால் அவளிடம் விவேகம் இருக்கிறது; உன்னிடம் கோபம் இருந்தால் அவளிடம் சாந்தம் இருக்கிறது; உன்னிடம் ஆனவம் இருந்தால் அவளிடம் அரவணைப்பு இருக்கிறது; எல்லாவற்றிற்கும் மேலாக தன்னையே தியாகம் செய்யும் அந்த தாய்மை இருக்கிறது.


ஒரு பெண் விளையாடுகிறாள் என்றால் அதற்கென்று தனி பயிற்சி, தனி உடை இருக்கிறது. முஸ்லிம் பெண் என்பதற்காக புருக்கா அணியமுடியாது; ஹிந்து பெண் என்பதற்காக புடவைக் கட்டமுடியாது; கிருஸ்துவ பெண் என்பதற்காக நீண்ட அங்கி அணியமுடியாது. (Emphasis mine not author's) அவள் விளையாடும்போது நீ ஏன் அவளது அங்கங்களைப் பார்க்கிறாய்? அவள் முகத்தில் தெரியும் உணர்ச்சியைப் பார்; கண்களில் தெரியும் கூர்மையைப் பார்; பந்து எடுக்கும் லாவகத்தைப் பார்; அதை அடிக்கும் வேகத்தைப் பார். அப்போது புரியும் அவளது திறமை, துணிவு, சக்தி, வீரம், சாதுர்யம், அடக்கம் இவை அனைத்தும்.


முடிந்தால் எங்களுடன் சேர்ந்து அவள் வெற்றி மேல் வெற்றி பெற்று உலகில் முதலிடத்தைப் பெறவேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள். இல்லாவிட்டால் ஒதுங்கி இருங்கள். அதுதான் உங்களுக்கும் நல்லது, இஸ்லாத்திற்கும் நல்லது.



அருஞ்சொற்கள்:

  • ஃபத்துவா - மார்க்க தீர்ப்பு
  • அபு ஜஹில் - அறிவீனனின் தந்தை, பெருமானார் காலத்து இஸ்லாத்தின் எதிரி
  • தலைப்பா - தலைப்பாகை
  • தஸ்பீஹ் - இறை திருநாமத்தை துதிக்க உபயோகப்படுத்தும் 100 மணிகள் கொண்ட மாலை
  • மதரஸா - அரபி பாடகசாலை
  • (சல்) - சல்லல்லாஹு அலைஹி வ சல்லம்
  • (ரஹ்) - ரஹ்மத்துல்லாஹி அலைஹி

Hameed Jaffer
e.mail: maricar@emirates.net.ae

28 Comments:

Anonymous Anonymous said...

Aravindan,
A good man should never live fully according to the holy book of his religion.People who dont think outside their holybook are people who have forgotten that they have a brain.They are programmed robots.

anbudan
vethalam

9:59 PM, September 26, 2005  
Anonymous Anonymous said...

Aravindan,

Apprecaite your urgency in welcoming 'hameed jaffer'.
But, You should also condemn 'CHO' for his peculiar comments in this issue. Then only it proves that you are really in favor of 'Dressing liberty of Sanias'

AM I RRIGHT?
- AATHAVAN

3:42 AM, September 27, 2005  
Blogger அப்பாவி said...

//You should also condemn 'CHO' for his peculiar comments in this issue. Then only it proves that you are really in favor of 'Dressing liberty of Sanias'//

If Aravindan is not sure what Aathavan is talking about, please refer to:

http://appaavi.blogspot.com/2005/09/dress-code.html

3:57 AM, September 27, 2005  
Anonymous Anonymous said...

Appavi,
I don't think Aravindhan is unaware of what 'CHO' has said in this issue.
However, such expectations from Aravindan are beyond the reality as people like him are 'PROGRAMMED ROBOTS'.
- VISHNU

4:38 AM, September 27, 2005  
Anonymous Anonymous said...

Cho is a male chauvinist.It is not surprising that he gives such a view.I am sure aravindan wouldnt support cho.

'Epporum yaar yaar vai ketpinum apporul meiporul kanbathu arivu"

vethalam

5:19 AM, September 27, 2005  
Anonymous Anonymous said...

This exposes aravindan as well.
He is ready to write on an unknown hameedjaffer for supporting his view, whereas he could not write on wellknown CHO for opposing it.
is he not a programmed....?

7:13 AM, September 27, 2005  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

Cho has as much right to say what he wants as Kushbu or anyone else and whatever he says is no fatwa. i condemn the fatwa or any religious decree or institutional curb on individual liberties but not the different opinions. Nevertheless let me make it clear that i DONOT AGREE with what Cho holds about women. I also STRONGLY DISAGREE with the statement by Cho on Illayaraja's Thiruvasagam rendering also.

8:43 AM, September 27, 2005  
Anonymous Anonymous said...

Cho has his own right on his views as like as hamid japper on his.
Both are not fatawas but opinions, infact fatawa itself is an opinion, unless it is pronounced by authorities (Authorised Judge or King). So, it is not wise to deviate the matter with this word. so the "geniune point" is not relevent.
Here, the question is When an urgency was shown to welcome hamid japper's views in writing, Why such an attempt was not being taken on CHO?

The answer is well known to everybody, I hope

9:58 AM, September 27, 2005  
Anonymous Anonymous said...

it is very simple.you cannot criticise cho or gurumurthy and aspire to become a top ranking ideologue in rss.

10:03 AM, September 27, 2005  
Anonymous Anonymous said...

{it is very simple.you cannot criticise cho or gurumurthy and aspire to become a top ranking ideologue in rss.}

genuine point

10:34 AM, September 27, 2005  
Anonymous Anonymous said...

//Cho has his own right on his views as like as hamid japper on his. //

Nobody refused this.

//Both are not fatawas but opinions, infact fatawa itself is an opinion, unless it is pronounced by authorities (Authorised Judge or King). //

fatwa on sania is an attempt to curb women rights by using religion. For centuries women have been enslaved using religion.Sania will not listen to cho,but if a fatwa is issued in name of her religion,she will be confused.This is what neelakandan opposed.

//Here, the question is When an urgency was shown to welcome hamid japper's views in writing, Why such an attempt was not being taken on CHO?//

If he writes on cho,then people will ask why din't aravindan write about mr.x,y,z..
Anyway aravindan has clarified his stand by saying he opposes cho's statement also.

5:41 PM, September 27, 2005  
Anonymous Anonymous said...

//it is very simple.you cannot criticise cho or gurumurthy and aspire to become a top ranking ideologue in rss//

Gurumoorthy opposed jaswanth singh's policies.Did that prevent jaswanth singh from becoming Finance minister?

summa jalli adikatheengappa..

adikatheenga jalli,jalli
adippome gilli,gilli

vethalam

5:42 PM, September 27, 2005  
Anonymous Anonymous said...

Last Friday, 118 Saudis had released a statement warning against the dangers of allowing women to drive. The list of the people who signed the statement included Sheikhs, imams, judges, Islamic scholars, Islamic university teachers, several heads of Promotion of Virtue and Prevention of Vice centers in the Kingdom, as well as some teachers at the Grand Mosque in Makkah and the Prophet's Mosque in Madinah.
The statement says, "[w]omen driving cars is not permissible because the ruling of 'closing doors that leads to corruption' applies to it directly."

http://saudijeans.blogspot.com/2005/07/womens-driving-do-we-need-another-king.html

---

If we allow religion to dictate how women should live, this is what happens.

This applies to kanchi sankaracharya condemning widow remarriage and christianity prohibiting divorce.

Religion has always hindered equality of women.No religion is exempt to this rule.

Let us allow women to live the way they want to live.Let us not control them by using scary words like "god, religion,culture,country,chastity,virtue,family..etc"

Women is not goddess.She is not a sinner.She is human.Like you and me.

ambuttuthen.

nanri

--vethalam

8:05 PM, September 27, 2005  
Anonymous Anonymous said...

"காதல் கடிதம் எழுதுறது உசிதமல்ல" அன்னியன் அம்பி. அப்போ ருக்மணி கிருஷ்ணனுக்கு அனுப்பின லவ் லெட்டர் கூட உசிதமில்லையாக்கும்? எங்க இங்கிலீஸ் வாத்தியார் அதை "world's first love letter boldly written by a woman" அப்படீன்னார். பெண் காதல் கடிதம் வரைதல் குறித்து இன்றைய விக்டோ ரியன் ஹிண்டு மாரல்ஸ் மடாதிபதிகள் என்ன சொல்வார்கள் என்பதையும் பாகவதம் கூறுவதையும் ஒப்பிடலாம். ஈவெராவும் ஹிந்து புராணங்கள் மீது வைத்த பல வக்கிர விமர்சனங்கள் கூட பெண்ணடிமைத்தனம் கொண்ட விக்டோ ரியன் மாரல்ஸ் களை அடிப்படையாக கொண்டுதான் வைத்திருந்தான்.
-கூத்தில கோமாளி - சூத் கிட்ட வால்

8:12 PM, September 27, 2005  
Anonymous Anonymous said...

In my opinion,Indians are male chauvinists to the core.Stories like kovalan-kannagi,arundathi etc were spinned to keep women as slave to men.I 100% accept this.

I accuse every religion and concept in the world of being male chauvinistic.Even communist russia and communist china were not exceptions.

The only place where women live freely is in modern day Europe and America.

Religion enslaved women.They were traded as slaves,ill treated as wives,condemned as sinners in name of religion,were witch hunted and were raped in name of god and religion.

Every religion did this.Nobody is uthamar in this aspect.Ella mathamaum kadavaulum serndhu pengalukku ethiraga seitha sathi ithu.

In fact religion itself WAS INVENTED BY MALES TO KEEP WOMEN AS SLAVES.

Only enlightenment in Europe provided hope to women.It will soon dawn in Asia.

Every man who tries to control a woman is a dictator,male chauvinist.If he does this in name of religion even god will never forgive this.

This is common for samiyars as well as for people who oppose kuttai pavadai.

ambuttuthen

-vethalam

8:21 PM, September 27, 2005  
Anonymous Anonymous said...

காதல் கடிதம் எழுதுறது உசிதமல்ல" அன்னியன் அம்பி. அப்போ ருக்மணி கிருஷ்ணனுக்கு அனுப்பின லவ் லெட்டர் கூட உசிதமில்லையாக்கும்?

Anniyan ambi oru split personality ulla mental.Cinemala varathu ellam total kenathanam.Love letter anuparathu thappe illai.Pre marital sex kooda thappu illai.Post marital sex kooda thappu illai.

பெண் காதல் கடிதம் வரைதல் குறித்து இன்றைய விக்டோ ரியன் ஹிண்டு மாரல்ஸ் மடாதிபதிகள் என்ன சொல்வார்கள் என்பதையும் பாகவதம் கூறுவதையும் ஒப்பிடலாம்.

madathipathigal solrathai yaarum ketpathillai.Appadi kettutu irundha muttal nama than.

yaaru sonnalum athula irukkara nallathai ethukanum.Ketathai othukanum.

Annan superstar Rajini ganth sonna mathiri "En vazi thani vazi" appadinu ponnunga poyitte irukanum.Ambalainga pechu ketkave koodathu.Bathrakali mathiri irukkanum.

vethalam

8:28 PM, September 27, 2005  
Anonymous Anonymous said...

//Sania will not listen to cho,but if a fatwa is issued in name of her religion,she will be confused.This is what neelakandan opposed.//

Sameway, if a Mulla talks against Deepa Mehta, she won't care for that.But if Ball Thackereys, or Thogaadiyaas issues a Fatwa (opinion) on her, she will be confused. That is what Anonymouses want to say.

AM I RRRIGHT?

11:58 PM, September 27, 2005  
Anonymous Anonymous said...

Leave your comment You can use some HTML tags, such as
என்னோட இங்லீஸ் இந்தாபுடி. தமிழில் எழுதுங்கடா கூழாப்பைங்களா.

12:05 AM, September 28, 2005  
Anonymous Anonymous said...

///Sameway, if a Mulla talks against Deepa Mehta, she won't care for that.But if Ball Thackereys, or Thogaadiyaas issues a Fatwa (opinion) on her, she will be confused. That is what Anonymouses want to say.AM I RRRIGHT? ////

Bal thackrey or thogadia is not a priest or saint.If sankaracdharya or some other saint says about deepa mehta I agree that it is similiar to sania episode.Nobody accepts togadia as a spiritual leader.He is a politician.

Further I dont agree with what they did to deepa methas movie.That is also total intolerance.

//என்னோட இங்லீஸ் இந்தாபுடி. தமிழில் எழுதுங்கடா கூழாப்பைங்களா//

Aduthathu mozi veriya?
Like religious fascism linguistic fascism is also dangerous.

vethalam

12:51 AM, September 28, 2005  
Anonymous Anonymous said...

When it is for Ball Thackarays and Thogaadiyas, just one word is enough 'I/We don't agree with them', or it is our duty to justify their stand by saying 'They are not spritual leaders'.

But people from other religion involved, we are dutybound to write on articles, articles and articles+debates.

Secondly, we could not write/talk frequently in 'Niisa mozhi' Tamil as we could not take bath everytime. (This was told by our "SPRITUAL LEADER" SANKARACHARIYAR.

We are programmed perfectly.

REAL VETHALAM

1:07 AM, September 28, 2005  
Anonymous Anonymous said...

///When it is for Ball Thackarays and Thogaadiyas, just one word is enough 'I/We don't agree with them', or it is our duty to justify their stand by saying 'They are not spritual leaders'.But people from other religion involved, we are dutybound to write on articles, articles and articles+debates. ///

My grand mother died before 10 years.Ippo somebody asks me 'how do you feel?' about it,I can only say "I feel bad'.Had somebody asked at her time of death I would have cried for hours.
Andha mathiri deepa metha vivakaram mudinju varusham 10 achu.Ippo vandhu karuthu ketta enna panna?Rendu line than solla mudiyum.Current issue ethavathu kelunga.Madai thirandha mathiri eluthren.

///Secondly, we could not write/talk frequently in 'Niisa mozhi' Tamil as we could not take bath everytime. (This was told by our "SPRITUAL LEADER" SANKARACHARIYAR////
He's not my spiritual leader.And also nakkeran's claims have low credibility.If he had really said that,I would be the first person to condemn it.The quote hasnt been accepted by sankaracharya till now.Till now its hearsay.Sankaracharya has written many books in tamil.So this logic doesnt work out much.

vethalam.

7:36 AM, September 28, 2005  
Anonymous Anonymous said...

சோ கருத்துக்கு எதிர்ப்பா ஏன் எழுதலே-ன்னு அவா கேட்டா எல்லா XYZ பத்தியும் எழுதிண்டிருக்கமுடியாதுன்னு "துக்ளக்" சோ வையே XYZ ங்கறீர்.
ஆனா, அதே விஷயத்துக்காக யாரோ ஒரு ஹமீத் ஜாப்பர்'ங்கறவாள பத்தி எழுதறீர்.

சரி, தாக்கரேவ ஏன் தாக்கி எழுதலேன்னு அவா கேட்டா அது பத்து வருஷமாச்சுன்னுட்டு சப்பைக்கட்டுறீர். சொதப்புறேளே.

அட கட்வுளே, அட கட்வுளே

நீங்கள்லாம் எழுதலேன்னுட்டு 'சங்க'த்துலே யாராச்சும் அழுதாளா.......?
vikramathiththan

6:31 AM, September 29, 2005  
Anonymous Anonymous said...

///சோ கருத்துக்கு எதிர்ப்பா ஏன் எழுதலே-ன்னு அவா கேட்டா எல்லா XYZ பத்தியும் ழுதிண்டிருக்கமுடியாதுன்னு "துக்ளக்" சோ வையே XYZ ங்கறீர்.
ஆனா, அதே விஷயத்துக்காக யாரோ ஒரு ஹமீத் ஜாப்பர்'ங்கறவாள பத்தி எழுதறீர்.///

You can ask a writer "why you wrote about kuppan" he can answer.If you ask "why you dint write about suppan" what answer can he give?Then somebody will ask "why not muthan?why not kandan?why not raman.." the list will go on endlessly.Every writer and newspapers in India has written about sania.Many supported,many opposed.How many of those magazine writers wrote about cho?Did all these magazines write about every important person ?

Ananda vikatan also wrote about sania.Tamilan express also wrote.If you ask them why you dint write about cho,was it because cho was a bhramin....they will laugh at you.

சரி, தாக்கரேவ ஏன் தாக்கி எழுதலேன்னு அவா கேட்டா அது பத்து வருஷமாச்சுன்னுட்டு சப்பைக்கட்டுறீர். சொதப்புறேளே.

Chinna pulla thanamalla irukku...

Thakare matter ended before 10 years.I have said I condemn him vehemently.Valentine day violenceum condemn panrennu solliachu.Ithukku mela enna sollanum?Mumbai poye mariyala panna mudiyum?

whenever any current issue comes ask my opinion,I will write appadinu solliyachu.Athukkum bathil illai.

You are trying to divert the issue.That's the problem.Can you condemn the protests against sania in atleast 1 line?

"I condemn it vehemently" appadinu oru varthai unga vayila irundu ithuvaraikkum vandirukka?

It wont come.It will never come.Even for sake of argument you wont say so.I also know the reason.

You are a true follower of your faith.You cannot think beyond it.Your search for truth ends within the boundaries of your faith.

I dont limit myself to my religion.I have designed my life based upon many books,faiths and ideologies.I will never stick with 1 faith and 1 book.

starting from sermon on mount to nietzsche's zarathushtra many books have redefined me.In those books there are hindu books,islamic books,christian books,atheist books,philosophical books and even some biology books.(demonic males)

I have rejected many concepts in these books.I have accepted what I like in them.

Following any religion or ideology will limit a man's thinking.Truth is not exclusive to 1 book or 1 religion.

world is wide.life is short.It is never too late to learn new concepts.

God and religion are the enemy of thought and human progress.Only after nietzsche,darwin,ingersoll et al reformed europe it could progress.Only after british,gandhi,periyar and ambethkar reformed hinduism,India could progress.

Think out of the box.Thought is not a crime.God is not going to punish you for thinking.

9:37 AM, September 29, 2005  
Anonymous Anonymous said...

forgot to sign the above post
vethalam.

9:37 AM, September 29, 2005  
Anonymous Anonymous said...

வேதாளோம்....

ஹமீது ஜாஃபருக்கு கொடுக்கப்பட்ட அவசரக் குடுக்கை முக்கியத்துவம் ஏன் மொட்டை சோவுக்கு எதிர்ப்பு அரைவேக்காடு நீலப்படகண்டன் குடுக்கலேங்கரதுதான் கேய்வி.

முய்ஞ்சா பய்ல் சொல்லு இல்லேன்னா நீயி காஞ்சி மட முருங்கமரத்கே போயிடு.

சண்டாளன்

12:53 PM, September 29, 2005  
Anonymous Anonymous said...

///வேதாளோம்....

ஹமீது ஜாஃபருக்கு கொடுக்கப்பட்ட அவசரக் குடுக்கை முக்கியத்துவம் ஏன் மொட்டை சோவுக்கு எதிர்ப்பு அரைவேக்காடு நீலப்படகண்டன் குடுக்கலேங்கரதுதான் கேய்வி.

முய்ஞ்சா பய்ல் சொல்லு இல்லேன்னா நீயி காஞ்சி மட முருங்கமரத்கே போயிடு.///

Request 1:Learn to debate decently.
Request 2:Attack ideas,not people
Request 3:Reread my previous posts.

vethalam

12:57 PM, September 29, 2005  
Anonymous Anonymous said...

நீலகண்டன்,
ஆயிரம் சொன்னாலும், சானியா டிரெஸ் விஷயத்தில் சோ வைக் கண்டிக்காமல் ஹமீத் ஜாப்பருக்கு ஆதரவாக அவசரப்பட்டு எழுதுவது உங்களின் சந்தர்ப்பவாதத்தைத் தான் தெளிவாக காட்டுகிறது என்பது என் தாழ்மையான கருத்து.
இதை ஒப்புக்கொள்வது தான் நேர்மை
Rama Murthy

11:58 AM, September 30, 2005  
Anonymous Anonymous said...

நீலகண்டன்,
ஆயிரம் சொன்னாலும், சானியா டிரெஸ் விஷயத்தில் சோ வைக் கண்டிக்காமல் ஹமீத் ஜாப்பருக்கு ஆதரவாக அவசரப்பட்டு எழுதுவது உங்களின் சந்தர்ப்பவாதத்தைத் தான் தெளிவாக காட்டுகிறது என்பது என் தாழ்மையான கருத்து.
இதை ஒப்புக்கொள்வது தான் நேர்மை//

Neelakandan has condemned cho.This is what he posted

"Nevertheless let me make it clear that i DONOT AGREE with what Cho holds about women. I also STRONGLY DISAGREE with the statement by Cho on Illayaraja's Thiruvasagam rendering also."

Hamid jaffer holds same view as neelakandan on this issue.Thats why his statement was hailed.Further as far as I know among the bloggers hamid jaffer is the only muslim to condemn this fatwa.So naturally his views get importance.

Also it is unfair to ask a writer "why you dint write about this".There are hundreds and thousands of issues.A writer cannot write about everything.

These arguments are used by people who dont have any replies for genuine questions of neelakandan.Till now they are unable to put forward one single argument against neelanakdan's points.Thats why they engage in diverting the issue.

vethalam

2:47 PM, September 30, 2005  

Post a Comment

<< Home